🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :19.09.2017.*
🌹 *கிழமை : செவ்வாய்க்கிழமை*
____________________________________
*அறிவோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
😇 *தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம்.*
💐 *-கென்னடி*💐
👍👍👍👍👍👍👍👍👍👍👍
*அட்மின் கருத்து.*
_____________________
*தெரிந்தவர் தவறு செய்தால் சுட்டிக் காட்ட தயங்காதீர்கள்,*
*தெரியாதவரிடம் அவர் அவமானப்படாமல் தடுக்கலாம்.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*நல்லா இருந்த நாடும், நான் (மக்கள்) படுத்துன பாடும்...*
🌍😰😨😢😥😓🤕😰😨😴🌍
*கலந்துரையாடல் குழுவிற்கு என்னுடைய தமிழ் வணக்கம்.🙏🏻*
*இது என்னுடைய முதல் முடிவுரை😳 என்னாப்பா முதல்லயே முடிவும் வந்துருச்சு., ஏதோ எனக்கு மட்டும் இப்டி நடக்குது...🤦🏻♂ ஓகே வாங்க விஷயத்துக்குள்ள போவோம்...*
*அப்டி என்ன விஷயம் இருக்கும் இந்த முடிவுரைல..🤔 அப்டி யோசிக்கிற அளவுக்கு ஒன்னும் இருக்காது.. ஒரு வேளை நீங்க இத படிக்கும் போது உங்களுக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்.. அவ்வளவு தான்.. அதுக்கு நான் கேரன்டி..😎*
*👶🏻குழந்தையாக நான்...*
*🍼நான் பிறந்த உடனே நியூஸ்ல சொல்லுறாங்க. "உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடம் என்று." அப்போ இந்த வளர்ச்சிக்கு நானும் ஒரு காரணம்.. ஓகே எங்க அப்பாவ காணோம் எங்கேன்னு பாத்தா "பிறப்பு சான்றிதழ்" வாங்க வரிசைல நிக்கிறார்.*
*🍼அடுத்தது வீட்டுல எல்லா கார்ப்பரேட் பொருளும் (Grooming, Bathing, Oral Care, Skin care) வாங்கி வச்சுருக்காங்க எல்லாம் எனக்காக.. இப்போ இந்த பொருள்கள் தயாரிக்கிற கார்ப்பரேட் கம்பெனி வளர்ச்சிக்கு நானும் ஒரு காரணம்.*
*🍼நான் அழகா இருக்கனும் னு நினைச்சி புது புது ட்ரெஸ் வாங்கி போடுறாங்க.. என்ன போட்டோ எடுத்து ஃபேஸ்புக் ல போட்டு லைகஸ் வாங்குறாங்க... எதோ விவசாயம் அழிந்து வருதா .. அதுக்கு கிடைச்சா லைக்ஸ் விட ஏன் போட்டோவுக்கு லைக்ஸ் அதிகம்... இதுனால சமூக வலைதளங்கள்ள ஒரு விழிப்புணர்வு வராம தடுக்கும் வளர்ச்சிக்கு நான் காரணம்.*
*🍼டீவில ஒரு பாட்டு பாடும் அதுக்கு என்ன டான்ஸ் ஆட சொல்லுறாங்க.. நானும் அந்த பாட்டுக்கு ஆடுவேன். அது என்ன பாட்டு -ன ~"பிட்டு படம் டீ ... பிட்டு படம் டீ..."~ இந்த மாதிரி கருத்துள்ள பாடல்கள் அதிகமா வர நானும் ஒரு காரணம்.*
*🍼நான் குழந்தையா இருக்கேன் இருந்தாலும் என்ன காரணமா வச்சு இந்த நாட்டுல இவ்ளோ வளர்ச்சி... எல்லாம் எப்படிபட்ட வளர்ச்சின்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க....*
*👦🏻👧🏻 மாணவர்களாகிய நான்...*
*🏫3-வயசுல பள்ளிக்கூடம். என்னாது பள்ளிக்கூடமா...! ஐயோ😱 எனக்கு சரியா பேச கூட தெரியாது.. என்னை மாணவர்கள் பட்டியல்ல சேர்த்துட்டாங்க., என் பெற்றோர்களுக்கு நான் இன்னும் குழந்தை-னு தெரியல.., காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள்....*
*🏫புது பள்ளிக்கூடம். எனக்கு ஒன்னும் புரியல. ஏன் இந்த நிலமை..! யாரும் விருப்பப்பட்டு எங்களை பள்ளிக்கூடத்துல சேர்க்கல..*
*காரணம்*
*கவரும் வண்ணம் இருக்குற ஸ்கூல் விளம்பரங்கள் மற்றும் பல பேர் எங்க நம்மல "ஏன் இன்னும் ஸ்கூல்ல சேர்க்கல..?" இந்த கேள்வி கேட்டுறகூடாதுன்னு.. வெட்டி கவுரவம்..*
*🏫நாங்களா விருப்பப்பட்டு கேட்குற வரைக்கும் நீங்க.. காத்திருக்கனும். இப்போ எங்கள காரணமா வச்சு இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையுது...*
*🏫எங்க குடும்பத்துல இருக்குறவங்க எல்லாம் தமிழ்ல தான் பேசுறாங்க.. எனக்கு ஸ்கூல்ல டீச்சர் இங்கிலீஷ்ல தான் பேசனும்னு சொல்லுறாங்க.. அதுமட்டும் இல்லாம எல்லா பாடமும் இங்கிலீஷ்ல தான் இருக்கு.. இப்போ நான் அதிக நேரம் ஸ்கூல்ல தான் இருக்கேன். இங்கிலீஷ்ல பேசுவதுதான் நல்லது.. அப்போ தமிழ் அழிந்து போக நானும் ஒரு காரணம்...*
*🏫நான் 3-வது வரைக்கும் நல்லா படிச்சுட்டேன். இப்போ அப்பாவுக்கு சரியா என்னோட ஸ்கூல் பீஸ் கட்டமுடியல அதுனால என்ன தமிழ் மீடியம் அதாவது அரசு பள்ளிக்கூடத்துல சேர்த்துட்டாரு.. அப்பாவோட மன உளைச்சலுக்கு நான் காரணம் ஆகிட்டேன்..*
*🏫பள்ளிக்கூடத்தில தினமும் காலைல ஒரு உறுதிமொழி சொல்லுவோம்*
*"இந்தியா எனது நாடு ! இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்! என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன் ; இந்நாட்டின் பழம் பெருமைக்காகவும் , பன்முக மரபு சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன்; இந்நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட என்றும் பாடு படுவேன்; என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் மற்றும் சக பணியாளர்கள் அனைவரையும் மதிப்பேன்; எல்லாரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்; என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் என் நிறுவனத்திற்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலனும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன் என்று உளமார நான் உறுதி கூறுகிறேன்.*
*🏫இத சொல்லித்தந்தவங்களே சரியா இது படி நடக்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்துல இருந்து வெளிய வந்தா ரோட்டுல தண்ணிக்கு அடிச்சுக்கிராங்க.. ரேசன் கடைல அடிச்சுக்கிராங்க... அப்போ இவங்களும் ஃபாலோ பன்னமாட்றாங்க.. இதுதான் இந்தியா என் தாய்நாடா...!!*
*👨🏻👩🏻 இளைஞர்களாக நான்...*
*👨🏻அப்துல்கலாம் ஐயா கேட்ட 2000 இளைஞர்கள் -ல நானும் ஒருவனாக ஆசைப்பட்டவன்....*
*👨🏻இஞ்சினியரிங் வேலை தான் நல்லா இருக்கும்னு நெனச்சு.. நானும் இஞ்சினியரிங் படிக்க ஆரம்பிச்சேன். அப்ப தோனுச்சு நான் நல்லா சம்பாதிச்சு நாலு பேருக்கு உதவி பண்ணனும்னு.. ஆனா படிச்சு முடிச்ச பிறகு தான் தெரியுது.. என்ன பாத்துக்க ஒரு ஆளில்லையேன்னு..*
*👨🏻காரணம் இந்த சமுதாயம்.. உதாரணமா "பத்து மீன் போட்டு வளர்க்க வேண்டிய தொட்டியில நூறு மீன் போட்டுற மாதிரி" 1000 பேர் படிக்க வேண்டிய கல்லூரில 1 லட்சம் பேர் சேர்ந்துடுராங்க.. கடைசில வேலை கிடைக்குமா இருக்காங்க..*
*👨🏻ரோட்டுல போய்ட்டு இருக்கும் போது ஒரு விபத்து.. பாவம் ஒரு ஆள் உயிருக்கு போராடிட்டு இருந்தாரு சுத்தியும் இருபது பேர் இருந்தாங்க.. அவங்கல்ல யாராவது 108 க்கு தகவல் சொல்லிருப்பாங்கன்னு நெனச்சு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டேன் ஃபேஸ்புக் ல பதிவு பண்ணி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த..*
*👨🏻இங்க நம்ம பிரச்சனையே முடிவுக்கு வராம இருக்கு இதுல நாட்டு பிரச்சனை அதுவும் மாசம் மாசம் புதுசு புதுசா வருது.. அதுக்கு போராட்டம் நடத்தி கடைசியா அடி வாங்குறது தான் மிச்சம்..*
*👨🏻நாங்க கோபத்தோட உச்சத்தில போராட்டம் பண்ணிட்டு இருந்தா இரண்டாவது நாள் புதுசா ஒரு வீடியோ ரிலீஸ் பண்ணிடுறாங்க. சரி அது என்ன வீடியோ ன்னு பார்த்தா உடனே அந்த வீடியோ வைரல் ஆயிருச்சு🤦🏻♂.*
*👨🏻அடுத்த நாள் போராட்டத்தையும் அந்த வீடியோவையும் சம்பந்தப்படுத்தி போராட்டத்த கொச்சப்படுத்திடுறாங்க..*
*🤔நாடு பட்ட பாடு பத்தி சில கேள்விகள்...?*
*😡மக்கள் கிட்ட...*
*🤔நீங்க நல்லவங்களா..? கெட்டவங்களா..? உங்கள நம்பி ஒரு காரியமும் பண்ண முடியல..! உங்களால இப்போ பள்ளிக்கூடத்துல படிக்க வேண்டிய பிள்ளைகள் ரோட்டுல போராட்டம் பண்ணுறாங்க.. எல்லாம் நீங்க நம்பி உக்கார வச்ச அரசியல் தலைவர்களால.. எப்போ நீங்க திருந்துவிங்க.. ஏன் எல்லாத்தையும் மறந்து போறிங்க.. இன்னும் எவ்வளவு பட்டா நீங்க திருந்துவிங்க.. 500 ரூபாய் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா... தயவுசெய்து திருந்துங்க.. நான் என்னையும் சேர்த்து தான் சொல்லுறேன்... நானும் மக்கள்ல ஒருவன் தான்..*
*😡இளைஞர்கள் கிட்ட...*
*🤔உங்க கோபம் எவ்வளவு நாளைக்கு இருக்கும் அப்டின்றது உங்கள விட மத்தவங்களுக்கு தெரிஞ்சுருக்கு. ஏன் போராட்டங்கள் நடக்கும்போது உங்க கவனத்தை திசைதிருப்பும் விஷயத்துல உங்க கவனம் இருக்கு.. ஏன் அந்த விஷயத்த வைரலாக்குரிங்க.. சரி நீங்க ஓவியா -க்கு ஓட்டு போட்டிங்களே அந்த பொண்ணோட அடுத்த கருத்துள்ள படம் ~"ஓவியாவ விட்டா வேற யாரு?"~ சமூதாயம் எங்க போகுதுன்னு பாருங்க. இளைஞர்களே.. நாளைய தமிழகம் உங்க கையில் தான் இருக்கு தயவுசெய்து யோசிச்சு பாருங்க...*
*😡மாதர் சங்கம்கிட்ட...*
*🤔நீங்க எங்க இருக்கிங்க.. சிம்பு பாட்டு பாடுனாதான் தப்பு சொல்ல வருவிங்களா..? நீட் பரிச்சை எழுத போகும் போது அநாகரிகமா நடந்தப்போ உங்கள காணோம்..!! தோழி வளர்மதி கைதானப்போ உங்கள காணோம்..!! டாக்டர்.அனிதா தற்கொலை அப்பவும் உங்கள காணோம்..!! நாப்கின் -கு GST வரி போட்டாங்க அப்பவும் உங்கள காணோம்..!!*
*😡அரசியல் வாதிகள் கிட்ட..*
*😅நாங்க இப்போ காமெடி சேனலே பாக்குறதில்ல அதுக்கு காரணம் நீங்க பண்ணுற காமெடிய விடவா அதுல இருக்கு..*
*😅எதோ ஒன்ன குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சா அது புத்தி எங்க போகும்.. அது மாதிரி இருக்கு நாங்க உங்களுக்கு பண்ண வேலை.. உங்கள குறை சொல்லவே கூடாது.. எல்லாம் எங்க தப்புதான்..*
_________________________________
*👏பாராட்ட வேண்டிய விஷயம்..🤝*
*பிரச்சினை னு வந்துட்டா எங்க இருந்தாலும் ஒரு கூட்டம் சேர்ந்துடுறோம்.. அது நகரமாக இருந்தாலும்.. கிராமம்மாக இருந்தாலும்.. அந்த விஷயத்தில நம்மள அடிச்சுக்க ஆளே இல்ல...*
*போராட்டங்கள் உருவாக காரணம்..*🤔
*தொடர்ந்து வஞ்சிக்கப்படும் மக்களுக்குப் போராட்டக் களங்களை நோக்கி விரைய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இந்நிலையில் தெளிவான அரசியல் புரிதல் கொண்டு, இத்தனை ஆண்டு காலமும் இந்தியாவின் தனித்துவமிக்க மாநிலமாக விளங்கிவரக் காரணமான திராவிட இயக்கக் கோட்பாடுகளின் மையமான சமூக நீதி முதல் மாநில சுயாட்சி அதிகாரம் மற்றும் இந்தி எதிர்ப்பு வரை அனைத்தையும் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் பிம்பங்களில் சிக்காமல் இருக்க வேண்டியது தமிழக மக்களின் அவசியமாகத் தெரிகிறது*
*👍🏻மாற்றம் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் இருந்து ஆரம்பிப்பது நல்லது...*🙏🏻
🙏 *நன்றி.*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🥇 *KS*
🥈 *SP.Vignesh&*
*DEVENDRANhp*
🥉 *பிரபாகரன் சிதம்பரம்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தலைப்பு பத்தி பலருக்கு சந்தேகம். கொஞ்சம் சிந்திச்சா வந்துரும். சரி யார் யார் என்ன பண்றாங்கனு பாப்போம், என்ற அடிப்படையிலேயே இத்தலைப்பு வைக்கப்பட்டது. காலையிலிருந்து செம ஜாலி. எதிர்பார்த்தா மாதிரியே நடந்துச்சி. நான் (மக்கள் இடத்திலிருந்து படுத்துன பாடு) படுத்துன பாடு சிம்பிளா😱 என்னால முடிஞ்சத முடிவுரைல சொல்லி முடிச்சிட்டேன். நீங்க இதுவரை நாட்டை கெடுக்க, அல்லது நாட்டை உயர்த்த, என்னென்ன பாடு படுத்துனிங்க😆. கொஞ்சம் சிந்திச்சி பாருங்க. நம் இதுவரை செய்த தப்பை திருத்திக் கொண்டு, இனிமேலாவது நம் நாடு முன்னேற முயற்சி செய்வோம்.*👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்*
*எண்ணுவ மென்ப திழுக்கு*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்து கொள்ளவும்
*ஆனைக்கும் அடிசறுக்கும்*
புரிந்துகொள்ளவும்
*ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை*
தெரிந்துகொள்ளவும்
*பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
*👨🏻🎤ஜோக்கர் என்ற ராமகிருஷ்ணன் (கம்பம்)~ 8124323975*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *சங்கிலி பூதத்தான்*
*9150751098*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment