🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :17.08.2017.* 🌹 🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை ."*
🌱 *லியோ டால்ஸ்டாய்.*💐🌳
💖💖💖💖💖💖💖💖 💖💖💖
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*"முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்,முயன்றால் மட்டுமே முடியும்."*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*பொருட்களின் தரம் மற்றும் தகுதி, அது எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது? பற்றிய ஓர் அலசல்:*
🔍🔎🔍🔎🔍🔎🔍🔎🔍🔎🔍
🤔 *தினமும் காலை முதல் இரவு தூங்கும் வரையில், ஏன் தூங்கும் போது கூட எத்தனையோ பொருட்களை பார்க்கிறோம் பயன்படுத்துகிறோம், அதனை பற்றிய தெளிவு முழுவதும் அறிந்தோ அறியாமலோ. ஒரு பொருளை பற்றியறிய அதன் குவாலிடி(Quality) என்று சொல்லப்படும் தரம் தெரிந்திருக்க வேண்டும்.தரம் சரியாகயாக இருக்கும் பட்சத்தில் அதை எங்கே எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் தகுதி அடங்கியுள்ளது.*🤔
🤷♂ *உற்பத்தியாளர்களிடம் தரம் பற்றிக் கேட்டால்* *கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைக்குள்* *இருப்பதே (Specification limits ) தரம் என்பார்கள்.*
👳🏽 *வெகுஜனங்களிடம் இது பற்றிக் கேட்டால் குறிப்பிட்டு எந்த பதிலும் சரிவரக் முழுமையாக கிடைக்காது. பெரும்பாலோர் தரம் பற்றிகருத்துக் கூறுவது ஏதோ ஒரு யூகத்தின் அடிப்படையிலேதான். பலரும் விளம்பரத்தின் அடிப்படையிலேயே தரம் பற்றிய எண்ணங்களைக் கொள்கிறார்கள்.*
🤔 *ஒரு பொருளோ சேவையோ தரமாக இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயம் செய்யும், நமக்கு அந்தப் பொருளைப் பற்றிய விஷயமோ ஞானமோ செயல்திறனோ முழுவதுமாக இருப்பதில்லை. அதை ஓரளவுக்கு இங்கே காண்போம்.*🤔
❓❓❓❓❓❓❓❓❓
*தரம் அல்லது குவாலிடி என்றால் என்ன?*
🤜 உபயோகிப்பவரின் தேவையைப பூர்த்தி செய்யும் திறன் அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருந்தால் அது தரமாக உள்ளது என்று கொள்ளலாமா?
🤜 தேவையைப் பூர்த்தி செய்வதே தரம் என்றால், அரிசி உளுந்து அரைத்து ஆவியில் எடுக்கும் இட்லிசெய்யும் ரோட்டோர தள்ளுவண்டி கடை உணவும்,ஐந்து நட்சத்திர உணவக உணவு ஒன்றாகுமா. பணிஒன்றுதான். பசியாற்றும்,. பின் எதற்காக அதன் விலை வெவ்வேறு இடங்களில் வித்தியாசமாய் இருக்கிறது.? கையேந்திபவனில் கிடைப்பதும் இட்லிதான் , ஸ்டார் ஹோட்டலில் கிடைப்பதும் இட்லிதான். அதே அரிசி மாவு உளுந்து மாவு, ஆவியில் வேக வைத்ததுதான். இட்லி உண்பவருக்கு பசியாற்றல் , வயிறு நிறைத்தல் மட்டுமின்றி வேறு எதிர்பார்ப்புகளும் உண்டு.
🤜ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துகிறோம். அந்த பொருள் எப்படி செய்யப்படுகிறது என்றோ எப்படி வேலை செய்கிறது என்றோ தெரியாது. இருந்தாலும் அந்தப் பொருளைவிட இது நல்லது, இது மோசம், என்று எதை வைத்துக் கூறுகிறோம்.
🤜 ஒவ்வொரு பொருளுக்கும் அது செய்யும் பணியை விட, உபயோகிப்பவருக்கு வேறு எதிர்பார்ப்புகள் உண்டு என்று தெரிகிறது.
🤔 *தரம் என்பதன் முதல் அர்த்தம் அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும்.It should be fit for use. ஆனால் அது மாத்திரம் போதாது.*🤔
🤔 *வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே தரம் என்று கொள்ளலாமா. ?எதிர்பார்ப்புகள்தான் என்னவாக இருக்கலாம்.? முக்கியமாக பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி நிறைவேற வேண்டும் அதுவே தரம்.*🤔
🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙
*தரம் என்பது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?*
கடந்த சில ஆண்டுகளில் உற்பத்தித்தொழில்துறையில் உலக நிறுவனங்கள் சிறந்த போட்டித்திறனாக மாறுவதற்கும் சிறந்த போட்டியாக இருப்பதற்குமான சவால்கள் இந்த காலக்கட்டத்தில் அதிகமாகுகியுள்ளது. போட்டி என்பதன் அடிப்படை வெறும் செலவுகளில் மட்டும் செலுத்தும் கவனம் அல்ல, மாறாக தரம், நெகிழ்வுத்தன்மை, விநியோகம், சேவை, மற்றும் புத்தாக்கம் ஆகிய முக்கிய வெற்றிக்காரணிகளில் கவனம் செலுத்துவது.
நிறுவனங்கள் ஏன் தரத்தை எட்ட விரும்புகின்றன? சிறந்த தரத்தை பராமரிக்கும் நிறுவனம் அதிக விலையை தீர்மானிக்கலாம், மேலும் வாடிக்கையாளர்களால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்படும். ஆனால் தரம் எவ்வாறு இலாபத்துடன் தொடர்புடையது? தரத்தை வெற்றிகொள்ள என்ன செலவினங்கள் உள்ளன?
உற்பத்தி , சேவை, நடைமுறை ஆகியவற்றில் சிறந்த தரம், தரமான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் அதிக வருமானம் பெறுகிறது.
🤔 *தரத்தை எவ்வாறு நிர்ணயம் செய்வது?*🤔
அரசோ அல்லது தயாரோ தரம் நிர்ணயிக்க
விதிக்கும் கட்டுப்பாடுகள்.
⚜தரத்தை கடைபிடிக்க உறுதியாக உள்ளீர்களா?
⚜ தரத்திற்காக திட்டமிடுவீர்களா?
⚜நிறுவனம் வாடிக்கையாளர் சேவை நோக்கியதா?
⚜ பொருள் வழங்குவோர் தரத்தை நிறுவனம் நிருவகிக்கிறதா?
⚜மக்கள் தரத்தில் மிகுந்த சிரத்தையாக உள்ளனரா?
⚜தரத்திற்காக வேலையாட்களுக்கு பயிற்சி அளிப்பீர்களா?
⚜வேலைத்தளம் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறையில் இருக்குமா?
⚜உற்பத்தி வடிவமைப்பில் தரம் என்பது ஒருங்கிணைக்கப்பட்டதா?
⚜தொழில் நடைமுறைகளில் தரம் என்பது ஒருங்கிணைக்கப்பட்டதா?
⚜தரத்தை அளவிட்டு நிறுவனம் கண்காணிக்கிறதா?
⚜அனைத்திலும் சிறந்ததை தங்களது அதிகபட்ச இலக்காக நிறுவனம் கொண்டுள்ளதா?
⚜நிறுவனம் தனது தர/உற்பத்தித்திறன் முயற்சிகளை நிலைத்திருக்கச் செய்யுமா?
என பல கோணங்களில் ஆய்வுசெய்யும்.
*I.S.O:*
தற்போது நடைபெறும் வணிகத்திற்கு தரம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இதற்காக பல வணிக நிறுவனங்கள் நாடிச் செல்வது ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட்.
இந்த சர்டிபிகேட் இருந்தால் தான் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பதோடு, லாபத்தை பெற முடியும் என்ற நிலைக்கு வியாபார நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.
சரி,
*ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட் என்றால் என்ன?அதன் அவசியம் என்ன? இதனால் யாருக்கு லாபம்?*
💁♂ஐ.எஸ்.ஓ ( International Organization for Standardization) என்பது ஒரு சர்வதேச தரச் சான்றிதழ் ஆகும்.
💁ஐ.எஸ்.ஓ. 9001 என்பது தரத்திற்காக ஐ.எஸ்.ஓ. நிறுவனத்தால் தரப்படும் குறியீடாகும். 2008 என்பது அது மறுபரிசீலனை செய்த வருடமாகும்.
🤙 *ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் யார் யார் எல்லாம் பெறலாம்?*
💁♂ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை எந்தவிதமான தொழில் முனைவோரும் பெறலாம். இதை இவர்கள் தான் பெற வேண்டும் என்ற எந்தவிதமான விதிகளும் இல்லை.
🤙 *ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதன் நோக்கம் என்ன?*
💁ஒரு தொழிற்சாலையிலோ அல்லது தொழிற் முனைவோர் இடத்திலோ மருத்துவமனையிலோ ஏற்னவே உள்ள தரத்தினை மேம்படுத்துவதற்காக மற்றும் தொழில் வளத்தை பெருக்கவும், வியாபாரத்தை விரிவு படுத்தவும் இந்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்கள் பயன்படுகின்றன.
🤙 *இதற்கு அரசு என்ன உதவி செய்கின்றது?*
💁♂ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு எஸ்.எஸ்.ஐ. யூனிட்களுக்கு அரசாங்கம் நிதியுதவி அளிக்கின்றது. ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற பின்பு அதன் விவரங்களை அனுப்பினால், நாம் எவ்வளவு செலவு செய்தோமோ அதில் 75 சதவீத்தை அரசு மானியமாக வழங்குகின்றது. ஆகவே, சிறு தொழில் முனைவோர் ஐ.எஸ்.ஓ. 9001 2008 தரச் சான்றிதழ் பெறுவதில் எந்தவித தடையும் இல்லை.
🤙 *ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?*
💁ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகும்.
🤙 *இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?*🤙
*1. உலகத்தர அங்கீகாரம் கிடைக்கின்றது.*
*2. தரத்தை உயர்த்தி வியாபாரத்தை பெருக்கலாம்.*
*3. பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.*
*4. நமது உற்பத்தியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.*
*5. வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முடியும்.*
👦 *அண்ணே, இந்த ISO ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாண்ணே ?*
👳🏽தம்பி, ISO - ன்னா, உலக அரங்கிலே தர அமைப்பு முறையை மேம்படுத்த பல நாடுகள் ஒன்னா சேர்ந்து ஆரம்பிச்ச ஒரு நிறுவனம். ISO - ன்னா INTERNATIONAL ORGANISATION FOR STANDARDISATION சமச் சீரான திட்ட அளவிற்கான சர்வதேச நிறுவனம்
👦 *அது எங்கே, எப்போ ஆரம்பிச்சாங்க...?*
👳🏽தம்பி, ISO வந்து 1947 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டுல இந்தியா உட்பட 25 நாடுகள் ஒன்னா சேர்ந்து ஆரம்பிச்சாங்க, இப்போ இந்த சர்வதேச தர நிறுவனத்திலே 125 நாடுகளுக்கு மேலே உறுப்பினரா இருக்காங்க...
👦 *ஏண்ணே, இந்த ISI முத்திரையும் ISO-ம் ஒண்ணுதானுங்களா...?*
👳🏽இல்லே தம்பி, ISI முத்திரை வந்து, ஒரு தயாரிப்பு தரமானதா இருந்தா தருவாங்க (Product Quality)... ஆனா, ISO 9001 சர்டிபிகேட் வந்து, தர நிர்வாக முறைக்காக ஒரு நிறுவனத்திற்கு தருவாங்க (Quality Management System)...
👦 *ISO-விலே ஏதேதோ நம்பர் சொல்றாங்களே... அதைக் கொஞ்சம் விவரிங்க...*
👳🏽தம்பி, ISO-விலே 9000, 9001 மற்றும் 9004-ன்னு நம்பர்கள் இருக்கு. அதைப்போல ISO 14000, 14001 EMS (ENVIRONMENTAL MANAGEMENT SYSTEM) - சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு - ன்னு இருக்கு... இதிலே நம்ம கம்பெனிக்கு ISO 9001 சர்டிபிகேட் தான் வாங்கப் போறாங்க...
👦 *இந்த ISO 9001-ன் இலக்குகள் என்னண்ணே...?*
👳🏽ISO 9001 இலக்குகள் என்னான்னா தம்பி,
(1) சீரான தரமிக்க பொருட்களை வாடிக்கையாளருக்கு வழங்குதல்.
(2) பொருட்களை குறித்த நேரத்தில், எதிர்ப்பார்க்கும் விலை மற்றும் தொழில்நுட்பப்படி வழங்குதல்.
(3) வாடிக்கையாளரின் தேவையறிந்து செயல்படுதல்.
(4) விற்பனைக்குப் பின்னும் சிறந்த சேவையை வழங்குதல்.
(5) தர நிர்வாக முறையின் செயல்பாடுகளை அமுல்படுத்தி, கடைப்பிடித்தல்.
👦 *அண்ணே, இந்த ISO 9001 சர்டிபிகேட் வாங்குதறாலே, நம்ம கம்பெனிக்கும் நமக்கும் என்னண்ணே நன்மை இருக்கு...?*
👳🏽தம்பி. நம்ம கம்பெனியிலிருந்து ஏற்றுமதி செய்கிற தயாரிப்புகள் நல்ல தரமானதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, இதையே வெளிநாடுகளிலே, குறிப்பா ஐரோப்பிய நாடுகளில், நம்ம தயாரிப்பை வாங்குறவங்க, நாம் மட்டுமல்லாம கம்பெனியின் தர நிர்வாக முறையும் சிறப்பா இருக்கனும்னு எதிர்ப்பார்க்கிறாங்க...
🤜 *அதாவது பொண்ணு பார்க்கிறப்போ, பொண்ணை மட்டும் பார்க்காம, அது வளர்ந்த குடும்ப சூழ்நிலையையும் பார்க்கிற மாதிரி...*🤛
சரியாச் சொன்னே தம்பி ! மேலும் ISO 9001 சர்டிபிகேட் வாங்குதறாலே கீழ்க்கண்ட நன்மைகளும் இருக்கு...
(1) எல்லோரும் நம்ம கம்பெனியப்பற்றி, உயர்வா நினைப்பாங்க. அதனாலே, நமக்கு பெருமை தானே...?
(2) தரம் என்பது தயாரிப்பில் மட்டுமல்லாமல், நம்ம செய்ற ஒவ்வொரு செயல்லேயும் வரும்போது, தரமே நம் வாழ்க்கை முறையா மாறுது...
(3) செய்ய வேலையெ மொத முறையிலேயே சரியாச் செய்யும் போது தப்பு வராம பாத்துக்கலாம். தப்பை மீண்டும் சரி செய்ற வேலை கொறையும்...
(4) ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஊழியருக்கும் அவங்கவங்க துறையிலே நல்லா பயிற்சி கொடுக்கறாதாலே, நம்ம வேலையெ சிறப்பா, கவனமா செய்யமுடியும்...
(5) அவங்கவங்க வேலையெ அவங்கவங்க சரியாச் செய்யுறதாலே நமக்குள்ளே தன்னம்பிக்கையும், பரஸ்பரம் கூட்டு முயற்சியும் ஏற்படுது...
(6) நம்ம தயாரிப்பை வாங்குற வாடிக்கையாளர்கள் நம்ம கம்பெனி பேர்லே நம்பிக்கை வைச்சி, நம்ம தயாரிப்புக்கு முதலிடம் கொடுப்பாங்க...
👦 *ஏன்ணே... இந்த ISO 9001 வாங்கித்தான் ஆகணும்னு கட்டாயம் இருக்கா...?*
👳🏽வெளிநாடுகளிலே பெரும்பாலான கம்பெனிகள் வாங்கிட்டாங்க. நம்ம கம்பெனியும் உலக அளவிலே விற்பனையைப் பெருக்க, நம்ம கம்பெனியும் அவசியம் இந்த ISO 9001 சர்டிபிகேட் வாங்கியாகணும் தம்பீ !
👦 *இந்த ஐ.எஸ்.ஓ 9001 சர்டிபிகேட் தர்றவங்க என்னாண்ணே நம்ம கிட்டே இருந்து எதிர்ப்பார்கிறாங்க...?*
👳🏽தம்பி, ISO 9001 பத்தி சுருக்கமாச் சொல்லணும்னா,
*"சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்"* அப்படீன்னு தான் சொல்லணும். அதாவது நம்ம செய்ற ஒவ்வொரு வேலையையும் விவரமாச் சொல்றோம். அப்படிச் சொன்ன வேலையை சரியாச் செய்றோமான்னு ISO சர்டிபிகேட் கொடுக்கிறவங்க சரி பார்ப்பாங்க. மேலும் நம் நிர்வாகம் கொடுத்திருக்கிற தரக் கொள்கை (QUALITY POLICY) மற்றும் வேலை முறைகளை (Work Instructions / Procedures) நாம் எவ்வளவு தூரம் கடைப் பிடிக்கிறோம்னு பார்ப்பாங்க...
👦 *ISO மட்டுமா அல்லது வேறுயதாவது இருக்கா.*
👳🏽 மக்கள் எப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமோ அதுபோலதான் ஒவ்வொரு தயாரிப்பும் ஒவ்வொரு தரம் தகுதி கொண்டிருக்கும்.
*மருத்துவ ஆய்வுகள்:*
GMP
FDA
EDQM
MHRA
TGA
*சுருக்கமா சொல்லனும்னா பொருள் எவ்வாறு இருக்கனுங்குறது தரம்.அதை எங்கு எப்படி எந்த சூழ்நிலையில் பயன்படுத்துவதில் அதன் தகுதி நிருபணமாகிறது.*
*கழுவிய பாத்திரத்தில் நல்ல பாலெடுத்து காய்ச்சியபின் சீனிகலக்கி குடிக்க பால் சுவையானால் அனைத்தின் தரம் நலம்.பாலுக்கு சர்க்கரை பயன்பாட்டிற்கு பதில் தரமான உப்பு பாலில் கலக்க தரமாயினும்* *இரண்டும் அதன் தகுதியை இவ்விடத்தில் இழக்கிறது.*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *Devendranhp* *& Su*
🥈 *மகாராஜன்*
🥉 *பிரபாகரன் சிதம்பரம்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*"நீங்கள் தரமற்ற, தகுதியில்லாத எதையெல்லாம் பெறக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அதுபோன்ற தரமற்ற,*
*தகுதியில்லாத பொருட்கள் அனைத்தையும் செய்யாமல் நிறுத்துங்கள். அதைப்போல் நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கும் காரியங்களை உடனே தொடங்குவதும் அதுபோல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்."*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."குறள்-423*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எதுவென்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
👴🏻 *"கண்ணால்👁 காண்பதும் பொய், காதால்👂🏽கேட்பதும்* *பொய் 👨🏻⚖தீரவிசாரிப்பதே👩🏻⚖ மெய்"* 👵🏻
💎💎💎💎💎💎💎💎💎💎
🤷♂ *சிந்தனை :*🤷♀
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🙇 *தலைகுனீந்து வாழ்ந்தாலும் தரம் கெட்டுபோகாதே.*
*முடங்கி விடாது வெற்றியை நோக்கிப் பற!🦅*
*பறக்க முடியாவிட்டால் ஓடு!🏃*
*ஓட முடியாவிட்டால் நட!*🚶🏻
*நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.🐢*
*ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.🐛*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
🌱 *கனகராஜ்.வே*🌳
🌱 *9047493815*🌳
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 🌱 *குட்டிராஜேஷ் -*
*9486552988*🌳
😎 🌱 *மணி விஜய் -*
*8428073724*🌳
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment