🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :22.02.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே..!!உன்னால் முடிந்த நன்மையை செய் என்பதே தான்..!!*
👵🏻 *[ எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செய்- நல்வழி ]*👵🏻
👵🏻 *ஔவையார்*👵🏻
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்,*
*நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும்.*👍
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👵🏻 *ஔவையார் பற்றிய ஓர் சிறப்பு பார்வை*👵🏻
👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻
*_🏹பாகம் - 1⃣🏹_*
😇 *_பெண்ணியம் தொடர்பான சித்தாந்தங்கள் பேசும் இக்காலச்சூழலில் உருப்பெறும் தமிழிலக்கிய வரலாற்றில் பெண்கவிஞர்கள் இன்னும் சரியாகப் பதிவாகாத நிலையில், எந்தச் சித்தாந்தங்களும் தோன்றாத அக்காலகட்டங்களில் உருப்பெற்ற தமிழ் இலக்கியங்களிலுள்ள பெண்பாற்புலவர்கள் நிலை கண்டிப்பாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட ஒன்றாகத்தான் இருந்திருக்கும் என்பது கண்கூடு.🙇🏻♀ தமிழிலக்கியங்களில் சங்க இலக்கியத்தில் மட்டும்தான் சில பெண்கவிஞர்கள் உள்ளனர்.👍 இந்நிலையில் சங்ககால அறிவுபாரம்பரியம் பெண்ணிற்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது என்றும் சங்ககால மகளிர்நிலை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கியுள்ளது என்றும் தமிழ் இலக்கிய வரலாறுகள் பதிவுசெய்துள்ளன.👍 அவ்வாறு சங்க காலம் தொட்டு பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சிறந்த பெண்பாற்புலவர்களில் நம் ஔவையார் பற்றிய வரலாற்று தொகுப்பே இது._*😇
👵🏻🏹 *_ஔவைக் கிழவி நம் கிழவி அமிழ்தின் இனிய சொற்கிழவி' என சிறுவயதில் படித்தது பலருக்கு ஞாபகம் இருக்கும். இன்றுவரை அனைவருக்கும் பரிட்சயமான பெண்பாற்புலவர்களில் ஔவையார் என்பவர் அனைவரின் மனதிலும் மிக ஆழமாக பதிந்திந்திருக்கிறார். அந்த ஔவைக் கிழவி யார்? ⁉எப்போது வாழ்ந்தார்? ⁉என்பவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஔவையார் என்ற பெயருடன் பலர் சங்ககாலம் தொடக்கம் முதல் வாழ்ந்துள்ளனர். நம் தமிழ் முன்னோர்கள் 👩🏻🎓👩🏻"""பெண்களில் மூதறிஞர்களை ஔவையார் """என அழைத்தனர்._*👵🏻🤗
👵🏻⏳ *_பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ஔவையார் பற்றி காண்போம்.👇🏻_*
1⃣👵🏻 *_சங்ககாலப் புலவர்ஔவையார்._*
✅👍
2⃣👵🏻 *_அங்கவை, சங்கவை மணம் முடித்தவர்ஔவையார்,_*
✅👍
3⃣👵🏻 *_அறநூல் புலவர்ஔவையார்,_*
✅👍
4⃣👵🏻 *_சமயநூல் புலவர்ஔவையார்,_*
✅👍
5⃣👵🏻 *_கதையில் வரும் புலவர்ஔவையார்,_*
✅👍
6⃣👵🏻 *_சிற்றிலக்கியப் புலவர் ஔவையார்_*✅👍
*_1⃣ சங்ககால அவ்வையார்_*👵🏻
👵🏻 *_முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார். சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர்.🙅🏻♀ இளமை ததும்பும் விறலி. அதியமான் தன்னை அழைத்ததாக இவரது பாடலில் உள்ள தொடர் இவரது இளமை எழிலைக் காட்டுகிறது. ஔவை ஒரு விறலி. மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். மை தீட்டிய கண்களும், வாட்டமான நெற்றியும் கொண்டவர்.😇 எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்திருந்தார். இவர் பாடிய 59 பாடல்கள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப் புலவர் பாடல் தொகை வரிசையில் இவர் 9 ஆம் இடம் பெற்றுள்ளார். இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர். நீண்ட நாள் வாழ்வைத் தரும் நெல்லிக் கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்ட நாள் வாழ வேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக் கதை._*⏳
📜 *_ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டு விட்டுப் பார்த்தால், சங்க நூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார்._*
📜 *_சேரசோழபாண்டியர், மழவர் கோமான் அதியமான் நெடுமான் அஞ்சி, முல்லைக்குத் தேரீந்த பாரி வள்ளல், காஞ்சித் தொண்டைமான். மலையமான் திருமுடிக்காரி, நாஞ்சில் கோமான் வள்ளுவன் போன்ற தமிழகத்தை ஆண்ட கடைச் சங்க கால மன்னர்களை ஔவையார் தமிழால் ஆண்டார் என்றால் மிகையாகாது. இவரின் நண்பனும் பெரும் வீரனுமாகிய தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி மீது படையெடுக்கும் பொருட்டு,சேரசோழபாண்டியரும் பிற குறுநில மன்னரும் மாநாடு கூட்டித் திட்டங்கள் வகுத்த போது, அங்கு வந்த ஔவையார் கூடியிருந்த மன்னர்களுக்குப் தன் பாடல் மூலமாக, அறமற்ற இப்படையெடுப்பால் அழிவு அதியமானுக்கு அல்ல, கூடியிருக்கும் மன்னர்களுக்குத்தான் என்பதை கூறி படையெடுப்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, கூடியிருந்த மன்னர்களும் இவரின் சொல்லுக்கு மதிப்பளித்து இதற்கு இசைந்தனர்._*😇
👵🏻 *_சங்ககால ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி சங்ககால அரசர்களில் ஒருவன். அவனது அன்பைப் பெற்ற சங்ககால ஔவையார் அரசர்களும் புலவர்களும் போற்ற பெருமதிப்புடன் வாழ்ந்தவர். சங்ககால ஔவையாரின் வாழ்க்கை வரலாற்றை சுவைத்தே பாரதியார்_*👍
⚜ *_"நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வையும்_*
⚜ *_நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்_*
⚜ *_திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்_*
⚜ *_செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்" -(பாரதியார் பாடல்)_*
👵🏻⚜ *_என புதுமைப் பெண்ணை படைத்திருப்பார் என தோன்றுகிறது. ஏனெனில் பாரதி கூறிய அத்தனை இயல்புகளூம் இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் வழ்ந்த சங்ககால ஔவையாரிடம் அதிகமாகவே இருந்திருக்கின்றன._*👵🏻👍
⚜ *_அதியமான் நெடுமான் அஞ்சியும் ஔவையாரின் தமிழ்ப்புலமைக்காகவும், எவருக்கும் தலைவணங்காத அவரது இயல்புக்காகவும் அவர் மேல் மதிப்பும் பற்றும் வைத்திருந்தான். ஒருநாள் அதியமானின் அரண்மனைக்கு வந்த ஒருவர் அதிசய நெல்லிக்கனி ஒன்றை அவனிடம் கொடுத்தார். அந்நெல்லிக் கனியை உண்பவர் நீண்டநாள் சுகமாக வாழலாம் என்பதை அதியமான் அறிந்தான். அக்கனியை ஔவையாருக்குக் கொடுத்தான். அதியமான் நெல்லிக்கனியை ஔவையாருக்குக் கொடுத்ததை சிறுபாணாற்றுப்படையில்_*
⚜ *_மால் வரை கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி_*
⚜ *_அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த_*
⚜ *_உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்_*
⚜ *_அரவக் கடல் தானை அதிகனும் " -(சிறுபாணாற்றுப்படை: 99 - 103)_*
⚜ *_நல்லூர் நத்தத்தனார் கூறியுள்ளார்._*
👵🏻 *_அதிகமான் நெடுமான் அஞ்சி தான் வாழ்வதைவிட ஔவையார் வாழ்ந்தால் தமிழ் வாழும் என நினைத்தான். ஆதலால் ஔவையாரும் தனக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமானை சிவபெருமான் போல இவ்வுலகில் நிலைத்து வாழ வாழ்த்தியுள்ளார்._*
⚜ *_"வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்_*
⚜ *_களம்படக் கடந்தகழல் தொடி தடக்கை_*
⚜ *_ஆர்கலி நறவின் அதியர் கோமான்_*
⚜ *_போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!_*
⚜ *_பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி_*
⚜ *_நீல மணிமிடற்று ஒருவன் போல_*
⚜ *_மன்னுக பெரும! நீயே தொன்னிலைப்_*
⚜ *_பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட_*
⚜ *_சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது_*
⚜ *_ஆதல் நின்னகத்து அடக்கிச்_*
⚜ *_சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே" - (புறம்: 91)_*
👵🏻🏹 *_'வெற்றிவாளை ஏந்தி, பகைவரின் பல போர்க்களங்களை கடந்த கால்களையும், தொடியணிந்த கையில் நுரைக்கும் தேனுமுடைய அதியர் கோமானே! வெற்றிச் செவத்தையும் பொன்மாலையையும் உடைய அஞ்சியே! பழமை வாய்ந்த பெரிய மலையின் பிளவினுள் அரிதாக வளர்ந்த சிறிய இலையுள்ள நெல்லியின் இனிய கனியை, அதன் அருமையை எனக்கு சொல்லாது உன் மனத்துள் வைத்துக் கொண்டு, சாகாது இருக்க எனக்கு தந்தாய். ஆதலால், நீலமணி போன்ற கழுத்தை உடைய சிவன் போல நிலைபெற்று நீ வாழ்வாயாக! என வாழ்த்தியுள்ளார்._*👵🏻
⚜👵🏻 *_அப்படி அதியமானின் அன்பையும் பெருமதிப்பையும் பெற்ற ஔவையார் ஒருமுறை அவனைப் பார்த்து பரிசில் பெற சென்றிருந்தார். ஏதோ காரணத்தால் அவன் ஔவையாரை அழைக்க காலதாமதம் ஏற்பட்டது. அதனால் ஔவையார் கோபத்துடன் 'வாயிற்காவலனே! வாயிற்காவலனே! வள்ளல்களின் செவிகளில் செறிவு நிறைந்த தமிழ் மொழியை விதைத்து, தாம் நினைத்ததை முடிக்கும் உறுதியான நெஞ்சுடன், பாராட்டினைப் பெறுவதற்காக துன்பத்துகுள்ளாகி, பரிசு பெற்று வாழ்கின்ற பரிசிலர்க்கு (புலவோர்க்கு - கலைவல்லார்க்கு) கதவை மூடாத வாயிற்காவலனே! கடுஞ்சிங்கம் போலத் தோற்றம் அளிக்கும் நெடுமான் அஞ்சி, தன் தகுதியை அறிய மாட்டானோ? அல்லது என் தகுதியும் அறிய மாட்டானோ?_*
⚜👵🏻 *_அறிவும் புகழும் உடையவர் பசியால் இறந்தார் என்று சொல்லக்கூடிய வறுமையில் இந்த உலகம் இல்லை. அதனால் எங்கள் இசைக்கருவிகளை கலப்பையினுள் (கலைப்பை) போட்டு சுருக்கிக் கொண்டோம் மரம்வெட்டும் தச்சனின் கைத்தொழிலை அறிந்த சிறுவர்கள் கோடாலியுடன் காட்டினுள் சென்றால் வெட்ட மரம் கிடைக்காது போகுமா?⁉ எந்தத் திசையில் சென்றாலும் அந்தத் திசையில் சோறு கிடைக்கும்' என்று சொல்லிய புறநாநூற்றுப் பாடலின் முழுவதையும் பார்ப்போம்._*
⚜ *_"வாயிலோயேஎ! வாயிலோயே!_*
⚜ *_வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழ்இ வித்தித் தாம்_*
⚜ *_உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து_*
⚜ *_வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கைப்_*
⚜ *_பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!_*
⚜ *_கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி_*
⚜ *_தன்அறியலன் கொல் என்அறியலன் கொல்_*
⚜ *_அறிவும் புகழும் உடையவர் மாய்ந்தென_*
⚜ *_வறுந்தலை உலகம் அன்றே; அதனால்_*
⚜ *_காவினம் கலனே சுருக்கினம் கலப்பை_*
⚜ *_மரங்கொல் தச்சன் கைவல் சிறார்_*
⚜ *_மழுவுடைக் காட்டகத்து அற்றே_*
⚜ *_எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" -(புறம்: 206)_*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :22.02.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👵🏻 *ஔவையார் பற்றிய ஓர் சிறப்பு பார்வை*👵🏻
👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻
*_🏹பாகம் - 2⃣_*
👵🏻😠 *_ஔவையாருக்கு அதியமான் மேல் கோபம் ஏற்படக் காரணம் என்ன?⁉ ஔவையாரின் தகுதியை நன்கு அறிந்தவன் அதியமான். அதனாலேயே அவன் ஔவையாருக்கு நீண்டநாள் சுகமாக வாழவைக்கும் நெல்லிக்கனியைக் கொடுத்தான். அப்படிப்பட்டவன் ஔவையார் வந்தது அறிந்தும் காலதாமதம் செய்ததாலேயே அவருக்கு அவன் மேல் கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தை இப்பாடலின்_*
⚜ *_"கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி!_*
⚜ *_தன்அறியலன் கொல்? என்அறியலன் கொல்?_*
⚜ *_அறிவும் புகழும் உடையவர் மாய்ந்தென_*
⚜ *_வறுந்தலை உலகம் அன்றே; அதனால்_*
⚜ *_காவினம் கலனே! சுருக்கினம் கலப்பை!"_*
🤷🏻♀ *_என்னும் வரிகள் எடுத்துச் சொல்கின்றன._*
👵🏻 *_ஔவையாரின் அறிவுச் செருக்கை "அறிவும் புகழும் உடையவர் பசியால் இறந்தார் என்று சொல்லக்கூடிய வறுமையில் இந்த உலகம் இல்லை. அதனால் எங்கள் இசைக்கருவிகளை கலைப்பையினுள் போட்டு சுருக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டோம்" எனச் சொன்னவை காட்ட யாருக்கும் அஞ்சாத அவரது இயல்பை_*😇
⚜ *_"மரங்கொல் தச்சன் கைவல் சிறார்_*
⚜ *_மழுவுடைக் காட்டகத்து அற்றே!_*
⚜ *_எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!"_*
⚜ *_என்னும் தொடர்கள் காட்டுகின்றன._*
👵🏻 *_எனினும் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்த பொழுது ஔவையார் பாடிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. அதியமானின் புகழ் இன்றும் இருப்பதற்கு ஔவையாரின் பாடல்களே காரணம்._*😇
👑 *_அதியமான் வாழ்ந்த காலம் கி மு முதலாம் நூற்றாண்டிற்கு முந்தியது என அதியமானின் பெயர் பொறித்த முத்திரை மோதிரம் ஒன்றால் தெரியவருகின்றது. டாக்டர் இரா கிருஷ்ணமூர்த்தி (தினமலர் ஆசிரியர்) தாம் எழுதிய 'சங்ககாலம் என்பது எப்போது? ⁉என்ற கட்டுரையில் கரூரில் அதியமானின் முத்திரை மோதிரத்தை தான் வாங்கியதாகவும், அம்மோதிரத்தில் தமிழ்ப் பிரமி எழுத்தில் அதியமான் என எழுதப்பட்டிருந்தை தொல் எழுத்தறிஞர் கே ஜி கிருஷ்ணன் படித்து சொன்னார் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே சங்கால ஔவையாரின் காலம் கி.பி முதலாம் நூற்றாண்டுக்கு முந்தையதாகவே காணப்படுகிறது._*
⏳👵🏻 *_ஒருசமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார்._*
⏳ *_நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் 'என்ன வருத்தம்?'⁉ என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, அவ்வையார் இளமுருவலுடன் ' இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள் கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்' என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கிநிற்க, அவ்வையார் ' ஒவ்வொரு பாடலும் ஒருகோடி பொன் மதிப்புடையது சென்று கொடுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்._*🤷🏻♀
🏰 *_புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப்புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் ஆமாம்.. அவ்வையார் இயற்றியதுதான் எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினார்._*
🎵 *_அந்த நான்கு கோடி பாடல்கள் 👇🏻_*
📜 *_மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று_*
📜 *_மிதியாமை கோடி பெறும்._*
📜 *_உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்_*
📜 *_உண்ணாமை கோடி பெறும்._*
📜 *_கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு_*
📜 *_கூடுதல் கோடி பெறும்._*
📜 *_கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்_*
📜 *_கோடாமை கோடி பெறும்._*
*_இதன் விளக்கம் 👇🏻_*
⚜ *_மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று_*
⚜ *_மிதியாமை கோடி பெறும்._*
🔎 _நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாமல் வாழ்பவர் வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். அல்லது மதிக்காதவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது எனவும் பொருள் கொள்ளலாம்._
⚜ *_உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்_*
⚜ *_உண்ணாமை கோடி பெறும்._*
🔎 _உணவை அருந்த அன்புடன் அழைக்காமல், வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம்._
⚜ *_கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு_*
⚜ *_கூடுதல் கோடி பெறும்._*
🔎 _கோடி பொன்னைக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்_
⚜ *_கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்_*
⚜ *_கோடாமை கோடி பெறும்._*
🔎 _கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், சொன்ன சொல் மாறாமல் வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்._
👵🏻 *_ஔவையார், அங்கவை சங்கவை மணம் முடித்தவர்_*
👵🏻 *_ஔவையார் பலரில் ஒருவர் பாரிமகளிர் அங்கவை, சங்கவை என்பவர்களை மலையரசனான தெய்வீகன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தவர். மழையில் நனைந்து வந்த ஔவைக்கு அங்கவை சங்கவையர் நீலச் சிற்றாடை தந்து உதவினர். ஔவையார் அவர்களின் கைகளுக்குக் கடகம் செறியும்படி பாடினார்._*🎵
👵🏻🎵 *_சேரனுக்கு ஔவை அனுப்பிய அழைப்பு பாடல் 👇🏻_*
🎵 *_"சேரலர்கோன் சேரன் செழும்பூங் திருக்கோவல்_*
*_ஊரளவும் தான்வருக !_* *_உட்காதே—பாரிமகள்_*
*_அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்_*
*_சங்கவையை யுங்கூடத் தான்."_*
📜 *_சோழன் 18ஆம் நாள் வர வேண்டும் என்று ஓலை அனுப்பினார்👇🏻_*
📜 *_"புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்_*
*_தகாதென்று தானங் கிருந்து—நகாதே_*
*_கடுக வருக ! கடிக்கோவ லூர்க்கு_*
*_விடியப் பதினெட்டாம் நாள்."_*
📜 *_பாண்டியன் சீர் கொண்டுவர சொல்லி அனுப்பிய அழைப்பு 👇🏻👇🏻_*
📜 *_"வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்_*
*_செய்யத் தகாதென்று தேம்பாதே -_* *_தையலர்க்கு_*
*_வேண்டுவன கொண்டு_* *_விடியஈர் ஒன்பான்நாள்_*
*_ஈண்டு வருக ! இயைந்து."_*
📜 *_திருமணத்துக்கு வந்திருந்த சேர சோழ பாண்டியர் பனம்பழம் கேட்டனர். அக்காலம் பழம் பழுக்கும் பருவ காலமில்லை. ஆயினும்,நிறைமொழி மாந்தரான ஒளவையார் பாடியதும் காய் காய்த்து, பழம் பழுத்து மூன்று பனந்துண்டம் கிடைத்தது.👇🏻_*
📜 *_"திங்கள் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்_*
*_மங்கைக் கறுகிட வந்துகின் றார்மணப் பந்தலிலே_*
*_சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து_*
*_நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து_*
*_பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே."_*
📜 *_அது மட்டுமல்லாது பெண்ணை ஆற்றில் பாலும் நெய்யும் பெருகி வரப் பாடிப் பெற்று விருந்தளித்தார். இந்த திருமணத்தை முன்னிட்டு, திருக்கோவலூர் முழுவதும் பொன்மாரி பொழியுமாறு ஔவை பாடினார். பொன்னும் பொழிந்தது._*
📜 *_"கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்_*
*_வருணனை_* *_மாமலையன் கோவல் - பெருமணத்தில்_*
*_நன்மாரி தான்கொண்ட நன்னீர் அதுதவிர்த்துப்_*
*_பொன்மாரி யாகப் பொழி."_*
📜 *_பாரி என்பவர் சங்க கால அரசன் ஆவார். பாரிமகளிர் அவனது மக்கள். "அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்" எனத் தொடங்கும் பாரிமகளிரின் பாடல் ஒன்று சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அவர்களது பெயர் அங்கவை, சங்கவை என்னும் குறிப்பு சங்கப்பாடல்களில் இல்லை. பாரியிடம் வாழ்ந்த புலவர் கபிலர். போரில் பாரி மாண்டான். கபிலர் பாரிமகளிரை அழைத்துச் சென்றார். பார்ப்பாருக்கு மணம் முடித்துவைக்க அழைத்துச் சென்றார். விச்சிக்கோ பாரிமகளிரை மணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான் இருங்கோவேள் என்பவனும் மறுத்துவிட்டார். எனவே கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பானுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டுத் தான் வடக்கிருந்து உயிர் துறந்தார். தன்மைஅங்கவை சங்கவை திருமணம் பற்றிப் கூறும் பாடல்கள் கொடூந்தமிழில் உள்ளன. இவற்றின் காலம் 9 அல்லது 10ஆம் நூற்றாண்டு ஆகும்.எனவே இவரது காலம் கி.பி 10நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும்_*🔎⏳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :22.02.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👵🏻 *ஔவையார் பற்றிய ஓர் சிறப்பு பார்வை*👵🏻
👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻
*_🏹பாகம் - 3⃣🏹_*
*_3⃣அறநூல் புலவர் ஔவையார்_*👵🏻
👵🏻🔎 *_12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் நம் வாழ்க்கைக்கு தேவையான அறநெறி நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிகோவை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்._*
*_📜ஆத்திச்சூடி📜_*
👵🏻 *_சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி. தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திச் சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்._*
*_📜கொன்றை வேந்தன்📜_*
👵🏻 *_கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவாகிய முருகனைபோற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் 👇🏻_*
⚜ *_"கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை_*
⚜ *_என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே"_*
🔎 *_இதில் குறிப்பிடப்படும் "கொன்றை வேந்தன் செல்வன்" கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய முருகன். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன._*😇
*_📜நல்வழி📜_*
👵🏻 *_மக்கள் வாழ்க்கையில் பின் பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால் இந்நூலுக்கு நல்வழி என்ற பெயர் ஏற்பட்டது._*
*_இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:👇🏻_*
⚜ *_"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்_*
⚜ *_துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா"_*
🔎 *_இதில் குறிப்பிடப்படும் "கரிமுகத்துத் தூமணி" பிள்ளையார். இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன._*👍
*_📜மூதுரை📜_*
👵🏻 *_பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் "வாக்குண்டாம்" என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 வெண்பாப்பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது._*👍
📜 *_மூதுரையின் கடவுள் வாழ்த்தில் விநாயகக் கடவுள் போற்றப் பட்டுள்ளார்.👇🏻_*
⚜ *_வாக்குஉண்டாம் நல்ல மனம்உண்டாம் மாமலராள்_*
*_நோக்குஉண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு_*
*_துப்புஆர் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்_*
*_தப்பாமல் சார்வார் தமக்கு_*
🔎 *_எனும் கடவுள் வாழ்த்துப் பாடலில் தும்பிக்கையான் என்று விநாயகர் குறிப்பிடப்பட்டுள்ளார்._*
*_📜அசதிக்கோவை📜_*
👵🏻 *_அசதி என்பது அசதி என்னும் ஊரில் வாழ்ந்த பெருமகனைக் குறிக்கும். ஔவைக்குக் கூழ் கொடுத்து அவரது அசதியைப் போக்கினானாம் ஒருவன். ஔவையார் அவனது பெயரைக் கேட்டாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். அவன் தந்தை பெயரைக் கேட்டாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். ஊர் எது என்றாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். உன் குடிசை எங்கே இருக்கிறது என்றாராம். ஐவேல் இருக்கும் குடிசை என்றானாம். இந்தக் கற்பனைக் கதை வழியே வள்ளலின் பெயர் அசதி என்றும், அவனது ஊர் ஐவேல் என்றும், அசதியைப் பாடிய நூல் அசதிக்கோவை என்றும் கூறப்படுகிறது. இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. சில பாடல்கள் சிதைவாகக் கிடைத்துள்ளன. அகத்துறைப் பாடல்களாக அவை உள்ளன.👇🏻_*
⚜ *_அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்_*
*_முற்றா முகிழ்முலை எவ்வாறு சென்றாள்? முத்தமிழ்நூல்_*
*_கற்றார்ப் பிரிவும் கல்லாதவர் ஈட்டமும் கைப்பொருள்கள்_*
*_அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே_*
⚜ *_ஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி அணிவரையில்_*
*_கோப்பாம் இவள் எழில் கொங்கைக்குத் தோற்றிய காடிரண்டும்_*
*_சீப்பாய்ச்_* *_சிணுக்கிரியாய், சிமிழாய். சின்ன மோதிரமாய்_*
*_காப்பாய், சதுரங்கமாய், பல்லக்கு ஆகிக் கடைப்படவே._*😇
*_4⃣ஔவையார் (சமயநூல் புலவர்)_*👵🏻
👵🏻 *_14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சமய நோக்கு உள்ளவராகக் காணப்படுகிறார்._*😇
*_📜விநாயகர் அகவல்📜_*
*_📜ஔவை குறள்📜_*
*_என்னும் இவரது நூல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன._*
*_📜விநாயகர் அகவல்📜_*
⚜ *_சீதக் களபச் செந்தா மரைப்பூம்_*
*_பாதச் சிலம்பு பலவிசை பாடப்_*
*_பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்_*
*_வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்_*
*_பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்_*
*_வேழ முகமும் விளங்குசிந் தூரமும்_*
*_அஞ்சு கரமும் அங்குச பாசமும்_*
*_நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்_*
*_நான்ற வாயும் நாலிரு புயமும்_*
*_மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்_*
👵🏻 *_என்று அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவலின் சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே அவ்வையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, கேட்டு தலையாட்டிய பாடல் இது._*😇
⚜ *_திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார். அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு_* *_"நீயும் வாயேன் பாட்டி' என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவ்வைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என்றார்._*
⚜👵🏻 *_"நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் அவ்வையார். "ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றதும், "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்._*
⚜👵🏻 *_கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முதற்கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் அவ்வை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்._*
*_📜ஔவை குறள்📜_*
⚜👵🏻 *_ஔவை குறள் என்னும் நூல் திருவள்ளுவர் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களில் பாடல்கள் உள்ளன. எனவே வீட்டு நெறியை விளக்க இந்த நூல் பாடப்பட்டது. இதில் மூன்று அதிகாரங்களில் 310 குறடபாக்கள் உள்ளன. இதன் காலம் 14ஆம் நூற்றாண்டு ஆகும்._*📜
*_📜குறள்📜_*
👵🏻🎵 *_ஆதியாய் நின்ற அறிவும் முதலெழுத்துஓதிய நூலின் பயன் முதல் குறள்_*
*_💝விளக்கம்💝_*
👵🏻🔎 *_ஆதியாய் நின்ற ஒன்று அறிவு அறிவாகும். நமக்கு முதலெழுத்தாக உள்ளதும் அதுதான். நூல் ஓதியதன் பயனும் அதுதான்.திருக்குறளின் முதல் இரண்டு பாடல்களில் உள்ள கருத்துக்களின் உள்ளடக்கப் பாடல் இது._*
⏳ *_மேலும் மற்றுமொரு வரலாறும் கூட இந்த ஔவையாருக்கு உண்டு._*⏳
👵🏻🔱 *_இவர் பிள்ளையாரிடமும் மற்றும் முருகனிடமும் மிகுந்த அன்பு வைத்திருந்தார், மேலும் அவர்களிடம் பேசும் பெரும் பேறு உடையவராகயிருந்தார். இவர் காட்டு வழி செல்லும் போது இளைப்பாறும் பொருட்டு ஒரு நாவல் மரம் கீழ் அமர்ந்தார். அம்மரத்தே ஒரு சிறுவன் இருப்பதைக் கண்டு, உண்ண கனிகள் சில கேட்டார். அதற்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா? ⁉சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவினான். இவ்வினாவினால் குழப்பம் அடைந்த இவர் பழமும் சுடுமா? என்று எண்ணி, சுட்ட பழம் தருமாறு வேண்டினார். அச்சிறுவனும் நாவல் மரக் கிளையை உலுக்க சில பழங்கள் உதிர்ந்து தரையில் விழுந்தன, இவற்றைப் பொறுக்கி அவற்றில் உள்ள மண் போகும் வண்ணம் ஊதினார் ஔவையார். இதைப் பார்த்த சிறுவன் இவரிடம், பழம் சுடுகிறதா நன்கு ஊதி உண் எனக் கூறி நகைத்தான். குறும்புத்தனமான மதி நுட்பத்தைக் கண்ட இவர் உன்னிடம் நான் தோற்றேன் என வருந்திப் பின்வரும் செய்யுளைப் பாடினார்._*😇
⚜ *_கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி_*
*_இருங்கதலித் தண்டுக்கு நாணும்-_* *_பெருங்கானில்_*
*_காரெருமை_* *_மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்_*
*_ஈரிரவும் துஞ்சாதென் கண்_*
🔱👵🏻 *_இதன்பின் சிறுவனும் முருகனாய் இவர்முன் தோன்றி கொடியது எது?, இனியது எது?, பெரியது எது?, அரியது எது? என இவரை சோதிக்கும் பொருட்டு வினாவி, செய்யுள்களில் விடையும் பெற்று மகிழ்ந்தார் என்ற வரலாறும் உள்ளது._*🔱👵🏻👍
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :22.02.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👵🏻 *ஔவையார் பற்றிய ஓர் சிறப்பு பார்வை*👵🏻
👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻
🏹 *பாகம்* 4⃣🏹
*_5⃣தமிழறியும் பெருமான் கதை_*👵🏻
👵🏻 *_தமிழறியும் பெருமான் கதை என்பது ஔவையாரோடு தொடர்புடைய கதைகளில் ஒன்று. தமிழறியும் பெருமான் என்பது ஒரு பெண்ணின் பெயர். அரசகுமரனும் அரசகுமரியும் காதலர்கள். 💑வில்லன் ஒருவனால் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பேய் வடிவம் கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி அங்கு வந்து தங்குவோரையெல்லாம் அச்சுறுத்தி முடுக்கிக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஔவையார் அந்தச் சத்திரத்தில் தங்கினார். பேய்கள் வழக்கம் போல் அச்சுறுத்தத் தொடங்கின. பெண்பேய் கல்வியில் வல்ல பேய்.🧟♀ இந்தப் பேய் "எற்றெற்று" என்று சொல்லிக் கொண்டு, காலால் எற்றி 👵🏻ஔவையாரை அறைய வந்தது.🧟♀ ஔவையார் அந்தப் பேயின் வரலாற்றை முன்பே அறிந்தவர். அந்தப் பேய் வரும் போது நான்கு பாடல்கள் பாடினார். அந்த வரலாற்றின் முழு விபரம்👇🏻_*
🏰👑 *_ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குப் பிறந்த பிள்ளையோ மஹா மூடன். எவ்வளவோ வாத்தியார்கள் வந்தும் அவனுக்கு அரிச்சுவடி கூட கற்பிக்க முடியவில்லை ஆனால் உடல்வாகில் ஆண் அழகன். மனம் உடைந்த ராஜா, இவனிடம் அரசாட்சி போய்விடக்கூடாது என்று கருதி அவனை நாடு கடத்தினார்._*
🏰👑 *_பக்கத்து நாட்டுக்குப் போன ராஜ குமாரன், தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த நாட்டு இளவரசி 'தமிழறியும் பெருமாள் ஏலவார்குழலி' உப்பரிகையில் இருந்து வேடிக்கை பார்த்தபோது இந்த இளவரசன்- ஆண் அழகனைக் கண்டு காதல் வசப்பட்டாள். ஒரு ஓலையில் காதல் கடிதம் எழுதி அதை அவனிடம் சேர்ப்பிக்க தோழியை அனுப்பினாள். கடிதம் மூலம் இரவில் ஊரின் வடக்குப் புற சத்திரத்துக்கு வரும்படி அழைத்தாள்._*
🏰👑 *_எழுதறிவில்லாத அந்த இளவரசன் ரோட்டில் பிச்சை எடுதுக் கொண்டிருந்த குஷ்டரோஹி ஒருவனிடம் ஓலையைக் காண்பித்தான். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். சரியான ஏமாளி என்பதை உணர்ந்து, அந்தக் கடித வாசகத்தை மாற்றிச் சொன்னான். அந்த இளவரசன் ஒரு குற்றவாளி என்று ராஜா கருதுவதால் அவன் உயிர்பிழைக்க உடனே தலைநகரை விட்டு வேறிடத்துக்குப் போகவேண்டும் என்று கடித ஓலையில் இருப்பதாகப் பொய் சொன்னான்._*📜🙃
👑📜 *_இளவரசன் ஓலையை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குஷ்டரோஹி அன்று இரவில் சத்திரத்துக்குச் சென்று இருட்டில் காத்திருந்தான். ராஜகுமாரி வந்தவுடன் அவளுடன் காதல் மொழி பேசிக் கட்டித் தழுவி இரவைக் கழித்தான். பொழுது புலர்ந்தது. உண்மையை அறிந்த ராஜகுமாரி மனம் உடைந்து அங்கேயே தற்கொலை செய்துகொண்டாள்._*
👑📜 *_இதற்குள் ராஜகுமாரன், வேறு ஒருவனிடம் ஓலையைக் காண்பிக்க, அவன உண்மையைக் கூறினான். இளவரசன் ஓடோடி சத்திரத்துக்கு வந்தான். ராஜகுமாரி சடலத்தைக் கண்டு அவனும் தற்கொலை செய்துகொண்டான். இருவரும் இளமையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதால் பேயாகி சத்திரத்தில் அலைந்தார்கள்.🧟♀🧟♂ வருவோர் போவோருக்கு எல்லாம் தொல்லையும் கொடுத்தார்கள்._*💀☠
👵🏻 *_ஒருநாள் நமது தமிழ் மூதாட்டி ஔவையாரும் அந்தப் பக்கம் வந்து சத்திரத்தில் இரவில் ஓய்வெடுக்கப் போனார். அதைப் பார்த்த பொது மக்கள் அங்கே அலையும் பேய்களின் சேட்டைகளை எடுத்துரைத்தனர். அவரோ 'என்னை ஒரு பேயும் ஒன்றும் செய்யமுடியாது' என்று துணிச்சலாக பாயை விரித்துப் படுத்தார்._*
👵🏻 *_முதல் ஜாம முடிவில் ஒரு பெண் பேய் அலறிக்கொண்டு வந்தது. ஔவையாரை 'எற்று எற்று' என்று சொல்லிக்கொண்டு எற்ற வந்தது. ஔவையார் ஒரு வெண்பாப் பாடலைப் பாடியவுடன் அது ஓட்டம் பிடித்தது._*🧟♀💤
👵🏻 *_வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை_*
*_கண்பார்க்கக் கையால் எழுதானைப்_* *_பெண்பாவி_*
*_பெற்றாளே பெற்றாள்_* *_பிறர் நகைக்கப் பெற்றாளே_*
*_எற்றோமற் றெற்றோமற் றெற்று_*
👵🏻⚜ *_வெண்பாவை இரண்டுமுறை கற்றாலும் அறியாத மூடன், ஓலையில் எழுதமுடியாத பேதையை எல்லோரும் நகைக்கும்படி பெற்றாளே அவளைப் போய் எற்றி உதை என்பது முதல் பாட்டின் பொருள்._*🔎
👵🏻 *_மீண்டும் இரண்டாம் ஜாம முடிவில் இதே போல நடந்தது. ஔவையார் மீண்டும் ஒரு வெண்பா ஆயுதத்தைப் பிரயோகித்தார். பெண் பேய் ஒட்டம் பிடித்தது._*
👵🏻⚜ *_கருங்குளவி சூளுரைத்து ஈச்சங்கனி போல்_*
*_வருந்தினர்க் கொன்றீயாதான் வாழ்க்கை - அரும்பகலே_*
*_இச்சித் திருந்த பொருள் தாயத்தார் கொள்வரே_*
*_எற்றோமற் றெற்றோமற் றெற்று_*
👵🏻🔎 *_விஷக் குளவி வசிக்கும் ஈச்ச மரம் யார்க்கும் உதவாதது போல, வருந்தியவர்களுக்கு தானம் செய்யாதவன் வைத்திருக்கும் பொருள், இறுதியில் சுற்றத்தார்க்குப் போய்ச் சேரும். அத்தகைய கருமிகளை எட்டி உதை என்பது இரண்டாம் பாட்டின் பொருள்._*
👵🏻 *_மூன்றாம் ஜாம முடிவிலும் இதே கதை. மேலும் ஒரு வெண்பா குண்டு!! பேய் ஓட்டம்!!_*
👵🏻⚜ *_வானம் உளதால் மழையுளதால் மண்ணூலகில்_*
*_தானம் உளதால் தயை *_உளதால்—ஆனபொழுது_*
*_எய்த்தோம் இளைத்தோம் என்றே ஏமாந்திருப்பாரை_*
*_எற்றோமற் றெற்றோமற் றெற்று_*
👵🏻🔎 *_வானமும் தானமும், மழையும் இவ்வுலகில் உண்டு. இதனை எண்ணி சோம்பித் திரிவாரை எத்தி உதை என்பது மூன்றாம் பாட்டின் பொருள்._*
👵🏻 *_நான்காம் ஜாம முடிவிலும் மேலும் ஒரு வெண்பாவை வீசவே பேய் அவர் காலில் விழுந்து விமோசனம் வேண்டவே, அடுத்த ஜன்மத்தில் நீ புலவனாகப் போவாய் என்று வாழ்த்தினார்._*
👵🏻🔎 *_எண்ணாயிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்_*
*_உண்ணீரம் பற்றாக் கிடையே போல் – பெண்ணாவாள்_*
*_பொற்றொடி மாதர் புணர்முலை மேல் சேராரை_*
*_எற்றோமற் றெற்றோமற் றெற்று_*
👵🏻🔎 *_எட்டாயிரம் ஆண்டுகள் நீரில் கிடந்தாலும் ஈரப்பசையே ஏறாத நெட்டிமரம் போல சிலர் உள்ளனர். மாதர் இன்பம் என்பதையே அனுபவியாத அத்தகைய மரக்கட்டை போன்றோரை போய் எத்தி உதை என்று சொல்லவே, பேய் ஔவையார் காலில் விழுந்தது._*👵🏻🤗
👵🏻⚜ *_ஔவை அந்தப் பேயின் எதிர்கால வாழ்க்கையை எடுத்துரைத்தார். அவர் வாக்குப்படி பெண்பேய்🧟♀🧟♀ தமிழறியும் பெருமான் எனப் போற்றப்படும் பெருமாட்டியாகப் பிறந்தது.🤗 அவளது முற்பிறவிக் காதலன் விறகு வெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக் கொண்டிருந்தவனைக் கண்டு காதல் கொண்டு திருமணம் நடந்தேறியது._*💑
👵🏻🔎⏳ *_இங்குக் காட்டப்பட்டுள்ள பாடல் 16-17ஆம் நூற்றாண்டினது ஆகலாம். ஔவையார் (சிற்றிலக்கியப் புலவர்) ஔவையார் பாடிய நூல் என்னும் குறிப்போடு இரண்டு நூல்கள் உள்ளன._*👍👍
*_6⃣கதையில் வரும் புலவர் ஔவையார்._*👵🏻
*_📜பந்தன் அந்தாதி📜_*
👵🏻⚜ *_பந்தன் அந்தாதி என்னும் நூல் ஔவையாரால் பாடப்பட்டது என அந்த நூலின் குறிப்பு கூறுகிறது. அந்த நூலின் உள்ளே வரும் பாடல்களை எண்ணிப் பார்க்கும் போது இந்த நூல் எந்த ஔவையாராலும் பாடப்படவில்லை என்பது தெளிவாகும். இந்த நூலில் உள்ள ஒரு பாடல் ஔவையாரையே குறிப்பிடுகிறது. இதனால் ஔவையார் பெயரில் யாரோ ஒரு புலவர் இந்த நூலைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது._*🔎👍
👵🏻🔎 *_இந்த நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், 100 வெண்பாக்களும் உள்ளன._*
👵🏻🔎 *_இயல் வணிகன் பந்தனைப்போல் ஒப்பு ஆரே சொல்வீர் என ஔவை இவனைப் புகழ்ந்துள்ளார்._*
👵🏻🔎 *_துரை என்னும் ஆங்கிலேயர் காலச் சொல் இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது._*🔎🔎
*_💝இந்நூலின் கதை💝_*
👵🏻🔎⏳ *_நாகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன். இவன் நாகன் பந்தன் எனவும் போற்றப்படுகிறான். இவனது தந்தை நாகந்தை. பந்தன் நாகலோகம் சென்று வாணிகம் செய்தான். அப்போது அவனுக்கு நாகராசன் பெருஞ் செல்வத்தோடு இரண்டு அரிய பொருள்களையும் அளித்தான். போர்த்திக் கொண்டால் இளமை மாறாதிருக்கும் பொன்னாடை ஒன்று. உண்டவர் நீடூழி காலம் வாழச் செய்யும் நெல்லிக்கனி மற்றொன்று. பொன்னாடையை ஔவைக்குக் கொடுத்ததுடன் நெல்லிக்கனியில் பாதியைத் தான் தின்று விட்டு, மீதிப் பாதியையும் ஔவைக்குக் கொடுத்தான். பெற்று மகிழ்ந்த ஔவை (பந்தனந்தாதி பந்தன் நவமணிமாலை) ஆகிய நூல்களைப் பாடினார். இந்நூலின் காலம் 17 - 18-ஆம் நூற்றாண்டு ஆகும்._*🔎⏳👵🏻👍
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :22.02.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👵🏻 *ஔவையார் பற்றிய ஓர் சிறப்பு பார்வை*👵🏻
👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻🙏👵🏻
*_🏹பாகம் - 5⃣🏹_*
👵🏻😇 *_வாழ்வின் அற நெறிகளையும் மிக தெளிவாக அழகாக பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ஔவையார்கள் இயற்றியுள்ளனர்.👵🏻👍 ஆனால் நமக்கு தெரிந்தது ஒரே ஒரு ஔவையார் மட்டுமே.🙇🏻♀ 2013ல் தமிழக அரசின், ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், 'இரு அவ்வையார் இருந்தனர்' என, தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று குழப்பத்தை ஏற்படுத்தியது._*😴
👵🏻😇 *_அறிவிற் சிறந்த அவ்வையார், நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக, அவருக்கு, அதியமான் நெல்லிக்கனி கொடுத்ததும், திருவிளையாடல் புராணத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும், தமிழ் பாட புத்தகங்களில் இடம் பெறுகின்றன. அவ்வையார் எழுதிய, 'ஆத்திச்சூடி' பாடலும், தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெறுகிறது.பல ஆண்டுகளாக, கல்வித் துறை வெளியிட்ட பாட புத்தகங்களில், 'அவ்வையார் என்பவர், ஒருவரே' என, பொருள் படும் வகையில், கருத்துக்கள் இடம் பெற்றன. ஆனால் திடீரென ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் (இரண்டாம் பருவம்), திடீரென, 'அவ்வையார், ஒருவர் அல்ல; இரு, அவ்வையார்கள் இருந்தனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தின், 32வது பக்கத்தில், ஆசிரியர் குறிப்பு என்ற தலைப்பின் கீழ், 'அவ்வையார், சங்கப் புலவர்; அதியமானின், நண்பர்; அரிய நெல்லிக்கனியை, அதியமானிடம் பெற்றவர். சங்க காலத்தி்ல், பல பெண் கவிஞர்கள் இருந்தனர். இவர்களில், அதிக பாடல்களை பாடியவர், அவ்வையார். சங்கப்பாடல் பாடிய அவ்வையாரும், 'ஆத்திச்சூடி' பாடிய அவ்வையாரும் ஒருவர் அல்ல; வேறு வேறானவர்' என, தெரிவித்தது._*
🔴👵🏻🙇🏻♀ *_இத்தனை ஆண்டு காலமாக, அவ்வையார் எத்தனை பேர்; அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு; அவர்கள் பாடிய பாடல்கள் என, விளக்கமாக, எந்த தகவலையும் வெளியிடாமலும் இத்தனை ஆண்டுகளாக, இந்த விவரங்களை, பாட புத்தகங்களில் வெளியிடாமல் நம்முடைய வரலாற்றை தெரியபடுத்த ஆர்வமில்லாமல் இருந்தது இந்த அரசு._*🔴
🔴👵🏻 🏹 *_மேலும் இது குறித்து, சென்னை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின், மூத்த முதுகலை தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'ஓய்வுபெற்ற பேராசிரியர், கோவிந்தராஜன் எழுதிய புத்தகத்தில், நான்கு அவ்வையார் இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது. சங்ககால அவ்வையார், 🏹திருவள்ளுவர் சகோதரியான ஒரு அவ்வையார் உட்பட,🏹 நான்கு பேர் என, குறிப்பிடப்பட்டுள்ளனர். உண்மையில், அவ்வையார் எத்தனை பேர் என்பதற்கு, ஆதாரப்பூர்வமான சான்றுகளோ, நுால்களோ இல்லை' என, தெரிவித்தார்._*🙅🏻♀🙅🏻♀🔴
🔴👵🏻🏹 *_பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'சங்க கால அவ்வையார், ஆத்திச்சூடி பாடலை எழுதிய அவ்வையார், நீதி நுால்களை எழுதிய அவ்வையார் என, மூன்று பேர் இருந்தனர்' என்றார்.தமிழ் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர் அளவிலேயே, அவ்வையாரைப் பற்றி, இவ்வளவு குழப்பங்கள் இருப்பதற்கு, அவ்வையாரைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் நடக்காததும், அது குறித்த ஆய்வு அறிக்கைகள் வெளி வராததும் தான் காரணம் என்பது தெளிவாகிறது.'மேல் மட்ட அளவிலேயே, இவ்வளவு குழப்பங்கள் இருந்தால், பள்ளி மாணவர்களுக்கு, எப்படி சரியான தகவல்களை தர முடியும்..., வருங்கால துாண்களாக இருக்கும் மாணவ சமுதாயத்திற்கு, எந்த விஷயமாக இருந்தாலும், அதைப்பற்றி, முழுமையாக, தெளிவான தகவல்களை தர வேண்டும். . இதற்கு, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், நடவடிக்கை எடுக்குமா என்பது முற்றிலும் சந்தேகமே. நம் வரலாற்றை நாமே தேடி தெரிந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நம் வரலாற்றை மறைக்க எந்த ஒரு சக்தியாலும் முடியாது. மேலும் நம் முன்னோர்களின் வரலாற்றை தெரியபடுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்._*😇🏹👵🏻🔴
🔴🏹👵🏻 _*எல்லோர்க்கும் எல்லாத் திறமைகளும் வாய்த்து விடுவதில்லை, அப்படியே வாய்த்திருந்தாலும் அதை வெற்றிகரமாக உபயோகித்து தானும் பிறரும் பயனடையும் வண்ணம் எல்லோரும் வாழ்ந்து விடுவதில்லை, ஆனால் பிறப்பிலேயே தமிழறிவுடன் பிறந்த ஒளவையானவர், இயல்பிலேயே வரகவித்துவம் வாய்க்கப் பெற்றவர். இவர் தமது திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி அருமையான கவிப்பாக்களைப் புனைந்து, பிறரை மகிழ்வித்து தானும் அதன் மூலம் பரிசில் பெற்று, இன்றுவரை நிலைத்திருக்கும் வண்ணம், நாமும் படித்துணரவும் வகையில் பல சிறப்பான நூல்களையும் உருவாக்கித்தந்து அருமையான தமிழுக்கு மேலும் அணிகலனாய் விளங்கச் செய்து தமிழ்த் தொன்டாற்றியுள்ளார் ஒளவை.*_🏹👵🏻🔴🙏
🔴👵🏻🙏🏹 _*"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது பழமொழி, நல்ல மனிதர்கள் இம்மண்ணில் உருவாக்கப்படவேண்டும் என்பதே ஒளவை பிராட்டியாரின் பெரும் கனவாக இருந்திருக்கிறது,👵🏻🙏 அதனாலேயே அவர் சிறுவர் சிறுமியர்க்கும் அறிவுரைகளை பாடல் வரிகளாக விட்டுச் சென்றுள்ளார்.😇👍 இன்றும் தமிழ் பயிலும் மாணவர்களின் அரிச்சுவடியாக விளங்குவது ஒளவை பாடிச்சென்ற பாடல்களே...!👵🏻🙏 அவை "இளமையிற் கல்வி சிலை மேல் எழுத்து சிலைமேல் எழுத்து" என்பதற்கொப்ப இளம்பிராயத்திலிருந்தே சிறுபிள்ளைகள் நல்லறிவும் ஒழுக்கமும் நற்பண்புகளும் வாய்க்கப்பெற்ற மனிதராக மலர உதவி புரிகின்றது. ஒளவையின் அரும்பணிகளின் தலையாய பணியாக இதை புரிந்து கொள்ள முடிகிறது.*_👵🏻🙏🔴
🔴👵🏻🙏 _*உலகம் சிறக்க, நாடு செழிக்க தனி மனித முன்னேற்றம் இன்றியமையாததாகும்..! ஒரு உயர்ந்த குணம் படைத்த மனிதனால் ஒரு சிறந்த குடும்பத்தை உருவாக்க இயலும், பல சிறந்த குடும்பங்கள் ஒருங்கிணைந்தால் சிறந்த ஊர், நாடு என உலகமே சிறப்படையும், இக்கருத்தினை முன்வைத்து ஒளவையானவர் பல கவிதைகளை படைத்துள்ளார்.👵🏻🙏👍 அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்துவங்கி ஓரம் சொல்லேல் என முடித்த 109 ஆத்தி சூடி வரிகளாகட்டும் சரி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனத்துவங்கி முடித்த ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் 91 வரிகள் படைத்த கொன்றை வேந்தனாகட்டும், தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வீரம், அறிவு, திறமை ஆகியவை மாந்தரிடையே மலர உன்னதமான கவிப்பணி ஆற்றியுள்ளார் ஓளவை பிராட்டியார் என்பதற்கு அவர் பாடிச்சென்ற இக்கவிதை வரிகளே நற்சான்றாகும்.*_👵🏻🙏👍🔴
🔴👵🏻🙏🏹 _*மக்கள் நல்ல முறையில் மகிழ்ந்து வாழ நல்ல அரசாட்சி மிக முக்கியமாகும்.👵🏻🙏 ஒளவை சாதாரண குடிமக்கள், குழந்தைகள் அன்றி அரசர்க்கும் சிறந்த வழிகாட்டியாகவும், அவர் புகழ் பரப்பும் கவிப்புலவியாகவும் திகழ்ந்து அரும் தொன்டாற்றியுள்ளார், பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்தம் வீரம், கொடைத்தன்மை மாண்பு மரபு ஆகியவைகளை ஒளவை போன்ற அரும் புலவர்களின் கவிப்பாக்களில் இருந்தே கண்டுணர்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றார்கள் சரித்திர ஆசிரியர்கள். அவ்வகையில் காலத்தை வென்ற கல்வெட்டுக்களாய் இவர் பாடல்கள் நமது மூதாதையர்களின் அருமை பெருமைகளை நமக்கு விளக்கும் கலங்கரை விளக்கமாய் திகழ்கின்றது என்பது கண்கூடு...! ஆக தனது வாழ்வில் உலக மக்கள், தமிழ்மொழி, பக்தி நெறி என வாழ்வு சார்ந்த யாவற்றுக்கும் ஈடினையற்ற அரும் பெரும் தொன்டாற்றியுள்ளார் ஒளவை.*_🙏👵🏻👍🏹🔴
😇 🔴🏹 *_💝ஒவ்வொரு வரலாற்று முடிவுரையை பற்றி ஆராயும் போதும் எனக்குள் இருக்கும் வரலாற்று தேடல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவ்வளவு ஆச்சரியமான தேட தேட திகட்டாத இனிமையான சரித்திரமாக நம் தமிழ் வரலாறு அமைந்துள்ளது.🙏🏹😇 இதற்கு என் தாய் தமிழ் மொழிக்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன்.🙏💝_* 🏹🔴
*_🏹😇💝கமலிகணேசனின் வரலாற்று வேட்டை தொடரும்🏹😇💝_*👍👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🏆 *@Karthi VS😉😜*👏
🏆 *@sp vignesh*👏
🏆 *@Venkat, @kasi6652வை.கா*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🏆 *@Veera Kumar* 👏
🏆 *@King David (Editor), @balasundar pisn,*👏
🏆 *@🌻 வாழ்க வளமுடன் 🌼, @siva*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🔴👵🏻🏹 _*ஒளவையால் மொத்தம் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இதில் முதலாம் ஒளவை என நம்பப்படும் ஒளவையால் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது ஆகிய நூல்களை சிறுவர்களுக்கு இயற்றப்பட்டுள்ளன. இளம் பிராயத்திலிருந்தே சிறுவர்கள் மனதில் நற்குணங்கள் பதிவதோடு அவர்கள் தமிழறிவில் சிறந்து விளங்கவும் தமது படைப்புக்களைப் பாலமாக படைத்துச் சென்றவர் ஒளவை என்பது உண்மை.👍😇 இந்த விதையிலிருந்தே தமிழை விருட்சமாக்கும் ஒளவையின் முயற்சி ஒரு மிகவும் உயர்ந்த தமிழத்தொண்டாகும்.*_ 👍🏹👵🏻🔴
🔴🏹👵🏻 _*இவர் தூய தமிழ் வழிபாட்டிற்கு உறுதுணையாக பக்தியையும் தமிழ்ப்படுத்தியவர் ஆவார், அதனை நாம் அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் என இவர் வடித்த நூல்களின் வழி உணர முடிகிறது.👍 தமிழை விடுத்து வேற்று மொழியில் வழிபாடுகள் அமைவதை ஆதரிக்காது தமிழால் பக்தி வளர்த்து இறைவழிபாட்டிலும் தமிழ்த்தொன்டு ஆற்றியுள்ளார் ஒளவை...! 👵🏻👍அறம், பொருள், இன்பம், வீடு எனும் சித்தாந்தங்களை தமது கவித்திறனால் எளிமைபடுத்தி வேதாந்தக் கருத்துக்களை நயமான கவிகளாக்கி, பல்லோரும் படித்து பயனுறும் நூல்களாக்கி தாம் வாழும் காலக்கட்டத்தில் தமிழ் இலக்கியத்தை உயர்ந்த இடத்திற்கு எட்டச்செய்து மகத்தான தமிழ்த்தொண்டு புரிந்தவர் அவ்வை பிராட்டி என்பது தமிழ்கூறு நல்லுலகம் கண்ட உண்மையாகும்.*_👵🏻🙏👍🔴
🔴👵🏻🙏 _*இத்தகு மேன்மையான தமிழ்த்தொன்டுகள் பல புரிந்த ஒளவைக்கு 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய தமிழர்களான நாம் என்ன செய்யப் போகிறோம் ⁉⁉⁉⁉ காலங்களை வென்று இன்றளவிலும் நிலைத்து நிற்கும் இவர் நூல்களை படிப்பதும், படித்து அதற்கொப்ப ஒழுக்கமும் நற்பண்புகளும் நிறந்த நல்வாழ்வு வாழ்வதும், ஒளவையின் கருத்துக்களை இனி வரும் சந்ததியற்கு எடுத்தியம்புவதுமே அவ்வைக்கும், இவ்வுலகிற்கும், செம்மொழியாம் நம் தமிழ்மொழிக்கும் நாம் புரியவேண்டிய அரும் பெரும் தொண்டாகும்.*_🙏👵🏻👍😇
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து*
*மறைமொழி காட்டி* *விடும்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
👵🏻 *தெரிந்துகொள்ளவும்*👵🏻
👉 *பிறரை பழித்துப் பேசாதீர்*
👵🏻 *புரிந்து கொள்ளவும்*👵🏻
👉 *கெடுப்பது ஒழி*
*{ எதையும் எவரையும் கெடுப்பதை உன் சுபாவத்திலிருந்து ஒழித்து விடு. }*
👵🏻 *அறிந்துகொள்ளவும்*👵🏻
👉 *நன்மை கடைப்பிடி*
*{நல்வினைசெய்தலை எவ்வளவு இடையுறுவந்தாலும் உறுதியாகத் தொடரவும்.}*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஔவையைப் பற்றி அறியாத பல வரலாற்று உண்மைகளை அறிய வைத்த அருமையான பதிவு
ReplyDelete