🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு ®©* 🤛
__________________________________
🌹 *தேதி :2.10.2017.*
🌹 *கிழமை : திங்கள்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
*வாழ்க்கை அவனவனுக்கு என்று கருதக் கூடாது. மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்*
*~தந்தை பெரியார்.*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*😍அட்மின் தாட்😍*
*இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது.*
*எல்லாம் நீயாக தேடி கொண்டது தான்.*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
==============
*இன்றைய தலைமுறை மக்கள் தம் குழந்தைகளுக்கு பாரம்பரிய பெயர்களை வைக்க விரும்புகிறார்களா? அல்லது நவ நாகரீக பெயர்களை வைக்க விரும்புகிறார்களா?*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*🙎🏻♂🙎🏻கலந்துரையாடல் குழுவில் இருக்கும் அனைவருக்கும் என் தமிழ் வணக்கம்...🙏🏻*
*😍இன்னைக்கு தலைப்பு சம்பந்தமா பேசுன எல்லாரும் 👌👌சூப்பரா பேசுனிங்க... கண்டிப்பா எல்லார் வீட்டிலும் குழந்தைகள் இந்த கேள்வி கேட்டுருப்பாங்க... "🤔எனக்கு ஏன் இந்த பேர் வச்சிங்க-ன்னு" நம்ம எதோ ஒரு காரணம் சொல்லிருப்போம்....*
*🙎🏻♂👨🏻ஒரு மனிதனுக்கு அடையாளமாக இருப்பது அவன் பெயர், இப்போதெல்லாம் மக்கள் தங்களது 👦👧பிள்ளைகளுக்கு மாடர்ன் பெயர்களை தான் வைக்கிறார்கள். ரொம்ப சின்னதா... அழகா... இருக்கணும்னு நினைக்கிறாங்க... பலர் தங்களது பிள்ளைகளின் பெயர்களை 🖥சினிமா நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர் தான் வைக்கிறார்கள்.*
*🔱✅அதையும் மீறி ஒரு சிலர் பழங்கால பெயர்களை வைத்தாலும், அவர்களின் பெயர் கேலி கிண்டலுக்கு 😌😌ஆளாகுகிறது. (அங்கவை, சங்கவை பிரபல திரைப்படம் ஒன்றில்.. கிண்டல் செய்திருந்தார்கள்)...*
*🤔 சுமார் ஒரு 10 வருடங்களுக்கு முன்பு,*
*👉🏻சங்க இலக்கிய பெயர்கள்,*
*👉🏻மூதாதையர் பெயர்கள்,*
*👉🏻குல தெய்வ பெயர்கள்,*
*👉🏻பெரியோர் பெயர்கள்*
*இதன் அடிப்படையில தான் குழந்தைகளுக்கு நல்லப் பெயர்கள் வச்சாங்க...*
*👨🏻👩🏻பெற்றோர்களின் நிலை...*
*👶தனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போது ன்னு தெரிஞ்ச உடனே அது 👦ஆண் குழந்தையா..? 👧பெண் குழந்தையா..?-ன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா அரசு 🏛தன் கடமையை செய்யும்...*
*💁🏻♂அதுனால இப்போ அதுக்கு பதிலா ஆண்/பெண் குழந்தைன்னா என்னென்ன பேர் வைக்கலாம்னு முன்னாடி இருந்தே 🤔🤔யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க...*
*👶குழந்தை பிறந்த பிறகு சில 👨🏻பெற்றோர்கள் நல்ல ஜோதிடர்களிடம் போய் குழந்தை பிறந்த தேதி ⏱நேரம் இதெல்லாம் வச்சு என்ன பேர் வைக்கலாம்னு ஐடியா கேட்பாங்க... ஜோசியரும் சில எழுத்துக்கள் குடுத்து இதுல ஆரம்பிக்கிற பேரு வைங்க எதிர் காலம் நல்லா இருக்கும் அப்டி சொல்லிடுவாரு...🤦🏻♂*
*👤குழுவில் நண்பர் ஒருவர் சொன்ன மாதிரி எங்க அப்பா பேரு வைங்க உங்க அப்பா பேரு வைங்கன்னு... சில 🤺🤺பெற்றோர்கள் சண்டைகள் போடுவதும் உண்டு...*
*☺ஒரு வழியா 👶குழந்தைக்கு பேரு வச்சிட்டாலும் வீடுல யாரும் ஒழுங்கா கூப்பிட மாட்டங்க... சரி 👩🏻🏫ஸ்கூல்ல யாராச்சும் சரியா கூப்பிடுவாங்கன்னு பார்த்தா அதுவும் இல்ல😌... 👨🏻🏫டீச்சர் மட்டும்தான் அட்டனென்ஸ் எடுக்கும் போது ஒழுங்கா கூப்பிடுவாங்க...*
*💁🏻♂இப்பொழுது இருக்கும் 👨👩👧பெற்றோர்கள் என்ன தான் மாடர்ன் பெயர்களை வைக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலோர் அவர்களது இயற்பெயராக எதாவது பாரம்பரிய பெயர்களை வைத்து, பிறகு பள்ளியில் சேர்க்கும் போது எதாவது மாடர்ன் பெயர்களை சர்டிபிகட்டில் பதிந்து கொள்கிறார்கள். அதுவும் மற்றவர்களின் கேலி கிண்டல்களுக்கு பயந்து.😌*
*👨👩👧பெற்றோர்கள் தங்கள் 👶குழந்தைகளுக்கு நல்ல பெயர் வைத்து விட்டு... நல்ல பேரு வாங்குறது மாதிரி நடக்கனும்னு வேற சொல்லுங்க...🤦🏻♂ அப்போ அவங்க வச்ச பேரு நல்ல பேரு இல்லையா...!!!*
*👦🏻👧🏻குழந்தைகளின் நிலை...*
*🏡வீட்டுல ஒரு பேரு, 🏫ஸ்கூல்ல ஒரு பேரு, 👬ப்ரண்ட்ஸ் மத்தியில ஒரு பேரு, இதுமட்டும் இல்லாம 👳தாத்தா பாட்டியும் தனியா ஒரு பேரு வச்சு கூப்பிடுவாங்க... இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கனும்...*
*😍நல்ல தமிழ் பெயர் வச்சா சினிமால இருந்து ஸ்கூல் வரைக்கும் எல்லாம் கிண்டல் பன்னுறாங்க..😌*
*💃🏼🕺ஃபேஷனா பேர் வச்சா சில பேர் வாயிலயே நொலைய மாட்டேங்குது... 😳😱குறிப்பா தாத்தா பாட்டி வாயில நொலையவே மாட்டேங்குது...*
*👉இப்போது ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெயர்கள் ஹ்ரித்திக், தர்ஷினி, வர்ஷினி, சுஜித், கிஷோர், கிரிஷவ் என்ற விதம் உள்ளது. ஆனால் இன்றும் பாரி, தமிழரசன், ஆதிரை, மணிமேகலை,மாறன், அமுதன், எழிலன்,இலக்கியா, கண்ணன், பொன்னி என்ற பெயர்கள் இன்றும் வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் எண்ணிகயில் குறைவு😭😪.*
*👉பொதுவான நிலை...*
*🔱அன்றைய கால கட்டங்களில் ஒருவரின் பெயரை பார்த்து அவர் தமிழா ,ஹிந்தியா ,பஞ்சப்பியா, சிந்தியா ,அல்லது அவர் கிறிஸ்டினா,முஸ்லிமா, என்று என்ன மதம், இனம், மொழி என்று கண்டுபிடிக்க முடிந்தது...*
*💁🏻♂👉ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை பேஷன் என்று பெயர்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது எல்லோரும் அவரவர் மதம் இனம் ,மொழி என்பதை விட்டுவிட்டு பெயர் வைக்கும் பாரம்பரியத்தை தொலைத்து விட முயல்கிறார்கள் இதன்னால் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.🤔*
*🖥மேலும் சினிமவிலேயோ, அல்லது மற்ற 👨🏻🚀துறையிலேயோ வெற்றி அடைந்தவர்களின் பெயரின் மேல் மோகம் கொண்டு அலைகிறார்கள் இந்த பெயர்களே நமக்கும் வெற்றி தேடி தரும் என்று குருட்டு நம்பிக்கை கொள்கிறார்கள்😷*
*👉மேலும் ஒரு குறிபிட்ட சொல்லை பெயருடன் இணைப்பதால் வாழ்வு வளம் பெரும் என்று தங்கள் மொழி இனம் மதம் என்ற கோட்பாட்டை தொலைக்க விழைகிறார்கள்*
*💁🏻♂பெயர் தன்மையின் அடிப்படையை கொண்டு சமூக அமைப்பை தெரிந்து கொள்ளலாம்... நவீனத்துவத்தின் பின்னால் சென்று பாரம்பரியத்தை தொலைக்க வேண்டாம்..🙅🏻♂🙅*
*🤕மேலும் இறை நம்பிக்கையுடன் பிறந்த ⏱நேரம், ⭐நட்சத்திரத்தின் அடிப்படையில், உழைப்பின் அடிப்படையில் தான் ஒருவரின் பெயருக்கு ஒளி கூடும் என்று சொல்லி, பாரம்பரியம் காக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டளையே...*
*🙌🏼தற்போது பெயர் எப்படி வைக்கலாம்?🤔*
*🇮🇳நாட்டிற்காக பாடுப்பட்டவர்கள் பெயர்களை வைக்கலாம்.*
*👨👨👦அப்பா, 👨👨👧அம்மா பெயர்களை இணைத்து பார்த்து அதிலிருந்து ஆண், பெண் பெயர்களை எடுத்து வைக்கலாம்.*
*👉🏻உதாரணமாக : கலையரசன்+தமிழரசி= தமிழரசன், கலையரசி (எல்லா பெயர்களுக்கும் எதாவது ஒத்துப் போகிற மாதிரி வந்துரும்ங்க. நம்மதான் யோசிக்கணும்🤔.)*
*🤝அழகான தமிழ் பெயர்களை தேடித் தேடி கண்டுபிடித்து வைக்கலாம்ங்க. 247 எழுத்துக்களில் ஒரு பெயரை கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்லங்க🙂.*
*😍😍தமிழ் பெயரில் உள்ள உணர்வு ,அழகாகவும் ஆழமாகவும் இருப்பதை உணர்ந்து கலாச்சாரத்திற்கு உட்பட்டு 👍👌பெயர் வைப்பது பெருமையும் கூட, இதை தமிழின் பெருமையை உணர்ந்து சொல்கிறேன், வெறும் முடிவுரைக்காக அல்ல...🙅🏻♂*
*🤦🏻♂இப்படி கால மாற்றத்திற்கு உட்பட்டு பெயர்களை மட்டும் தொலைக்கவில்லை. பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொலைக்கப்படுகிறது😪😪*
*💁🏻♂எனினும் நவீன பெயர்களை வைப்பது அழகு என இருப்பதால் அதை கொண்டாட வேண்டும் என்று சொல்வது இயற்கை தான்.*
*🤷🏼♀தற்போது பாரம்பரிய பெயர்களை வைப்பவர்களின் விருப்பம் கூடுகின்றது, ஆனால் நவீன பெயர் வைப்பவர்களின் எண்ணிக்கையுடன் கணக்கிடும் பொது குறைவாக உள்ளது என்பதே என் கருத்து. இந்த விவாதமும் அதன் வெளிபாடும் நம் அறிவு முதிர்ச்சியின் வெளிப்பாடே. அதை இந்த ✅சமூகம் வரவேற்க்கும் என்று சொல்லி என் முடிவுரையை முடிவு செய்கிறேன்🙏*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*புதிய சிறந்த பேச்சாளர்கள்👶*
*🥇@Basha*
*🥈@~👀~*
*🥉@சூரியபாலாஜி, @S.Selventhiran, @Sivalingamsks*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*😏கருத்து😏*
*பெற்றோர்கள் பலர் தாம் பெற்ற பிள்ளைகட்கு அருந்தமிழ் பெயர் சூட்டி அகமகிழ்ந்து வாழ்ந்தார்கள்.*
*அவர்களின் பிள்ளைகளோ தாம் பெறும் பிள்ளைகட்கு வாயில் நுழையாத பிறமொழிச் சொற்களைப் பிள்ளைகளின் பெயராக்கிப் பெருமிதம் கொள்கிறார்கள்.*
*இந்த மாற்றம் ஃபேஷன் என்று நம் கலாச்சார பராம்பரியங்களை மாற்றி, பெயரளவில் கூட தமிழ் பெயரை பின்பற்றாமல், வெறும் வாய் வார்த்தைக்காகவே தமிழை வளர்ப்போம்... தமிழை வளர்ப்போம்... என்று புலம்புகின்றனர்.🤦🏼♂*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது*
*அப்பன் (பாரம்பரியத்தின்) அருமை மாண்டால் தெரியும்*
தற்போதைய சூழ்நிலையில் பாரம்பரியத்தை *ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.*
_இப்படி மாறாமல் இருக்க தலை நிமுத்துவோம் பாரம்பரியத்தை இது பெயருக்கு மட்டும் அல்ல அனைத்திற்கும்._
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
*✍👨🏻💻நா.ராமகிருஷ்ணன்~8124323975*
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *மணி விஜய் -- 8428073724*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment