🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :20.09.2017.*
🌹 *கிழமை :புதன்கிழமை*
____________________________________
*அறிவோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
💪 _*சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல.....எடுக்கப்படுவது....!*_👍
💐 *நேதாஜி*💐
👍👍👍👍👍👍👍👍👍👍👍
*அட்மின் கருத்து.*
_____________________
👍 *நீங்கள் விரும்பியவற்றிற்காக, நீங்கள் போராடவில்லையென்றால்,*
👎 *பிறகு இழந்ததைக் கேட்டு அழாதீர்கள்.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*சமுதாயத்தில் நமக்கு அருகில் தவறு நடக்கும் போது, மக்களுக்கு தட்டிக் கேட்கும் மனப்பான்மை அதிகம் உள்ளதா? இல்லை ஒதுங்கி போகும் மனப்பான்மை அதிகம் உள்ளதா?*
✅👍❎👎✅👍❎👎✅👍❎
⚔ *தன்னுடைய குடும்ப சிறையை விட்டு வெளியே வருவதற்குகே தயங்குகிறாங்க காரணம் இந்த உலகத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் பயம்,மற்றும் தனது உயிர் மேல் அவங்க வைத்திருக்கும் ஆசை.சராசரி மனிதனாக தானும் நூற்றில் ஒருத்தனாக வாழ்ந்து விட்டு செல்வோம் என்ற எண்ணத்தில் தன்னையே தாழ்வாக நினைத்து கொள்கிறாங்க*
⚔ *இந்த சமூதாயம் தலை குனிந்து நிற்பதற்கு நாம் அனைவருமே பொறுப்பு காரணம் நாம் பெரும்பாலும் சுயநலவாதிகள் பொறுபற்றவர்கள் பொதுநலத்தை சிந்திக்காதவர்கள்*😡
👍 _*தனிமனிதர்கள் அனைவரும் சேர்ந்ததே நமது இந்த சமுதாயம்*_👍
⚔ *ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கடமையும் பிரச்சனைகள் இருக்கதான் செய்கின்றன இல்லையென்று சொல்லவில்லை*
⚔ *அதனையும்தாண்டி சமூகத்தின் பங்கோடுதான் நாம் வாழ்ந்துகொண்டுயிருகிறோம்*
⚔ *சினிமாவில் காண்பிக்கும் சமுதாயத்தை தட்டிகேட்கும் நடிகர்களை கொண்டடும் நீங்கள் நிஜவாழ்வில் தங்கள் பங்களிப்பை கொடுக்காதது ஏனோ?*🤙
⚔ *தெரு ஊருக்களில் நடக்கும் பிரச்சனைகளில் தலையிடும் தோழ/தோழிகளை உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலைனு மட்டம்தட்டுவது ஏனோ?*🤙
⚔ *சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை தட்டிகேட்காமல் விட்டால் ரோட்டில் இருந்து பக்கத்துவீட்டுக்கு பின் நம்வீட்டுக்கே அதே பிரச்சனைவந்தால் என்ன செய்வீர்?*🤙
⚔ *குடும்பத்தில்யுள்ள நபருக்கு பிரச்சனைனா தட்டிகேட்கும்நாம் சமூதயத்தில் தங்களின் பங்களிப்பை கொடுக்காது ஏன்?*🤙
⚔ *சிறு தீக்குச்சி பெரிய காட்டை எரித்து சாம்பல் ஆக்குவதுபோல் நம்முடைய சிறுமுயற்சிதான் நல்லொதொரு சமுதாயம் உருவாகும்*
⚔ *ஜல்லிக்கட்டு மாதிரி பெரிய பிரச்சனை உரிமைனா தட்டி கேட்கும் மனம் அதிகம்*
*தட்டிக்கேட்க எல்லாரும் முன்வந்தா சமுக பிரச்சினை எளிமையா முடிக்கலாம்*👍
⚔ *சோசியல் மீடியாவில் ஒருவாறாகவும் பர்சனல் மீடியாவில் இன்னொரு மாதிரியும் நடந்துகொள்கிறோமே ஏன் ?*🤙😡
⚔ *நாம் நல்லது மட்டுமே செய்வோம் ஏன் கெட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பது கூட ஒருவித கெடுதலே ஏன் நல்லது மட்டுமே செய்கிறோம் சுயநலம் ஏன் தவறுகளை தட்டி கேட்பதில்லை கேட்டால் நமக்கு ஏன் வம்பு நல்லதை மட்டும் பாருங்கள் என்கிறார்கள் நாம் அப்படி சொல்லித்தான் வளர்க்கபட்டுள்ளோம்*
⚔ *தவறை தட்டிகேட்கதே என்பதன் உள் அர்த்தமே கண் முன்னே ஒரு கொலை நடக்கிறது பாசிடிவாக பாருங்கள் என்பது உனக்கு எதற்கு வம்பு ஒதுங்கி போ என்பது போல இல்லையா*😡
😡 _*தவறு...தவறு ...தவறு...... இங்கே அனைத்திலும் தவறுகள் அத்துமீறி நடந்துகொண்டிருக்கிறது.*_
😡 _*இதனால் வரும்பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.....இங்கே தவறுகள் அதிகமாவத்தினால் தான் பலபிரச்சினைகள் உருவாகிக்கொண்டிருக்கிறது......*_
🛠 _*இவையெல்லாம் யாரால் நம்முள் வாழும் மக்களில் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய சிறுசிறு தவறும் துணிந்து செய்வதன் விளைவே பிரச்சனைக்கு காரணம்.*_
🛠 _*தவறை செய்பவனும் அதே மனிதன் செய்யும் தவறை தட்டிக்கேட்க நினைப்பவனும் அதே மனிதன் தான்.*_
🛠 _*எதற்க்காக இவ்வாறு தவரிழைக்க முன்வருகிறார்கள்,எதற்க்காக தட்டிக்கேட்க முன்வருகிறார்கள் என்றால் இருவரும் இந்த பூமியில் வாழ மட்டுமே......*_
🛠 _*இதில் அடுத்தவனை கெடுத்து வாழனும்னு நினைக்க கூடிய எண்ணமே அதிகமாகிறது.....*_
_*தான் மட்டும் நல்லா இருந்தா போதும்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது....இவையே பல தவறுகளுக்கு காரணமாகிறது.*_
🛠 _*இதில் தட்டி கேட்பவன் பாதிக்க பட்டவனாகிறான்....தவறு செய்பவனைவிட தட்டி கேட்பவரின் நிலையே கேள்விக்குரியாக அமைவதால்...பெரும்பாலும் துணிந்து யாரும் தட்டிகேக்கவும் வருவதில்லை.*_
😰 *ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் அநியாயத்தை தட்டி கேட்க வேண்டும் என்ற வெறி ஒளிந்து கொண்டுதானிருக்கிறான்..!!*
💪 *விளக்கை ஏற்றி வைத்த தீக்குச்சி ஒன்று பிரகாசம் தந்துவிட்டு தன்னை மாய்த்துக்கொள்வதுபோல எத்தனை எத்தனை போராளிகள் தற்போது..!!*
💪 *மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாது இப்படியாகப்பட்ட நிலையில் புரட்சி செய்ய துணிவு வேண்டாம். உரிமைகளின் வெறி ரத்தத்தை சூடேற்றினால் போதும்..!!*👍
👊 *இந்த சமுதாயம் எனக்காக ஒன்றும் செய்யாத போது, நான் ஏன் இந்த சமுதாயத்திற்காக செத்து சொத்து இழக்க வேண்டும் என்கிறவர்கள் தலை குனியுங்கள்..!!*
😡 *பாட்டாளிகளிடம் புடுங்கிய பணத்தை பாட்டாளிகளுக்கு செலவழிக்காமல், முதலாளிகளின் மூக்கு சொறிந்து விட செலவழிப்பதற்கு பதில் நாக்கு புடுங்கி சாகலாம்..!!*
😡 *சமூக சீர்திருத்தம், சமத்துவம்,சம உரிமை இவற்றை காக்க தலைகுனிவும் தேவையில்லை, தலைவனாகவும் அவசியமில்லை, சொரணையிருத்தல் போதும்..!!*💪👍
👊 *இப்போதெல்லாம் இப்படியிருக்க, சிலர் சுயநலத்திற்காக தன்னை தானே அழிக்கும் காட்சியையும் பார்த்து, அநியாயத்தை கண்டு காணாமல் போகும், நமக்கு எதுக்குடா வம்பு என்று போவோரையும், அவர்களை போலவே நாங்களும் ஓரமாக ஒதுங்கி நின்று வருத்ததுடன் வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டோம்..!!*👊
😡 *அநியாயத்தை பாக்கும் போது தட்டி கேக்கணும்னு தோணும், ஆனா ஏதோ நம்ம குடும்ப சூழ்நிலை தடுக்கும். இப்படி ஒவ்வொருத்தரும் ஒதுங்கிறதுனால தான், நம்ம குடும்பம் ஒரளவு நல்லா இருந்தாலும், நம்ம நாடு மட்டும் உருப்படாமலே கிடக்கு.*
😡 *சாட்சி சொல்லாமலே, பாதி கேஸ் கோர்ட்டு கேஸ்க்கு போனா கூட, நியாயம் கிடைக்காம போயிடுது. இல்லனா மட்டும் நியாயம் கிடைச்சிருமானு கேட்காதீங்க. அத தட்டிக் கேட்க கூட நம்மால முடியல ஒதுங்கி தான் போறோம். ஒரு உண்மைய, கண்களில் பார்த்ததை சொல்றதுக்கே நடுங்குறாங்க. இவங்க எங்கிருந்து நியாயத்தை தட்டி கேட்டுட போறாங்க.*
😏 *எல்லாரையும் போல மிஷின் வாழ்க்கை வாழ்ந்து மடிவதால் யாருக்கு என்ன பயனோ😏, பெத்த கடமைக்கு பெத்தவங்களுக்கு மகனாவும், கட்டுன கடமைக்காக பொண்டாட்டிக்கு புருசனாகவும், ஈன்றெடுத்த கடமைக்காக பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகவும் இருக்கவே பலர் விரும்புகின்றனர். அப்படி வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போறாங்கனு தெரில. சிலர் இதையும் மீறி சமூக பொறுப்புணர்வு கொண்டவராகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதயம்கனிந்த❤ வாழ்த்துக்கள்.*
😡 *பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், சாப்பிட்டோம், தூங்குனோம், எந்திரிச்சோம்.... இதுதான் இன்றைய பலரது வாழ்க்கை.*😏
👊 *அநியாயம் நடந்தால் வேடிக்கை பார்ப்பதிலும், ஒதுங்கி போவதிலும், நம்ம ஆட்களை அடிச்சிக்க ஆளே இல்ல.*👊
😔 *இன்றைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் வாரத்தில் 1 மணி நேரமாவது சமூகத்திற்கு ஒதுக்கி, எதாவது ஒரு நற்பணிகளை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் இதுவரை இழந்ததை மீட்பது கடினமே.*😔
🙏 *சிலர் வேறு வேறு வழிகளில் முகமூடி போட்டுக் கொண்டு அநியாயத்தை தட்டி கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி🙏🏼.*
😏 *சில நேரங்களில் வேடிக்கை பார்ப்பவன் சொல்லுவான். இல்ல எனக்கு ஆபிஸ் போகணும், அங்க பாட்டி செத்து போச்சி, பாக்கி எல்லோருக்கும் வேலை வெட்டி இல்லாம தான் நம்ம அநியாயத்தை கண்டு பொங்குறோம், சில உதவிகளை செய்றோம்னு நினைச்சிப்பாங்க.*👊
😡 *நல்லது பண்றவன திசை திருப்புறவன், இப்ப இருக்குற அரசியல்வாதிகளை விட மோசமானவன். இத விட வேற எப்படி திட்டுறதுனு தெரியல.*😡
👊 *உன்னால முடிஞ்சா உதவி செய். இல்ல 😷 போ.*
😡 *செய்றவங்களையும் கெடுத்து, ஏன்டா இத நம்ம பண்றோம்? நமக்கு இது தேவையா? இதுபோன்ற மனநிலைக்கு அவங்களை மாத்தி விட்ராதீங்க.*👊
😡 *நீங்க வேணா ஒதுங்கி 😷 போங்க. நாங்க அடங்கப் பிறந்தவர்கள் அல்ல....*👎
*ஆளாப் பிறந்தவர்கள்....👍 எங்களை ப்ரீயா சில பணிகளை செய்யவிட்டாலே போதும். உலக நாடுகளே திரும்பி பாக்குற அளவுக்கு எங்களால முடிஞ்சத எதாவது பண்ணுவோம்.👍 முயற்சியாவது செய்ய விடுங்க. பொதுநல விசயத்துல ஈடுபடுறவங்கள மட்டம் தட்டாதிங்க.*👊
🛠 *அநியாயத்தை தட்டி கேட்பவர்களில் நாளுக்கு நாள் ஒதுங்கி போறவங்க குறைஞ்சிக்கிட்டு வராங்க... எதிர்த்து கேட்கிறவங்க அதிகரிச்சிட்டு தான் வராங்க.*👍
👍 *விதைகளை முளைக்க விடுங்க....!!! மிதிச்சிராதீங்க....!!*👊
*நன்றி💐*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🥇 *ஜோக்கர்*
🥈 *Kumaran. G*
🥉 *Karthikeyan c*🤗
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
😇 *கடந்த காலங்களில் பண்பும், அன்பும் நிறைந்த நல்ல வாழ்க்கை முறைகளை பின்பற்றியவர்கள் அதிகளவில் இருந்தனர். ஆனால், தற்போது அது கேள்விக்குறியாகி விட்டது. பல்வேறு திசை திருப்புதல்களால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சமூக கேடான விஷயங்களை தட்டி கேட்க எவரும் முன்வருவதில்லை. சமூகத்திற்கு எதிரான, சமுதாயத்தை சீர்குலைக்கும் சம்பவங்கள் நடந்தால், அதை தட்டிக்கேட்க அனைவரும் முன்வரவேண்டும். அப்போது தான் தீமைகள் நடப்பதை தடுக்க முடியும்.*👍✅👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்து கொள்ளவும்
*வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்*
*வாழ்வும் தாழ்வும் சில காலம்*
தெரிந்துகொள்ளவும்
*நல்லது செய்து நடுவழியே போனால்,*
*பொல்லாதது போகிற வழியே போகிறது*
புரிந்துகொள்ளவும்
*வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
👨🏻💻 *கந்தசாமி*
*9080669640*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *சுரேந்தர்*
*9976352812*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment