Tuesday, 27 March 2018

திராவிடர்களும், தமிழர்களும் ஓர் பார்வை. பாகம்-2

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :27.03.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*திராவிடர்களும், தமிழர்களும் ஓர் பார்வை.*

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

🏹 *பாகம்* 2⃣🏹

🔥 *தமிழர்னா யாரு?  தமிழ் பேசுறவங்களா? அப்ப ஊமையா இருக்கிறவன யார்னு சொல்லுவிங்க?*⁉

🔥 *தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தான் தமிழர்களா? அப்ப திராவிடர்களும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்களே அவங்க தமிழர்கள் இல்லையா?*⁉

🔥 *உண்மையான தமிழர்கள் யார் தெரியுமா? தமிழ்நாடு அரசு மூலமாக, இலவசம், இலவசமாக சலுகைகள் பெற்று தமிழ்நாட்டில் காலம் காலமாக வாழ்பவர்கள் அனைவரும் தமிழர்களே.*

🔥 ⁉ *திராவிடர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?🤔. அவங்களும் இங்கதான்பா காலம் காலமாக இருக்காங்க. திராவிடம்னா ஒண்ணுமே இல்ல..*

🔥 *இப்போதைக்கு என்னதான் நம்ம தமிழனாகவோ, திராவிடனாகவோ இருந்தாலும், ஒரு ஸ்கூல், காலேஜ் படிக்கிற சர்டிபிகேட்ல இனம் என்ற இடத்தில் இந்தியன் என்று தான் போடுகின்றோம். காரணம் நம் அனைவரும் வேற்றுமையில் ஒற்ற்மையுள்ள நாடு.*👍✅

🔥🔱 *வேற்றுமையில் ஒற்றுமை ஏன் குறிப்பிட்டார்கள் தெரியுமா?*⁉

🔥 *நம் நாட்டில் பல இன, மொழி, மதங்கள் இருந்தாலும் அனைவரும் சமமாக, சகோதரத்துவத்துடன் வாழ்கின்ற நாடு எங்கள் இந்தியா என்ற வெளிநாட்டவரிடம் மார்த்தட்டிக் கொள்ளவே இவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை என குறிப்பிட்டார்கள். இதுபோன்று வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது. இருக்கவும் விட மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.*✅👍

🔥🔱 *ஆனால் இன்றோ தமிழன், திராவிடன் என்று சொல்லி, மக்களை முட்டாளாக்கி அரசியல் செய்யவே இதுபோன்ற வார்த்தைகளை கூறி, மக்களை பிளவுப்படுத்த நினைக்கின்றார்கள்.*
😔😞
🔥 *கர்நாடகா, கேரளாவில் அந்த மாநிலத்தவரே முதலமைச்சர் நம் நாட்டில் அப்படியில்லையே, இங்கு திராவிடர் என்பவர்களும் காலம் காலமாக தமிழ்நாட்டில் குப்பை கொட்டியவர்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு உங்களை தான் நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும். இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. யார் மக்களுக்கு சேவை புரிவார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும்.*✅

🔥 *caste பார்த்து பழகுறதும், இனம் பார்த்து பழகுறதும் ஒண்ணு தான்பா.*😏

🔥 *போராட்டம் என்றால் நம் சாதி, மத, இனங்களை கடந்து ஒன்று கூடுகிறோம்.*✅

🔥 😡 *ஆனால் அரசியல் கட்சிகளோ தமிழன், திராவிடன், இஸ்லாமியன், இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர், மிகவும் தாழ்த்தப்படவர், பழங்குடியினர், பொது பிரிவினர் மற்றும் பல சாதிப் பெயர்களை வைத்து, பிரித்து பிரித்து மக்கள் அனைவரையும் வைத்து அரசியல் செய்கிறார்கள்.*😡👊

🔥 *அப்போது ஆரியர்கள் சாம்ராஜ்யம் அதிகமாக இருந்தது. அனைத்து துறைகளிலும் கை ஓங்கி இருந்தனர். அதனை எதிர்க்க புறப்பட்டதே திராவிட இயக்கங்கள்.*✅👍

🔥✅ *அப்போது தேவைப்பட்டது. சரி ஏற்றுக் கொள்ளக் கூடிய விசயம்.*✅👍

🔥 *ஆனால் தற்போதுள்ள திராவிட கட்சிகள் (முன் குறிப்பு : கட்சிகள் மட்டுமே, திராவிடர்கள் அனைவரும் அல்ல) ஊழல்கள் பல செய்துள்ளனர்.*😔😡👊

🔥 *அந்த கட்சிகளை அகற்றுவதற்காக, ஒட்டுமொத்த தமிழர்களையும், திராவிடர், தமிழர் என்று பிரித்து பார்க்க சொல்லி, ஆராய்ச்சிகளும் செய்ய வைத்து,  உசுப்பேத்தி, உசுப்பேத்தி🤦🏼‍♂, இப்ப நான் யாரு? நான் யாருனு தேட போயிட்டாங்க.*😡👊

🔥 *இங்கிருப்பவர்கள் அனைவரும் பிறக்கும் போது குழந்தை, பிறகு மனிதன் அதுக்கம்புறம் தான் மற்றவையெல்லாம்.*✅👍

🔥 *நீ திராவிடனா இருந்தாலும் சரி, தமிழனாக இருந்தாலும் சரி. உழைத்தால் தான் சோறு. சோறு முக்கியம் அமைச்சரே.*✅👍

🔥 *நம் முதலில் மனிதனாக, சக மனிதர்களுடன் மனிதாபிமானமாக இருக்க பழகுவோம்.*✅👍

🔥 *ஆட்சிக்கு திராவிடனோ, தமிழனோ, யார் வந்தாலும் சரி, நல்லவனாக இருந்தால் மக்களுக்கு நல்லது பண்ணுவான். இல்லயென்றால் எல்லோரும் என்ன பண்ணுனாங்களோ அத தான் பண்ணுவாங்க.*😔😡

🔥✅ *நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது ஒரு திராவிடனையோ, தமிழனையோ அல்ல. மக்களுக்கு ஊழல் இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமுடைய ஒரு நல்ல மனிதனை மட்டுமே.*✅👍

🔴✅👍 *இனிமேலாவது மக்கள் உங்களுக்குள் பிரிவினைகளை உண்டாக்கி அதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் சிந்தித்து செயல்படுங்கள்.*✅👍

*நன்றி🤝🏻💐*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

🏆👏 *உதயாயுவா*👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🤩🏅 *@⁨paramesvaran Ak⁩, @⁨பிரபாகரன் சிதம்பரம்⁩, @⁨⁨தமிழன்⁩⁩⁩*💐

🤩🏅 *@⁨sriramkrm⁩⁩, @⁨Sasikanth Neelakantan⁩, @⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩⁩*💐

🤩🏅 *@⁨Syed Basha⁩, , @⁨ஞாலமைந்தன்⁩*💐

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🤩🏅 *@⁨அ. கந்தன்⁩, @⁨தமிழன் ராஜா⁩, @⁨வி.சூ.மார்க்கசு⁩*💐

🤩🏅 *@⁨🌻Raja 🌻⁩*💐

🤩🏅 *@⁨VKR⁩, @⁨ரூபன்⁩*💐

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

🔴🔥 *30 மாநிலங்கள்*
*1618 மொழிகள்*
*6400 சாதிகள்*
*6 மதங்கள்*
*6 இனங்கள்*
*29 பெரிய பண்டிகைகள்*
*ஒரு நாடு இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்...!*💐

🔴🔥 *அதெல்லாம் முடியாது நான் முதலில் தமிழன். அதுக்கப்புறம் தான் இந்தியன்.*

🔴🔥 *இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டா மாதிரி இருக்குல. இங்க திராவிடனா இருந்தாலும் சரி, தமிழனாக இருந்தாலும் சரி, முதலில் தமிழன் பிறகு இந்தியன் என்று சொல்லித்தான் பெருமைப்பட்டுட்டு இருந்தாங்க.*

🔴🔥 *இப்ப என்னான்ன திராவிடம், தமிழன்னு சொல்லி புதுசா குழப்பதை உண்டு பண்ணி சில அரசியல் தலைவர்கள் குளிர் காயுறாங்க.*😡👊

🔴🔥 *நான் முதலில் தெலுங்கன். அப்புறம் தான் இந்தியன்.*

🔴🔥 *நீ யாரா வேணாலும் இருந்துட்டு போப்பா. உன் உடம்புல ஓடுற இரத்தமும், என் உடம்புல ஓடுற இரத்தமும் ஒண்ணுதான்பா.*✅👍

🔴🔥 *உலகத்துல யாருக்கு எங்க, என்ன பிரச்சனை நடந்தாலும், நம்ம தமிழர்கள் தான், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் முதலில் கண்ணீர் வடிப்பாங்க. அதுல திராவிடர் கண்ணீர் வடித்தார். தமிழர் கண்ணீர் வடித்தார்னு எங்கேயும் வரல. உங்களை நீங்களே போட்டு குழப்பிக்காம ஆகுற வேலைய பாப்போம்.*🙅🏻‍♀🙅🏻‍♂

🔴🔥 *எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு தான்பா. வேற்றுமையில் ஒற்றுமைனு அதுக்கு தான் அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.*✅👍

🔴🔥 *தமிழ்நாட்டு கவர்மண்ட்ல இலவச அரிசி வாங்கி திங்குற எல்லாருமே தமிழர்கள் தான்பா.*

*நீ இலவச அரிசி வாங்குறியா? ஆமா.*

*நானும் இலவச அரிசி வாங்குறேன். இந்தா போட்டுக்கோ🙌🏻.*

*நம்ம எல்லாரும் தமிழர்களே.*✅👍

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்*
*அதுநோக்கி வாழ்வார் பலர்*
    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

*அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்*

*_📝 தெரிந்து, அறிந்து,புரிந்து கொள்ளவும்: 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🎶 *வடவேங்கடம் தென்குமரி*
*ஆயிடைத்*
*தமிழ்கூறு* *நல்லுலகத்து*🎶

📜 *(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)*📜

🔎 *என்பது பனம்பாரனார் கூற்று. இவ்வடிகளில் பனம்பாரனார் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் குறித்துள்ளார். அதுபோலவே, இளங்கோ அடிகளும் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் தமிழகத்துக்கு வேங்கட மலையை வட எல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும் காட்டியுள்ளார்.*🔍

🎶 *நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்*
*தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு*🎶

📜 *(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)*📜

🎶 *தென்குமரி வடபெருங்கல்*
*குணகுட கடலா எல்லை*🎶

📜 *(புறநானூறு,17:1-2)*📜

🔎 *புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,*
🎶 *(மதுரைக்காஞ்சியில்:70-71)*🎶

🔎 *தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.*🔍

🔎 *வேங்கடத்துக்கு வடக்கில் வேறுமொழி (தெலுங்கு) இருந்து வந்தது என்பதனை மாமூலனார் அகநானூற்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.*👇🔍

🎶 *பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்*
*மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,,,,,*🎶

📜 *(அகநானூறு, 211:7-8)*📜

🔎 *குறுந்தொகையில் மாமூலனார் கட்டி என்னும் மன்னனின் நாட்டுக்கு வடக்கில் வடுகர் (தெலுங்கர்) வாழ்ந்து வந்தனர் என்பதை,*🔍

🎶 *குல்லைக் கண்ணி வடுகர் முனையது*
*வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்*
*மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்.*🎶

📜 *(குறுந்தொகை,11:6-7)*📜

🔎 *சங்க காலத் தமிழகத்தில் தற்போது உள்ள கேரளமும் சேர்ந்திருந்தது என்பது நன்னூல் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நன்னூலார் தமது இலக்கண நூலாகிய நன்னூலில் தமிழகத்தின் நான்கு எல்லைகளைச் சரிவரக் குறிப்பிட்டுள்ளார்.*🔍

🎶 *குணகடல் குமரி குடகம் வேங்கடம்*🎶

📜 *(நன்னூல்,சிறப்புப்பாயிரம்:8)*📜

🔎 *என்று மேற்கு எல்லையாகக் குடகு மலை (மேற்குத்தொடர்ச்சி மலை) உள்ளதைச் சுட்டியுள்ளார். நன்னூல் இந்த எல்லைகளை உணர்த்துவதால், கி.பி 12ஆம் நூற்றாண்டில் மேற்கே குடகு வரை தமிழகம் பரவி இருந்தது தெரியவருகிறது.*🔍✅👍

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻‍♂

             
                  👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *கந்தசாமி- 9080669640*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...