https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :24.02.2018.*
🌹 *கிழமை :சனி கிழமை*
____________________________________
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*_பெட்ரோல், டீசல் ஏன் ஜி.எஸ்.டிக்குள்ள கொண்டு வரலை? ஜி.எஸ்.டி-யில் 28%க்கு மேல் வரி விதிக்க முடியாது. ஆனால், தற்போது மத்திய அரசின் சுங்கவரி 23% மாநில அரசின் வாட் வரி 34%. ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகி விடும். இந்தத் தந்திரம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?' என்ற வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது உண்மையில் சாத்தியம்... சாத்தியமில்லை என்பதைப் பார்க்கும் முன் இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்_*
*_இன்றைய இந்திய நேரப்படி மாலை 7.29 மணியளவின் கணக்கீட்டின் படி, கச்சா எண்ணெய் சர்வதேச விலை 63.55 டாலர். இந்திய மதிப்பில் 4124 ரூபாய்._*
*_1 பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது 159 லிட்டர். இதன் படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு - 25.93 ரூபாய்._*
*_இதன் பிறகு, நுழைவு வரி (Entry Tax), சுத்திகரிப்பு (Refinery Processing), இறக்குமதி செலவு (Landing Cost) மற்றும் இதர இயக்கச் செலவுகள் (Operational Costs with Margins) சேர்த்து லிட்டருக்கு ரூ.5.65 செலவாகிறது. மார்ஜின், போக்குவரத்து, சரக்கு விலை (Margin, Transportation, Freight cost) சேர்த்து லிட்டருக்கு ரூ.2.68 வரை செலவாகிறது._*
*_சுத்திகரித்தப் பிறகு எரிபொருளின் அடிப்படை செலவு லிட்டருக்கு ரூ.34.26 இதனையடுத்து கூடுதலாக, மத்திய அரசால் விதிக்கப்படும் சுங்க வரி (Excise Duty) லிட்டருக்கு ரூ.21.48 வாட் வரிக்கு (VAT) முன் டீலர்களுக்கு விற்பனை செய்யப்படும் விலை லிட்டருக்கு ரூ.55.74 பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிஷன் லிட்டருக்கு ரூ.2.57 வாட் வரிக்கு முன் பெட்ரோல் செலவு (தோராயமானது) லிட்டருக்கு ரூ.58.31 கூடுதலாக, வாட் வரி (டில்லி) 27% (இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும்) மற்றும் 25 பைசா (செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி) சேர்த்து லிட்டருக்கு ரூ.15.66 ஆக, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 234-ம் தேதி இந்திய நேரப்படி 7.29, டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விலை - ரூ.75.04 இதுவே சென்னையில் என்று எடுத்துக் கொண்டால் இங்கு வாட் வரி 34%-க்கு வரி விதிக்கப்படுகிறது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.78.13 ஆக ஒட்டுமொத்தத்தில் ரூ.34.26 என்று இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இறுதியில் பல வரிகள் சேர்க்கப்பட்டு ரூ.78.13 என்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் வரிகள் மட்டும் ரூ.43.87 -க்கு வசூலிக்கப்படுகிறது._*
*_பொதுவாக மத்திய அரசின் சுங்க வரி விதிப்பாலும், மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது. கடந்த வருடம் ஜூன் மாதம், தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பொதுவாக எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இதற்கு முன் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்து வந்தன. ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளன._*
*_சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்ற, இறக்கத்தைக் காரணமாகக் காட்டி, பெட்ரோலிய நிறுவனங்கள் இதன் விலையை மாற்றியமைக்கின்றன. பிப்ரவரி 24ம்தேதி இந்திய நேரம் 7.29 நிலவரபடி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 63.55 டாலராக இருக்கிறது. இது சில ஆண்டுகளுக்கு முன் 100 டாலருக்கும் மேல் அதிகரித்து இருந்தது. இப்போது இதன் விலை பாதிக்கும் மேல் குறைவடைந்துவிட்டது. இனி வரும் நாள்களில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இந்தியாவில், நிச்சயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 என்ன, ரூ.200ஐ கூடத் தொட அதிக வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் எரிபொருளின் மீதி விதிக்கும் வரி._*
*_மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவது என்பது வசதியாக இருக்காது. ஏனெனில் இவ்விரண்டு அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதுதான் மிக முக்கிய காரணம்._*
*_தமிழகத்தைப் பொறுத்தவரை எரிபொருள் மற்றும் மது விற்பனை மூலம் ஒட்டுமொத்த வருமானத்தில் பாதிக்கு மேல் கிடைக்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை விட மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக வரி விதிக்கிறது. இப்போது, ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்தால் அரசுக்கு வரி வருவாய் மிக மிகக் குறையும். ஆகையால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர கொஞ்சம் கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இப்போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பெட்ரோலுக்கு 138 சதவிகிதம் வரை வரி வசூலித்து வருகிறார்கள். ஒரு வேளை ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்து, அதிகபட்ச வரியாக 28% என விதித்தால்கூட பெட்ரோல் விலை பாதியாகக் குறைந்துவிடும்._*
*_நடுவணரசு மாநிலங்களின் வரி வருமானங்களை "ஒரே நாடு ஒரே வரி" என்று நள்ளிரவில் நாட்டுப்பற்றைப் பற்றவைத்து பிடித்துக்கொண்டதால், வேறு வழியின்றி (பெட்ரோல் டீசல்) வரியைக் குறைத்தால் வருமானத்தை விட நேரிடும் என விடாப்பிடியாய் மாநில அரசுகள் தங்களது நிலைப்பாட்டில் மாற்றமின்றி செயல்படுகிறது. நடுவண் அரசோ, உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களை உள்நாட்டுத் தேவைக்கு பயன்படுத்தாமல் ஏற்றுமதி செய்தும், இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து இருந்தாலும் மானியங்களை எண்ணெய் நிறுவனங்களுக்கு வாரி வழங்கி விலை நிர்ணய உரிமையை அவர்களிடமே விட்டுவிட்டு மக்களிடம் வரி சதுரங்க வேட்டை விளையாடுகிறது._*
*_மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் டீசல், பெட்ரோல் விலை மிக அதிகம். ஐம்பது பெர்சன்ட் வரிக்கே போய் விடுகிறது. டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டி க்கு கீழ் கொண்டு வந்தால், பாதி விலை குறையும். டீசல் பெட்ரோலை விலை குறைந்தால் விலை வாசி குறையும். இந்திய பொருளாதாரம் மேம்படும். ஆனால் கடை கோடி சாமானியன் வரை வசூலிக்கும் வரி பணத்தில் பெரும் பகுதி அரசின் செலவுகள் மற்றும் சம்பளம் இவற்றில் அரசு செலவிடுகிறது._*
*_வரியை குறைக்க மறுப்பதாலும், உற்பத்தி வரியை கூட்டியதாலும், தனியார் முதலைகளுக்கு தாரைவார்த்தாலும், மந்திரிகளுக்கு ஒசியில் வழங்குவதாலும், ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வராததாலும், ஏழை எளிய/நடுத்தர மக்கள் உயர்ந்து விடக்கூடாது, பயன் பெற கூடாது, என்ற முன்னால்/இந்நாள் அரசுகளின் கொள்கை அடிப்படையிலும்தான் இந்த பெட்ரோலிய விலைவாசி உயர்வுகள் இருக்கின்றன._*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
*_👑கலந்துரையாடல் 1⃣👑_*
*_🥇~SP.Vignesh_*
*_🥈~R.j (ஜெகதீஷ்)_*
*_🥉~mY nAme iS tOr TuRe☹😔 (நிருபன் கதிர்)_*
👑 *கலந்துரையாடல்2⃣*👑
*_🥇~இசையருவி_*
*_🥈~மணி நித்யா_*
*_🥉 ~ rajjais_*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்*
*புறத்த புகழும் இல.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫
*மணி விஜய் -8428073724*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👨🏻⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment