Tuesday, 12 September 2017

சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் (வைரலாகும் செய்தி) அதிகமாக விவாத பொருளாக காரணம் என்ன? பொழுது போக்கு சிந்தனைக்கு மட்டுமா? இல்லை மனதை திசைதிருப்ப நடத்தப்படும் சதிகளா?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :11.09.2017.*
🌹 *கிழமை : திங்கட்கிழமை*    
____________________________________
*அறிவோம்:*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
😇 *அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல.மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!*

💐 *கார்ல் மார்க்ஸ்*💐

💖💖💖💖💖💖💖💖 💖💖💖

😎 *நிர்வாகிகள் எண்ணம்:* 😎
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*நீ புதிதாக (வித்தியாசமாக) ஒன்றை செய்யும் போது,*

*பலரால் திரும்பி பார்க்க படுகிறாய்.*

👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================
*சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் (வைரலாகும் செய்தி) அதிகமாக விவாத பொருளாக காரணம் என்ன? பொழுது போக்கு சிந்தனைக்கு மட்டுமா? இல்லை மனதை திசைதிருப்ப நடத்தப்படும் சதிகளா?*
🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭

🙏 _*வணக்கம் guys எல்லாரும் எப்படி இருக்கீங்க 🤗. சரி வாங்க முடிவுரை போலாம். இன்றைய தலைப்பு ஹாட் டாப்பிக்னு பெயர் இருக்குறதுனால கொஞ்சம் சுவை வர மாதிரி சமையல் பண்ணலாம். முடிவுரை கவனமா பாருங்க. ஒவ்வொரு பாய்ண்ட்லயும் ஒவ்வொரு ஹாட் டாப்பிக் ஒளிந்திருக்கும்.*_😎

🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🔍

🤔🤓 _*என்னடா இவன்... ஏற்கனவே அடிக்கடி காணாம போன, அதிமுக எம்எல்ஏக்களை கண்டுபிடிக்கிற மாதிரியே ஆரம்பிக்கிறான்னு நினைக்காதிங்க. முடிவுரை போலாம்ங்க. (காணாமல் போன எம்எல்ஏ)*_😜

😱 _*முதல்ல பணம் என்றால் பிணமும் வாயப் பொலக்கும்னு சொல்லுவாங்க. அதனால அந்த  கண்டெய்ன் லாரி மேட்டர பாத்துடுவோம். பணத்தை என்னதான்யா பண்ணுனிங்க. எவன் வூட்டு பணம் என்ன எலவுனு கடைசி வரைக்கும் தெரிலயே. கடைசில பேங்க் பணம்னு சொல்லி பைல்ல குளோஸ் பண்ணிட்டிங்களே...(கண்டெய்னர் பணம்)*_😉

😳🙄 _*அந்த மேட்டர வச்சி கொஞ்ச நாள் பேசி பேசி அடுத்த பிளாஸ் நியூஸ் வந்ததும் எவனோ நம்ம பர்சஸை பிடிங்கி கிட்டு போற மாதிரி அப்படியே அடுத்த மேட்டர்க்கு அந்தர் பல்டி அடிச்சிட்டோம். அத பத்தி பேசி நமக்கு எண்டர்டெய்ன்மண்ட் மட்டும் தான் ஆச்சி😏.(பிளாஸ் நியூஸ்)*_

🤒 _*நமக்கு ஏற்கெனவே கருப்பு பணம் மீட்டதும் அவங்கங்க அக்கவுண்ட்ல போட்டு  விடுறேன்னு  சொன்னாய்ங்க.(கருப்பு பணம்)*_😛

😓 _*இப்ப என்னான்னா பணப்பிரச்சனை வந்ததும் பாதி பேருக்கு பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லாம கிடக்கு.(பணப் பிரச்சனை)*_😏

😓 _*பேங்க்ல அக்கவுண்ட் இல்லனாலும் பரவாயில்லை ஆதார் அட்டைய குடுத்து கூட மாத்திட்டுப்போனு சொன்னிங்க.(பேங்க் அக்கவுண்ட், ஆதார் அட்டை)*_☹

🤠 _*கடைசியா பேங்க்ல வந்து பார்த்தா ஏடிஎம்ல பணம் எடுக்குற கூட்டம் மாதிரியே அப்படி ஒரு கூட்டம் நல்லா ஜே ஜே னு இருந்துச்சி.(ஏடிஎம் பிரச்சனை)*_💳

🤡 _*கூவத்தூர்ல அந்த எம்எல்ஏ க்கள் தங்குறப்ப கூட இவ்ளோ கூட்டம் இல்லைனா பாத்துக்கோங்களேன்.(கூவத்தூர் எம்எல்ஏ பொழுதுபோக்கு)*_

😰 _*சென்னை, கடலூர்ல வெள்ளம் வந்தப்ப மாத்தி மாத்தி  உதவுன பசங்க கூட பேங்க்ல இந்த formஐ எழுதி தர மாட்டான்ட்டாய்ங்க.(சென்னை, கடலூர் வெள்ளம்)*_

😅 _*நோட்டை முதல் ஆளா வாங்கி, பேஸ்புக் வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ் போட தான், இவங்களுக்கு நேரம் சரியா இருக்கு.(₹2000, ₹500 செல்பி)*_😬

🙃 _*நான் கூட வீணாப் போன பயலுங்க இதெல்லாம் ஒரு பொழப்பனு நினைச்சேன். ஆனா ஜல்லிக்கட்டு வந்ததுக்கு அப்புறம் தான் இவனுங்க பலமே, அம்மாடியோவ்னு வாயப் பொலக்க வச்சிட்டானுங்க😱.(ஜல்லிக்கட்டு போராட்டம்)*_

😏 _*இவனுங்க ஏற்கனவே இலங்கை ஈழத் தமிழர் பிரச்சினைக்கு பாதி நாள் பள்ளி, கல்லூரிக்கு போகாம போராடுன பயலுவோ.(ஈழத்தமிழர் போராட்டம்)*_

🤢 *_ஆனா இப்படி போராடுற நம்ம பசங்கள இடையில பிக்பாஸ்சை வர வச்சி ஓவியா ஓவியானு பைத்தியம் பிடிக்க வச்சிட்டோம்ல.(பிக்பாஸ் நிகழ்ச்சி)_*

😎 _*யாரு நாங்கலாம் பெரிய பெரிய பிரச்சனை வந்தா இதுபோல மீடியாக்களை இடைல விட்டு திசை திருப்புவோம்ல😉.(மனதை திசை திருப்பும் பொழுதுபோக்கு)*_🤗

🙈 _*நாங்க நினைச்சா ஓவியாவையும் பைத்தியம் பிடிக்க வைப்போம். ஆதரவா, எதிர்ப்பா பேசுற உங்களையும் பைத்தியமாக்குவோம். ஓவியாவை வெளியேவும் அனுப்போம்.(ஓவியா ஆர்மி ஆதரவு அண்ட் எதிர்ப்பு)*_🙊

🙌 _*இல்ல அதுக்கும் அசர மாட்டேனு சொன்னா  விஜய், அஜீத் படங்களின் டீசர், டிரெய்லர், பாடல் சிங்கிள் டிராக் வலைத்தளங்களில் ரீலீஸ் பண்ணி, உங்களை வச்சே டிரண்ட் பண்ணி, படத்தோட பட்ஜெட்டை ஏத்துவோம்டா.....(யூடியூப் லைக்ஸ், வியூஸ் ரெக்கார்டு டிரண்டிங்)*_🙊

🙌 *_அப்ப என்ன பண்ணுவிங்க. நீங்களே உழைச்ச காசை தியேட்டர்ல அதிகமா குடுத்து, படத்தையும் பார்ப்பிங்க. நீ மூணு நாள் கழிச்சி வந்தா, முக்கியமான சீன்னை கட் பண்ணிருவோம்ல. நீ வந்து தானே ஆகணும்🤗. ₹5000 ரூபாய் வித்தாலும் வாங்கி பாக்குற கூட்டம் தானே நீங்க.(அதிக விலை டிக்கெட்)_*🙊

🙈 *_அப்படியும் வரலையா நாங்களே படம் நஷ்டத்துல ஓடுது, இவ்ளோ வசூல்னு அத வச்சி வியாபாரம் பண்ணுவோம். அப்புறம் நீங்களே அடிச்சிப்பிடிச்சிக்கிட்டு உன் ஆளு படத்தை பாக்க வருவீங்க.(வசூல் நிலவரம் சண்டை)_*🙊

🙌 *_முதல்லலாம் தமிழ் சினிமா தான் 100வது நாள் ஓடும். இப்ப என்னான்னா நெடுவாசல் 152 வது நாளாம், கதிராமங்கலம் 99 வது நாள்னு பேச வச்சிட்டாங்கே.(கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சனை)_*

🤠 _*நீ சீரீயசா ஒரு விசயத்தை ஆழ்ந்து சிந்திச்சின்னா கவர்னர் வீட்டுக்கு ரெய்டு போவோம். உங்க மூளையும் அங்க போயிடும். கடைசியா நாங்க எங்க இஷ்டப்படி வேற விதத்துல காய நவுத்திப்போம்.(கவர்னர் வீடு ரெய்டு)*_🙊

🙄 *கரண்ட் இல்ல, கரண்ட் இல்லனு பொலம்புனிங்க, ராம்குமார் எப்படி கரண்ட் ஓயரை கடிச்சி 🤕 இறந்தாப்புல. கன்பீஸா இருக்குல.(ராம்குமார் மற்றும் மின்சார பிரச்சனை).*

😴 *நீங்க இந்த கன்பீஸ்லயே இருப்பிங்கனு நினைச்சி, நாங்க காவிரி எல்லை பிரச்சனைய தீர்க்க போனா அதுக்கு வந்து போராட்டம் பண்ணி ஆளுங்கட்சிய விட்டு டிஸ்டப் பண்ண வச்சிங்க.(காவிரி எல்லை பிரச்சனை)*

😓 *இப்ப பாருங்க பாவம்😢 ஜெயலலிதா இறந்துட்டாங்க. எம்எல்ஏக்களை குழம்ப வச்சி, உங்களையும் முட்டாளாக்குனோம். (முதல்வர் இறப்பு, ஓபிஎஸ் பிரச்சனை).*

🤓 *இன்னைக்கு பாருங்க ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒண்ணு சேர்ந்துட்டாங்க. சசிகலாவும் உள்ளே அனுப்பி ஷாப்பிங் போக பாக்கெட் மணியும் குடுத்துட்டு அனுப்பிட்டோம்.(ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒற்றுமை, ஷாப்பிங் சசிகலா)*

😅 *என்னடா.... ஆட்சி கலையும் ஆட்சி கலையும்னு வேடிக்கை பார்த்த சமயத்துல, சிங்கிள் கேப்ல ஜிஎஸ்டிய கொண்டு வந்தோம். ஆ...ஊ...னு குதிச்சிங்க.(ஜிஎஸ்டி).*

😅 *சரி கொஞ்சம் நாள் இப்படி தான் கத்துவாங்க, நம்ம மாட்டுக்கறி விவகாரத்தை முடிச்சிடலாம்னு பார்த்தா, அதுக்கும் குரல் கொடுக்க வந்திங்க. கலவரம் அதுவாவே உருவாகிட்டு. எங்களுக்கும் கலவரத்திற்கும் சம்பந்தமில்லை. (மாட்டுக் கறி பிரச்சனை)*

😅 *இவனுங்க என்னடா இப்படி அடிச்சிட்டு இருக்கானுங்களேனு நினைச்சி ப்ளு வேல் கேம்மை கொண்டு வந்தோம். விளையாடி நீங்களா உயிரை விட்டா நாங்க என்ன பண்றது🤕(ப்ளூ வேல் கேம்)*

😅 *சரி உங்களை எல்லாரையும் டாக்டர் ஆக்கிரலாம் நினைச்சி தான் இந்தியா புல்லா நீட் தேர்வு கொண்டு வந்தோம். (நீட் தேர்வு)*

😭 *அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு அனிதா பொண்ணு இறந்துட்டாங்க.(அனிதா மரணம்).*

😔 *போராட்டம் பண்ண ஆரம்பிச்சிங்க இப்ப பாரு உச்சநீதிமன்றத்துல தீர்ப்பை கொடுக்க சொல்லி, பைல் குளோஸ் பண்ணிட்டோம். (உச்சநீதிமன்ற தீர்ப்பும், போராட்ட களமும்😭).*

🐜 😅 *இதுக்கு மேலயும் எதாவது துள்ளுனிங்க,  கவர்மெண்ட் ஆஸ்பத்திரில டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கொடுக்க சொல்லுவோம். அத நீங்க சாப்பிடணும். அப்பதான் நீங்க ஹெல்தியா இருக்கலாம்.(டெங்கு காய்ச்சல்)*

💃🏻 *அப்பதான் நீங்க ஆரோக்கியமா ஜிமிக்கி கம்மல், ஜிமிக்கி கம்மல்னு குத்தாட்டம் போட முடியும்.(ஜிமிக்கி, கம்மல் டான்ஸ்)*😉

*🤒😜 _இதெல்லாம் நாங்க காலம், காலமா பண்ற ஒண்ணு தான், நீங்க ஏற்கனவே கூடங்குளம் பிரச்சனையப்ப போராட்டம் பண்ணுனிங்க. என்ன ஆச்சு ஒண்ணும் ஆகல.(கூடங்குளம் பிரச்சனை)_*☹

*😏நாங்க தான் ஜெயாடிவில ஆளுங்கட்சிய விட்டு ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைனு சொல்ல வச்சோமே. அது ஒரு டிவினு மண் சோறு திங்கிறாதையும், காவடி தூக்குறதையும், பார்த்த பயலுங்க தானே நீங்க.(ஜெயா டிவி)*

🤔 *சட்டக் கல்லூரில ஒரு தடவை தடியடி பண்ணோம். ஞாபகமிருக்கா? அது என்னாச்சு தெரியலல. அத என்ன பண்ணோம்னு எங்களுக்கே மறந்து போச்சி😬(சட்டக் கல்லூரி, தடியடி பிரச்சனை)*😰😨🙄

*😝🤓நடிகர்கள் எதாவது குரல் குடுத்தா கோர்ட்ல கேஸ் போடுவோம், இல்ல போட வைப்போம். அப்புறம் படத்தை ரீலீஸ் பண்ண விட மாட்டோம்.(தனுஷ் மதுரை பிரச்சனை, கமல், விஜய் பட பிரச்சனை)*

🤒😜 _*ரமணா பார்ட் 2 முருகதாஸ் எடுக்கல. ஆனா நாங்க எடுத்தோம்😉. லண்டன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கோயம்பத்தூர், உசிலம்பட்டி டாக்டர் கூட, செக்கப் வந்து பார்த்தாங்க. அம்மா எந்த குறையும் இல்லாம நல்லாதான் இருந்தாங்க. கூடிய சீக்கிரம் வந்துருவாங்க, வந்துருவாங்கனு, எல்கேஜி புள்ளைக்கு A, B, C, D சொல்லிக் குடுக்குற மாதிரியே  ஒவ்வொருத்தரையும்  சொல்ல வைக்க நாங்க பட்ட பாடு இருக்கே 😴😴😴. அதுக்குள்ள இந்த தந்தி டிவிக்காரன், ரங்கராஜ் பாண்டேதான், சீக்ரட்டை வெளியே சொல்லி பூகம்பத்தை உண்டு பண்ணிட்டான். திரும்ப அப்படிலாம் இல்லனு சொல்லி நம்ப வச்சி, நைட் 12 மணிக்கு மேல சோலிய முடிச்சோம். சரி சின்னம்மா முதலமைச்சர் ஆயிடலாம்னு கனவோட இருந்தாங்க. திடீர்னு பார்த்தா😱 நான்தான் வாரிசுனு மேக்கப்பு பைய தூக்கிட்டு வந்துச்சி தீபா. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயிங்கிற மாதிரி ஐ... அம்மா மாதிரி இருக்காங்கடானு ஒரு கூட்டம் கிளம்புனிச்சி. அப்புறம் தீபக், தீபா புருஷன் மாதவன், எத்தனை கொசுங்க தொல்லை. கடைசியா ஓபிஎஸ்சும் தர்ம யுத்தத்துல இறங்கிட்டாரு. அப்ப நான் (சின்னம்மா) மனசுல நினைச்சது ஒண்ணே ஒண்ணு தான். இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்😎...எல்லா சூழ்நிலையிலும்...'நீ தோத்துட்ட... நீ தோத்துட்டன்னு '😤உன் முன்னாடி நின்னு அலறினாலும😱...நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும்😉 எங்கேயும்😬 எப்பவும் 🙅உன்னை ஜெயிக்க முடியாது...! 😇(விவேகம் பட டயலாக் தான்). அப்புறம் என்னானா சொத்துக்குவிப்பு  வழக்கை கொண்டு வந்து என் கனவ நாசப்பண்ணிட்டாங்க.* *(அப்போலோ கூத்தும்,*
*தீபா, மாதவன்* *பிரச்சனை,லண்டன் டாக்டர் (பீலே) போலோ,*
  *தமிழக அரசியலும், விவேகம் டீசர் டிரண்ட் )*_😜😝

