Wednesday, 8 November 2017

ஷாப்பிங்கும் விழாக்கால கண்காட்சி தள்ளுபடி விற்பனைகளும், மக்களின் அறியாமையும்.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :புதன்*🌹

🌹 *தேதி :8.11.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■★■★■★■★■★■★■★■★■
*முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள்.*

💐 *-வின்ஸ்டன் சர்ச்சில்*💐

💝 *அட்மின்ஸ் தாட்ஸ்*💝
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆

*யார், யாரை ஏமாற்றினாலும், ஏமாந்தாலும்,*

*ஏமாறுவது மக்கள் மட்டுமல்ல, இந்த நாடும் தான்*

📣 *தலைப்பு*📣
📯📯📯📯📯📯📯📯📯📯📯
*ஷாப்பிங்கும் விழாக்கால கண்காட்சி தள்ளுபடி விற்பனைகளும், மக்களின் அறியாமையும்.*
🛍🤢👨‍👩‍👦‍👦🤡🛍🤢👨‍👩‍👦‍👦🤡🛍🤢👨‍👩‍👦‍👦
                  *பாகம்*➡1⃣

😎 *ஷாப்பிங் பாலினத்திற்கு ஏற்ப மாறுபடும்!*
             *ஷாப்பிங் பொறுத்தவரை ஆண் பெண் இருவருக்கும் வித்தியாசம் உண்டு. கணவன் மனைவி இருவருக்கும் ஒரே  மனநிலை இருப்பதில்லை.😉 ஒருவருக்கொருவர்  மாறுபடும். இப்படி பலரின் கண்ணோட்டம் மாறுபடும். கலாச்சார ரீதியாக மறுபடும் போது பாலினத்திற்க்கு ஏற்ப மாறுபடதா என்ன.*🤗

😈 *ஷாப்பிங் மேல் ஈர்க்கப்பட காரணம்!*
                *நம் ஆழ்மனதில் நாமும் ஷாப்பிங் தாக்கங்கள் இருக்க தான் செய்கிறது.*🙃
  
🤔 *அப்படி ஒரு தாக்கம் ஏன் ஏற்படுகிறது.  ஒரு வித  எதிர்பார்ப்பை மக்களுக்குள்* *விதைப்பது  ஒரு திட்டமிட்ட சதி என்று கூட சொல்லலாம்.*😖
*அட இது எப்படி சாத்தியம்.! சிகப்பு நிறத்தில்  போர்டை வைத்திருப்பங்க. காரணம் சிகப்பு நிறம் எவ்வளவு  தூரத்தில் இருந்தாலும் ஈர்க்க கூடிய நிறம். மேலும் அந்த நிறத்தை பார்க்கும் போது நம்முடைய இதய துடிப்பு அதிகரிக்கும். அதை பார்த்ததும் உடேனே வாங்கணும்னு மனதில் ஒரு படபடப்பு ஏற்ப்படும். இதை தவிர வேறு எந்த நிறமும் நம்மை வெகுவாக ஈர்க்காது.*

🛍  *ஷாப்பிங் போலாமா*🛍

         🤢 _*இப்படி கேட்டவுடன் நிறைய கணவன் மார்களுக்கும், அப்பாக்களுக்கும் பகீர்  தூக்கிப் போட்டுவிடும். காரணம் பணம் பழுத்துவிடுமே என்ற பயம் தான்.*_🤢😳

🤓 *எல்லேருமே ஷாப்பிங் போவர்களா?*🤠
              
🤔 *எப்படி இந்த நாகரிகம் நம் கலாச்சாரத்துக்குள் புகுந்தது.*

😰 *ஷாப்பிங் போனா மனச் சோர்வு நீங்குமா?*
    
               🤦🏻‍♂ *அட ஆமாங்க இப்படியும் கொஞ்ச போ் சொல்லிட்டு திரியிராங்க மனச்சோர்வ இருக்கும் போது ஷாப்பிங் போன நிம்மதியாய் இருக்காம்.*🤠

🤦🏻‍♂ *அடக் கொடுமையே இதை என்னன்னு சொல்ல!*🙆🏻‍♂

🙆🏻‍♂ *அட இதெல்லாம் நம்மள மாதிரி ஆட்களுக்கு இல்லைங்க ஷாப்பிங் போறது எல்லாம் மேல் தட்டு வர்க்கம் தனே.*

😊 *யாரு சொன்ன இப்ப நடுத்தர மக்களும் தாங்க ஷாப்பிங் போக ஆசைபடுறாங்க*

😆 *ஆசையா இல்லை மோகமா*?🤔

🤓 🛍 *அதிக ஷாப்பிங் மோகம் குறிப்பாக பெண்களுக்கு*👩🏻👱‍♀

🛍 *திறமையாக ஷாப்பிங் பண்றவங்களில் ஸ்மார்ட் ஷாப்பிங் என்ற பட்டம் வேறு*

🛍👱‍♀ *ஷாப்பிங் குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையுமே குறி வைக்கிறது. யாருக்குமே அவர்களை கவரும் வகையில் டிஸ்ப்லே ஆரேஞ்மென்ட் இருக்கும். ஷாப்பிங் செல்லும்போது அவர்களை ஈர்க்கும் முறையில் சாக்லெட் மற்றும் பொம்மைகளை அடுக்கி வச்சு இருப்பாங்க. இது நம் பட்ஜெட்டை  பதம் பார்த்துவிடும். காரணம்  குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து  வாங்கி விடுவர்கள். மற்றவர்கள் நம்மை வேடிக்கை பார்ப்பார்கள் என்பதாலேயே கூச்சப்பட்டு வாங்கி கொடுத்திடுவேம். இப்படி ஒரு நிலை தேவையா?*👊

🛍  *எது எப்படியோ ஷாப்பிங் செய்யும்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து இப்போது நமக்கு இது அவசியமா என்று உங்களிடம் நீங்களே கேட்டுக் கொண்டு பிறகு வாங்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.*

🛍 *ஷாப்பிங் மால்களில்தான் வாங்க வேண்டுமா என்ன?❓ விலை கூடுதலனா பொருட்கள் தேவையா என்ன?*❓

🛍 *உடனே ஒரு சிலர் தரமான பொருள் தான் அங்கு இருக்கும்மென்ற சிந்தனை வந்துவிடுகிறது. உண்மையில் அப்படியில்லை நம் மூளை சலவை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.*

🤦🏻‍♂ *மரங்களை அழித்து விட்டு ஷாப்பிங் மால்களை கட்டிவிட்டு ஷாப்பிங் பண்றவங்களுக்கு மரக்கன்று வேற தரானுங்க. என்னா ஒரு வில்லத்தனம்.*👊😡

🛍🤦🏻‍♂ *இந்த ஷாப்பிங் சிலர் தன் பெருமைக்காகவும் கவுரவத்திற்க்காகவும்அந்தஸ்த்தை உயர்த்திக்கவும், தன்னை தனித்து காட்டுவதற்க்கும் ஷாப்பிங் மேற்கொள்கின்றனர்.*
😜 😍 *மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான். பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..!* 😜

😜 *ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்.*😝😛

🤠  _*கண்காட்சி தள்ளுபடி விற்பனைகள்*_

🛍 *அந்த அந்த ஊர் கல்யாண மண்டபங்களை தேர்வு செய்து விழாக்கால தள்ளுபடி விற்பனை கடையை போட்டு சமார்த்தியமாக விளம்பரப்படுத்தி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.* 🤦🏻‍♂

🛍 *இரண்டு வாங்கினால் அதே விலையுள்ள வீட்டு உபயோக பொருட்கள் ஒன்று இலவசம். இந்த சொல்லுக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது.*🤠

🤠 *உண்மையில்  சில விற்பனை ஆகாத பொருட்கள் (எண்ட் ஆஃப் லைப் ஆக இருக்கும்) பொருட்களை தள்ளுபடி விற்பனையில் தருகிறார்கள்.*😏

🎉  _*விழாக்கால விற்பனை*_🎊

🛍 *தள்ளுபடி வரும் காலங்களில் வாங்கினால், விலை குறைவாக இருக்கும்.  இதனால் தரமான பொருட்கள் வாங்க முடியும். நமக்கு பணம் மிச்சமாகும் என்ற மூட நம்பிக்கை நமக்குள் விதைந்து விட்டது.*

🛍 *ஷாப்பிங் செய்வது எப்படி?*❓
*பட்ஜெட் போட்டு ஷாப்பிங் செய்வது எப்படி?*❓
*ஸ்மாட் ஷாப்பிங் செய்வது எப்படி?*❓

🤦🏻‍♂🛍 *இப்படியெல்லாம் புத்தகங்களும், இணைய காணோலிகளும், வந்த வண்ணம் உள்ளது.😩😩😩*

*உதாரணமாக*👇

💑 *லவ்வர்ஸ்*
     👩🏻  *டேய் ஷாப்பிங் போலாமா..*
🤢 *பையன் மைட் வாய்ஸ்; ஆ ஆ பர்ஸ்ஸுக்கு வேட்டு வைக்கிறலே.*

😏  *டேய் என்ன* *யோசனை பாய்*
*ஒன்னும் இல்லையே*☹

😏 *நீ ஒன்னும் வாங்கி தரவேண்டாம் சும்மா அப்படியே ஏ சி காத்து ஒசில வாங்கிட்டு வரலாம்.*😁😁😁😁😁

🤦🏻‍♀ 👆 *இப்படி போயிட்டு இருக்கு ஷாப்பிங்*🤦🏻‍♀

🛍 *மக்கள் தள்ளுபடி எதிர் பார்க்கும் பொருட்கள்*

🤦🏻‍♂🤠 *தங்க நகைகள், வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள், பைக், கார், உடைகள், ஏன் லேண்ட்ல கூட இப்ப ஆஃபர் எதிர் பார்க்கிறார்கள். ஒரு வீடு வாங்கின பத்திர செலவு இலவசம். ஒரு தங்க நாணயம் இலவசம். அதோடு 2 மாநிலங்களுக்கு இலவச சுற்றுலா. இப்படி சொல்லிட்டே போகலாம்ங்க.*🤢

🤦🏻‍♂ *அதை விட ரீசார்ஜ் கூட உங்களுக்குனு ஆப்பர் தருகிறார்களே. ஆன்லைன்லயும் விட்டு வைக்கவில்லை இந்த தள்ளுபடி விற்பனை. எல்லாமே ஏமாத்து வேலைங்க. இதெல்லாம் மக்கள் விரும்புறங்களா?❓ இல்லை இவர்களின் வியாபார யுக்தியா?🤔*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :புதன்*🌹

🌹 *தேதி :8.11.2017* 🌹
__________________________________

📣 *தலைப்பு*📣
📯📯📯📯📯📯📯📯📯📯📯
*ஷாப்பிங்கும் விழாக்கால கண்காட்சி தள்ளுபடி விற்பனைகளும், மக்களின் அறியாமையும்.*
🛍🤢👨‍👩‍👦‍👦🤡🛍🤢👨‍👩‍👦‍👦🤡🛍🤢👨‍👩‍👦‍👦
                  *பாகம்*➡2⃣

😜 *மளிகைக் கடைகள் தொடங்கி பெட்ரோல் பங்க், தொலைபேசிக் கட்டணம், திரைப்பட டிக்கெட் வரை எல்லாவற்றிலும் ‘ஆஃபர்கள்’ கொடி கட்டிப் பறக்கின்றன.😉 இதெல்லாம் நிஜமாவே நமக்கு சலுகை தரும் ஆஃபர்களா? 🤔இல்லை ஏமாத்து வேலைகளா?* 😏 *‘‘இதெல்லாமே தள்ளுபடி வகையறாக்கள்.☹ காலத்திற்கு தகுந்தாற்போல கொஞ்சம் நவீன மாற்றத்தோடு கையாளப்படுகிற உத்தியே தவிர வேறொன்றுமில்லை’😏’*

😆 *எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்*😁

🤠 *இதுவரை நமக்கு நன்றாகத் தெரிந்த சங்கதி, ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ மட்டும்தான். ஏற்கனவே உபயோகித்த ஒரு பொருளை கடையில் கொடுத்துவிட்டு புதிய பொருள் ஒன்றை வாங்கிக் கொள்வது. இதைத்தான் கொஞ்சம் நவீனமாக, ‘பை பேக் ஆஃபர்’ எனச் சொல்கிறார்கள்.*

🤠  *உண்மையில் ‘பை பேக்’ என்பதன் அர்த்தம், நீங்கள் கொடுக்கும் பழைய பொருட்களை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வது.* *ஆனால், நிறுவனங்கள் பணத்தைக் கொடுப்பதில்லை.* *மாறாக, உங்களை ஒரு பொருள் வாங்கிக் கொள்ளச் சொல்கிறார்கள்.இந்த அணுகுமுறையை வாடிக்கையாளர்கள் குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில், வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்கத்தானே முயற்சி செய்வார்கள்!*😏

😆 *கேஷ்பேக் ஆஃபர்*😆

🤠 *சில நிறுவனங்கள் வங்கிகளுடன் சேர்ந்து வாடிக்கையாளருக்கு ஆஃபர் தருகின்றன. அதாவது, குறிப்பிட்ட அந்த வங்கியின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தும் நபர்களுக்கு 5%, 10%, 15% என பல்வேறு சதவீதத்தில் தள்ளுபடி தரப்படுகிறது. இதைத்தான் கேஷ் பேக் ஆஃபர் என்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆயிரம் ரூபாய் பொருளுக்கு 5% ஆஃபர் கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.*

  🤠 *நீங்கள் பொருட்கள் வாங்கினதும், ஆயிரம் ரூபாயை உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால், கிரெடிட் கார்டு பில் கட்டும்போது அந்த வங்கி உங்கள் பில்லில் 50 ரூபாய் தள்ளுபடி தந்துவிடும். அதேபோல், டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட அந்த தள்ளுபடி பணம் ஒரு சில நாட்களில் மீண்டும் அக்கவுன்டில் சேர்ந்து விடும்.*

😆 *ரிவார்டு பாயின்ட்ஸ்*😆

🤠 *இதுவும் ஒரு வகை கேஷ் பேக் ஆஃபர்தான். சில வங்கிகள் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் செலவழிக்கிற ஒவ்வொரு பணத்துக்கும் ரிவார்டு பாயின்ட்ஸ் கொடுப்பார்கள். நூறு ரூபாய்க்கு ஒரு பாயின்ட் என வைத்துக்கொண்டால், 20 ஆயிரம் ரூபாய்க்கு 200 பாயின்ட். அதாவது, 200 ரூபாய். இப்படியே பாயின்ட் சேர்ந்துகொண்டே இருக்கும்.*

🤠 *ஒரு கட்டத்தில், அந்த பாயின்டுகளைக் கொண்டு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என குறிப்பிட்ட காலத்துக்கு ஆஃபர் போடுவார்கள். உங்கள் நண்பர் போன் வாங்கியிருப்பது இந்த பாயின்ட்ஸ்களைப் பயன்படுத்தித்தான். பெரும்பாலும் பெட்ரோல் பங்குகளின் கூட்டணியோடு தரப்படும் விசேஷ கிரெடிட் கார்டு அல்லது ப்ரீபெய்டு கார்டுகளில் இந்த பாயின்ட்ஸ் முறை அதிகம் இருக்கும். சீக்கிரமாகவும் பாயின்ட்ஸ் சேரும்.*

😆 *ஜீரோ மார்ஜின் ஆஃபர்*😆

🤠 *சில சமயங்களில் சில கடைகள் / நிறுவனங்கள் லாபமே இல்லாமல் தங்கள் பொருட்களை கம்பெனி விலைக்கே விற்பதாகச் சொல்வார்கள். ‘அதெல்லாம் எப்படி முடியும். 🤙லாபம் இல்லாமல் விற்க அவர்கள் என்ன தொண்டு செய்யவா வந்திருக்கிறார்கள்?’😏 என நினைப்பவர்கள் உண்டு. உண்மையில் லாபகரமாக தரப்படும் ஆஃபர்தான் இது. ஒரே நாளில் நிறைய பொருட்களை ஆஃபர் மூலம் விற்க முடிந்தால் உடனடியாக பணம் கைக்கு வந்துவிடும். அதை அவர்கள் உடனே கம்பெனிகளுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.* 

🤠 *மூன்று முதல் ஆறு மாத காலத்தில் கொடுத்தால் போதும். இதனைப் பயன்படுத்தி அந்த விற்பனை நிறுவனங்கள் வங்கிகளில் இந்தப் பணத்தை முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்டிக் கொள்கின்றன. இதில் வாடிக்கையாளரு க்கும் லாபம்தான்!* 

🤠 *இந்த ஆஃபர் மட்டுமல்ல... மேற்படி எல்லா ஆஃபர்களுமே சம்பந்தப்பட்ட கடைகள் அல்லது வங்கிகளின் லாபத்துக்காக அல்லது உடனடி பணமாக்கலுக்காக தரப்படுவதுதான்.👍 எதையும் தோண்டித் துருவிக் கேட்டு அறிந்துகொண்டு, அதன் மூலம் உங்களுக்கு லாபமா என கணக்கிட்டுப் பார்த்து, தேவையான பொருட்களை மட்டும் வாங்குவதே புத்திசாலித்தனம்!*
*‘அதெல்லாம் எப்படி முடியும்.லாபம் இல்லாமல் விற்க அவர்கள் என்ன தொண்டு செய்யவா வந்திருக்கிறார்கள்?*🤙

🤠 *ஆடித்தள்ளுபடி*🤠

👗👕👖👚 *ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே 50% தள்ளுபடி, மரம் தருகிறோம், காய்கறிகள் பழங்கள் தருகின்றோம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஆடி தள்ளுபடி விளம்பரத்தை காணாமல் டிவியையும் கடைகளையும் காண முடியாது. அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்...*🤦🏻‍♀

😏 *உண்மையாக சொல்லப்போனால் அப்படி எந்த சிறப்பும் ஆடி மாதத்தில் கிடையாது.🙅🏻 அட்சயதிருதியை விற்பனை ஒருநாள் என்றால் ஆடி தள்ளுபடி விற்பனை ஒரு மாதம் அவ்வளவுதான். இதுவும் ஒரு விற்பனை தந்திரம் தான்.*👊

🎇 *தீபாவளி பொங்கலுக்கு முன்னாள் வரும் ஆடி மாதம்*🎑

⛔ *பொதுவாகவே அனைத்து கடை நிறுவனங்களும் தீபாவளி அதை தொடர்ந்து வரும் பொங்கல் விழாக்களுக்கு புதிய டிசைன்களில் ஆடைகளை இறக்குமதி செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் அந்த கடையின் வாடிக்கையாளர்கள் வேறு கடைக்கு செல்லும் வாய்ப்பு நேரிடலாம். எனவே கடை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பழைய ரகங்களை விலை குறைத்து விற்பனை செய்ய முன்வருகின்றன. பழைய ஸ்டாக்குகளை காலி செய்து விட்டு புதிய ஆடைகளை இறக்குமதி செய்யவே ஆடி தள்ளுபடி விற்பனை.*⛔

🤔 *உண்மையாகவே 50% வரை விலை குறைப்பா??*🤙

🙅🏻 *கிடையாவே கிடையாது.🙅🏻 உண்மையாக சொல்லப்ப்போனால் கடை நிறுவனங்கள் 5 முதல் 15% வரையே விலை குறைப்பு செய்கின்றன. அதுவும் அடக்க விலையில் அந்த விலை குறைப்பு இருக்காது. மாறாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய லாபத்தில் 5 முதல் 15% வரை குறைக்கின்றன. அப்படி குறைப்பதனால் வாடிக்கையாளர்கள் பயனடைவதோடு கடைகளுக்கும் விற்பனை அதிகரித்து சரக்குகள் காலியாகின்றன.*🛍

🛍 *50% தள்ளுபடி என்பது ஒரு சில ஆடை வகைகளுக்கு மட்டுமே அளிப்பார்கள்.*🛍

🙅🏻 *பெரும்பாலான கடைகள் ஆடித்தள்ளுபடியில் வாங்கும் ஆடைகளை திருப்பி வாங்கி மாற்றி தர ஒத்துக்கொளவது இல்லை. 🙅🏻எனவே வாங்கும் போதே சரியான அளவிலான, நல்ல துணிமணிகளை வாங்கிக்கொள்ள வேண்டும்.*👊👍

🤹🏻‍♀ *நம்ம ஏரியால ₹ 10 ரூபாயிலிருந்து ₹ 100 ரூபாய் க்குள்ள, ஏதோ கண்ட கண்ட பேர்ல கடை திறப்பானுங்க, உள்ளே போயி பார்த்தா ஜிமிக்கு, கம்மல் பாட்டு ஓடிட்டு இருக்கும். ஒரே பளபளனு மின்னும். அவனுங்க வச்சிருக்குற பொருள்கள் விலைய விட, மேல எறியுற லைட்டோட விலை அதிகமா இருக்கும்.*🤹🏻‍♂

🤹🏻‍♀ *எல்லாமே யூஸ் அண்ட் த்ரோ பொருள்கள் தான். ஒரு முறை யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்ற வேண்டியது தான்.* 🤹🏻‍♂

🤹🏻‍♀ *வீணாப் போன பொருளுக்கு, மேக்கப் பண்ணி வச்சாலும் அதயும் நம்ம ஆளுங்க தூக்கிட்டு வந்துடுவாங்க.*🤦🏻‍♀🤦🏻‍♀

🤹🏻‍♂ *மக்களை சொல்லி குற்றமில்லை, நல்ல வருமானம் இருந்தா அவங்க ஏன் இதுபோன்ற தரமில்லாத பொருள்களை தேடி போகப் போறாங்க🤔.*

🤹🏻‍♂ *சில நடுத்தர வர்க்கத்தினர், இப்போலாம் உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் அல்லது அதை நேரடியாக விற்கும் வணிகர்கள் கிட்ட வாங்கிறது இல்ல.  அவங்களுக்கெல்லாம் மார்க்கெட்ல வாங்குன தான் ஒரு வித ஆனந்தமே வரும். ஏன்னா அவங்க தான், மார்க்கெட் ஸ்டிக்கர் (ஸ்டிக்கர் 😂. ☹ மைண்ட் டைவர்ட் ஆக கூடாது) ஓட்டி விப்பானுங்க.*🤦🏻‍♀

🤦🏻‍♀ *அந்த மார்க்கெட் ஸ்டிக்கர பார்த்தா தான் ரொம்ப தரமா இருக்கும்னு இவங்களுக்கு ஒரு நினைப்பு. அப்புறம் மார்க்கெட்ல பாயிண்டஸ் வேற போட்டு வைப்பாங்களாம்.*👊

🤦🏻‍♀ *பாயிண்ட்ஸ் அதிகமாக அதிகமாக உங்களுக்கு ஒரு தொடப்பகட்டையோ, இல்ல நீங்க உலகத்திலேயே வேற எங்கயும் பார்க்காத ப்ளு கலர் வாளி குடுத்து உங்க மனச குதூகலப்படுத்துவாங்க.*🤦🏻‍♀

🤦🏻‍♀ *அப்ப நம்ம நடுத்தர மக்களோட முகத்துல  ஒரு புன்னகை (உள்ளுக்குள்ளயே ஆனந்தம்) வரும் பாருங்க. என்னமோ ஒலிம்பிக்ல இந்தியாவுக்கு கோப்பை வாங்கி குடுத்துட்டா மாதிரி அவங்களுக்குள்ள ஒரு எல்லையற்ற மகிழ்ச்சி.*🤓🤗

🤦🏻‍♀ *எப்படியெல்லாம் வாடிக்கையாளரை கவரானுங்க🤦🏼‍♂*

🤗 *சரி காய்கறி பக்கம் போவோம்.*

☹ *இப்பலாம் ஏழை விவசாயிங்க நேரடியா காய்கறிய எடுத்துட்டு போனா எவங்களும் கண்டுக்கிறது இல்ல, அவர் கிலோ தக்காளி ₹.40 ரூபாய்க்கு தர தயாரா இருப்பாரு. நம்ம அத வாங்க மாட்டோம்.*

🤦🏻‍♀ *ஆனா மார்க்கெட்ல ஒருத்தன் விவரமா, நம்ம விவசாயிங்க கிட்ட இருக்குற மொத்த தக்காளியயும் கிலோ ₹.45 க்கு வாங்கி வச்சிட்டு, கிலோ ₹200 ரூபாய்னு விப்பான். அப்ப போயி அடிச்சிக்கிட்டு நிப்போம்.* 😡

👊 *இது தக்காளிக்கு மட்டும் இல்ல உலகத்துல இருக்குற அனைத்து உணவுப் பொருள்களும் இப்படித்தான்யா விற்பனை ஆகுது.*🤦🏻‍♀

🤦🏻‍♀ *நம்மள மாதிரி ஒரு முட்டாள்கள் உலகத்தில் இருப்பாங்களா🤦🏼‍♂?*

😰 *இத கஷ்டப்படுற விவசாயிங்க கிட்டயே ₹.60 ரூபாய் குடுத்து வாங்கிருக்கலாம்😴.*

🤗 *கண்காட்சினு சொன்னா போதும் புள்ள, குட்டிங்கள அழைச்சிக்கிட்டு, ஆடம்பர பொருளை, கண்ணை மூடிக்கிட்டு, அவன் விக்கிற விலைய சொன்னதும் வாங்கிடுவோம். அவன்கிட்ட பேரம் பேசி வாங்குறதும் ஒண்ணுதான். வாங்காம தவிர்க்கிறதும் ஒண்ணுதான். இதுல  ராட்டினம், டைட்டானிக் கப்பல் வேற மக்களை கவர் பண்றாங்களாம்.*👊

👊 *ஜாலியா இருக்கலாம். ஆனா கொஞ்சம் லிமிட் அவசியம். அதுல சுத்துறதுக்கு கூட, அவன் சொலுறது தான் விலை. சில வறுமையில் வாடும் மக்கள், அங்கலாம் போயிருக்க கூட மாட்டாங்க. போனாலும்  அவங்களால வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். உண்மையிலேயே அவங்களுக்கு தாங்க அது வெறும் 👁கண்👁 காட்சி.*

👊 *மக்களின் அறியாமை*

👊 *இப்பலாம் லோக்கல் சேனல்ல ஒரு விளம்பரம் போட்டா போதும். உடனே பைய தூக்கிட்டு கிளம்பிடுவாங்க.*😡

🤦🏻‍♀ *அவன் விளம்பரம் போடுறதே உங்களை வர வைக்க தான்பா🤦🏼‍♂*

😡 *ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். என்னது செப்பலா? அப்படித்தான் இனிமே கேட்கணும்.*👊

🤦🏻‍♀ *ஆன்லைன் அதவிட கொடுமை. அந்த ₹251 போன் யார் யாரெல்லாம் ஆசைப்பட்டு ஆர்டர் பண்ணுனிங்க, வீட்டிற்கு வந்துருச்சா?*🤦🏻‍♀

🤦🏻‍♀ *இப்பலாம், ஷாப்பிங் சேனல்ஸ் வேற, அடக்கொடுமையே மக்களை ஏமாத்த வீடு தேடி வரானுங்களாம்.*😡

👊 *டிவில ஒரு புடவையா இருக்கும், வீட்டிற்கு வரது ஒரு புடவையா இருக்கும். மொபைல் போன் மேல காரை விட்டு ஏத்துறானுங்க. சுத்தியல்ல வச்சி அடிக்கிறாங்க. ஓடயவே ஓடயதாம்பா.*🤦🏻‍♀

🤦🏻‍♀ *டேபிள் மேட் எல்லார் வீட்லயும் இருக்கா? "டொக் டொக்". இப்பலாம் போட்டி போட்டுக்கிட்டு டூப்ளிகேட் போடுறானுங்க.*🤦🏻‍♀

😡👊 *ஏமாறவங்க இருக்கிற வரைக்கும், ஏமாத்துறவங்க இருக்க தான் செய்வாங்க.*👊😡

🤡🤠😉😜 *ஆகமொத்ததுல*
*இந்த ஆஃபர் எல்லாமே பிம்லிக்கி பிலேப்பி😂😂😂*

*நன்றி💐.*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑

🥇 *நிருபன் கதிர்*

🥈 *Santhi😊⁩*

🥉 *SpVignesh*

*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®

🥇 *Karthi VS😉😜⁩*

🥈 *Rishi*

🥉 *singarammohanraj⁩*

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

☹ *சிக்கனம் என்கிற பெயரில் ஏமாறாமல்...நல்ல பயனுள்ள தரத்தை அடையாளம் கண்டு,ஆசையை தவிர்த்து நமக்கு எது தேவையோ அதை மட்டும் அறிந்து ,விபரம் தெரிந்து வாங்கினாலே போதும்...*✋

👊 *இங்கு அடுத்தவரை ஏமாற்றி பிழைக்கும் வாழ்க்கையை முறியடிப்போம்.....!!*
*நல்ல சமூகத்தை உருவாக்க ஏமாறுவதையும்,ஏமாற்றுவதையும் களைஎடுப்போம்...!!*👍

💯 *நம் அனைவரும் உணவு பொருட்களை முடிந்தவரை, நேரடியாக விவசாயிங்க கிட்ட வாங்குனா தான் அவங்களுடைய வாழ்வதாரமும் முன்னேற்றம் அடையும். நம்ம வாங்காததுனால தான், அவங்க மொத்தமாக வேற ஒரு முதலாளிங்க கிட்ட விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. விவசாயிங்க இன்னைக்கு போராடுறாங்கனா அதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்முடைய மக்களின் அறியாமையும் ஒரு காரணமே.*😓

🤦🏻‍♀ *நம்ம நேரடியாக பார்த்து வாங்குற பொருளே சரியா இருக்க மாட்டேங்குது. இதுல ஆன்லைன் ஷாப்பிங் வேற. ஆன்லைன் ஷாப்பிங்கை தவிர்ப்பதே சிறந்தது.*👍

🤦🏻‍♀ *குறைந்த விலை என்றவுடன், கண்ணை மூடிக் கொண்டு நம்ம மக்கள் வாங்குகிறார்கள் என்றால், அதற்கு அவர்களின் வறுமையே காரணம். இதற்கு முழுப் பொறுப்பு நம் அரசாங்கத்தயே சாரும்.* 😡

🤔 *அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது யாரு?🤔*

🤜 *பதில் உங்கள் கையில்*🤛

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்*
*மெய்ப்பொருள் காண்ப தறிவு*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும்,* *அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

🤹🏻‍♀ *தெரிந்து கொள்ளவும்*🤹🏻‍♂

*பேராசை பெருநட்டம்*

🤹🏻‍♀ *அறிந்துகொள்ளவும்*🤹🏻‍♂

*கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.*

🤹🏻‍♀ *புரிந்துகொள்ளவும்*🤹🏻‍♂

*அற்ப அறிவு அல்லற் கிடம்.*

*மலைக் குலைந்தாலும் நிலை குலையாமல் இருக்கவேண்டும்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *கார்த்திக் ராஜ்பவன்*
*8072908455*👨🏻‍💻

          👮🏻‍♀ 🏹 _*GK*_🏹👮🏻‍♀

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...