Saturday, 2 December 2017

மணல் குவாரிகளை ஆறு மாதத்திற்குள் மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு... இதன் பாதிப்புகள் என்ன..


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 30.11.2017*_ 🌹
     🌹 _*கிழமை : வியாழன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும்.*_
_*கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்*_
                      _*- அப்துல்கலாம்*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*நீங்கள் கை கொடுத்து உதவ கூட தேவையில்லை ஆனால் கை கொடுப்பது போல் கொடுத்து கீழே தள்ளி விட வேண்டாம்...*_

_*நீதி அரசரின் தீர்ப்பைவிட...*_
_*காலத்தின் தீர்ப்பு சரியானதாக இருக்கும்...*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*மணல் குவாரிகளை ஆறு மாதத்திற்குள் மூட நீதிமன்றம் அதிரடி  உத்தரவு...  இதன் பாதிப்புகள்  என்ன..?*_         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*😃நேற்று காலை 10:30க்கு ஒரு தீர்ப்பு 👨🏻‍⚖மக்கள் மத்தியில் பெறும் ஆதரவையும்🤝🏻 ஒருசில சந்தேகங்களையும்🤔 ஏற்ப்படுத்தியுள்ளது...😌 முதலில் நம் வளம்🐾 பாதுக்காக்க 🦋இப்படி ஒரு தீர்ப்பு வழங்கிய நீதித்துறைக்கு 👨🏻‍⚖நம் 🤜🏻விழிப்புணர்ச்சி குழுமம்🤛🏻 சார்பாக வாழ்த்துக்கள் 👏 பாராட்டுக்கள்🎉🎊*_

_*😡"மணல் கொள்ளை"😡 இதப்பத்தி குழுவில் பேசனும்னா🗣 விடியவிடிய 😬பேசலாம் அவ்வளவு விஷயம் இருக்கு... 🤔மணல் கொள்ளைக்காக மறைமுகமாக நடந்த கொலை... 😱அதிகாரிகளை மிரட்டுவது... 😳இன்னும் சொல்லிட்டே போகலாம்...😷 ஆனா இப்ப அது வேணாம்... 🤐நம்ம தலைப்பு அது இல்ல...🙏 அதுக்கு நேத்து ஒரு முதல் அடி விழும் மாதிரி தீர்ப்பு வழங்கியாச்சு...👨🏻‍⚖ அதுனால தலைப்பு சம்பந்தமா இனி பாப்போம்...*_😂

_*🤔அப்படி என்ன தீர்ப்பு வந்துச்சு...*_👨🏻‍⚖

_*🗣தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 🏜நேற்று தொடங்கி (நவம்பர் 29,2017)😅ஆறு மாதங்களுக்குள் மூடிவிடவேண்டும்🔚 என்றும் புதிதாக எந்த மணல் குவாரிகள்⛺ அல்லது சுரங்கங்களை🚇 திறக்கக்கூடாது 🚪🚫என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின்🏛 மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.*_👨🏻‍⚖

_*✍🏻புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஆர்எம் ராமையா என்டர்பிரைசஸ் 👷🏻என்ற தனியார் நிறுவனம் தகுந்த ஆவணங்களைப் பெற்று, 📑ஜிஎஸ்டி வரியைச் செலுத்தி🤝🏻 மலேசியாவில் இருந்து🛳 மணலை இறக்குமதி⛴ செய்தபின்னர், 🚓அதனை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்தது.*_🚨🚫

_*✈வெளிநாட்டில் இருந்து இறக்குமதிசெய்து🛫 மணலை விற்க தனியார் நிறுவனத்திற்கு⚓ விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 📄நீதிபதி ஆர்.மகாதேவன் 👨🏻‍⚖மணல் கடத்தலைத் தடுக்கவும்,🚫 இயற்கையைப் பாதுகாக்கவும் 🤝🏻தமிழக அரசு உடனடியாக மாநிலத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடவேண்டும் 🚪என்றும் வெளிநாட்டில் இருந்து அனுமதியுடன் இறக்குமதி 🚢செய்யப்படும் தடைசெய்யப்படாத✅ மணலை விற்பனை செய்ய தடை விதிக்கக்கூடாது ⏹என்றும் உத்தரவிட்டார்.*_👨🏻‍⚖

_*🙏தமிழக மக்களின் நலன் கருதியும்,👍🏻 இயற்கை வளத்தை பாதுகாக்கவும்,🌳 விவசாயிகளின் நலனைக்🤝🏻 கருத்தில்கொண்டும் 19 வழிகாட்டல்களை🛣 நீதிமன்றம் வழங்கியுள்ளது 📑என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.*_⚖

_*✈வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி🛬⛴ செய்வதற்கான வழிமுறைகளை ✍🏻வகுக்க தமிழக அரசு மண்ணியல் துறையில் உள்ள நிபுணர்களைக் கொண்டு 👷🏻ஒரு குழு அமைக்கவேண்டும் என்றும், ✍🏻அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள்,👀 கணிமங்களை வியாபாரத்திற்காக🎗 எடுத்துச்செல்வதை எவ்வாறு சோதனை செய்யவேண்டும்🚓🚨 என்பதை அவர்களுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு விளக்கவேண்டும்🤝🏻 என்றும் நீதிபதி கூறியுள்ளார்.*_👨🏻‍⚖

_*🙏மேலும் சட்டத்திற்குப்👨🏻‍⚖ புறம்பாக கணிமங்களை பதுக்கிவைத்தல் 👀மற்றும் கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்கள் 😲மீது உடனடி நடவடிக்கையாக கணிமங்களை ஏற்றிவரும் வண்டியின்🚚🚛 உரிமத்தை நிரந்தரமாக ரத்துசெய்யவேண்டும்❌ என்றும் அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.*_✍🏻

_*👨🏻‍⚖சட்டத்திற்கு புறம்பாக கணிம வளங்களை🐾 சுரண்டியவர்கள் 😰மற்றும் அவர்களுக்கு துணைபோனவர்கள்,👎🏻 அதிலும் குறிப்பாக அரசு அதிகாரிகள்👨🏻‍✈👩🏻‍✈ ஈடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம்🚫🔚 செய்யப்படவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது*_👨🏻‍⚖🙏

_*😱பாதிப்புகள் பத்தி பாப்போம்...*_😱

_*👉இந்த தீர்ப்புக்கு ஒத்திகை பாக்குற மாதிரி கடந்த வருஷம் ஒரு சம்பவம் நடந்துச்சு😏💁🏻‍♂...*_

_*👉திருச்சி மாவட்டத்தில் 4 மணல் குவாரிகளும், கரூர் மாவட்டத்தில் 2 குவாரிகளும், அரியலூரில் 2 குவாரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 1 குவாரியும் திடீரென மூடப்பட்டன.😳😱 இதனால் மணல் ஏற்றுவதற்காகச் சென்ற 🚍லாரிகள் வெளியேற்றப்பட்டன.*_

_*🏛தமிழகத்தில் மணல் குவாரிகள் 2 வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது🙄😱.*_

_*👉9 மணல் குவாரிகள்*_

_*👉காவிரி, கொல்லிடம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகளே 🏝மணல் உற்பத்தி இடங்களாக உள்ளன. திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் உள்ளிட்ட 38 இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் எண்ணிக்கை நீதிமன்ற நடவடிக்கைளால் 9ஆக குறைந்துள்ளன💁🏻‍♂.*_

_*💴💵விலை ஏற்றம்*_

_*👉இதனால் ஒரு லோடு மணல் விலை 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது😱😥. இருந்தாலும் மணலுக்கான தேவை குறைந்த பாடில்லை🤦🏻‍♂. நாள் தோறும் 50 ஆயிரம் லோடு மணல் தேவைப்படும் நிலையில் 25 சதவீதத்தைக் கூட நிறைவேற்ற முடியாக நிலை தொடர்கிறது💁🏻‍♂.*_

_*👉கடந்த மாதம் வந்த செய்தி➡:-*_

_*🏛தமிழகத்தில் ரூ.12000 க்கு விற்ற மணல், 55000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது😱.ரூ.32க்கு  ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கன அடி மணல் 120 ரூபாயாக அதிகரித்துள்ளது🤦🏻‍♂.மணல் விலை கடந்த 6 மாதத்தில் இவ்வளவு சதவீதம் உயர்ந்துள்ளது மணல் விலை அதிகரிப்பால், வீடுகளின் விலை ஒரு சதுர் அடி 50 ரூபாய்க்கு அதிகரித்துள்ளது🙄. தமிழகத்தில் 50% கட்டுமான தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.😥😥 மணல் விலை உயர்வால் 5 லட்சம் பேர் நேரடியாக வேலை இழந்துள்ளனர் அதில் லாரி உரிமையாளர்களுக்கும்🤦🏻‍♂😥.*_

_*👉இது சாதரணமாக விலை ஏற்றத்தினால் ஏற்ப்பட்டட நிகழ்வு😱... அதுவே ஆறு மாதங்களுக்கு பிறகு மணல் குவாரி மூடப்பட்டால்... நிலமை 🤦🏻‍♂.... 🚨முன்னெச்சரிக்கையாக ஏதேனும் மாற்று வழிக்கு திரும்புவதே நல்லது🤔🤝...*_

_*🌐மாற்று வழி பத்தி பாப்போம்🤔*_

_*🏝🏞ஆற்று மணலின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது🔜. அதனால் ஆற்று மணலின் விலை ஆண்டு தோறும் பன்மடங்கு பெருகி வருகிறது😱. இன்னும் கொஞ்ச காலம் போனால் மணல் 📯தங்கம் போல் விலை உயர்ந்த பண்டமாகிவிடும் சூழல் உள்ளது. 🏝சிலர் மணலைப் 😱😨பதுக்கிக் கொள்ளை லாபம் சம்பாதித்துவருகின்றனர். சிலர் ஆற்று 🏞மணலுடன் கடல் மணலைக் கலந்தும் விற்கின்றனர்.*😏_

_*👉இன்றைய சூழலில் ஆற்று 🏞மணலுக்கு மாற்றான மணலின் தேவை அத்தியாவசியமாகும்😓. மேலும் மணலை அள்ளுவது சுற்றுச் சூழலுக்கும் 😔ஆபத்தைக் கொண்டு வரும் என்பதாலும் பல ஆண்டுகளாகவே மணல் அள்ளப்படுவதிற்கு எதிராகக் கோஷங்கள் எழும்பத் தொடங்கியுள்ளன.🗣👥 இந்தப் பின்னணியில்தான் விஞ்ஞானிகள் சிலர் 👨🏻‍🚀👩🏻‍🔬செயற்கை மணல் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினர். அந்த ஆராய்ச்சி விளைவே செயற்கை மணல் கண்டுபிடிப்பு.🤔*_

_*🏢🏬கட்டுமானத் துறை வல்லுனர்களும் ஆற்று மணலுக்குப் பதிலாகச் செயற்கை 🏝மணல், கல் தூள் போன்ற பொருட்களை மாற்றாகப் பயன்படுத்தலாம்🤝 எனச் சொல்லியிருக்கின்றனர். இந்த இரு பொருட்கள் குறித்துப் பார்ப்போம்.🤔*_

_*👉முதலில் கல் தூள் என்பது ⛰மலைகளில் இருந்து ⛰கற்களை உடைத்து எடுக்கும்போது ஏற்படும் மாவு போன்ற துகள்களைச் சொல்கிறார்கள். 🏝ஆற்று மணல் மட்டும்தான் வலுவானது எனப் பலரும் நம்புகிறார்கள்.😏 ஆனால் இந்தக் கற்தூளும் கட்டத்திற்கு வலுவானதுதான் என வல்லுனர்கள் சொல்கிறார்கள்👨🏻‍🚀. இம்மாதிரியான மாற்று மணலைப் பயன்படுத்திக் கட்டப்படும் 🏬கட்டங்களின் கான்கிரீட் வலிமையையும் 🎗நீடித்த உழைப்பையும் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக 🤔மேற்கொள்ளப்பட்ட 👨🏻‍🚀👨🏻‍🚀ஆய்வுகளில் மூலம் இவை நிரூபணமாகியுள்ளன.👍*_

_*⛰கல்லுடைக்கும் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் ⛰கற்துகள்களை நேரடியாக அப்படியே பயன்படுத்த முடியாது.🙅🏻‍♂ அந்தத் துகள்களை மணலைப் போல ➡மென்மையாக்கினால் மட்டுமே மாற்று மணலாகப் பயன்படுத்த முடியும்👍. அப்படி ஆகும்போது சிமெண்டுடன் அது கலக்கும் தன்மை கிடைக்கும்🤝. அந்த 🏝மணல் கலக்கும் தன்மை பெற சில செய்முறைகளைப் பின்பற்ற வேண்டும்.💁🏻‍♂*_

_*👉இளக்கிகளைக் கான்கிரீட்டுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுபோல 🏝ஆற்று மணல் எவ்வளவு கலப்போமோ அதை விடக் கூடுதலாக இந்த மாற்று மணலைக் கலக்க வேண்டும்.💁🏻‍♂ மற்றொன்று செயற்கை மணல். செயற்கை மணல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்றால் ⛰கருங்கற்களை அரைத்துத் தயாரிக்கப்படுகிறது💁🏻‍♂. இவை அதிகமாக கொங்குப் பகுதிகளில் உருவாக்கப்படுகிறது. இவை 🏛தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு இருக்கின்றன💴💵.*_

_*🏬தொழிற்சாலைகளில் நவீன 🔨🔧இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் செயற்கை மணல் மிகச் சிறந்த தரத்தில் கிடைக்கிறது. தகுந்த அளவுகளில், ⚖தரமாகத் தயாரிக்கப்படுவதால் கலவை மற்றும் கான்கிரீட்டின் வலிமையும் தரமும் மிகுந்துள்ளன👌👍. செயற்கை மணலின் விலையும் ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது குறைவே. மேலும் 🏝ஆற்று மணலுக்கு மாற்றாக இம்மாதிரியான மாற்று 💁🏻‍♂மணலைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலுக்கும் நன்மை கிடைக்கும்.👍 இந்த இரண்டு முறைகளிலும் கழிவுகளையே நாம் மணலாகப் பயன்படுத்துவதால் மணல் தட்டுப்பாடு குறையும்🤝👍*_

_*🤔வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யலாம் என்று 🏦உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.👨🏻‍⚖ மணலை இறக்குமதி⛴ செய்வதால் குறைந்த விலையில் மணல் கிடைக்கும்.😟 அதேநேரத்தில் வெளிநாட்டு மணலுடன்🐾 சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய🚫 தாவரங்களின் 🌱விதைகள் கலந்து😱 வரக்கூடிய வாய்ப்புள்ளது.😳 எனவே, ஆற்று மணலை இறக்குமதி செய்யும் போது🚟 கடுமையான தர ஆய்வுக்கு 🔬உட்படுத்த வேண்டும்.*_✅

_*😂தீர்ப்பு வந்த உடனே நம்ம மலர் கட்சிய சேர்ந்த டாக்டர்... இப்படி சொன்னது சந்தேகமா இருக்கு... "மலேசியாவில் இருந்து இறக்குமதி⛴ செய்யப்பட்ட மணல்களை பயன்படுத்துங்க" 🔖அப்படி சொல்லிட்டாங்க...😂*_

_*🤔அடுத்த என்ன நடக்கும்...*_♻

_*1⃣ஆட்சியாளர்களுக்கு பணத்தை வாரி வழங்கும் மணல் மற்றும் கிரானைட் குவாரிகளை தமிழக ஆட்சியாளர்கள் மூடுவார்களா? 2⃣அதற்கான அரசியல் துணிச்சல் அவர்களுக்கு உண்டா?🤔 என்பவையெல்லாம் விடை 🙄தேடப்பட வேண்டிய வினாக்கள் ஆகும்.*_🤝🏻

_*😅நம்ம முதலமைச்சர் தீர்ப்புக்கு பின் சொன்னது... 🗣மணல் குவாரியை அரசே எடுத்து நடந்தும்... 😃மலிவு விலையில் மணல் விநியோகம் செய்யப்படும் 😦என்று கூறியுள்ளார்... இது நம்பும்படியாக🙄🤔 இருக்கான்னு கேட்டா.. அதுக்கு பதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 🛃கூறும் வாக்குறுதியா இருக்கலாம்...*_🏃🏻🏃🏻🏃🏻

                      _*😃நன்றி*_😃

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

_*🏅 SP.Vignesh⁩*_
_*🏅⁨ கற்றது கால்நடை மருத்துவம்⁩*_
_*🏅⁨ Murugan⁩*_
_*🏅 karthikeyanc29⁩*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

_*🏅 கலந்துரையாடல் 2ல் பங்கு கொண்ட அனைவருமே சிறந்த பேச்சாளர்களே..*_👏🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*🤜🏻நிச்சயம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் ஸ்தம்பிக்கும் 😢என்பதில் சந்தேகம் இல்லை.😳 ஆனால் ஆறுகள் உயிர் பிழைக்கும். 🤝🏻அரசு உரிய வழிமுறைகளை வகுத்து அதை கோர்ட் கண்காணித்து ஆறுகளைக் காப்பாற்றவும், 🙏மணல் அள்ளுவதை சரி செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.*_🤛🏻

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்*_
_*அஃதறி கல்லா தவர்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறியவல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💚அறிந்து கொள்ளவும்*_ 💚

_*சர்க்கரை என்றால் தித்திக்குமா?*_

_*💙தெரிந்து கொள்ளவும்*_ 💙

_*அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவன்.*_

_*💜புரிந்து கொள்ளவும்*_ 💜

_*எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

♥ *முடிவுரை தொகுப்பாளர்*♥

👨🏻‍💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...