Sunday, 10 September 2017

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான (Dmk, Admk), தேசிய கட்சிகளான (Bjp, Cong) மற்றும் அவைகளின் கூட்டணி கட்சிகளை தவிர்த்து இதர கட்சிகளில் உள்ள நிறை குறைகள் என்ன?? 🎯அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் உங்கள் முதல்வர் யாராக இருப்பார்?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :09.09.2017.*
🌹 *கிழமை : சனிக்கிழமை*    
____________________________________
*அறிவோம்:*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*நீ தலைவன் ஆவதற்கு முன் வெற்றி என்பது உன்னை வளர்ப்பது.தலைவன் ஆனப்பின் உன் வெற்றி என்பது அடுத்தவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது.*

- *ஜான் வெல்ச்.*

💖💖💖💖💖💖💖💖 💖💖💖

😎 *நிர்வாகிகள் எண்ணம்:* 😎
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

*கொதித்து எழ வேண்டும் என்றால்,*

*சூடேற்றத் தான் வேண்டும்.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================
*🎯தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான (Dmk, Admk), தேசிய கட்சிகளான (Bjp, Cong) மற்றும் அவைகளின் கூட்டணி கட்சிகளை  தவிர்த்து இதர கட்சிகளில் உள்ள நிறை குறைகள் என்ன?? 🎯அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் உங்கள் முதல்வர் யாராக இருப்பார்?*
💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺
            *பாகம்*➖1⃣

🔴 *இந்த தலைப்ப வைக்க இப்ப காரணமே... இனிமே எந்த காலத்துலையும் இந்த நாலு கட்சியும் , அதோட கூட்டனி வைக்குறவங்களும் நமக்கு வேணாம்னு தான்... அத தவிர வேற யாரெல்லாம் இருக்காங்க... ஒவ்வொருத்தரா பாப்போம்*🔴

*தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக):*
தலைவர்: *விஜயகாந்த்.* 😎😎
சின்னம்: *முரசு🥁*

🇧🇪 *செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்..*🇧🇪

    🥁 _ஒரு அமைப்பை முதல் தலைமுறை வளர்க்கும், இரண்டாம் தலைமுறை அனுபவிக்கும், மூன்றாம் தலைமுறை அழிக்கும்னு சொல்வாங்க. விஜயகாந்த் தான் உருவாக்கிய கட்சியை, தானே வளர்த்து, தானே அழிக்கும் தறுவாயில் இருக்கிறார்..._ *கட்சியை மீட்க முடியுமா என்ற சந்தேகம் தேமுதிகவினருக்கே வந்து விட்டது*

👎🏼👎🏼  *அப்படி என்ன தான் குறைகள்:*    
    _🎯அவருடைய மண்டபம் இடிக்கப்பட்டதால் தான் அரசியலுக்கு வந்தார் என்பது பரவலான பேச்சு..._
    _🎯பொது இடங்களில், சட்ட சபையில் நாக்கை துருத்துவது.._  
    _🎯வேட்பாளரை அடித்தது..._
   _🎯வீர வசனம்  பேசி மக்களை ஈர்த்த கம்பீர குரல் தளதளத்தது..._
    _சட்டமன்ற தேர்தலில் நிற்க வேட்பாளர்களிடம் பணம் வாங்கியது..._
     _🎯கட்சியில் மனைவி மற்றும் மைத்துனனை உள்ளே விட்டது..._  
    _🎯அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கியது..._

*2016 தேர்தலின் போது மிகப்பெரிய தவறிழைத்தது அது என்னவென்றால் மக்கள நலக் கூட்டனியுடன் இணைந்தது தான்...* *இந்த கூட்டனி பிடிக்காமல் பல முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் தே.மு.தி.க விலிருந்து விலகியது அக்கட்சிக்கு பேரிடியாக இருந்தது.*_

