🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :21.09.2017.* 🌹 🌷 *கிழமை : வியாழக்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*_"பல்துலக்கும் வேப்பங்குச்சியைக் கூட சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்."_*
🌱 *அண்ணல் காந்தியடிகள் .*💐🌳
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*அதிக விலை கொடுத்து வாங்க போகும் வாகனத்தில் இறுதியாக கேட்கபடும் கேள்வி,*
*"லிட்டர்க்கு எவ்வளவு" கொடுக்கும்.*
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*எரிபொருள் சிக்கனம் மற்றும் அவற்றிக்கான மாற்று வழிகள்...*
⛽❓⛽❓⛽❓⛽❓⛽❓⛽
☢ _*முன்பெல்லாம் எரிபொருள் விலையேற்றம் கச்சா எண்ணெய் விலைவாசியை பொருத்து விலையேற்ற மற்றும் குறைப்பு எப்போதாவது ஒரு முறை தான் இருக்கும்.*_
🤒 _ஆனால் தற்போது அப்படியில்லை ஒவ்வொரு நாளும் விலையேற்றி (பெட்ரோல் மற்றும் டீசல்) சாமனிய மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். இம்முறைக்கு மாற்றியதற்க்கான காரணம் *"வருமானம் இழப்பாம்"* ஆதாலால் எண்ணை நிறுவனம் தன் இஷ்டத்திற்க்கு விலை நிர்ணயிக்க தாராள மனம் கொண்ட மத்திய அரசு லாப *(மக்களுக்கா அல்லது அரசியல்வாதி)* நோக்கில் அனுமதி வழங்கியது._
_*( ஆனால் உழவனுக்கு உழைத்த உழைப்புக்கு கூட மிச்சமில்லை).*_
💢 _ஆகையினால் எரிபொருள் பயன்படுத்தாது இருக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்._
_ஆனால் கண்டிப்பாக எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த முடியும்._
_*வாருங்கள் அதற்க்கான முயற்சியினை சிறிதேனும் தொடங்க முயற்சிப்போம் முடிவுரை வாயிலாக.*_
🙆♂ *எங்களிடம் வண்டியும் இல்லை,வீட்டில் கேஸ் அடுப்பும் இல்லை நான் ஏன் எரிபொருள் சிக்கனம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென நினைப்பவராயின் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் நாம் வாங்கும் பொருள்மீது விலையேற்றி மிளாகாய் அரைக்க எரிபொருள் விலையேற்றமும் காரணமுங்கோ.*🙆
🤙 *எரிபொருள்:*🤙
☢ _எரிபொருள் என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். *பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas - CNG), திரவப்பெட்ரோலிய வாயு (Liquified Petroleum Gas -LPG) அல்லது ப்ரோபேன்* போன்ற எதுவாக இருந்தாலும், எரிபொருளில் பிரதானமாக இருப்பது ஹைட்ரோ கார்பன்கள்தான்(HC)._
🛑 *_எரிபொருள் பயன்பாடு:_*⛽
⛽எரிபொருட்கள் வாகன , வீடு மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்க்காக பெரும்பாலும் பயன்படுகிறது.
*வாகனம் பயன்பாடு:*
🚘🚌🚛🚜🛵🏍🚂🛩🚀
அந்த காலத்தில் மனிதன் எங்கேயாவது பயணம் மேற்க்கொள்ள வேண்டுமாயின் முன்கூட்டியே திட்டமிட்டு குறைந்த செலவில் நடைபயணம்,குதிரை மாட்டுவண்டி,நீர் வழி பாதை என சென்றுகொண்டிருந்தான் இயற்கைக்கு பாதகம் விளைவிக்காது.
👉ஆனால் தற்போது அசுர வளர்ச்சியினால் அதிவேகமாக செல்கிறான், அதிக அளவு தன்பணத்தினை விரயமாக்குவது மட்டுமல்லாது இயற்கையும் மாசுபடுத்தி மற்றவர்கள் வாழ தகுதியற்ற நிலையை உருவாக்குகிறான்.
⛽ *மின்சாரத்தைப் போலவே நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் பயணமும் அதற்கான வாகனங்களும். இதற்காக வாகன எரிபொருளுக்கு நாம் பெருமளவு செலவு செய்கிறோம். அத்துடன் இந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடும், உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கின்றன.*
⛽ *இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலும், டீசலும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலைச் சார்ந்து நாம் இயங்க முடியாது.*
⛽ *எரிபொருளைக் குறைவாகப் பயன்படுத்துவதால் இன்னும் அதிக ஆண்டுகளுக்கு அது தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.*
⛽ *கோதாவரி கிருஷ்ணா நதி படுகையில் கச்சா எண்ணெய் மற்றும் காவேரி ஆற்றுபடுகை,நெடுவாசல் போன்ற இடங்களில் எரிபொருள் எடுத்தால் விலை குறையும் என்ற நிலை உருவாகது விளைநிலங்கள் பாதிப்படையும்.*
🛑 *வீடுகள் மற்றும் தொழிற்சாலை பயன்பாடு:*
🏘 _அந்த காலத்தில் விறகுகளை கொண்டு வீடுகளில் சமையல் செய்தனர். ஆனால் இப்போதெல்லாம் எதற்கொடுத்தாலும் கேஸ் பயன்பாடு._
🏢தொழிற்சாலைகளில் கூட பாய்லருக்கு எரிபொருளை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.
⛽ *எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்த சில ஆலோசனைகள்:*🤒
🤜 *வாகனத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுதுநீக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் மைலேஜ் குறையும்.*
🤜 *பெட்ரோல்-டீசலை குறைவாகப் பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைப் பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகரிக்கும்.*
🤜 *போக்குவரத்து சிக்னலில் வாகனத்தை அணைத்துவிட்டு, நமக்குச் சிக்னல் கிடைப்பதற்கு 3 விநாடிகள் முன்னதாக வாகனத்தை ஸ்டார்ட் செய்தால்போதும்.*
🤜 *வண்டியில் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது. மீறி அதிக எடையை வாகனம் சுமந்து சென்றால், எரிபொருள் செலவு கூடும்.*
🤜
*பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக எரிவாயு மூலம் வாகனத்தை மாற்றி இயக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம்.*
🤜 *தனியாகக் காரில் செல்வதைத் தவிருங்கள். அலுவலகம், பள்ளி போன்ற இடங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் வாகனத்தைப் பகிர்ந்துகொள்வது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் செலவையும் குறைக்கும்.*
*சைக்கிள், மின்ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளை அதிகம் பயன்படுத்த முயற்சியுங்கள்.*
🤜 *எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துங்கள்.*
🤜 *வீடுகளில் தேவைபடும் போது மட்டும் கேஸ் அடுப்பை பயன்படுத்துங்கள்.*
*சுடுதண்ணீருக்காக மின்சாரம் பயன்படுத்தலாம்*
🤜 *தொழிற்சாலைகளில் கூட அதிகளவு எரிபொருளை பயன்படுத்தாது மின்சாரம் பயன்படுத்தலாம்.*
⛽ _*எனவே எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்.*_
🤙 *ஏன் எரிபொருள் சிக்கனம் அல்லது மாற்று மாசில்லா எரிபொருள் :*🤙
⛽ _எரிபொருள் தானாக எரிய முடியாது, எஞ்சின் நெருப்பாக இருந்தாலும் காதல் நெருப்பாக இருந்தாலும் எந்த நெருப்புக்கும் முக்கியமான தேவை - ஆக்ஸிஜன். காற்றுமண்டலத்தில் ஆக்ஸிஜன் தனியாக இல்லை - பல்வேறு தனிமங்களுடன் கலந்தே இருக்கிறது - அதில் முக்கியமானது நைட்ரஜன்._
🔥 *தீ,எரிபொருள் மற்றும் ஆக்சிஜன் மட்டும் தனித்தனியாக இருந்தால் ஆபத்தில்லை.*
🔥 *எரிபொருளில்* உள்ள தனிமங்கள் - ஹைட்ரஜன்(H), கார்பன்(C) மற்றும் 1 - 3% வரை கசடு (சல்பர்(S) / ஈயம்(Pb) / ஹைட்ரஜன் சல்பைட்(H2S).
🌪 *காற்றில்* உள்ள தனிமங்கள் - நைட்ரஜன்(N), ஆக்சிஜன்(O) (மற்ற தனிமங்கள்.
⛽ எரிபொருளுடன் காற்று
எரியும்போது, கீழ்க்கண்ட மூலக்கூறுகள் உண்டாகின்றன, இவை வெப்பத்தை உண்டுசெய்து எஞ்சினை இயங்கச் செய்தபிறகு புகைபோக்கி வழியாக வெளியேறுகின்றன.
💨 *புகையில் உள்ள பிரச்சனை:*♨
♨ எரிபொருள் எரிக்கப்படும்போது வரும் புகையில் அதிக அளவு கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளது.
♨ *கார்பன் டை ஆக்ஸைடு மரங்கள் பகலில் சுவாசித்துக் கொள்கிறது உணவு தயாரிக்க.*
♨ _ஆனால் கார்பன் மோனாக்ஸைடு அப்படியில்லை._
_கார்பன் மோனாக்ஸைடு ஒரு நிரந்தரமில்லாத வாயு (Unstable). அல்பாயுசில் மடிந்தவர்கள் ஆவியாவார்கள் என்பதுபோல, இது முழுக்க எரியாததால் எங்கே ஆக்சிஜன் என்று தேடிக்கொண்டு அலையும். காற்று_ _மண்டலத்தில் இதற்கு ஜோடியாக இன்னொரு நிரந்தரமில்லாத ஆக்சிஜன் வகை இருக்கிறது - மூன்று மூலக்கூறுகளைக்கொண்ட O3 - ஓசோன்! இவருக்கு ஒரு ஆக்சிஜன் வந்தால் நிலைபெறுவார்,_ அவருக்கு ஒரு ஆக்சிஜன் இழந்தால் நிலைபெறுவார். இருவரும் சந்திக்கும்போது - கண்கள் கலந்தன, கருத்தொருமித்தனர் - சரியான ஜோடி ஆகிவிடும்!_
*CO + O3 -> CO2 + O2*
ஓசோன் வாயுவின் அளவு குறைவதும், அதனால் சூரியக்கதிர்கள் தங்குதடையின்றி பூமிக்குள் நுழைந்து நமக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்துவதுதான். மேலும், கார்பன் மோனாக்ஸைடை நேரடியாக சுவாசித்தால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை மட்டுப்படுத்தி இதயத்தின்🖤 செயல்பாட்டையும் தொந்தரவு செய்யும்.
♨ _இது தவிரவும், *நைட்ரஸ் ஆக்ஸைடுகளால் அமிலமழை உண்டாகும் சாத்தியமும் உண்டு.*_
♨ *சல்பர் ஆக்ஸைடுகள் காற்றை மாசுபடுத்துவதிலும் அமில மழைக்கும் மேற்கண்ட இரண்டுக்கும் உறுதுணையாக இருக்கும்.*
♨ *கார்பன் டையாக்ஸாடு (CO2) - ஒரு க்ரீன்ஹவுஸ் வாயு - உலக் வெப்பமயமாக்கலில் முக்கிய பங்கு இதற்கு.*
♨ *ஆகக்கூடி, எந்த வாயுவுமே நல்லதில்லை! அதற்காக எல்லா எஞ்சின்களையும் அணைத்துவிடவா முடியும்❓*
🏛 _எனவே, இவற்றைக்குறைக்க பலவழிகளில் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள், அரசாங்கங்களும் பல சட்டங்களைப்போட்டு மாசின் அளவைக் கட்டுக்குள் வைக்க முயன்று வருகிறது._
♨ _*எரிபொருளுக்கான மாற்று வழிகள்:*_♨
♨ சாண எரிவாயு.
எத்தனால் பயன்பாடு.
நீர் போக்குவரத்து.
நீர்,காற்று மற்றும் சூரிய ஒளி மின்சாரம் கொண்டு இயங்கும் வாகனங்கள்.
♨ *சாண எரிவாயு:*♨
♨ பொதுவாக கோபர் கேஸ் என்பார்கள், கோபார்(Gobar) என்றால் இந்தியில் மாட்டுசாணம், மாட்டு உரம்(cow manure), எனப்பொருள், நேபாளியிலும் மாட்டுச்சாணம் என்றே பொருள்.
👉 உலகிலேயே அதிக கால்நடைகள் கொண்ட நாடு இந்தியா, 529 million cattles, and 648.8 millions of poultry உள்ளது. ஒரு மாடு தினசரி சராசரியாக 10 -12 கிலோ சாணியிடும்,இது மாட்டின் அளவு, இனம், உண்ணும் உணவுக்கு ஏற்ப மாறுபடலாம்.
இந்தியாவில் உற்பத்தியாகும் சாணி முழுவதும் மீத்தேன் ஆக்க முடிந்தால் சுமார் 30% எரி பொருள் தேவையை குறைக்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது.மற்ற பயன்ப்பாடுகளை செய்ய கூடுதல் செலவிட வேண்டும், ஆனால் கோபர் கேசினை அப்படியே வழக்கமான கேஸ் ஸ்டவ் மூலம் எரித்து சமையல் செய்ய பயன்ப்படுத்தலாம்,இந்தியாவில் பெரும்பாலும் சமையல் செய்யவே கோபார் கேஸ் பயன்ப்படுகிறது.மேலும் வளி மண்டலத்தில் கலக்கும் மீத்தேனின் அளவும் குறைந்து சுற்று சூழலும் பாதுகாக்கப்படும்.
♨ *எத்தனால்:*♨
🌾 விவசாயிகள் அதிகளவு கரும்பு விளைவிக்கிறார்கள். சர்க்கரையோடு எத்தனாலும் தயாரித்தால் விவசாயி அதிக வருமானம் பெறுவர் மற்றும் வாகனமும் குறைந்த செலவில் இயக்கலாம்.
♨🏎 *முழுக்க முழுக்க ஆல்கஹாலிலேயே ஓடும் கார்கள் உண்டு. பிரேசிலில் 100 சதவீதம் பெட்ரோல், அல்லது 100 சதவீதம் ஆல்கஹாலில் அல்லது இரண்டின் கலவையில் ஓடக்கூடிய கார்கள் இருக்கின்றன. இவை பிரேசிலில் ஓடக்கூடிய கார்களில் 53 சதவீதம்.*
♒ *மின்சாரம் தயாரிப்பு :*♒
♒ *நீர் மின்சாரம்*
ஒரு புறம் வெள்ளத்தினால் என்னற்ற மக்கள் மற்றும் பொருட்கள் அழிவு.
♒ நதிகள் இணைப்பு மூலமாக விவசாயம் பெருக்கமடைவது மட்டுமல்லாது நீர்வழி
போக்குவரத்து செய்து குறைந்த செலவில் போக்குவரத்து மேற்க்கொள்ளலாம்.
♒ நீரினை தேக்கி
நீர் மின் நிலையங்களில் மேலிருந்து கீழே விழும் நீரின் விசையால் ஜெனரேட்டரின் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
🌞 *சூரிய ஒளி மின்சாரம்:*♒
🌍 பூமியே அழிந்தாலும் சூரியன் அழியாது.
அப்படியிருக்க சூரிய ஒளிக்கு பஞ்சமிருக்காது.
👉 நதிகள் இணைக்கும் போது மேற்பரப்பிலும், என்னற்ற பயன்பாடற்ற நிலப்பரப்புகளிலும் சூரிய தகடுகளை பயன்படுத்தி சூரிய மின்சாரம் தயாரிக்கலாம்.♒👍
🌪 *காற்று மின்சாரம்:*♒
⛰ மலைப்பிரதேசங்கள் அருகேயும்,கடலோரங்களிலும் காற்றாலை மின்சார தயாரிப்பு கம்பங்களை தயாரித்து மின்சாரம் பெறலாம்.
⛽ *பெட்ரோலிய எரிபொருளுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தும் சாத்தியம் விரைவில் உருவாகும் என தெரிகிறது.*
⛽ *அமெரிக்காவின் இராணுவ ஆய்வுகூடத்தில் (US Army Aberdeen Proving Ground Research Laboratory) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்போது இது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.*
⛽ *அதாவது அதிக வலிமை உடைய அலுமினியம் கலவையினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் அதன் மேல் நீரூற்றிய போது குமிழிகள் தோன்றியதுடன் ஹைட்ரஜன் வாயுவும் வெளியேறியுள்ளது.*
🔎 *இது ஒரு வளமைக்கு மாறான நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.*
⛽ *எவ்வாறெனினும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கு மற்றுமொரு மாற்றுவழி கிடைத்துள்ளதாகவும், விரைவில் பெட்ரோலியம் எரிபொருளுக்கு பதிலாக இதனை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.*🔍
🔎 *இதேவேளை ஹைட்ரஜன் எரிபொருளானது 100 சதவீதம் சக்தியாக மாற்றப்படக்கூடியது என்பது விசேட அம்சமாகும்.*🔍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *ஜோக்கர்*
🥈 *நிருபன் கதிர்*
🥉 *சரவணன் கந்தசாமி*
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கண்டதையும் உண்ட
பணக்காரன், உண்ட உணவு செரிக்க பணம் செலவு செய்து வண்டியிலே ஜிம்முக்கு போகிறான் ஊதாரித்தனமாக.
ஆனால் ஏழை உணவு உண்ண உழைக்க ஓடுகிறான்.
🤔 *ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரணாக இருந்தாலும் சரி.ஐந்தறிவுள்ள எந்த நாட்டு விலங்கிற்க்கும் தொப்பை வந்து நான் பார்த்தில்லை.*🤔
🤔 *ஆகையினால் ஆறறிவு கொண்ட நாம் முடிந்தளவு எரிபொருள் உபயோகிக்கும் நிலையினை குறைத்து நலமோடும் சிக்கனமாகவும் வாழ முயற்சிப்போம்.*🤔
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்*
*கிறையொருங்கு நேர்வது நாடு*
*_📜 விளக்கம்: 📜_*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_"சிக்கனம் வீட்டைக்காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்"_*
*_“சிறுகக் கட்டி பெருக வாழ்”_*
☘☘☘☘☘☘☘☘☘☘
🤷♂ *சிந்தனை :*🤷♀
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🤔 *அவசியத்திற்க்கும் ஆடம்பரத்திற்க்கும் வித்தியாசம் உண்டு.*
🤔 *எனவே எந்தவொரு பொருளையும் அவசியத்திற்க்காக மட்டும் பயன்படுத்துங்கள் ஆடம்பரத்திற்க்காக வேண்டாமே.*
🤔 *நமது அவசியமற்ற ஆடம்பரம் மற்றொருவரின் அவசியமான அத்தியாவசியம்*
🤔 *_தாணும் உண்ணாமல் பிறரையும் உண்ணவிடாமல் இருத்தலே கஞ்சத்தனம். சிக்கனம் கஞ்சத்தனம் அன்று._*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👨🏻💻🌱 *கனகராஜ்*🌳
📱 *9047493815*📲
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 🌱 *குட்டிராஜேஷ் -*
*9486552988*🌳
😎🌱 *மணி விஜய் -*
*8428073724*🌳
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment