Monday, 9 October 2017

லோக்கல் சேனல்களும், அவர்கள் செய்யும் இம்சைகளும்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :9.10.2017.*
         🌹 *கிழமை : திங்கட்கிழமை*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது*

💐 *பிரவுனிங்*💐

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*என்ன தான் நம்ம பல முயற்சிகளை மேற்கொண்டாலும்,*

*விமர்சனங்கள் வருவதை தடுக்க இயலாது.*

💖💖💖💖💖💖💖💖💖💖💖
    👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
*========================*

*லோக்கல் சேனல்களும், அவர்கள் செய்யும் இம்சைகளும்*
🖥🎉👻🙌📺🎊👻🙌🖥🎉👻🙌

🎉🎊 *கலந்துரையாடல் குழுவில் இருக்கும் அனைவருக்கும் என் தமிழ் வணக்கம்...🙏🏻*

🤣😂 *இன்னைக்கு தலைப்பு செம ஜாலியா போச்சுன்னு நினைக்கிறேன்.. சரி வாங்க விஷயத்துக்குள்ள போவோம்...*🤠

🖥📺 *உள்ளூர் சேனல் அப்படினா...🤔*

🖥📺 *குறிப்பிட்ட டவுன்(நகராட்சி) சுற்றியுள்ள ஊர்களில் மட்டுமே இந்த சேனல்கள் எடுக்கும்.. கேபிள் கனெக்சன் இருந்தால் மட்டுமே எடுக்கும்...*

🖥📺 *பொதுவான நாள்களில்...*
*(திங்கள் முதல் வெள்ளி வரை)*

🙌 *காலை 6 மணிக்கு...*👇

🙌🤓 *தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தி பாடல்கள்... ஆமாங்க காலைல சாமிப்பாட்டு கேட்டா நல்லதுன்னு எல்லா லோக்கல் சேனல்லையும் டான்னு 6 மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சுடுவாங்க... பாட்டுன்னு பாத்தா ஒரு பத்து பாட்டுதான் போடுவாங்க... ஆனா இந்த விளம்பரம் ...🙈 அதப்பத்தி நான் கீழே சொல்லுறேன்.. இப்போ நிகழ்ச்சிகள மட்டும் பாப்போம்...*🙌

🙌 *காலைல 8 மணிக்கு...*👇

🎼🎶🎵 *புதுப்பாட்டு ... நடுத்தர பாட்டு... எதாச்சும் ஒரு பாட்டு போட்டு நேரத்த கடத்திருவாங்க....*😏

🙌 *காலை 10 மணிக்கு...*👇

🙌 *இயக்குனர் விக்ரமன் படம் அதாங்க குடும்பப்படம்னு சொல்லுவோம்ல அந்த படங்கள்ல எதாச்சும் ஒரு படம் போடுவாங்க..*😊

🙌 *மதியம் 2 மணிக்கு...*👇

🎥📽 *புதுப்படங்கள் ... 2015-க்கு அப்பறம் வந்த படங்களில் எதாச்சும் போடுவாங்க...*🎞📀

🙌 *மாலை 5 மணிக்கு...*👇

🏡🎼 *கிராமிய பாடல்கள்... அதாவது நடுத்தர படங்களில் வரும் பாடல்கள்..   கிராமங்களில் படமாக்கப்பட்ட பாடல்கள் .. அதான் கிராமிய பாடல்கள்னு சொன்னேன்...*🤓

🙌 *இரவு 7 மணிக்கு...*👇

🎤☎🎶 *உங்கள் சாய்ஸ்... உள்ளூர் சேர்ந்த ஒரு பையனோ, பொன்னோ இந்த நிகழ்ச்சில இருப்பாங்க...🙍🏻🙍🏻‍♂ நாம போன்பண்ணி அவங்ககிட்ட பாடல் பேரு சொன்னா.. அவங்க நீங்க கேட்ட பாட்டு இருந்தா போடுவாங்க அப்டி இல்லைனா... எதாவது ஒரு பாட்டு போடுவாங்க...😜 இப்போ இந்த நிகழ்ச்சி எத்தன ஊர்ல நடத்துறாங்கன்னு தெரியல...*🙃🙂

🙌 *இரவு 10 மணிக்கு....*👇

🎥 *மறுபடியும் எதோ ஒரு புதுப்படம்...*📽

🎉 *சனி மற்றும் ஞாயிறு....*🎊

🤔🤓 *அவ்வளவு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது... அதே நிகழ்ச்சிகள் தான் வரும் இருந்தாலும் கொஞ்சம் புதுப்படமா போடுவாங்க... இரவு பத்து மணிக்கு மேல... ஹாலிவுட் படம் ...*📽🎥

🙌 *உள்ளூர் விஷேச நாட்களில்...*👇

🎑🌅 🙏 *கோவில் பண்டிகை...*👇

🤠 *நேரடி ஒளிபரப்பு ... கோவிலுக்குள்ள இருக்குற சாமிய காமிக்கவே மாட்டாங்க... ஆனா கோவிலுக்கு வரவங்க .. போறவங்கள மட்டும் தான் ரெகார்ட் பண்ணுவாங்க...*🙈🙊

😤😩😫 *ரெகார்ட் பண்ணத சும்மா வாரத்துக்கு ஒரு தடவ போட்டு போட்டு சலிப்படைய வச்சுடுவாங்க....*😰😨

🤓🤗 *திருவிழா விளம்பரங்கள் எல்லா சாதி சம்மந்தமானது வரும்... சின்ன வயசு பசங்க எல்லாம் காசு சேத்து ஒரு ஒரு ஆளுக்கு தீம் மியூசிக் போட்டு ஒரு வீடியோ விளம்பரம் பண்ணி அவங்களும் பிரபலமா மாறிடுவாங்க... ஒரு வாரத்துக்கு அவங்கல பத்தி அவங்களே பெருமையா பேசிப்பாங்க...*😉😜

🎂🍫🍬🍭 *பிறந்தநாள் வாழ்த்து.. இந்த வாழ்த்து வீடியோவ்ல குழந்தை ஒரு மூலையில் இருக்கும் அவங்க சொந்தக்காரங்க.. தெரிஞ்சவங்க எல்லாரும் வீடியோ மெய்ன்ல இருப்பாங்க.. தீம் மியூசிக் வேற...🤣*

🙌 *விளம்பரங்கள்....🙈*

🤔😜🤔 *ஒன்னா இரண்டா... எத்தன விளம்பரம்...*
*பொதுவா சில சேனல்கள் TRP ரேட்டிங் முறையை வைத்துதான் விளம்பரங்கள் போடுவாங்க... ஆனா லோக்கல் சேனல்க்கு TRP ரேட்டிங் கிடையாது.. அவர்கள் சேனலின் வருமானம் என்பது விளம்பரங்கள் மூலம் மட்டுமே வரும்... ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவு என்று தொகை உள்ளது... தொழில் செய்பவர்களுக்கு உதவியாக உள்ளது... ஆனால் மக்களுக்கு...🤦🏻‍♂*

😜 *இந்த தாயத்து வாங்கி கட்டிகிட்டா கையில் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்னு ஒரு விளம்பரம் வரும்..*🙊👊

🙊 *அதவாங்கிட்டு மறுநாள் கைசெலவுக்கு கடன்வாங்க அலையோ அலைனு நாம தான் அலையுறோம்*😜😉

🙌📺 *அரசாங்கம் கொடுக்கும் இலவச டி.வி பொட்டிகூட நல்லா வேலைசெய்யுது..*😉

😳🙄 *ஆனா இன்றே கடைசி வாய்ப்பு தவறவிட்டா அப்புறம் வருத்தபடுவீங்க ஒரு மிஸ் கால் கொடுங்க வீட்டுக்கே பொருள் வந்துரும்னு ஒரு விளம்பரம் ஒரு மணிநேரம் ஓடும்.*😜🙄

😴😩 *அப்பலாம் மைண்ட் வாய்ஸ்ல ஒரு சில வார்த்தைகள் ஓடும்*

😉😜😝😛 *நம்பி வாங்க நாசமா போங்க🤣*🙊🙊

🙊 *ஒரு கிலோ அரிசி வாங்கினால் வேஷ்டி சட்டை சேலை இலவசம்னு ஒரு விளம்பரம் லோக்கல் சேனல்ல வரும்*😆

😃😄 *அதையும் நம்பி வாங்கி  இலவசமா டிரெஸ் கிடைச்சுட்டுனு சந்தோஷ படுறோம்*

😏😏 *அதேநாளில் செய்திகள் சேனலில் ஆற்றில் உள்ள கழிவு டிரெஸ்களை சமூக ஆர்வலர்கள் சுத்தம் செய்து விட்டனர்னு செய்தி வருது*

🤡 *அப்பலாம் சிலரோட மைண்ட் வாய்ஸ்*😜🤓

🙊 *ஆஹா இது அதுல்ல.. இது தெரியாம பத்து புடவை வாங்கி கொடுத்துட்டேனே*😉🤦🏻‍♂

🙈 *இன்னைக்கு வீட்ல பூரிகட்டை பறக்குமே ஊர காலி பண்ணிருடா கைப்புள்ள*😉😜

🤓 *விளம்பரங்கள் அதிகம் ஏமாற்றும் எண்ணமே உள்ளன.. ஒரு சில நல்ல விளம்பரங்களும் உண்டு... ஆனால் அதை மற்ற விளம்பரங்கள் கெடுத்துவிடுகின்றன.....*🤦🏻‍♂

🤗 *30 இன்ச் டீவில 20 இஞ்சுக்கு தான் படம் தெரியும் ... சுத்தியும் நியூஸ் சேனல்ல வர மாதிரி விளம்பரங்கள்...*😜😉

📺 🗣 *சரி கொஞ்சம் சீரீயஸ் மேட்டர் பேசுவோம்.*😣🤒

📺 *லோக்கல் சேனல்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு தனி கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு லோக்கல் சேனல் நடத்துவதற்கு, தபால் அலுவலகச் சான்றிதழ் தவிர வேறு எந்த அனுமதியும் தேவையில்லை என்பது மிகப் பெரிய சோகம். (இப்ப கொஞ்சம் பணமும் தேவை).*😔😞

📺 *உள்ளூர் சேனல்களில், செய்தி ஒளிபரப்புவதற்கு அனுமதி இல்லை🙅🏻‍♂ என்பது அடுத்த விஷயம். அவர்கள் வாங்கும் விளம்பரங்களுக்கு முறையாக கணக்கு காட்டுவதில்லை என்பது தனி கதை.*☹😠

📺 *இத்தனையும் மீறி, உள்ளூர் சேனல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு செயற்கைக்கோள் சேனல் துவங்க வேண்டும் என்றால், அதைத் தொடங்க விரும்புவர்களின் ஜாதகத்தையே கேட்கிறது மத்திய அரசு.*👊😡

📺 🏛 *மத்திய அரசின் ஐந்து துறைகள், இதற்கான அனுமதி வழங்குவதில் தொடர்புடையதாக இருக்கின்றன. அவ்வளவு ஏன்? எப்.எம்., ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்புவதற்கு கூட, ஆயிரத்தெட்டு நடைமுறைகள் இருக்கின்றன.*😠👊

👊 *ஆனால், எந்தச் சம்பிரதாயமும் இல்லாமல், சாதாரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன உள்ளூர் சேனல்கள்.*☹

📺 *இவர்கள் செய்தி ஒளிபரப்பும்போது, அதில், தங்கள் எண்ணத்தைத் திணிக்கும் வாய்ப்பும், ஒரு சாராருக்கு சாதகமாக செயல்படும் வாய்ப்பும் அதிகம். (ஏன்யா, எல்லா பயலுவோலும் அத தான்னய்யா பண்றானுங்க🤣😂. மைண்ட் வாய்ஸ் கேட்குது).*🤕

😰😨🗣 *உள்ளூர் கலவர சமயங்களில், இரண்டு வார்த்தை தப்பாக ஒளிபரப்பிவிட்டால், பிரச்சினை பற்றி எரிவதற்கு, அதுவே காரணமாகிவிட முடியும்.*☹😰👊

📺🔎 *ஆனால், இதை எல்லாம் கண்காணிக்க எந்த அமைப்புமே இல்லை🙅🏻‍♂ என்பது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை.*😱

📺📰🗞 *பத்திரிகைகளை வழிநடத்த, "பிரஸ் கவுன்சில்' இருக்கிறது. ஆனால், உள்ளூர் கேபிள் சேனல்களை வழிநடத்த, கவுன்சிலர்கள் கூட இல்லை.*🙅🏻‍♂😰

📺🏛 *இதைக் கட்டுப்படுத்த, மாநில அரசின் தலையீடு, அவசர அவசியமாக இருக்கிறது. மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், மாநில அரசின் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், உள்ளூர் கேபிள் சேனல்களை நெறிப்படுத்த, ஒரு சட்டம் அவசியம்.*⚖👍

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

🏅 *DEVENDRANh*
🏅  *⁨Maha Rajan⁩*
🏅 *Karthikeyan c🤗⁩*
🏅 *⁨ksivasaravanan⁩*

*கலந்துரையாடல்~2®©*

🏅 *@⁨🌱 பசுமை🌱புருஷோத்⁩, @ks*

🏅 *@⁨🦄KPKR🦄⁩, @⁨Pradeep Viswaa⁩*

🏅 *@⁨பேரறிவு💫⁩, @⁨kutty mani⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
*👍கருத்து🤔*

*முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, லோக்கல் சேனல்களில் செய்திகள் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டார்.*

*ஆனால், இப்போது நிலைமையே வேறு. உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்திகள், வேறு வடிவில் ஒளிபரப்பப்படுகிறது.*

*லோக்கல் சேனல்கள், இணையதளத்தில் படம் வெளியான உடனேயே வெளியிடுகிறார்கள்.*

*ஏற்கெனவே திருட்டு விசிடியால் சினிமா தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளது. இப்போது, இணையதளங்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.*

*இப்போது உள்ளூர் சேனல்களும் இணைந்திருப்பது தான் திரையுலகின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்துவிட்டது.*

*இவற்றைக் கண்காணிக்கும் அதிகாரிகள், நேர்மையாகயும் தைரியமாகவும் செயல்படாதவரை, இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.*

*திருட்டு விசிடிய ஒழிக்கிறாங்களாம்🤣.*

*தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கைது செய்றாங்களாம்🤣.*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்*
*பண்பில்சொல் பல்லா ரகத்து*
   
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❣ *அறிந்துகொள்ளவும்*❣

*மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாது போனால் பரதேசம் போவேன்.*

❣ *புரிந்துகொள்ளவும்*❣

*தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?*

❣ *தெரிந்து கொள்ளவும்*❣

*வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு.*

📣📢📣📢📣📢📣📢📣📢📣
🖌 *முடிவுரை தொகுப்பாளர்*🖌

🤠 🎙 *நா.ராமகிருஷ்ணன்*
*8124323975*🎙🤠

📣📢📣📢📣📢📣📢📣📢📣
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...