Sunday, 27 August 2017

எது வெற்றி❓உங்களைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றியாக நினைப்பது என்ன❓*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌱 *கலந்துரையாடல் குழு:* 🌳
__________________________________
         🌹 *தேதி :26.08.2017.* 🌹                  🌷 *கிழமை : சனிக்கிழமை* 🌷   
____________________________________
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
*அறிவோம்*

*வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்.*

- *அப்துல்கலாம்.*
  
💐💐💐💐💐💐💐💐
     
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
      ===================

*எது வெற்றி❓உங்களைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றியாக நினைப்பது என்ன❓*

💐💐💐💐💐💐💐
*நிர்வாகிகள் எண்ணம்*

😇 *நம் அடைய வேண்டியது இலக்குகளை (லட்சியங்களை) தானே தவிர,*

😇 *வெற்றி, தோல்விகளை அல்ல.*

💐💐💐💐💐💐💐
👉 *நம் எந்த ஒரு செயலில் இறங்கினாலும்,*

✅ *அது நல்லதாகவும் (நம் எதிர்பார்ப்பது),*

❎ *கெட்டதாகவும் (நம் எதிர்பார்க்காதது) முடிகிறது.*

🤗 *அதில் நல்லதாக நம் எதிர்பார்த்தப்படி அமைந்தால் அதையே வெற்றி என்று கூறிகிறோம்.*

😇 *எதுவாக அமைந்தாலும் அதை பாடமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வெற்றியக் கண்டு ஆடவும் கூடாது. தோல்வியக் கண்டு துவளவும் கூடாது.*

😊 *அந்த காலத்துலயே முன்னோர்கள் சொல்லிட்டு போயிட்டாங்க.*

😇 *வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்று.*💪

💪 *நம்ம வீரனாக இருப்போம்.*

😇 *நியூட்டனின் மூன்றாம் விதி 🤔, ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.*

😇 *எதை எப்படி செய்தாலும், அதற்கு கண்டிப்பாக மாற்று வழிகள் ஏராளம் இருக்கும்.*

😇 *வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருக்கும் வரை வெற்றியும், தோல்வியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே.*

👉 *உண்மையான வெற்றி எது தெரியுமா?*🤙

😇 *அடுத்தவர்களை மகிழ்வித்து ரசிப்பது தான், அது உன் பெற்றோர்களாக இருக்கலாம், உன் நண்பரகளாக இருக்கலாம், உன் மனைவியாக இருக்கலாம், உங்கள் பிள்ளைகளாக கூடம இருக்கலாம், உன் எதிரிகளாக கூட இருக்கலாம்.*👍

*ச்சே🤦🏼‍♂, இவன்/இவள் இருந்திருந்தா இந்நேரம் எல்லாம் பண்ணிருப்பான்டா. இதுபோல எப்போது நம் அடுத்தவர் மனதில் இடம் பிடிப்பது போல வாழ்கிறமோ, அது தான் உனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.*👍

💪 *நம்மள பத்தி, அடுத்தவர் அதிகமாக சிந்தித்ததாலோ,  பேசினலோ, புகழ்ந்தாலோ, உன்னை பற்றி புகழ்ந்தோ, இகழ்ந்தோ மற்றவரிடம் கூறினாலோ அதுவும் உங்களுக்கு கிடைத்த வெற்றி தான்.*👍

💪 *ஒருவன் வளரும் போது தான் அவனை பற்றிய விமர்சனமும் கூடவே சேர்ந்து வளரும்.*

💪 *விமர்சனங்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தால், நம் வேலைய நம்மால் சரியாக கவனிக்க முடியாது. வெற்றியோ, தோல்வியோ நம் அனைவரும் நமக்கு பிடித்த வேலைகளை செய்துக் கொண்டே இருப்பதே சிறப்பு.*

💪 *உன்னை பற்றிய விமர்சனங்கள் கூட உன் முன்னேற்றத்தை தடுப்பதற்காக தானே தவிர, விமர்சனம் செய்பவர்களால் உன் வெற்றியை எந்த விதத்திலும் தடுத்து விட முடியாது.*

😏 *நம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் நமக்கு வாழ்றதே ஃபோர் அடிச்சிரும்😆.*

*நாம் வெற்றி பெற எதை விட்டுக் கொடுக்க வேண்டும்🤔*

🤕 *மாமனுக்கும் மச்சானுக்கும் சண்டை.*
🤕 *குடும்பத்திற்கும் குடும்பத்திற்கும் சண்டை.*
🤕 *குலத்திற்கும் குலத்திற்கும் சண்டை.*
🤕 *ஜாதிக்கும் ஜாதிக்கும் சண்டை.*
🤕 *மதத்திற்கும் மதத்திற்கும் சண்டை.*
🤕 *மேலத்தெரு கீலத்தெரு சண்டை.*
🤕 *ஊருக்கும் ஊருக்கும் சண்டை.*
🤕 *நாட்டிற்கும் நாட்டிற்கும் சண்டை.*
🤕 *செயற்கைக்கும் இயற்கைக்கும் சண்டை*
🤕 *கடலுக்கும் நிலத்திற்கும் சண்டை.* 

🤒 *இந்த சண்டையை ஏற்படுத்துபவன் யார் என்று அறிவேன்🤗*

🙌 *நாம் சண்டையிட்டு கொள்கையில் அவன் சந்தோஷமடைகிறான்.*
*நாம் சண்டையிட்டு சாவதே அவனது வெற்றி என நினைக்கிறான்.*👍

🙌 *இந்த விசயத்தில் நான் விட்டுக் கொடுக்க நினைக்கிறேன் என் எதிரியிடம். இதில் நான் மற்றவரிடம்  சண்டையிட்டு பெறும் வெற்றியை விட, எனக்கு தோல்வியவே வெற்றியாக கருதுகிறேன்.*👍

😇 *இதுபோல தான், சில நேரங்களில் விட்டுக் கொடுப்பது கூட நமக்கு வெற்றியை தேடி தரும்.*👍

💪👍💪👍💪👍💪👍💪👍💪

🤙 *யாருக்கு எது வெற்றி*😏

*300 மில்லியன்😳 உயிரணுக்களுக் கிடையில் போட்டி போட்டு🏃 கருவில் உயிராய் உருவானதுவே மனிதனின் முதல் வெற்றி*

*நாலு நல்ல நண்பர்கள👬👭 சேத்தி வைச்சா அது நம்ம நட்பின் வெற்றி...*💪

*ஒரு ஏழைக்கு மூணு வேலையும் சாப்பாடு🍱 கிடைச்சதுனா அந்த ஏழைக்கு அதான் அவனுக்கான வெற்றி...*💪

*ஒரு விளையாட்டு வீரன் தான் பங்கேற்ற போட்டியில்🏃 வெற்றி பெற்றால்💪 அவனது பார்வையில் அது தான் வெற்றி ..*💪

   *ஒரு தொழில் செய்து அதில் லாபம் ஈட்டிவிட்டால்💵 ஒரு தொழிலபதிரின்😎 பார்வையில் அது தான் வெற்றி*💪

*ஒரு ஒருதலை காதலன் 🤷‍♂அதை இருதலை காதலாக மாற்றிவிட்டால்😍 அவனது பார்வையில் அது தான் அவன காதலுக்கான முதல் வெற்றி*💪

*ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போர் இட்டு⚔ வென்றால் அது தான் அந்த ராணுவத்தின்👨‍🚒 வெற்றி .*

*ஓட்டு போட்டு காத்திருந்தவனுக்கு🤠 நல்ல தலைவன் கிடைச்சாக்கா அதான் அந்த வாக்காளனுக்கான வெற்றி....*

*நாளெல்லாம் ஓடா உழைச்சு அந்த உழைப்புக்கு ஏத்த ஊதியம் 💵கிடைச்சா அது அந்த உழைப்பாளிக்கு😎 கிடைத்த வெற்றி.*
💪👍💪👍💪👍💪👍💪👍💪

*வெற்றியை நினைத்து ஆணவம் கொள்ளாதே...🤒 தோல்வியை நினைத்து  துவண்டு போகாதே...*🙅‍♂

*வெற்றியை ஆண்டவனிடம்🙏🙏 கொடுத்துவிடு... தோல்வியை காலத்திடம்🤷‍♂ கொடுத்துவிடு... முயற்சியை மட்டும்💪 உனதாக்கிக் கொள்...*👍

*முடியாது என்று🙅‍♂ நினைத்தால் தலையில் இருக்கும் முடி கூட😏 பாரமாக தெரியும்...😇 முடியும் என்று👍 நினைத்தால் மலை கூட உன் காலடி கீழ் தான்...*👣

*வாழ்க்கை வாழத்தான்...🤷‍♂ வரும்போது எதுவும் கொண்டு வரல🙅‍♂ போகும் போது எதுவும் கொண்டு போக போறது இல்ல...🙅‍♂ வெறுங்கையோட வந்த நாம வெறுங்கையோடு தான் போக போறோம்...🤷‍♂ வாழ்க்கையில் போட்டி இருக்கலாம்...🤒 போட்டியே வாழ்க்கையாகிவிடக் கூடாது... 🙅‍♂போட்டியில் வெற்றி பெறலாம்🤷‍♂ ஆனால் வெற்றி மட்டுமே வேண்டுமென்ற எண்ணம் கூடாது...🙅‍♂ வெற்றி என்னும் கல்லை💎 முயற்சி என்ற உளியால்⚒ செதுக்கினால் தான் சிற்பம் என்ற ஆனந்தம்😍 கிடைக்கும்...*

*போட்டி போட்டு வாழ வாழ்க்கை ஒரு விளையாட்டல்ல...🙅‍♂ இங்கு வெற்றியும் தோல்வியும் அவர்களின் விருப்பத்திற்கே....*🤷‍♂

*நாம வாழ்க்கைய தான் நம்மலால வாழ முடியும்...🤷‍♂ இன்னொருத்தர்😏 வாழ்க்கைய வாழனும்னு நினைக்கும் போது🤒 தான் இங்க போட்டிக்கான சூழ்நிலை உருவாகுது...🤷‍♂ போட்டினு வந்துட்டா👹 இங்க முதல்ல வரவனுக்கு தான் பேரும், புகழும்..🤴. அவன தான் உலகம் முதல் வெற்றியாளனா பாக்குது...😏 உண்மையில் இது வெற்றியல்ல ஒரு மாயை...*🙅‍♂

*நாம வெற்றி பெற்றுக் கொண்டிருப்பது வாழ்க்கையில் அல்ல..🙅‍♂ வாழ்க்கையின் சில தருணங்களினல் என்பதை உணர்ந்து😏 கொள்ள வேண்டும்...*🤷‍♂

*போட்டி போட்டு வாழ வாழ்க்கை ஒரு விளையாட்டல்ல...🙅‍♂ இங்கு வெற்றியும் தோல்வியும் அவர்களின் விருப்பத்திற்கே....*🤷‍♂
💪👍💪👍💪👍💪👍💪👍💪

🤗 *ஒரு குட்டி கதை :*🤗

🤗 *ஒருத்தர் வீட்டு முற்றத்துல மூன்று முதியவர்கள் அமரந்திருந்தாங்க அந்த வீட்டு அம்மா வந்து அவங்கள பாத்து ஐயா ஏன் இங்க அமர்ந்தூருக்கிங்கனு கேக்குறாங்க...*

😒 *ரொம்ப களைப்பாருக்க அதான் இளைப்பாறிட்டு போகலாம்னு வந்தோம்னு சொல்றாங்க அவங்க...*

😊 *அது என் பாக்கியம் உள்ள வாங்கனு கூப்புறாங்க. அதுக்கு அந்த முதியவர்கள் இல்லமா நாங்க உன் கணவன் வந்து கூப்டா தான் வருவோம்னு சொல்றாங்க. அந்தம்மா போயி கணவன குப்புட்டு வராங்க.*

🙁 *கணவன் வந்து அவங்கள வணங்கி இளைப்பாற கூப்பிடறாரு. அதுக்கு அவங்க நாங்க மூணுபேரும் அன்பு, செல்வம்,வெற்றி மூனு பேரும் ஒன்னா வரமுடியாது.*

😊 *யாராவது ஒருத்தரை கூப்பிடுங்கனு சொல்றாங்க. அதுக்கு அந்த கணவர் அவர் மனைவிட்ட செல்வத்தை கூப்பிட சொல்றார்...*

☺ *நிறைய அந்த மனைவி செல்வத்தை மட்டும் வச்சி என்ன பன்றது வெற்றிய கூப்பிடுவோம்னு சொல்றாங்க...*

😊 *இப்படியே அவங்க பேசிட்டே இருக்கும் போது அவங்க வீட்டு குழந்தை இரண்டு பேரும் வேணா அன்ப கூப்பிடுவோம்னு சொல்றா...*

☺ *அவ மழலை கெஞ்சல மீற முடியாம அன்பையே அன்போட கூப்புறாங்க...*

😊 *அன்பு உள்ள போறாங்க கூடவே வெற்றியும்,  செல்வமும் உள்ள போறாங்க...*

🤔 *அந்த வீட்ல உள்ளவங்க ஐயா நாங்க கூப்பிட்டப்ப வரமுடியாதுனு சொன்னிங்க இப்ப மூணு பேரும் வரிங்களேனு கேக்குறாங்க...*

👉 *அதுக்கு செல்வம் நீங்க செல்வத்த மட்டும் கூப்டுருந்தா அது மட்டும் வந்திருக்கும்*

👉 *வெற்றியை மட்டும் கூப்டுருந்தா அது மட்டும் வந்திருக்கும்.*

😇 *நீங்க அன்பு தான் வேணும்னு கூப்டதால தான் நாங்க மூணு பேரும் வரோம். அன்பு தான் இந்த உலகுக்கே அதிபதி. அன்பு இருந்தா கூடவே வெற்றியும் செல்வமும் வரும்...*

🙌 *கதை முடிந்தது🤷🏼‍♂*
💪👍💪👍💪👍💪👍💪👍💪

*எது வெற்றி...* ❓❓❓
     💪🏼வீழ்ந்தாலும் , விழுந்தாலும் மீண்டு(ம்) எழுந்து வருவதே *வெற்றி*.. 💪🏼

மூடிய மண்ணுக்குள் இருந்து முளைத்து வெளியே வரும் விதையாய் இருப்பதே வெற்றி... வெற்றி என்பது முதலாவதா , இரண்டாவதா என்பது அல்ல... அந்த முதலிடம் , இரண்டாம் இடத்தை அடைய போட்டி போட்டிருப்பதே *வெற்றி 💪🏼...*

   பத்தில் ஒருவனாக முன் வருவதே வெற்றி அல்ல... அந்த பத்தில் ஒருவனாக கலந்துகொண்டதே வெற்றி தான்...

    எத்தனையோ உயிர் கருவில் கலைந்தாலும் மண்ணில் நாம் பிறந்தது நமது அம்மாவின் வெற்றி...💪🏼

வாழ்க்கையில் ஒருமுறைவெற்றி  கண்டவனைவிட பலமுறை தோல்வியடைந்தவனுக்கே அனுபவம் அதிகம்....
   ஒவ்வொரு தோல்வியிலும் ஒருவித அனுபவத்தை , முன்னேற்றத்தை புரிவார்கள்...

   *🤷🏻‍♂எல்லாமே வெற்றி தான்.. முதலில் வருபவன் இரண்டாம் இடத்தில் வருபவனை வெற்றி அடைந்தவன்..👍🏼*
    *பத்தாவது இடத்தில் வருபவர் கலந்துகொள்ளாது இருக்கும் பார்வையாளர்களை வெற்றி அடைந்தவர் ஆவார்...😏*
💪👍💪👍💪👍💪👍💪👍💪
*எது வெற்றி ...*🤔🤔❓❓

*ஒரே நேரத்தில் நாலு பொண்ணுங்கள உஷார் பண்ணிட்டேன்னு நெஞ்ச தட்டிக் கொள்வது வெற்றியா* ❓❓

*மூன்று நிமிடத்தில் மூன்று பீர் குடிச்சிட்டா அது வெற்றியா ❓❓*

   *80 ல போற வண்டியை 90 ல போய்ட்டு ஓவர்டேக் பண்ணிட்டேன்னு சொல்றது தான் வெற்றியா* ❓ ❓

*விழுந்தாலும் வீழ மாட்டேன் என்று சொல்லும் தன்னம்பிக்கை தான் வெற்றி...* 💪🏼💪🏼

*விழுந்தாலும் எழ முயற்சி செய்யும் முயற்சி தான் வெற்றி...* 💪🏼💪🏼

*எப்பொழுது நாம் வாழ்க்கையை வெற்றி பெற வேண்டும்👍💪 என்று எண்ணி நம் பயணத்தை தொடங்குகிறோமோ...👣👣 அன்று தோல்வியின் பயமும் கூடவே தொடர்கிறது...👹.. தோல்வியிடம் Address  😖கேட்டு தான் Succes வீட்டுக்கு🏡 போகலாம்... 🤷‍♂நிலையற்ற 🙅‍♂அந்த வெற்றியை தூக்கி கொண்டாடவும் வேண்டாம்...🤷‍♂ நிலையற்ற தோல்வியை நினைத்து    மனம் கலங்கவும்😩 வேண்டாம்..🙅‍♂. இந்த நிமிடம் மட்டுமே உறுதி என்பதை உணர்ந்து...🤷‍♂ உன் வாழ்க்கையை வாழத் தொடங்கு...🤷‍♂ வாழ்ந்தான் செம்மையா வாழ்ந்தான்னு உன் வாழ்க்கைய நீ வாழ்...🤷‍♂ நம்ம முன்னடி ஓடுறவன😏😏 பாத்து பயப்பட😩 தேவையில்ல...🙅‍♂ ஏன்னா அவன் நம்மல முந்த போறது இல்ல..🙅‍♂. நம்ம பின்னடி வரான் பாருங்க அவன் தான் நம்மல முந்துவான்...🤷‍♂ ஓடுங்க... Run...Run...🏃🏃🏃 வாழ்க்கை போட்டியில்ல ஆனா வாழ்க்கையில போட்டி உண்டு.🤷‍♂.. நீங்க கலந்துக்குற ஒவ்வொரு போட்டிலையும் ஜெய்க்கனும்னா...🤷‍♂ ஓடுங்க... 1stங்குறது வெறும் நம்பர் தான்...😏😏 அத தூக்கி போட்டு ஓடுங்க..🏃🏃. எப்பவும் வெற்றி தான்..*.💪 Run! Run...,!

💪👍💪👍💪👍💪👍💪👍💪

😇 *ஆயிரம் வெற்றிகள் குவிந்தாலும்...* *அன்பானவர்கள் உடனிருந்தால் மட்டுமே அத்தனையும் முழுமை பெறும்...!!*👍 *உங்கள் வாழ்வில் வந்த வெற்றிடங்களை வெற்றிகள் கொண்டு நிரப்புங்கள்...!!*👍 *வெற்றி நம் பக்கம்...!!*🙌👍😇🤗

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇🎉🎊 *பிரபாகரன் சிதம்பரம்* 🎊🎉

🥈 🎉🎊 *udaya yuva* 🎊🎉

🥉 🎉🎊 *DEVEENDRANhp*🎊🎉

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤙 *இந்த உலகம் எப்படியாப்பட்டது தெரியுமா?🤔*

🙌 *முதல்ல சச்சின் அடிக்கடி செஞ்சுரி அடிச்சப்ப, சச்சின் சச்சின்னு சொன்னாங்க.*

🙌 *அப்புறம் தோனி வந்து உலகக் கோப்பைய வாங்குனதும், தோனி தோனினு சொன்னானுங்க.*

😏 *இப்ப தோனியவே அப்படி இப்படினு விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க.*

😏 *இவனுங்களுக்கு எப்பவுமே இதே வேலைதான், அப்பப்ப எவன் என்ன பண்றாண்ணோ, அவன தான் தலைல தூக்கி வச்சிட்டு கொண்டாடுவானுங்க.*

💪 *அனைத்து வெற்றிகளும், தோல்விகளும், ஒவ்வொருடைய சாதனைகள் கூட, ஒவ்வொரு நாளும் முறியடிக்கப்படும்.*

🤗 *அதனால வெற்றி, தோல்வியலாம் ஒரு பெரிய விசயமே இல்லங்க.*

💪 *நம் வாழும் போது எத்தனை நபர்கள் மனதில் இடம் பிடித்தோம்? யாருக்கு என்ன நல்லது செய்தோம்? நம்மால் எத்தனை குடும்பம் பயன் அடைந்தது? நம் பிறந்ததன் மூலமாக யாரை வாழ வைத்தோம்? யாருக்கு நம் பிரோஜனமாக இருந்தோம்? இந்த கேள்விகளுக்கான விடைகள் தான் நீ இந்த மண்ணில்  பிறந்ததற்கான உண்மையான வெற்றி💐*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👨‍👩‍👧‍👧

*_📜 திருக்குறள்: 📜_*

*'ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்*

*தாழாது உஞற்று பவர்'*

💐💐💐💐💐💐💐💐💐💐
*_📜 விளக்கம்: 📜_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சோர்வடையாது முயற்சியில் குறைவு இல்லாமல் தொடர்ந்தும் முயற்சி செய்பவன், வெற்றிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையினையும் ஒரு காலத்தில் வெற்றி பெறுவான்.*💪

  💐💐💐💐💐💐💐💐

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆

அறிந்து கொள்ளளவும்
*வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.*

புரிந்துகொள்ளவும்
*மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.*

தெரிந்துகொள்ளவும்,

*நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட்கள் செல்லும்.*

*நன்மை கடைப்பிடி*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*

👨🏻‍💻 *நிருபன்கதிர்*
*7358614182*

👨‍💻 *நான் மகான் அல்ல*  *+6598648093*

💐💐💐💐💐💐💐💐

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎  *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...