🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :ஞாயிற்றுக்கிழமை* 🌹
🌹 *தேதி : 29.10.2017* 🌹
___________________________________
⚜ *அறிவோம்*⚜
*~~~~~~~~~~~~~~~~~~~~~*
*“பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள்”* *“ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை”*
*“பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு” “கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.”*
💐 *- ஷோப்பன் ஹொபர்.*💐
👑 *அட்மீன்தாட்ஸ்*👑
*~~~~~~~~~~~~~~~~~~~~~*
*ஒவ்வொருநாள் காலையிலும் மனிதன் அவனுடைய தலைமுடியை வாரி ஒழுங்குபடுத்திக் கொள்கிறான். ஏன் அவனுடைய இதயத்தை அவ்வாறு செய்யக்கூடாது......*🤔
📣 *தலைப்பு*📣
🕳🕳🕳🕳🕳🕳🕳🕳🕳🕳🕳
*இன்றய காலகட்டத்தில் சேமிக்க வேண்டியது என்ன? ஏன்?*
⏳💸👨👩👧👦😇👨👩👧👦💖👨👩👧👦💸👨👩👧👦😇⏳
😇 *அனைவருக்கும் வணக்கம் இன்றய தலைப்பு “சேமிப்பு” இது அனைவராலும் ஏதோ ஒருவகையில் முயற்சியாக அல்லது பயிற்சியாக காலத்தின் கட்டாயத்தால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு தற்க்காப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.*
⏳🤔 *இன்றய காலகட்டத்தில் எதை? என்ன? ஏன்?சேமிக்க வேண்டும் இது ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழ்நிலை மற்றும் தேவைகள் பொருத்து மாறுபடுகிறது. ஆனால் அனைவருக்கும் பொதுவான சேமிப்பு ஒன்று உண்டு என்றே தோன்றுகிறது. காரணம் “சிக்கனம் மற்றும் “மிச்சப்படுத்துதல்” இதற்க்கும் “சேமிப்பு”க்கும் வேறுபாடுகள் உண்டு அது என்ன என்பதே இந்த முடிவுரை தொகுப்பாக இருக்கும் என நம்புகிறோம்.*👍
📜 *வள்ளுவர் கூறும் அறம், பொருள், இன்பம் என்கின்ற மூன்றில் பொருளை மட்டும் பெற்றுவிட்டால் அறமும், இன்பமும் தானே வந்துவிடும் என்ற கூற்றுக்கினங்க நமது செயல்களை அமைக்கின்றனர்.*🤷🏻♂
🌊💧🌨 *தண்ணீரை அணைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் தேக்கிவைத்துத் தேவைக்கேற்பப் பயன்படுத்துவது போல பணத்தையும் சேமித்துப் பழகினால் அது நம் எதிர்கால தேவைக்குப் பயன்படும் என்பது உண்மையே ஆன பணம் வந்துவிட்டால் அறமும் இன்பமும் கிடைத்துவிடும் என்பது சற்று கடினமே.*😰
📜 *“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”, ”பணம் பத்தும்* *செய்யும்”,“பணம் இல்லாதவன் பிணம்”,*
*என்ற பழமொழி படி* *செயல்பட ஆரம்பித்துவிட்டது.*
😴 *சில நேரங்களில் எது அவசியமானது என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் வழியை செயல்படுத்த முயற்ச்சிக்க வேண்டும்.*
💖 *சுகாதாரமான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான நல்ல மனிதனையும் கலாச்சாரமான சமுதாயத்தையும் அடுத்த தலைமுறைக்கு நாம் சேமித்து இருக்கிறோமா....*🤔
💸 *பணத்தை சேமிப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன, சேமித்துப் பழக வேண்டும் என்பதற்காக நமது குழந்தைகளுக்கு*
*சிக்கனப் பண்பு சிறந்த பண்புகளுள் ஒன்று என போதிக்கும் நாம்* *குடும்பம் என்ற குபேரனை நம் குழந்தைகளுக்கு அவர்களின் மனதில் சேமிக்க தவறுகிறோம். இவைதான் பிற்கால வாழ்வை ஒளி மயமாக்கும்.*😇
💝 *சேமிப்பு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஆம் நல்லதுதான்’ நம் தாத்தா ஆயிறத்தை சேமித்தார்கள்,* *தந்தையோ லச்சத்தை*
*சேமித்தார்கள் இன்று அது போதவில்லை நாளை நீ எதை சேமிக்கப்போகிறாய்,* *உன் சந்ததிக்கு நீ*
*விட்டுச்செல்ல* *போகிறாய்,நாட்டு மக்களுக்கு எதை எதை எல்லாம் ஒரு அரசு இலவசமாக வழங்க வேண்டுமோ? இன்று அவை எல்லாம் காசு கொடுத்து பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.*😰
💸 *பணத்தைச் சிக்கனப்படுத்தி வாழத்தெரிந்த மனிதனுக்கு சுகாதாரமாக வாழும் முறை தெரியாமல் போய்விட்டது.😰 சுகாதாரமான வாழ்க்கைமுறை நல்ல மனிதனையும் ஆரோக்கியமான கலாச்சாரமான சமுதாயத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.*👍
💸 *எதிர்கால செலவுகளுக்கு காப்பீடு எடுப்பது அவசியம்தான் இதில் மருத்துவக்காப்பீடும்,* *ஆயுள் காப்பீடும் இன்று தவிர்க்க முடியாத பட்டியலுக்கு வந்தது ஏன்? யார்* *இதற்க்கு காரணம்?❓ இதை சேமிப்பு என்று எடுத்துக்கொள்வதா?❓ அல்லது சீர்கேடான* *வாழ்க்கைமுறை என்று எடுத்துக்கொள்வதா?*❓
😰😴 *தமிழ்நாட்டில் எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிகமான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஏன் இதற்கு மேலாக நம்மை வழிநடத்தும் அரசின் தவறுதலான வழிகாட்டுதலாலும் இன்று வேதனைகளே மிஞ்சுகிறது.😓 மருத்துவ காப்பீடு இருந்தும் மருந்துக்கள் இல்லை ஏன்? ❓நோய்க்கான மருந்தில்லாததா?❓ இல்ல நோய்க்கான சூழ்நிலையை கண்டுகொள்ளாததா? இங்கு சேமிப்பு என்பது எது?❓ எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் சேமிப்பு கடல்நீரில் ஆற்றுநீர் கலப்பதற்க்கு சமம்.*😓
😰😓 *தினமும் வாக்கிங் போறியோ?போகனும்னுதான்* *ஆசை’ ஆனா நேரமே கிடைக்க மாட்டேங்குது ஏன்?*❓
*அதுக்கெல்லாம் ஏது நேரம்னு சொல்ற*
*இப்படிபட்டவர்களும் இருக்காங்க, நம்* *அன்றாட வாழ்வில் பலரை சந்தித்திருப்போம். எதற்கெடுத்தாலும் நேரமில்லை, நேரமில்லை, நேரமில்லை. 😓😰வயிறார சாப்பிட நேரமில்லை, தன் ஆரோக்கியத்தை கவனிக்க நேரமில்லை. எப்பொழுதும் நேரமில்லை இவர்களது சேமிப்பு எது? இதுப்போல மிச்ச நேரம் என்பதே இல்லாமல் உழைத்துக் கொண்டிருப்பதால் நாடு இல்லை குறைந்தபட்சம் அவரது குடும்பமாவது எங்கோப் போயிருக்கும்’ நடந்ததா??*😰😓
🙅🏻♂ *எதையும் தியாகம் செய்ய வேண்டாம். ஆனால் எது* *முக்கியமான வேலை என முடிவெடுத்துக்*
*கொள்ளுங்கள்,* *பட்டியலிட்டே சாதுர்யமாக செயல்படலாம். இப்படி செஞ்சாதான் எனக்குப் பிடிக்கும்' என வாதிட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரத்தை சேமிப்பற்க்கான மாற்றுவழிகளை யோசிக்க வேண்டிய காலகட்டம் இது என்பதை உணரவேண்டும்.*👍
💝 *நமக்கு பணம் எவ்வளவு முக்கியமோ அதை விட குடும்பமும் அதை சார்ந்த உறவுமுறைகளும் அவர்கள் வாழ இயற்க்கை சார்ந்த சூழ்நிலையும் முக்கியம். ஏனெனில் 18ஆம் நூற்றாண்டு வரை சேமித்தும் பாதுகாத்தும் வந்த இயற்க்கை செல்வங்களை 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகள் இயற்க்கையின் மீது ஆளுமை செலுத்தி ஆட்கொண்டது அப்போ சேமிப்பு என்பது எது?*❓
🤔 *சேமிப்பின் நோக்கம்*
*என்ன?*🤔
💝 *வருங்காலத்திற்க்கு தேவையானதை நிகழ்காலத்தில் சேமிப்பதுதானே, பணத்தை சேமித்து இவைகள் போனால் மீண்டும் உருவாக்கிக்கொள்ள முடியுமா.....?*🤙
😰 *நமக்கு ஒரு நாளுக்கு 48 மணி நேரம் இருந்தாலும் போதாது. 😏ஆகவே மனம் வையுங்கள். திறந்த மனதுடன் சிந்தியுங்கள் மாற்றங்கள் நிகழும் வரை சிந்தியுங்கள்.*💓
💝 *இன்றைய சூழ்நிலையில் சிக்கனம் என்பது வேறு, ❣சேமிப்பு என்பது வேறு,💗 இன்றய தலைப்பு சிக்கனம் இல்லை சேமிப்புதான் ஆம் எதை சேமிக்கின்றோம்’ எதை சேமிக்கப்போகிறோம் என்பது. உண்மையான சேமிப்பு என்பதை ‘கற்றுக்கொண்டு’ கற்றுகொடுக்கவும் வேண்டும் இல்லையென்றால் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.*❓❓❓❓
💝 *இன்றைய நவநாகரீக மனிதன் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல்* *இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும் அழிக்கிறான்.* *இயந்திரங்களுக்கு குடியுரிமை வழங்கும் உலகில் வாழ்கிறோம்.*
*நாளை உனது சேமிப்பு இயந்திரங்களாக* *இருக்கலாம்.*🤷🏻♂
💸 *பணம் என்பது என்ன? ❓அதை எப்படி சம்பாதிக்கிறோம்; எதற்காக செலவு செய்கிறோம். நமது நோக்கம் தான் என்ன?*❓
💷💶 *வங்கி கணக்கில் ஐம்பது லட்சம் பணம் இருக்கு, ஒரு சொந்த வீடு இருக்கு, கார் இருக்கு, நகை நூறு பவுன் இருக்கு, அதுமட்டும் இல்ல Life Insurance என்னோட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இருக்கு.( இதுவே நமது இலக்காகவும், சேமிப்பாகவும் உள்ளது )*🤷🏻♂
👉 *“தாயை போல பிள்ளை ! நூலை போல சேலை !"*👍
💖👨👩👧👦 *அவர்களை போலவே வாழ்க்கை முறைகளை பின்பற்றுகின்றனர். தன்னுடை பிள்ளைகளின் நலனுக்காக என்று அதே முறையை கையாள்கின்றனர்.*
💖👨👩👧👦 *இறுதியில் எவரும் வாழாது ! தன் பிள்ளைகளுக்கு என்று சொத்து சேர்த்து வைத்துவிட்டு நிம்மதி இல்லாத, மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை மட்டும் தொடர்கிறது.*
💁🏻♂ *சரி அப்போ எதை சேமிக்க வேண்டும் என்று கேட்பவருக்காக இதோ !*👇
👉 *மூன்று வேளை உணவு, இருக்க இருப்பிடம், உடுக்க உடை இவைகளுக்காக ஓடி அலைந்த மனிதன், இப்போது உணவு உண்ண கூட நேரம் இல்லையென எதற்காக ஓடுகிறான்?????*😰
👉 *நம்மில் எத்தனை பேர் தன்னுடை குடும்ப உறுபினர்களுடன் சேர்ந்து ஒரு வேளை உணவு உட்கொள்கின்றனர் ???*😰
👉 *நம்மில் எத்தனை பேர் தன்னுடை குடும்ப உறுபினர்களுடன் சேர்ந்து ஒரு பொழுதுபோக்கு நிகழ்வை காணுகின்றோம்?*🤙
👉 *நம்மில் எத்தனை பேருக்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர் மகிழ்வாக இருக்கிறார் என்பதை உறுதியாக கூற முடியும் ????*❓
😰 *அப்போ சேமிப்பு என்பது என்ன?*❓
♥ 💝 *ஆபத்து காலங்களில் உதவும், நமது உடல் நலனில் மற்றும் வாழ்கையில் அக்கறை கொண்ட* *உறவினர்களையும், நம் முன்னேற்றத்திற்கு உதவும்,* *முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடையும் மனிதர்களையும், அன்பு, பாசம், நேசம் கொண்ட மனிதர்களையும், குடும்ப நிகழ்வுகளுக்கு தவறாது கலந்து கொள்ளும் ஆர்வத்தையும், அனைவரிடமும் ஒற்றுமையுடன் 👨👩👧👦வாழு ம் மனநிலையையும் நமது பிள்ளைகளுக்கு சேமிக்க வேண்டும்.*💝💖😇
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த சிந்தனைவாதிகள்*👑
*கலந்துரையாடல் 1⃣*
🎖 *Kumaran.G*
🎖 *தமிழன் navask*
🎖 *Spvingnesh*
*கலந்துரையாடல்* 2⃣
🎖 *Rishi Bm*
🎖 *☂ Kudaykul Malay ☂*
🎖 *Arun*
🎖 *இளம் கரங்கள்raghuljk*
_*🆕இன்று புதிதாக இணைந்த நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை👌👍🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
💚 *நாம் பிறந்து, படித்து, வேலைக்குசென்று, பணம் ஈட்டி, திருமணம் செய்து, பிள்ளை பெற்று, அவர்களை படிக்க வைத்து, அவர்களுக்கு திருமணம் முடித்து, உயிர் பிரிய அல்ல நமது வாழ்க்கை.*
💚 *நாம் இந்த மண்ணில் பிறந்ததற்கு காரணம் உண்டு.அதை உணரவேண்டும்.*
💚 *சேமிப்பை முதலில் நம்ம குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்.*
💚 *நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் உணவு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அது போன்று தான் சேமிப்பும். கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.*
💚 *பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புக்குப் பழகிக் கொள்ளும் போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விசயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.*
💚 *தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணை புரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது.*
💚 *சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் தவிர மழை நீர், குடிநீர், மின்சாரம், எரிசக்தி , என எல்லாவற்றிலும் அவசியம் ஆகி விட்டது.*
💚 *சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பது நிதர்சனம்..!*
👉 *அது உங்கள்கையில் !!!*👈
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து*
*தீதின்றி வந்த பொருள்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
❗ *அறிந்துகொள்ள*❗
*தேவையறிந்து உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.*
❗ *தெரிந்துகொள்ள*❗
*உலகில் மனிதனைவிட உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. மனிதனின் மனத்தைவிட உயர்ந்த பொருளும் ஒன்றில்லை.*
❗ *புரிந்துகொள்ள*❗
*செல்வம் என்பது பணம் மட்டுமல்ல.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
⚡💥⚡💥⚡💥⚡💥⚡💥⚡
🌟 *முடிவுரை தொகுப்பாளர்*🌟
👨🏻💻 *இராமலிங்கம் அங்கப்பன்*
*60122646502*👨🏻💻
⚡💥⚡💥⚡💥⚡💥⚡💥⚡
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 🏹 _*GK*_🏹
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment