🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :27.09.2017.*
🌹 *கிழமை : புதன்*
____________________________________
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*அறிவோம்*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*பூமி நமது தாய்,அந்த தாய்க்கு*
*என்னவெல்லாம் நேரிடுகிறதோ*
*அதுவே அவளின் பிள்ளைகளான நமக்கும்*
*நாளை நேரிடும்,ஏனென்றால்*
*பூமி மனிதனுக்கு சொந்தமானது அல்ல*
*மனிதன் தான் பூமிக்கு சொந்தமானவன்*
*- நம்மாழ்வார்*
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
*அட்மின் தாட்*
*📖புத்தகம் படித்தால் அறிவை வளர்க்கலாம்.*
*வறுமையை படித்தால் புத்தகமே எழுதலாம்.*
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
==============
*விவசாயத்தில் இன்றைய இளைஞர்களின் ஆர்வமின்மைக்கு காரணம்? ஆட்கள் பற்றாக்குறையா? அதிக லாபம் இல்லாமையா? சரியான தொழில்நுட்பம் இல்லாததாலா?*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*🌾விவசாயம் இல்லை என்றால் 🍱நமக்கு உண்ண உணவு இல்லாமல் போய்விடும்*.
*👳விவசாயிகள் 🍚நமக்கு சோறு போடும் இன்னொரு தாய்.*
*👳விவசாயிகளை அலட்சிய படுத்தினால் நம்முடைய சந்ததியினர்க்கு சோறு கூட 🖥டிவி, 📱மொபைலில் தான் காமிக்க வேண்டும்.*.
*🍞காய்ந்து போன பன்னு தீஞ்சி போன 🍔பீட்ஸா, பர்க்கர்னு தான் கொடுக்கும் நிலை வரும்.*
*👨🏻💻👩🏻💻ஒவ்வொருவரும் வசதியான சொகுசான வாழ்க்கை என்று கருதப்படும் வாழ்க்கையை வாழ ஆசைபடுகின்றனர்*
*🤵🏻🤕பெரிய அளவில் விவசாயம் செய்தவர்கள் கூட உற்பத்தி மற்றும் சேவை துறையில் முதலீடு செய்கின்றனர்*
*👨🏻🏫இன்றைய கல்வியறிவு 💴பணம் சம்பாதிப்பது பெரிய 🏢வீடு கட்டுவது 🚘வாகனங்கள் வாங்குவது என சொகுசான வாழக்கை பற்றிய கனவுகளுடன் பிள்ளைகளை வளர்த்து வருகின்றனர் படித்து முடித்ததும் வளர்ந்து விட்ட நுகர்வு கலாச்சாரத்தால் எவ்வளவு ஈட்டினாலும் போதுவதில்லை*
*படித்த இளைஞர்கள் விவசாயம் செய்வது என்பது கௌரவ குறைச்சல், படிப்பில் இயலாமை என்பன போன்ற மாய தோற்றங்களை சமூகம் உருவாக்கியுள்ளது*
*👨🏻🏫👩🏻🏫கல்வியறிவு கொண்டவன் விவசாயம் செய்தால் இழிவு என சமூகம் உரைக்கிறது*
*🤙கல்வியறிவற்ற இளைஞர்கள் இல்லாத விவசாயம் எப்படி வளர்ச்சியடைய முடியும்*
*🌅எந்த உழவனும் விடிந்ததும் 📰செய்தித்தாள் படித்துவிட்டு உழவுக்கு செல்வதில்லை இரவு 🖥தொலைக்காட்சி செய்தி கேட்டுவிட்டு உறங்குவதில்லை இதற்கு விதிவிலக்காய் சிலர் இருக்கலாம் ஆனால் விடிந்ததும் ஆங்கில செய்தித்தாள் படித்துவிட்டு இரவில் உலகசெய்தி பார்த்துவிட்டு உறங்கும் கற்றவன் விவசாயம் பற்றி நினைப்பதேயில்லை*
*👨🏻வெறுமனே எழுத்து கூட்டி படிக்க தெரிந்தவன் கல்வியறிவு பெற்றவன் அல்ல சரளமாக படிக்க தெரிந்தவன் சிந்தனையாளனும் அல்ல*👎
*🌾🌾விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் அதைவிட்டு வெளியேற நினைக்க வேண்டாம் அதை வளப்படுத்த முயற்சியுங்கள் இன்றைய நிலையில் விவசாயம் செய்வதே நாட்டிற்கு செய்யும் மிகபெரிய சேவை*
*👨🏻💻என் மகன் இன்ஜினியர் ஆக வேண்டும் 👨🏻⚕என் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று மட்டும் இருக்காமல் 👳என் மகன் விவசாயி ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்க வேண்டும்*
*🏨அரசு அல்லது தனியார் நடத்தும் பயிற்சிகள் பங்குபெறுங்கள் பிறகு தமிழ்நாட்டு ல நல்ல முறையில் விவசாயம் செய்யுற 🌾🌱☘விவசாயிகள் தோட்டதுக்கு போங்க அவங்க நிறையா சொல்லி தருவாங்க பிறகு கம்மியான இடத்துல நீங்களே பயிர் செய்து உங்கள் சொந்தங்களுக்கு கொடுங்க அவங்க அத சாப்பிட்டு நல்லா இருக்குனு சொல்லும்போது நீங்களும் 🎋விவசாயி என்ற உணர்வு வரும்*
*🤷🏻♂பெரிய அளவில் பன்ன நினைத்தால் உங்க ஊருல நிலம் குத்தகைக்கு வாங்குங்க. வாங்கி கொடுக்க Agent/broker இருப்பார்கள். கம்மியான விலைக்கு நிலம் வாங்க வேண்டும் என்றால் 💦தண்ணீர் வசதி இல்லாத நிலம் தான் கிடைக்கும். அந்த நிலத்தில் பண்ணை குட்டை மற்றும் மழைநீர் சேமிப்பு முறைகளை பயன்படுத்தினால் ஒரு நான்கு அல்லது ஐந்து வருடத்தில் நல்ல விவசாயம் செய்ய முடியும்👍*
*😰😰களத்தில் இறங்கினாதான் கஷ்டப்பட்டு வெற்றி பெற முடியும்👍🤝*
*🌾🤔விவசாயத்தில் புதிய புதிய கன்டுபிடிப்புகள் கன்டுபிடிக்க வேண்டும்*
*🤔😏மாற்று வழி 🌱விவசாயத்தை நோக்கி பயணம் செய்யவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்*
*🌾🌱விவசாயத்தை முதன்மையாக கொண்ட நம் நாட்டில் விவசாயம் பற்றிய புரிதலும் அது சார்ந்த 👨🏻💻👩🏻💻அறிவியல் ரீதியான அணுகுமுறைகளும் இல்லாமல் இருக்கின்றது*
*👨🏻வணிக போக்கால் வளமான 🏞விவசாய நிலங்கள் அபகரிக்கபட்டு வருகின்றன அழிந்துவரும் ☘விவசாயத்தை காப்பாற்ற அவசரமான நடவடிக்கை தேவைப்படுகிறது🤝*
*🌧🌧மழைநீர் சேகரிப்பு பண்ணை குட்டை அதிக கொள்ளளவு கொண்ட நீர் பகுதிகளை உருவாக்க வேண்டும் இதன் மூலம் விவசாய நிலங்களின் நீர் பற்றாக்குறையே சரி செய்யலாம்*
*🤝ஆர்வமுள்ளவர்கள் ஈடுபடட்டும் மற்றவர்கள் 👨🏻🚀தொழிற்நுட்பங்கள் அறியாத விவசாயிக்கு கற்றுகொடுப்போம் வழிகாடடுவோம் நமது ஓய்வு நேரங்களை இதற்காக செலவழிப்போம்*
*☘🌱விவசாயம் என்பது முழுவதும் இயந்தரமாகப்பட்டது ரஷ்யா அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் ஆனால் நிலப்பரப்பும் நிலச்சொந்தமும் பிரிபட்டுள்ள ஆசிய நாடுகளில் அவ்வளவு தீவிரமான இயந்திர பயன்பாடில்லை*
*🌾🌾நவீன விவசாயமுறைகளே உலகெங்கும் நடப்பு ஆனால் அவை விளைவிக்கும் கேடுகள் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது*
*👳விவசாயிகளின் 👨🏻பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்த 👨🏻💻பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகத்தில் விவசாயமே தெரியாத சிலர் பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு விவசாயத்தை சிலர்மடுமே கையிலெடுக்கிறார்கள் இருந்தும் விவசாயத்தில் இலாபம் கிடைப்பது இல்லை*
*👩🏻💻நவீன நேரடி 🌾நெல் விதைக்கும் கருவி--சீரான விதைப்பிற்கும், ஒரு சதுர மீட்டரில் பயிர் எண்ணிக்கையை பாதுகாத்தலும்*
*நெல்- தக்கைப்பூண்டு விதைகள் சேர்த்து விதைக்கும் கருவி---இவை நெல் விதைகளை 3 வரிசையிலும் தக்கைப்பூண்டு விதைகளை 3 வரிசைகளிலும் ஒரே மாதிரியாக விதைக்கிறது*
*🌾⚙நெல் நாற்று நடும் கருவி---பாய் வகை நெல் நாற்றுக்களை நட உதவுகிறது. அனைத்து நடவு வகை நெல் இரகங்களுக்கும் ஏற்றது*
*🔍🌾நெல் விதையுடன் சேர்த்து உரமிடும் கருவி--- நேரடி நெல் விதைப்பு மற்றும் ஒரே சமயத்தில் உரமளித்தல்*
*🌾⚙நெல் வரிசையில் களையெடுக்கும் உருளைக்கருவி---நெற்பயிரின் வரிசைகளுக்குக்கிடையே களை எடுத்தல்*
*🤔👍இரு வரிசை விரல் போன்ற நெல் சுழற்களைப்பான்---நெல் வரிசைப்பயிர்களுக்கிடையே களையெடுத்தல்*
*🌾🌾இரு வரிசை விரல் போன்ற நெல் சுழற்களைப்பான்--- நெல் வரிசைப்பயிர்களுக்கிடையே களையெடுத்தல்*
*🔌🔋மின் கலனால் இயங்கும், எடுத்துச் செல்லக்கூடிய நன்செய் நில களையெடுக்குங்கருவி---திருந்திய நெல் சாகுபடி வயலில் களையெடுக்கப் பயன்படுத்துவது*
*🚜🌾தான் இயங்கும், செங்குத்தாக ஏற்றிச்செல்லும் அறுவடை எந்திரம்---நெற்பயிர் அறுவடை செய்தல்*
*🌾நெல் அறுவடை இயந்திரம்---சாயாத நெற்பயிர் இரகங்களை அறுவடை செய்வதற்கும், அதனைத் துாற்றுவதற்கும் பயன்படுகிறது.*
*🌾🌾நெற்பயிருக்கான சிறு கூட்டு 🔪அறுவடை இயந்திரம்---கூட்டு செயல்களான அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் கதிர் துாற்றுதல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது*
*👳மனித ஆற்றலினால் இயங்கும் உரமிடும் கருவி---குறுணை வடிவ உரங்களை வயலில் சீராக அளிக்கிறது*
*🌾🌬நெல் துாற்றும் இயந்திரம்---துாற்றுதல் மூலமாக நெல்லை சுத்தம் செய்தல்*
*🌾நெல் புழுங்க வைத்தல் அமைப்பு---நெல்லை சீராக வேக வைத்தல்*
*🤷🏻♂⚙இதுபோல் எத்தனை எத்தனையோ புதிய இயந்திரங்கள் இருந்தும் என்ன பயன்????*
*👨🏻💻Adaptive technological innovations நடந்து கொண்டுதான் உள்ளது* *பசுமையகம் (green house), drp irrigation, hydrophonics, vertical irrigation (in towers), hybridization போன்ற நிறைய தொழில்நுட்பங்கள் தன் தவறுகளை திருத்திகொள்ளும்*
*🤧🙆🏻♂எவ்வளவு நஷ்டம் வந்தாலும் விவசாயிகள் விவசாயம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்..*
அவர்களுக்கு தேவை மழைநீர் மட்டுமே.*
*🌧சரியான பருவத்தில் மழைநீர் கிடைத்து 💴💵விவசாயிகளின் உழைப்பிற்கு ஏற்ப வருமானம் கிடைத்தால் இவங்க தான் உண்மையிலேயே பெரிய பணக்காரர்கள்..*
*😭🤧ஆனால் இவர்களின் நிலை ஊருக்கே சோறு போடும் 👳🌾விவசாயி குடும்பம் பசி, பட்டினி, கடன் தொல்லை என்று 😪தற்கொலை செய்து கொள்கிறார்கள்.*
*😱இப்படியே போனால்*
*இன்னொரு பசுமை புரட்சி கூட வரலாம்*.
*👳அந்த நிலைக்கு போகாமல் 🏞விவசாய நிலத்தையும் விவசாயத்தையும் பேணி காப்பது நம்முடைய கடமை.*
*👨🏻💻இப்படியே 👩🏻💻மடிக்கணினி 🕵🏻வெளி நாட்டு வேலைனு போயிட்டு இருந்தால் 🍚சோறு கிடைக்காது இளைஞர்களே.*
*🙏நம்முடைய 🌱🌴விவசாயத்தை வருங்கால இளைஞர்கள் புதிய டெக்னாலஜி மூலம் இயற்கை விவசாயம் செய்தால் தான் 🎍🌵🌾விவசாயம் செழிப்பாக இருக்கும்.*
*🍚பசிப்போக்கும் அன்னை தெய்வம் என்றால்,*
*👳உழவூட்டி அன்னம் படைக்கும் 🌾🌱🙏உழவன் கூட தெய்வம் தான்.*
*👍🙌உழவுக்கு மண் உன்னை அழைக்கிறது*
*🙏இளைஞர்களே வாருங்கள் உழவு செய்ய!!!*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🎙🗣சிறந்த பேச்சாளர்கள்*
*🎖🏆நா.ராமகிருஷ்ணன்*
*🎖🏆இசையருவி*
*🎖🏆கற்றது கால்நடை மருத்துவம், பிரபாகரன் சிதம்பரம்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*கருத்து*
👇👇👇👇👇👇👇
*கடைசி மரமும் வெட்டுண்டு*
*கடைசி நதியும் விஷமேரி*
*கடைசி மீனும் பிடிபட*
*அப்பொழுது தான் உரைக்கும்*
*பணத்தை சாப்பிட முடியாது என்று!!*
*பணம் வேண்டாம் நண்பா அன்னம் வேண்டும் நண்பா உண்ண!!!*
*அந்த கடைசி நிலை வராமல் காப்போம் வா நண்பா உழவுக்கு!!!*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சுழன்றும் ஏர்ப்பின்னது* *உலகம் அதனால்*
*உழந்தும் உழவே தலை*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்.*
*அனைவரும் வயலில் பயிரிடுகின்றபோது நாமும் பயிரிடவேண்டும். அப்போதுதான் அது விளையும். இல்லையெனில் அது பாழ்பட்டுப் போய்விடும்.*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
*👨🏻💻✍கந்தசாமி*
*+919080669640*
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விவசாயம் செய்ய என்னை சேர்த்துக்கொள்வீர்களா?
ReplyDelete