Friday, 12 January 2018

ஜாதகம் பார்த்து பலன்கள் கணிப்பதும், பரிகாரங்கள் செய்வதும் நம்பிக்கையா? பயமா?* 🕉🔱⁉🕉🔱⁉🕉🔱⁉🕉🔱

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :26.12.2017.*
         🌹 *கிழமை : செவ்வாய்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே...*

*ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட நிச்சயம் எதிர்காலம் உண்டு.*

*🤝🏼அப்துல் கலாம்*💐

🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♀*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *இருபத்து நான்கு மணி நேரமும் நல்ல நேரம் தான் நல்லது செய்ய...*🏹

*கெடுதல் நினைக்கும் நேரமே கெட்ட நேரம்...*😏

💖💖💖💖💖💖💖💖💖💖💖
   
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

*ஜாதகம் பார்த்து பலன்கள் கணிப்பதும், பரிகாரங்கள் செய்வதும் நம்பிக்கையா? பயமா?*
🕉🔱⁉🕉🔱⁉🕉🔱⁉🕉🔱

🏹😇 _*முதல் பாகம்*_😇🏹

😇 *அனைவருக்கும் வணக்கம்🙏💐 மிக நீண்டநாட்களுக்கு பிறகு எனது முடிவுரையை தங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன்.*💐

😇 *இன்று கொஞ்சம் வித்தியாசமான தலைப்பு.குழந்தை பிறந்தது முதல் கல்யாணம் முடிஞ்சு அவங்களுக்கு குழந்தை பிறக்கும் வரைக்கும், பிறந்த நேரத்தை வைத்து எதிர்காலத்தை கணித்து எழுதிய ஒரு பெரிய நோட் வைத்திருப்பாங்க.🤪 அட அதாங்க ஜாதகம்.🤓 இப்ப இதை எல்லாம் கம்ப்யூட்டர்ல போட்டு பிரிண்ட் எடுத்து பைன்ட் பண்ணியும் வெச்சு இருக்காங்க. 🤪பேர் வைக்கறதுல இருந்து படிப்பு, வேலை, கல்யாணம், இப்படி எல்லாத்துக்கும் நம்ம வீட்டு பெரியவங்க முதல இந்த நோட்டை எடுத்துட்டு போய் ஜோசியர்கிட்ட தான் நிப்பாங்க.*😏

🤔 *சாதகமான நேரம் நமக்கு எப்படி வரும்?*

🤔 *எப்பொழுது வரும்?*

🤔 *எதாவது தோஷம் இருக்கா?*

🤔 *பரிகாரம் என்ன?*

🤔 *குருபெயர்ச்சி பலன்?*

🤔 *யோக பலன்?*

🤔 *வெளிநாட்டுக்கு போற அமைப்பு*

🤔 *அரசாங்க உத்தியோகம்*

🧐🤨😩😰 *இப்படி அது இதுன்னு நிறைய விசயங்களுக்காக பெரும்பாலானோர் ஜாதகம் பார்ப்பது வழக்கம்.*😜

🧐🤨 *ஜாதகம், தோஷம், பரிகாரம் இவற்றில் எல்லாம் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதே போல் ஜாதகம், தோஷம், பரிகாரம் எல்லாமே உண்மை தான் அப்படின்னு நம்பிக்கையோட இருப்பவர்களும் இருக்கலாம்.*🤗

🤩 *சரி வாங்க இதுல என்னதான் அப்டி சொல்றங்காங்ன்னு கொஞ்சம் பார்க்கலாம்...*😜

🕉 _*ஜோதிஷம் எனும் ஜோதிடம் நாம் நினைப்பது போல் மனிதனின் எதிர்க்காலத்தை தெரிந்து கொள்வதற்காக ஏற்ப்படுத்தப்பட்டதல்ல .*_🙅🏻‍♀

🕉 _*ஜோதிஷம் என்றால் ஒளியைத்தேடிஎன்றுதான் பொருள் .இந்த பொருளுடைய சொல்லுக்கும் மனிதனின் எதிர்க்காலத்திர்க்கும் எங்கே தொடர்பு இருக்கிறது .*_🤔
🧐 _*மனித இனத்தின் உயர் நூல்கள் 📜உயர் சாஸ்திரங்கள் அத்தனைக்கும் குறிக்கோள் ஒன்றுதான்.*_👍

🏹 _*அது மனிதனை ஒரு நிலை உயர்த்துவது .*_

🏹 _*அவனின் பரிணாமத்தின் அடுத்தப் படிக்கு அழைத்து செல்வது*_

🏹 _*பின் இறுதியிலே பிரும்மத்தை  அறிந்து அதனுடன் இணைவது*_

🕉 _*ஜோதிஷம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.*_

🕉 _*வேதத்தின் பயன் எதுவோ அதுவேதான் ஜோதிட சாஸ்திரத்தின் பொருளும் ஆகும்.அறிவைத்தேடும் பயணத்தில்*_ _*ஜோதிடமும் ஒரு கருவியாகும் இதில் மனிதனின் ஆன்மீக பயணத்திற்கு வானசாஸ்திரத்தை எங்கனம் பயன் படுத்துவது என்பதன் விளக்கமும் அறிவும் தான் உள்ளது .இது குறித்து ரிஷிகளும் சித்தர்களும் ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக இயற்கையை ஊன்றி கவனித்து* _
_*இயற்கையின் மாறுதல்கள் பூமியை எவ்வாறு பாதிக்கிறது என கண்டுணர்ந்து*_
_*அவைகளில் கண்ட உண்மைகளை ஒரு* *சாஸ்திரம் ஆக்கினார்கள்*_🔱

☄ _*வானியல் ➡வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும்  நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது.🤷🏻‍♀ அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை. ஒருபகுதி .இகலை புரிந்துகொள்ள கணிதம்  மேம்பட்டது  .இது ஒரு அங்கம் இதில் திரி கோணம்  பல உயர் கணிதங்களும் வளர்ந்தன இத்தகைய கணித அறிவின் மூலமே கோள்களின் இயக்கத்தியும் அசைவுகளையும் பண்டைய அறிஞர்கள் கண்டறிந்தனர் .*_🔍👍

🕉🧐 _*ஜோதிடத்தின் முக்கிய அடுத்த அங்கம் கால அளவிடுதல் முறை*_⏳
_*காலக் கணக்கு முறைகள் தாங்கள் காணும் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின.*_ _*பன்னிரண்டு ராசிகள்,  சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்ட நாட்களை அளவிடுதல் போன்றவை.பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள்,*_ 😇 _*பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப்பட்டன.*_🔍👍

🧐👉 _*இத்தகைய பாரம்பரிய அறிவு பஞ்சாங்கம் என்ற பொதுப் பெயரிலே தொகுக்கப்பட்டது.*_
_*இவ்வாறு பிருமத்தைத் தேடும் பயணத்திற்காக முறைபடுத்தப்பட்ட வானியல் அறிவும் கணித அறிவும்  பல  நூற்றாண்டுகளாக கவனித்து பதிவு  செய்யப்பட பிரபஞ்ச நிகழ்வுகளும் அது குறித்த ஆராயய்ச்சியின் ஒட்டு மொத்த பெயரே ஜோதிடம் என்பதாயிற்று*_🕉🤷🏻‍♀

☄🕉 *_விண்ணியல் ஆராய்ச்சியின் போது அத்தகைய ஆராய்ச்சின் போக்கிலே வேறுபல கண்டுபிடிப்புகளும் ஏற்ப்படும் அவைகள் பல ஆயுதங்கள் நாம் செய்வதற்கும் இன்னும் சொல்லப்போனால்_* _*மனிதனின் செயற்கை கால் செய்வதற்கு கூட தொழில் நுட்பம் விண்வெளி ஆராயய்சி செய்யும் போது கிடைத்ததாக*_ 😇 _*"""""டாக்டர். A. P. J.அப்துல் கலாம் ஐயா """"*_💐 _*அவர்கள் கூறியிருக்கிறார்.*_😇
_*இவ்வாறே ஜோதிடம் எனும்  வானியல்*_ _*அறிவும்,கணித அறிவும், பல*_ _*நூற்றாண்டுகளாகத்*_
*_திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் இவைகளை உள்ளடக்கிய ஒரு_* _*பெரும் அறியியல் திரட்டில் விளைந்த ஒரு சிறிய பொருள்தான் நாம் இப்போது கூறும் எதிர்காலத்தை பற்றி மட்டும் கூறுவதாக நினைக்கும் ஜோதிடம்*_ 🤷🏻‍♀👍😇

🕉 _*ஜோதிடத்தில் பத்து பிரிவுகள் உள்ளன அவைகளை பற்றி கீழே பார்ப்போம்.*_👇

📜 _*வானசாஸ்திரம், மண்டேன்ஜோதிடம் , ஜோதிடம் ,பிரசன்னஜோதிடம் ( ஆருடம் ) , எண்ஜோதிடம் ,கைரேகை ஜோதிடம் ,ஒலி அலை ஜோதிடம் ,சமுத்திரிக்க லட்சணம் ஜோதிடம் , கை எழுத்து ஜோதிடம் , வாஸ்து சாஸ்திரம் ஜோதிடம் ,போன்ற பல பிரிவுகள் உள்ளன .*_🔱👍

🧙‍♀ _*ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.*_🤷🏻‍♀
👉 _*உதாரணமாக...,*_👇
_*தங்கம்: குரு,*_ _*இரும்பு:சனி*_
_*உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம்.எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.*_🤷🏻‍♀👍

🧐 🌕 *ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா⁉ இல்லையா⁉ என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள்.*🤢

🌕 _*நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. 👍மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.*_🤷🏻‍♀
🔯  _*நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.*_🤷🏻‍♀👇
_*1⃣ எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.*_
2⃣ _*குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூஜித்து வருவது.*_
3⃣ _*தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).*_

☸ _*பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது.🙅🏻‍♀ இது ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.*_😔🤦🏻‍♀

*அதாவது...*
👉 _*வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.*_💪👈

🤩 _*வாழ்வை வெற்றியானதாவும்,சந்தோசமானதாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் மனிதனின் ஆகப்பெரிய விருப்பம்.*_🤩🤓

🤩 💖 _*மனதில் தோன்றும் ஆசைகளினால் பொருளாதாரம்,குழந்தைச் செல்வம்,உலக வாழ்க்கை ஆகியவற்றை அவரவர்கள் எண்ணியபடி,விருப்பப்படி,அனுபவிக்க நினைக்கிறோம்.*_🤓

📿 _*இதிலிருந்து விடுபடவேண்டும் என்றுதான் இதிகாசங்கள்,புராணங்கள்,வேதங்கள்,உபநிடதங்கள் அனைத்தும் போதிக்கின்றன.*_📿💝

🛐 _*அதற்கு மாறாக நாம் அவற்றை அடைய முயற்சிக்கிறோம்.😕அத்தகைய முயற்சிகளில் ஏற்படும் தடைகளைச் சரிசெய்துகொள்வதன் மூலம் நம் விருப்பங்களை வெற்றி கொள்ளமுடியும் 🤪என்ற நோக்கில் மேற்கொள்ளும் வழிமுறைதான் பரிகாரங்கள் எனப்படும் பிராயச்சித்தம்.*_🤷🏻‍♀

☸ _*பரிகாரம் என்பது எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.🤷🏻‍♀ஹோமங்கள்,யாகங்கள்,பூஜை,புனஸ்காரங்கள்,மந்திரங்கள்*_ _*ஜெபித்தல்,யந்திரங்கள் தரித்தல்,மாந்திரீக முறைகளாயினும் சரி....,*_🤷🏻‍♀
_*நற்பலன்களை உண்டு செய்யும் காரியங்கள் செய்தல் என்ற அடிப்படையில் பொருள்தானம் செய்தல்,அன்னதானம்,கோயில் நன்கொடை போன்ற காரியங்களில் பற்று வைத்தலும் சரி.....,*_🤷🏻‍♀

🧐👊 _*இவற்றில் இருந்து அனைவரும் எதிர்பார்ப்பது அவரவர் சுயநலத்துக்கான வெற்றி,சந்தோசம் மட்டுமே.*_👊🤨🤪

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :26.12.2017.*
         🌹 *கிழமை : செவ்வாய்*
____________________________________

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

*ஜாதகம் பார்த்து பலன்கள் கணிப்பதும், பரிகாரங்கள் செய்வதும் நம்பிக்கையா? பயமா?*
🕉🔱⁉🕉🔱⁉🕉🔱⁉🕉🔱

🏹😇 _*இராண்டாம் பாகம்*_😇🏹

🕉 📜 ☄ _*வானவியல் சாஸ்திரப்படியும், ஜோதிடவியல்படியும், கணிதம் மற்றும் புள்ளியியல் முறைப்படியும் ஜோதிட சாஸ்திரத்தை ஓர் உண்மையான கலையாகக்  கருதலாம். 👍ஆனால்  அறிவியல் முறைப்படி அதனை உண்மை என்று நிரூபிக்க இயலாத நிலையே தற்போது உள்ளது.*_🙇🏻‍♀

🧐 😡 _*ஜோதிடர்களில் போலி  ஜோதிடர்கள் பலர் உள்ளனர்.👊 உண்மையானவர்களை விட  இவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.👊 பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்களால் தான் ஜோதிடம் மீதான நம்பகத் தன்மை குறைகின்றது.👊 ஜோதிடர்களுக்கும் கெட்ட பெயர் உண்டாகின்றது.👊 இந்த போலி ஜோதிடர்களால் கைது, கோர்ட், வழக்கு என்று மக்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகின்றது.😖 ஆனாலும் அவர்களைக் கண்டறிவதோ,  ஒதுக்கிப் புறந்தள்ளுவதோ இன்றுவரையில் இயலாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் யார் உண்மையானவர், யார் போலியானவர் என்பதைக் கண்டறிவது மிகக் கடினமாக உள்ளது.🤢😰 அந்த அளவிற்கு போலிகள் ஜோதிடக் கலையில் ஊடுருவி உள்ளனர்.*_😔

🤔 _*ஜோதிடம் தேவைதானா?⁉*_🤔

⚜ _*அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கைக்கும் இக்கால மக்கள் வாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது. 👍இன்று உலகம் உள்ளங்கைக்குள் அல்ல, விரல் நுனிக்குள் சுருங்கி இருக்கிறது.🤷🏻‍♀💪தன்னம்பிக்கையுடன் பலரும் பலவித சாதனைகளைச் செய்து வருகின்றனர்.👍 இந்நிலையில் ஜோதிடம் போன்றவை தேவைதானா 🤔⁉என்ற கேள்விகளும் எழத்தான் செய்கிறது.🤷🏻‍♀ மேலும் ஜோதிட சாஸ்திரங்கள் என்பவை மிக நுட்பமானவை.😊 அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு பலன்கூறும் ஆற்றல் மிக்கவர்கள் தற்போது உள்ளனரா என்பது கேள்விக் குறியே*_❓❓

🧐 _*ஜோதிடர்களில் பலர் உளவியலறிவில் (Psychology) தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர். வந்திருப்பவர்களின் தேவை என்னவென்பதறிந்து பலன் கூறுவதில் சமர்த்தர்களாக விளங்குகின்றனர். ஆனால் மக்களின் எதிர்கால நிகழ்வுகளைச் சரியாகக் கணித்துப் பலன் கூற பெரும்பாலோர்களால் முடிவதில்லை.🙅🏻‍♀🙇🏻‍♀ அடிப்படை ஜோதிட நூல்களைப் படித்தும், தத்தம் அனுபவ அறிவாலும்தான் தற்போது பல ஜோதிடர்கள் பலன் கூறி வருகின்றனர்.🤦🏻‍♀ சூர்ய சித்தாந்தம், பூர்வ பாராசர்யம், சாராவளி, பிருஹத் சம்ஹிதை, உத்ரகாலாம்ருதம், சோதிட ரத்னாகரம், சோதிட பாஸ்கரம் போன்ற வட மொழி நூல்களையோ, சந்திர சேகரம், சோதிட அலங்காரம், சோதிட மாலை போன்ற பல தமிழ் நூல்களையோ பயின்றவர்கள் வெகு அரிது. 🤨மேலும் காலமாற்றத்திற்கேற்ப ஜோதிட சாஸ்திரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது. சிலருக்கு அது ஏற்பில்லை.*_☹🙅🏻‍♀

💪 _*தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு புறக்காரணிகள் ஏதும், எப்போதும் தேவையில்லை.🙅🏻‍♀ ஆனால் தன்னம்பிக்கை குறையும் போது, அல்லது தமது நம்பிக்கையில் ஏமாற்றம் வரும் போது, அல்லது சரியான வழிகாட்டுதல்கள் பிறரிடமிருந்து நமக்குத் தேவை என்னும் நிலை இருக்கும் போது ஜோதிடம் அங்கே பயன்பாட்டுக்கு வருகிறது. ☹ஆன்மீகமும் அங்கே பயன்பாட்டுக்கு உதவுகிறது என்றாலும் எல்லோராலும் நீண்ட கால அளவில் மட்டுமே பலன் தரக்கூடிய அந்த உயர் அனுபூதி நிலையை அனுசரிக்க முடிவதில்லை.😔 அவர்களுக்கு நம்பிக்கையூட்ட, எல்லாம் சிறிது காலத்தில் சரியாகிவிடும் என்ற 💖மனோவலிமையை ஏற்படுத்த, இதைச் செய்தால் இன்ன பலன் ஏற்படும் என்பதன் மூலம் மனோ தைரியத்தை அதிகரிக்க ’''''ஜோதிடம்’''' பயன்படுகிறது. 👍அந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஜோதிடம் என்பது தேவைதான்.👍 🖤ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் பெரும்பாலானோர்கள் அந்நிலையில் தான் இருக்கின்றனர் என்பதும், அவர்களில் பலர் போலிகளை நம்பி ஏமாறுகின்றனர் என்பதும் நாம் மனம் வருந்தத் தக்கது.*_😔🙇🏻‍♀🖤

🤜 _*மக்கள் அனைவரும் அறவழியில் வாழவேண்டும்....!!!👍 பாவங்களையும், குற்றங்களையும் செய்தால் பல சிக்கல்கள் ஏற்பட்டு வாழ்வில் துன்பப்பட நேரிடும் என்பதை உணர்ந்து நல்ல முறையில் தங்கள் வாழ்நாளைக் கழிக்க வேண்டும்...!!👍என்ற நோக்கத்தில் தான் ஜோதிட சாஸ்திரத்தைச் சான்றோர்கள் உருவாக்கியுள்ளனர்.🤷🏻‍♀ ஒரு தனிமனிதன் தன் எதிர்காலம் பற்றி அறிந்து அதன் வழி நடக்க, எதிர்ப்புகள் போன்றவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, சிறந்த ஒன்றை இலக்காகக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்த, ஜோதிடமானது ஓர் தக்க வழிகாட்டியாகவும், நண்பன் போன்றும் செயல்படுவதால் அது மனிதர்களில் ஒரு சிலருக்கு  தேவைப்படுகின்ற ஒரு கலை என்று கூறலாம். 🤷🏻‍♀ஆனால் இதை மையமாக வைத்து ஆதாயம் தேடும் 🧟‍♂கும்பல்களால் மக்களுக்கு வாழ்வில் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகிறது.😡 இக்கலையின் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்கள், அவர்களின் வாழ்வை திசை திருப்புபவர்கள், ஏமாற்றிப் பணம் பறிப்பவர்கள் போன்றோர் மிக மிக கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.*_😡👊👍

🧐 _*ஜோதிடத்தின் பெயரால் செய்யப்படும் மோசடிகளுக்கும் அளவே இல்லை.😠 அதிலும் குறிப்பாக பரிகாரம் என்று கூறிச் செய்யப்படும் மோசடிகள் வன்மையாகக் கண்டிக்கத் தகுந்ததாகும்.🤨 ஹோமம், யாகம், யந்திரம், தாயத்து என்றெல்லாம் நம்ப வைக்கப்பட்டு பலர் இதில் லட்சக் கணக்கில் பணத்தை இழக்கின்றனர். 👊கர்ம காண்டத்தில் அவற்றிற்குப் பங்குண்டு என்றாலும், அவை மக்களின் குறை போக்குவதற்குப் பதிலாக தனிநபர்கள், தாங்கள் வருமானம் ஈட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. 😡அதுவும் பரிகாரம் செய்யும் நபர் பூஜைகளில், ஹோமங்களில் நேரடியாகக் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, நாங்களே எல்லாம் செய்து விடுகிறோம் என்று பொய் கூறியும் பலர் ஏமாற்றுகின்றனர்.👊 அதிலும் ’அதிர்ஷ்டக் கல்’ என்ற பெயரில் செய்யப்படும் மோசடிகள் சொல்லி மாளாது.*_🙇🏻‍♀😡

🕉🧐 _*ஜோதிடத்தில் பரிகாரங்கள் என்பவற்றிற்கு இடமுண்டு என்றாலும் எல்லோருக்கும் பரிகாரங்களால் நன்மை விளையாது என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை.🤦🏻‍♀🙇🏻‍♀ நம்மால் ஓரளவிற்குத் தான் கர்ம வினைகளின் செயலாற்றலைக் குறைக்க முடியும்.😰 முற்றிலுமாகக் கர்மாவை மாற்றி அமைக்க இயலாது.🙅🏻‍♀ கர்மவினைகளை அனுபவித்துக் கழித்து அதனை 0 ஆக்குவதே சிறந்தது. அது மிகக் கடுமையானதாக இருந்தபோதும் கூட. ஆனால் எல்லோராலும் கர்மவினைகளை அப்படி அனுபவித்திட இயலுமா என்ற கேள்வி எழும் போது, அங்கே விதி என்பதும், விதியை மதியால் வெல்லலாம் என்ற கோட்பாடும் உதவிக்கு வருகிறது.😟 🔴விதியை மதியால் வெல்லலாம்தான் ஆனால் அதற்கும் விதி இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.🔴🙇🏻‍♀ அதாவது கர்ம வினைகளைக் குறைத்துக் கொள்ள, அல்லது மாற்ற ஜாதகத்தில் இடமிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பலனளிக்காது.🙅🏻‍♀ அதற்குத் தேவை குருவருள்*_👍

🕉🔴 _*ஜாதகத்தில் ’குரு’ என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி (ஆலயங்களில் தென் திசை நோக்கி, சின்முத்திரையில் அமந்திருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும், பிரகஸ்பதி எனும் நவக்ரஹ குருவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை) நல்ல இடத்தில் அமந்திருந்தால் தான் பரிகாரங்கள் பலிக்கும். 👍அதாவது குரு, உச்சமோ, ஆட்சியோ, கேந்திரமோ, சுபர் வீடோ, பார்வையோ பெற்றிருக்க வேண்டும்.👍 அப்போதுதான் பரிகாரங்கள் பூரண பலன் தரும்.👍 இல்லாவிட்டால் எல்லாம் அரைகுறையாகத் தான் இருக்கும். 😰இது போன்ற பல விஷயங்கள் தெரியாததால் மக்கள் ஏமாறுகின்றனர்.🙇🏻‍♀ போலி ஜோதிடர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.*_😡👊

🕉📿 _*ஒருவரின் ஜாதகத்தை வைத்து பலன்கள் பார்ப்பதும்,பரிகாரங்கள் செய்வதும்,எதிர்காலத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் தனக்கு நிகளவிருக்கும் எதிர்பாராபிரச்னைகள்,சங்கடங்களிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ளவேண்டும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வும்,தனக்கு எதிர்காலத்தில் நிகழ இருக்கும் பாதகங்களிலிருந்து தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என்ற பயமுமே..... ஜாதகம் பார்ப்பதும்,பரிகாரம் செய்வதற்கும் காரணமாகும்.*_☹👍
🔴 🕉 _*ஜோதிடம் என்பது ஓர் """தெய்வீக சாஸ்திரம்"""அதை சரியாக கற்றுணர்ந்து பலன் கூறும் ஜோதிடர்கள் இன்று மிக மிக மிக மிக மிக சொற்பமானவர்களே....!!*_🙇🏻‍♀☹ 🔴
🔴🕉🔱 _*மேலும் ஜோதிடம் என்பதும் பரிகாரம் என்பதும் என்றும் பொய்யானவை அல்ல...!!!*_👍🔴

           
                 💐 *நன்றி*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🏅 *🦁naanum En Chevum🦁⁩* 👏
🏅 *Vita Safe Life My Company⁩*👏
🏅 *Arivu⁩* 👏
🏅 *ELA. TAMILADYAN⁩*👏

👑 *கலந்துரையாடல்2⃣*👑

*🏅 ⁨பாலாசுப்பிரமணியன்⁩*👏
*🏅 ⁨எழில்மணி⁩*👏
*🏅 ⁨lakshminarayanann 264⁩*👏
*🏅 ⁨🌹RMM⁩*👏

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
          *🤔கருத்து👍*

😇 *மக்கள் நலம் விரும்புபவர்கள், தாங்கள் அறிந்ததை மற்றவர்களுக்கு அளித்து அவர்கள் பயன் பெற உதவுபவர்கள், எல்லோரும் தீவினைகள் நீங்கி, நல்லவராக, சகோதரராக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையான ஜோதிடர்கள். 👍தம்மை நாடி வந்திருப்பவர்களின் பிரச்சனை என்ன,❓ அது ஏன் ஏற்பட்டது,❓ அதற்கான கிரகநிலை மற்றும் சமூக, உளவியல் காரணங்கள் என்ன,❓ அதை ஜாதகர் அதிக செலவுகளும், பிரச்சனைகளும் இல்லாமல் தாமே எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியும் என்பது பற்றி சுயநல நோக்கமற்று அறிவுறுத்துவர்களே உண்மையான ஜோதிடர்கள்.👍 ஆனால் தற்காலத்தில் இதுபோன்ற உண்மையான ஜோதிடர்களைப் பார்ப்பது வெகு அபூர்வமானதாகி விட்டது.*🙇🏻‍♀☹🤦🏻‍♀

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்*
*இறைவன் அடிசேரா தார்*
   
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     

*வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்*

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🔱 *அறிந்துகொள்ளவும்*🔱

*ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.*

🔱 *தெரிந்துகொள்ளவும்*🔱

*கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை*

🔱 *புரிந்துகொள்ளவும்*🔱

*கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?*

*ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.*

🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

             👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...