*கலந்துரையாடல் குழு*
*************************
*தேதி : 05-09-2017*
*கிழமை : செவ்வாய்*
*************************
*தலைப்பு*
_________________________
*தற்போதைய தற்கொலைகளும்🤔, (நீட் தேர்வு மற்றும் நீலத் திமிங்கலம்...etc) அதன் தாக்கங்களும்...*
_________________________
*மாணவர்கள் ஏன் தற்கொலை பண்ணிக்கிறாங்கனு தெரில. நம்ம பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மளை பெத்தெடுத்து, படிக்க வைத்து, நம்மள ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர அவங்க வியர்வை சிந்தி உழைத்து படாதப்பாடு பட்டு வளக்குறாங்க.*
*அட்லிஸ்ட் அவங்க வளர்த்ததற்கு, நம் அவங்களுக்கு எதுவும் நன்றிக்கடனை பண்ணவில்லை என்றாலும், அவங்க கூட இருக்கிறது அவங்களுக்கு எவ்வளவு பெரிய பலம் தெரியுமா? பிள்ளைகள் இறக்கும் போது பெற்றோர்கள் அனாதையாகின்றனர். நீங்க உங்க வாழ்க்கைய முடித்து, உங்க பெற்றோரை அனாதையாக்கி அவர்களுக்கு கொல்லி வைக்க கூட ஆளில்லாம சிலர் பண்ணிடுறாங்க.*
*🐬நீலத் திமிங்கலம்*
*நம்மள பிளாக் மெயில் செய்து, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மெண்டல் டார்சசர் குடுக்குறான்.*
*முதல்ல நம்ம ஏன் மறைமுகமா தவறான வழிகளில் செல்ல வேண்டும்? நம்ம ஒழுங்கா இருந்தா எப்படி அவனால பிளாக் மெயில் பண்ண முடியும்? முதல்ல மொபைல் போன், கம்யூட்டர்களில் விளையாடுவதையே தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு கிரண்டுல போயி விளையாடுறது. ஏன் கண்ணை கெட்டடுச்சி தன் வாழ்க்கைய பாழாக்கிக்கணும்🤦🏼♂.*
*மொபைல், கம்யூட்டர் கேம் விளையாடுவதற்கு பதிலா, அறிவுள்ள புத்தகங்களை படிக்கலாம். உன் பெத்தவங்களுக்கு நேரம் செலவு பண்ணலாம். அவங்க கூட உட்கார்ந்து பேசலாம். நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம் (நாலு விசயம் தெரிஞ்சிக்கலாம்).*
*கேம் விளையாடுறவன் தலைய குனிஞ்சா அப்பா, அம்மா கூப்பிட்டாக் கூட காதுல வாங்க மாட்டேங்குறாங்க🤦🏼♂.*
*இப்பலாம் எமன் மொபைல்ல வர ஆரம்பிச்சிட்டான். இந்த மொபைல்னால எப்ப எவன் வாழ்க்கை திசை மாறுதுனு சொல்ல முடில. (dangerous sweet poison)*
*ஒரு விசயம் பண்ண கூடாதுனா பண்ண கூடாது தான். அதுல போயி என்ன இருக்கு போயி பாப்போமேனு ஆராய்ச்சில லாம் இறங்க கூடாது. அப்போ நான் அடிமையா? எனக்கு உரிமையில்லையானு சிலர் கேப்பாங்க. தம்பி அது ஹைபவர் கரண்ட் கை வைக்காதனு சொன்னா வைக்க கூடாது தான். எங்க வச்சி பாப்போம்னு பார்த்தா உன் வாழ்க்கையோடு சேர்த்து உன் பெற்றோர்கள் வாழ்க்கையும் வீணாப் போயிடும்.*
*சில குறும்புக்கார தம்பிங்க கேப்பானுங்க. அண்ணே... அண்ணே... அப்போ எனக்கு பெத்தவங்க இல்ல நான் விளையாடி பாக்கலாமானு, அவங்களுக்கு எங்களுடைய பதில் டேய்., ஓடிடு... விதி யாரை விட்டுச்சி. தேவையில்லாம ஒரு விசயத்துக்காக உயிரை விடுறதுக்கு உயிரோடு இருந்து நாலு பேருக்கு நல்லது பண்ணிட்டு போயிடலாம்டா.*
*அப்புறம் பெத்தவங்களுக்கு ஒரு அறிவுரை. இவனே இன்னும் கல்யாணம் பண்ணல. இவன்லாம் பெத்தவங்களுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டானா? உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது 😂🤣.*
*புள்ளைங்க எந்த தவறு செய்தாலும் முதல்ல ரசிக்க பழகுங்க. அப்பதான் உங்க கிட்ட எல்லா விசயமும் சொல்லுவான். அவன் என்ன தவறு செய்தாலும் ஏய் சூப்பர் சூப்பர் சூப்பர்னு 👏🏼👏🏼👏🏼 முதல்ல ஒரு பாராட்டை தெரிவியுங்க. அப்புறம் எடுத்து சொல்லி அதனால என்னென்ன விளைவுகள் இருக்கு. பாதிப்புகள் இருக்கு. இதுக்கப்புறமும் உன் மனதிற்கு சரினு பட்டா உன் விருப்பம் போல பண்ணு ஆனா எதுவா இருந்தாலும் எங்க கிட்ட சொல்லிடு நமக்குள்ள பேசி முடிச்சிருவோம். இந்த ஒரு பிட்டை போட்டா போதும் automatica எல்லாம் ஷேர் பண்ண ஆரம்பிச்சிடுவான்.*
*பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு புரிந்துணர்வு இருந்தா போதும். எந்ந ஒரு தீய சக்தியும் உங்களை மீறி உங்க பிள்ளைங்கள பிளாக் மெயிலாம் பண்ணிட முடியாது. தற்கொலை செய்யுற அளவிற்கும் போக மாட்டான்.*
*வயசுப் பசங்க தவறு செய்வது இயல்பு. யாரும் பண்ணிடாததை புதுசா பண்ண போறது இல்ல. எந்த தவறு செய்தாலும் அன்பாக எடுத்து சொல்லி புரிய வைங்க. தட்டி கொடுத்து வளர்க்க பாருங்க.*
_________________________
*நீட் தேர்வு மற்றும் நீல திமிங்கலம் தவிர்த்து,*
*⚰தற்கொலை பற்றி பார்ப்போம்....*
_________________________
*இத பத்தி பேசுனாலே எனக்கு பிடிக்காது. ஒண்ணுமே பண்ண முடியாதவன்லாம் நிறைய சாதிக்கிறான். எப்படி வாழ வேண்டும் என்று தன்னம்பிக்கையுள்ள உடல் உறுப்புகளை இழந்த ஊனமுற்ற நண்பனிடம் கேட்டுப்பார். உடலில் சில உறுப்புகள் இல்லாமலே தினமும் ஜம்முன்னு வாழ்றாங்க.*
*எல்லாம் நல்லா இருந்தும் மரத்துல தொங்குறான். மாடியில் ஏறி குதிக்கிறான். ஃபேன்ல மாட்டிக்கிறான். மருந்தை குடிக்கிறான். அச்சச்சோ... நானே ஐடியா குடுக்கிற மாதிரி இருக்கு. சரி அடுத்த மேட்டர் போவோம்...*
*தமிழ்நாட்டு தற்கொலைகளை பட்டியலிடுக. (10 மார்க்)*
*1.விவசாயி தற்கொலை*
*2.லவ்வுஸ் தற்கொலை*
*3.மார்க் கம்மி தற்கொலை*
*4.குடும்ப சண்டை தற்கொலை*
*5.வாழ பிடிக்கல தற்கொலை*
*6.அப்பா அடிச்சிட்டாங்க தற்கொலை*
*7.கடன் பிரச்சனை தற்கொலை*
*8.பெத்த பொண்ணு பிரச்சனையால தற்கொலை*
*9.இப்ப நினைச்சத படிக்க முடியல, பணம் கட்ட முடியலனு தற்கொலை😢*
*📋நோட் பண்ணி வச்சிக்கோங்க அடுத்த நீட் தேர்வில் கேட்பாங்க.🤷🏼♂*
*தற்கொலையின் ஆணிவேர்*
*1.நமக்கு பிடிச்சது கிடைக்கல,* *2.அவமானம்,*
*3.இத விட்டா வேற வழி இல்லனு நினைக்கிறது.(பிடிவாதம்னு கூட சொல்லலாம்).*
*தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு சில டிப்ஸ்*
*வாழ்வது எப்படி என்று யார்கிட்ட கேட்கலாம் 🤔*
*1.குடும்ப கஷ்டத்துக்காக படிக்காம வேலைக்கு போற, கல்யாணம் ஆகாத வயசுப் பொண்ணுக்கிட்ட எப்படிம்மா இந்த சமுதாயத்துல வாழ்ற உன் கஷ்டம் என்னம்மானு கேளுங்க.*
*2.பிச்சை எடுக்குறது தப்பு. ஆனா இங்க தேவைப்படுது. கோவில் வாசலில் இன்னமும் பிச்சையெடுக்குறாங்க அவங்க தினமும் எப்படி வாழ்றாங்க அவங்க கஷ்டம் என்னன்னு கேளுங்க.*
*3.கணவர் இல்லாம தான் புள்ளைங்கள சிறு வயதில் இருந்து படிக்க வைக்க கஷ்டப்படும் தாயிடம் கேட்கலாம். நீங்க எப்படி வாழ்றிங்க உங்க கஷ்டம் என்னான்னு கேளுங்க.*
*4.கீளின் இந்தியாவ மாற்ற, உண்மையாவே உழைக்குற நம்ம நாட்டை சுத்தம் செய்யுற துப்புரவு தொழிலாளர்களிடம் அவங்க கஷ்டம் என்ன? அவங்க எப்படி வாழ்றாங்கனு கேட்டுப் பாருங்க.*
*5.தாயில்லாமல் பெண் பிள்ளைய வளர்க்கும் அப்பாவிடம் எப்படி கஷ்டப்பட்டு வாழ்றிங்கனு கேட்கலாம்.*
*6.தன்னை கவனிக்க கூட ஆளில்லாமல் தனியாக வாழும் முதியோர்களிடம் எப்படி வாழ்றிங்கனு கேட்டு பார்க்கலாம்*
*லிஸ்ட்டு பெருசா போகுது இதோட நிப்பாட்டிக்குறேன்.*
*இவங்க கிட்டலாம் கேட்டுட்டு தற்கொலை பண்ணணுமா வேண்டாமனு ஒரு முடிவு பண்ணுங்க.*
*இல்லை இது சரிப்பட்டு வராது என்று நினைத்தால், கலந்துரையாடல் குழுவுக்கு வந்துருங்க. கவுன்சிலிங் தர இங்க ஏகப்பட்ட பேரு கிடக்கோம் 😂🤣*
_________________________
*📚நீட் தேர்வு📚*
_________________________
*டாக்டர் அனிதா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிய செலுத்து விட்டு, ஸ்டார்ட் பண்றேன் 😭😭*
*ஒரே நாடு ஒரே வரி*
*அதுபோல மருத்துவத்தையும் கொண்டு வரணும்னு நினைச்சாங்க.*
*அதுக்கு முதல்ல இந்தியா புல்லா ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரணும். அதுக்கப்புறம் நுழைய தேர்வு வைக்கணும். சரி ஏன் இந்த நுழைவு தேர்வு 🤔. அதுக்கு 12 வதுலயே ஒரு சப்ஜக்ட் வச்சி, தமிழ், ஆங்கிலம் வச்ச மாதிரி நீட் னு ஒரு புத்தகம் கொண்டு வந்து பரீட்சையோட பரீட்சையா எல்லா மாநிலத்துலயும் ஒரே மாதிரி கொண்டு வரலாம்ல.*
*இதுக்காக தனியா கோச்சிங் சென்டர் வேற போன தான் பாஸ் பண்ண முடியும்ங்கிறாங்க.*
*😴😴😴 முடியல*
*11 வது, 12 வது புத்தகத்துல இருக்குறது தான் நீட் தேர்வுல வருமாம். ஏன் இப்படி தலைய சுத்தி காதை தொட வைக்கிறிங்க. முதல்ல ஒரு மீட்டிங் போட்டு தெளிவான முடிவு எடுங்க. பிளான் பண்ணி பண்ணுங்க. திடீர், திடிர்னு ராத்திரி, ராத்திரில பணம் செல்லாதுனு சொல்லி பீதிய கிளப்புன மாதிரி, எல்லா விசயத்துக்கும் திடிர் திடிர்னு திட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்தி இருக்கிறவன் உயிரை வாங்காதீங்க.*
*ஏற்கனவே நீட் தேர்வு பற்றி முடிவுரை போட்டப்பவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே பாடத்திட்டம் கொண்டு வாங்க. அப்புறம் எந்த ........... வேணாலும் வைங்கனு அப்பவும் சொன்னோம். இப்பவும் அதே புராணத்தை தான் சொல்றோம்.*
*இன்னும் எத்தனை உயிர பலி வாங்க போறிங்கனு தெரில.*
_________________________
*📝மாணவர்களுக்கு சில அறிவுரைகள்*
________________________
*நல்லா படிக்கிறவங்களாம் ஏன் தற்கொலை தேடி போறாங்கனு தெரில.*
*நம்ம நாட்டுல வேலை பாக்குறவங்க பாதி பேரு, தனக்கு பிடிக்காத வேலைய தான் பாக்குறாங்க. விதிய நினைத்து. 😏*
*நான் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கல என்பதற்காக, எல்லோரும் தற்கொலை பண்ணிக்கிட்டா நாட்டுல பாதி பேரு தற்கொலை தான் பண்ணிக்கனும். உண்மையா? பொய்யா? நீங்களே யோசிச்சி முடிவு பண்ணிக்கோங்க.*
*அனிதா மட்டுமே இந்த நீட் விவகாரத்தில் பாதிக்கப்படவில்லை என்பதை அனைவருமே உணர வேண்டும். நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டோர் தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் 1000 மாணவர்கள் இருப்பாங்க. எல்லோருமே (1000 மாணவர்கள்) தற்கொலை தேடி போயிட்டிங்கனா, யார் தான் எதிர்த்து நின்று போராடுவது?*
*உங்களை கஷ்டப்பட்டு இவ்ளோ நாள் படிக்க வைத்த அப்பா, அம்மாவை கொஞ்சம் நினைச்சி பாக்கலாம்ல. இதுல ஒரு பிள்ளைய மட்டும் நம்பி உள்ளவங்க எத்தனை பேரோ😢.*
*உங்க அப்பா, அம்மாவ கேட்டு பாருங்க உங்களோட ஆசை என்ன? இப்ப என்ன பண்றிங்கனு, பாதி பெத்தவங்க சூழ்நிலைகளுக்காக ஏதோ ஒரு பணிய செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுருப்பாங்க.*
*அப்படித்தான் இப்ப இந்த விவகாரமும்🤦🏼♂.*
*எனக்கு கூட இந்தியா வல்லரசு ஆகணும்னு ஆசை. அதுக்கு தான் சில முயற்சிகளை நானும் ஏதோதோ போற போக்குல பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுக்காக இந்தியாவ இங்க இருக்கிற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் வல்லரசாவே ஆக்க முடியாதுனு தற்கொலை பண்ணிக்கிட்டா எல்லாம் சரி ஆகிடுமா? இந்தியா உடனே வல்லரசு ஆயிடுமா. நாளைக்கே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கையே எப்படி வேணாலும் மாறும்🤦🏼♂. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும் என்று யாருக்கும் முன்கூட்டி தெரியாது. நல்லது, கெட்டது கலந்து தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணி தான் வாழ பழகிக்கணும்.*
*பாவம் அந்த அனிதா பொண்ணு, சிறு வயது டீன் ஏஜ் முடிவு எடுக்க தெரியாத வயது தவறான முடிவுக்கு தள்ளப்பபட்டுட்டாங்க*
*மத்திய, மாநில அரசு சேர்ந்து கொலை பண்ணிட்டானுங்க. இவனுங்கள திட்டுறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா இந்த விசயத்துல நான் அரசியல் பேச விரும்பல.*
*முடிஞ்சவரை போராடி பாப்போம். வெற்றி பெறுவோம். இப்ப இல்லனாலும் கொஞ்சம் லேட்டா கூட. ஆனா தோற்க மாட்டோம்.*
*இப்ப நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக முடியாம போன மாணவர்களுக்கு ஆறுதல் மட்டும் கொடுத்தா போதும். ஒவ்வொருத்தரும் நூறு அணுகுண்டுகளுக்கு சமம். நீங்க வெடிச்சி சிதறாம இருந்தாலே போதும். உங்களை இனிமே பார்த்தாலே அரசியல்வாதிங்க பயப்புட ஆரம்பிச்சிடுவானுங்க.*
*நம்ம நாட்டுல இப்ப ஆப்சன்ஸ் நிறைய இருக்கு. ஒண்ணு இல்லைனா இன்னொன்னு, அப்படினு போயிட்டே இருக்க வேண்டியது தான். இப்ப பாக்கி இருக்குற மாணவர்கள் அத தான் பண்ண போறாங்க. கவலைப்படாதீங்க நண்பா. உங்களுக்கு நாங்க சப்போட் இருக்கோம். கண்டிப்பா நீங்க எல்லாரும் ஜெயிப்பிங்க. நீங்க டாக்டரானாலும் சரி. ஆகலனாலும் சரி. நம்ம பல டாக்டர்களை உருவாக்குறோம். என்ன நண்பா சரியா ☺👍🏻.*
*ஒரே ஒரு பஞ்ச்👊 சொல்லிட்டு ஓடிறேன்.*
*தற்கொலை இம்முடிவுரைக்கு எதிரானது.🏃🏼🏃🏼🏃🏼🏃🏼🏃🏼*
_________________________
*சமுதாயத்தை எதிர்த்து எப்படி வாழ்வது என்பதை இவங்க இன்று சிலரிடம் எதிர்த்து பேசுனது ரொம்ப நல்லா இருந்துச்சி. இவங்க பதிவுகள் தனிமையாக தெரிந்தது. அதனால இவங்கள சூஸ் பண்றேன். இன்றைய சிறந்த பேச்சாளர்கள்*
1⃣@S. காவியா பில்டர்ஸ்
2⃣@DEVENDRANhp, @We Are Nokers💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
3⃣ க.நிருபன்கதிர், @jaiganesh2881
_________________________
*நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி, நெஞ்ச நிமிர்த்து எதிர்த்து நிப்போம். தவறான முடிவை தேர்ந்தெடுககாதீங்க.*
*முதல்ல சமுதாயத்தை எதிர்த்து வாழ பழகுவோம். அதுக்கப்புறம் திருக்குறள், விளக்கம், பழமொழி கருத்துலாம் படிச்சிப்போம்.*
_________________________
*முடிவுரை தொகுப்பாளர்*
*குட்டி ராஜேஷ் 9486552988*
_________________________
*விழிப்புணர்ச்சி குழும நிர்வாகிகள்*
_________________________
*மணி விஜய் 8428073724*
*அருள் முருகஇன்பன் (வழக்கறிஞர்) 9942288439*
No comments:
Post a Comment