🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :ஞாயிற்றுக்கிழமை*🌹
🌹 *தேதி : 15.10.2017* 🌹
_______________________________________________
❣ *அறிவோம்*❣
*உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்துகொள். உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டுள்ளன.....*
💐 *சுவாமி விவேகானந்தர்*💐
⚜ *அட்மின்தாட்ஸ்*⚜
😇 *மகிழ்ச்சி என்பது மனதை பொருத்தது....*
*பணத்தை வைத்து உறவை வாங்கலாம்....*
*உணர்வை வாங்க முடியாது..!!!!*
📣 *தலைப்பு*📣
*தீபாவளி வரலாறு? அது எங்கிருந்து கொண்டாடப்படுகிறது? அவரவர் பார்வையில் தீபாவளி வரலாறு என்ன?*
⏳🎇🎊🎆🎉🎇🎊🎆🎉🎇⏳
🌍 *இந்தியாவிலுள்ள* *அனைத்து மதத்தினரையும்* *ஈர்க்கும் ஒரே பண்டிகை* *தீபாவளிதான்,🎊இந்த* *பண்டிகை அக்பர்* *( மொகலாயர்கள் அனுமதியுடன் )*
*காலத்திலேயே இந்து மதத்தினர் கொண்டாடி இருக்கின்றனர்.*🎊
🎉🎊🎇 *பழந்தமிழ் இலக்கியங்களில் இப்பண்டிகை குறிப்பிடப்படவே இல்லை" என்கிறார் தமிழ்க்கடல் மறைமலைஅடிகளார்.*
🎆 *சமண சமயப் பண்டிகையே தீபாவளி' என்கிறார், அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ள, 'சமணமும் தமிழும்' நூலில், "தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்டபண்டிகை என்கிறார்கள்*.🎉
🎆 *சமண தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே இரவு முழுவதும் சொற்பொழிவு ஆற்றினார். மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.வர்த்தமான* *மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார்.*
🌍🎇 *உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை* *மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும்* *பொருட்டு அவர் இயற்கை எய்திய* *நாளில் வீடு தோறும்* *விளக்குகளை ஏற்றி வைத்து விழாக்* *கொண்டாடும்படி* *ஏற்பாடு செய்ததாகவும்*
*மகாவீரர்* *விடியற்காலையில்* *இயற்கை எய்திய படியால் 'தீபாவளி'* *என்ற பெயரில்* *விடியற்காலையில் கொண்டாடப் படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.*💁🏻♂
🎇🏹 *ராமன், ராவணனை அழித்து விட்டு 16 ஆண்டு வனவாசத்தை முடித்துவிட்டு திரும்பி வந்தநாளை அயோத்தி மக்கள் விளக்கேற்றி கொண்டாடியதாகவும், அதுவே தீபத்திருநாளாக கொண்டாட பாடுவதாகவும் செல்லப்படுகிறது.*🎉
🎆🎊 *கிருஷ்ணர்* *நரகாசூரனை அழிக்கும் பொழுது* *அவன் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்கவும் வெற்றி வீரனாக சகோதரியின்* *வீட்டிற்கு செல்லும்* *பொழுது அங்கு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட பட்டதாகவும் இதனை நினைவு கூறும்வகையில் தீபாவளி அன்று இனிப்புக்கள் வழங்கி கொண்டாட பாடுவதாகவும் செல்லப்படுகிறது.*😊
🎆🎊 *சீக்கியர்கள் 1577ஆம் ஆண்டு தங்களது தங்க கோவில்கட்டும் பணி தொடங்கிய நாளை கொண்டாடும் விதமாக தீபங்களை ஏற்றி வழிபட்டதாகவும் அதுவே தீபாவளி என்றும் கூறுகின்றனர்.*💁🏻♂
🎆🎉 *மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டு 16-ஆம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருவதாகவும் செல்லப்படுகிறது.*💁🏻♂
🎆🎉 *'தமிழர் மதம்' என்ற நூலில்,"வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே தெரிந்த முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என சொல்லப்படுகிறது.*🎊🎉🎇
🎊🎉🎇 *தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை🌟 வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம் நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி.*💫💥
🎊🎉💥 *தமிழர்களால் கொண்டாடப்படும் பெரும்பாலான பண்டிகைகள் எந்த காலத்தில் எப்படிபட்ட சூழ்நிலையியல் உருவானது என்று கணிப்பது சிரமமாகவே உள்ளது.*😓
🎉💥 *தீபத்திருநாள், விளக்கு ஒளியுடனும் இனிப்பு வகைகளுடனும் கொண்டாடப்பட்டு வந்தநிலையில் பட்டாசுக்கள் எப்படி இணைந்தன என்று சரிவர சான்றுகள் இல்லை.*🙅🏻♂
🎊💥🎇 *பட்டாசு கி.பி.960 & 1279ல் சீனாவில் ‘லிங்‘ வம்ச காலத்தில்தான் பயன்படுத்தியதாக நம்பப்பட்டாலும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுகளில் சீனர்கள் பட்டாசு தொழில்நுட்பத்தை முதலில் கண்டுபிடித்ததாகசொல்லப்படுகிறது.*
🎉💥🎇 *'டபாஸ்‘ என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்துதான் ‘பட்டாசு‘ என்ற தமிழ்ச் சொல் வந்தது. டபாஸ் என்றால் உரத்த ஒலி என்று பொருள். ‘ஒளி‘ என்று பொருள்படும் ‘மஹதாப்‘ என்ற உருதுச் சொல்லில் இருந்துதான் ‘மத்தாப்பு‘ என்ற பெயர் வந்தது.* 🎆👍
🌍🎉🎆 *இந்தியாவிலேயே முதன்முதலாக மேற்குவங்காள மாநிலத்தில்தான் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர் 1932ல் சிவகாசியில் அறிமுகப்படுத்தினர்.*👍
🎉💥🎆 *ஒருநாள் கொண்டாடப்படும் பண்டிகைக்காக ஓராண்டு முழுவதும் உழைக்கும் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்து வருகிறது இந்த தீபத்திருநாள். நம் நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீத தேவையை சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ளபகுதிகள் பூர்த்தி செய்கின்றன.*👍
🎆🎉 *கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்படும் சீனப்பட்டாசுகளால் பட்டாசுத் தொழிலை மட்டும் நம்பியுள்ளவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தும் அரக்கனாக உருவெடுத்துள்ளது சமீபகாலமாக!*😵
🎉🤔😴 *எல்லாம் சரிதான்,நாம் எப்படி கொண்டாடுகிறோம்* *என்பதை பொருத்து தான் மகிழ்வான தருனங்கள் அமையும்.*😇
*ஏழை, நடுத்தரம், வசதியானவர் என எல்லாத் தரப்பினரும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.*
*தீபாவளி என்றாலே மிரளவைக்கும் பண்டிகையாக அமைந்து விட்டது.*😇
🎉🎆 *ஒரு காலகட்டத்தில் மன மகிழ்விக்கும் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்தநிலையில் இன்று தவிர்க்க முடியாத ஆடம்பர பண்டிகையாக மாற்றப்பட்டுள்ளது. ஒருநாள் கொண்டாட்டமாக இருந்தாலும் ஆண்டு முலுவதும் சேமிக்க வேண்டிய நிலை இருக்கிறது.*😨
🎆🎉 *தீபாவளி வந்தாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான். பட்டாசு வெடித்து ஆனந்தத்தோடு குத்தாட்டம் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.😇🎊🎉 பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியடைவது தான் தீபாவளி.*🎉🎊
🎆🎊 *எத்தனையோ தீபாவளி கொண்டாடினாலும், துணையுடன் கொண்டாடும் தல தீபாவளியை யாராலும் மறக்க முடியாது. ஏன எத்தனையோ தீபாவளியை பெற்றோர்கள், உறவினர்களுடன் கொண்டாடி இருப்போம் ஆன தல தீபாவளி கொண்டாட்டம் மாமனார் வீட்டில், அந்த சந்தோச தருணத்தை சென்னால் புரியாது அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்.*👍
🎆🎊😇 *ஒரு சந்தேகம், வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் இல்லை என்று நமக்கு* *உணர்த்துவதற்காக நம் முன்னோர்களால்* *கண்டுபிடிக்கப் பட்டதாக இருக்குமோ...*.🤔
🎉🎆 *புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி "ஜி.எஸ்.டி" அறிமுகத்தால் அனைத்து பொருட்களும் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.*😨
🎆🎉🎊 *கதைகள் எதுவாக இருப்பினும் அதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் வியாபாரிகளும் நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் உங்களை விடப் போவதில்லை.*😏
🎉🎊🎭 *வண்ண வண்ணமாக எழுதுகின்றன பத்திரிகைகள். வர்ண்ஜாலம் காட்டுகின்றன தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் வண்ண வண்ண விளம்பரங்களால் வாரிச்சுருட்டுகின்றனர்.*😏
🎊🎉 *இப்படி எல்லோரையும் சமாளித்து குடும்ப உறவுகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வகைகளுடன் குட்டி, சுட்டியுடன் பட்டாசு, மத்தாப்பு கொளுத்தி இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.*🎆🎊👍😇
🎆🎉🎊😇 *இருக்கறத வச்சி சிறப்பா வாழணும்' 'இல்லாத பலாக்காய்க்கு இருக்குற கலாக்காய் மேல்' என்கிற பழமொழியை உலகுக்கு சொன்ன முன்னோர்களின் பின்னோர்கள் தான் நாம்,*😇👍
🌍🎇 *இந்தியா முழுக்கச்சென்ற சாக்தத்தில் தீபாவளி என்னென்ன மாற்றங்கள் அடைந்தது என்பது தனி ஆராய்ச்சிக்குரியது. பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகைதான். சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப்பார்க்கலாம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றார் என்பது வைணவக்கதை. நரகாசுரன் தன் அன்னையாகிய தேவியால் கொல்லப்பட்டான் என்பது சாக்தத்தின் கதை.*
🎉🎊😇 *பண்டிகைகள் மாறிக்கொண்டே இருப்பது வரலாறு. தேதிகள்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.*
😇🎊🎉 *பண்டிகைகளால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.*😇🎉🎊
🎇🎉🎊 *தீபாவளியை டிவி முன்னே அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம்.🤷🏻♂ அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். அது நம் தெளிவை பொறுத்தது.*🤷🏻♂😇
🎉🎊😇 *அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.*🎉🎊😇
🤷🏻♂💁🏻♂🎊🎉 *ஏதோ எங்களால முடிஞ்ச வரை தேடி எடுக்க முடிஞ்ச வரலாறு இதுதாங்க☹*
🌀🎉 *தீபாவளி உண்மையான வரலாறு சிறு குறிப்பு வரைக.*
🤷🏻♂ *ஒரே ஒரு வடிவேலு காமெடி தான் மனதில் தோன்றுகிறது.*
💁🏻♂ *வாங்கடா வாங்கடா வாங்கடா வாங்க. என்னப்பா ஜாமீன் வாங்கிட்டிங்களா?*
🤓 *அண்ணே கோயம்புத்தூர் மார்க்கெட் புல்லா தேடிட்டோம்ண்ணே..!*
🤓 *என்னது மார்க்கெட்டுக்கா?*
🤓 *ஆமாண்ணே..! வால மீனு இருக்குங்கிறான். வஞ்சரை மீனு இருக்குங்கிறான்.*
🤓 *நெய் மீனு இருக்குங்கிறான். நெத்திலி மீனு இருக்குங்கிறான்.*
🤓 *கெண்டை மீனு இருக்குங்கிறான். கெலுத்தி மீனு இருக்குங்கிறான்.*
🤓 *இவ்வளவு ஏன் சுறா மீனு முதற்கொண்டு இருக்குங்கிறான். ஆனா நீங்க கேட்டா ஜாமீன் மட்டும் இல்லையாம் பாஸ்.*
🤓 *அடப்பாவிங்களா..?*
😆😆😆😆😆😆😆😆
*உண்மையான தீபாவளி வரலாறு நாங்களும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்ட்டிக்கா, அமெசான் காடுகள் வரை தேடி பாத்துட்டோம். எங்கயுமே கிடைக்கலங்க😉*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த சிந்தனைவாதிகள்*👑
🎁🎉 *@Su*
🎁🎉 *@தமிழன் navaseK*
🎁 🎉 *@SRIRAM ACS*
🎁🎉 *@ThilagaChelladurai*
*கலந்துரையாடல்~2*©®
🎁🎉 *@🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼*
🎁🎉 *@enayathsp*
🎁🎉 *@sukumar ❤Zhorba*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
🎇💃🏻🕺🏻 *தீபாவளினாலே அதுல ஒரு ஜாலி, மகிழ்ச்சி, கொண்டாட்டம், விடுமுறை, உணவு, இனிப்பு பலகாரங்கள், அண்டை வீட்டுக்காரர்களுடன் பகிர்தல், புது துணி எடுப்பது, தீபாவளி போனஸ் குடுப்பது, வாங்குவது, இப்படி ஏகப்பட்ட மகிழ்ச்சி பொங்கி கிடக்கின்றது. தமிழர் பண்டிகை பொங்கல் தினத்தில் கூட சிலர் புது துணிகள் எடுப்பது இல்லை. ஆனால் தீபாவளிக்கு புது துணிகள் எடுத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.* 😇
🎇🕺🏻💃🏻 *நம்ம இந்த முழுமையான மகிழ்ச்சியா விட்டுட்டு வரலாறை தேடி கண்டுப்பிடிக்கணுமா?😏 இங்கு தீபாவளி வரலாற்றில் முதன்மையானது, நரகாசுரன் இறப்பு பற்றி மட்டுமே எல்லோராலும் நம்பப் படுகிறது. அதற்கும் முழுமையான ஆதாரங்கள் என்று நிரூபிக்க ஏதும் இல்லை. எல்லாம் கதைகளாக இருக்கின்றது தவிரே, தீபாவளி ஆரம்பம், இதிலிருந்து தான் என்ற ஒரு உண்மையான அடையாளம் இன்று வரை கிடைக்க வில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.*👍
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை*
*மாற்றுவார் ஆற்றலின் பின்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப்* *போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
♦ *அறிந்துகொள்க*♦
*"வெடித்தால் ஒலி, வெந்துவிட்டால் வழி"*
♦ *தெரிந்துகொள்*♦
*"பத்துப் பேருக்குப் பல்குச்சி, ஒருவனுக்குத் தலைச் சுமை"*
♦ *புரிந்துகொள்க*♦
*"அளகேசன் ஆனாலும், அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்"*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *இராமலிங்கம் அங்கப்பன்*
*60122646502*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 🏹 _*GK*_🏹
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment