Tuesday, 13 March 2018

ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு மானியம் ரத்து, சரியானதா

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்ச்சி காக*🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :புதன்*🌹

🌹 *தேதி :17.01.2018* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*இடது பக்கமாக எச்சில் துப்புங்கள் அல்லது உங்கள் பாதங்களுக்கு இடையில் துப்பி மண்மூடி மறைத்து விடுங்கள்.*

*வலது பக்கமோ அல்லது மேற்கு திசையிலோ துப்பாதீர்கள்.*

💐 *~நபிகள் நாயகம்*💐

😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★

*நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை🤷🏼‍♂.*

*யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே, நீ கோவில் சென்றதற்கு சமம்...!!*

🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
         📣 *தலைப்பு*📣
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁

*ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு மானியம் ரத்து, சரியானதா* 

🕋🕌🕋🏛✅🕋🕌🕋🏛✅🕋

🕌 *ஹஜ் என்பது என்ன?தெரியாதவர்களுக்காக சில விளக்கங்கள்👐🏼*

🕋 *ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.*🤗

🤔 *அது என்ன ஐம்பெரும் கடமைகள் வாங்க அதயும் பார்த்துடுவோம்🖐🏼*

🕋 *இஸ்லாம் மார்க்கம் ஐந்து கடமைகளை ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடைமையாக்கி உள்ளது. அவற்றில் சில அனைவரும் செய்தல் வேண்டும்.*🤷🏻‍♂

*🔴இன்னும் சில ஒரு குறிப்பிட்ட சாரார் மீது கடமையாக்கி உள்ளது🔴. (நோட் திஸ் ஒரு குறிப்பிட்ட சாரார் பின்னடி விளக்கங்கள் அளிக்கப்படும்).*

🤷🏻‍♂🕌 *அதாவது, யாரேனும் ஒரு முஸ்லிம் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்போது அவை அவர் மீது கடமையாகி விடுகிறது.*🤷🏻‍♂

🕋 *இஸ்லாத்தின் அந்த ஐந்து தூண்களும் பின்வருமாறு :*

*1⃣கலிமா / ஈமான் (இறை நம்பிக்கை)*

*2⃣தொழுகை*

*3⃣நோன்பு*

*4⃣ஸக்காத்*

*5⃣ஹஜ்*

*1⃣ஈமான் / கலிமா*

🕋 *ஈமான் (இறைநம்பிக்கை) என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். ஒருவரை முஸ்லிமா இல்லையா என்பதை  தீர்மானிக்கும் அடிப்படை காரணியாகும்.🤷🏻‍♂ அதாவது ஒருவர் இறைநம்பிக்கை கொள்ளும்போது அவர் முஸ்லிமாக மாறுகிறார். இறை நம்பிக்கை இன்றி செய்யும் எந்த நல்ல வணக்கங்களும் இறைவனால ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.*🤷🏻‍♂

*2⃣தொழுகை*

🕋 *​​ஐந்து நேரம் தொழுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.👍 தொழுகை என்பது ஒரு அடியான் தான் இறைவனுடன் செய்யும் சம்பாஷனையாகும்.தொழுகை இறைவனுக்கு நன்றி செலுத்தி செய்யப்படும் ஒரு வணக்கமாகும்.👍 இஸ்லாத்தின் அடிப்படையில் ஒருவர் தொழுதால் அவருக்கு இறைவனிடமிருந்து நன்மைகள் கிடைக்கும். ஒருவர் தொழுகையை விட்டால் இறை தண்டனை கிடைக்கும்.*🤷🏻‍♂

🕋 *ஐந்து நேர தொலுகைகளாவன :*👇

👉 *1.பஜ்ர் — விடிகாலை தொழுகை 2 ரக்அத்*

👉 *2.லுஹர் — நண்பகல் தொழுகை 4 ரக்அத்*

👉 *3.அஸ்ர் — பிற்பகல் தொழுகை 4 ரக்அத்*

👉 *4.மஃரிப் — மாலை நேர தொழுகை 3 ரக்அத்*

👉 *5. இஷா — இரவுநேர தொழுகை 4 ரக்அத்*

*3⃣நோன்பு*

🕋 *ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு வயது வந்த ஆண், பெண் முஸ்லிமின் மீதும் கடமையாகும்.👍 அதாவது, சூரிய உதயத்தில் இருந்து சூரிய மறைவு வரை எதுவும் உண்ணாமலும், குடிக்காமலும், நோன்பை முறிக்க கூடிய எந்தவொரு காரியத்தை செய்யமாலும் இருப்பதாகும்.*🤷🏻‍♂

*4⃣ஸகாத்*

🕋 *ஸகாத் என்பது செல்வம் படைத்தவர்கள் தமது செல்வத்தில் குறிப்பட்ட ஒரு வீதத்தை முறைப்படி கணக்கிட்டு ஏழை எளியவர்களுக்கு தர்மமாக கொடுப்பதை குறிக்கும். ஸகாத் எல்லோரின் மீதும் கடமை அல்ல. 🔴இஸ்லாமிய சட்டத்தில் குறிப்பிட்டப்படி, குறித்த அளவை விட ஒருவர் செல்வம் படைத்திருக்கும்போது அவரின் மீது ஸகாத் கடமையாகிறது.🔴*

*5⃣ஹஜ்*

🕋 *ஹஜ் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். 👍ஹஜ் என்பது சவுதி அரேபியாவிலுள்ள புனித மக்கமா நகரத்தை நோக்கி துல்ஹஜ் மாதத்தில் புனித யாத்திரை மேற்கொள்வதாகும்.*🤷🏻‍♂

*🔴இதுவும் எல்லோர் மீதும் கடமை இல்லை. ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தேவையான உடல் மற்றும் பொருளாதார வசதி படைத்தவர்கள் மீது மட்டுமே இது கடமையாகும். வாழ்வில் ஒரு தடவையேனும் இக்கடமையை நிறைவேற்றுவது வசதி படைத்தவர்கள் மீது கட்டாய கடமையாகும். வசதி படைத்தும் ஒருவர் இக்கடமையை நிறைவேற்றவில்லை எனில் அவர் குற்றவாளி ஆவார்🔴.*

☪  *ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். உடல் நலமும் பண வசதியும் உள்ள இசுலாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் செய்ய வெண்டும். ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் (அல்லாஹ்) அர்ப்பணிப்பதாகக் கருதப்படுகிறது.🤷🏻‍♂ துல்ஹஜ் மாதத்தின் 8-ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை சவூதி அரேபியாவிலுள்ள மினா, அறஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்குவது, அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது, மக்கா நகரிலுள்ள திருக் கஃபாவைத் தவாஃப் செய்வது ஆகியவை ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும். இந்த புனிதப் பயணமானது ஹிஜ்ரி நாட்காட்டியின்படி 12 வது மாதமான துல்ஹஜ் 8 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும். ஹிஜ்ரி நாட்காட்டி சந்திர நாட்காட்டி என்பதால், ஆங்கில நாட்காட்டியை விட இது பதினொரு நாட்கள் குறைவாக இருக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியில் இந்த நாட்கள் மாறி வரும். இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு இஸ்லாமியரும்  இஹ்றாம் என்னும் புனித நிலையில் இருக்க வேண்டும்.*🤷🏻‍♂

☪🕋 *ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு மானியம் ரத்து, சரியானதா?*⁉

*🔴2022ஆம் ஆண்டிற்குள் ஹஜ் மானியத்தை ரத்து செய்யும்படி கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒன்று உத்தரவிட்டது.🔴*

🕋🕌 *இஸ்லாமியர்களின் புனிதக் கடமையான ஹஜ் பயணத்திற்கு, 1932 ஆம் ஆண்டிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 🤷🏻‍♂1959ல் இதற்கான சட்டம் திருத்தப்பட்டு, மத ரீதியான கடமைகளுக்காக சௌதி அரேபியா, சிரியா, ஜோர்டன், இரான், இராக் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு மானியம் அளிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.*👍

🕋🕌 *1973ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணிகள் பயணம் செய்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 பேர் இறந்துவிடவே, கப்பல் பயணத்தை ரத்து செய்த இந்திய அரசு, விமானம் மூலம் மட்டுமே பயணம் செய்ய அனுமதித்தது. அதற்கேற்ற வகையில் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டது.*⬆

☪🕋 *2012 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 836 கோடி ரூபாய் அளவுக்கு இந்த மானியத்திற்கென ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மானியம் சுமார் 400 கோடியாக குறைக்கப்பட்டிருந்தது. ⬇2017ஆம் ஆண்டில் மானியம் பெற்று 1.25 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர்.*🤷🏻‍♂

🕋☪ *இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட மாட்டாது🙅🏻‍♂ என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார்.*🤷🏻‍♂

🕋☪ *சிறுபான்மையினரை மகிழ்விக்கும் போக்கைக் கைவிட்டு, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டாலும், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவாக இந்தியாவிலிருந்து ஒன்றேமுக்கால் லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செய்வார்கள் என செய்தியாளர்களிடம் பேசிய நக்வி தெரிவித்தார்.*🤷🏻‍♂

*🔴ஹஜ் மானியமாக அளிக்கப்பட்டு வந்த நிதி, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் நக்வி தெரிவித்தார்.🔴*

🕋☪ *இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் ஹஜ் பயணிகளை அனுப்புவதற்கு சௌதி அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இதற்கான நடைமுறைகளை இரு அரசுகளும் இறுதி செய்ய வேண்டியுள்ளது என்றும் நக்வி தெரிவித்துள்ளார்.*🤷🏻‍♂

*✍🏻எல்லாம் சரி, ஆனால் பணத்தை கரெக்ட்டா சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களோட கல்விக்கு போயி சேர்ந்துடுமா?🤔 சேர்ந்தா நல்லது தான்.🙌🏼*

*👉🏼சரி அரசியல் தலைவர்கள் என்னென்ன கருத்து தெரிவிக்கின்றனர் என்று பார்ப்போம்👀*

*1⃣தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஜவாஹிருல்லா.*

🕋☪ இந்த மானியத்தைப் பெற்று ஹஜ் பயணம் மேற் கொள்வோருக்கான விமானக் கட்டணமாக (மும்பை - ஜெட்டா - மும்பை )கடந்த ஆண்டு 58 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போது நீங்கள் அந்த மார்க்கத்தில் விமானப் பயண டிக்கெட் வாங்கினால் சுமார் 30 ஆயிரம் ரூபாய்தான் வருகிறது. *🔴ஆக, ஹஜ் யாத்திரை மானியம் என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்குத்தான் பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது என்கிறார். இப்போது ஹஜ் மானியத்தை ரத்து செய்திருப்பதால், இனிமேலும் ஏர் இந்தியாவில் பயணம் செய்ய யாத்ரீகர்களை வலியுறுத்தக்கூடாது என்கிறார்.🔴* இந்த மானியத்தை ரத்துசெய்திருக்கும் அரசு, கும்பமேளாக்களுக்கு செலவுசெய்யும் ஆயிரக்கணக்கான கோடிகளை நிறுத்துமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.🤔 மானியத்தை ரத்துசெய்வதால் சேமிக்கப்படும் பணத்தை சிறுபான்மையினரின் கல்விக்காக செலவழிக்கப் போவதாகச் சொல்வதை ஏற்கவில்லை.🙅🏻‍♂ அவ்வளவு அக்கறை இருந்தால் மிஸ்ரா, சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதுதானே? என்று கேள்வியெழுப்புகிறார்.⁉

*✍🏻ஆக மொத்தம் சரினு ஒத்துக்கிட்டாரு😀*

*2⃣இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெ. அப்துல் ரஹீம்.*

🕋☪ *ஆனால், இந்த அறிவிப்பை இந்திய தேசிய லீக் கட்சி வரவேற்றுள்ளது. ஹஜ் யாத்திரை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே இஸ்லாத்தில் கட்டாயம். ஆகவே இந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தியிருப்பதில் எந்த வருத்தமும் இல்லை.*🙅🏻‍♂ இந்த மானிய உதவியை வைத்துத்தான் இந்து அமைப்புகள், நாங்கள் அரசிடம் பிச்சையெடுத்து ஹஜ் போவதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தன. *இப்போது மானியம் நிறுத்தப்பட்டிருப்பதால் அந்த அவப்பெயர் எங்களுக்கு நீங்கும். அதை நாங்கள் வரவேற்கிறோம்.*🤗☪

*✍🏻இவரும் ஓகே சொல்லிட்டாரு நெக்ஸ்ட்🙌🏼*

*3⃣தேமுதிக விஜயகாந்த்*

🕋☪🏛மத்திய அரசு ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கான மானியத்தை திடீர் என்று ரத்து செய்தது அனைவரையும் சிந்திக்கவைத்துள்ளது.🤔 *🔴ஒரு அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும். மேலும் மானியத்தை நிறுத்துவதென்றால் அனைத்து மதத்திற்கும் இந்த நிலை பொருந்தும். அரசாங்கம் வழங்கும் மானியம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமாக வழங்கவேண்டும்.🤷🏻‍♂ மதங்களை பார்த்து மானியத்தை வழங்குவதை தே.மு.தி.க. என்றைக்கும் வரவேற்காது.🔴* பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு திடீர் என்று ரத்து செய்துள்ளதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.🤷🏻‍♂

*✍🏻முக்கியமான பாயிண்ட்டை மேல சொல்லிட்டு, கீழே தடம் புரண்டுட்டாரு😬*

*4⃣பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்*

☪🕋 இஸ்லாமியர்களின் ஹஜ் புனிதப் பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. ஹஜ் பயணத்திற்கான வசதிகளை அதிகரிப்பதற்கு பதிலாக செலவு குறைப்பு என்ற பெயரில் வசதிகளைக் குறைப்பது பிற்போக்கானது. ஹஜ் பயணத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.450 கோடி செலவழிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இது ரூ.250 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் அரசுக்கு ரூ.250 கோடி மிச்சமாகும். ஆனால், ஹஜ் பயணிகளுக்கு அதைவிட 10 மடங்கு அதிக தொகையும், தேவையற்ற உடல் வலி, பாதுகாப்பு அச்சுறுத்தல், மன உளைச்சல் ஏற்படும். இதற்கெல்லாம் அரசு காரணமாகக்கூடாது. இஸ்லாமியர்களின் புனிதக் கடன் ஹஜ் பயணம் தான் என்பதாலும், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு தொலைதூர கடல் பயணம் ஒத்துவராது என்பதாலும் ஹஜ் பயணிகளை முன்பிருந்தவாறே விமானம் மூலம் அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வரும் வகையில் நாட்டின் ஹஜ் கொள்கையை அரசு மாற்றியமைக்க வேண்டும்.🤷🏻‍♂

*✍🏻தவறுனு சொல்றாரு, ஆனா அன்புமணி இவங்க கூட கூட்டு வச்சி தான் ஜெயிச்சாரு😄*

*5⃣தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்*

☪🕋 இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக கடந்த ஆண்டு வரை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை ரத்து செய்து விட்டு சிறுபான்மையின பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்று கூறுவது நியாயமில்லை.🤷🏻‍♂

*✍🏻இவரு ரொம்ப நியாயமா தான் நடந்துருப்பாரு, நியாயத்தை பத்தி பெருசா பேச வந்துட்டாரு😆*

*6⃣மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி*

☪🕋 ஹஜ் பயணிகளுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்வோம் என அறிவித்திருப்பது வெறுப்பு அரசியலின் உச்சத்தை வெளிகாட்டுவதாக இருக்கிறது. இந்த மானிய தொகை முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்கு செலவிடப்படும் என அறிவித்திருப்பது பிரச்சினையை திசை திருப்பும் செயலாகும். எனவே மத்திய அரசு வெறுப்பு அரசியலை நியாயப்படுத்தாமல் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.🤷🏻‍♂

*✍🏻இவரும் இஸ்லாம் சார்ந்தவர் தான். முழுதாக தெரிஞ்சி அறிக்கை விடுறாரா? இல்ல எதிர்க்கணும்னே, எதிர்க்கிறாரானு தெரியல.🤷🏼‍♂*

*7⃣தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்*

🕋☪ இஸ்லாமிய பெருமக்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வந்த ஹஜ் பயணத்திற்கான மானியத்தை சிறுபான்மை மக்களுக்கு தொல்லையும், சிரமமும் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே பழி வாங்கும் உள்நோக்கத்தோடு மோடியின் மத்திய பா.ஜ.க. அரசு குறி வைத்து இத்தாக்குதலை தொடுத்துள்ளது.🤷🏻‍♂

*✍🏻தலைமை காங்கிரஸ்க்கு விசயம் தெரியுமா? இல்ல அவங்களுக்கு தெரியாம இவர் அறிக்கை விட்டுட்டாருனு தெரியல😴🤦🏼‍♂*

*8⃣பாஜக பரம எதிரி, மத்திய காங்கிரஸ் என்ன சொல்லுது*

*🔴ஹஜ் பயணத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது🔴.* ☪🕋ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மையினரை திருப்திப் படுத்துவதை கைவிட்டு, உரிய கவுரவத்துடன் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.மேலும் ஹஜ் பயணத்துக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை, சிறுபான்மையின் பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கு செலவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், *🔴மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் விலக்கிக் கொள்ள 2012 ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார். ஹஜ் மானியத்தால் பயணிகள் பலனடையவில்லை என்றும், விமான நிறுவனங்களே பயன் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.🔴*

*✍🏻பாஜக, காங்கிரஸ் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஒண்ணு சேர்ந்து ஆதரவு தெரிவிக்கிறாங்க. இவங்களே விசயத்துல ஒண்ணு சேர்ந்துட்டாங்க🤝🏼.*

*ஆனா சிலர் வேணும்னே எதிர்ப்பு காமிக்கிறாங்க. இதான் உண்மை✅✅.*

☪🕋 *ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு மானியம் ரத்து, சரியானதா*🤔

*மிக, மிகச் சரியானது தான்✅🤷🏼‍♂.*

🤷🏻‍♂ *பஞ்சாயத்து முடிஞ்சிது🔚.*👍💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🤼‍♀ சிறந்த அட்மின்🤼‍♂*
          🏆 *KS*🏆

🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣

👑 *கலந்துரையாடல்~1*👑

🥇 *ம கணேசமூர்த்தி⁩*

🥈 *jaiganesh2881⁩,& sp vignesh⁩,*

🥉 *saai-jaanu,& பிரபாகரன் சிதம்பரம்⁩*

👑 *கலந்துரையாடல் 2*©®

🥇 *King David (Editor)⁩*

🥈 *ghouse⁩*

🥉 *🌻 வாழ்க வளமுடன் 🌼⁩, & விஸ்வநாதன் கோவை⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤       

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

🕹 *சாதி, மத அடிப்படையில் உள்ள எல்லா சட்டத்தையும் ஒழித்து, மனுசனா மனிதனாக நினைத்து, அனைவருடைய பொருளாதார அடிப்படையில் மக்களை பிரித்து, சட்டத்தை வகுக்கணும்.*🎯

🕹 *அப்பதான் நாடு முன்னேறும்.*🎯

🕹 *சிறுபான்மை, பெரும்பான்மை அதெல்லாம் வேண்டாம். எங்க கிட்டயே புடுங்கி கொடுக்கிற மானியமும் எங்களுக்கு தேவையில்லை*🙅🏻‍♂

🕹 *நாங்க, நாங்களாக இருக்க விரும்புகிறோம். முடிஞ்சா மக்களுக்கு நல்லத பண்ணுங்க. இல்ல கம்முன்னு இருங்க. எங்க தேவைகளை நாங்க பாத்துக்கிறோம்.* 🎯

🕹 *அப்ப ஓட்டு? போட்டு தொலைக்கிறோம். சுயட்சை, நோட்டா இருக்க பயமேன்?*

🕹 *எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்களுக்கு😝,*

*நன்றி😇, வணக்கம்💐*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

*என்பி லதனை வெயில்போலக் காயுமே*
*அன்பி லதனை அறம்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

♻ *அறிந்துக் கொள்வோம்*♻

*இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு*

♻ *புரிந்துக் கொள்வோம்*♻

*இந்தியா ஒரு வேற்றுமையில் ஒற்றுமையுள்ள நாடு*

♻ *தெரிந்துக் கொள்வோம்*♻

*ஒற்றுமையே பலம்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

 😎  _*குட்டிராஜேஷ்*_
 _*9486552988*_😎

   
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *கனகராஜ் 9047493815*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...