🥁 *விஜயகாந்தும் , கட்சியும் நேற்று, இன்று, நாளை:*⏳

🥁 _தே.மு.தி.க ம.ந.வி யிலிருந்து விலகியது... விஜயகாந்த் பல உடல் பிரச்சனைகளுக்கு ஆளாகினார்... ஊடகங்கள் அவரை குடிகாரராக சித்தரித்தது... முன்னால் முதலமைச்சர் ஆளுமையில் இருந்த போது எவருக்கு அஞ்சாமல் எதிர்கட்சி தலைவராக இருந்த போது அமைச்சரவையில் விஜயாகாந்த் ஆளும்கட்சியை பார்த்து எழுந்து கேள்வி கேட்டு அவர்களின் தொண்டர்கள் மனதில் நிஜ ஹீரோவாக இடம் பிடித்தார்... தற்போது பெரிய கூட்டமோ, மாநாடோ கட்சியில் நடைபெறுவதாக தெரியவில்லை. அவ்வப்போது தொலைக்காட்சியலில் எட்டிப் பார்கிறார்_👎
🥁 _லஞ்சம் ஒழிப்பு,  அன்னை தமிழ் மொழி காப்போம், கல்வித்தரம் உயர்த்துதல்,  நெசவுத் தொழிலை உயர்த்துதல், ஆண்., பெண் சமம் போன்றவைகளை கொள்கையாக கொண்டு செயல்படுகிறது தே.மு.தி.க._🕹

💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺

🍋 *பாமக -பாட்டாளி  மக்கள் கட்சி*🍋

  நிறுவனர் :மருத்துவர் *ச.ராமதாசு.*
தலைவர் : *கோ.க.மணி*,
தொடங்க பட்ட ஆண்டு - *1989,*
தலைமையகம் - *தைலாயபுரம் ,திண்டிவனம் .*
கொள்கை -சமூகநிதி,சனநாயகம்,சமத்துவம் ,மனிதநேயம்.

_சின்னம்-_ *மாம்பழம்*🍋

  👎 _பாண்டிச்சேரியில் மாநில கட்சிக்காண அந்தஸ்த்தை இழந்துள்ளனர்._

   💺 _தமிழகரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்த பாமக வீழ்வதற்க்கு சாதியரசியலும் காரணம் என்று முன்வைக்கபடுகிறது._

  🍋 *பாமக வின் வீழ்ச்சிக்கான காரணங்கள்*⁉

🕹 *சிறு கட்சிகளின் கூட்டணி வாக்குகளை வழங்கும், வெற்றியைத் தராது என்ற முடிவுக்கு வந்திருந்தது பாமக. அப்போது வெற்றிக்கான வழியாக அதிமுகவுடன் அணியமைக்க அழைப்பு விடுத்தார், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அதன்படி 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. அந்தக் கட்சிக்கு 5 தொகுதிகள் தரப்பட்டன. மேலும், பாஜக, மதிமுக, தராகா உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக அணியில் இணைந்தன.*

🕹 *தேர்தலின் முடிவில் அதிமுக அணி வெற்றிபெற்றது. நான்கு இடங்களைப் பிடித்த பாமக, வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றது. தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானார். ஆனால், அந்த ஆட்சி வெறும் 13 மாதங்களில் கவிழ்ந்தது. உபயம்: அதிமுக.*

🕹 *விளைவு, பாஜகவின் தேசிய ஜனநாயக அணியில் அதிமுக காலி செய்த இடத்துக்கு திமுக வந்தது. ஆனாலும் பாமக தேசிய ஜனநாயக அணியில் நீடித்தது.*

⏳ _1999 மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கும், தராகாவுக்கும் 9 தொகுதிகளை ஒதுக்கிய திமுக, அவற்றை இருவரும் பகிர்ந்துகொள்ளச் சொன்னது. வாழப்பாடியார் விரும்பியது 2 தொகுதிகள். ஆனால், ராமதாஸோ ஒரு தொகுதியை நீட்டினார். சேலத்தில் போட்டியிட்ட வாழப்பாடியார் தோற்றுப்போனார். மாறாக, பாமக 5 இடங்களை வென்றது. என்.டி.சண்முகமும் பொன்னுசாமியும் மத்திய இணை அமைச்சர்களானார்கள்._

🕹 _தொடர் வெற்றியின் உற்சாகத்தில், ‘பாமக இடம்பெறும் அணியே வெற்றிக் கூட்டணி’ என்றார் ராமதாஸ். குறிப்பாக, 2001 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அணியிலிருந்து விலகி, அதிமுக பக்கம் நகர்ந்தார். அப்போது ராமதாஸ் உதிர்த்த வாசகம் பிரபலமானது. “முடிவுகள் அனைத்தையும் என் அன்பு சகோதரியிடம் (ஜெயலலிதா) விட்டுவிட்டேன். கருணாநிதி பெரிய அண்ணன் தோரணையுடன் நடந்துகொண்டு, எங்களை அழிக்கப்பார்க்கிறார். ஆனால், அன்பு சகோதரியோ எங்கள் மீது நட்பு பாராட்ட விரும்புகிறார்.”_

🕹 _அப்போது அதிமுக, பாமக இடையே விநோத உடன்பாடு உருவானது. தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்குத் தரப்பட்டன. மேலும், அதிமுக - பாமக அணி புதுச்சேரியில் வெற்றிபெற்றால், அதிமுகவும் பாமகவும் தலா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று உடன்பாடானது. ஆனால், தேர்தலின் முடிவில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது. பாமகவுக்கு 20 இடங்கள் கிடைத்தன. ஆனால் புதுச்சேரியில் படுதோல்வி. விளைவு, அதிமுக - பாமக அணியில் விரிசல் ஏற்பட்டது._

🕹 _மீண்டும் பாஜக அணியில் இணைய விரும்பியது பாமக. அப்போது,“தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மீண்டும் பாமக வருவது அந்தக் கட்சிக்கும் பெருமையில்லை,_ _எங்கள் கூட்டணிக்கும் பெருமை சேர்க்காது” என்றார் பாஜக தலைவர் இல.கணேசன்._ *“இஷ்டத்துக்கு ஏறிக்கொள்ளவும், இறங்கிக்கொள்ளவும் எங்கள் கூட்டணி ஒன்றும் ரயில் பெட்டி அல்ல”*என்றார் ஜனா. _கிருஷ்ணமூர்த்தி. அதன் பிறகும் பாஜக அணியில் பாமக சேர்ந்தது. அதுவும்கூடக் குறைந்த காலத்துக்கே. மக்களவைத் தேர்தல் வந்தபோது மீண்டும் அணி மாறியது பாமக. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுகவோடு அணி சேர்ந்தது பாமக._
_கடந்த மக்களவை தேர்தலில் பாஜாக வுடன் கூட்டணி._

  ⏳ _பிறகு திடமான முடிவு எடுத்து சட்டசபை தேர்தலை தனித்து 234 தொகுதிகளிலும் சந்தித்தனர்._
_இவர்களது நிலைப்பாடு இனி கூட்டணியில்லை என்கிறார் ராமதாசு அதற்க்கு காலம் தான் விடையளிக்கும்_

🍋 *அண்புமணி தமிழகத்துக்கான மாற்றா ????*⁉

🕹 *அமைச்சர்↔ கட்சிப் பதவி*

🍋 *‘பசுமைத் தாயகம்’ அமைப்புதான் அன்புமணியின் அரசியல் வாழ்க்கைக்கான நுழைவாயில். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பசுமைத் தாயகத்தை ராமதாஸ் தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பு அன்புமணிக்குக் கிடைத்தது. அந்த அமைப்பின் தலைவராக 7 ஆண்டுக் காலம் பணியாற்றினார். தொடர்ந்து அவருடைய நிர்வாகம், பாமகவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றாலும், 2004-ல் திமுகவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார். பின்னர் 2006-ல் தான் கட்சியின் இளைஞர் அணித் தலைவரானார்.*

🍋 _மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகும் வரை பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த அன்புமணி, அமைச்சரானதும் அப்பதவியில் தனது மனைவி சவுமியாவை அமரவைத்தார். அன்புமணி தம்பதிக்கு சம்யுக்தா அன்புமணி ப்ரித்தீவன், சங்கமித்ரா சவுமியா அன்புமணி, சஞ்சுத்ரா சவுமியா அன்புமணி என மூன்று மகள்கள் உள்ளனர்._

🍋 *சாதனைகள்*🍋

🍋 *2004 - 2009 வரை மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி, பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச் சட்டம். திரைப்படங்களில் புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தது. புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை அச்சிடச் செய்தது. குட்காவுக்குத் தடை, போலியோ ஒழிப்புக்கான திட்டங்கள், எச்.ஐ.வி. - எய்ட்ஸ் நோயின் தாக்கம் 50% குறைகிற அளவுக்கான நடவடிக்கைகள் என்று கவனிக்கத்தக்க பணிகளைச் செய்தார். இக்காலகட்டத்திலேயே ‘தேசிய ஊரகச் சுகாதார இயக்கம்’, ‘108 ஆம்புலன்ஸ் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன.*

🍋 *சென்னை தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையம், தேசிய பள்ளிக் குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டம் போன்றவற்றைக் கொண்டுவந்ததில் அன்புமணிக்கு முக்கியப் பங்கு உண்டு. இப்பணிகள், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் அவருக்கு முதல் இடத்தைப் பெற்றுத் தந்தன.*

🍋 _*பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்தபோது, 2000-ல் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாடு, 2002-ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு, 2003-ல் ஜப்பானின் கியோட்டா நகரில் நடைபெற்ற உலக நீர் மாநாடு, 2012-ல் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு என்று பல முக்கிய மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். 2013-ல் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று, இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார்.*_

🕹 *நம்பிக்கை விதை*🕹

🍋 *ராமதாஸின் எதிர்ப்பையும் மீறி 2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவதற்கு அன்புமணிதான் முக்கியக் காரணமாக இருந்தார். தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தருமபுரியில் அவருக்குக் கிடைத்த வரவேற்பு, ராமதாஸுக்கு நம்பிக்கையை அளித்தது. இதையடுத்து, பாமகவின் அரசியல் வியூகங்கள் மாறின. இதைத் தொடர்ந்து அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பாமக.*

🌱🌞 *திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் நாங்கள்தான் மாற்று என்று பாமக கிளம்பியிருக்கும் சூழ்நிலையில், அக்கட்சியின் ஆதார நம்பிக்கை அன்புமணிதான். இதன் விளைவுதான் 🍋 ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்னும் முழக்கம். மேடைப் பேச்சுக்கள், கருத்தரங்குகள் தொடங்கி ஃபேஸ்புக் பக்கம் வரை பல தளங்களில் தொடர்ந்து இயங்குகிறார். அன்புமணியின் அரசியல் மூலம் அடுத்த தலைமுறை அரசியலைத் தொடங்கியிருக்கிறது பாமக.*

🍋 *‘முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு’ போன்ற நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகள் கவனிக்கவைக்கின்றன.“சாதியக் கட்சி என்கிற விமர்சனத்தை நாங்கள் கடப்போம்.*

🍋 _*அனைவருக்குமான பொது இயக்கமாக பாமக செயல்படும்” என்று சொல்கிறார் அன்புமணி. பல விஷயங்களில் அன்புமணியிடமும், பாமகவிடமும் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. வார்த்தைகளிலுள்ள மாற்றம் செயல்பாடுகளிலும் தொடரும்போது அன்புமணி தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார்.*_

🕹 *பொதுத் தேர்தல்லில் கிடைத்த வாக்குகள்*🕹

*1989 = 9வது மக்களவை1,536,3500*
*1991= 10வது சட்டசபை1,452,9821*
*1991= 10வது மக்களவை1,269,6900*
*1996= 11வது சட்டசபை1,042,3334*
*1996= 11வது மக்களவை552,1180*
*1998= 12வது மக்களவை1,548,9764*
*1999= 13வது மக்களவை2,236,8215*
*2001= 12வது சட்டசபை1,557,50020*
*2004= 14வது மக்களவை1,927,3676*
*2006= 13வது சட்டசபை1,863,74918*
*2009= 15வது மக்களவை1,944,6190*
*2011= 14வது சட்டசபை1,927,783*
*(5.23 %)*
*(2016= 15வது சட்டசபை2,300,775=05.3 %)*

⏳ *இவர்களது தேர்தல் பயணம் தொடர்கிறது.....*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :09.09.2017.*
🌹 *கிழமை : சனிக்கிழமை*    
____________________________________

👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================
*🎯தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான (Dmk, Admk), தேசிய கட்சிகளான (Bjp, Cong) மற்றும் அவைகளின் கூட்டணி கட்சிகளை  தவிர்த்து இதர கட்சிகளில் உள்ள நிறை குறைகள் என்ன?? 🎯அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் உங்கள் முதல்வர் யாராக இருப்பார்?*
💺⁉💺⁉💺⁉💺⁉💺⁉💺
                 *பாகம்*➖2⃣

🕯🕯 *நாம் தமிழர் கட்சி🐯:*
தலைமை ஒருங்கினைப்பாளர்: *சீமான்*.
கட்சியின் சின்னம் : *இரட்டை மெழுகுவர்த்தி 🕯🕯*

🕯🕯 _*தமிழ்நாட்டை முதன்மையாக கொண்ட அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறத*_

🎯 _*இதுல என்னென்ன குறைகள் சொல்றாங்க:*_👎

🕯🕯 *நாம் தமிழர் என்று பெயர் வைத்து யார் தமிழர் என்று குழப்புகிறார்.சாதியை வைத்து தமிழரை முன்னிலைப்படுத்துகிறார்.மணல் கொள்ளை பற்றி பேசும் சீமான் மணற் கொள்ளையர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்.* 👎 *கல்வி கொள்ளையர்களிடம் நன்கொடை பெறுகிறார்.அவருக்கு ஆரவான தொலைகாட்சியில் முன்னிலை படுத்தப்படுகிறார்.*
👎 *மணந்தால் ஈழப் பெண்ணை தான் மணப்பேன் என்றுரைததவர் ஒரு செல்வந்தரின் மகளை மணந்தார்.. நாட்டினஙகளை காப்பதாக கூறுபவர் வீட்டில் வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். மொக்கை படங்கள் எடுத்தவர் இன்று விலையயர்ந்த காரில் வளம் வருகிறார்.. கடவுள் இல்லை என்கிறார், முருகனை முப்பாட்டன் என்கிறார்.  பொது இடங்களில் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.* 👎 *பெண்கள் விசயத்தில் சிக்கினார் என்பது உள்பட பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன*.🎯  *_நாம் தமிழர் நேற்று, இன்று , நாளை:_* ⏳

⏳ _இவங்க கிளைகள் உலகமெங்கும் இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கருநாடகம், மகாராட்டிரம், தில்லி போன்ற இடங்களிலும், உலக அளவில் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, அரபிய நாடுகள், இங்கிலாந்து, சப்பான் , மலேசியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்சு, செருமனி , ஐக்கிய அரபு எமிரேட்சு, சவுதி அரேபியா உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பல உலக நாடுகளிலும் பரவிக் கிடக்கிறது.இவங்க மற்ற எல்லா கட்சிக்கும் மாற்றாக தங்களை முன்னிருத்துறாங்க._

🕯🕯 _*எந்த கட்சியுடனும் கூட்னி வைப்தில்லை என்ற முடிவெடுத்து செயல்படுகின்றனர்.*  🎯 *தமிழ் நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்று உறுதி மொழி ஏற்று நடந்து வருகினறனர்.* *தமிழ் தேசியமே லட்சியக் கொள்கை, விவசாயம்.இயற்கை சார்ந்த விசயங்களுக்கு முன்னுரிமை....... தமிழ்நாட்டில் தமிழருக்கே முன்னுரிமை.........*_
🎯 *_மகளிருக்கு சமபங்கு பிச்சையல்ல உரிமை என்ற முழக்கம்.மேலும் கடந்த தேர்தலில் அனைத்து தொகுதிளிலும் தனித்து போட்டி, திருநங்கைக்கு வாய்ப்பு என பல விசயங்களை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்_* 🕯🕯 _*சற்று வித்யாசமாக ஒவ்வொரு கூட்டத்திற்க்கு முன்பாக அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்ற பின்னரே தொடங்குகின்றனர்*_

🕯🕯 *கடைசிய நாம் தமிழர்... இவரு மேல தான் அநியாயத்துக்கு வருது குற்றசாட்டு.*⛔

🕯🕯 *ஒவ்வொன்னா பேசுவோம்....நாம் தமிழர்னா யாரெல்லாம் தமிழர்னு கேக்குறாங்க?*🤙

🗣 *இத அவர்கிட்டயே கேட்டோம்... அவரு சொல்றாரு எல்லாரும் என்கிட்டயே* *கேக்குறிங்ளே ஏன் இவளோ நாள் யார் திராவிடர்னு ஏன் கேள்வி கேக்கலனு?*🤙
🗣 *ஆமா தான தமிழ்நாட்டுல திராவிடம் வந்தப்ப ஏத்துகிட்டோம்... ஆனா தமிழர்னு ஒருத்தர் வரப்ப ஏத்துக்க முடில.. இன்னும் கூடதலா என்ன சொல்ராரு என்ன மாதிரியே தமிழர்னு உணரும எல்லாரம் என் கூட வரான்... யாருக்கு என்ன பிரச்சனை...?*🤙

🍋 🗣 *அடுத்து யாரு... நம்ம அன்புமனி... சாதி அரசியல் பன்றாரு... ஆமா கண்டிப்பா பன்றாரு தான்... ஆனா யார் பன்னலனு கொஞ்சம் சொல்லுங்களேன்...*🤙

🎯 *நாம சொல்றோமே மதுவ ஒழிக்கனும், இலவச மருத்துவம்னு... இவரோட முயற்சில தான் அந்த ஆம்புலன்ஸ் சேவையும்...*
🎯 *புகையிலை ஒழிப்பும் தமிழ்நாட்டுல சாத்தியமானது... இல்லனா நம்ம பயலுக உதட்டுக்கு கீழ ஹன்ஸ வச்சுகிட்டு காரி காரி துப்பிட்டு இருந்துருபானுங்க இப்ப வரைக்கும்... நீங்க என்ன சாதி அரசியலுக்கு சப்போர்ட் பன்றிங்கனு கேக்காதிங்க... இது சப்போர்ட் இல்ல... இங்க எல்லார் பின்னடியும் ஒரு சாதி இருக்கு, எல்லா சாதிக்கும் ஒரு கூட்டமிருக்கு... அவர் சாதிய முன்னிருத்தி அரசியல் பன்னா அவரால வெளிய தலையெடுக்கவே முடியாது... அவளோ பெரும்பான்மை பெற்ற சாதியும் கிடையாது...  அவருடைய கொள்கைகளுக்கும் கொஞ்சம் மதிப்பளிக்கலாம்...இப்ப   எல்லார் மாதிரியும் நான் ஆட்சிக்கு வந்தால் இந்த ஆணிய புடுங்கிருவேன், அந்த ஆணிய புடுங்கிருவேனு வாய்ல வடை சுடாம... ஏற்கனவே சில ஆணிய ஏற்கனவே புடுங்கி காமிச்சுட்டாரு... அதுல எந்த சாதியும் தெரியல....*🔘

🗣 _*சாதியால தமிழர பிரிக்குறாரு! அவர்கிட்ட கேட்டா நாங்க என்ன தமிழ்நாட்ட விட்டு வெளிய போங்கனா சொல்றோம். கன்னடன கன்னடனா ஏத்துக்குறதுல என்ன பிரச்சனை?❓ தெலுங்கன தெலுங்கனா ஏத்துக்குறதுல பிரச்சனை... 🔪அவனும் என்னோட அண்ணன் தம்பி தான்.. அவன அப்படியே ஏத்துக்குறோம்னு சொல்ராரு.... பெத்த புள்ளைக்கும், எடுத்து வளர்த்த புள்ளைக்கும் வித்தியாசம் இருக்கும் தானுங்களே... பெத்த புள்ள வந்துட்டானு வளர்த்த புள்ளைய விட்ருவாங்களா... என்ன ஒன்னு பெத்த புள்ளைக்கு தான் சொத்து போய் சேரும்.. அதே தான் அவர் சொல்ராரு எல்லாரும் வாழனும், தமிழன் தான் ஆளனும்... சரிதானே...?*_⁉🤙🔪

🗣 _*நாட்டினம் பேசுறாரு வீட்ல ஹைப்ரிட் நாய் வச்சிருக்காரு...!! கட்சி ஆரம்பிக்கும் முன்னடிலேருந்து அந்த நாய் இருக்கு... அதுக்காக கொல்லவா முடியும்...🤦🏻‍♂... வளர்ந்துட்டான் வீட்ல ஒரு புள்ளையா... இப்ப தான ஒவ்வொன்னா கத்துக்குறோம்... தெரிஞ்சுக்குறோம் இனிமே தான் மாத்திக்கனும்னு அவரே சொல்ராரு...*_🎯

⛔  _*ஒருத்தர் பாக்கி விடாம எல்லாரும் சொல்றோம் ச்சே எல்லாத்துலையும் ஊழல்... ஒரே corruption னு சொல்றோம்... ஒரு விசயம் புரில எல்லாருமே இதையே சொன்னா இப்ப லஞ்சம் குடுக்குறது யாரு? 🤙வாங்குறது யாரு?*_🤙🔪

⛔ *_ஒன்னு நீங்க கொடுக்குறத நிறுத்தனும் இல்ல அவன் வாங்குறத நிறுத்தனும்... இரண்டும் கிடையாது... 🔪சும்மா ஒழிக்கனும், ஒழிக்கனும்னா எப்புடி ஒழியும்? ❓முதல்ல இந்த நாலு பேரையும் ஒழிக்கனும்... அப்ப தான் ஒரு முடிவுக்கு வரலாம்._*🔪

🔥 _*எங்க தங்கச்சி அனிதா சாவுக்கு ஏழு லட்சம்... என் தங்கச்சி சாவுக்கு ஏழு லட்சம் குடுத்த நீங்க எல்லாரும் செத்துருங்க உங்க 234 குடும்பத்துக்கும் எங்க தலைய அடமானம் வச்சாவது ஏழேழு கோடி குடு்க்குறோம்...*_

🔥 _*பொண்டாட்டி தாலிய வித்து தண்ணி அடிப்பவனுக்கும்... தமிழ் தேசிய இனத்தின் உரிமையை விற்றுவிட்டு பதவியை அனுபவிப்பனுக்கும் என்ன வித்யாசம் இருக்கு?*_🤙🔪🔪

🗣 _*சரி அது இருக்கட்டும் எல்லாரும் பக்கத்துல வாங்க உக்காந்து பேசுவோம்...*_🗣

🤢 _*எங்களுக்கு ஒன்னும் புரியல இத்தன நாள் இந்த நாலு கட்சிக்கும் மாற்றாக எவனாவது வரமாட்டானா, நம்ம தமிழ்நாடு கெட்டொழியுறத தடுக்கமாட்டானானு ஏங்கிட்டு கடந்தோம்....*_🤢

🗣 _அப்பாடா எதோ ஒரு வழியா கொஞ்சம் FORM ல இருக்க கட்சிலாம் பத்தி சொல்லிட்டோம்..._

😱😳 _*சரி அதான் ஒரு நாலஞ்சு கட்சி இருக்கு எதாவது அடுத்த தேர்தலுக்கு ரெடி பன்னிரலம்னு பாத்தா நீங்க இந்த தி.மு.க , அ.தி.மு.க வ எப்படி கிழி கிழினு கிழிச்சிங்களோ அத விட இவிங்கள அதிகமா கிழிச்சு தொங்க விடுறிங்க... ஸ்ஸ்ஸ்ஸப்பாா முடியல.... எல்லாரும் என்ன தான் ஐடியால இருக்கிங்க*_🤔🤔🤔

✅  *உங்கள நாங்க எதுமே தப்பாவே சொல்லலங்க. உங்க பேச்சு, நேர்மை, ஆதங்கம்,எதிர்பார்ப்பு, கோவம் எல்லாமே நியாயம் தான்... நாங்க மறுக்கவே இல்ல.... எங்களுக்கும் நேர்மையான இளைஞர்கள் வரனும் ஆட்சி அமைக்கனும்... தூய்மையான தமிழ்நாட்ட உருவாக்கனும் ஆசைகள் இருக்கு அதற்கான முயற்சி பன்றோம், பன்னிட்டே இருப்போம் நிறுத்த போறது இல்ல... ஆனா இப்ப நம்ம தமிழ்நாட்டுல என்ன நிலைமை கொஞ்சம் யோசிங்க...*🤔👍

🤕 *_நமக்கு ஒரு பிரச்சனையா இருக்கு இங்க? ஓராயிரம் பிரச்சனை இருக்கு... காவிரி நதி நீர், முல்லையாரு, கட்சதீவு, மீத்தேன்,ஹைட்ரோ கார்பன்,  நீட்னு இன்னும  பல பல பிரச்சனைகள் இருக்கு... நாம இப்படியே இளைஞர்கள் வரட்டும வரட்டும்னு உக்காந்துருந்தா அவங்க வரப்ப தமிழ்நாட்ட தேட வேண்டியதா இருக்கும்... ஆளே இல்லாத இடத்துகாரன் எதுக்கு?_*🤙

♨ *இப்ப நாம என்ன பன்றோம் இந்த எச்ச ஊடகங்கள பாத்து மாமா ஊடகம், வேசி ஊடகம்னு விட்டு பிரிக்குறோம்... இத தான விஜயகாந்து பன்னாரு.. அப்படி என்ன தப்பா கேட்டாரு " இந்த கேள்விய என்ன பாத்து கேக்குறிங்களே, இதே அந்த அம்மாவ பாத்து கேப்பிங்களா? கேக்க மாட்டிங்க... பயப்படுவிங்க த்தூதூ....😂" இதுல என்ன தப்பிருக்கு உங்களுக்கும் எனக்கும  இருக்க ஆதங்கம் தான அவருக்கும் இருக்கு.. இன்னொரு தடவ கேட்டாரே " ஏன்யா நீயா எனக்கு சம்பளம் குடுக்குற உனுக்கு ஏன் நான் பதில் சொல்லனும்"... ஆமா இந்த எச்ச பசங்களுக்கு ஏன் நாம பதில் சொல்லனும் இவிங்க பசிக்கு நாம ஊருகாவா?*🔪

🔥 _*இப்ப இன்றைய நிலையில எதாவது ஒரு கட்சிய நாம தேர்ந்தெடுக்கலனா நாம மறைமுகமா அதே நாலு பசங்களுக்கும், கூட்டனிக்கும் வாய்ப்பு தரதா அமைந்திடும்... புது திருடனுக்கும், நல்லா திருடி எக்ஸ்பீரியன்ஸ் ஆனவனுக்கும் வித்தியாசம் இருக்கு... பயபுள்ளைக்கு நேக்கு போக்கு தெரியாது...  சரி நம்மலையே எடுத்துக்குவோமே...*_👍

🙏 _*இதுவரை காலம் கடத்துனது போதும்... அரசியல் மாற்றத்தின் முதல் முயற்சியாக ஆள  மாத்துறோம்... எங்களுக்கு தெரிஞ்ச சில கட்சிகள் பத்தி சில கருத்துக்கள உங்க முன்னடி வச்சுருக்கோம்...🎯 படிச்சு பாருங்க... முடிவு உங்க கையில் தான்👍.. இதுல யாராவது ஒருத்தர் மேல சின்னதா நம்பிக்க வச்சா கூட தேர்ந்தெடுங்க... அதும் திருட்டு நாயா இருந்தா ஆடிச்சு விரட்டவும் தயாரா இருங்க...*_👍🎯🔪

🗣🔥 _*நம்மல கேப்பாங்க எங்க ஜல்லிக்கட்டுக்கு வந்த இளைஞர்கள், மாணவர்கள் கடல்ல எண்ணை கொட்னத அள்ள வரல, ஹைட்ரோ கார்பனுக்கு வரல, தூர் வார வரல, சீமை கருவைய வெட்ட வரலனு... எல்லாத்துக்கும் அவிங்களே வந்தா மந்திரி லாம் எதுக்கு மணி அடிக்கவா? நல்லா கேட்டு விடுங்க... நம்மல பத்தி பேச இந்த நாலு பயலுக்கும் யோக்கித இல்ல.*_👎👎🔪🔪

🤙 _*சும்மா பேசிட்டே இருக்க வேணா... *_👎

🔪 *_சொல்லும் முன் செயல்...!!_*👍
🔪 _*செயலே சிறந்த சொல்...!!!*_👍
🔪  _*செயல்ல காட்டுவோம்..!!!*_👍
_*முதல்ல இந்த நாலு கட்சியும் ஒழிச்சு புதுசா ஒருத்தனுக்கு வாய்ப்பளிப்போம்....!!*_👍👍

*நன்றி!*💐 *வணக்கம்!*💐

💐 *ஆளப்போறான் தமிழன்*💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🙏 *சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க துடிக்கும் அனைவருமே இன்றைய சிறந்த பேச்சாளர்களே*😎

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*வரவன் எல்லோருமோ யோக்கியனா இருந்துடுவாங்கனு சொல்ல முடியாது..*
   *அதனால இழந்ததயே சொல்லி பொழம்பாம , இருக்குறத காப்பாத்துறதுக்காவது புதிய ஆட்சிய அமைப்போம்..*
*நம்ம கையில இருக்குற ஒரே பலம் வாக்கு மட்டுமே.. ஐந்து வினாடில ஏமாந்தோம்னா ஐந்து வருடம் அப்படியே ஏமாற வேண்டியது தான்...*

சிந்திப்போம், சிறப்பாக வாழ்வோம்..💐💐

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்*
*எனநான்கே ஏமம் படைக்கு.*
            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
*வீரம், மானம், முன் வீரர்கள் சென்ற வழியில் செல்லுதல், தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.*
    
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*"மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கலாக்காயே மேல்".*

*என்றோ வர இருக்கும் இளைஞர்களுக்காக காத்திருப்பதைவிட, தற்போது இருப்பவர்களில் அதிகபட்ச தகுதியுடையவரை தேர்ந்தெடுத்து மாற்றத்தை நோக்கி முன்னெடுப்போம்.*

✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨
👨🏻‍💻 *நான் மகான் அல்ல +6598648093*
👨🏻‍💻 *நிருபன் கதிர்*
*7358614182*
👨🏻‍💻 *பிரபாகரன் சிதம்பரம்*
*+919677562694*

✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎  *கமலி*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...