🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் : ஞாயிற்றுக்கிழமை* 🌹
🌹 *தேதி :27.08.2017* 🌹
__________________________________
🎯 *அறிவோம்*🎯
*சிந்திக்காதவன் முட்டாள்,சிந்திக்கத் துணியாதவன் கோழை,*
*சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.*
---- *டிரம்மண்ட்*----
👍👍👍👍👍👍👍👍👍👍👍
💁🏼♂ *அட்மின்தாட்ஸ்*💁
*ஒரு கடிகாரம் 🕑கொண்டவனுக்கு சரியான நேரம் தெரியும்.*
*இரு கடிகாரம் 🕑🕑கொண்டவனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.*
💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺
🤜🏿🤜🏿 *தலைப்பு*🤛🏿🤛🏿
*தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல்*
*மாற்றம் வருமா?* *ஆளும் அரசின் இன்றைய முக்கிய சவால்*
*மக்கள் நலனா....?*
*கட்சி நலனா....?*
💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺
⚠ *தமிழகத்தை அஇஅதிமுக, திமுக என்று இரண்டு கட்சிகள் மட்டுமே கிட்டத்தட்ட கடந்த ஐம்பதாண்டு காலமாக ஆண்டு கொண்டிருக்கின்றன.*
⚠ *அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா காலமான நிலையில்,*
*ஆளும் கட்சியின் அதிகாரம் மிக்க தலைவரின் மறைவு தமிழக அரசியல் சூழல் நிலையை மாற்றி இருக்கிறது.*
🤒 *அதிமுகவின் தலைமை யாரிடம் போகும் என்பது அந்தக் கட்சியின் பிரச்சனை என்று வைத்துக்* *கொண்டாலும், தமிழக அரசியல் சூழலில் வேறுவிதமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.* *தற்பொழுது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் இதுவரையில் இல்லாததோர் அரசியல் சூழலாக இருந்து கொண்டிருக்கிறது.*
🤒 *1972 ல் எம்.ஜி.ஆர். திமுக வில் இருந்து விலகி அதிமுக என்ற கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை பார்த்தால் இதுபோன்றதோர் அரசியல் களம் தமிழகத்தில் இருந்ததில்லை என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.*
👊 *2014 ம் ஆண்டு செப்டம்பர் 27 ம் நாள் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது ஆரம்பித்த பரபரப்பு இன்றுவரையில் தொடர்கிறது.*
⁉ *இதற்கான காரணம் என்ன? இது எதை நோக்கிய முன்னேற்றம்? வருங்காலத்தில் இது பெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்குமா....*🤔🤔
💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺
😰 *அரசும் அரசு இயந்திரங்களும், அரசின் தலைவரான தமிழக முதல்வரும் சரியான முறையில் மக்களை தொடர்பு கொள்வதில்லை என்பதே இன்றைய மிகப்பெரிய குற்றச்சாட்டு, குற்றச்சாட்டு னு கூட சொல்ல முடியாது இது மக்களுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் மிக பெரிய ஏமாற்றுவேலை நும் சொல்லலாம். இதை சரி செய்ய அரசும் முயற்சி செய்வதாக தெரியவில்லை,அரசு னு ஒன்னு தமிழகத்தில் செயல்படுதா னு கூட மக்களுக்கு தெரியாமையே இருக்கு.*👎
😰 *அரசியல் சூழல் தொலைக்காட்சி தொடர் போல் உள்ளது. இத்தகைய சூழலில் உண்மையான வளர்ச்சியோ, சமூக நீதியோ, சமத்துவமோ நிலவ வாய்ப்பிருக்கிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.*❓
🤒 *எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது டிடிவி தினகரன் அணி சட்டசபை உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர விதி 72 உட்பிரிவு 1-ன் படி 24 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் அதற்கு குறைவாக 21 எம் எல் ஏக்கள் போர்க்கொடி தூக்கிஉள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து மாற்ற ஆளுநருக்கு கடிதமும் கொடுத்துள்ளனர்.*
🤒 *தமிழக அரசியலில் மிகப் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும் ஆண்டாகவும் யாருடைய வாழ்க்கையை, எந்த கட்சியின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் என்பதை கணிக்கும் ஆண்டாகவும் அமைந்துள்ளது இந்த ஆண்டு.*
😡 *திராவிட கட்சிகளின் தலைவர்கள் மேல் இருக்கும் கோபம், அந்த கட்சிகள் அதன்* *கொள்கைகள் மேல் மக்களுக்கு*
*அவ்வளவாக இல்லை.*
*யார் என்ன கணக்குகள் போட்டாலும் இப்போதைக்கு ஆட்சி மாற்றம் என்பது சந்தேகமே!,நம்ம வீட்டுல ஆச்சி மசாலாவை மாற்றுவது போல இல்லை ல இந்த அரசியல்.😂*
👍 *அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இன்றைய சமூகம் சந்திக்கும் சிக்கல்களை இது வரை ஆட்சி செய்த கட்சிகள் உணர்ந்ததாக தெரியவில்லை.*😖
🤕 *வேறு எந்த மாநிலத்தை விடவும் தமிழகத்தைத்தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் வாட்டி வதைக்கின்றன.*
💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺
😠 *“காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தோம்” “விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்தோம்” “நீட் தேர்வு விலக்கு பெற்றோம்” “ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை பெற்றோம்”* *டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தினோம்"* *குடிநீர் பற்றாகுறைகளை அகற்றி தமிழக நதிகளை* *இணைப்போம்" யாரும்*
*செல்ல ஆன தங்களின் கட்சி பதவிகளையும்,* *ஆட்சி அதிகாரத்தையும் காப்பதற்காக தங்கள் முழுநேரத்தையும் செலவிடுகின்றனர்.* *(அதை தான் பாக்குறீங்களே தினமும் அரசியல் செய்தி என்றால் தினகரன்,எடைபாடியார்,OPS,சசிகலா,ஆட்சி னு மட்டும் தான் பாக்க முடிது,இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது னு ஒரு செய்தியும் இல்லையே😢.)*
😏 *தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்பது கற்பனைகளில் ஒன்று தான். மாற்றம் என்பது பெரிதாக வர போவதில்லை. அதிமுக ஆட்சி சரியில்லை என்றால் அடுத்து திமுகவுக்கு தான் அடுத்த பெரும்பான்மை கிடைக்கும். அடுத்து அவங்க தான் ஆட்சி அமைக்க போறாங்க.* *இப்போ அதிமுக கவிழ்ந்தலாலும் திமுக தான் ஆட்சில உக்காரவும் அவங்களும் அடுத்த முறை எலெக்ஷன் ல வெற்றிபெற ஒரு 15 புதிய _சிறிய_ திட்டங்களை கொண்டுவந்து மக்களை திருப்தி படுத்துவாங்க அப்புறம் நாமலமும் ஈஈஈஈ னு நல்லது செய்றாங்கன்னு ஓட்டு போட்டு வெற்றிபெற செய்து விடுவோம்,அப்புறம் ஆட்சிக்கு வந்ததும் அதே சிறிய சிறிய திட்டங்கள் மக்களுக்கு, பெரிய பெரிய திட்டங்கள் ஊழலுக்கு னு ஆர்க்ம்பிப்பாங்க, _இது தான்பா ஆண்டாண்டு காலமா நடந்துட்டு இருக்கு._*
🙌 *இதையெல்லாம் தட்டி கேட்க யாராவது வர மாட்டாங்களா என்று கேட்பவர்கள் நமக்கு எதுக்குடா வம்புனு நினைக்கிறார்கள்.*
*அப்படியே யாராவது நல்ல மனுசன் வந்தாலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சினு* *அவங்கள மிரட்டுவது*
*அதையும் தாண்டி வந்தாலும் மக்கள்* *அங்கீகரிக்க* *படுவதில்லை..* *அதான் பா ஆட்சில இல்லாதப்போ இவங்க என்ன பன்னாங்க,ஐயோ அவங்கலா அவங்க சாதி கட்சி, ஐயோ இவங்களா ஊற ஏமாத்துறைவங்க,அந்த கட்சில தலைவர் ஒரு குடிகாரன்,இந்த கட்சில அவன் கேவலமா பேசுவான், _இளைஞர்கள் அரசியல் கு வந்தா இவங்களுக்கு அரசியல் ல ஆனா ஆவனா ஈனா இக்குனா தெரியுமா னு கேப்போம்._*
🙌 *திரை படங்களில் மட்டும் தான் நல்ல அரசியல்வாதிகள்,* *அதிகாரிகள் இருக்காங்க ஆனால் நிஜ வாழ்க்கையில் சுயநலமாக தான் இருக்காங்க.......*
*முதல்வன் படத்தில் வர மாதிரி ஒரு நல்ல முதல்வர் வர மாட்டாங்களா என்று மனசு ஏங்குது! என்ன செய்வது நிஜ வாழ்க்கை வேறு தானே.......*
🙌 *இன்றய முடிவுரை என்பது யாரையும் தாழ்த்தியோ அல்லது புகழ்ந்தோ இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. இன்றய தமிழக சூலல் பற்றிய ஒரு அலசல் மற்றும் மக்கள் நலன் இருக்கா என்பதை பற்றிய பார்வையே.*👍
💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺
☹ *இனி யார் ஆச்சி அமைக்கின்றனர்* *என்பதை தீர்மானிப்பது*
*என்பதைவிட ஆச்சி அமைத்தவர்களால் என்ன பயன் என்பதை நோக்கிய பயணமாக நம்முடைய செயல்கள் இருப்பது நலம்.*
😏 *நம்மால் சில விசயங்களை யூகிக்கதான் இயலும், அதற்காக முற்றும் உணர்ந்த முனிவர்களாக அறிந்து கொள்ள முடியாது.*👊
🤦🏻♂ *தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் வாக்கிங் செல்வது, ஜாகிங் செல்வது, பந்தாடுவது, ஊஞ்சல், சறுக்கு மரம், சீசா உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர் நமது ச.ம உறுப்பினர்கள். ( அன்று கூவத்தூர், இன்று புதுவையில் )*
😏 *விளையாடுவதை பார்க்கும் மக்கள் ஏதோ 📺யில் கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதுபோல் ரசிக்கின்றனர். என்னத்த சொல்ல.*🤦🏻♂
👊 *மக்கள் பிரச்சினைகள் எதையுமே அவர்கள் தெரிந்து (ம்) (கண்டு)கொள்ளாமல் இப்படியெல்லாம் செயல்பட்டு வரும் நிலையில்*
💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺
😡 *தமிழ்நாட்டு மக்களும் சரியில்லை, எம்எல்ஏ வும் சரியில்லை..... முதல்வரும் சரியில்லை.... ஊடகமும் சரியில்லை.... ஒரு மாநிலத்துக்கு இப்படி ஒரு சோதனையா?🤦🏼♂*
😡 *என்னைக்கு இவங்க காமராஜர தோற்கடிச்சி வீட்டுக்கு அனுப்புனாங்களோ அன்னைக்கு பிடிச்ச தரித்திரியம் இன்னும் ஓஞ்ச பாடில்லை.*👊
😡 *சத்தியமா சொல்றேன்👊. என்னைக்கு இதுவரை ஆண்ட கட்சிகளை ஓரங்கட்டி வேற கட்சிக்கு வாக்களிக்கிறிங்களோ அன்னைக்கு தான் நம்ம மாநிலத்துக்கு விடிவு காலம்.*
👊 *அது இப்ப வரை எலெக்சன்ல நடக்க போறது இல்ல. மறுபடியும் 5 வருசம் கழிச்சி எலக்சன் வரும்ல. அப்பவாச்சும் திருந்துங்க........*
🤗 *அப்துல்கலாம் ஐயா சொன்ன மாதிரி எல்லோரும் கனவு மட்டுமே காண்போம்*
😡 *ஒருவரும் அரசியலுக்கு வந்துடாதீங்க சரியா*
👍🏻.
😡 *இது மக்களுக்கான ஆச்சியா !*
😡 *இது மக்களுக்கான கட்சியா !*
😡 *இது மக்களுக்கான சேவையா !*
😡 *இது மக்களுக்கான திட்டமா !*
😡 *இதை யார் முடிவு செய்வது !*
👊 *யார் யார் ஆண்டாங்க என்பது முக்கியமல்ல...*
*யாரை ஆள வச்சோம்*
*என்பதுதான்* *முக்கியம்...!!*👍
😡 *கட்சிக்காகவும், காருக்காகவும், யார் வேணும்னாலும் ஆசை படலாம்.இனி* *மக்களுக்காக யார் வரனும் அப்படிங்கறது*
*மக்கள்தான்* *முடிவுபண்ணும்.* *முடிவு பண்ணுங்க மக்களே.* *ஓட்டுரிமை உங்கள் கையில்,ஆட்சியை மாற்ற பயன்படும் விரல் உங்களுடையதா இருக்கட்டும்.* *இதை அடுத்து வரும் தேர்தலுக்காக மக்களுக்காக சமர்பிக்கிறோம்.* 👍👍👍👍
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்*👑
🥇 *N.K.MURUGAN*
*&Su*
🥈 *கற்றது கால்நடை மருத்துவம், &DEVENDRANhp*
🥉 *goodlifesiva1978*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
😡 *எங்களையெல்லாம் பார்த்தா உங்களுக்கு எப்படி ........ இருக்கு*👊
😡 *ஏனா அன்னைக்கு என்னன்னா......... எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஓபிஎஸ்க்கு எதிராக கூவத்தூர்ல கூத்தடிச்சிங்க. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கொஞ்சிக்கிட்டிங்க கொலாவிக்கிட்டிங்க.*🔪
😡 *காலுக்கு பாலாபிஷேகம் மட்டும் தான் இன்னும் பண்ணல. அமைதிப்படை சத்யராஜ் மாதிரி எல்லாம் நடந்துச்சு.*🙊
😡 *சிஎம் ஆகலாம்னு ஒருகனவு . அதயும் கலச்சிட்டாங்க.* 🔪
😡 *தேர்ந்தெடுத்து வச்சிட்டு போனா எல்லாரும் சேர்ந்து அப்படியே முட்டணும்னு நினைச்சா கடுப்பு வருமா வராதா?(யார்க்குனு கேக்காதீங்க)*🔪
😡 *இந்த ஓபிஎஸ் என்னன்னா முதல்வர் பதவி போவுதுனு...... தெரிஞ்சதும் திடீர்னு ஞானோதயம் வந்து அம்மா சமாதில போயி தியானம் இருந்தா, மக்கள் நாங்கெல்லாம் நம்பனும்...... எங்களை பார்த்தா அவ்வளவு கேவ........ இருக்கா?*🔪
😡 *மாத்தி மாத்தி காரி துப்பிக்கிட்டு, இப்ப ஒண்ணு சேர்ந்து போஸ் குடுக்குறிங்க.*👊
😡 *கொஞ்சமாவது, மாணம், மரியாதை, நம்பிக்கை, நட்பு, விசுவாசம், இதெல்லாம் என்னான்னு உங்களுக்கு தெரியுமா?*
😡 *நீங்க எல்லாருமே ஒரே கட்சில இருந்துக்கிட்டே, மாறி மாறி முதுகுல குத்திக்கிறிங்க.*
😡 *நீங்கலாம் ஒண்ணு சேர்ந்து மக்களுக்கு என்னத்த செய்யலாம்னு இருக்கீங்க.*
👊 *ஆளுங்கட்சியோ எதிர் கட்சியோ உங்கள நம்பி ஓட்டு போடும் மக்களுக்கு நீங்க நல்லது செய்யலனா கூட பரவாயில்லை.*
*மக்களை கஷ்டபடுத்துற எந்த திட்டங்களையும் கொண்டு வராமல் இருந்தால் நலம்.*
😡 *உள்கட்சியில் எப்படியோ பதவிக்காக அடிச்சிகோங்க மறுபடி இனைந்துகோங்க. அது உங்க கட்சி பிரச்சனை. ஆனால் உங்க கட்சி பிரச்சனையே பாத்துட்டு இருந்தால் மக்கள் பிரச்சனையை எப்போதான் பார்ப்பது.*
😡 *ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அத செய்வோம்னு சொன்னீங்க இதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கானே தெரியவில்லை......*
👊 *இருப்பதிலே அதிக முதலீடும்,சம்பாதிப்பதும் அரசியலில் மட்டும் தான். ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் தலைமுறைக்கே போதும் போல.*
👊 *அரசியலில் மாற்றம் என்பது தானாகவே வராது.நாம்* *ஒவ்வொருவரும் கேள்வி கேட்கனும்,*
*மாற்றத்தை* *ஒவ்வொருவரும் கொண்டு வரனும்.* *விழிப்புணர்வுடன் இருக்கனும்.*👍
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
📜 *திருக்குறள்*📜
*தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்*
*செல்வரும் சேர்வது நாடு.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*ஆனையை முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.*
*கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?*
*இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨
👨🏻💻 *இராமலிங்கம் அங்கப்பன்*
*6012-264 6502*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டி ராஜேஷ்* __*94865 52988*__
( *அட்மின்* )
😎 *அருள்முருகஇன்பன் __ 9942288439*__
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment