Wednesday, 14 March 2018

இன்றைய (engineering) பொறியாளர்களின் நிலையும், வேலைவாய்ப்பும் பற்றி ஒரு பார்வை.*

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭  
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 21.02.2018*_ 🌹
     🌹 _*கிழமை : புதன்*_🌹
____________________________________

*📣அறிவோம்📣*

*வெற்றி, எண்ணத்தைப் பொறுத்து அமைகிறது.*

*நெப்போலியன்.*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட் 🤷🏻‍♂*

*பணம் சம்பாதிக்க ஆயிரம் நேர்மையான வழிகள் இருக்கு.*

*அதற்கு படிப்பு தேவையில்லாத ஒன்று*

*உதாரணம் : பில்கேட்ஸ், தோனி, ரஜினி, ஆபிரகாம் லிங்கன்*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖

 ===================

*இன்றைய (engineering) பொறியாளர்களின் நிலையும், வேலைவாய்ப்பும் பற்றி ஒரு பார்வை.*
         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

*_💝பாகம் - 1⃣💝_*

*_😃🤔🤔நாம் சிறுவயதில் இருக்கும்போது நம் பெற்றோர்கள் அல்லது சொந்த பந்தம் நம்மிடம் நீ வருங்காலத்தில் என்னடா கண்ணு ஆகபோறனு கேட்டா டாக்டர், வக்கீல், போலீஸ், மிலிட்டரினு சொல்லுவோம். ஆனால் 17வயது கடந்ததும் அதே கேள்வியை நம்மிடம் கேட்கும் போது பெரும்பாலானோர் பதில் இன்ஜியரிங்காக தான் இருக்கும்.  எந்தளவுக்கு போற்றப்பட்ட இன்ஜினியரிங் படிப்பு பற்றிய தொகுப்பே இவை_*😁🤷‍♂

*_🌎🤔🤔உலகத்துலயே அதிகமா இன்ஜினியர்கள உற்பத்தி பண்ற நாடு இந்தியா இந்தியாவில் இன்ஜினியர்களை அதிகமா உற்பத்தி பண்ற மாநிலம் தென்மாநிலம் அதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது._*😳😏

*_🙄🧐🧐கடந்த ஆண்டு மட்டும் 15லட்சம் இன்ஜினியர்கள் படித்து முடித்து வந்துள்ளனர். தென் இந்தியாவில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் விபரங்கள் :👇🏻_*

*_👨🏻‍🎓👩🏻‍🎓கேரளா - 380_*

*_👨🏻‍🎓👩🏻‍🎓கர்நாடகா - 750_*

*_👨🏻‍🎓👩🏻‍🎓ஆந்திரா தெலுங்கானா சேர்த்து - 850_*

*_👨🏻‍🎓👩🏻‍🎓தமிழ்நாட்டு இதில் முதலிடத்தில் உள்ளது அதாவது தமிழ்நாட்டில் மட்டும் - 1339 இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றது. ஆச்சரியமாக இருக்கிறதா. ஒரு காலத்தில் அதிகமாக போற்றப்பட இன்ஜினியரிங் படிப்பு தற்போது அதன் மதிப்பை முற்றிலும் இழந்துள்ளது._*😟😰

*_🤔🏃🏻‍♂🏃🏻‍♂முன்பெல்லாம் ஊருக்கு ஒரு இன்ஜினியர் இருந்தாங்க ஆனா இப்போலாம் தடுக்கி விழுந்தா ஒரு இன்ஜினியரிங் கல்லூரி இருக்கு. எப்படி இவ்வளவு கல்லூரிகள் வந்தது?? காரணம் என்ன?? இதனுடைய வருங்காலம் என்ன??? தற்போது இன்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலமை என்ன?? என்பதை காண்போம்_*🤷‍♂🤦🏻‍♂😰

*_♻♻40வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிக அளவில் பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் வந்தன. அதே போல் சுய தொழில்களும் அதிகளவு உண்டாகியது. இதில் வேலை செய்ய அடிப்படை தகுதி இன்ஜினியரிங் படிப்பு தான் என்று தீர்மானித்தனர். எனவே தனியார் நிறுவன அமைப்புகள், அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைத்தனர். அதாவது இன்ஜினியரிங் கல்லூரிகள் அதிகமாக ஏற்படுத்தபட வேண்டும் என்பதே ஆகும். அரசும் இதை தமக்கு சாதகமாக பயன்படுத்தியது. இந்த திட்டம் வேலைவாய்ப்பு அதிகரித்து ஆட்சியை தக்கவைக்கும் என்று அதிகளவில் கல்லூரிகள் திறக்க அனுமதியளித்தது._*🎊🎉

*_😃🤔சிலர் அக்கலூரியை பொதுநல நோக்கில் ஆரம்பித்தனர். ஆனால் பலர் அவற்றை வியாபார நோக்கில் ஆரம்பித்தனர். விவசாய நிலம் முதல் சுடுகாடு வரை கிடைத்த இடத்தில் கல்லூரிகள் ஆரம்பிக்கபட்டன._*😟😏😏

*_🙄😳தற்போது 1339 கல்லூரிகள் இருந்த இந்த மாநிலத்தில் 40 வருடங்களுக்கு முன்பு வெறும் 30, 40 கல்லூரிகளே இருந்தது. அப்போது இன்ஜினியரிங் படித்து வெளியே வருபவர்கள் குறைவாகவே இருந்தனர். அவர்களுக்கு வேலை கொடுப்பதில் அனைத்து நிறுவனங்களும் நான், நீ என போட்டி போட்டு வந்தனர். அந்த அளவுக்கு  இன்ஜினியர்கள் போற்றபட்டனர். அவ்வாறு படித்து முடித்து வெளியே வந்த பலர் வெளி மாநிலம் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று கை நிறைய சம்பாதித்தனர். இவ்வாறு இதன் மீது மக்கள் கொண்ட மோகம் நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்தது._*🇮🇳🤥

*_😱😳அதிகளவில் கல்லூரிகள் ஆரம்பிக்கபட்டதால் அவற்றை ஆய்வு செய்ய அரசானது ICTE என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பானது கல்லூரிகள் ஆரம்பிக்கபடுவதற்க்கு முன் இவை ஒழுங்கானதா, இல்லையா, ஒரு கல்லூரிக்கு இத்தனை ஆசிரியர்கள் இருக்கவேண்டும், இத்தனை வகுப்பறைகள் மற்றும் பயிற்சி கூடம் இருக்கவேண்டும். அதற்கான இடம் இவ்வளவு போன்ற பல கட்டுபாடுகளை விதித்ததது. அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே கல்லூரி திறக்க அனுமதி அளித்தது. இந்த நடைமுறை தற்போது வரை உள்ளது._*🇮🇳😏😏

*_🤔🤔🧐மேலும் AICTE என்ற அமைப்பானது. ஒவ்வொரு கல்லூரிக்கான பாடதிட்டங்களை வகுத்தது. மேலும் இன்ஜினியரிங் படித்து வெளியே வருபவர்களை TCS, CTS, ITC போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். சம்பளமும் அப்போதே 20 முதல் 30 வரை கொடுத்தனர். இதன் மூலமாக மக்களிடையே இன்ஜினியரிங் மோகம் அதிகரித்தது._*😱😳

*_😟😰தற்போது இன்ஜினியரிங் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர்களின் தூண்டுதல் அதாவது தான் படிக்காத படிப்பு தன் பிள்ளைகள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய விருப்பத்தை தெரிந்துகொள்ள மறந்து விடுகிறார்கள். இன்ஜினியரிங் படித்தால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். பிள்ளைகள் வாழ்க்கை கறை சேந்துடும்னு நம்பிக்கைலயே இருந்துவிட்டனர். AICTE அமைப்பும் இதை சாதகமாக பயன்படுத்தி சகட்டுமேனிக்கு எழுதியும் கல்லூரிகளை திறக்க அனுமதியளித்தது._*🙄😥😥

