Thursday, 17 August 2017

பொதுநல வழக்கு* *எந்த விசயங்களுக்கு பொதுநல வழக்குகள் தொடர முடியும்?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗣 *கலந்துரையாடல் குழு:* 🔊
__________________________________
         🌹 *தேதி :16.08.2017.* 🌹                  🌷  *கிழமை: புதன்*🌷   
____________________________________
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        =================

*பொதுநல வழக்கு*

*எந்த விசயங்களுக்கு பொதுநல வழக்குகள் தொடர முடியும்?*

*அப்படி நீங்கள் வழக்கு தொடர நினைக்கும் விசயங்கள் என்ன?*

📌 *பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். உயர்நீதிமன்றம்*

⚖ *அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கோ என்ன செய்வது?*

⚖ *இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்றே இருக்கிறது 🏷ரிட் மனு*

*⚖ WRITTEN ORDER அதாவது 🖋எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் 🏷ரிட்*

     ⚖ *பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்*

*உதாரணம்*
👇
🏘 *நீங்கள் குடியிருக்கும் இடத்தி ற்குப் பக்கத்தில் ஒரு 🏭 ஃபேக்ட ரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக் கும் மாசுக்கட்டுப்பாடு அலுவ லகத்தில் புகார் செய்யலாம். அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, 🏷ரிட் மனு தாக்கல் செய்யலாம்*

⚖ *எந்தெந்த பிரச்னைகளுக்கு 🏷ரிட் மனு தாக்கல் செய்ய லாம்?*

🏷 *5 வகைகளில் ரிட் மனுவை தாக்கல் செய்யலாம்*

⚖ *1.ரிட் ஆஃப் மாண்டமஸ்- இதற்கு ஆணையிடும் நீதி பேராணை என்று பொருள்*

🖋 *அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று 🏷ரிட் மனு தாக்கல் செய்யலாம்*

⚖ *2.செர்ஷியோரரி (certiorari) ரிட்*

🖋 *ஒரு ஹைகோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த 🏷ரிட் மனு*

⚖ *3.கோவாரண்டோ(Quowarranto)*
🖋 *எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லாமல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித் தாலோ, அதை எதிர்த்து 🏷கோவாரண்டோ ரிட் தாக்கல் செய்ய லாம்*

  ⚖ *4.பிரொகிபிஷன் (Prohibition)*

🖋 *ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பதற்காக போடப்படுவது*

⚖ *5.ஹெபியஸ் கார்பஸ் (Hebeas corpus)-இதற்கு தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள்*

🖋 *நமக்கு தெரிந்த ஒருவர் தவறாக காவலில் வைக்கபட்டிருந்தாலோ அல்லது ஒருவரை காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த 🏷ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.*

*👨‍🎓குறிப்பு*

*👉ஹெபியஸ் கார்பஸ் மற்றும் கோவாரண்டோ ரிட் மனுக்களை யார் வேண்டு மானாலும் போடலாம்*
👉 *ஆனால், மற்ற ரிட் மனுக்களான மாண்ட மாஸ், செர்ஷியோரரி மற்றும் ப்ரோகிபிஷன் ரிட் மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்   மற்றவர்கள்  தாக்கல் செய்யலாம்.*

⚖ *PIL - Public Interest Litigation / SAL - Social Action Litigation  - பொது நல வழக்கு என்பதாகும்*

🦋 *இது ஒரு புது வகையான நீதிப் பேராணையாகும் எந்த மனிதரும் அல்லது எந்த பொது நல அமைப்பும் இந்த ஆணையை வேண்டி நீதிமன்றத்தில் முறையிடலாம்*
🦋 *பாதிக்கப்பட்ட மூன்றாவது நபருக்காக உதாரணமாக சொல்ல வேண்டுமானால் சூற்றுசூழல் சட்டம் (Environmental Law)  உருவானது இதனைஅடிப்படையாக கொண்டு தான்*

🤦‍♂ *இந்த  பொது நல வழக்கை சில சமயங்களில் உபயோகிக்க முடியாது தலையீட்டுரிமை (locus standi) இருக்கும் போது பொது நல வழக்கு சில சமயங்களில் தோற்றுவிடுகின்றது*

*🤔எந்த விஷியத்தில்  பொது நல வழக்குகள் தொடர வேண்டும் என்றால்.*

*💧முதலில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் இதை கண்டு கொள்ளாத ஆட்சியாளர்கள்* 

*🌴இயற்கை வளம் குறைகிறது*.
*🌳🌳🌳காடுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள்.*

*🏢அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் துய்மையை பராமரிக்க வேண்டும்*.
*அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர வேண்டும்..*

*🚌அரசு போக்குவரத்துகள் வசதியாக மற்றும் தேவையான இடத்தில் இயக்க வேண்டும்..*

*🏥🏥அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதி மற்றும்👩‍🔬அதிகமாக ஆட்களை பணி நிமித்தம் செய்ய வேண்டும்..*

*🛣சாலைகள் பராமரிப்பு செய்ய வேண்டும்*.

*🌴சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்க வேண்டும்.*
*🚘வாகன புகைகள் மற்றவை எதுவும் மாசுபடாமல் இருக்க வேண்டும் ..*

*🙅கொலை, கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களை கண்டு கொள்ளாமல் அல்லது அவர்களிடையே லஞ்சம் வாங்கும் சில  காவல் துறை மீதும்*

*😷தவறு என்று தெரிந்தும் அவங்க கொடுக்கும் பணத்திற்காக பல பொய்களை சொல்லி வாதாடும் சில  வழக்கறிஞர்கள்  மீது வழக்கு போட  வேண்டும்.*

*🙅🏻‍♂தவறான வதந்திகள் மற்றும் தகவலை பகிரும் நபர்கள்  வாட் அப் மற்றும் முகநூல் மூலம் பரப்பும் நபர்கள்.*

*👨🏻‍💼அரசியல் வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் இயங்கும்  சில மீடியாக்கள் இவங்க மீது வழக்கு போட வேண்டும்*

*🤕இதையெல்லாம் கண்டு கொள்ளாத நம்முடைய ஆட்சியாளர்*

*👨🏻லஞ்சம் வாங்கும் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் இவங்க மீது தான் பொது நல வழக்கு போட வேண்டும்.*
          

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

*🥇jaiganesh*
*🥈 su*
*🥉மயிலை முருகன்*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀     
*சட்டம் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அப்போது தான் குற்றம் குறைவாக இருக்கும்*

*சாமானியர்களுக்குப் பயன்பட வேண்டிய பொதுநல வழக்குகள், சாமானியர்களுக்கு எதிராகவும் சில நேரங்களில் பயன் படுத்தப்படுகின்றன*
                          
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள்: 📜*

*புத்தே ளுலகத்தும்* *ஈண்டும் பெறலரிதே*
*ஒப்புரவின் நல்ல பிற*.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம்: 📜_*

*பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*_📝 பழமொழி : 📝_*
*தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.*
         ◆◆◆◆◆◆◆

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

*👨🏻‍💻✍கந்தசாமி*
*+919080669640*

*👩🏻‍💻✍sm*

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

*😎சதீஷ் குமார்  8056693281*

*அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...