Tuesday, 13 March 2018

நம் குழு அட்மின்கள் செயல்பாடுகள் பற்றி உங்களது பார்வை....

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
நம் குழு அட்மின்கள் செயல்பாடுகள் பற்றி உங்களது பார்வை....
------------------------------------------------------------

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :12.03.2018.* 
         🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை*  
*நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.*

💐 *~அன்னை தெரசா ~*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😎 *ஒருநாள் அட்மின்னா இருந்துபாருங்க அப்போ தெரியும்...*🤠

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*நம் குழு அட்மின்கள் செயல்பாடுகள் பற்றி உங்களது பார்வை....*

🧐🤠😎🧐🤠😎🧐🤠😎🧐🤠

🕴🏻👩🏻‍💻👨🏻‍💻 *நம் குழு அட்மின்களின் செயல்பாடுகள் பற்றி உங்களது பார்வை....*🤗

🤔 *இந்த தலைப்பு ஏன் வச்சோம்? எதுக்காக வச்சோம்? யாருக்காவது  தெரியுமா💭💭💭*

☹😰 *குழுவில் உள்ளவர்கள் இங்கிருக்கும் அட்மின்கள் அனைவரையும், ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி பாக்குறிங்கனு, எங்களுக்கு உளவுத்துறைல இருந்து ரிப்போர்ட் வந்துச்சி.*🧐🤓

👉🧐 *சில அட்மின்களை ஜென்டில்மேனாகவும், சில அட்மின்களை காமெடியாகவும், சில அட்மின்களை ஒண்ணுத்தையும் கண்டுக்கமாட்றாரு இவர் வேஸ்ட் என்று பல பேர் பல கோணங்களில், பல சதுரங்களில், பல செவ்வகங்களில பார்ப்பதுண்டு. அத பத்திலாம் எங்களுக்கு கவலையில்லை.*🙅🏻‍♀🙅🏻‍♂

💪👉 *எங்களை பொறுத்தவரை நீதி, நேர்மை, நாணயம், செல்வாக்கு, நாட்டு பற்று, இடைவிடாத உழைப்பு, ஓவரான தன்னம்பிக்கை, எதையும் சமாளிக்கும் இதயம், இப்படி பல போதனைகளை வழிமுறைகளாக பின்பற்றி கொண்டு வருகின்றோம்.*👍👍

👉👨🏻‍💻👩🏻‍💻 *ஒவ்வொரு அட்மினுக்கும், ஒவ்வொரு தனிப் பார்வை உண்டு. ஒன்றரை கண்ணுலாம் இல்ல ஞானக்கண். ஞானம் இதை தான் தமிழில் அறிவு என்று சொல்லுவார்கள்.* 😇💐

🙅🏻‍♀🙅🏻‍♂ *இங்கு எந்த அட்மின்களும் வேலையில்லாமல் இல்ல. ஒவ்வொரு அட்மினுக்கும் ஒவ்வொரு கடமைகள்  இருக்கு. அது என்னான்னு முதல்ல பாப்போம்.*👍🤗

😝😛 *அது வந்து  துணி துவைக்கிறத இருக்கலாம். பாத்திரம் கழுவுறத இருக்கலாம். ஆபிஸ்க்கு வேலைக்கு போகலாம். ஊர் ஊரா ஜெராக்ஸ் மிஷின் ரிப்பேர் பண்றதா இருக்கலாம், புதுக் கல்யாணம் பண்ணியிருக்கலாம் அவங்க திருப்பதி போயிருக்கலாம், கோலம் போடுற அட்மினா இருக்கலாம், ஊட்டி போற அட்மினா இருக்கலாம். கோர்ட்டுக்கு போற அட்மினா இருக்கலாம், dress கடைக்கு வேலைக்கு போற அட்மினா இருக்கலாம், மலேசியாவுல ஊர் சுற்றி வேலை பார்க்கும் அட்மினா இருக்கலாம், ஹோட்டல்ல வேலை பார்த்துட்டே லவ் பண்ணிட்டு, குழுவையும் கண்காணிக்கலாம்.*😉😝

🤣😂 *இப்படி அட்மின்கள் ஒவ்வொருவரும் பல பரிமாணங்களில் கலந்துள்ளார்கள்.*

😉😝🙃 *ஒவ்வொரு அட்மினுக்கும் ஒவ்வொரு இசை உண்டு. இசை எங்க இருக்கும்? எல்லா இடத்திலயும் இருக்கும் அதுபோல தான் நம்ம அட்மின்கள் நம்ம குழு மட்டுமல்லாம மற்ற குழுவையும் வாட்ச் பண்ணுவாங்க.*🙌

🧐🤪 *இது ஒரு டிடெக்டிவ் ஆப்ரேசன் ஏஜென்ட்.*

🙌🧐 *இங்கு எழுதப்படும் முடிவுரை பல புராணங்களிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், தொகுத்து அட்மின்களும் அவர்களது மூளைகளை வடிகட்டி பில்டர் காபி போட்டு  தான் முடிவுரையாக உங்களுக்கு வழங்கப்படுகிறது.*😉🤗

😄😃 *இதுல ஏற்கெனவே பலர் குழுல போட்ட கருத்தையும் மறுபடியும் போட்ட, ஆறிப் போன காபிய, மறுபடியும் சூடு பண்ணி கொடுக்கிற மாதிரி இருக்கும்.*🤫

🤪🤠 *அதனால தான் புது பால் வாங்கி, புது காப்பித் தூள் வாங்கி, சர்க்கரை போட்டு இரண்டு ஆத்து ஆத்தி சுவையாக கொடுக்கப்படுகிறது.*

🧐🤠 *செலக்சன் சரியில்லை என்று சொன்னார்கள். புதுசா டீ போடுறவங்க, எடுத்த உடனே செம டேஸ்ட்டா போட மாட்டாங்க. நம்ம தான் எதை எதை எந்த அளவு குழுல போடணும்னு சொல்லி கொடுக்கணும் .*

🤕 *அட்மின்ஸ்கள் ஹிட்லர் மாறி சர்வாதிகாரம் பண்றாங்க.....🤦🏻‍♀🤦🏻‍♂என்னாங்க இது எல்லாரும் துப்பாக்கி வைத்து மிரட்டிக்கொண்டா இருக்கிறார்கள்....ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து குழுவின் கருத்தை பதியவைப்பதான் மூலம் தினமும் ஒன்றாக பயணித்து வருகின்றனர்....இதில் அனைவரும் ஒரே மாறியாக இருப்பது முடியாது....குழுவில் நல்லபடியாக ஆண்கள் பெண்கள் பயணிக்க சில விதிமுறைகள்  போடப்படுகிறது....அதன்படி வழிநடத்தி கொண்டு போகவே அட்மின்கள் எண்ணுகிறோம்.....வேறு ஒன்றும் இல்லை....*🤷🏻‍♀🤷🏻‍♂

👉🤷🏻‍♀🤷🏻‍♂ *மேலும் அட்மின்களுக்கும்  குடும்பம், சொந்த வேலை என்பதும் ஒன்று உள்ளது....யாரும் 24 மணிநேரமும் குழுவை மட்டுமே பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க வாய்ப்பு இல்லை ..பல வேலைக்கு நடுவிலே குழுவையும் கவனித்து கொண்டே வருகிறார்கள் என்பதை கொஞ்சம் அனைவரின் மனதிலும் பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏💐குழுவில் ஏதேனும் ஒரு தவறோ பிரச்சனையோ நடந்துவிட்டால்....உடனே ஆளாளுக்கு அட்மின்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்,எங்கே சென்று இருக்கிறார்கள் என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் சர மாறியாக வந்து குவிந்த வண்ணம் இருக்கும்..*.🤕😴😴🙄🙄

🙇🏻‍♀🙇🏻‍♂ *அப்பொழுது தான் Bp யும், heart attack ம் அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்பு ஏற்படுகிறது.*🤕🤕😔

🤷🏻‍♀🤷🏻‍♂ *பிறகு தலைப்பு கடந்த ஒருவருடம் கிட்டத்தட்ட அனைத்து வகையான தலைப்புகளையும் பேசிப்பேசி சில தலைப்புகள் பேசி சலிப்புக்கூட ஏற்பட்டுவிட்டது...இப்படி இருக்கும் பட்சத்தில் .....ஒவ்வொருநாளும் புதிய புதிய தலைப்புகள் வைக்கவே மூளையை அலசி ஆராய்ந்து பித்து பிடித்து, தூக்கம் கூட இல்லாமல் யோசித்த வண்ணம் இருக்கிறோம்....உறுப்பினர்களாகிய உங்களிடையேயும் விருப்பமுள்ள தலைப்புகளை சொல்ல சொல்லியும் தெரிவித்தும் உள்ளோம்....இதை கொஞ்சம் கவனம் செலுத்த உதவி புரியலாமே நண்பர்களே*🤷🏻‍♀🤷🏻‍♂

🧐🙌 *பின் முடிவுரை ,முடிவுரை என்பது பல கருத்துகளின் ஒட்டுமொத்த பொது குவியலாக அனைவருக்கும் ஏற்று கொள்ளும் விதமாகவும்,நடை முறையில் வழக்கத்தில் உள்ள விஷயமாகவும் அறிந்தவைகளையும், பல அறியாத செய்திகளையும் தெரியப்படுத்த தொகுக்க கூடியதே.*👍

👉🧐 *ஒரு தலைப்பு வைத்து, முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை இருவர் பதியும் போது, ஒருவர் ஒரு கட்சி சாரராகவும், இன்னொருவர் இன்னொரு கட்சி சாரராகவும் இருப்பார். அப்போது எந்த கட்சிக்காரர் சொல்லுவதை முடிவுரையில் சேர்ப்பது?*🤔

🧐🤔 *ஒருவருக்கு சாதகமாக ஒருவர் கூறும் கருத்தை மட்டுமே வைத்தோ, அனைவரது கருத்தை மட்டுமே வைத்தோ முடிவுரை ரெடி செய்தால், அரைத்த மாவையே மறுபடியும் அரைப்பது போல இருக்கும்.*🤷🏻‍♀🤷🏻‍♂

👉🧐 *ஆதலால் தான், இங்கு அவரவர் விருப்பம் போல, அவரவர் கூற வரும் மொத்த விஷயங்களையும், குழுவில் வரும் கருத்துக்களின் அடிப்படையில், முடிவுரையில் தொகுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.*🤷🏻‍♀🤷🏻‍♂

👉👨🏻‍💻👩🏻‍💻 *இதில் தினமும் உறுப்பினர்களின்  கருத்தை வைத்து தாயார் செய்வது அல்ல🙅🏻‍♀🙅🏻‍♂ உறுப்பினர்களின் கருத்தை வைத்து கணித்து பொதுவாக ஒரு கருத்தை  எடுத்தே தொகுக்கபடுகிறது...இதை புரிந்துகொள்ள வேண்டும்*👨🏻‍💻👩🏻‍💻👍

👨🏻‍💻👩🏻‍💻🧐 *இங்க அட்மின் செயல்பாடுகள் வாங்களேன் ஒரு தொகுப்பு தரோம்.*😎👇👇👇👇👇👇

🌀💤 *காலைல 6 மணிக்கு எந்திரிச்சி எக்ஸசைஸ் செய்து டீ காபி குடிக்காங்கட்டியும் மணி 7 ஆகிடுது.*💤

🌀🤠 *(மனதிற்குள்) தலைப்பு போட்டுருப்பாங்களா? போட்டுருக்க மாட்டார்களா? எங்க எட்டி பார்ப்போம் 😳.*

☹🙁 *அப்பாடா போட்டுட்டாங்க.*

🤗 *நம்ம வேலைய பாப்போம்.*

🤠😎 *அதுக்குள்ள போன் வரும். அட்மின் குழுல இருந்து, உங்க விழிப்புணர்ச்சி குழுல சண்டை. அவரோட கலந்துரையாடல் குழுல சண்டை. அருள் அண்ணா கோலிசோடா குழுல சண்டை, வேலைவாய்ப்பு குழுல சண்டை.*💤💤🙇🏻‍♀🙇🏻‍♂

☹🙇🏻‍♂🙇🏻‍♀ *இதுல வீட்டில் உள்ளவர்கள் குழுவையே கட்டிக்கிட்டு அழுன்னு  வீட்டில் சண்டைவேர நடக்கும்..*.😴😴😴😰😰

🤦🏻‍♂🤦🏻‍♀ *(மனதிற்குள்) ஐய்யய்ய ச்சை இவங்களுக்கு இதே பொழப்ப போச்சி.*

🙇🏻‍♀🙇🏻‍♂ *எதாவது தெரிஞ்சிக்க குழுல சேர்த்தா ஆளாளுக்கு டார்ச்சர் பண்றாங்களே. என்ன பிரச்சனை இது தானா, அடப் போங்கப்பா😏😏.*

💤💤 *இந்த ஆடியோவ கேளுங்க இதான் பிரச்சனை*

💤💤 *3 நிமிட ஆடியோவா? டைம் இல்ல. வேலை இருக்குபா. அங்க பெரிய சண்டை ஆகுது. என்ன பண்ணனும் சொல்லுங்க. முடிஞ்சா சமாளிங்க, இல்ல எல்லாரையும் நீக்குங்க. நான் வந்து பேசிக்கிறேன்.*🙇🏻‍♂🙇🏻‍♀

🙇🏻‍♂🙇🏻‍♀ *இவருக்கு என்ன தெரியும், இவர் ஏன் என்னைய நீக்குனாரு. கேள்வி மேல கேள்வி கேட்பாங்க. நம்ம வேலைய பாக்குறதா? இவங்களுக்கு explain பண்றதா?😴😴😴 முடியல.*  

🤦🏻‍♀🤦🏻‍♂ *நம்ம வேலையிலும் டென்சன் வரும். இங்கேயும் குழுலயும் பிரச்சனை நடக்கும். என்ன வேணும்? தப்பு யார் மேலனு தெரிய வரும். இப்படிலாம் பண்ணக்கூடாது குழு விதிமுறைகள் பின்பற்றுங்க. அப்ப நீங்க சொல்றத தான் நாங்க கேட்கணுமா? எங்க கருத்தை சொல்லக் கூடாதா? எதிர்கருத்து போடக் கூடாதா?*🙇🏻‍♂🙇🏻‍♀

🙇🏻‍♂🙇🏻‍♀ *போடுறது தப்பில்ல. சொல்ல வேண்டிய முறையில் சொன்னா எல்லாரும் கேட்பாங்க. அப்ப நான் பண்ணது சரியில்லையா? நீங்க எல்லாரும் ஒழுங்கா இருக்கீங்களா? பிடிச்சா குழுல இருங்க. இல்ல போங்கபா. வேலை கிடக்கு.*☹🙁

🙇🏻‍♂🙇🏻‍♀ *அப்ப நாங்கலாம் வெட்டியா பதிவு  போடுறோமா? அட்மின்கள் மட்டும் தான் சரியா பேசுறிங்களா?😴😴😴 முடியல.*

☹🙁 *வேலை பார்த்துட்டு இருப்போம். போன் வரும் இல்ல மெசஜ் அதிகம் வரும். என்னன்னு எட்டி பார்த்தா, ஒரு மாதிரியா பேசிட்டு இருப்பாங்க.*☹

🙁☹ *சரி சண்டை போடாம பேசுறாங்களானு பாப்போம். அப்பாடா பிரச்சியில்லாம முடிச்சிட்டாங்க. நம்ம வேலைய நிம்மதியா பார்க்கலாம்.*😒😕

🌀🤠 *இப்படியே மாலை பொழுது வந்துரும். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பார்த்தா, அட்மின் குழுல புதுசு புதுசா அத பண்ணலாம், இத பண்ணலாம்னு பேச்சு அடிபடும். அதுக்கு வாக்குவாதம் செய்து நடுநிலையான முடிவு எடுப்பாங்க.*😴😰

😴😲 *அதுல பாசிட்டிவ் நெகட்டிவ் பேசுவாங்க. சிபிசிஐடி கூட இப்படி திங் பண்ண மாட்டாங்க. இந்த விழிப்புணர்ச்சி குழுவுக்கு அட்மினா வந்ததும், போதும். நிம்மதியா இருக்கவும் விட மாட்றாங்க. குழுவை விட்டு போகவும் விட மாட்றாங்க. படுத்துறாங்கபா😥*

😲😴 *இடைல கண்டன பதிவு பற்றி, நாளைய தலைப்பு என்ன வைக்கலாம் என்பது பற்றி விவாதம், யார் முடிவுரை போட வைக்கலாம் விவாதம்.*😴💤

😴😲💤☹ *முடிவுரை ரெடி பண்றதா இருந்தா நம்ம ஒரு நாள் வேலை சரிவர பார்க்க முடியாது. வேலை பாதிக்கும். குழு விவாதம், குழு வேலை, முடிவுரை போடுறது, குழுவை கண்காணிக்கிறது இதுலயே ஓடிரும்.*☹😕

*இடைல இடைல குழு உறுப்பினர்கள் பஞ்சாயத்து 😓.*

🙁😕☹ *ஏன்டா இதெல்லாம் பண்ணிக்கிட்டு, நம்ம வேலையை செவ்வேனேன்னு பாக்கலாமேனு தோணும்.*

🤠😎 *ஆனா யாருக்காவது எதாவது பண்ணுவோம், அப்படிங்கிற எண்ணத்துல இவ்ளோ  நாள் இந்த குழுல அட்மினா குப்பை கொட்டிட்டு இருக்கோம்.*   😎🤠

🤪😉 *இடைல சில அட்மின்கள் லவ்வர், பிரண்ட், பேமிலி மெம்பர்ஸ், விளையாட்டு இதுலலாம் கூட, சரிவர டைம் spent பண்ண முடியுறது இல்ல.*😆😅

🙁😲 *இதுல அப்போப்போ எங்களுக்கும் உடல்நிலையில் பாதிப்பு,வீட்டில் நடைபெறும் சந்தோச நிகழ்ச்சிகள்,துக்க நிகழ்ச்சிகள் இவையும் உண்டு ஆனால் அதை வைத்துக்கொண்டும், குழுபணிகள் தடைப்படக்கூடாது என்பதால் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவே விரும்புகிறோம்.*☹😰

🤠😎 *இங்கு அட்மின்களுக்கு எந்த சம்பளமும் வழங்கபடுவது இல்லை.🙅🏻‍♂🙅🏻‍♀அவர்களின் முழுமன தோடு அர்ப்பணித்து தான் பல விஷயங்களை செய்து கொண்டும் வருகின்றனர்.இதனால் சில விஷயங்களை துணியுடன்  சொல்லும் போது அதற்கு எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த பயனும் நாங்கள் அடைந்து கொள்வதும் இல்லை.யாருக்கும் ஆதரவு,எதிர்ப்பு என்பதுலாம் கிடையாது, தனிநபரை வைத்து உயர்த்தியும் ,தாழ்த்தியும்  பேசவும்  இல்லை அதனால் ஒருபயனும் எங்களுக்கும் கிடையாது,அதை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அவர்களை சில கருத்துக்களை சொல்வற்கும் எதிர்த்து கேள்வி கேட்பதற்கும் யாருக்கும் சாதகமாகலாம் ஏதும் செய்வதும் இல்லை.அவரவருக்கு தலைப்பை பற்றிய ஓங்கிய சிந்தனையே கருத்தாக வெளிப்படுத்தப்படுகிறது.இதை நல்லவிதமாக வெளிப்படுத்த அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்.மாறாக மனதில் ஒன்று வைத்து கொண்டு செயல்படக்கூடாது.நாளுக்கு நாள் நம் நட்பும்,நமது சமூக சீர்திருத்த எண்ணமும் அதிகரித்து நல்ல வளமான வழியை உண்டாக்கி செயல்பட மட்டுமே அனைவரும் பாடுபட வேண்டும்.*👍💐

*அட்மின்களின் உண்மையான செயல்பாடுகளின் சுருக்கம் இதுதான் போதுமா?🤔😏* 

*இதற்கப்புறம் தான் இங்கு நடக்கிறதெல்லாம். நன்றி💐*🤠😎

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்🎉*
     😎 *நேற்றைய சிறந்த பேச்சர்களே இன்றைய சிறந்த அட்மினானவர்கள்*😎

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

👑 *கலந்துரையாடல்2⃣*👑

😇🤩 *இன்றைய குழுவில் பங்களித்து கருத்துகளை வெளிப்படுத்திய அனைவருமே நாளைய அட்மின்கள் ஆவார்கள்.*😇🤩

*நம்பாதீங்க இவங்க பொய் சொல்றாங்க? யாருப்பா அது🤔, ஓ ஏற்கெனவே அட்மின் தரேன்னு சொன்னோம்மே அவரா🤭.(சும்மா உலல்லாய்க்கு)*😉😜🤣😂

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

😎💐 *இதுவரைக்கும் அட்மின்கள் செயல்பாடுகளினால் தான், நம் குழு இந்தளவிற்கு அதிக உறுப்பினர்களை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்துள்ளது* 😇🤗

😎🤠 *அட்மின்கள் செயல்பாடுகள் தவறாக இருந்திருந்தால் நம் குழு முன்னேற்றம் எப்பவோ பாதிப்படைந்திருக்கும்.*

😎🤠 *குழு பதிவு கூட அனைத்து குழுக்களுக்கும் உடனடியாக வாங்கிருப்பார்கள். ஆனால் நம் குழு இன்றுவரை பதிவு செய்யப்பட்டது, உறுதியளித்தும், பதிவு சான்றிதழ் வாங்காததற்கு காரணம் 🛑 மிகவும் சிந்திக்க வேண்டியது.🛑*

😎🤠 *கொடுக்க வேண்டியதை கொடுத்தால், நாளையே அனைத்தும் முடிந்து விடும்.*

*🛑அட்மின்களின் செயல்பாடு இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. லஞ்சம் கொடுக்காமல் அனைத்தும் செய்ய வேண்டும் என்ற நோக்கமே.🛑*

😎🤠 *நம் குழு பதிவே ஆகவில்லையென்றால்ம் சரி, அனைத்து பணிகளும் வழக்கம் போல தொடரும்.*

😎🤠 *அதில் அனைத்து அட்மின்களும், உறுதியாக இருக்கின்றோம். இங்கு விளம்பரத்துக்காக எதுவும் செய்யப்படுவதில்லை. சமூக நலன் மட்டுமே எங்கள் குறிக்கோள்.* 👍

😎💐 *இங்கு நிறைய நண்பர்கள் நிறைய திட்டங்களை சொல்லுவதுண்டு. இங்குள்ள அட்மின்கள் கண்டுக்காமல் இல்லை. அனைத்தையும் பரீசீலனையில் வைத்துள்ளோம்.*👍💐

😎 *என்ன ஐடியா, எப்படி செய்ய போகிறோம்? எப்படி செய்யலாம்? இதற்காக என்ன பண்ண வேண்டும் என்பதை பற்றிய தெளிவான ஆலோசனையும், விளக்கங்களும், எவ்வளவு செலவாகும், என்னென்ன தேவை என்பதை முழுமையாக தொகுத்து, அட்மின்களிடம் முறையாக  கொடுப்பதில்லை என்பதே உண்மை.*🤷🏻‍♂🤷🏻‍♀

😎 *அவரவர் மனதில் தோன்றும் அனைத்து திட்டங்களையும், நம் விழிப்புணர்ச்சி குழும எண் 9486552988 இந்த எண்ணில் தொடர்புக் கொண்டு தெளிவான விளக்கங்கள் கொடுக்கலாம்.*💐😇

😎 *முறையான ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்ச்சி குழு சார்பாக இது முடியும், முடியாது என்று தெள்ளத் தெளிவாக அனைத்து அட்மின்களுடனும் ஆலோசித்து, தெளிவான விளக்கம் கொடுக்கப்படும்.*💐😇

*நன்றி💐*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்*
*நன்குடையான் கட்டே தெளிவு*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆   
                   
*நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🤺 *அறிந்துகொள்ளவும்*🤺

*ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?*

*கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?*

🤺 *புரிந்துகொள்ளவும்*🤺

*கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.*

🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺

*கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்*

*சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫

   🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
   *9486552988*🧘🏻‍♂
      
                     👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈
       
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 

😎 *கந்தசாமி-9080669640*

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...