*_👨🏻‍🎓👩🏻‍🎓மாணவர்களும் எதுக்கு இந்த படிப்பை தேர்வு செய்தோம் என்று தெரியாமலே கடமைக்கு படிக்க ஆரம்பித்தனர். AICTE பொருத்தமட்டில் அதிகளவு இன்ஜினர்களை உற்பத்தி செய்யவேண்டும் என்று எண்ணினார்கள் தவிர தரமான கல்வியை கொடுக்க தவறிவிட்டனர் காரணம் ஊழல்._*👊🏻👊🏻

*_🤨🧐ஒவ்வொரு  வருடமும் இன்ஜினியரிங் படித்து முடித்து லட்சகணக்காணவர்கள் வெளியே வந்தனர். அன்று வாங்கிய சம்பளத்தை விட மிகக்குறைவான சம்பளம் தற்போது கிடைக்கிறது காரணம் வருட வருடம் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்து வெளியே வந்தனர். வேலைவாய்ப்பும் குறைந்தது. வேலையில்லா பட்டதாரிகளும் அதிகரித்தனர். தனியார் நிறுவனங்களும் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி உழைப்பை அதிகமாக சுரண்டி சம்பளத்தை குறைவாக கொடுத்தது._*😥😰

*_🌎🌎🇮🇳உலகிலேயே இந்திய மருத்துவர்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் குறைவான கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு தரமான கல்வியை கொடுத்தனர். ஆனால் இன்ஜினியரிங் பொருத்தமட்டில் ஊழல் தலைவிரித்தாடியபோதே தரங்கள் எல்லாம் தரங்கெட்டு போனது._*👊🏻👊🏻

*_👩🏻‍🎓👨🏻‍🎓🤔மாணவர்கள் பொருத்தமட்டில் இன்ஜினியரிங் படிப்பை சில காரணங்களை கொண்டு தேர்வு செய்கின்றனர். அவற்றை காண்போம்._*🤔🤔👇

*_👉👉1) சொக்காரங்க மற்றும் சுற்றியுள்ளவர்கள் சிலர் இந்த படிப்பை தேர்வு செய்து உயர்ந்த இடத்தில் இருப்பதை பார்த்து இன்ஜினியரிங் படிக்கலாம்._*

*_👉👉2) சிலர் படங்களில் வரும் கதாபாத்திரங்களை வைத்து (எ.கா) சில்லுனு ஒரு காதல் படத்தில் மெக்கானிக் இன்ஜினியரிங் மிகைபடுத்தி காணிப்பார்கள். அப்ப நாமும் கெத்தா படித்து என்சாய் பண்ணலாம்னு தேர்ந்தெடுக்கிறார்கள்._*

*_👉👉3) இவர்கள்தான் இன்ஜினியரிங் அர்த்தம் புரிந்து எது நமக்கு சரிபட்டு வரும் என தேர்ந்தெடுத்து படிப்பார்கள்._*👀👀

*_👱🏻‍♂👱🏻‍♀17வயது பசங்க மட்டுமல்ல இன்று இன்ஜியரிங் படித்து வெளியே வந்த மாணவர்களுக்கு கூட இன்ஜினியரிங் என்றால் என்னவென்று தெரிவதில்லை. ஏதோ ஒரு உந்துதல் அல்லது ஈர்ப்பால் சேந்து விட்டு ஏன் படிக்கிறோம், எதற்க்கு படிக்கிறோம் என்றே தெரியாமல் கடமைக்கு படிக்கிறார்கள். படித்து முடித்து வெளியே வந்து வேலைவாய்ப்பு என்ற பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்._*😢😢😩

*_🤨😟சிலருக்கு படித்தபடிப்பிற்க்கு ஏற்ற வேலையில் சேந்துவிடுகிறார்கள். ஆனால் பலர் கிடைத்த வேலை எடுத்து இதுதான் வாழ்க்கைனு அவர்களுடைய கனவுகளை மறந்து ஏன் இருக்கிறோம், எதற்காக படித்தோம் என்று தெரியாமல் ஒரு இயந்திரம் போல வாங்கின கடனை அடைப்பதற்காகவும், எதாவது வேலை பார்த்தாக வேண்டும் என்ற கடமைக்காகவும் எதாவது வேலை பார்த்து பெரியாளாக வரவேண்டும் என்று நினைப்பில் மட்டும் வைத்து அதற்கான சரியான முயற்சிகளை எடுக்காமல் ~வாழ்ந்துகொண்டு~ இல்லை பிழைத்து கொண்டிருக்கின்றனர்._*😭😰

*_🙄🤔😰இந்த மாதிரியான சிஸ்டம் தான் தற்போது வரை இருக்கிறது. கடைசி வருடம் வெளியே வந்த இன்ஜினியரிங் மாணவர்களில் 3% சதவீத இன்ஜினியர்களுக்கு மட்டுமே படித்த படிப்பிற்க்கு தகுந்த வேலைவாய்ப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளிவந்தது._*😣😩😫

*_🤔🤔🧐இதற்கான அடிப்படை காரணம் இந்திய இன்ஜினியர்களுக்கு சுத்தமா இன்ஜினியரிங் பற்றிய அறிவு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். உடனே அனைவருக்கும் கோபம்  மட்டும் பயங்கரமாக வரும். எதற்காக அறிவு இல்லை என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் ஒரு இன்ஜினியருக்கு தன் வேலையில் உள்ள இன்ஜினியரிங் பிரச்சனையை தீர்க்கும் அடிப்படை அறிவு இந்திய இன்ஜினியர்களுக்கு 97% சுத்தமாக கிடையாது._*😰😭😭

*_🤔🤔😰ஏன் இந்த காரணம் என்று பார்த்தால் முதல் வருட படிப்பை இரண்டாம் வருடம் படிக்கும்போது மறந்து விடுகிறார்கள். இரண்டாம் வருடம் படிதத்தை மூன்றாம் வருடம் மறந்து விடுகிறார்கள். கடைசியாக நான்காவது வருடம் செய்த Project மட்டுமே அவர்கள் வாழ்க்கை வரை (பி.கு :- இது அனைவருக்கும் பொருந்தாது உண்மையில் சுயமாக Project செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) நியாபகம் வைத்திருக்கின்றனர்._*🤷‍♂😥

*_👨🏻‍🎓🙄🙄ஏன் அனைத்து பாகங்களும் உடனடியாக மறந்து போகிறது. Project மட்டும் வாழ்நாள் முழுவதும் நியாபகத்தில் இருக்கிறது என்றால் அவை மட்டுமே நாம் சொந்த முயற்சியால் செய்தவையாகும். மீதி அனைத்தும் தேர்வுக்கு காப்பி அடித்து தேர்வு அறையில் வாந்தி எடுக்கிறார்கள். Project மட்டுமே சொந்த முயற்சியில் செய்கின்றார்கள். அது வேறு யார் செய்து கொடுத்தாலும் ஆசிரியர் அதை பற்றிய விளக்கம் கேட்பார்கள் என்ற பயத்தில் அதை பற்றி புரிந்து கொள்ள நினைக்கிறார்கள்._*🤥🤨🤨

*_😏😏கடைசி வருடம் செய்யும் Project -க்கு கொடுக்கும் முக்கியத்துவம் அந்த நான்கு வருடமாக படிக்கும் எழுத்து தேர்வுக்கு கொடுப்பதில்லை. உதாரணமாக இந்தியாவில் HAL என்ற நிறுவனமானது 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது இந்நிறுவனமானது இந்திய ராணுவத்திற்க்கு தேவையான விமானங்களை வெளிநாட்டின் உதவியிலாலாமல் உள்நாட்டிலே தயாரிக்கும் நோக்கில் ஏற்படுத்தபட்டது. இந்நிறுவனத்தில் தேர்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவரும் இந்திய அளவில் முதல் பத்து இடங்களை பிடிக்கும் இன்ஜினியர்களை தேர்வு சொய்கின்றனர். அவ்வாறு Super brain என்றழைக்கபடும் அம்மாணவர்களை வைத்து இதுவரை அந்நிறுவனம் இத்தனை வருடம் தயாரித்த விமானங்கள் எத்தனை என்று தெரியுமா -(0)- இதுவரை ஒரு விமானம் கூட தயாரிக்கவில்லை._*😩😫

*_🏭🏗முதல் பத்து இடங்களை பிடித்த இன்ஜினியரிங் மாணவர்களால் ஒரு பிரச்சனை தீர்ந்து வைக்க தெரியவில்லை எனும் போது மீதமுள்ளவர்களின் நிலையை அனைவரும் அறிந்து கொள்ளலாம்._*🚡🚠

*_🔬🔭டெக்னாலஜி இவ்வளவு முன்னேறியும் தமிழ்நாடு கூவநதியை சுத்தம் செய்ய டெண்டர் கொடுத்தப்போது கூட எந்த கம்பெனியும் அதை கையாள முன்வரவில்லை. காரணம் எந்த கம்பெனிக்கும் தெரியவில்லை எப்படி சுத்தம் செய்ய டெக்னாலஜியை பயன்படுத்துவதென்று._*🕹🤷‍♂🤷‍♂

*_🇮🇳🤔🤔மத்திய அரசானது கங்கையை சுத்தம் செய்ய டெண்டர் விட்ட போது எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை எந்நிறுவனத்துக்கும் அதை சுத்தம் செய்யும் இயந்திரமுறை பற்றிய அறிவு இல்லை. பின்னர் யூரோப்ல இருக்கிற தனியார் நிறுவனமானது சுத்தம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டது._*🏭🔭

*_🌎🇮🇳🤷‍♂உலகிலேயே அதிகமாக இன்ஜினியர்கள் இருக்கும் இந்தியாவில் தான் தன் நாட்டின் கழிவுகளை சுத்தம் செய்யும் இயந்திரம் செய்வதில் தோற்றுவிட்டது என்றால் யோசித்து பாருங்கள் ஏன் இந்திய இன்ஜினியர்கள் அறிவில்லாதவர்கள் என்று புரியும்._*😥😭😭



https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭  
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 21.02.2018*_ 🌹
     🌹 _*கிழமை : புதன்*_🌹
____________________________________

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖

 ===================

*இன்றைய (engineering) பொறியாளர்களின் நிலையும், வேலைவாய்ப்பும் பற்றி ஒரு பார்வை.*
         ===================

*_💝பாகம் - 2⃣💝_*

*_🤔🧐👩🏻‍🎓👨🏻‍🎓தற்போது படிக்கும் மாணவர்கள் கடைமைக்கு இன்ஜினியரிங் படிக்கலாம் என்றும் சேர்ந்து கண்ணகட்டி காட்டுல விட்ட மாதிரி அவஸ்தை படுகின்றனர்._*😱😥😰

*_🤔😟😥சிவில் இன்ஜினியர் மாணவர் ஒருவரின் அனுபவ கருத்து பார்க்கலாம்._*👀👇

*_🙄🤨ஒரு ஷாப் கீப்பரின் ஆரம்ப சம்பளம் 8000. ஒரு டீக்கடையில் வேலை பார்க்கும் ஹெல்பர் சிறுவனுக்கு நாளொன்று 300 ... ஆக 9000... என் தம்பியுடன் படித்தவன் படிப்பை தொடரமுடியாமல் சென்னையில் ஒரு டீக்கடையில் வேலை பார்க்கிறாரான். ஒருநாள் என்னிடம் என் சம்பளத்தை கேட்டுவிட்டு நல்லா வேள மாமா நான் படிக்கல என்று பெருமிதம் கொள்கிறான் அவனுக்கு சம்பளம் 9000. சாப்பாடு ரூம் வசதியுடன்.. என் இந்த நிலமைக்கு யார் காரணம்?_*😟😥

*_💱➕➖மார்க்கெட் டல்லா இருக்கு என்பவர்கள் ஒரு கோடி மதிப்புள்ள ப்ராஜெக்டை 75000 க்கு விற்கிறார்களா?_*😰😱
*_👉👉கொத்தனார்-600 to 650_*
*_👉👉ஹெல்பர் (M.C)-400 to 450_*
*_👉👉சித்தாள்-300 to 350_*
*_👉👉ப்ளம்பர்-500_*
*_👉👉கார்பெண்டர்-550_*
*_👉👉பெயிண்டர்-500_*
*_👉👉பொருளாதார அடிப்படையில்+விலைவாசி அடிப்படையில் ஏறுகிறது இவர்களின் கூலி._*
*_😰😥எங்களின் கதி மட்டும் இப்படி!!_*

*_🤔🤔சிவில் சைட் இன்ஜினியர்-8000/30 - 266/per day ஆக , ஒரு கொத்தனாரின் சம்பளம் வாங்க குறைந்த பட்சம் நான்காண்டு காத்திருக்க வேண்டும். எதன் அடிப்படையில் இந்த ஊதிய நிர்ணயம்? அந்த 8000 என்பதும் ஓரளவு மனம் உள்ளவர்கள் தந்தால்தான் உண்டு. 5000 க்கெல்லாம் வேலை பார்க்கிறார்கள் B.E பட்டதாரி. எங்களுக்கான அரசு ஊதிய நிர்ணயம் என்ன????_*😏😏

*_🤷‍♂🤔வேலை கற்று கொள்ள வேண்டுமென்கிறார்கள். பிறகு எதற்கு நான்காண்டு தொழில்நுட்ப கல்வி. தியரிகளை தேர்வுக்கு பயன்படுத்த மட்டுமா?. நான் படித்த பாடத்திட்டத்தில் எந்த இடத்திலும் ஒரு கனமீட்டருக்கு 500 செங்கல் ஆகும் என்று படித்ததில்லை. ஒரு கொத்தனார் நாளொன்றுக்கு 750 செங்கல் பயண்படுத்தியிருக்க வேண்டுமென சொல்லவில்லை. ஆக எங்களுக்கு வேலை தெரியாதது யார் குற்றம்?? இந்த கல்விமுறை... முன்னோக்கி ஓடும் எங்கள் மூளையை ஓடவிடாமல் கயிறு கட்டி இழுக்கிறது.முயல் போன்ற மூளையை ஆமையாக்குகிறது என்பது நிதர்சனம்._*🤦🏻‍♂😥😰

*_😳😱O.T பார்க்கும் தொழிலாலிக்கு கூலி உண்டு. சைட் இன்ஜினியருக்கு?? உடனே எனக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் தந்தார்கள் தெரியுமா என்று சீனியர் கேட்பார்கள். நீங்கள் வந்த போது சென்னையில் ரூம் மாத வாடகை எவ்வளவு? ஒரு இட்லியின் விலை என்ன? அப்படியும் உனக்கு கம்மியாக கொடுத்திருந்தால் எதற்க்கு அடிபணிந்தாய்? அன்று நீ அடிபணிந்தாய் என்பதற்காகத்தானே எங்களையும் அடிபணியச்சொல்கிறார்கள்? அடிமாட்டு விலைக்கு அடிமையாக்கப்படுகிறோம். அட்ஜஸ்மெண்ட் மைண்ட் என்பது எங்கள் தலமுறையில் குறைந்து வருகிறது. அதே அளவு திறமைகள் கூடி வருகிறது ஆக ஒரு ஃப்ரெஷருக்கான அடிப்படை சம்பளம் 12000 வேண்டும்._*🤥😏

*_🤨🧐அடித்தட்டு நிலையில் இருந்து வரும் ஒரு பட்டதாரி சுமந்து வரும் கடமைகள் எத்தனை?? அப்பா கடன், அம்மா மருத்துவ செலவு, தம்பி படிப்பு, தங்கை திருமணம், வீட்டு கடன், கல்விக் கடன் இத்யாதி இத்யாதி..ஒரு வேளை அவன் காதலித்திருந்தால் அந்த காதலின் கதி??? காதலையெல்லாமா கணக்கில் எடுத்துக்கொளவது என்ற தர்க்கத்துக்கு வந்தால் நீங்கள் ஒரு மிருகம். இப்படி நம் நாட்டு சிஸ்டம் மனிதநேயமற்ற மிருகம் போல இயங்குகிறது. யதார்த்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கணக்கிட்டால் என்றோ வல்லரசாகி இருக்கலாம்._*🇮🇳🤷‍♂🤷‍♂

*_👷🏻‍♂👷🏻‍♀இன்ஜினியரிங்க் படித்தால் ஒன்று பணக்காரனாக இருக்க வேண்டும் இல்லையெனில் சிபாரசு பின்னணி இருக்க வேண்டும். என்ற நிலமை வந்து விட்டது._*😥😰

*_💝நன்றி பெயர் தெரியாத நண்பருக்கு💝_*

*_🙄🤔🤔இதன் மூலம் தங்களுக்கு தெரியபடுத்துவது என்னவென்றால் இன்ஜினியரிங் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுக்கு பிடித்த பாடத்தை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து படியுங்கள். அப்போதுதான் அதனை புரிந்து படிக்கவேண்டும் என்ற நோக்கமும். வெற்றியோ தோல்வியோ அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவமும் வரும். தங்களுக்கு பிடிக்காத பாடத்தை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்க சொன்னால் அவர்களிடம் அன்பாக சொல்லி புரிய வையுங்கள். கடைமைக்கு படிக்காதீர்கள். விரும்பி படியுங்கள்._*😃🤝🏻👍🏻💪🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*

*🏅 க.நிருபன்கதிர்*👏🏻
*🏅⁨ பிரபாகரன் சிதம்பரம்⁩*👏🏻
*🏅 sp.vignesh*👏🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*

*🏅 இசையருவி*👏🏻
*🏅 ⁨🌻 வாழ்க வளமுடன் 🌼⁩*👏🏻
*⁨🏅 sakthi⁩, & ⁨Gkias⁩*👏🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🏆🏆🏆சிறந்த அட்மின்*🏆🏆🏆
       *👏🏻குட்டி ராஜேஷ்*👏🏻

❤❤❤❤❤❤❤❤❤❤❤         

🤷‍♂ *கருத்து* 🤷‍♀    

*மண்ணோடு மண்ணாய் மக்கிப் போகவிருக்கும் நாம், மக்கிப் போவதை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நியதி தெரிந்த போதும் மக்கிப் போகாத குப்பைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.*

*மக்கிப் போகாத மண்ணுக்கு  தெரிந்த உண்மை? மக்கிப் போகும் நமக்கு என்று புரியும்?*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*படிக்க வேண்டியதை குறை இல்லாம நல்லா படிக்கணும். படிச்ச பிறகு அதுல சொல்லி இருக்கிற படி செய்யணும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💚 அறிந்து கொள்வோம்*_ 💚

*அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.*

_*💙 தெரிந்து கொள்ளவும்*_ 💙

*அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.*

_*💜 புரிந்து கொள்ளவும்*_ 💜

*அகல் வட்டம் பகல் மழை.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

😎 *கார்த்திக் இராஜ்பவன்*
📲 *+91 8072908455*

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

 😎 *குட்டிராஜேஷ்*
 *9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439* 
*(வழக்கறிஞர்)*

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...