🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :22.09.2017.*
🌹 *கிழமை :வெள்ளிக்கிழமை*
____________________________________
*அறிவோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹
*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்*
*மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்*
*~பெரியார்*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
*அட்மின் கருத்து.*
*🤙அனைத்து முடிவுகளும்,*
*அவரவருக்கு சாதகமாக்கப்படுகின்றன*
_____________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*நாட்டின் வளர்ச்சிக்கு மீடியா ஏதேனும் வகையில் காரணமாக உள்ளதா..? இல்லை பணத்திற்காக கலாச்சாரத்தை சீர்குலைக்க சதி செய்கிறதா..?*
📽💻🎥📺📽📻🎥📡📽📡🎥
⬆ _*நாட்டின் வளர்ச்சிக்கு மீடியா உதவியாக உள்ளதா?*_❓❓❓
📡 *உலகத்தில் எங்கோ நடக்கும் விஷியங்களை வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ள முடிகிறது...*
📡 *எங்கோ ஒரு இடத்தில் மழை, புயல், வெள்ளம் என்றால் தெரிந்து கொள்ள முடிகிறது.*
*எதாவது தேவை என்றால் சாப்பாடு, துணி, இதுபோல நிவாரணம் கொடுக்க முடிகிறது...*👍
📡 *ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் புது புது கண்டுபிடிப்புகள் தெரிந்து கொள்ள முடிகிறது..*
📡 *அறிவியல் ஆராய்ச்சி மையம் எப்படி இருக்கும் என்று அங்கு இருப்பவர்களை தவிர யாருக்கும் தெரியாது*.
*ஆனால் மீடியாக்கள் தான் நமக்கு கண் முன்பு காட்டுகிறது.*👍
📡 *நாம் பார்க்க முடியாத பல இடங்களில் போக முடியாத பல இடத்தையும் பார்க்க முடிகிறது.*👍
📡 *நம்முடைய அரசியல் வாதிகள் அதிகாரிகள் கூட நேரில் பார்த்திருக்க முடியாது*.
*ஆனால் அடிக்கடி மீடியா தான் நமக்கு தெரிய படுத்துகிறது.*
📡 *தமிழக நிலவரம் அரசியல் நிலவரங்கள்.*🤔
📡 *எந்தெந்த ஊர்களில் விவசாயம் எப்படி இருக்கிறது.*🤔
📡 *எங்கெங்கு மழை பெய்கிறது*.
*எந்தெந்த ஆறுகளில் தண்ணீர் வரத்து எவ்வளவு நிலவரம்.*🤔
📡 *எங்கெங்கு வெள்ளம் எச்சரிக்கை. சொல்ல பட்டுள்ளது*👍
📡 *எந்தெந்த கடல்பகுதியில் நீர் மட்டும் எப்படி போகிறது..*🤔
📡 *மீனவர்களுக்கு மழையால் எப்படி பிரச்சனை வருகிறது*.
*இலங்கை கடற்படை மூலம் எவ்வளவு நபர்கள் இறக்கிறார்கள்.*
*எவ்வளவு நபர்கள் கைதியாக இருக்கிறார்கள்...*👍
👆👆👆 *இதெல்லாம் மீடியா மூலம் தான் தெரிய வருகிறது.*👍
📡 *விவசாயிகள் டெல்லி வரை சென்று எப்படியெல்லாம் போராட்டம் செய்தார்கள் என்று நேரடியாக காண முடியாது. பல மீடியாக்கள் தான் நம்மிடம் கொண்டு சேர்த்தது.*👍
📡 *எங்கோ ஒரு இடத்தில் நிலநடுக்கம், மலை சரிவு என்றால் எதாவது விபத்து என்றாலோ உடனுக்குடன் நமக்கு தெரிய படுத்துவது மீடியா தான்.*👍
📡 *மீடியா மூலம் தான் நம்முடைய மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் உலகெங்கும் தெரிந்து பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.*👍
📡 *இது மட்டும் அல்ல நிறைய இடங்களில் நடக்கும் போராட்டம் பற்றியும் அந்தந்த களம் நிலவரம் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.*
☢ *உதாரணம்*
*ஹைட்ரோ கார்பன் திட்டம்.*
*நீட் போராட்டம்.*
*தாமிரபரணி ஆற்று தண்ணிய கார்ப்பரேட் கம்பெனி கையக படுத்தியது.*
*🚫மீடியா மூலம் ஏற்படும் தீமைகள்*
📡 _*மீடியாக்கள் தங்களின் வருமானத்திற்கு என்னென்ன செய்யனுமோ எல்லாவற்றையும் செய்வார்கள்.*_👍
🔴 _*தங்களின் Trp மட்டும் தான் அவங்களுக்கு முக்கியம்..*_👍
🎶 *பாடல் நிகழ்ச்சிகள்.*🎶
🎙 *மூன்று வயசு குழந்தை பாட சொல்றாங்க. ஆடி ஓடி விளையாடுற வயசுல மைக் பிடிச்சு பாடனும் பெற்றோர்களுக்கு பெருமை மீடியாவுக்கு வருமானம்...*
😣 *சில சமயம் குழந்தைகள் அழறத கூட Trp பன்னிடுறானுங்க.*
💃🏻 *நடனம்.*🕺🏻
🤕 *குழந்தைகளை எப்படியெல்லாம் கஷ்டபடுத்தனுமோ அப்படியெல்லாம் படுத்தி ஆட வைக்கிறாங்க இந்த பெற்றோர்கள்.*
*மீடியாவுக்கு சிறந்த நடனநிகழ்ச்சி என்று காமிக்கணும் இதற்கு பலிகெடா இந்த குழந்தைகள் தான்..*👊
👊 *இரவு பகல் பாராமல் ஒத்திகை மேக்கப் என்று பாடா படுத்துறீங்க...*
👊 *விளையாடுற நேரத்தில் ஒத்துகை தூங்கும் நேரத்தில் படப்பிடிப்பு இதனால் பள்ளி போவது படிப்பது இதெல்லாம் குறைந்து கொண்டு போகிறது.*
📺 *நாடகம்*📺
👊 *குழந்தைகளை நடிக்க சொல்றோம்னு பாட புத்தகத்தை மறக்க விட்டுட்டு நாடகத்திற்கு மனப்பாடம் செய்வதும் இதற்கு ஒத்திகை பார்க்கவும் வைச்சுட்டு இருக்காங்க.*
🤕 *இது மட்டும் அல்லாமல்*
*ரியாலிட்டி ஷோ னு பசங்களை எப்படி எல்லாம் துன்புறுத்தனுமோ அப்படி எல்லாம் டார்சல் பன்றீங்க*...
😡 *மீடியாவுக்கு தான் வருமானம் பெற்றோர்களுக்கு அறிவு கிடையாதா?*
🤦🏻♀ *படங்களில் தான் ஆபாசம் என்றால் பல ரியாலிட்டி ஷோகளிலும் ஆபாசமாக காட்றாங்க*
🤦🏻♀ *குழந்தைகளை கூட நடனநிகழ்ச்சி மற்றும் நாடகங்களில் ஆபாசமான கதாபாத்திரம் கொடுக்கிறார்கள்.*
🤦🏻♀ *இதற்கு அர்த்தம் கூட தெரியாமல் குழந்தைகள் அப்படியே நடிக்கின்றனர்.*
👊 *சொல்வதெல்லாம் உண்மை*.
*நிஜங்கள்.*👊
🤦🏻♀ *இது போல நிகழ்ச்சிகள் தேவையா?*
🤦🏻♀ *வீட்டில் நடக்கும் விஷியங்களை ஊரறிய சொல்லி அவங்க தனிபட்ட வாழ்க்கையை சொல்லி அசிங்க படுத்துகிறார்கள்..*
😡 *இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வெட்கம், மானம் எதுமே இருக்காதா?*
🤦🏻♀ *ஊரில் பத்து நபர்களுக்கு தெரிந்ததை லட்சக்கணக்கான மக்களுக்கும் சொல்ற மாதிரி இருக்கிறது.*
🤦🏻♀ *இதுல வேற அழதயும் அடிப்பதையும் Trp ஆக்கிடுறாங்க.*
🤦🏻♀ *இப்போதெல்லாம் பிக்பாஸ் இது போல நிகழ்ச்சியை பாத்துட்டு டைம் வேஸ்ட் பன்னிட்டு இருக்காங்க இந்த இளைஞர்கள்.*
📡 *மீடியாக்கள் பெரும்பாலும் அரசியல் வாதிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கைகூலியாக செயல்படுகிறது..*
👊 *பல உண்மையான நிகழ்வுகளை மறைத்து அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது...*👍
📡 *மீடியாக்கள் என்பது நம்முடைய கலாசாரம் பண்பாடு இவையெல்லாம் சீர்குலைக்கும் மாதிரி தான் இருக்கிறது..*
👊 *பல காப்ரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக விளம்பரம்ங்கள்..*
*ஆபாசமான வார்த்தை ஆபாசமாக உடைகள் இது போல இன்னும்.*🤦🏻♀
🤦🏻♀ *உதாரணம் ஜட்டி, பனியன் மேலாடை விளம்பரம், செண்ட் சோப்பு விளம்பரம் ஆபாசமாக இருக்கிறது..*🤦🏻♀
👊 *கெமிக்கல் மூலம் செய்ய படும் பழரசம், மிட்டாய்கள் கண்கவர் விளம்பரம் மூலம் குழந்தைகளை கையக படுத்தி வருமானம் செய்றாங்க இதற்கு முக்கியமான காரணம் மீடியாக்கள் தான்.*
👊 *சோப்பு, ஷேம்பு, லோசன், பல்வேறு முகத்திற்கு போடும் கீரிம்கள் தலை முதல் கால் வரை உபயோகிக்கும் அனைத்தும் பல்வேறு விளம்பரங்கள் மூலம் நம்மிடம் சேர்க்கிறார்கள்...*
👊📡 *மீடியாக்கள் பெரும்பாலும் பெண்களை அதிகமாக கவர்ந்துள்ளது பல சீரியலகள். தற்போது ஆண்களுக்கும் சீரியல் பார்க்க ஆரம்பித்துடார்கள். அவர்களின் சென்டிமெண்ட் மூலம் வியாபாரம் பன்றாங்க*.
📡👦🏻👧🏻 *பல்வேறு கார்டூன் மூலம் குழந்தைகளையும் அடிமை படுத்தி வைத்துள்ளது.*🔴
🔴📡 *பொழுது போக்கிற்காக மட்டும் தான் மீடியாக்கள் இருக்க வேண்டுமே தவிர இதற்கு அடிமைதனமாக இருக்க கூடாது...*🙅🏻
👊 *அவங்க வருமானத்திற்கு மக்களை உபயோகிக்கிறார்கள்*.
🔴 *மக்கள் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்..*👍
*ஒவ்வொரு மீடியாக்களும் தன்னுடைய நிர்வாகம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை.*
*சில நேரங்களில் முக்கியமான செய்திகளை, முக்கியமில்லாத நேரத்திலும், முக்கியமில்லாத செய்திகளை முக்கியமான நேரத்திலும் போட்டு, 😳 அத பெரிய விசயமாக்கி, இவனுங்களே சில நேரங்களில் தூண்டிவிடுவதுண்டு. அவன் அவனுக்கு என்ன காரியம் நடக்கணும்னோ, அப்பப்ப அது தான் சிறப்பு விவாதமா இருக்கும்.*
*FLASH NEWS க்கு இவங்க குடுக்குற தீம் மியூசிக் 108 ஆம்புலன்ஸ்சை விட, என்னமோ ஏதோனு பதற வைக்கும். சில நேரங்களில், அட மானங்கெட்டவங்களா😟, இதுக்காடா இவ்ளோ அலப்பறை பண்ணுனிங்கனு 🤦🏼♂, நம்மள நம்ம மனசே கேட்கும்.*
*தேர்தல் நேரத்தில், கருத்துக்கணிப்புனு சொல்லி, மக்கள் மண்டைல கருத்துத்திணிப்புகளை உண்டாக்குவானுங்க.*
*தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்கு. அத அவங்க விசயத்துல மட்டும் கரெக்ட்டா இருப்பானுங்க. மீடியாக்காரன எதாவது ஒண்ணு பண்ணிட்டா போதும். எல்லா சேனல்களையும், பரப்பரப்பா ஆக்கி மன்னிப்பு கேட்க வைக்காம விட மாட்டானுங்க. சிலர் இதில் தப்பியதும் உண்டு.*
*ஒருவரை ஒரே நாளில் தலையில் தூக்கி வைத்தும் கொண்டாடுவானுங்க. ஒரே நாளில் மட்டந்தட்டியும் விடுவானுங்க.*
*அதுதான் மீடியா📺*
👍 _*மீடியா மூலம் நல்லதும் இருக்கிறது*_ _*கெட்டதும் இருக்கிறது*_👎
*நன்றி.*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர்*
*🎖ks*
*🎖நா ராமகிருஷ்ணன்*
*🎖பிரபாகரன் சிதம்பரம்*
*🎖கார்த்திகேயன்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🎥 *மீடியாக்கள் எண்பது உண்மையான தகலையும் தெரிந்து கொள்ளவும். நம்முடைய கலாசாரம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை தேவைகள், பிரச்சனைகளை அனைவருக்கும் தெரிய படுத்தி தீர்வு காண வேண்டும். எல்லாவற்றிலும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மீடியா இருக்க வேண்டும்.*
*பொழுது போக்குகிற்காக மட்டும் மீடியா இல்லாமல் அடிப்படை உரிமைகள் பற்றியும் தகவலையும் தெளிவு படுத்தவும் வேண்டும்...*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்*
*அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!*
*விளக்கம்:*
*தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது! ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.*
*மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.*
*விளக்கம்:*
*மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை*.
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
👩🏻💻✍ *SM*✍👩🏻💻
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment