Friday, 17 November 2017

இணையதள நட்பு... பயனுள்ளதா..? ஆபத்தானதா..?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :வியாழன்*🌹

🌹 *தேதி :16.11.2017* 🌹
__________________________________
🔰 *அறிவோம்*🔰
■★■★■★■★■★■★■★■★■★

💝 *உண்மையான நட்பு ஆரோக்கியம்* *போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்*
*உணர்வதில்லை*

💐 *வோல்டன்.*💐
■★■★■★■★■★■★■★■★■★

💁🏻‍♂ *உன் வாழ்க்கைக்கு ஏதாச்சும் அர்த்தம் தேடுன்னு பெரியவங்க சொன்னாங்க.*

🤔 *இப்போ அது என்னன்னு தேடியே வாழ்க்கை முடிஞ்சிடும் போல இருக்கு*

    😎●◆● *அட்மின்*●◆●😎

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
      📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*இணையதள நட்பு... பயனுள்ளதா..? ஆபத்தானதா..?*
🖥🤝📲👎🤔👍🤔🖥🤝📲👎

😇 *கலந்துரையாடல் குழுவில் உள்ள நண்பர்களுக்கு எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻*

😍 *வயசு வித்யாசம் பாக்காம, ஜாதி , மதம், பேதம் பாக்காம , முகம் கூட பாக்காம , முக்கியமா எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காம எல்லாம் ஒண்ணா சந்தோஷமா பழகறோம் பாருங்க.... அப்படி பழகும் இணையதள நட்பில் நல்லது...! கெட்டது...! என்னான்னு பாப்போம்...*🤝

😍 *இன்னைக்கு இருக்க தலைமுறையினருக்கு இடையில பரபரப்பான ஒரு தலைப்பு தான் இது..*😍

😍 *இப்ப இருக்க பசங்க கம்ப்யூட்டர் ல அதிக நேரம் செலவிட்றாங்க..அவன் கிட்ட போய் "அப்படி என்ன தான் டா அவ்வளவு நேரம் பண்றன்னு கேட்டா?"*🤔

😍 *"அம்மா ப்ரெண்டோட சேட்(chat )பண்றேன்மான்னு " சொல்வான்*🤗

😍 *"அது என்னடா அது சேட்டு? 🤔இந்த வடஇந்திய சாப்பட்ற ஐட்டமா? 🤔அதான் இந்த ரோட்டோரமா விப்பாங்களேன்னு அப்பாவியா அம்மா கேட்டா*🤢

😍 *"போம்மா உனக்கு இதெல்லாம் புரியாதுன்னு" பெத்த அம்மாவையே மட்டம் தட்டுவானுங்க என்ன பண்றது இது தான் கலிகாலம்*🙃

👨‍👩‍👧‍👦 *அப்பா அம்மா பையன் படிக்கிறான் அவன் படிப்புக்கு உபயோகமா இருக்கும்னு தான் கணினியையும்🖥📲 மொபைலையும் வாங்கி தரது ஆனா இப்ப இருக்க தலைமுறையினர் கணினியையும், மொபைல்லயும் சுமார் பத்து சதவீதம் தான் விஷய ஞானம் தேவைபட பயன் படுத்துறாங்க பாக்கி தொண்ணூறு சதவீதம் இந்த ஆன்லைன் நட்பு தேடல் அவங்களோட பேசறதுல தான் கழிக்கிறார்கள் (இதுல நானும் கூட விதி விலகில்லைங்க)*😉

😍 *சரி நட்பு🤝 வட்டம்றது ரொம்பவே ஆரோக்கியமான ஒன்னு அதை அமச்சிகறது தவறில்லை தான் ஆனா இப்படி முகத்தை சந்திக்காம ஏற்படுத்திகிற நட்போ காதலோ சரியா அமையுமா❓?🤔 இதற்கு பதில் சொல்றது ரொம்பவே திண்டாட்டம்😴 தான் ஏன்னா இதுல சரி சமமான நல்லதும் இருக்கு தீயதும் இருக்கு அதனால பதில குறிப்பிட்ட உதாரணங்கள் மூலமா சொல்லலாம்னு தோணுது..*😏

😍 *முதல்ல ஆன்லைன் நட்பு எப்படி தீமையா❎ இந்த கால தலை முறையினர் வாழ்கைய குலைக்குதுன்றதுக்கு சில உதாரங்கள் பாப்போம்!*👇

❎ *முதல்ல நான் பார்த்து உச்சகட்ட அதிர்ச்சி பெற்ற ஒரு வீடியோவ பத்தி சொல்றேன்*📱📸

🤔 *இதை நான் எங்க பார்த்தேன் எப்படி பார்த்தேன்றது எனக்கு நினைவில்ல ஆனா பார்த்தது சுத்தமா மறக்கல*😧🤦🏻‍♂

❎ *அந்த வீடியோ ஆன்லைன் ல ஏற்படற உறவு எப்படின்றத பத்தி.*🤦🏻‍♂

❎🤦🏻‍♂ *மொதல்ல ஒரு பொண்ணையும் பையனையும் காட்றாங்க ரெண்டு பேருமே தன்னோட சொந்த பேர்கள் இல்லாம மறைமுக பேர்களால பேசிகிறாங்க (அதான் இந்த ஸ்வீடி நாட்டி பாட்டின்னு காமடியா பேரு வெச்சிகிட்டு இருப்பாங்களே அந்த மாதிரி)*🤦🏻‍♂😡

❎🤦🏻‍♂ *அந்த பையன் அந்த பொண்ணுகிட்ட பேச்சுலையே வழியிறான் பொண்ணும் அதை படிச்சிட்டு நகத்த கடுச்சுகிட்டு சிரிக்குது*😡

❎🤦🏻‍♂ *அடுத்து "இன்னும் எத்தன நாள் தான் ஸ்வீடி என்னை உன்னோட அழகான முகத்த பார்க்க விடாம தவிக்க விடபோறன்னு?" கொஞ்சுறான் அந்த பொண்ணும் ரொம்ப நாள் விளையாட்டு காட்டின பிறகு "சாரி டா செல்லம் இத்தன நாள் உன்னை காக்க வெச்சதுக்கு என்னை மன்னிச்சுடு நான் உன்னை இனிமேல் காக்க வைக்க விரும்பல இந்த எடத்துல சந்திப்போம்னு" ஒரு நெட் செண்டர்ல இந்த நம்பர் கேபின்ல இந்த நேரத்துல இருப்பேன்னு அடையாளம் எல்லாம் சொல்லுது (மீட் பண்றதுக்கு கூட நெட் சென்ட்டர் தானா டா உங்களுக்கு)*😡

❎🤦🏻‍♂ *சரி நானும் கொஞ்சம் ஆர்வமானேன் ரெண்டு காதலர்கள் முதல் முறையா முகம் பார்க்க எப்படி இருக்கும்னு*🤔

❎🤦🏻‍♂ *ரெண்டு பேரும் பயங்கரமா ரெடி ஆகுறாங்க (நம்ம வாழ்நாள்லயே இன்னைக்கு தான் நாம அழகா தெரியுனும்ன்ற மாதிரி) அழகான உடையோட சென்ட் எல்லாம் கூட அடிச்சிக்கிட்டு ( அந்த பையன் வாய்க்கு சென்ட் அடிச்சத நெனச்சா நான் இப்ப கூட தலைல அடுச்சுகிறேன்)*😏

❎🤦🏻‍♂ *அந்த பொண்ணு சொல்ற எடத்துக்கு அந்த பையன் வந்துடறான்......உள்ள நுழையுறான்......அந்த பொண்ணு ரொம்ப டென்ஷனா காபினுள்ள உட்காந்திருக்கு (எக்ஸாம் ரிசல்ட் வரும்போது கூட அப்படி ஒரு டெண்ஷன பாக்க முடியாதுங்க) இந்த பையன் மெதுவா நடந்து வந்து அந்த கேபின் வெளிய நிக்குறான்..... மெதுவா கதவ திறக்குறான்.... அந்த பொண்ண பாத்தா உடனே ஐயோன்னு தலைல அடுச்சுகிறான்! அந்த பொண்ணும் அச்சொன்னு!! அதிர்ச்சியாகுது (ஏன் ரெண்டு பேரும் ஒருத்தருகொருத்தர் அவ்வளவு கொடுமையா தெரிஞ்சாங்கலான்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது )*🤦🏻‍♂😜

❎😜 *வீடியோ ரீவைண்ட் ஆகுது மறுபடியும் அவங்க ரெண்டு பெரும் சேட் பண்றத காட்றாங்க *🤗

🤦🏻‍♂ *நடுவுல ஒரு தடவ ரெண்டு பேருமே கேப் (இடைவெளி) விடுவாங்க பேசறதுக்கு அப்ப அவங்க அம்மா பால் கொண்டு வந்து வைப்பாங்க அவன் திரும்ப சேட்டுக்கு வரும் போது அந்த பொண்ணும் கொஞ்சம் கேப் விட்டு வரும் காரணம் அந்த பொண்ணோட அம்மாவும் பால் கொண்டு வந்து தருவாங்க*

🤔😴 *புரியலையா மக்களே?? ரெண்டு பேருக்கும் ஒரே அம்மா தான்!!*🤦🏻‍♂🤦🏻‍♂

🤦🏻‍♂🤦🏻‍♂ *அவங்க அண்ணன் தங்கச்சி (வீட்ல வேற வேற அறையில இருந்தே சேட் பண்ணி நாசமா போயிட்டாங்க) இப்ப மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருவோம் தான் இத்தன நாள் வழிஞ்சது சொந்த தங்கை கிட்ட தான்னு தெரியும் போது அவன் நிலைமையும் தான் சிரிச்சு சிரிச்சு காதலிச்சு கொஞ்சினது கூட பொறந்தவன்னு தெரியும் போது அந்த பெண்ணோட நிலையும் எப்படி இருந்திருக்கும்னு நினைச்சு பாக்கவே முடியல இது ஒரு குறும்படம் தான் ஆனா ஆயிரம் அர்த்தங்கள் நிறைஞ்சதா தான் எனக்கு பட்டது..*😞

🤷🏻‍♂ *உங்களுக்கும் அப்படி தான்னு நினைக்குறேன்...*🤷🏻‍♂

🤷🏻‍♂ *இதுல தப்ப யார் மேல சொல்றது இந்த கால சமுதாயத்தினர் மீதா? ❓குழந்தைகள் சந்தோஷம் தான் பெருசுன்னு அவங்கள கண்காணிக்க தவறின பெற்றோர்கள் மீதா?❓ இல்ல இந்த இணைய தல நட்பு ஏற்படுத்தல் மீதா?*❓🗡

😴 *எனக்கு சொல்ல தெரியல!*😴

🤒 *அதே மாதிரி இன்னொரு காரணமும் இருக்கு...*

💑 *ஒரு பெண்ணும் பையனும், முகநூலில் பார்த்து நட்பாகி, பேசி, பழகிய பின்பு அவர்களது நட்பு கடைசியில் காதலாக மலர்ந்தும்விட்டது.💑 ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. அந்த ஆணோ பெரிய மென்பொருள் நிறுவனத்தில் நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில் இருப்பவன். பெண் கல்லுரி செல்லும் மங்கை.*🤷🏻‍♂

💑 *அந்த பையன் எப்பொழுது நாம் இருவரும் சந்திக்க போகிறோம் என கேட்க, அப்பெண்ணும், ஒரு இடத்தை சொல்லி அங்கு சந்திக்கலாம் என்று முடிவெடுத்து, அந்த பையன் அங்கு செல்ல அங்கு யாரையுமே காணவில்லை. அவன் அவளது அலைபேசிக்கு அழைக்க அந்த பக்கம் பதில் எதுவும் இல்லை. சிறிது நேரத்தில் அங்கு சில மர்ம ஆட்களால், அவன் கொல்லப்பட்டு அவனது உடைமைகள் கொள்ளை அடிக்கப்படுகிறது.*😱

😨 *இத்தனைக்கும் அந்த பையன் படித்து நல்ல பணியில் இருப்பவன் தான், இருந்தும் இதுபோல் தப்பான இடத்தில் நட்பு வைத்து கொண்டது அவருக்கே ஆபத்தாக முடிந்துவிட்டது.*😔😰

📲🖥🤝 *இணையதள நட்பு எப்படி ஆபத்தானதா இருக்குனு உதாரணம் மூலமா சொன்னேன்.. காரணம் இங்கிருப்பவர்கள் ஒருசிலர் அது ஆரோக்கியமானது தான்ற முறையிலும் பேசினதால தான்...*🤷🏻‍♂

😊 *எல்லாரும் நல்லா விவாதம் பண்ணிக்க அதில இணையதள நட்பு பாதுகாப்பானது என்றும் கருத்துக்கள் வந்தது. ☺உங்க கருத்துக்களால எனக்கு மகிழ்ச்சி தான் காரணம் நெறைய பேர் அப்படி சொல்ல காரணம் நம்ம கலந்துரையாடல் மாதிரி ஒரு பாதுகாப்பான தளம் தான்!! 😇இங்க நமக்கு அவ்வளவு பாதுகாப்பான நட்பு வட்டம் ஏற்பட்டு இருக்குன்னுட்றது நூற்றுக்கு நூறு உண்மை*👍👍

🤷🏻‍♂ *ஆனா இணையதளம்ன்றது கலந்துரையாடலோடவோ இல்லை இது போன்ற பாதுகாப்பான தளங்கலோடவோ முடிஞ்சிடல இன்னுமே இன்றைய இளையதலைமுறையினரை பாழாக்கும் தளங்களும் பல இருக்கின்றன 😴😰அவை அவர்களை அடிமையாக்கி முன்னேற விடாமல் தடுக்கும் தடைகற்கள் தான்.*😔🤦🏻‍♂

🌐 *இன்றைய நவீன யுகத்தில் எல்லாம் எப்பொழதும் வேகம் வேகம்100/75பேர் கண்ணு கெட்ட பிறகுதான் சூர்ய நமஸ்காரம் செய்கிறார்கள்.*😰

💁🏻‍♂ *நல்ல விஷயங்களை பரிமாறி கொள்ளும் போது...இன்றைய காலகட்டத்தில் அனைவரும் நேரில் பார்த்து பேச முடியாத படி ரொம்ப!! அவசரமாக ஓடி கொண்டு இருக்கிறோம்.😰 போனில் எல்லோரிடமும் பேச முடியாது! (டைம் தான் காரணம்) ஆன் லைன் நட்பு பட்டியல் நிறைய பேருக்கு நூறுகளின் எண்ணிக்கையில் தான் இருக்கிறது. ஆன் லைனில் நேரம் கிடைக்கும்போது சாட்டிங் செய்து நட்பை முறியாமல் பார்த்து கொள்ள முடிகிறது.*🤷🏻‍♂

💁🏻‍♂ *நல்லது கெட்டது அறிந்து தான் வளர்கிறோம் ஆனால் டைம் பாஸ் பண்ணும் எண்ணத்துடன் இன்டர்நெட் மூலமாக தேடலை தொடங்கினால் கண்டிப்பாக அந்த காலத்தில் தவம் செய்தவர்களின் அளவு மனக்கட்டுப்பாடு தேவை.*👍

💁🏻‍♂ *ஒரு குறிப்பிட்ட வயதிற்கும் மேல் இருபவர்களால் புதிய அறிமுகங்களை வடிகட்ட தெரியும்.👍 ஆனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் புதிதாக அறிமுகம் ஆகும் ஒருவர் சொல்லும் அலங்கார வார்த்தைகளை உண்மை என நம்பி பல முடிவுகளை எடுகிறார்கள்.*😰

💁🏻‍♂ *எனவே online நட்பு அளவுடன் இருந்தால் மிகுந்த உற்சாகத்தையும்😇 வழிதவறிவிட்டால் மிகுந்த அல்லலையும்🤕🙄 கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.*🤷🏻‍♂

💁🏻‍♂ *எந்தளவு ✅நன்மை கிடைக்கிறதோ அதே அளவு தீமையும்❎ இதில் இருக்கிறது.*👍

💓 *ஆரோக்கியமான தனிமையில் இருக்கும் எத்தனையோ பேருக்கு இணையதள நட்பு மிக பெரிய துணை தான்.*🤝

💓 *அதே தனிமையில் இருக்கும் எத்தனையோ பேருக்கு இணையதள நட்பு மிக பெரிய சாபம் தான் .*😰

😇 *ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதே...*💝

💁🏻‍♂ *இந்த உலகத்தில் மற்றவர்களை முட்டாளாக்க உரிமை உண்டு. இது போன்ற வேலையையும் சில பேர் இப்பவும் செய்கிறார்கள்...*🤦🏻‍♂

📲🖥 *இணையத்தள நட்பு விஷயங்களில் ஆண்களை விட 👩🏻🙍🏻பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்... 👍காரணம் நெறைய இருக்கு...*🤷🏻‍♂

💁🏻‍♂ *இதுனால நாங்க முடிவா சொல்ல வரது என்னான்னா..!!!*🤷🏻‍♂

🖥🤝📲 *இணையதள நட்பு விஷயங்களில்....*

👍 *அளவோடு இருக்கனும்(ஒரு தரம்).........*
. *அளவோடு இருக்கனும்(இரண்டு தரம்)..........*
*அளவோடு இருக்கனும் (மூனு தரம்).............👍*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 சிறந்த சிந்தனைவாதிகள்*👑

🥇 *@⁨Vita Safe Life My Company⁩*
🥈 *@Ganesa moorthy& Niruban kathir*
🥉 *@⁨✍🏻Arman🎭⁩& @⁨Jaiganesh*

👑 *கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*👑©®

🥇 *@⁨😆😝Rishi😂🤣⁩*

🥈 *@⁨d navaneethakrishnan⁩*

🥉 *@⁨👉🏼SIVARAJ💘👈🏼&⁩*
*@⁨🙊படிக்காதவன்🙉⁩*

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

🖥🤝📲 _*ஆன்லைன் நட்பு தேடலில் இருக்கிற ஆரோக்கியமும் ஆபத்தும் நாம் கையாளும் விதத்தில் தான்இருக்கிறது.*_👍

🤷🏻‍♂ _*அதிக ஆபத்துக்கள் நிறைந்த ஒரு காட்டிற்குள் பயணம் செய்கிற மாதிரி தான் இந்த ஆன்லைன் நட்பு தேடலும். அதில் தன் வழி தவறாமல் சமயோசிதமாக பயணம் செய்கிறவன் கண்டிப்பாக எந்த ஆபத்துகளையும் சந்திக்காமல் அவ்வனத்தின் அழகையும் இனிமையான அனுபவங்களையும் பெற முடியும்.*_😍

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்*
*பிற்பயக்கும் நற்பா லவை.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*பிறர் மனம் வருந்தி கதறும்படியாக அவருடைய உடைமைகளை கவர்ந்து கொள்பவர்கள் பின்பு அவற்றை, அவர்களே வருந்திக் கதறும்படியாக இழக்கவும் செய்வர். ஆனால் நல்ல வழியில் பெற்றவை, முன்பு விதிவயத்தாலோ, அல்லது வேறு வகையாலோ இழக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் இழந்தவரின் பயனுக்கே வந்துறும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

🔹 *தெரிந்துகொள்ளவும்*🔹

*கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.*

🔹 *புரிந்துகொள்ளவும்*🔹

*கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.*

🔹 *அறிந்துகொள்ளவும்*🔹

*கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...