🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :11.03.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
*_அட்மீன் தாட்_*
●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○●○
*_நாங்கள் மருத நிலத்தை எப்படி முல்லை நிலமாக மாற்றுவது என்று சிந்திக்கும் வேலையில்._*
*_எங்கள் அரசு மருத நிலத்தை பாலைவனமாக மாற்ற அடிக்கல் நாட்டுகிறது._*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*அடுத்த மாதம் உலக நாடுகள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் அழிவின் இரண்டாம் எச்சரிக்கை என்ன?*
*பூஜ்ஜிய தினம் பற்றிய அலசல்...*
★★★★★★★★★★★★★★★
*_💝பாகம் - 1⃣💝_*
*_இன்னும் சில வருடங்களில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்... தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்... இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றெல்லாம், சமூகவளைதளங்களில் அவ்வப்போது பரவும் சில தகவல்களை நாம் பார்த்திருப்போம்._*
*_ஆனால் இப்போது முதன் முறையாக, அதுபோன்ற ஒரு நாள், நம் கண் முன்னே மிக அருகில் வந்து கொண்டிருக்கிறது. அதுவும், சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் போகும் நாள் துல்லியமாக அறிவிக்கப்பட்டு, அதை கவலையுடன் எதிர்நோக்கியுள்ளனர் கேப்டவுன் மக்கள்._*
*_ஆம், தென் ஆப்பிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமான கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம், வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன். உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது அந்த நகரம்._*
*_சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு சொட்டு மழைத்துளி கூட விழவில்லை. இதனால் பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன. கேப்டவுனுக்கு உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணை, கொள்ளளவில் கடந்த 2016ம் ஆண்டு 13 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது நீர் 10%க்கும் குறைவான நிலையில் வறட்சியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. நகருக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்துவிட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும்போது, "டே ஜீரோ" நிகழும்._*
*_'டே ஜீரோ'.. என்றால் என்னவென்று யோசிக்கின்றீர்களா? உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் "டே ஜீரோ" (Day Zero) என்று சொல்கிறார்கள்._*
*_கேப்டவுன் நகர அதிகாரிகள் "வரும் ஏப்ரல் 22-ம் தேதி கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்துபோகும்" என்று அறிவித்தனர். ஆனால் இப்போது நீரின் பயன்பாட்டை கணக்கிட்டு, ஏப்ரல் 12-ம் தேதியுடன் நீர் தீர்ந்துவிடும் என அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற ஏப்ரல் 12-ம் தேதி கேப்டவுன் நகரம் "டே ஜீரோ" நாளை எட்டுகிறது._*
*_டே ஜீரோ நிலை ஏற்பட்ட நாளிலிருந்து, நகரின் எந்தக் குழாய்களிலும் தண்ணீர் வராது. அதனால், நகர் முழுக்க 200க்கும் அதிகமான "தண்ணீர் பெறும் மையங்களை" அமைத்திருக்கிறது அரசு. வெளியிலிருந்து தண்ணீரை வாங்கி வந்து அதில் நிரப்புவார்கள். வரிசையில் நின்று பெற்றுக் கொள்ள வேண்டும், அன்றைய நிலவரப்படி ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே வழங்கப்படும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே._*
*_இனிவரும் மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன._*
*_கடந்த டிசம்பர் மாதம், ஒரு நாளைக்கு ஒருவர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று சட்டம் போடப்பட்டது. மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டே மாதத்தில், அதாவது கடந்த வாரத்திலிருந்து, ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 லிட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறது. அதிகமாக செலவழிக்கும் ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் இந்திய மதிப்பில் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 ரூபாய் வறட்சிக் கட்டணமும் வசூலிக்கிறது கேப்டவுன் நிர்வாகம்._*
*_மழை மீண்டும் கேப்டவுனில் பெய்யும்வரை, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கேப்டவுனில் கார் சுத்தம் செய்தல் மற்றும் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் விடுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு, மாநகர குடிநீர் வாரியம் கொடுக்கும் தண்ணீரை, வீட்டுத் தோட்டம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது._*
*_கிரிக்கெட் மைதான புல்தரைகளை பராமரிக்க அதிக அளவு தண்ணீர் தேவை என்பதால், கிளப் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் நடக்க இருந்த பல கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை தென்னாப்பிரிக்காவின் மேற்கு மாகாண கிரிக்கெட் சங்கமும் உறுதி செய்துள்ளது._*
*_இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஒருமாத காலமாக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் போட்டியே தண்ணீர் பஞ்ச நகரமான கேப்டவுன் என்பதால் தண்ணீர் சிக்கன நடவடிக்கையில் இந்திய வீரர்களுக்கு கூட அந்நாட்டு அரசு எந்த விதிவிலக்கும் அளிக்கவில்லை. இந்திய வீரர்கள் இரண்டு நிமிடத்துக்கு மேல் குளிக்க கூடாது என விநோத கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் போது பெய்த மழையால் கொஞ்சம் தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது அந்த தண்ணீரும் குறைந்து வருகிறது._*
*_ஒரு காலத்தில் உலகின் பசுமையான நகரில் ஒன்றாக கேப்டவுன் நகரம் விளங்கியது. ஆனால், உலக வெப்பமயமாதல், மழை பெய்யாமை, அரசின் மெத்தன போக்கு, அதைவிட மக்களின் அலட்சியம் ஆகிய காரணங்கள் ஒன்று சேர, இன்று ஒரு சொட்டுத் தண்ணீருக்காக கையேந்த உள்ளது கேப்டவுன் நகரம். கடந்த 2007ம் ஆண்டே, தென்னாப்பிரிக்க நீர் விவகாரங்கள் துறை, நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து மக்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மக்கள் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், அரசாங்கமும் தக்க நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை இதுவே இன்றைய மிகப்பெரிய பிரச்சனைக்கு காரணமாக விளங்குகிறது._*
*_இதுதான் பூஜ்ஜிய தினமா இதுக்கு தான் காலைல அவ்வளவு அலப்பரையானு தோன்றலாம். நாம் இவ்வளவு தானே என்று அசால்ட்டாக கடந்து செல்லும் ஒவ்வொரு சின்ன விஷயங்களிலும் ஒரு மிகப்பெரிய ஆபத்து ஒழிந்து கொண்டுதான் இருக்கிறது. வாருங்கள் அதையும் காண்போம்._*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :11.03.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*அடுத்த மாதம் உலக நாடுகள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் அழிவின் இரண்டாம் எச்சரிக்கை என்ன?*
*பூஜ்ஜிய தினம் பற்றிய அலசல்...*
★★★★★★★★★★★★★★★
*_💝பாகம் - 2⃣💝_*
*_கேப்டவுனில் பஞ்சம் தீரவில்லை என்றால் மக்களிடையே நீருக்காக சண்டைகள் ஏற்படும். பணம், காரை திருடும் முறை மாறி, தண்ணீரை திருடும் சூழல் உருவாகும். அப்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு காவல்துறை, ராணுவம் கொண்டு அரசு மக்களை ஒடுக்கும். இதனால் கலவரங்கள் உருவாகும். ஒரு நகரத்திற்குள் ஏற்படும் நீர் வறட்சிப் போர், மற்ற நாடுகளிடையேயான போராகவும் கூட மாறலாம்._*
*_நாம் இந்த செய்தியை வெறும் உலகச்செய்தியாக நினைத்து கடந்து போகப் போகிறோமா? நமக்குத்தான் குடிக்க தண்ணீர் எளிதாக கிடைக்கிறதே என்று அலட்சியமாக கடந்து செல்லப் போகிறோமா.? நைஜீரியா, சோமாலியா, சிரியா போன்ற பல்வேறு நாடுகள் கேப்டவுனின் முக்கால்வாசி நிலையை தாண்டிவிட்டது... ஈரானும் இஸ்ரேலும் அரை கிணறு தாண்டி விட்டது. விரைவில் இந்தியாவும் இதே நிலையை அடைய வெகு தூரமில்லை. ஆச்சரியமாக உள்ளதா வாருங்கள் தண்ணீரை பற்றிய ஆராய்ச்சி தொகுப்புகளை காணலாம்_*
*_நாம் வாழும் புவிப் பரப்பில் 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது, எஞ்சிய 30 சதவிகிதம் மட்டுமே நிலப்பரப்பாக உள்ளது. இவ்வளவு அதிகமாக நீர் இருந்தபோதிலும், தண்ணீர் தேவை என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 2040-ம் வருடத்தில் 60 கோடி குழந்தைகள், அதாவது நான்கில் ஒரு குழந்தை தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும் என்கிற தகவலை வெளியிட்டு அதிர வைத்து இருக்கிறது, ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு._*
*_நாம் வாழும் புவிப் பரப்பில் 70 சதவிகிதம் நீர் நிறைந்து இருந்த போதிலும், அவற்றில் பெரும்பான்மை நாம் பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கிறது. மூன்றில் ஒரு பங்காக நீர்ப்பரப்பு இருந்த போதிலும், அதில் வெறும் 3 சதவிகித தண்ணீர் மட்டுமே நாம் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. அதிலும், உறை நிலையில் இருக்கும் நீரைக் கழித்து விட்டுப் பார்த்தால், நாம் பயன்படுத்தக் கிடைக்கும் தண்ணீர் என்பது சொற்பமானது மட்டுமே. உலகம் முழுவதும் உயர்ந்து வரும் மக்கள் தொகை, கடுமையான வறட்சி, தொழிற்சாலை மற்றும் விவசாயம் உள்ளிட்டவைக்கு அதிகரிக்கும் தண்ணீரின் தேவை ஆகியவை காரணமாக நீர் பற்றாக்குறை கூடிக்கொண்டே செல்கிறது._*
*_ஐ.நாவின் அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், 'தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அதிகம் பாதிக்கப்பட இருப்பது குழந்தைகளே. அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிக் கொண்டு இருக்கிறது. 2040-ம் வருடத்தில், உலகம் முழுவதும் நான்கில் ஒரு குழந்தைக்கு தரமான குடிநீர் கிடைக்காத நிலைமை உருவாகும். இது போன்ற தரமற்ற குடிநீர் மற்றும் சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக குழந்தைகளின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் நிலைமை உருவாகும். தற்போது உலகில் உள்ள 36 நாடுகளில் தண்ணீர் தேவை என்பது மிகவும் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இந்த நாடுகளில் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. தண்ணீர் இல்லாமல் மக்கள் இப்போதே அவதிப்பட்டு வருகின்றனர். சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததால் மற்றும் மாசடைந்த தண்ணீரைப் பருகுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்கள் பாதிக்கிறது. இது போன்ற காரணங்களால் நாள்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 800 பேர் உயிரிழந்து வருகின்றனர்._*
*_கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளில் பலர், குடிநீர் தேவைக்காக பள்ளி செல்வதை விடவும் தண்ணீரைத் தேடி அலையும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. அதிகரிக்கும் வெப்பம், கடல் மட்டம் உயரும் சூழல், அதிகப்படியான வெள்ளப் பெருக்கு மற்றும் கடுமையான வறட்சி, உறை பனி உருகும் ஆபத்து போன்றவை காரணமாக தரமான குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்றவை கிடைப்பதில் அதிகமான சிக்கல் ஏற்படும். தேவைக்குப் போதுமான அளவு தரமான தண்ணீர் இல்லாததால் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது'' என்று தண்ணீர் தேவை குறித்து நடத்திய ஆய்வுக்குப் பின்னர் யுனிசெஃப் எச்சரித்து உள்ளது._*
*_மேலும் தண்ணீர் தீர்ந்து விரைவில் போகும் இடங்களின் பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது.👇🏻_*
*_சா பாலோ_*
*_பிரேசிலின் பொருளாதார நகரம் என்று அழைக்கப்படும் சா பாலோ மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று. சா பாலோ நகரமும் கடந்த 2015 ஆம் ஆண்டு கேப்டவுன் சந்தித்துவரும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்தது. தண்ணீர் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது 3 கோடிக்கு அதிகமான மக்களுக்கு வெறும் 20 நாட்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருந்தது. தண்ணீர் திருட்டை தடுக்க போலீஸார் பெரும் துயரப்பட்டனர்._*
*_அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டாலும் அரசின் போதிய நடவடிக்கை மற்றும் திட்டங்கள் இல்லாததால் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளது, எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது._*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :11.03.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*அடுத்த மாதம் உலக நாடுகள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் அழிவின் இரண்டாம் எச்சரிக்கை என்ன?*
*பூஜ்ஜிய தினம் பற்றிய அலசல்...*
★★★★★★★★★★★★★★★
*_💝பாகம் - 3⃣💝_*
*_2⃣ பெங்களூரு_*
*_தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வரும், இந்தியாவின் பெங்களூரு நகரமும் இந்தப் பட்டியலில் இடப்பெற்றுள்ளது. தொழில் நுட்பத்தில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் பெங்களூரின் அதீத வளர்ச்சியால் நீர் மற்றும் கழிவு நீர் அமைப்புகளை நிர்வகிக்க முடியாமல் அந்நகர நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். பெங்களூரில் நிலைமை மோசமாவதை தவிர்ப்பதற்கு பழைய குழாய் முறை தேவை என்று அரசு வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாது அந்நகரில் உள்ள 85 % தண்ணீர் குடிநீர் உபயோகத்துக்கு உகந்ததல்ல எனவும், பெங்களூரிலுள்ள பெரும்பாலான ஏரிகள் மாசசடைந்துள்ளதாக அதில் உள்ள ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உகந்ததல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது._*
*_3⃣-பெய்ஜிங்_*
*_உலக மக்கள் தொகையில் 20% சீனா கொண்டுள்ளது, ஆனால் அங்கு குடி நீர் உபயோகத்துக்கான தண்ணீர் வெறும் 7% மட்டுமே உள்ளது. கடந்த 2014 ஆம் நாண்டு 2 கோடி சீன மக்களுக்கு 145 கியூபிக் மீட்டர்ஸ் அளவு தண்ணீர் இருந்தது. அதுமட்டுமில்லாது 2000 முதல் 2009 வரை 13 % வரை சீனாவில் தண்ணீர் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொலம்பிய பல்கலைகழகம் தெரிவித்துள்ளது._*
*_4⃣-ஜகார்தா_*
*_பல கடற்கரை நகரங்களை போன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவும் கடல் நீர் மட்டம் உயர்வால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. நகரில் 1 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை பொழிந்து திறந்தவெளி கான்க்ரீட் நிலங்களால் மழைநீரை நிலம் உறிஞ்சமுடியாத நிலையில் உள்ளது._*
*_5⃣-கெய்ரோ_*
*_உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றான எகிப்தின் கைரோவில் உள்ள நைல் நதி நவீன காலத்துடன் போராடி வருகிறது. அங்கு அதிகரித்து வரும் மாசினால் அந் நகரம் விரைவில் தண்ணீர் பற்றாக்குறை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது._*
*_6⃣-மாஸ்கோ_*
*_ஒரு காலாண்டுக்கு தேவையான தண்ணீரை ரஷ்யா கொண்டிருக்கிறது. எனினும் இந்த நூற்றாண்டின் கடுமையான மாசினால் ரஷ்யா பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள தண்ணீரில் 35 % முதல் 60% சதவீதம் தண்ணீர் பயன்பாட்டிற்கான தரத்தை பெற்றிருக்க என்று தெரிவிக்கப்பட்டுள்ளது._*
*_7⃣-இஸ்தான்புல்_*
*_துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் 2016-ம் ஆண்டு ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் அளவு 1700 கன மீட்டருக்கும் குறைவாக சென்றுவிட்டது. இதனால் 2030க்குள் துருக்கியில் தண்ணீர் பற்றாக்குறை மோசமாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது._*
*_8⃣-மெக்சிகோ சிட்டி_*
*_மெக்சிக்கோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் 2 கோடி மக்களுக்கு குடி நீர் பற்றாக்குறை ஏதும் தற்போது இல்லை. ஆனால் இந்த நகரத்தில் வாழும் மக்களுக்கு சில மணி நேரங்கள் மட்டுமே தண்ணீர் அளிக்கப்படுகிறது. வெறும் 20% மக்களுக்கு மட்டுமே நாள் முழுவதும் தண்ணீர் வழங்கப்படுகிறது. குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் சுமார் 40%தண்ணீர் வரை வீணாகிறது._*
*_9⃣-லண்டன்_*
*_லண்டனில் ஆண்டுக்கு 600 மில்லி மீட்டர் மட்டுமே மழை பொழிகிறது. இந்த நிலை தொடர்ந்தால் லண்டன் கூடிய விரைவில் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்று கணிக்கடப்பட்டுள்ளது._*
*_🔟-டோக்கியோ_*
*_ஜப்பான் தலை நகர் டோக்கியோவிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் 3 கோடி மக்கள் 70 சதவீத நீர் தேவையை ஆறுகள், ஏரிகள், மற்றும் உருகிய பனி ஆகியவறற்றை நம்பியே உள்ளனர்._*
*_1⃣1⃣-மியாமி_*
*_அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள மியாமி நகரமும் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது. நன்கு மழை பெய்யும் இடங்களில் அமெரிக்க புளோரிடா மாகாணமும் ஒன்று. இருப்பினும், மியாமி நகர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளது. கடல் மட்ட உயர்வின் காரணமாக உப்புநீர் ஊடுருவல் காரணமாக அந்த நகரிலுள்ள ஆறு கிணறுகள் மூடப்பட்டுள்ளன._*
*_என்னடா இதுல தமிழகம் இல்லனு பெருமூச்சு விட தோனுதா அவசரம் வேண்டாம். தமிழகத்தின் நிலையை விவரிக்கிறேன் பிறகு யோசியுங்கள்._*
*_தமிழகத்திலும் குடிநீர் தேவை என்பது மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. இங்கு தண்ணீர் இருக்கும் நதிகள் அனைத்தும் மாசடைந்து விட்டன. பல நதிகள் காய்ந்து வறண்டு விட்டன. மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்த ஏரிகள், குளங்கள் வறண்டு காய்ந்து கிடக்கின்றன. வருங்காலங்களில் தமிழகமும் பெரும் சவாலை சமாளிக்க வேண்டிய ஆபத்தில் இருக்கிறது என்பதற்கு சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரமே சாட்சி.. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் நீர் ஆதாரம் படு பாதாளத்துக்குப் போய் விட்டது. கடந்த ஆண்டு அணைகளில் சேகரிக்கபப்ட்ட நீரின் அளவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. மழையின் அளவும் 2016-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு நோக்கும் போது சொற்பமாகவே இருக்கிறது. தற்போது நிலவும் கடுமையான வறட்சி விவசாயிகளை மட்டும் அல்லாமல் பொதுமக்களையும் வெகுவாக பாதித்து இருக்கிறது. மக்களின் குடிநீர் தேவை அதிகரித்து வரும் சூழலில், தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே செல்வது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது._*
*_தமிழகம் முழுவதும் அரசு சார்பாக நடத்தப்பட்ட நிலத்தடி நீர் குறித்த ஆய்வின் முடிவுகள் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட அளவுடன் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு அறிக்கை ஒப்பிடப்பட்டது. அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் கூட நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 2 முதல் 6 மீட்டர் ஆளத்துக்கு நீர்மட்டம் சென்றுள்ளது தெரிய வந்திருக்கிறது._*
*_குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் சராசரியாக நிலத்தடி நீர்மட்டம் 8 அடியாக இருந்தது. ஆனால், 2017 பிப்ரவரி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்துக்குச் சென்று விட்டது. கடந்த ஆண்டு 8 அடியாக இருந்த நீர்மட்டம் இந்த வருடம் 28 அடியாக பாதாளத்துக்குச் சென்று விட்டது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 22 அடியாக இருந்த நீர்மட்டம் இரு மடங்கு குறைந்து 46 அடி ஆழத்துக்குச் சென்று விட்டது. இது போலவே தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று இருப்பதால், அடுத்தகட்டமாக கடுமையான் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்கும் ஆபத்து வேகமாக உருவாகி வருகிறது._*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :11.03.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*அடுத்த மாதம் உலக நாடுகள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் அழிவின் இரண்டாம் எச்சரிக்கை என்ன?*
*பூஜ்ஜிய தினம் பற்றிய அலசல்...*
★★★★★★★★★★★★★★★
*_💝பாகம் - 4⃣💝_*
*_தமிழ்நாட்டில் இந்த வறட்ச்சிக்கு காரணம் என்னவென்று பார்ப்போம். இந்த வறட்சிக்கு என்ன காரணம் என்பதை சற்று விரிவாகக் காண்போம். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க்கா மலைப்பகுதியில் ஆரம்பித்து கர்நாடகாவில் 93-கி.மீ தூரம் பயணித்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது பாலாறு. அதன்பிறகு ஆந்திராவில் 33 கி.மீ பயணம் செய்யும் பாலாறு தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் நுழைகிறது. கர்நாடகாவிலிருந்து தண்ணீர் ஓடும் ஆறாக வரும் பாலாறு தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது வெறும் நீரோடையாக நுழைகிறது. ஆந்திராவில் பாலாறு மொத்தம் பயணிக்கும் தூரமே 33 கி.மீதான், அந்த இடைவெளிக்குள் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாலாற்றின் நதிநீர் ஒப்பந்தப்படி பாலாற்றில் தடுப்பணை கட்டுவதோ, தண்ணீரை தேக்கி வைப்பது அல்லது தண்ணீரை திசை திருப்புதல் என எதுவும் செய்யக் கூடாது._*
*_தமிழ்நாட்டிற்குள் நுழையும் பாலாறானது தமிழ்நாட்டில் 233 கி.மீ பயணித்து கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் கடலில் கலக்கிறது. ஆந்திர அரசு அதிகமான தடுப்பணைகள் கட்டியுள்ளதால் விவசாயத் தேவைக்கு தண்ணீர் இல்லாமல் பாலாறு பாழ்பட்டு காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் வருகிறது. ஏற்கனவே தண்ணீர் வராமல் தடுக்கும் ஆந்திரா பாலாற்றின் தடுப்பணைகளினுடைய அளவை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் ஜோதிநகர், சாமுண்டிப்பள்ளம் என்ற இடத்தில் 5 அடிக்கு தடுப்பணை கட்டப்பட்டிருந்தது. அதனை தற்போது 7 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்தியிருக்கிறார்கள். அதேபோல, குப்பம் அருகிலுள்ள நாயனூர் என்ற இடத்தில் 5 அடி உயரமுள்ள தடுப்பணையை 12 அடியாக உயர்த்திக்கட்டும் பணியினை ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து சோமபள்ளம், ஒக்கேல்ராவ் ஆகிய பாலாற்றுப் பகுதியில் ஏற்கனவே கட்டியிருக்கும் தடுப்பணைகளின் உயரங்களை அதிகரிக்கவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோக இனி புதிதாக இரண்டு அணைகளை கட்டவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் புல்லூர் பெரும்பள்ளம் பகுதியில் இருந்த தடுப்பணையை 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்தியது._*
*_இதற்கெல்லாம் ஆந்திர அரசு சொன்ன ஒரே காரணம், "மழைத்தண்ணீரை சேமித்து வறட்சிக் காலத்தில் பயன்படுத்தவே இந்த தடுப்பணைகளின் உயரங்களை அதிகப்படுத்துதல்" என்பதுதான். இப்போது நாயனூர் பகுதியில் தடுப்பணை உயரப்படுத்தும் பணிகள் நடைபபெறப்போவதால் வேலூர் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இந்த பாலாற்றினை நம்பி வேலூர் மாவட்டத்தில் 11,000 ஹெக்டேர் நிலங்கள் நேரடியாக பாசனத்தை பெறுகிறது. பாலாற்றின் நீரை நம்பி வேலூர் மாவட்டத்தில் 350 ஏரிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் 50 ஏரிகளும் உள்ளன. இதுபோக பவானி ஆற்றின் குறுக்கேயும் கேரளா அரசு அணை கட்ட துவங்கி விட்டது. காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைக்கூட கர்நாடகம் தருவதில்லை. இதனால் சென்ற ஆண்டு காவிரி நீரை நம்பி பாசனம் செய்த விவசாயிகள் தற்கொலை செய்ய நேர்ந்தது. இன்று டெல்டாவில் நெல் விளையும் வயல்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து சருகாக போன புற்களை மாடுகள் மேயும் அவலங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றன._*
*_முல்லைப்பெரியாறிலும் கேரளா தமிழகம் இடையே எப்போதும் பிரச்னைதான். இப்படி தமிழ்நாடு மொத்தமாக வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அடுத்த மாநிலம்தான் வஞ்சனை செய்கிறது என்றால், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாத தாமிரபரணியில் அரசு நிறுவனமான சிப்காட்டே தண்ணீரை உறிஞ்சி தொழிற்சாலைகளுக்கும், குளிர்பான நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. இதனை உயர்நீதிமன்றமே "விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாதபோது தொழிற்சாலைகளுக்கு எதற்கு தண்ணீர்" என நேரடியாக கண்டிக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் உள்ள சிப்காட்டுகளும் தண்ணீரை எடுத்து தொழிற்சாலைகளுக்கு கொடுக்கிறது. இதற்கு சாட்சி, காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில் ஏரிக்குள் சிப்காட் அமைந்துள்ளதுதான். இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்களையும் அரசுப் பொதுபணித்துறை முறையாக தூர்வாரவில்லை. நகரக் கட்டமைப்பு என்ற பெயரில் நதிகள், ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றை அழித்து விட்டது. இது தவிர பருவமழையும் தமிழகத்தை ஏமாற்றிவிட்டது._*
*_கேரள வனப்பகுதியில் 6 தடுப்பணைகளை கேரள அரசு கட்டிவருகிறது. அட்டப்பாடி, மஞ்சக்கண்டி, தேக்குவட்டை, பாடவயல், சீரக்கடவு, சாவடியூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் வேலை துரிதமாக நடக்கிறது. மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்ற பிறகுதான் எந்த வனப்பகுதியிலும் கட்டுமானப் பணிகளை செயல்படுத்த முடியும். ஆனால், கேரள அரசு இந்த துறையின் அனுமதி பெறாமல் வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டிவருகிறது._*
*_கேரளா ஒரு மழை மாநிலம், ஆனால், தமிழ்நாடு அப்படி அல்ல. இது ஒரு மழை மறைவு மாநிலம். மேற்குத் தொடர்ச்சி மலை நதிகளை நம்பித்தான் பெரும்பாலான மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்தேவை இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும், கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சந்திக்கும் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மலைச்சரிவில் உள்ள அமைத்திப் பள்ளத்தாக்கு என்கிற இடத்தில்தான் பவானி நதி உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இந்த நதி கேரளாவுக்குள் 35 கி.மீ. தூரம் மேற்கு நோக்கி பயணித்த பிறகுதான் தமிழ்நாட்டு வனப்பகுதியில் நுழைகிறது. அது தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் உள்ள பில்லூர் மின் அணையில் நிரம்பி வழிந்து பவானி சாகர் அணையை வந்தடைகிறது. பில்லூர் அணையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது._*
*_அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் பாசன அணை, கொடிவேறி கால்வாய் ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசனம் கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால், ஈரோடு மாவட்டத்துக்கு உலகபுகழ் சேர்க்கும் மஞ்சள் விவசாயம் அழிந்து போய்விடும்._*
*_பவானி சாகர் அணைக்கட்டப்பட்டு 61 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் 6 முறை மட்டும்தான் இந்த அணை முழுமையாக நிறைந்துள்ளது. எப்போதுமே பற்றாக்குறை பாசனம்தான் நடந்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமான இறுதித்தீர்ப்பில், காவிரியில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்கவேண்டும் என்று ஆணை உள்ளது. கபினி அணையில் இருந்து 21 டி.எம்.சியும், பவானியில் இருந்து 6 டி.எம்.சியும். அமராவதியில் இருந்து 3 டி.எம்.சி.தண்ணீரும் வழங்க வேண்டும் என்கிறது அந்த தீர்ப்பாணை. ஆனால், பவானி நதி பயணிக்கும் 35 கி.மீ. கேரளா எல்லைப்பகுதியில் வசிக்கும் பலரும் நீர் ஏற்று பாசனமுறையில் ஆற்றில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீரை முறை தவறி எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 2,500 ஏக்கர் பாசனம் செய்கிறார்கள்._*
*_இந்தியா ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளது. உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடு இந்தியா. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 230 க்யூபிக் கிலோமிட்டர் அளவிலான நிலத்தடி நீர் பயன்படுத்துகிறது. இது உலகின் நிலத்தடி நீர் பயன்பாட்டில் கால்பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நிலத்தடி நீர் இந்தியாவில் குறைந்து வருவதும் இந்தியர்களுக்கு சிக்கலான விஷயமாக உருவெடுத்துள்ளது._*
*_இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மழைக்காலத்துக்கு முன்பு தரையிலிருந்து 20 அடிக்கும் கீழாக தண்ணீர் இருக்கும் கிணறுகள் ராஜஸ்தானிலும், பஞ்சாப்பிலும் அதிகமாக உள்ளன. 2011 மற்றும் 2015-ம் ஆண்டு தகவல்களை ஒப்பிட்டால் பெரும்பாலான மாநிலங்களில் 2011-ம் ஆண்டு இருந்ததைவிட 2015-ம் ஆண்டு வறட்சி காரணமாக எல்லா மாநிலங்களிலும் இந்த விகிதம் என்பது அதிகரித்துள்ளது._*
*_இந்தியாவில் குடிநீர் பிரச்னை அதிகரித்தே வருகிறது. 7.3 கோடி மக்களுக்களுக்கு குடிநீர் சரியான சுகாதாரத்துடன் சென்று சேர்வதில்லை. இதனால் பல்வேறு குடிநீர் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதில் பீகார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவைதான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன, நம் நாட்டில் சராசரி மோசமான குடிநீர் தரம் 12.3 சதவிகிதமாக உள்ளது. இதைவிட தமிழகத்தின் குடிநீர் தரம் மிகவும் மோசமாக 13.5 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது._*
*_இப்படி பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை குடிநீருக்காக முன் வைக்கும் நமக்கு, இன்னோரு புள்ளிவிவரமும் அதிர்ச்சி தரும் விதமாக உள்ளது. 2015-ம் ஆண்டில் விற்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களின் விற்பனையை காட்டிலும் 2016-ல் தண்ணீர் பாட்டில்களின் விற்பனை அதிகமாக உள்ளது._*
*_2015-ம் ஆண்டில் 5.6 பில்லியன் லிட்டர் அளவு தண்ணீர் பாட்டில்களின் விற்பனை இருந்துள்ளது. 2016-ல் இந்த அளவு 6.8 பில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது. இது கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ் தயாரிப்புகளை விட அதிகம். குடிநீரின் தரம் ஒரு பக்கம் குறைந்து கொண்டே வரும் நிலையில் தரமான குடிநீர் பெரிய நிறுவனங்களால் வர்த்தகமாக்கப்படுகிறது. இந்தியாவில் தண்ணீர் மட்டும் ஆண்டுக்கு 3000 கோடி வர்த்தகம் ஏற்படுத்தும் துறையாக உள்ளது. குளிர்பானங்களும் சேர்த்து இந்தியா 14000 கோடி தண்ணீர் வர்த்தகத்தை செய்யும் நாடாக உள்ளது._*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :11.03.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*அடுத்த மாதம் உலக நாடுகள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் அழிவின் இரண்டாம் எச்சரிக்கை என்ன?*
*பூஜ்ஜிய தினம் பற்றிய அலசல்...*
■□■□■□■□■□■□■□■□■□
*_💝பாகம்-5⃣💝_*
*_மேலும் காவிரி டெல்டா பகுதியில் உப்பு நீர் உள்ளே புகுவதால் மாங்குரோவ் காடுகள் அதிகரித்து வருகிறது. 1970 முதல் 2014-ம் ஆண்டுவரையிலான காலத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிர்ச்சாகுபடி பரப்பரளவு 27 சதவிகிதம் குறைந்திருக்கிறது. தரிசு நிலம் 13 மடங்காக அதிகரித்திருக்கிறது. பருவநிலை மாற்றமும் தண்ணீர் பற்றாக்குறையும் இதற்குக் காரணங்கள். அத்தோடு காவிரி டெல்டா பகுதியில் அலையாத்திக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் 14 மடங்கு அதிகரித்திருக்கின்றன. இது விவசாய நிலத்தை பாதிக்கும் விஷயமாகும். ஏனெனில் உப்பளங்களிகளில்தான் அலையாத்திக் காடுகள் வளரும். ஆக, காவிரி டெல்டா பகுதி மெல்ல மெல்ல கடல் நீர் புகுந்து உப்பளங்களியாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்ந்தும், இதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. மேலும், இந்தப் பகுதிகளில் இறால் பண்ணைகள் அதிகரித்துள்ளன. இது அந்தப் பகுதியை மேலும் உப்புப்பிரதேசமாக்கி வருகிறது._*
*_அலையாத்தி காடுகள் அதிகரிப்பது காவிரி டெல்டாவுக்கு நல்ல சகுனம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதியில் கால்நடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. விவசாயத்துக்கும் கால்நடைகளுக்குமான உறவு அறுபடுவதையே இது காட்டுகிறது._*
*_ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22-ம் தேதி, 'உலகத் தண்ணீர் தினம்' கொண்டாடப்படுகிறது. கடந்த வருடம் தண்ணீர்ப் பிரச்னை குறித்து யுனெஸ்கோவின் இயக்குநர், ஐ.நா-வில் அளித்துள்ள அறிக்கையில், 'கழிவுநீரை மீள்சுழற்சி செய்வதுதான் தண்ணீர்ப் பிரச்னைக்கான தீர்வாக அமையும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஐ.நா சபை வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், ''இரண்டில் ஒரு பகுதி மக்கள், வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். அதில், பாதி பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். 2030-ம் ஆண்டுகளில் தொழிற்சாலைகள், மின்சாரம், மக்கள் பயன்பாட்டுக்கு, தற்போதைய தண்ணீர்த் தேவையைவிட 50 % அதிகம் தேவைப்படும்._*
*_வளர்ந்த நாடுகள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் இருந்து அதிகமான கழிவுநீர் வருவதால், இது பெரும் சவாலாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இருந்துதான் 70% கழிவுநீர் உற்பத்திசெய்யப்படுகிறது. ஆண்டுக்கு எட்டு லட்சம் மக்கள் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதால், இறக்கின்றனர். தண்ணீர் தொடர்பான பிரச்னைகளால் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடத்துக்கு 35 லட்சம் மக்கள் இறக்கின்றனர். ஹெச்.ஐ.வி மற்றும் கார் விபத்துகளால் இறப்பவர்களைவிட இது அதிகமாகும்._*
*_அதனைப் புரிந்து கொண்டு அவசியம் இல்லாமல் தண்ணீரை வீணாக்குவது, அணைகளில் தண்னீரைச் சேமிக்காமல் கடலில் கலக்க விடுவது, ஆலைகளுக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் கொடுத்து வீணடிப்பது போன்றவற்றை தவிர்க்க இப்ப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லாவிட்டால், வருங்காலம் தண்ணீர் கிடைக்காமல் நாமும் தவிப்பதுடன், நமது சந்ததியையும் துன்பத்துக்கு உள்ளாக்கும் ஆபத்து காத்திருக்கிறது. அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விட்டு செல்லும் மிகப்பெரிய சொத்து இயற்க்கை வளம் மட்டுமே._*
*இனியாவது கர்நாடகம்,கேரளம்,ஆந்திரம் போன்ற மாநிலங்களிடம் இருந்து உரிமைகள் வேண்டும் வேண்டும் என்று கத்திக்கொண்டு இல்லாமல் அதற்க்கு மாற்றாக நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து,மழைநீர் சேகரிப்பு திட்டங்களை அனைத்து வீடுகளிலும் மக்களே முன்வந்து சேகரிக்க முயற்ச்சி செய்வோம்.*
*நம் தண்ணீர் பஞ்சத்தை மட்டுமல்லாமால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீரை சேர்த்து வைப்போம்.*
*தானமும் தர்மமும் மட்டுமே நமக்கு மிஞ்சியது ஆனால் நீர் என்பது நமக்கு கொஞ்சம் மற்றவர்களுக்கு கொஞ்சம் தான்,நீர் என்பது யாருக்கும் சொந்தமானது அல்ல அது இயற்கை கொடுத்த வரம்.*
*_போமழைநீர் சேகரிப்போம் குடிநீர் பஞ்சத்தை போக்குவோம்._*
*_💝 நன்றி💝_*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *சங்கிலி பூத்தான்*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🏅 *@SP.Vignesh* 👏👏
🏅 *@Raama* *ஆண்டவன் கட்டளை* 👏👏
🏅 *@Bismi @R.j* 👏👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🏅 *@மணி நித்யா 🌸🌿🎈* 👏👏
🏅 *@F❤M👍, @ghouse*👏👏
🏅 *@rajajjs, @இசையருவி*👏👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
*_கருத்து சொல்ற அளவுக்கு நாங்க பெரிய ஆளுங்க இல்லைங்க ஜி😜 அதற்க்கு பதிலா ஒரு விளக்கம் கொடுக்க போகிறோம்._*
*_உலகின் இரண்டாம் அழிவின் எச்சரிக்கை பற்றி இன்று விவாதித்தோம் இதுல நிறைய பேருக்கு தோன்றலாம் இது இரண்டாம் எச்சரிக்கை என்றால் முதல் எச்சரிக்கை என்னவென்று தோன்றலாம். அதன் விளக்கம் தான் இவை👇🏻_*
*_உலகின் முதல் எச்சரிக்கை உணவு பஞ்சம்_*
*_கெவின் கார்ட்டர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய காலத்தில் ஆப்பிரிக்காவில் நிறப்பாகுபாட்டு அரசியல் மேலோங்கியிருந்தது. இளம் வயதிலேயே இவர் இந்த பாகுபாட்டை வெறுப்பவராக இருந்தார்._*
*_கத்தோலிக்கப் பள்ளி ஒன்றில் உயர்நிலைப் பள்ளியை முடித்தபின்பு மருந்தாளுநர் (pharmacist)ஆகும் பொருட்டு மருந்தாளுமையியல் படித்தார். ஆனால் அப்படிப்பபைப் பாதியிலேயே விடும்படி ஆயிற்று. இதனால் இவர் இராணுவ சேவைக்கு ஆட்படுத்தப்பட்டார். தரைப்படையை (infantry) வெறுத்த இவர் தொழில்முறை வான்படையில் இணைந்தார். 1980 ஆம் ஆண்டில் ஓர் உணவு விடுதியில் கறுப்பினத்தைச் சேர்ந்த உணவு பரிமாறுபவர் ஒருவர் கொடுமையான முறையில் இராணுவ வீரர்களால் நடத்தப்படுவதைக் கண்டு அவருக்காகப் பரிந்து பேசினார். அதனால் மற்ற இராணுவ வீரர்கள் இவரை மிக மோசமாகத் தாக்கினர். பிறகு இவர் வானொலி வர்ணணையாளராக "டேவிட்" என்ற புதியபெயரில் புதுவாழ்வைத் துவக்கினார். எதிர்பார்த்ததை விட இது மிகக் கடினமாக இருந்ததால் மனத்தளர்ச்சியுற்று தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இறுதியாக ஒரு புகைப்படப் பத்திரிக்கையாளராக மாறினார்._*
*_போரினால் பாதிக்கப்பட்ட சூடான்நாட்டில் 1993 ஆம் ஆண்டில் கார்ட்டர் ஒரு காட்சியைக் கண்டு நின்றார். உணவு வழங்கும் இடத்தை நோக்கி மெல்லிய முனகலுடன் உடல் நலிந்த பெண் குழந்தையொன்று வழியில் போராடிக் கொண்டிருந்தது. மேலும் நடக்க வலுவில்லாமல் குழந்தை ஓய்வெடுத்த வேளையில் கழுகு ஒன்று அவ்விடத்தில் வந்தமர்ந்தது. கழுகு தன் இறக்கையை விரிக்குமென கார்ட்டர் 20 நிமிடம் காத்திருந்தார். அது விரிக்கவில்லை. எனவே குழந்தையும் கழுகும் இடம்பெறும் வகையில் இக்கோரக்காட்சியைப் புகைப்படமாக எடுத்துவிட்டுக் கழுகை விரட்டினார்._*
*_இந்த புகைப்படம் நியூயார்க் டைம்ஸ்நாளிதழில் முதன் முறையாக 1993 ஆம் ஆண்டு மார்ச் 26 இல் வெளியானது. அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக் குழந்தைக்கு என்னவாயிற்று என நாளிதழ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர். நாளிதழில் ஆசிரியர் குறிப்பாக 'குழந்தைக்கு நடந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் இருந்தது. ஆனால் அவளின் இறுதி முடிவு என்ன என்பது அறியப்படவில்லை' என்று வெளியிடப்பட்டது. இப்புகைப்படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாயிற்று._*
*_ஃபுளோரிடாவில் இருந்து வெளியான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ்நாளிதழ் 'குழந்தையின் துன்பத்தைப் போக்காமால் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சைச் சரி செய்து கொண்டிருந்த கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத் தான் இருக்க முடியும். காட்சியின் இன்னொரு கழுகு' என்று கடுமையாக எழுதியிருந்தது._*
*_1994 ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் கார்ட்டருக்கு இப்புகைப்படத்திற்காக புகைப்படப்பத்திரிக்கைத் துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது._*
*_1994 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் நாள் கார்ட்டர் தனது மகிழுந்தைத் தான் சிறு வயதில் விளையாடிய ஆற்றங்கரையருகில் கொண்டு நிறுத்தினார். மோட்டார் புகைபோக்கிச் செயல்முறையைப் பயன்படுத்திக் கார்பன் மோனாக்சைடு நச்சால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். மரணத்தின் போது அவருக்கு வயது 33. தான் தற்கொலை செய்யும் முன்பு அவர் குறிப்பிட்ட சில வரிகள்_*
*_நான் மனத்தளர்ச்சி அடைந்துள்ளேன். ...தொலைபேசி இல்லாமல்....வாடகைக்குப் பணம்; இல்லாமல்....குழந்தை ஆதரவுக்குப் பணம் இல்லாமல்.....கடனடைக்கப் பணம் இல்லாமல்....பணம்!!!..... நான் கொலைகளின் தெளிவான நினைவுகளாலும் பிணங்கள், கோபம் மற்றும் வலியினாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். பசியால் வாடும் மற்றும் காயம்பட்ட குழந்தைகளாலும். பாதிக்கபட்டுள்ளேன் அதானல் என்னுடைய முடிவை நான் எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்._*
*_அன்று இவர் எடுத்த புகைப்படம் உலக நாடுகள் அதிர்ச்சியை உள்ளாக்கியது. உணவு பஞ்சத்தின் வலியை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர் அன்று எடுத்த புகைப்படம் தான் உலகின் அழிவின் முதல் எச்சரிக்கையாகும். அதன்மூலம் இன்று பல கோடி பேர் உயிர் காப்பாற்றபட்டுள்ளது._*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து*
*உள்நின்று உடற்றும் பசி.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.*
💫💫💫💫💫💫💫💫💫💫💫
*_💝முடிவுரை தொகுப்பாளர்கள்💝_*
*_😍மணி மாதேஷ் -_8428073724*
*_💝உதயா யூவா💝 - udayayuva94@gmail.com_*
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment