Tuesday, 13 March 2018

பொங்கல் பண்டிகைகளில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ? விலங்குகள் நம்முடைய வாழ்க்கையில் எவ்வாறு இருந்துள்ளது ?*

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*👁விழிப்புணர்ச்சி*
                   *குழுமத்தின் © 👁*
🤜 *கலந்துரையாடல் குழுவின்* 🤛
       🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :15.01.2018.* 🌹                  🌷 *கிழமை :    திங்கட்கிழமை* 🌷   
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

*ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அந்நாட்டில் கால்நடைகளின் நலத்தைப் பொறுத்தே அமையும்.*

- *மகாத்மா காந்தி*

🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

*_சரியானது எது என்று தெரிந்த பிறகும்,_*

*_அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்…_*
🐂🐄🐃🐐🐏🐑🐓🦃🐩🐂
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
         ==================
*பொங்கல் பண்டிகைகளில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ? விலங்குகள் நம்முடைய வாழ்க்கையில் எவ்வாறு இருந்துள்ளது ?*
===================
🐂🐄🐃🐐🐏🐑🐓🦃🐩🐂
*முதலில் எல்லோருக்கும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்னைக்கு வீட்டு விலங்குகளுக்கு மட்டும் ஹோலி பண்டிகை கொண்டாடும்.. என்னாது ஹோலி யா... ஆமா வீட்டு விலங்குகளை குளிப்பாட்டி கலர் பொட்டு வைத்து பார்த்தா டக்குன்னு அப்படிதான் தோனுது... சரி வாங்க முடிவுரைக்கு போவோம்...*

🏃கொஞ்சம்  முடிவுரைக்கு போக வேண்டாம் நில்லுங்க.🚶🏻
ஏன்னா

அதாவது.....

*இருங்க ஒரு நாலடி நான் பின்னாடி போய்க்குறேன்... இல்லனா சேதாரம் ஆகிபோய்ரும்.... யாருக்குனு கேக்காதிங்க...🙅‍♂ எனக்கு தான் 🤷‍♂.. ம்ம்ம்...  பின்னடி வந்துட்டேன் இப்ப ஓகே, இப்ப ஓகே 🏃👍🏼.*...

*நாம் பெரும்பாலானோர் இப்படி திட்டு வாங்கிருப்போம்,என்னான்னா*

👵🏻 *உங்களலாம் பெத்ததுக்கு... நாலு பசுமாட்ட🐄 பெத்துருந்தாலாவது பால🥛 வித்து💰 பொழச்சுருப்பேன்... தண்ட சோறுங்களா..*.

🧔🏻 *இவளோ திட்ரனே எரும மாட்டு🐃 மேல மழைபேஞ்சா🌧 மாதிரியே நிக்குறான் பாரு...*

👱🏻‍♂ *ஏன்டா நல்லா தடி மாடு🐂 மாதிரி வளந்துருக்கியே ஒன்னு போட்டா🤜 என்ன?*

👱🏻‍♀ *போடா பன்னி🐖...கைய வச்ச கடிச்சுருவேன்..*.

(🏃🏻‍♂🏃🏻‍♂🏃🏻‍♀ஓட்ரா ஓட்ரா ஒரு 256 பேர் கொண்ட குழு நம்மல துரத்துது ஓட்ரா... எங்க ஒருத்தரையும்  காணம்... ஐயோ இன்னிக்கு தனியா  போடுறங்குறதையே மறந்துட்டனே.🏃🏻‍♂🏃🏻‍♂🏃🏻‍♂ புயல் மாதிரி போய்ட்டு இருக்கேன் குறுக்க எதும் மணல் லாரி வராம பாத்துக்கடா ஆண்டவா...🤡🤡🤡)

 அங்கயே நில்லுங்க... சொல்ல வந்தத சொல்லிரேன்...  இப்படி தான் எங்கம்மா என்னைய பெத்ததுக்கு மாட்ட பெத்துருக்கலாம்னும், எங்கப்பா என்னைய எரும மாடுனும்.., எங்க அண்ணன் என்னைய யாராவது அடிச்சா தடி மாடு திருப்பி அடிக்க மாட்டியாடானும், என் தங்கச்சி சாக்லேட்ல கை வச்சா கடிச்சுருவேனும் சொல்லுவா... அத தான் சொல்ல வந்தேன் அதுக்குள்ள துரத்துரிங்க.... ஸ்ஸ்ஸ்ஸப்பாாா.... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு😉😉..

 சரி சரி கொஞ்சி விட்ருவோம் எல்லாரையும்... பாவம்... என் நாய்குட்டி🐕, பூனை குட்டி🐈, கன்னு குட்டி🐮, என் மொசகுட்டி🐰....

 👆🏽😄😃😀சிரிக்க மட்டும்😄😃😀

இத ஏன் இப்ப சொல்ல வந்தேனா... இப்படி தாங்க அனைத்து விலங்குகளும்🦆 🐑🐈🐓🐄நம்ம சந்தோசம், கோபம், துக்கம்னு வாழ்க்கையோட இரண்டற கலந்துருக்கு... இத எப்பவும் யாராலையும் பிரிக்க முடியாது..
🙅‍♂திட்ரதுக்கும், கொஞ்சுறதுக்கும் கூட நாம விலங்குகள தான் உதாரணமாக பயன்படுத்துறோம்...🤷‍♂😍

நாம தலைப்புக்கு போகும் முன்னடி நாம சில நம்ம நாட்டு விலங்குகளின் பெயர்களை பாப்போம்...🤷‍♂

🐂 *நாட்டு மாடு வகைகள்:*🐄
1.அத்தக்கருப்பன்,
2. அழுக்குமறையன், 3.அணறிகாலன்,
4. ஆளைவெறிச்சான்,
5. ஆனைச்சொறியன்,
6. கட்டைக்காளை,
7. கருமறையான்,
8. கட்டைக்காரி,
9. கட்டுக்கொம்பன்,
10. கட்டைவால் கூளை,
11. கருமறைக்காளை,
12. கண்ணன் மயிலை,
13. கத்திக்கொம்பன், 14. கள்ளக்காடன்,
15. கள்ளக்காளை,
16. கட்டைக்கொம்பன்,
17. கருங்கூழை,
18. கழற்வாய்வெறியன்,
19. கழற்சிக்கண்ணன்,
20. கருப்பன்,
21. காரிக்காளை,
22. காற்சிலம்பன்,
23. காராம்பசு,
24. குட்டைசெவியன்,
25. குண்டுக்கண்ணன்,
26. குட்டைநரம்பன்,
27. குத்துக்குளம்பன்,
28. குட்டை செவியன்,
29. குள்ளச்சிவப்பன்,
30. கூழைவாலன்,
31. கூடுகொம்பன்,
32. கூழைசிவலை,
33. கொட்டைப்பாக்கன்,
34.கொண்டைதலையன்
35. ஏரிச்சுழியன்,
36. ஏறுவாலன்,
37. நாரைக்கழுத்தன்,
38. நெட்டைக்கொம்பன்,
39. நெட்டைக்காலன்,
40. படப்பு பிடுங்கி,
41. படலைக் கொம்பன்,
42. பட்டிக்காளை,
43. பனங்காய் மயிலை,
44. பசுங்கழுத்தான்,
45. பால்வெள்ளை,
46.பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்,
48. போருக்காளை,
49. மட்டைக்கொலம்பன்,
50. மஞ்சள் வாலன்,
 51. மறைச்சிவலை,
 52. மஞ்சலி வாலன்,
53. மஞ்ச மயிலை,
 54. மயிலை,
55. மேகவண்ணன்,
56. முறிகொம்பன்,
 57. முட்டிக்காலன்,
 58. முரிகாளை,
59. சங்குவண்ணன்,
60. செம்மறைக்காளை,
61. செவலை எருது,
 62. செம்ம(ப)றையன்,
63. செந்தாழைவயிரன்,
64. சொறியன்,
65. தளப்பன்,
66. தல்லயன் காளை,
67. தறிகொம்பன்,
 68. துடைசேர்கூழை,
69. தூங்கச்செழியன்,
70. வட்டப்புல்லை,
71. வட்டச்செவியன்,
72. வளைக்கொம்பன்,
73. வள்ளிக் கொம்பன்,
74. வர்ணக்காளை,
75. வட்டக்கரியன்,
 76. வெள்ளைக்காளை,
77.வெள்ளைக்குடும்பன்
78.வெள்ளைகண்ணன்,
79.வெள்ளைப்போரான்,
80. மயிலைக்காளை,
81. வெள்ளை,
82. கழுத்திகாபிள்ளை,
83. கருக்காமயிலை,
84. பணங்காரி,
85. சந்தனப்பிள்ளை,
86. சர்ச்சி,
87. சிந்துமாடு,
88. செம்பூத்துக்காரி,
 89. செவலமாடு,
90. நாட்டு மாடு,
91. எருமை மாடு,
92. காரி மாடு.

*🐏நாட்டு ஆடு வகைகள்:*🐑

தமிழ்நாட்டில் பல ஆடுகளின் இனங்கள் உள்ளன. அவை கொடி ஆடு, கன்னி ஆடு, பல்லை ஆடு, காட்டு ஆடு, வெள்ளாடு, வளர்ப்புச் செம்மறியாடு.

 *🐔கோழி வகைகள் :*🐓

 அசீல் சிட்டகாங்,
 பர்சா கருங்கால் கோழி  ,நிக்கோபாரி, மொட்டை கழுத்து கோழி.

*🐩நாய் வகைகள்:*🐕

*அலங்குநாய்:*

அழியும் நிலையில் உள்ள நாய். பழக பழக நண்பனாகும். பிஸ்கட்ட போட்டு போய் தொட்ராதிங்க.. தொட்ட கெட்ட.. சோழர்கள் போருக்கு பயன்படுத்திய நாய்...

*சிப்பி பாறை:*

மிக வேகமாக ஓடக்கூடிய நாய் மணிக்கு 45 மைல் வேகம்.

*கோம்பை நாய்:*
இதை மிஞ்சிய காவல் நாய் கிடையாது... எஜமானர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவை.. பண்ணைகளை காவல் காக்க பயன்படுத்தப்பட்டது... ஒரு காட்டெருமையை வீழ்த்தும் அளவிற்க்கு வலிமை வாய்ந்தது...

 *ராஜபாளையம் நாய்:*

எஜமானருக்காக உயிரை கூட குடுக்கும்.. அவரை தவிர வேறு எவரும் நெருங்க முடியாது.. 75செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.

*கன்னி நாய்:*

அந்த காலத்தில் மணமுடிக்கும் பெண்களுக்கு சீதனமாக வழங்கப்பட்டது. கூச்ச சுபாவமும், சுயசிந்தனையும் உடையது.

என்னங்க எப்ப பாரு 🐂விலங்கு🌱 செடி, மரம்னு🌳 பேசிட்டே இருக்கோம்னு தோணலாம்... இங்க நாம வாழவே ஒழுங்கான இடமோ அமைப்போ இல்ல , இதுல இதுங்கள வேற சுமையா எதுக்கு வச்சுக்கணும்னு தோணலாம். ஆனால் அப்படி சுலபமா கடந்து விட முடியாது... *அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்* சொல்றார்... இந்த 🌏உலகில் 🐝தேனி கூட்டம் மட்டும் முழுவதும் அழிந்து விட்டால் அடுத்த சில மாதங்களில் உலகம் அழியத் தொடங்கும்னு...

*அதாவது வண்ணத்து பூச்சி🦋, தட்டான்🦗, சிட்டுக்குருவி🐤 ,தேனி🐝 எல்லாம் ஒரு பூவுல🌻 உக்காந்து தேன  குடிச்சுட்டு🕊 இன்னொரு பூவுல உக்காந்து தேனை குடிக்கும் போது மகரந்த சேர்க்கை ஏற்படுது🍃🎋... அதாவது ஆண் மகரந்தம்  பெண் சுழலும் ஒன்னு சேருது🤗... அப்படி சேர்ந்தா தான் பூ காயாகும்🍈, காய் கனியாகும்🍒, கனி திரும்ப விதையாகும்🥜🥑, அதை பறவைகள் உண்டு 🕊கழிவாக போகும் வழியென்று தூவிச் செல்லும்🐾... 🌱அது தான் செடியாக,➡மரமாக🏝,➡காடாக🏞, அதிலிருந்து காற்றாக💨, மழையாக🌧, அருவியாக🎢, ஆறாக🗾, ஓடையாக🐉 சென்று நிலங்களையும்🏞, வயல்களையும்🛣 செழுமையாக்குகிறது.... அதிலிருந்து தான் விவசாயம்🏔, தாணியம்🥙...நெல்வகைகள்🌾🌾, சோறு🍚, ஆரோக்கியம்🧘🏻‍♀🧘🏻‍♂, வளர்ச்சி🤽🏻‍♂🤽🏻‍♀, உழைப்பு, உயிர்னு போயட்டே இருக்கு... பாருங்க எங்கயோ இருந்த வண்ணத்து பூச்சி🦋, தட்டானு🦗 செத்தா சாகட்டும்னு எல்லாரும் விட்டா அது யாருக்கான முடிவா இருக்கும்னு.*🙆🏻‍♂

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*👁விழிப்புணர்ச்சி*
                   *குழுமத்தின் © 👁*

       🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
       
  ==================

*பொங்கல் பண்டிகைகளில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ? விலங்குகள் நம்முடைய வாழ்க்கையில் எவ்வாறு இருந்துள்ளது ?*

===================

▶▶ *பாகம் -2*◀◀

💐💐💐💐💐💐💐💐💐

கோ🐄 என்றால் அரசன்🤷‍♂ பசு என்று இரண்டு பொருள் தரும்.
"" *ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் 🤷‍♂🤷‍♂மாடு மேய்த்தவன் மன்னன்😎 ஆனான்* """என்று இந்திய வரலாறு கூறுகிறது. *ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது.*

மாடு என்றால் செல்வம் என்று பொருள். ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர்.
இப்ப புரியுதா... இந்தியா முழுவதும் சுற்றி பார்த்துவிட்டேன் ஒரு ஏழையை கூட பார்க்கவில்லை என பிரிட்டிஸ் மகாராணி சுதந்திர காலக்கட்டத்தில் சொல்லியிருந்தார்.... அப்படினா என்ன அர்த்தம்னு புரிஞ்சுக்கோங்க... *இந்தியா 🌍ஒரு விவசாய நாடு*... அந்த காலத்தில் அந்த அளவு விவசாயத்தில் சிறந்து விளங்கியிருக்கிறது என்று.

 நம்மையும்,🤷‍♂ விவசாயத்தையும்,🌿🌾 கால்நடையையும்🐑🌿 எப்போதும் பிரிக்க முடியாது.🙅‍♂🙅‍♂🙅‍♂.. அது ஒன்னோடு ஒன்னு பிணைந்த ஒன்று...😍

இப்ப பாருங்க சாப்பிடுறோம், சாப்பிட்டு மிச்ச பட்ட கஞ்சி மாட்டுக்கு போடுறோம், மாடு அத சாப்பிட்டு சாணி போடுது, அதுல இரண்டு நாள்ள புலு, பூச்சினு நிறைய பாக்டீரியா உண்டாகிறது, அத எடுத்துட்டு போய் வயலுக்கு எருவா போடுறோம், அது மட்டும்லாம மாட்ட வச்சு கலப்பை மூலம் வயல்ல உழுது, உழுகுறதுனா இப்ப டிராக்டர்ல🏎 விழுறோமே அந்த மாதிரி இல்ல, மனுசன் கால் பட்டாவே அங்க எதும் முளைக்க மாட்டுது, 🙅‍♂இந்த மரக்கலப்பை மூலமா தாய் தன் குழந்தையின் தலையை வருடுவது பால அந்த கலப்பை மூலம் நிலத்தில் உழப்படும்🤷‍♂...அதன் கோமியம் பஞ்சகாவ்யாவாக மாற்றி அதை தெளித்து ஊட்டசத்துமிக்க இயற்கையான முறையில் விவசாயம் செய்ய உதவுகிறது. விளைந்த🌾 விளைச்சலில் மனிதனின் உணவுக்காக நெல்லும்,🌾 அதன் வைக்கோல் மாட்டுக்கு உணவாகவும் மாறி தொடர்ந்து இந்த சுழற்சி வந்து கொண்டே இருக்கும்....😊

 *ஆடு 🐑மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும்.ஆடுகள் ஏழைகளின் பசு (Poorman's 😩cow🐄😍)*என அழைக்கப்படுகிறாது

*ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.*

 இத்தனையையும  பாதுகாக்கும் *காவல் வீரனாக தான் அவனா நாயை🐈 வளர்த்தான்...* இவனை மீறி தான் இந்த கால்நடைகளை எவரும் தொட முடியும்... என்ன தாண்டி தொடுறா பாக்கலாம்னு தில்லா நிக்குறதுல நம்ம நாட்டு நாய்களுக்கு இணையா உலகத்துல எந்த நாயும் கிடையாது.🙅‍♂.. நன்றினா அதன் மறு பெயர் நாய் தான்... நீங்க கொலை செய்ய ஒரு ஈட்டியை எடுத்து எறந்தாலும் சாகும் போது கூட அது உங்களை தாக்க எண்ணாமல் நீங்கள் போட்ட சாப்பாட்டை மட்டுமே நினைக்கும் விசுவாசத்தின் மொத்த உருவம் தான் நாய்..😏😘

இனிமே *நன்றி கெட்ட நாயே, முட்டாள் நாயேனு யாரையாவது திட்டி நாய கேவலபடுத்தாதிங்க...*🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂

 அப்பறம் இந்த தெரு நாயெல்லாம் எங்கருந்து வந்தது அது நாட்டு நாய் இல்லையானு கேக்குறிங்களா😏.... *நாடு நாய் தான் என்ன பன்றது எப்ப  வெளிநாட்டு நாயெல்லாம் உங்க வீட்டு நாய் ஆனிச்சோ, அன்னிக்கே இந்த நாட்டு நாயெல்லாம் தெரு நாயா ஆகிருச்சு*.... காலக்கொடுமை...🙆‍♂🤦‍♂பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை மண்ணின் மைந்தர்களைப் போல, *கொங்கு மண்ணின் கிராமங்களில் பொங்கல் திருவிழா வந்துவிட்டாலே கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயங்களுக்கு தயாராகி விடுவார்கள்.*🤷‍♂

 ரேக்ளா பந்தயம் வெறும் போட்டி மட்டுமல்ல 🙅‍♂அது உணர்வுகளோடு கலந்தது. 😊😍பொங்கல் பண்டிகை எப்போது வரும்😩😑 என்று காத்திருந்து பார்த்து பார்த்து🤥😨 பந்தயத்துக்காகவே காளைகளை வளர்க்கின்றனர். பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே புது மாப்பிள்ளையை😍 கவனிப்பது போல கவனித்து கண்காணிக்கின்றனர்.🤷‍♂

 மாட்டுவண்டி போல் அல்லாமல் ரேக்ளா வண்டிகளுக்கு நன்றாக விளைந்த தேக்கு மரத்தினை மட்டுமே சக்கரங்களின் பாகங்கள் மற்றும் நுகத்தடி செய்ய பயன்படுத்துகின்றனர். எடை குறைவாகவும் அதே நேரம் வலிமையுடையதாகவும்💪 வண்டி இருந்தால்தான், பந்தய தூரத்தினை விரைவில் அடைய முடியும் என்பதால் கவனமாக தயார் செய்கின்றனர்.

*பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டாஞ்சிட்டு என அழைக்கப்படும்* காளைகளை தேர்வு செய்ய முதலில் கிராமங்களில் ரேக்ளா வண்டிகளை ஓடவிட்டு காளைகளை தேர்வு செய்கின்றனர். பின்னர் பந்தயத் திடலுக்கு உரிய காளைகளுக்கு சிறப்பு உணவு மற்றும் பயிற்சி அளிக்கின்றனர்.🤷‍♂

முந்தைய காலங்களில் ரேக்ளா வண்டி பந்தையங்கள் அதற்குரிய மைதானங்களில் நடைபெறும். இப்போது தார்சாலைகளில்தான் பந்தையங்கள் நடத்தப்படுகின்றன. *இழுவைத்திறன் பயிற்சியாக காளைகளுக்கு கிணறுகளில் நீச்சல் பயிற்சி அளித்து தயார் செய்கின்றனர்.*!🤷‍♂

*சேவல் சண்டை:*🐓

இந்த விளையாட்டு சுமார் 6000 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது.சிந்து சமவெளி நாகரிகம்💪 தோன்றிய காலத்திலிருந்தே இவ்விளையாட்டு கொண்டாடப்படுகிறது.சேவல் 🐓சண்டையானது சிறந்த வீரியமிக்க 💪சேவலை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் விளையாட்டு.சிறந்த சேவல் தேர்ந்தெடுக்கப்பட்டு பெண்கோழிகளின் இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

*ஜல்லிக்கட்டு (ஏறு தழுவல்):*
*இத பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல... இது மாட்ட பத்தின பிரச்சனை இல்ல உன் நாட்ட பத்தின பிரச்சனை டா... நாட்டின் பொருளாதாரமே வீழும் நாம எடுக்கனும் பிச்யைடா...*

*டக்கரு டக்கரு டக்கரு டக்கரு....*

*(ஜல்லி்க்கட்டு போரட்டத்த ரீவைன் பன்னா எல்லாமே நினைவுக்கு வரும்...)*_

*கடைசியா எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்குறேன்... ஒரு வீடியோல ஒரு மாடு குளத்துல இருக்க தண்ணிய குடிக்க போகுது🐂... ஆனா முகந்து பாத்துட்டு குடிக்காமலே தாகத்தோட போய்ருது🐄.... ஏன்னா அந்த அளவுக்கு தண்ணிய அசுத்தம் பன்னிருக்கோம்🤦🏻‍♂. இப்படியே விவசாயத்தையும், கால்நடை விலங்குகளையும் எனக்கென்னனு நட்டாத்துல விட்டிங்க அந்த பாவம்லாம் சும்மா விடாது😼... நாளைக்கு யாராவது "சோறு தின்றியா இல்ல வேறெதும் தின்றியா"னு கேட்டா கூட நமக்கு கோவம் வராது ஏன்னா நிஜமாலே நாம திங்க சோறு இருக்காது....இப்படியே இந்த மாடு மாதிரி தான் திரியனும் பாத்து சூதானமா நடந்துக்குங்க😠..._*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

*கலந்துரையாடல்~ 1*

🥇 *Thamizhadian*
🥈 *SP.Vignesh*
🥉 *பிரபாகரன் சிதம்பரம்*

*கலந்துரையாடல்~2*

🥇 *முயற்சி  செய்வதே சிறந்தது*
🥈 *பாபு (இசையருவி)*
🥉 *Lakshminarayanann 264*

🏆 *சிறந்த அட்மின்*🏆

 🏹 *GK*🏹

   🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
🤷‍♂ *கருத்து:*

*_இயற்கையை நேசிப்போம் உயிருள்வரை உழவனையும், கால்நடைகளையும் பாதுகாப்போம்._*                               
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்* *சிறப்பொவ்வா*
*செய்தொழில்* *வேற்றுமை யான்*
           
*_📜 விளக்கம்: 📜_*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿                     

*இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.*

                                 
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும்.*

*மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?.*

*மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்.*

*மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.*

*நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்:*

 😎 *_நான் மகான் அல்ல_*

*+65 9864 8093*

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎  *_ராமலிங்கம் அங்கப்பன்_*             
          *_+60122646502_*                                                             
😎 *_அருள்முருகஇன்பன் 9942288439_*
*_(வழக்கறிஞர்)._*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...