🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள்: ஞாயிற்றுக்கிழமை* 🌹
🌹 *தேதி :03.09.2017*
____________________________________________
💎💎💎💎💎💎💎💎💎💎💎
♦🔊 *அறிவோம்* 🔊♦
*விஞ்ஞானம் என்பது அற்புதமான ஒரு விஷயம்* *அதை வைத்துத்தான் நீங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது இல்லாத போது*!!!!!
::::::: *ஐன்ஸ்டீன்*:::::::
💎💎💎💎💎💎💎💎💎💎💎
🙅♂ *அட்மின்ஸ்தாட்*🙅♂
*எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் போதாது* *வழியைத் தவற விட்டு 🚵🚵♀பயணிப்பதைவிடப்* *பாதி வழியில் திரும்பிவிடுவது மேல்.* *ஏன ஓடுகிறவன்தான் 🏃🏃🏃விழுகிறான்.*
💎💎💎💎💎💎💎💎💎💎💎
🏍🛵 *தலைப்பு*🛵🏍
அதிகமான இருசக்கர விபத்துக்களுக்கு காரணம்....இயக்குபவர்களால் 🏍🏍🏍🏍ஏற்படுகிறதா ? 🚨🚨🚨 அல்லது எதிரில் வருபவர்களால் ஏற்படுகிறதா ?
🚗🛵🚑🚨🏍🚗🛵🚑🚨🏍🚗
🚗🔴🏍 *நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் 3,450 கார்கள் விற்பனையானால், 19,800 மோட்டார் சைக்கிள்கள் சராசரியாக (சாராசரி கணக்குபடி) விற்பனையாகின்றன.*
🏍🚨🤦🏻♂ *பைக் ஆசை, 18 வயது இளைஞன் துவங்கி 60 வயது பெரியவர் வரை அனைவருக்குமே இருக்கிறது. கல்லூரி மாணவனுக்கு, பைக் என்பது ஸ்டைலாகவும் இளைஞனுக்கு லச்சியமாகவும், வேகமாகவும், பறப்பதை போன்ற உணர்வையும் தருகிறது.*
🏍🛵🤦🏻♂ *மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகிறவர்கள் பெரும்பாலும் முறையாக ஓட்டுவதில்லை.😣 முறையாக என்பது , வாகனத்தை எப்படி இயக்க வேண்டும் , அதில் எப்படி அமர வேண்டும் , அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதிலிருந்து போக்குவரத்து சட்ட விதிகளை எப்படி கையாளவேண்டும் என்பதுவரை எந்த வழிமுறைகளையும் பெரும்பாலும் யாரும் கடைப்பிடிப்பதில்லை.*
🔴 *நூற்றுக்கு 90% நபர்கள் இதை தெரிந்து கொள்ளாது இருப்பதாலும், அல்லது தெரிந்தும் 🤦♂பலர் அதை 💁🏼♂கடைப்பிடிக்காது இருப்பதனாலும்தான் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.*
🚨🔴 *தமிழ்நாட்டில் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு இருசக்கரவாகன விபத்து நடைபெறுகிறது. அதேபோல் ஒவ்வொரு இரண்டு மணி 🕑🕑நேரத்துக்கும் 3 பேர் சாலை விபத்தால் கொல்லப்படுகின்றனர்.*
🚗🛵🚑🚨🏍🚗🛵🚑🚨🏍🚗
🔴🚨 *வேகமாக ஓட்டுவதற்கும் கட்டுப்பாடில்லாமல் ஓட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. வண்டியின் மொத்த இயக்கமும் ஓட்டுபவரின் உடல்மையப்புள்ளியை வைத்து சரியாக இயங்குவது என்பதே கட்டுப்பாடான ஓட்டும் முறை (controlled driving) . பெண்களில் 90% கட்டுப்பாடாக ஓட்டுவது இல்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.*👍
🚨 *போக்குவரத்து நிறைந்த புறவழிச் சாலைகள் , நெடுஞ்சாலைகள் இங்கெல்லாம் தான் விபத்து அதிகம் நடக்கும் என்ற காலமெல்லாம் போய் இப்போது மக்கள் வாழும் ஊர்களின் உள்சாலைகள் ஏன் தெருமுனைகளில் கூட விபத்துகள் அதிகரித்து விட்டன.*
🚨 🛵👩🏻 *கடந்த 15 வருடங்களாக பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்திருக்கிறது, குறிப்பாக நகரப் பெண்கள் சற்று அதிகம். கூர்மையாகக் கவனிக்கும்பட்சத்தில், வெகு சில பெண்களே சரியாகவும் கட்டுப்பாட்டுடனும் வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை உணரமுடியும்.*
🛵👩🏻 *பெண்களுக்கென்று வடிவமைக்கப்படும் வாகனங்களில் கியர்சிஸ்டம் (Gear system) இல்லை. சைக்கிள் போல கால்கள் செயல்படும் வேலையும் இல்லை. கொஞ்சம் பிடிப்பு ( balance )மட்டும் இருந்தால் போதும், சொகுசாகக் கிளம்பிவிடளாம்.*
🛵👩🏻 *பெண்களின் உடற்கூறு, மூளைச் செயல்பாடு போன்றவைகள் கருத்தில் கொண்டு, பெண்களுக்கான இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பும், அது ஏற்படுத்தித் தருகிற இலகுவான இயங்குமுறையும் சில விபத்துக்களுக்கு காரணமென்றால் நம்ப சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.*
💁🏻♂🏍 *குறிப்பாக பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்கக் கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் வண்டியை எடுக்கலாம். பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாகச் செல்வது உத்தமம்.*
🚗🛵🚑🚨🏍🚗🛵🚑🚨🏍🚗
🔴 *வேகத்தை குறைப்பதற்காக மற்றும் விபத்தை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற வேகத்தடையால் தினசரி 30 விபத்துகள் நாடு முழுவதும் ஏற்படுவதுடன்,*
*இதனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 உயிர்கள்* *பறிக்கப்படுகின்றதாக மத்தியஅரசு* *கூறுகிறது.*
🚨 *விதிகளை மீறும் வகையில் அமைக்கப்படும் வேகத்தடைகளால் நிலை தடுமாறும் பைக்கள், அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.*
🔴 *பள்ளி, கல்லூரி,மருத் துவமனை,* *சுங்கச்சாவடிகள், மேம்பாலங்கள், முக்கிய ரயில் சந்திப்புகள்,* *சாலை வளைவு பகுதிகளுக்கு அருகில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.* *மற்றும்*
*குடியிருப்பு பகுதிகளில் தேவை என்றால் மட்டுமே வேகத்தடை அமைக்க வேண்டும்.*
🤦🏻♂ *ஆனால், சில இடங்களில் உள் சாலைகளில் விதிகளை மீறி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.* *அந்த இடங்களில்*
*எச்சரிக்கைப் பலகையும் இருப்ப தில்லை.*🙅🏻♂
🤦🏻♂ *வேகத்தடைகளை போக்குவரத்து போலீஸ் அல்லது நகராட்சிகள்தான் தொடர்ந்து கண் காணித்து, பராமரிக்க வேண்டும். ஆனால், அவர்கள் இப்பணியை சரியாக மேற்கொள்வது இல்லை.*😣
🏍🛣🚗 *சாலை முடிந்து மறு சாலை திரும்பும் இடத்திலோ, சாலைகளின் சந்திப்பிலோ அல்லது குறுக்கில் வாகனங்கள் வரும்போதோ, இப்படியான சந்தர்ப்பத்தில் உடனே ப்ரேக்கை பிடிக்கும்போது, அச்சமயம் வண்டிமீது ஓட்டும் நபருக்கு இருக்கும் ஆளுமையைப் பொறுத்தே அங்கு என்ன நடக்கும் என்பது முடிவு செய்யப்படுகிறது.*
🚗🛵🚑🚨🏍🚗🛵🚑🚨🏍🚗
⛑ *"வண்டி ஓட்டினா ஹல்மெட் போடனும் மறந்துடீங்களா" "என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா"*🤦🏻♂
⛑ *"முதலில் ஹல்மெட் போடு....!! அப்புறம் சீன் போடு..!!"*😏
🔴 *வேகம் குறை…!!*
🔴 *விரட்டுவது விதியாக கூட இருக்கும்......!!*
❣ *மழை நனைத்த சாலையும் மணல்* *நிறைந்த பாதையும்*
*திறன் மிகுந்த* *யாரையும் புரட்டிவிடும்..........*
*"உலகாள்பவன் உனக்களித்த,*
*உடலுறுப்புகளை*
*ஊனமாக்காதே!!!!!!*
🚨🏍 *தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே அரங்கேறி வந்த பைக் ரேஸ், இப்போது அனைத்து மாவட்டத்திலும் பரவலாக அரங்கேற தொடங்கி விட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த மோகம் வேகமாக வளர்ந்து வருகிறது.*
🏍 *அதிக சி.சி. திறன் கொண்ட பைக், நவீன மாடல்கள் போன்றவை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கவனத்தை, ஈர்க்கிறது. தற்ப்போது 520 சி.சி. திறனுக்கு மேல் கொண்ட பைக்குகளும் வந்து விட்டன.*
🚨🏍 *ஆக்ஸிலேட்டரை முறுக்க முறுக்க வேகமெடுக்கும். நொடிகளுக்குள் வேகத்தின் அளவு தாவி உயரும். வேகம் செல்கிறது, ஆனால் என்ன நிலையில் செல்கிறது என்பதை அவதானிப்பதைவிட அதன் போக்கில் ஏற்படும் சுகமானது இன்னும் இன்னும் முறுக்கவே தூண்டுகிறது.*
🛣🚗🏍 *நகரின் முக்கிய சாலைகள் தான் இவர்களின் மைதானமாக மாறி உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் போட்டி போட்டு பைக்குகளில் பறந்த வண்ணம் உள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு பீர், பரோட்டா, சிக்கன் தான் பரிசு.* 🤦♂🤦♂
💁🏻♂ *இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப உயிரை பணயம் வைத்து இவர்கள் பைக்கில் பறந்த வண்ணம் உள்ளனர். இதன் விளைவு இவர்களின் உயிருக்கு மட்டுமல்ல, சாலையில் நடந்து செல்லும் சாமானிய, அப்பாவி மக்களின் உயிர்களையும் பலி வாங்கி விடுகிறது.*😰
🏍🙋🏻♂🙋🏻🛵 *இளைஞர்கள் பைக்குகளில் பறந்து செல்வதையும் , சாலையின் குறுக்கே படுத்து எழுந்து மற்றவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். “எப்பிடி போறாய்ங்க பாரு”…. “இதெல்லாம் எங்க உருப்படப் போகுதுகளோ”…. “எங்கயாவது அடிபட்டு விழுந்தாத்தான் புத்திவரும்” என்கிற சாபங்களை நம் சாலைகள் கேட்டுப் பழகிவிட்டன..*🤦🏻♂
🚗🛵🚑🚨🏍🚗🛵🚑🚨🏍🚗
🚨 *வாகனம் ஓட்டினாலே விபத்துதான்’ என்ற மனபயத்தை உருவாக்கிவிடாதீர்கள் அது விபத்தை விடக் கொடியது.* 🙅🏻♂
🚨 *விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் பொருள்களில் பைக்களும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. சரியாக உபயோகித்தால் மிகவும் பயன் தரக்கூடிய சாதனம். இதுவே முறையற்ற பயன்பாட்டினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.*
💔 *உயிரை ஒரு பொருட்டாகவே கருதப்படாமல் போய்விட்டதோ ! என்று நினைக்கும் அளவிற்கு வாகனங்களும், விபத்துகளும் ஒன்று சேர பெருகுகின்றன.*
💔 *பலர் ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) எடுப்பது இல்லை / லைசென்ஸ் இருந்தாலும் ஓட்டும்போது அதை கையில் வைத்திருப்பதில்லை. லைசென்ஸ் கையில் இல்லாத காரணத்தினால் போலிஸ் செக்கிங் நடக்கிற போது பயத்தில் தாறுமாறாக ஓட்டி , விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்.*
😰 *மூலை வரண்ட பின் மொத்த ஞானமும் கிடைப்பதால் எந்த புண்ணியமும் இல்லை. தம் வீட்டு வாலிபர்களின் உயிரை பறிகொடுத்த பின் பெற்றோர்கள் கதறி அழுவதால்😭 ஆகப்போவதொன்றும் இல்லை.*😓
🙅🏻♂ *விபத்து நடக்காம தடுக்க முடியாது...*
💝 *விபத்துக்களால் வருகிற பாதிப்பை குறைக்கலாம்..*
💖 *சிந்திப்போம்...!!!* 💖 *செயல்படுவோம்...!!!*
🌹🏍 *நன்றி*🏍🌹
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த கருத்தாளர்கள்*👑
🥇 *Rahul*
🥈 *We Are Nokers*💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
🥉 *Udaya Yuva*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*'நாம் மற்றவர்கள் மீது மோதினாலும் அல்லது மற்றவர்கள் நம் மீது மோதினாலும் இழப்பு நமக்குத் தான்.*
*வேக போதையிலும், மது போதையிலும், சிக்கி தவிக்கும்* *இளைஞர்கள்...சாலை*
*விபத்துகளில் தங்கள் வாழ்வை 🤦♂🤦♂தொலைக்கின்றனர்.*
*முழங்கை*
*மூட்டு பிறழ்ந்தவன்,*
*முழுக்கை யுடைந்தவன்,*
*முகத்தில் தழும்பு படைத்தவன், நடை குலைந்தவன்,*
*நொண்டி நடப்பவன் என எத்தனை ஆதாரங்கள்.*
*போதாதென்று*
*அகால மரணங்கள்....*
*தொலைதூரப்* *பயணத்தை இருசக்கர வாகனத்தில் கடந்தால்* *தமிழ்நாட்டுச் சாலைகள் தண்டுவடத்* *தட்டுகளை*
*மென்று தின்றுவிடும்.*
*வாழ்க்கையில் முந்து வளைவுகளில் முந்தாதே!!!*
*விவேகத்தைக் காட்டு வேகத்தைக் கூட்டாதே....*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 திருக்குறள் 📜_*
*உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி*
*இடைக்கண் முரிந்தார் பலர்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
அறிந்துகொள்::
*இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது*
தெரிந்துகொள்::
*இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.*
புரிந்துகொள்::
*இரக்கப் போனாலும் சிறக்கப் போ.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨
👨🏻💻 *இராமலிங்கம் அங்கப்பன்*
*+6012-2646502*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *கமலி*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment