Wednesday, 14 March 2018

_பழந்தமிழரின் போர் முறை மற்றும் போர்கருவிகள் பற்றிய அலசல்_

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :13.02.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

🏹 *நான் இப்போது இருக்கும் நிலைக்கு,*

*நானே பொறுப்பு.*😇

      💐 *~விவேகானந்தர்*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💪 *வீரம் என்பது உடல் பலத்தில் அல்ல.*

*சிந்தித்து எதிரிகளை வீழ்த்துவதில் உள்ளது.*💪🏹

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*_பழந்தமிழரின் போர் முறை மற்றும் போர்கருவிகள் பற்றிய அலசல்_*

🛡⚔🏹🗡🧐⚔🏹🗡🧐⚔🛡

*_🏹பாகம் - 1⃣🏹_*

🥁📯⚜ *_சங்ககால தமிழர்களின் போர்மரபுகள்  அறப்போர்முறையைச் சேர்ந்தது ஆகும். அகம், புறம் என்று வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.  😇 அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேர்மையாக இருந்தது, காலை சூரிய உதயத்தின் போது முரசறையந்து தொடங்கும் அவர்களின் போர் சூரியன் மறையும் வரை மட்டுமே நடைபெறும். மாலை முரசறைந்து போரை நிறுத்துவர். எத்தனை நாட்கள் போர் ஆயினும் இதுவே வழக்கத்தில் கொண்டிருந்தனர்.  முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது._*⚜

⚔ *_பகைவர் ஆயுதத்தை இழந்த போதும், போரில் தோற்றோடும் போதும் அவர் மேல் படை செலுத்தாத அறநெறி இருந்தது. அவர்களுக்கு தகுந்த வாய்ப்பளிக்க மறுநாள் போர் செய்தனர். ஓடி ஒளிந்தாரைக் கொல்லாமல் அவர்கள் வரும்வரை காத்திருந்நு போர் புரியும் வீரம் இருந்தது.  இன்று போய் போர்க்கு நாளை வா.. என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,_*⚜

⚜🏹 *_தமிழரின் அடிப்படை முக்கருவிகளாக வில் வேல் அம்பு ஆகியன பண்டைக் காலம் தொட்டே அமைந்திருந்தன,அவற்றைத் தயாரிக்கவும், சரி செய்து கொள்ளவும் பல தயாரிப்பு நிலையங்களைத் தமிழர் பெற்றிருந்தனர், திறனொழிந்த படைக்கருவிகளை அப்படியே விட்டுவிடாது மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தமிழர் கற்றிருந்தனர், முற்றிலும் பயனாகாத படைக்கருவிகள் படைவீடுகள் அமைக்கப் பயன்பெற்றுள்ளன._*⚜

⚔ *_எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது._*👍

📯📜 *_சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன._*📜

📜 *_முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும் 👇🏻_*

📜 *_எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து_*📜

💐 *_-(முல்லைப்பாட்டு 68-75)_*💐

⚔ *_இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருந்தனர், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டைய இலக்கண நூலான தொல்காப்பியம்📜 முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன._*👍

📜 *_தமிழர்கள் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர். மேலும் தமிழர்களின் எயில் போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது. எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர். தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க் கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும், அவை: 👇🏻👇🏻_*

⚜ *_1. இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள்._*
⚜ *_2. எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும்._*

⚔ *_இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப் பெற்று விளக்கப்படுகிறது._*

👑 *_மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்👇🏻_*

👑⚔ *_மன்னன் வழித்தே மலர்தலை உலகம் என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர். அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர், நால்வகைப்படைகள்  மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்._*⚔

⚔ *_படையும் கொடியும் குடையும் முரசும், நடைநவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய_*🗡

⚜ *_- (தொல்காப்பியம், பொருளதிகாரம் 616)_*📜

👑 *_என்ற நூற்பாவின்வழி மன்னர்க்குரிய புறவடையாளங்கள் பெறப்படுகின்றன._*

👑🗡 *_களிறு, தேர், நடைநவில் புரவி ஆகிய இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது. கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும். இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க் கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும். எனவே நாற்படை உடைய அரசன் அப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்க வேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்திருக்கிறது._*

👑⚔ *_இந்நால்வகைப் படைகளை மன்னர்கள் பெற்றிருந்தமையைச் சங்க இலக்கியக் குறிப்புகளும் காட்டுகின்றன.👇🏻👇🏻_*

📜 *_நெடுநல்யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று - (புறநானூறு, 72)_*

📜 *_வினை நவின்ற பேர்யானை சினம் சிறந்து களன் உழக்கவும் மா எடுத்த மலிகுரூஉத்துள் அகல்வானத்து வெயில் கரப்பவும் வாம்கரிய கருந்திண்தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் வாள்மிகு மறமைந்தர்தோள் முறையான் வீறுமுற்றதாம் - (மதுரைக்காஞ்சி 47-54)_*

📜 *_என்பன மன்னன் நால்வகைப் படையைப் பெற்றிருந்தமையைக் காட்டும் சங்க இலக்கியச் சான்றுகளாகும்._*👍

👑 *_மன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிந்தனர். தேர், குதிரை ஏறிப் போர் புரியும் வீரர்கள் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர். இவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்து பல தமிழிலக்கியங்கள் வாயிலாக ஆதாரங்கள் கிடைக்கின்றன.👇🏻_*

🏹🔱 *_வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய - (தொல், பொரு, மரபி, 628)_*

📜 *_என்ற நூற்பாவின்படி வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிய, வாழ இலக்கணம் பெற்றுள்ளனர். நூற்பாவை கூர்ந்து நோக்கினால் தேர்-குதிரை ஏறிப் போர் புரியும் ஏனோர் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர் என்பது பொருள்படும்._*

⚔🗡 *_இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தினர். வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது._*

⚔🗡 🔴 *_இம் முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன. அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ஆகிய கருவிகளையும் தமிழர்கள் பயன்படுத்தினார்கள் என்று புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிட்டுள்ளார்._*🔴📜

⚔ *_மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோல் மற்றும் புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுள்ளார்._*⚜

🗡 *_வாள்_*🗡

📜 *_தொல்காப்பியத்தில் வாளோர் ஆடும் அமலை (தும்பைத்திணை), ஒள்வாள் வீசிய நூழில் (தும்பைத்திணை), வாள்மங்கலம்  (பாடண்திணை) ஆகிய இடங்களில் வாள் என்னும் சொல் போர்க்கருவியாக கருதுமளவிற்கு எடுத்தாளப்பட்டுள்ளது, சங்கப்பாடல்களிலும் பல இடங்களில் வாள் என்னும் போர்க்கருவி எடுத்தாளப் பெற்றுள்ளது._*

⚔ *_போர்க்கு உரைஇப் புகன்று கழிந்தவாள் உடன்றவர் காப்புடை மதில் அழித்தலன் வான்உற மூழ்கி உரு இழந்தனவே - (புறநானூறு 97)_*

📜 *_ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - (புறநானூறு 312)_*

📜 *_என்ற சங்கப்பாவடிகள் வாள் வெற்றி காட்டுவனவாகும். வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை மற்றொரு புறநானூற்றுப் பாடல்வழி புலனாகின்றது._*👍

📜 *_கொண்ட வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே - (புறநானூறு 63)_*

📜 *_என்ற காக்கைப் பாடினியார் பாடலடிகள் வீரத்தாய் ஒருத்தி வாள் கொண்டு போர்க்களம் புகுந்த செய்தி பெண்களின் வாள் பயன்பாட்டிற்குச் சான்றாகும்_*🗡⚔👍

🔱 *_வேல்_*🔱

🔱 *_வேல் முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் கொண்டாடும் வேலன் அகப்பாடல்களில் முக்கியப் பாத்திரமாக அமைக்கப் பெற்றுள்ளார், புறம் சாராத அகம் சார்ந்த பயன்பாடு இதுவாயினும் வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியமைக்குச் சான்றாக மேற்கருத்து விளங்குகிறது, தொல்காப்பியத்தில்  (பெரும்பகை தாங்கும் வேலினானும்) என்று வேல் குறிக்கப்பட்டுள்ளது._*

👵🏻 *_ஒளவையார் அதியமானைக் காட்சிப்படுத்தும்போது_*

🔱 *_கையது வேலே,, காலன புனைகழல் - (புறநானூறு 100) என்று வருணிக்கிறார்_*

🔱 *_பூஆர் காவின் புனிற்று புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்து - (புறநானூறு 99)_*

📜 *_நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் களிறு பெயர்த்து எண்ணினி விண் இவர் விசும்பின் மீனும் - (புறநானூறு 302)_*

📜 *_பீலிக்கண்ணி பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துறந்து - (புறநானூறு 274)_*

📜🔱 *_திறல் ஒளிறிலங்கு நெடுவேல் மழவர - (புறநானூறு 88)_*

🔱 *_சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென - (புறநானூறு 63)_*

🔱  *_முதலான  குறிப்புகளால் வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டமை தெரிய வருகிறது._*

🔱 *_சிறிய பருவத்தின்போததே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை மற்றொரு புறநானூறு பாடலில் குறிப்பிடபட்டுள்ளது_*

🔱 *_இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரிந்து உடாஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி - (புறநானூறு 279)_*

📜 *_என்ற பாடலில் வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு தமிழர்கள் இடையே இருந்துள்ளது._*🧒🏻🔱👍

*_🏹வில்🏹_*

🏹 *_வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர்._*

📜🏹 *_கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் -  (தொல்காப்பியம், புறத்திணையியல் 16)_* 

🏹 *_என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது._*

📜🏹 *_வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் - (அகநானூறு 105)_*

🏹 *_எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் பிரிந்த - (முல்லைப்பாட்டு)_*

🏹 *_வைந்நுணைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மாசிந்தித்தும் - (முல்லைப்பாட்டு)_*

📜🏹 *_உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு - (புறநானூறு 310)_*

🏹 *_எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என - (புறநானூறு 9)_*

📜 *_முதலான அகச்சான்றுகள் சங்க காலத்தில் வில் பயன்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளாக விளங்குகின்றன._*

🏹 *_இவ்வாறு இம்முக்கருவிகளும் பெரும்பான்மையும் சங்ககாலத் தமிழரால் பயன்படுத்தப் பெற்றுள்ளன, ஒளவையார் பாடிய பாடல் ஒன்று இம்முக்கருவிகளையும் ஒருங்காகக் காட்டுவதாக உள்ளது._*

🏹 *_மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது. -(புறநானூறு 98)_*

📜 *_என்ற இப்பாடலடிகள் முக்கருவிகளும் ஓரரசனிடத்தில் இருந்தமையைத் தெளிவுபடுத்துகிறது_*

📜 *_படைக்கலக் கொட்டில் - தொழிற்கூடம்_*

📜⚔ *_சங்ககாலத் தமிழர் போர்க்கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர், அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக்கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர்._*

🔱 *_வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே - (புறநானூறு- 312)_*

🔱 *_என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்._*

📜 *_இரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே - (புறநானூறு- 309)_*

⚔ *_என்பதும் ஆகுபெயரால்போர்க்கருவியைக்குறிக்கும் பாடலடியாகும்._*

📜 *_இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,_*
*_கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,_*
*_கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,_*
*_பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,_*
*_கொல் துறைக் குற்றில மாதோ என்றும்_*
*_உண்டாயின் பதம் கொடுத்து,_*
*_இல்லாயின் உடன் உண்ணும்,_*
*_இல்லோர் ஒக்கல் தலைவன்,_*
*_அண்ணல்எம்கோமான்,வைந்நுதி_*
*_வேலே - (புறநானூறு, 95)_*

👵🏻📜 *_என்ற பாடலில் ஒளவையார் -படைக்கலன்களின் நிலையையும், படைக்கலத் தயாரிப்பையும் காட்டுகிறார்._*

📜 *_தொண்டைமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் மயிற்பீலிகள் அணிவிக்கப் பெற்று, மாலைகள் சூட்டப் பெற்று, நெய் பூசப்பெற்று, அதன் கூர்மை சரி செய்யப் பெற்று தக்கவகையில் வைக்கப் பெற்றிருந்ததாக பாடலின் முற்பகுதி குறிக்கிறது,_*

📜 *_பின்பகுதியில் அதியமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் உடைந்து கிடக்கும் காட்சி காட்டப்பெறுகிறது, இங்கு பகைவர்களைக் குத்தியதால் வேலின் நுனி சிதைந்து கிடக்கிறது, மற்ற போர்க்கலன்களும் உடைந்து கிடக்கின்றன, போரில் வெற்றி கொண்டபின் வெற்றியை ஏற்படுத்தித் தந்த போர்க் கருவிகளை வெற்றெள களத்தில்விட்டுவிடாது மீண்டும் உலைக்களம் சேர்த்த மாண்பை இவ்வடிகள் விளக்குகின்றன._*

📜🔱 *_இப்பாடலின் இறுதியடியில் அதியமான் கையில் வைத்திருக்கும் வேல் என்றைக்கும் கூர்மை மிக்கதாய் உடையாமல் இருந்துள்ளது, இவ்வாறு போர்க் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், சரியாக்கிக் கொள்ளவும் சங்கத்தமிழர் திறம் பெற்றிருந்தனர்._*

⚔💪 *_போரில் வெற்றிபெற்றபின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர், அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க்கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும், முல்லைப்பாட்டில் அப்படி ஒரு படை வீடு அமைக்கப் பெற்றிருந்தது._*

⚔⚜ *_கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றி கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து, வாங்கு வில் அரணம் அரணம் ஆக - (முல்லைப் பாட்டு 37-42)_*

📜 *_என்ற முல்லைப்பாட்டின் பாடலடிகளில் பயன்படா நிலை எய்திய போர்க்கருவிகள் மாற்றுவழியில் தங்கும் பாடிவீட்டின் சுவர்களாக மாற்றப்பட்டுள்ளமை குறிக்கப்பட்டுள்ளது, உடைந்த போர்க்கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றமை மேற்காணூம் வரிகள் தெரியபடுத்துகின்றன._*

📜🧐 *_சங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன._*

🏹 *_வில் ஏர் உழவர் பகைகொளினும்(குறள் 872),_*

🔱 *_பிழைத்த வேல் ஏந்தல் இனிது(கு,772) (மேலும் வேல் பற்றிய குறட்பாக்களின் எண்கள், 113,774,775,772,546,550), வாள் ஆண்மை (கு, 614), தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்(கு828), தெரிகணை எஃகம்(களவழி 5) என்றவாறு வில் வாள் வேல் ஆகிய படைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளமைக்குத் தக்க சான்றுகள் உள்ளன._*

*_இதில்_*

⚜ *_"தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா_*

⚜ *_ரழுதகண் ணீரு மனைத்து." (குறள் -828)_*

⚜ *_என்ற குறளில் காட்டப்பெறும் தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும். சங்க காலத்தில் நிலவிய போர்த் தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகும்._*🧐👍

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :13.02.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*_பழந்தமிழரின் போர் முறை மற்றும் போர்கருவிகள் பற்றிய அலசல்_*

🛡⚔🏹🗡🧐⚔🏹🗡🧐⚔🛡

🏹 *பாகம் - 2⃣*🏹

💪😇 *மக்களைக் காத்தல், மன்னர்க்குக் கடன், உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். 👍மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம்.👍 அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.*👑💪

🛡⚔ *போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்😔.அழிவும் மிகும்.😔 தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்👍.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.👍😇*

👑📯 *இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும்.👍 போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் "கரந்தை" என்றும் அப்பசுக்களை மீட்டல் "வெட்சி" என்றும் சொல்லப்படும்.👍 போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை "வஞ்சி" என்பர்.👍 பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் "உழிஞை" எனப்படும்.👍 இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் "தும்பை" என்பர். இதில் வெற்றி பெறுதல் "வாகை" எனப்படும்.👍 இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்*.😇👍

⚔🛡 *போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது.🙅🏻‍♀🙅🏻‍♀ அப்படிச் செய்தவர்களுடன் போரிடவோ போர்க் கருவிகளை எய்தலோ கூடாது.🙅🏻‍♀🙅🏻‍♀ தளர்ந்து விழுந்தவனை, பின் வாங்கியவனை, படைக்கலம் இழந்தோனை, ஒத்த கருவி எடாதோனை கொல்லலாகாது. 🙅🏻‍♀போர் வீரன் வீரனோடும், தலைவன் தலைவனோடும் போரிடுதல் வெண்டும்.👍 பொழுது சாய்ந்த பின் போர் தொடரலாகாது.🙅🏻‍♀தத்தம் பாசறைக்குச் சென்றுவிடல் வேண்டும்.😇👍*

🛡⚔💪 *போரில் வென்ற மன்னன்,👑 வெற்றிக்கொடி எடுத்து விழாக் கொண்டாடுதல் மரபு. அவ்விழாவில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்களுக்கும் விழுப்புண்ணுடன் வெற்றிகொண்டு தன்னுடன் மீண்ட வீர்ர்களுக்கும் முறைப்படி சிறப்புச் செய்து பொருள் குவியல்களைக் கொடுத்தலும் பட்டமளித்துப் பாராட்டலும் மரபு. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மடிந்த மறவர்களுக்கு, சிறந்த கல் எடுத்து, அதை நன்னீராட்டி, அவ்வீரனின் படிமம் சமைத்து, அதனடியில் அம்மறவனின் புகழையும் பெயரையும் வெற்றியையும் பொறித்து விழாக் கொண்டாடுதலைக் கல்நாட்டல் என்பர்.👍 அக்கல்லைத் தெய்வமாக்கிப் படையலிடுதலும் வழக்கமாயின.*😇⚔👍🙏

🥁📯 *போர் அறிவிப்பு*📯🥁

👑📯 *ஒருமன்னன் பகைவரோடு போரிடக் கருதுவானாயின் கருதியவுடன் படை எடுக்க மாட்டான்.🙅🏻‍♀தனது கருத்தைப் பகைவரது நாட்டார்க்குப் பறையறைந்து தெரியப் படுத்துவான். அப்போது*

⚜ *"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வரைப் பெறாதீரும் எம் அம்பு கடி விடுதும் நும்மரண் சேரும்,⚜ என்று அறிவிக்கப்படும்.📯 இதனால் தமிழர் போர் தொடங்கும் போது அற நெறியுடன் தொடங்கினர் என அறியலாம்.👍⚔*

⚜ *பலிபெறு நன்னகரும் பள்ளியிடனும்*⚜

⚜ *"ஒலிகெழு நான்மறையோர் இல்லும்- நலிவொரீஇப்*

⚜ *புல்லா; இரியப் பொருநர் முனை கெடுத்த*⚜

⚜ *வில்லார்க்கு அருள் சுரந்தான் வேந்து."*⚜

🛡⚔ *போர் நடக்கும் நாட்டில் மறவர்கள், பலியிடப்படும் கோவில்களுக்கும், துறவிகள் வாழும் பள்ளிகளுக்கும், வேதவொலி மிக்க அந்தணர்களின் இல்லங்களுக்கும் எந்த நலிவையும் செய்யவில்லை இவை போன்ற தக்கார் உறையும் இடங்களை நீக்கிப் பிற இடங்களில் போரிட்டுப் பகைவரை வென்றுள்ளனர்.💪 அவ்வாறு அறநெறிப்படி போரிட்ட மறவர்களுக்கே மன்னனும் சிறப்பு செய்தான். அதுவே அரசியல் அறமாகக் கருதப்பட்டது.*👑💪👍

⚔🛡 *போர்ப்படை*🛡⚔

🛡 *போரிடுங்கால் யானை, குதிரை, தேர் என்பன கையாளப்படும். மறவர் இவற்றை இயக்கியும் இவற்றின் மீது அமர்ந்து கருவி கொண்டும் போரிடுவர். ⚔படையின் முதற்பகுதி தூசிப்படை அல்லது தார் எனப்படும். வில், அம்பு, வாள் , குந்தம், ஆழி, வேல் முதலிய கருவிகள் போரில் பயன்படுத்தப்படும். கருவிகள் தம்மீது பாயாமல் பொருட்டுக் கிடுகு (கேடயம்) கையாளப்படும். கருவிகளில் வேல் என்பதே முதன்மையானது. போரிடுங்கால் துடி, முரசம், வளை, வயிர் போன்ற இசைக்கருவிகள் முழங்கும்.📯🥁*

🔔 *ஆநிரை கவர்தல்*🔔

⚔🛡 📯 *போர் அறிவிப்பைச் செய்தும் உணர மாட்டாதவை பசுக்களாகும் எனவே பசுக்களைப் பாதுகாக்க விரும்பி ஆநிரைக் கவர்தல் நடைபெறும். அவ்வாறு கவர்ந்து திரும்பும்போது அப்பசுக்ளுக்கு உணவினை வழங்கி, அவற்றிற்கு ஊறு செய்யாமல் ஓட்டிச் செல்வர் .*📯

🔔 *பூப்புனைதல்*🔔

⚔🛡 *மறவர் போர் தொடங்கும் போது நிகழ்வுக்கேற்ற அடையாளப் பூவைச் சூடுதல் வழக்கம்.💐 ஆநிரை கவரச் செல்வோர் வெட்சிப் பூவையும், ஆநிரையை மீட்கப் போவோர் கரந்தைப் பூவையும், பகைவர் நாட்டின் மீது படை எடுப்போர் வஞ்சிப் பூவையும் , அரணைக் காப்போர் நொச்சிப் பூவையும், அரணத்தை முற்றுகை இடுவோர் உழிஞைப் பூவையும், ஒரு களத்தில் புக்குப் போரிடுவோர் இரு திறத்தாரும் தும்பைப் பூவையும் , போரில் வெற்றி எய்தியோர் வாகைப் பூவையும் சூடுவர். இவ்வாறு பூச்சூடுங்கால் உண்மைப் பூவைச் சூடுவதோடு பொற்பூவைப் புனைதலும் உண்டு. அரசர் மறவர்க்குப் பொற்பூ வழங்கிச் சிறப்பித்தலும் உண்டு. முருகன் கிரவுஞ்ச மலையை வெல்லுங்கால் காந்தட் பூச் சூடினான் என்றும், சிவபெருமான் முப்புரத்தை எரித்த காலத்தில் உழிஞைப் பூச்சூடினான் என்றும் கூறுவர்.*💐⚔👍

⏳ *நாட்கோள்*⏳

⚔⏳ *படை எடுக்க விரும்பும் மன்னர் நன்னாளும் நன்முழுத்தமும் அறிந்து தொடங்குவர்.👍 அந்நேரத்தில் அரசனும் உடன் செல்ல முடியாதிருந்தால் தனக்கு மாறாகத் தன் குடையையாவது, வாளையாவது புறவீடு விடுவான். அது நாட்கோள் எனப்படும்.⏳👍*

🔔 *நெடுமொழியும் வஞ்சினமும்*🔔

🛡⚔ *படைவீரர்களான மறவர்கள் தம் அரசர் முன்னும் பகை மறவர்களின் முன்னும் நெடுமொழி (தற்பெருமை) கூறிக் கொள்வர். தனது மாமன்னனுக்குத் தன்னுடைய மேம்பாட்டை வீரன் ஒருவன் தானே எடுத்து உரைப்பது நெடுமொழி கூறல் எனப்படும்.📯 மன்னர்கள் போர் தொடங்கும் முன் வஞ்சினம் மொழிவர். வஞ்சினம் என்பது 'இன்னது செய்வேன் நான். அவ்வாறு செய்யேனாயின் இன்னன் ஆகுக' என்று வலிய சினத்தில் கூறும் சொல் ஆகும்.📯👍*

⚔ *பகைநாட்டழிவு*⚔

⚔🗡 *வஞ்சியார் எனப்படும் வஞ்சி மாலை அணிந்த வீரர்கள் பகைவரது நாட்டு எல்லையுள் புகுந்து போருக்கு அடியிடுவர். ஊரை நெருப்பிட்டுக் கொளுத்துவர். ஊர் மனைகளில் கொள்ளையும் இடுவர்.🗡 கரும்பும் நெல்லும் செழித்த வயல்களில் நெருப்பு மூட்டி அழிப்பர். நீர் தேக்கி வைத்த குளம் முதலியவற்றின் கரைகளை உடைத்துவிடுவர். உழிஞை மறவர் பகைவரது கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கிக் கழுதை ஏர் கொண்டு உழுவர். கவடு விதைப்பர். 👍மற்றொரு வகையில் இரு திறத்து மன்னரும் தும்பைப் பூச்சூடி போருக்குச் செல்லுங்கால் போர் ஊருக்குள் நடைபெறாமல் குறிப்பிட்ட ஒரு போர்க்களத்தில் நடைபெறும்.👍 இரு திறத்துப் படைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் இரு திறத்தாருக்குமே மிக்க அழிவு ஏற்படும்.⚔🗡*

🔔 *பாசறை நிலை*🔔

🔔⚔ *வஞ்சி மறவர்களது படை பகைவர்நாட்டில் புகுந்து ஊர் எல்லையில் தங்கும். அரசன் தங்குவதற்குப் பசிய மூங்கிலால் அறை வகுப்பர். (பசுமை+அறை=பாசறை) அதனைச் சுற்றி மறவர்கள் தங்குவதற்குத் தழைகளை வெட்டி மேற்கூரையாக இட்டுச் சிறுசிறு அறைகள் வகுக்கப்படும். 📯அங்கே ஊரில் வாழ்வது போன்ற எல்லா அமைப்புகளும் இருக்கும். எனவே அது புதிதாகக் கட்டப்பட்ட ஊரைப் போலவே காணப்படும்.இது கட்டூர் எனப்படும். (கட்டு + ஊர் = கட்டூர், பாசறை) ஒரு பக்கம் யானைகள் முழங்கும்; ஒருபக்கம் ஆடல் பாடல் மகளிரின் கூத்து நடக்கும்🥁. பாசறையில் தங்கியுள்ள மன்னனுக்குப் பகைவர் திறையளிப்பர். பாசறை மன்னன் தம் மறவர்க்குப் பெருஞ்சோறளித்தலும் உண்டு. போர்க்களம் புகுந்த மறவர் நெடுநாள் பாசறையில் தங்கியிருந்து போரிட்டு வருவர். 👑அப்போது அவர்களுக்கு வழங்கும் உணவு அளவுக்கு உட்பட்டே இருக்கும். அந்நாட்களில் ஒரு நாள் மன்னன் மறவர்க்கு உணர்ச்சி பெருகுதல் வேண்டிக் கறிவிரவிய பெருஞ்சோற்றுத்திரள்களை அளிப்பான் இதுவே பெருஞ்சோறு எனப்படும்.🥁📯*

🔔 *மகள் மறுத்தல்*🔔

🔔🙏 *வஞ்சி மன்னன் பகை மன்னர்களிடம் மகள் வேண்டுவான். காஞ்சியார் மகளைக் கொடுக்க முடியாதென மறுத்துப் பேசுவர்.👎 உழிஞை மறவன் மகள் வேண்டுவான்.நொச்சி மன்னன் மகள் தர மறுப்பான். 👎உழிஞை வேந்தன் நொச்சியானது மகளைக் கேட்பான். நொச்சியான் மகள் தர மறுப்பான்.🙅🏻‍♀ இவ்வாறான காரணங்களுக்காகப் போர் நடைபெறலும் உண்டு.🧐⚔*

⚔😔 *உயிர் நீத்தல்*😔⚔

⚔😔 *போரில் விழுப்புண்பட்ட மறவன், மீண்டும் உயிர் வாழ விரும்பாமல் தன் புண்ணைத் தானே வேலால் கிழித்துக் கொண்டு உயிர் நீப்பதும் உண்டு.😔🗡 போரில் தனது அரசன் இறந்ததைக் கண்டு தாமும் உடன் இறப்பதற்காகச் சில மறவர்கள் உயிர் வேட்டலும் உண்டு😔🗡. சில மறவர் செஞ்சோற்றுக் கடன் வாய்ப்பதற்காகத் தமதுயிரை அவியாக (பலியாக) இடுதலும் உண்டு.🗡⚔*

👑 *முடி புனைதல்*👑

👑⚔ *பகைவரது மதிலை அழித்த மன்னன் தனது வாளைப் புண்ணிய நீராட்டுவான்.😇 முடிசூடித் தானும் புண்ணிய நீராடுவான். முடிபுனைந்த நாளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுவான்.👑😇*

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :13.02.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*_பழந்தமிழரின் போர் முறை மற்றும் போர்கருவிகள் பற்றிய அலசல்_*

🛡⚔🏹🗡🧐⚔🏹🗡🧐⚔🛡

*_🏹பாகம் - 3⃣🏹_*

📜🧐 *_காப்பிய காலத்தில் வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து (சிலம்பு 5,89)_*

📜 *_என்று சிலப்பதிகாரத்துள்ளும் வாள் என்ற போர்க் கருவி பற்றி குறிப்புகள் காணகிடைக்கின்றன._*👍

📜🧐 *_ஒளிறுவாள் மறவரும், தேரும் மாவும் களிறும் சூழ் தர  (விழாவறைகாதை 69-70) என்று மணிமேகலையில் நாற்படைகள் பற்றிய குறிப்பும்._*

📜🏹 *_அம்பு ஏவுறு மஞ்சை, ஆவக்கணைக்கால் காணாயோ அம்புப்புட்டில் (துயிலெழுப்பிய காதை64)_*

📜🧐 *_என உவமைகள் வாயிலாகவும் இயல்பாகவும் போர்க் கருவிகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்._*

📜🧐 *_காப்பியகாலத்தின் பிற்காலத் தொடர்வாகத் தொடர்ந்த கம்பராமாயணம் மற்றும் வில்லி பாரதம் ஆகிய இலக்கியங்களில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் கொடுத்துள்ளனர்._*👍

📜🧐 *_இராமாயணத்தில் கம்பர் அம்புகளின் பல்திறன்களை அதாவது அம்புகளின் வகைகள், அவற்றின் இயல்புகள் குறித்த பல செய்திகளை கம்பர் குறிப்பிட்டுள்ளார்._*👍

📜🏹 *_வில்லி பாரதம் இவைகளிடம் இருந்து  சற்று வேறுபட்டு படைக்கருவிகளின் வியூகங்கள், படைக் குழுக்களின் வியூகங்கள் ஆகியவை பற்றி குறிப்பிடபட்டுள்ளது. வில், அம்பு, அம்புப்புட்டில் ஆகியவை அடங்கிய இக்கூட்டுக்கருவி தமிழர் போர்வாழ்வில் பெருத்த வளர்ச்சி அடைந்துள்ளமையை மேற்கண்ட இருகாப்பியங்கள் வழியாக அறியலாம்._*👍

📜 *_கம்பராமாயணத்தில் இடம்பெறும்_*

🔱 *_வேலோடு வாள் வில் பயிற்றலின் -  (பாலகாண்டம் நகரப்படலம் 12)_*

📜🔱 *_என்ற அடி தமிழர்தம் மரபு சார் முக்கருவிகளின் பயன்பாட்டை குறிப்பிட்டுள்ளனர். மேலும் "சங்கரன் கொடுத்த வாளும், அங்கதன் உடைவாள் ஏந்த" ஆகிய கம்பராமாயணப் பாடல்தொடர்கள் வாள் பயன்பாட்டிற்கான அகச்சான்றுகளாகும்._*👍

📜 *_இவை தவிர வேறு கருவிகளையும் கம்பராமாயண காலத்தில் தமிழர் பயன்படுத்தியுள்ளனர்._*👍

📜⚜ *_தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு வாம வில் வல்லையம் கணையம் மற்று உள சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் - (கும்பகர்ணன் வதைப்படலம் 105)_*

⚔🛡 *_என்ற போர்ப்படை வரிசை காட்டும் பாடலின் மூலம் தமிழர் பயன் படுத்திய பல போர்க்கருவிகள் அறியக் கிடைக்கின்றன._*👍

👿 *_இராவணன் மூலபலம் என்ற தனது மிக வலிமை வாய்ந்த படைக் குழுமத்தை வைத்திருந்த குறிப்பு ஒரு பாடலில் காட்டப்படுகிறது._*👍

🔱 *_சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள் கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின், சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார். - (மூலபல வதைப்படலம்,11)_*

🔱📜 *_இப்பாடலில் மூலபல படைகள் வைத்திருந்த போர்க்கருவிகள் தரப்பெறுகின்றன. இவைதவிர வில்  என்ற போர்க்கருவியை மிகத் திறமை வாய்ந்ததாகக் கம்பர தன் இராமாயணத்துள் காட்டியுள்ளார், இராமனின் வில் எதிரியைத் தாக்கி விட்டு அதன்பின் கடல் சென்று தன்னைத் தூய்மை செய்து கொண்டு மீண்டும் அவனது அம்பராத்தூணியில் வந்து சேரும் பெருமையதாகக் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளது, மேலும் இராமனின் வில் ஏழுமராமரங்களைத் துளைத்தது, வருணனை அழைத்தது,. தாடகை, வாலி, இராவணன் ஆகியோரை அழித்தது போன்ற அருஞ்செயல்களை ஆற்றியதாகவும் இராமாயணக்கதை செல்வதால் வில் என்ற போர்க்கருவி மேலும் சிறப்புடையதாக குறிப்பிட்டுள்ளார்._*👍

📜⚔ *_ஆயிரக் கோடி பல்லம், ஆயிரக் கோடி நாகக்கணை, கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு, கங்கபத்திரம், திங்களின் பாதி கோடி, கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன், பாரையின் தலைய கோடி, தாமரை தலைய வாளி, வச்சிரப்பகழி கோடி, முச்சிரப்பகழி, அஞ்சலி அஞ்சுகோடி -  (நாகபாசப் படலம் 107 முதல் 113 வரையுள்ள பாடல்கள் தரும் போர்க்கருவிகள்)_*🛡

⚔🛡 *_ஆகியவற்றை இந்திரசித் பயன்படுத்தினார்,  மேலும் அவர் வைத்திருந்த பிரம்மாத்திரம், நாகபாசப்படை ஆகியன மிகத் திறமை வாய்ந்ததாக கம்பர்  இராமாயணத்துள் குறிப்பிட்டுள்ளார். இவைதவிர இக்காப்பியத்துள் நேருக்கு நேர் போர் செய்யும் காலத்து ஒரு போர்ப்படைக் கருவிக்குத் தக்க எதிரானதாக மறுபடை ஏவப்படும்போது அவை இரண்டின் செய்களை கம்பர் எடுத்துரைத்துள்ளார்._*👍

👿 *_இராவணன் பலவகைப் படைகளைப் பயன்படுத்தியபோதும் இராமன் வில், அம்பு கொண்டே பதில் போர் செய்துள்ளான் என்பது தெரிய வருகிறது, மேலும் உங்காரம் என்ற மூச்சின் மூலம் சூலப்படையைத் தகர்த்துள்ளார் இராமன், எனவே மூச்சும் ஒரு வகை எதிர்கருவியாகச் செயல்பட்டுள்ளது, பாதிப் பிறைமுக அம்பு  இராமனின் தனிச்சிறப்பு மிக்க அம்பு, இது கொண்டே இராவணனின் உயிர் தொலைக்கப் பெற்றதாகும். கம்பராமாயணம் மூலமாக அம்பு இணையற்ற இடத்தைத் தமிழரின் போர் வாழ்வில் பெற்றது._*⚔

⚔🛡 *_இதற்கு அடுத்த நிலையில் வில்லிபாரதத்தில் படைவியூகம் பற்றிய பல குறிப்புகள் கொடுக்கபட்டுள்ளன._*

📜 *_தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் - (படை எழுச்சிச் சருக்கம் 3)_*

📜 *_வாளினர், வேலினர், போர் வில்லினர் (கிருட்டிணன் தூதுச் சருக்கம் -190)_*

📜💪 *_எனத் தமிழர்தம் முக்கருவிகளையும் வில்லிபாரதம் குறிப்பிபட்டுள்ளது. மேலும் மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணலாம்_*

📜 *_வெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்_*

📜 *_உலக்கைகள், போர் பொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன்_*

📜 *_கழுவர்க்கம், அயில், எங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள்,_*

📜 *_தண்டம், இவற்றினொடும் தங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே. - (கிருட்டிண தூது சுருக்கம் - 202)_*

📜 *_மேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின_*

📜 *_வான் புடையே, தோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின._*

📜 *_சோரிகள் சோர்ந்திடவே, ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு_*

📜 *_மூன்றனவாம் சூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின; சூழ் சில பூங் கரமே. - (கிருட்டிண தூது சுருக்கம்- 203)_*

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

🏹 *_வில்லிபாரதத்தில் படைவியூகம் பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப் பெற்றுள்ளன._*👍

🛡⚔ *_போர் நடக்கும் பல கட்டங்களில் தலைமைத் தளபதி தன் படைகளைப் பல வியூகங்களாக அமைப்பார். ஒவ்வொரு வியூகத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி உண்டு. சில வியூகம் பாதுகாப்புக்கு, சில வியூகம் தாக்குதலுக்கு எனப் பிரிந்து போர்க்களத்தில் செயல்படும். ஒவ்வொரு வியூகத்திற்கும் பலமும் உண்டு, பலவீனமும் உண்டு. அவைகளை காணலாம்.👇🏻_*

*_1. நாரை வியூகம்_*
*_2. முதலை வியூகம்_*
*_3. கூர்ம வியூகம்_*
*_4. திரிசூலம் வியூகம்_*
*_5. சக்கர வியூகம்_*
*_6. பூத்த தாமரைமலர் வியூகம் என்ற பத்ம வியூகம்_*
*_7. கருட வியூகம்_*
*_8. கடல் அலைகள் போன்ற வியூகம்_*
*_9. வான் மண்டல வியூகம்_*
*_10. வைரம் அல்லது வஜ்ராயுத (இடிமுழக்க) போன்ற வியூகம்_*
*_11. பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்_*
*_12. அசுர வியூகம்_*
*_13. தேவ வியூகம்_*
*_14. ஊசி போன்ற வியூகம்_*
*_15. வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்_*
*_16. பிறை சந்திர வடிவ வியூகம்_*
*_17. பூ மாலை போன்ற வியூகம்_*
*_18. பற்ப வியூகம்_*
*_19. சருப்பதோபத்திரவியூகம்_*

*_இதில் சில படை வியூகங்கள் அமைப்பு மட்டுமே கிடைக்கபெற்றுள்ளன._*

 *_1⃣ சக்கர வியூகம்_*

✴ *_சக்கர வியூகத்தில் படை வீரர்கள் எதிரியை வட்டமிட்டு சுற்றி வளைத்து விடுவார்கள், உள் வட்டத்தினுள் சிக்கிய எதிரிகள் எண்ணிக்கை குறைவாயும் தாக்குபவர்கள் மிகுந்தும் இருப்பார்கள்.வெளி வட்டத்திலுள்ள வீரர்கள் சக்கர வியூகத்தினுள் உள்ளவர்களை காப்பாற்றவிடாமல் தடுத்துவிடுவார்கள்._*

*_2⃣சகட வியூகம்_*

✴ *_சகட வியூகம் என்பது வண்டியைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்டது._*

*_3⃣கிரௌஞ்ச வியூகம்_*

✴ *_கிரௌஞ்ச வியூகம் என்பது வனத்தில் கிரௌஞ்சாப் பறவைகள் எப்படிச் சரி சாரையாய் செல்லுமோ அப்படிச் செல்லுமாறு நுண்ணிய கழுத்தையும் இடைக்கு ஏற்ற இறகினையும் கொண்டதாக அமைக்கபடுவது._*

*_4⃣சருவதோபத்திர வியூகம்_*

✴ *_சருவதோபத்திர வியூகம் என்பது ஒவ்வொரு புறமும் எட்டு வளைவுகளைக் கொண்டதாக அணி வகுக்கப்படுகிறது._*

*_5⃣மகர வியூகம்_*

✴ *_மகரவியூகம் என்பது மிகப் பெரிய மீன் போன்ற உருவ அமைப்பை கொண்டு ஏற்படுத்த படும் வியூகம் ஆகும்._*

*_6⃣கூர்ம வியூகம்_*

✴ *_கூர்ம வியூகம் என்பது  ஆமை வடிவம் போன்ற அமைப்பை கொண்டு ஏற்படுத்தபடுகின்றது._*

✴ *_படை அமைப்பு முறைகள் நாளுக்கு நாள் மாறுபட்டனவாகவும், ஒருவர் பயன்படுத்திய அமைப்பு முறை மற்றவரால் வேறு ஒரு முறை பயன்படுத்தப்பட்டது. சக்கர வியூகம் அபிமன்யூவை அழித்த வியூகம் ஆகும். இவ்வாறு தமிழர்களின் பண்டைக்காலத்தில் படைக்கருவிகளாக மட்டும் இருந்த முப்படைக்கருவிகள் பிற்காலத்தில் படை அமைப்புமுறையில் பயன்படுத்தத் தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருந்தது._*👍

🧐🤔 *_என்னடா போர்கலைகள் பற்றிய தலைப்பில் சண்டை காட்சிகள் எதும் இடம் பெறவில்லை மாறாக புறநானூறு, தொல்காப்பியம் சிலப்பதிகாரம் போன்ற சங்க கால இலக்கிய குறிப்புகளில் உள்ள போர் முறைகளை இருக்கின்றது என்று தோன்றலாம்._*🤣

🔴📜🧐 *_சங்காகலத்திலே தமிழர்களின் கட்டிடகலை, போர்கலை போன்ற பல வியக்கதக்க  கலைகளை பற்றி புறநானூறு, தொல்காப்பியம் போன்ற பல தமிழ் இலக்கிய நூல்களில் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் மேலை நாட்டு கலாச்சார பழக்கவழக்கத்தில் நாம் இன்று மாறிகொண்டிருக்கிறோம். பெயருக்கு மட்டுமே வீரதமிழர்கள், தமிழ் இனம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்தகுடி என்று மார்தட்டி கொண்டாலும். நாம் அவற்றை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை._*🙅🏻‍♀👎

🔴📚 *_பாடப் புத்தகங்களில் அறிவை வளர்க்க முற்பட்ட நாம், மனிதநேய உணர்வை வளர்க்க ஏன் மறந்தோம்?⁉⁉ அயல்மண்ணின் அருமை பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்ன நாம், சொந்த மண்ணின் துயரங்களையும், பெருமைகளையும் ஏன் சொல்ல மறந்தோம்?_*⁉⁉

🔴🧐 *_தமிழறியாத் தமிழர்கள் தென் ஆப்பிரிக்காவிலும், மொரிஷியஸ் போன்ற தீவுகளிலும் உண்டென்று கவலைப்பட்ட காலம் போய், இன்று அத்தகைய தமிழர்களை நாம் தமிழ்நாட்டிலேயே பார்க்க முடிகிறது. மேலும் நம் தமிழர்களின் வரலாறுகளை பற்றி தெரியாத தமிழர்களும் அதிகம் இருப்பது மிகவும் வேதனைக்குறிய ஒன்றாகும்.🤦🏻‍♀🙇🏻‍♀ வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம் நம் பெருமையை ஏன் மறந்தோம்?_*⁉⁉🔴

🔴🧐 *_தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் கலைகள் போன்றதோரு சிறப்பை  வேறு எந்த மொழி கலச்சாரமும் கிடையாது.... 🙅🏻‍♀🙅🏻‍♀தமிழின் சிறப்புகள் பற்றி ஆய்ந்து அறிந்துகொள்வது ஒவ்வொரு தமிழனினதும் கடமையாகும். 👍அது தமிழ்மொழியையும் நம் கலாச்சாரத்தையும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை. நம் வரலாற்றை ஆராய்ந்து தெரியபடுத்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்_*👍💐🔴😇

🏹😇 *_கமலிகணேசனின் வரலாற்று வேட்டை தொடரும்_*😇🏹

💪 *_வாழ்க தமிழ்மொழி வாழ்க வாழ்கவே!_*💪👍

           *_💝நன்றி💝_*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

🏆👏 *ஜாஹீர் ஷாஹ்🎖💐*👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🏆 *@⁨👉🏼SIVARAJ💘👈🏼⁩, @⁨Tamiladian⁩,*👌👏

🏆 *@⁨sp vignesh⁩,  @⁨Jaiganesh⁩*👌👏

🏆 *@⁨Meenakshisundaram⁩*👌👏

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🏆 *@⁨Veerakumar⁩*👌👏

🏆 *@விஸ்வநாதன்*👌👏

🏆 *@இசையருவி*👌👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

🏹 *அரசர்கள் காலத்தில் நேருக்கு நேரா நீதி, நியாயம், தர்மம் மற்றும் பிற மக்கள் பாதுக்காப்புடனும் வைக்கப்பட்டு, ஓர் வரைமுறையுடன் போர் புரிந்தார்கள்.*🏹

🏹 *இப்போது ஒரு நாட்டை அழிக்க, உணவுப்பொருள்களிலும், மருத்துவத்திலும் புதுப் புது மருந்துகளை கண்டுபிடித்து, வைரஸ், புது புது நோய் பெயர்களை சொல்லி  அவற்றுடனும், அதனை இந்தியாவில் அனுமதிக்கும், நம் அரசியல்வாதிகளுடனும் நம் மக்கள் தினமும் போர் புரிய வேண்டியுள்ளது.*🙇🏻‍♀🤦🏻‍♀😡

🏹 *ஒரு மாநிலத்தை வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தும், புது புது வேதியியல் பெயர்களை சொல்லி, சில ஆய்வகங்கள் ஆராய்ச்சி என்று கூறியும் மக்களுடன் போர் புரிகின்றனர்.*🙇🏻‍♀

🏹 *உடல் பலத்தால் நம் வீரத்துடன் போர் புரிந்த காலம் கடந்து, பல்வேறு திட்டங்கள் மூலமாக முதுகுக்கு பின்னால் குத்துக்கிறார்கள்.*😡🙇🏻‍♀

🏹 *அப்போது இருந்த வீரமிக்க தைரியம், நேர்மையான தாக்குதல் எங்கே சென்றது என்று தெரியவில்லை.*😡🙇🏻‍♀

🏹 *தற்போதைய சூழ்நிலையில் ஒருவர், ஒருவருடன் சண்டையிட நீர், உணவுப்பொருள், பணம், பொன், பெண், மொபைல் எண் போதுமானதாக இருக்கின்றது. நம் பாரம்பரியமிக்க வீரமிகுந்த பலம், எங்கே காணாமல் போனது என்று தெரியவில்லை.*😡🙇🏻‍♀

🏹 *தற்போது நம் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் போர் கலை, போர் கருவிகள், பற்றி தெரிய வேண்டும் என்றால் பாகுபலி, பத்மாவதி, பாகமதி போன்ற திரைப்படங்களிலும், ஒரு சில சுற்றுலா தளங்களிலும் தான் முழுமையாக காண முடிகிறது.*🤦🏻‍♀🙇🏻‍♀😡

🏹🤦🏻‍♀ *அதனை பற்றி தெரிந்துக் கொள்ள கூடிய ஆசையும், ஆர்வமும் நம் மக்களிடைய வெகுவாக குறைந்து வருவது, தமிழர்களின் வரலாற்றையும் ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்பது வருந்தத்தக்கதே😥😓.*🙇🏻‍♀😡

*நன்றி🙅🏼‍♀*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.*
    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

*செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

💪 *தெரிந்துகொள்ளவும்*💪

*பொறி வென்றவனே அறிவின் குருவாம்.*

*படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.*

💪 *அறிந்துகொள்ளவும்*💪

*படையிருந்தால் அரணில்லை.*

*கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்*

💪 *புரிந்து கொள்ளவும்*💪

*இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.*

🔎✒🔍✒🔍✒🔍✒🔍✒🔍

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

             👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🔎✒🔍✒🔍✒🔍✒🔍✒🔍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...