😉😜🙃 _*இப்ப தமிழக அரசியல்ல அமைதிப்படை பார்ட் 2  படத்துக்கு கொண்டு போயி, நட்புக்காக படத்துல ஓடிட்டு இருக்கு. அப்போ சட்டசபைல சட்டைய கிழிச்சதுலாம் வேஸ்ட்டா போயிடுமா 😨(பெரும்பான்மை கூத்து, சட்டசபை சட்டைகிழி).*_🤓

🤡 *எங்களுக்கு இப்போதைக்கு அந்த மலர் தமிழ்நாட்டுல மலரணும். விரைவில் 2ஜி வழக்குக்கு தீர்ப்பு குடுத்துடுவோம். அப்புறம் சின்னம் இல்லாத கட்சில நாங்க எங்க சின்னத்தோடு நின்னு அதிக இடத்துல எங்க காலடிய வைப்போம். இது தான் எங்க பிளான்.(2ஜி வழக்கு)*

😰 *இதுல எதாவது உங்க வேலைய மாத்தி காமிச்சிங்கனா வேற பிளான் போட்டு டாஸ்மாக் கடைகளை ஓப்பன் பண்ண விட்டு உங்க புத்திய இன்னும் மழுங்கடிக்க செய்வோம்.(டாஸ்மாக் பிரச்சனை)*

😰🚂 *குடிச்சிட்டு ரயில்வே டிராக்ல செத்து போன கூட, காதலிச்சி செத்து போனான், ஆணவ கொலை செஞ்சிட்டாங்கனு புதிய டாப்பிக்கை உருவாக்குவான். இல்ல ரயில்ல மறுபடியும் ஓட்ட போட வந்தான் கீழே விழுந்து செத்துட்டானு சொல்ல வைப்போம்.(ரயில் ஓட்டை போட்டது, ஆணவக் கொலை)*

😡 *சரி குழந்தைங்க செத்ததுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? ஆக்ஸிஜன் இல்லாதது எங்க தப்பா?(பச்சிளம் குழந்தை உயிர் பலி).*

😣 *கேரளாவில் மருந்த கொட்ட இடமில்லை. தமிழ்நாட்டுல இடம் இருக்கு. கொட்டுனாலும் எவனும் கண்டுக்கமாட்றிங்க. அதெல்லாம் உங்க தப்புபா. இதுல நாங்க என்ன தவறு செஞ்சோம்.(கேரள மருந்துகழிவு தமிழ்நாடு குப்பையில்)*👊

☹ *இப்ப வேற செய்தி இடைல வந்ததும், ரயில் ஓட்டைய திரும்பவும் மறந்துடிங்க பாத்திங்களா.(மனதை திசை திருப்புவது)*

😅 *உங்களுக்கு 4ஜி, ஜியோ சிம் இலவசமா குடுத்து ரேட் கட்டர் கம்மியா குடுத்ததே, நீங்க அப்பப்ப வீணாப் போன செய்திகளுக்கு முக்கியத்துவம் குடுக்கணும் அப்படிங்கிறதுக்காக தான். (ஜியோ+ஆஃபர்).*

*மீம்ஸ் போடுபவர்கள் நல்ல விசயங்களுக்கு மீம்ஸ் போடுங்க. ஆகாத, போகாத, 5 பைசாவுக்கு தேவையில்லாத விசயத்துக்கு மீம்ஸ் போட்டு டைம் வேஸ்ட் பண்ணாதிங்க🤦🏼‍♂. அடுத்தவரை கஷ்டப்படுத்துற மாதிரியும், அடுத்தவர் தொழிலை பாதிக்கிற மாதிரியான மீம்ஸ்களை விட்டு விடுவது சிறப்பு👌🏼👌🏼. சில சமயங்களில் முகம் சுளிக்க வைக்கிறது😏. நாட்டு நடப்பு மீம்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தா நல்லாருக்கும். போற போக்க பார்த்தால் இரத்த பதிவு கூட, மீம்ஸ் போட்டதான் திரும்பி பார்ப்பாங்க போல😏.(மீம்ஸ் டிரண்ட்)*

🤦🏻‍♂🤦🏻‍♀ *ச்சை... ச்சை... நம்மள எந்தளவுக்கு முட்டாள் ஆக்குறானுங்க. இத விட விளக்கமா எப்படி சொல்றதுனு தெரில.*

📰 *நம்ம முதல் செய்தி என்ன படிச்சோம்? இப்ப எதுல வந்து நிக்கிறோம்?.*❓

😴 *நம்மளை எப்படி போட்டு குழப்புறானுங்க. நம்ம எந்த செய்திக்கு முக்கியத்துவம் தரணும், எந்த செய்திக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்ற அடிப்படை அறிவுக்கூட நம்மில் பலருக்கு இல்லை. இதுக்கு  ஊடகங்களும், செய்தித்தாள்களும் சப்போட் வேற. நேர்மையான செய்தி தர முடிலனா வேற தொழிலுக்கு மாறிடுங்க. முதல்ல அவனுங்க சொல்ற எண்டர்டெய்ன்மண்ட் சம்பந்தப்பட்ட விசயங்களை பகிர்வதை நிறுத்தனும். நம்ம நல்ல விசயங்களுக்கு மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.*

🙄 *விவசாயிங்க மலம் தின்ன பிரச்சனைய மூச்சு காத்து இல்லாம மறச்சிட்டிங்களேடா🤦🏼‍♂, இதுக்கு என்ன வார்த்தை சொல்றனு இப்ப தெரில...*🙆🏻

*🤔இவ்வளவு நாள் கேப் விட்டு, நீட் பிரச்சனை தீர்ப்பு வந்ததும், லைட்டா போராட்டம் ஆரம்பித்தது. உடனே டெல்லில மலம் தின்னும் போராட்டம் நடத்திருக்காங்க. இவங்க தமிழ்நாட்டு பேரை கெடுக்கிறாங்களோ, திசைதிருப்ப இப்படி பண்றாங்களோங்கிற சந்தேகம் வருது. இது பத்தி தெரியாம இப்ப பேசுறது சரியில்லை.*

👌 *நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன் வாட்ஸ்அப், பேஸ்புக்ல எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு, தேவையில்லாம வேற செய்திக்கு டிரண்ட்டை ஏற்படுத்தி தொலைக்கிறதே உங்களை மாதிரி ஆட்கள் தான். இனிமேலாவது திருந்துனா, திருந்துங்க. இல்ல எப்படியாவது  தொலைங்க.*🤷🏻‍♂🤷🏻‍♀😏

🙏 *நன்றி*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

🥇 *Uthayayuva*
🥈 *Leave me alone*
⁨ 🥉 *⚡SACHIN RAJESH⚡& ⁩SP.Vignesh⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
⛔ *இனிமே வீணாப்போன செய்திகளை சமூக வலைத்தளங்களில் போடுவதை தவிர்க்க வேண்டும். அதை லைக் பண்ணவும் கூடாது, ஷேர் பண்ணவும் கூடாது, கமெண்ட் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அத கண்டுக்காம இருப்பதே மேல். நம்ம தேவையில்லாத விசயங்களை பத்தி பேசுவதால் தான் அது டிரண்ட் ஆகின்றது. அதுக்கு நல்ல விசயங்களை டிரண்ட் செய்தால் நம்ம நாட்டு மக்கள் ஒற்றுமை, வளர்ச்சிக்கு உதவும். நாலு பேரு அத திரும்பியாவது பார்ப்பாங்க. நம்ம கண்ட கண்ட குப்பைகளை போடுவதால் தான், பலரை பல வழிகளில் திசை மாற வைக்கின்றது. நல்ல விசயங்களுக்கு சப்போட் பண்ணுவோம். நல்ல விசயங்களை ஷேர் பண்ணுவோம். நல்ல விசயங்களை பத்தி மட்டும் பேசுவோம்.*👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*செயற்பால தோரும் அறனே ஒருவற்கு*
*உயற்பால தோரும் பழி*
            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ்சேர்க்கும்
    
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
மக்கள் நிலையோ...
*கண்டதே காட்சி கொண்டதே கோலம்.*

உண்மைநிலையோ....
*பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.*

✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻 *குட்டிராஜேஷ்*
*9486552988*

👩🏻‍✈🏹 *GK*🏹👩🏻‍✈
✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

   😎 *மணிவிஜய்*
😎🌱 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...