🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :25.08.2017.* 🌹 🌷 *கிழமை:* *வெள்ளி* 🌷
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
*விடுமுறை நாட்களும், தற்போதைய சூழ்நிலைகளும்*
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
*🇮🇳இந்தியா கலாச்சார ரீதியில் வேறுபட்டிருந்தாலும், பல்வேறு பண்டிகைகளையும், விடுமுறைகளையும் கொண்டாடும் உற்சாகமான சமுதாயம் ஆகும். இந்தியாவில் நான்கு தேசிய நாட்கள் அனுசரிக்கப்படுகிறது, அவை,*
*🇮🇳ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தினம்,*
*அக்டோபர் 2 அன்று மாகத்மா காந்தி பிறந்த தினம்,*
*🇮🇳ஜனவரி 26 அன்று குடியரசு தினம்,*
*📚ஏப்ரல் 14 அன்று அம்பேத்கார் தினம்.*
*👍மாநிலங்களில் உள்ளூர் மத மற்றும் மொழி சார்ந்த திருவிழாக்கள் உள்ளன. இந்தியா முழுவதும் பிரபலமான மத திருவிழாக்கள் குரு நானக் ஜெயந்தி மற்றும் வைசாக்கி போன்ற சீக்கிய திருவிழாக்கள். இந்து மத திருவிழாக்கள், பொங்கல், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ரக்ஷா பந்தன், ஹோலி, துர்கா பூஜை, தசரா.*
*🕋இஸ்லாமிய விழாக்கள் ரம்ஜான், ஈத் உல்-பித்ர், ஈத் அல்-அதா, மீலாது உல் நபி, முஹர்ரம்*.
*புத்தர் ஜெயந்தி மற்றும் லோசர் போன்ற புத்த திருவிழாக்கள்.*
*⛪கிறிஸ்தவ விழாக்கள், கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது*.
*👍விடுமுறை நாட்கள்*
*🤔விடுமுறை நாட்கள் என்றால் நினைவுக்கு வருவது*.
*ஆறு, ஏரிகள்,குளம், கம் மா, கிணறு, திருட்டு மாங்காய், அத்தை வீடு, மாமா வீடு, பாட்டி வீடு சைக்கிள், கண்ணாமூச்சி, கில்லி இப்படி தான்.*
*🕺விஷேச நாட்கள் என்றால் இன்னும் மகிழ்ச்சி.*
*💁🏻சித்திரை மாதம் என்றால் தமிழ் புத்தாண்டு என்பார்கள்*.
*அன்று விடுமுறை கிடைக்கும்*. *இந்நாளில் கோவிலுக்கு போவது பூஜை என்று சூப்பராக இருக்கும்.*
*💃🏼ஆடிமாதம் முதல் நாள் பட்டம் தயாரிப்பது காற்றில் பறக்கவிட்டு மகிழ்ச்சி அடைவது, தேங்காய் சுடுவது போன்றவை செய்வோம்*.
*🙆🏻♂ஆனால் தற்போது இதெல்லாம் செய்றதே குறைவாக இருக்கிறது*.
*😳தை மாதம். தமிழ் புத்தாண்டு சித்திரையா தை மாதமானு தெரிய மாட்டிக்குது*.
*🌾தைமாதம்னா நெற்பயிர்கள் அறுவடை செய்து கடவுளுக்கும் 🐄மாடுகளுக்கும் 🌞சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் காலம் இது பொங்கல்னா ஊரே திருவிழா போல கலைகட்டும்*.
*🐄ஓவ்வொரு வீட்டிலும். மாடுகளுக்கு சூப்பராக அலங்கரிப்பாங்க.*
*🐂ஆண் மாடுகளை ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்லா போட்டிகள் நடத்துவாங்க*.
*💁🏻♂தற்போது ஜல்லிக்கட்டுனா பசங்களுக்கு என்னனு தெரியவில்லை*. *தற்போது நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு தான் கொஞ்சமாவது தெரியும்.*
*கார்த்திக்கை தீபம்*.
*🔅மண் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அனைத்து வீடுகளிலும் அழகாக இருக்கும்.*
*💡தற்போது கலர்கலரா லைட் போட்டுகிறார்கள்.*
*🎉🎊தீபாவளி*
*முன்பெல்லாம் தீபாவளி என்றால் புதிய துணி, உறவினர்கள் . எண்ணெய் தேய்த்து குளிப்பது இனிப்பு பலகாரம் பட்டாசு வெடிப்பது தான் ஞாபகம் வரும்*
*🖥இப்பொழுது எந்த டிவி யில் நல்ல படம் வரும்னு இருக்காங்க*.
*விநாயகர் சதுர்த்தி.*
*🥁ஊருளுள்ள அனைத்து விநாயகர் கோவிலும் பந்தல் போட்டு விநாயகரை அலங்காரம் செய்து ரேடியோ மைக் செட்னு போட்டு அசத்துவாங்க*.
*மூன்றாவது நாள் விநாயகரை ஆற்றில் விட்டு கரைப்பாங்க.*
*🕺முன்பைவிட தற்போது இந்த பண்டிகை அதிகமாக கொண்டாடுகிறார்கள்*.
*💁🏻நவராத்திரி நோன்பு*.
*ஒன்பது நாள் நோன்பு இருப்பார்கள் கடைசியில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையுடம் நிறைவடையும்*.
*🔨⚙🔩ஆயுத பூஜை அன்று அனைத்து கம்பெனி, தொழிற்சாலைகளில், பல தொழிலாளர்கள் தங்களின் வேலைக்கு மரியாதை தரும் வகையில் பூஜை செய்வார்கள்*.
*👶சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு அ என்ற முதல் எழுத்து எழுத கற்று தருவார்கள்*.
*👱👱♀பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சரஸ்வதிக்கு மரியாதை தரும் வகையில் புத்தகம்களை வைத்து வழிபடுவார்கள்*.
*😍விடுமுறை நாட்கள் என்றால் பள்ளி, கல்லூரிகள் பரிட்சை முடிந்து விடுமுறை விடும் 40, 50 நாள் இருப்பதிலே பெரிய பண்டிகை போல இருக்கும் நாள் இதுதான்*.
*✍படிப்பு, பரிட்சை இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் நாள்.*
*காலாண்டு, அரையாண்டு, செமஸ்டர் விடுமுறை பத்து நாள் தான் சீக்கிரம் போய்விடும்*.
*ஆனால் முழாண்டு லீவுனா எம்புட்டு சந்தோஷம்.*
*🚴♀பசங்களோட விளையாட்டு, 🤼♀உறவுகள் வீடு,திருவிழாக்கள் நம்முடைய பாரம்பரிய விளையாட்டு என்று விடுமுறை நாட்கள் போவதே தெரியாமல் போய்விடும்*.
*🤦🏻♂ஆனால் தற்போது இருக்கும் பசங்களோ ஆளாளாக்கு 📱மொபைல் போன் கேம்னு அவங்க மனசு முழுவதும் கேம்லியே போய்விட்டது. இன்னும் சிலர் கார்டூன் டிவில மூழ்கிவிடுறாங்க.*
*வீட்டிலே இருக்க வேண்டும் என்பதற்காக இதற்கெல்லாம் அனுமதி தராங்க பெற்றோர்கள்..*
*📖🖌தற்போதைய பசங்க பள்ளிகளில் புத்தகம் மதிப்பெண் என்று அடிமைதனமாக வைத்துள்ளது தற்போதைய சூழ்நிலை*.
*📚📝வீட்டிலும் படிப்பு படிப்புனு ரொம்ப மனஅழுத்தம் தராங்க*.
*விடுமுறை நாட்களில் 📲கேம், 🖥கார்டூன் சேனல்னு வீட்டிலே இருக்க வைக்கிறார்கள்*.
*👀பசங்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள் வெளி உலகத்தை காட்டுங்கள்*.
*📲💻மொபைல் இண்டர்நெட் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது.*
*👳அனுபவம் தான் சிறந்த ஆசான்.*
*⛹🏻♀விடுமுறை நாட்கள் என்றால் பசங்களோட விளையாட விடுங்க.*
*👨❤👨சுற்றம், நண்பர்களோட இல்லத்திற்கு கூட்டிட்டு போங்க*. *👨👨👧👧திருமணம் திருவிழா நடக்கும் இடத்தில் அழைத்து சென்று நம்முடைய பாரம்பரியம் கலாசாரம் எப்படினு சொல்லி கொடுங்கள்*.
*👨🏻💻எப்போதும் வேலை வேலைனு இருக்காமல் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஒன்றாய் அமர்ந்து அனைத்தையும் பகிர்ந்து கோள்ள வேண்டும்*.
*இதனாலே பல பிரச்சனை வராது*.
*👩❤👩நண்பர்களை வீட்டிற்கு வர சொல்லி மனம் விட்டு பேசுங்க. அவங்க வீட்டிற்கு சென்று பல விஷியங்களை தெரிந்து கொள்ளலாம்*.
*இப்பலாம் விடுமுறை வந்தாலே போதும்🤦🏼♂. இந்த இளைஞர்கள் பைக்கை எடுத்துட்டு 🍹 குடிக்க 🥂போறாங்க. இல்லனா ₹500, ₹1000 செலவு பண்ணி புதுப்படம் பாக்க போயிறாங்க.*
*ஏன் அந்த படத்தை லேட்டா தான் பார்த்தா என்ன?. எங்க ஓடிர போகுது. கேட்டா நம்மக்கிட்ட சண்டைக்கு வருவாங்க. கஷ்டப்பட்டு சம்பாதித்து ஏன் இப்படி செலவு பண்ணணும்.*
*படம் பாருங்க. அதிக பணம் கொடுத்து வேஸ்ட் பண்ணாதிங்கனு தான் சொல்றோம்.*
*தீபாவளி, பொங்கல் வந்தா கூட வீட்டுல இளைஞர்கள், மாணவனர்கள் அதிகளவில் இருப்பதில்லை.*
*முக்கால்வாசி தியேட்டர்க்கு போயிறாங்க. இவங்க பண்றதுனால வீட்டுல உள்ள பெண்களுக்கும் தீபாவளி, பொங்கல் கொண்டாடுற ஆசை போயிடும் போல 😏.*
*வேலைக்கு போற ஆண்கள் கூட விடுமுறை தினங்களில் குடிச்சிட்டு தூங்குனா போதும்னு தான் நினைக்கிறாங்க.*
*அதுக்கு மனைவியோட, குழந்தைகளோட டைம் spent பண்ணலாம்ல😭*
*🕺பண்டிகை தினங்களில் நடிகர்களுக்கு, கட்_அவுட் வைக்கவும், பாலபிஷேகம் பண்ணவும், நம்ம சகோதரர்களுக்கு பணம் இருக்கும். ஆனா பெத்தவங்களுக்கோ, கூடப் பிறந்தவங்களுக்கோ ஒரு துணிமணி வாங்கிக் கொடுக்க கூட பணமிருக்காது😔. ஆஹா சண்டைக்கு வந்துடாதிங்க. (ஒரு சிலருக்கு)☺*
*👉📲எப்பவுமே போனும் கையுமா இருப்பதை தவிர்த்து எங்கேயாவது வெளியே சென்று நம்முடைய கட்டிட கலைகள் உள்ள கோவில் மற்றும் கடல்கரை, பார்க் என்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்க*.
*🕵🏻வேலை செய்யும் நேரத்தில் வேலை செய்யனும்.*
*📚🖌படிக்கும் நேரத்தில் படிக்கனும்*.
*🕺💃🏼அதே போல விடுமுறை நாட்களில் நண்பர்களுடன், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
*🥇கற்றது கால்நடை மருத்துவம்*
*🥈kumaran. G*
*🥉Devendranhp*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
*நம்முடைய பழக்கத்தை நாம் மாற்றி கொள்வதால் தான். பசங்களுக்கு நம்முடைய உறவுகள் பாரம்பரியம், கலாசாரம் இதெல்லாம் தெரியாமல் போகிறது*.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள்: 📜_*
*எண்பதத்தால் எய்தல் எளிதென்ப* *யார்மாட்டும்*
*பண்புடைமை என்னும் வழக்கு*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம்: 📜_*
*யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆
*உங்களால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதையே எப்போதும் செய்யுங்கள்.எதை விதைக்கிறீர்களோ! அதையே அறுவடை செய்வீர்கள்!*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*👩🏻💻✍SM*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
*👨🏻💻காளையன் அரசு 8072020151*
*👨🏻💻அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment