https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :27.12.2017.*
🌹 *கிழமை : புதன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடத்தில் நிலைப்பதில்லை.*
😇 *உன்னை புரிந்துக் கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை.*
💐 *~கௌதம புத்தர்*💐
🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀🕵♀
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♀*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *உலகில் விலை மதிப்பில்லாதது, நம்மிடம் இருப்பவை அல்ல...*
😇 *நம்மிடம்*
*இருப்பவர்கள்...*👍🏹
💖💖💖💖💖💖💖💖💖💖💖
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*சிறுவர்களை பெற்றோர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட செய்வது சரியான ஒன்றா?*
👼👨👩👧👦🙏⁉👦🏻👧🏻👨👩👧👦🙏⁉👨👩👧👦🙏
😇🏹 _*முதல் பாகம்*_🏹😇
💝 _*உயிர் உடலுக்குள் தங்கி இருக்கும் இந்த ஜென்ம வாழ்க்கையில் - எத்தனையோ எண்ணங்கள் - வாழ்க்கையைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.🤷🏻♀ வாழ்க்கை ஓட்டத்தில் - வெறும் நினைவுகள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் எஞ்சி இருக்கிறது.☹ அவை, நல்லதோ - கெட்டதோ..... வெறுமனே எண்ணங்கள்.🙇🏻♀ நினைவுகள் மட்டுமே.*_🤷🏻♀
😇 _*நல்லதையே நினை...!! 😇நல்லதையே செய்..!! என்று ரொம்ப சிம்பிளாக வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம்.*_🤷🏻♀ 🤔 _*ஆனால் என்ன செய்கிறோம்..? 🤙ஆடி ,அடங்கி, கடைசியில், விழிகள் நிலை குத்தி , நம் சொந்த பந்தம் சுற்றி இருக்க, விடை பெறுகிறோம்...😓 இடையில்,நம்மால் முடிந்த அளவு , நம் வாழ்க்கை சிறக்க போராடுகிறோம், 🤷🏻♀நம் குழந்தை,குடும்பம் அவர்களின் நல்லது கெட்டது, கூட வாழும் சொந்த பந்தம், சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பது - இப்படித் தான் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே அடங்கி இருக்கிறது என நினைக்கிறோம்...🤷🏻♀ நிஜமாகவே இதுதான் வாழ்க்கையா..?❓இல்லை இதைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்க, அதை அறியாமலேயே நம் கூடு அடங்கிவிடுகிறதா...?*_❓😓
👳♀👉 _*என்ன ஏது என்று தெரியாமலேயே, வாழ்ந்து முடித்து விடும் அளவுக்கு - வாழ்க்கை ஒரு அற்ப விஷயமா?❓ஒரு ஜென்ம வாய்ப்பு அல்லவா?❓அதை நாம் உணருகிறோமா..?❓🤔கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் , நாம் இப்போது வாழும் வாழ்வில் - எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்...? ❓அந்த விஷயங்கள் எல்லாம் நிஜமாகவே அந்த அளவுக்கு தகுதி வாய்ந்தவையா..?❓பக்குவம் என்ற பெயரில், இன்று அதி முக்கியமாக இருக்கும் விஷயமே, சில வருடம் கழித்து - ஒன்றும் இல்லாத விஷயமாக தோன்றுகிறதே...? ❓எது நமக்கு நிரந்தரம்..?*_❓😴
💓 _*எண்ணங்கள் - எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உணர முடிகிறதா? ❓💞 சின்ன சின்ன விஷயங்களில் நம் ஆற்றல் வீணடிக்கிறோமே..!!! 🙇🏻♀எத்தனை கோபம், வெறுப்பு,காழ்ப்புணர்வு , அதை ஒட்டிய நம் நேர விரயம், சக்தி விரயம்..!!! அவசரம், பதட்டம்..!!!*_😴🙄🤕
👳♀ 🕉 _*ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும்,பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.*_🙅🏻♀
💝 _*மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.*_🙏
🛐 _*அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்🙅🏻♀, 🙏இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி🙏எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது,😇 உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு🙏 நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.*_👍😇
💟 _*நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.*_👍
💖 _*அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி 💪தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.*_😇💐
🙏🕉 _*இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.🙅🏻♀🤦🏻♀அதை அவன் விரும்புவதும் இல்லை. 🙅🏻♀👉அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.👉 அது தான் உண்மையான பக்தி.*_👈😇🙏💐
🙏 🕉 _*இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.*_😇💐
🙄 _*நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன்😰. ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன்.😰 ஆனால்,இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார்,🤕என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். 😔நமது வலது கையில் செயல் திறமை உள்ளது,🤚 அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும்.*_💪👍
🙏💐 *ALL IS NOT GOD, BUT GOD IS ALL*🙏💐
😇🙏 _*கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து,அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.*_😇👍
🙏🔔 _*ஆன்மிகம் என்று ஒன்று உண்டா என கேட்டால்?❓ இதுபகுத்தறிவுடைமை, மற்றும் அன்பு என்று ஒன்று உள்ளதா 🤗என்று கேட்பது போல் உள்ளது. 😇நிச்சயமாக ஆன்மீகம் என்பது உண்மையானது.👍 நீங்கள் அதை எப்படி வரையருக்கிறீர்கள் என்பதே கேள்விக்குள்ளாகிறது.*_❓❓❓❓
🙏🕉 _*சொல்லிணக்கப்படி ஆன்மிகம் என்றால் ஆன்மாவை சார்ந்தது, மாற்றாக ஸ்தூல(Physical) தன்மையையோ அல்லது ஒரு பொருளையோ சார்ந்தது அல்ல.*_🙅🏻♀
✝ 👉 _*ஒரு கிறிஸ்தவருக்கு ஆன்மிகம் என்றால், படைப்புக்கு வெளியே இருந்து இயேசு கிறிஸ்து என்னும் மனிதன் மூலமாக, அதாவது சூரியன் ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பது போல, தன்னை வெளிப்படுத்திய கடவுளின் பால் நெருக்கமான தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்வது என்பதாகும்.*_😇💐
☪ _*இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் தனது ஆன்மீகத்தை மேம்பாடடையச் செய்வதற்கு அல்குர்ஆனும் ஸுன்னாவும் குறித்துக் காட்டுகின்ற வழிமுறைகளையே பின்பற்ற வேண்டுமென அது எதிர்பார்க்கின்றது. இம்மை-மறுமை என்றோ உடல்-ஆன்மா என்றோ வேறுபடுத்தி நோக்காமல் இவை இரண்டையும் இணைத்துச் செல்லும் இணைப்புப் பாலமாக எமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த வழிகாட்டலுக்கு முரணான வழிமுறைகள் மூலம் ஆன்ம பரிபக்குவத்தைத் தேட முயற்சிப்பதானது, ஆன்மீகத் துறையில் பாதிப்புக்களையே ஏற்படுத்தும்.*_
☪ _*ஆன்மீகத் துறையை மேம்பாடடையச் செய்வதற்கு இஸ்லாம் காட்டும் வழி முறை*_
*1. இக்லாஸ்*
☪😇_* “செயல்கள் யாவும் எண்ணங்களைப்பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்*_☪😇
🕉✝☪ _*மதமற்ற, மதச்சார்பற்ற மக்கள், ஆன்மிகம் என்பது மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு மனிதம் சார்ந்த சொல் என்கிறார்கள்.👍 அவர்கள் மனித குணங்களான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை மன்னிப்பு, பொறுப்பு, மற்றவர்களிடம்அக்கறை கொள்தல் போன்ற நீதிநெறிகளை வலியுறுத்துகிறார்கள். 👍அதாவது வாழ்வியல் நோக்கம் மற்றும் மனித அனுபவம் என்பது நம் கண் முன்னால் தெரிகின்ற இந்த நிலையான பொருட்களால் ஆன உலகத்தை சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர ஒரு அமானுட சக்தியையோ அல்லது தெய்வீக சக்தியையோ நம்பிக்கைவைத்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை.*_🤷🏻♀🤷🏻♀
🙏👉 _*எனவே ஆன்மிகம் என்பதன் அடிப்படை வரையறை என்னவென்றால் ❓நம் கண் முன்னால் தெரிகின்ற இந்த நிலையான பொருட்களால் ஆன உலகத்தை அறிந்து கொள்ளும் ஒருவரின் கூர்ந்து அறியும் திறனின் தரமாகும்.👍 சாப்பிடுவது, அருந்துவது, உடல் வசதி, பாலுணர்வு போன்றவை உடலின் செயல்பாடுகளாகும். மாற்றாக அன்பு, அறம், நேர்மை, இரக்கம், கருணை போன்றவை ஆன்மாவின் துறைகளாகும். 👍இந்த குணதிசயங்களை நம் அறிவினால் நேரடியாக உணரமுடியாது.🙅🏻♀ ஆனால் அவைகளின் மிகவலிமைவாய்ந்த தாக்கங்களை, கூர்ந்து கவனிப்பதன் மூலம் நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும்.*_👍👍💐
🤗👉 _*பெரும்பாலான மக்களுக்கு ஆன்மிகம் என்பது வாழ்வியலை மையப்படுத்தியதாகும். 🤷🏻♀இந்த வரையறை எல்லா மதத்தை சார்ந்த, மதசார்பற்ற பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டுள்ளது.*_👍😇
😇👉 _*இந்த அடிப்படை புரிதலின் படி நாம் கருதும் மனிதம் என்பது மற்ற அனைத்து படைப்புகளை காட்டிலும் ஏதோ ஒருவகையில் ஒருபொருளைவிட மேன்மை ஆனதுதான். 😇பொருளற்ற, கண்ணுக்கு புலப்படாத அறிவுக்கு எட்டாத யதார்த்தம் ஒவ்வொரு உயிருள்ள பொருளிலும் உள்ளது என்று முன்னூகிக்கிறது. 🤷🏻♀நம் அறிவினால் உணர்ந்து கொள்ள முடியாத மேலான ஏதோ ஒன்று நம்முள் உள்ளது. 👍இருபது வருடங்களுக்கு முன் இருந்த நபர் இல்லை நாம் இப்போது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும், அணுவும் மாறிவிட்டது.🤷🏻♀ ஆனாலும் நானும் நீங்களும் இன்னும் அதே ஆள் தான்.🤷🏻♀ நிலையான ஏதோ ஒன்று நம்மில் உள்ளது. அதைத் தான் நாம் “நான்” என்று அழைக்கிறோம். 👍இந்த “நான்” ன் தனி இயல்புகள் மாறுகின்றது. ஆனால் “நான் ” என்ற ஒன்று மாறுவதில்லை.*_🤷🏻♀🤷🏻♀
😇👉 _*நம்முடைய உடல் செயலிழக்கும் போது இந்த “நான்” அழிந்து போகிறதா,❓ அல்லது வாழ்கிறதா? ❓அல்லது இது விளக்கு ஒளிர்வதை போல உடலின் ஒரு செயல்பாடா?❓ அல்லது மின்சாரம் போன்று? அது ஒரு செயல்பாடாக இருந்தால், ஒரு கருவி வேலை செய்வதை நிறுத்தும்போது அந்த செயல் நின்றுவிடுகிறது என்பதுதான் நியாயமான வாதமாய் இருக்கும் அல்லது அது மின்சாரம் போன்று ஒரு அங்கமாக இருந்தால், கருவி பழுதடைந்த பின்னும் அது வாழ்கிறது என்று சிலர் வாதாடகூடும்.🤷🏻♀ ஒரு விளக்கு பழுதடைந்த பின்னும் மின்சாரம் இருக்கிறது. 😱நாம் இந்த விவாதத்தினுள் நுழைய வேண்டாம்.😏🙅🏻♀ காரணம் முதலில் இந்த விவாதம் மிகவும் குழப்பமானது,😴 இரண்டாவது எனக்கு பதில் தெரியாது.😅 எனவே நாம் இந்த “நான்”ய் ஆன்மா என்று அழைப்போம்.*_
👍😇
😇 _*ஆன்மீகம் என்பது எதுவாக இல்லை.*_💐🙏
⚜ _*அறிவுப்பூர்வமாக ஆன்மாவை புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.🤷🏻♀ ஆன்மீகம் என்பது அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, தியாகம் என்று வரையறுக்கப் படுமானால், அதை விளக்குவதற்கான காரணம் சிறிது அவசியமாகிறது. 🤷🏻♀மிக கொடிய குளிருள்ள ஒரு ஆற்றில் உயிருக்கு போராடும் ஒரு அந்நியன் ஒருவனை, தன் உயிரை பொருட்படுத்தாது அவனை காப்பாற்ற அந்த ஆற்றினுள் குதிக்கும் ஒருவனின் செயலை காரணப்படுத்த முடியாது, மாறாக அந்த மனிதனின் செயலை ஆன்மீக ரீதியிலேயே புரிந்து கொள்ள முடியும்.*_👍😇
👉🙇🏻♀ _*வெளியே சொல்வதற்கு பயந்து விஷயங்களை மனதிலேயே பூட்டி வைத்தல். செய்ய விருப்பமில்லாத செயலை வலுக்கட்டாயமாக செய்தல் விருப்பமில்லாத தொழிலை வேறு வழி தெரியாமல் அதையே செய்து கொண்டிருத்தல் சுமுஹமில்லாத நட்பும்,உறவும் வளமிக்க வாழ்க்கையை அடைந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆரோக்யமான வாழ்க்கை முறையை கூறுபவர்கள், தியானம் மற்றும் அதுபோலுள்ள மனதை அமைதியுறச் செய்யும் வழிகள் மட்டுமே நலமிக்க வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் வசதிக்கும், மருத்துவச் செலவுகளை குறைக்கவும் உன்னதமான முறை என்று அறிந்துள்ளனர், மிக முக்கியமாக, தியானப்பயிற்சி இன்றைய மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்கு காரணமாகவுள்ள காலகட்டத்தில், வாழ்க்கையை எப்பபடி சிறப்பாக அமைத்துக் கொள்வது என்ற படிப்பினையும்.அது மூலம் நலமான வாழ்கைகைக்கும் பெரிதும் உதவுகிறது.*_🙏😇💐
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :27.12.2017.*
🌹 *கிழமை : புதன்*
____________________________________
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*சிறுவர்களை பெற்றோர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட செய்வது சரியான ஒன்றா?*
👼👨👩👧👦🙏⁉👦🏻👧🏻👨👩👧👦🙏⁉👨👩👧👦🙏
😇🏹 _*இரண்டாம் பாகம்*_🏹😇
🤷🏻♀ _*மிகவும் வேகமாக வளர்ந்துவரும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக இன்று பழமைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன.*_😰🙇🏻♀
🔱🔔 _*இந்நிலையில் ஆன்மிகம் என்பது வெறுமனே கோவில்களுக்கு அல்லது ஜீவ சமாதிகளுக்கு செல்வது ,😏 பத்து ரூபாய் செலவு செய்து பலகோடி ரூபாய்க்கு அதிபதியாக வேண்டுமென இறைவனிடம் அல்லது சித்தரிடம் (சிலையிடம் !!) கோரிக்கை வைப்பது என்று மிகவும் வெளிமுகமாக ,😏 சுற்றுலா சென்று வருவதைப் போல் தான் ஆன்மிகம் உள்ளது .*_🤦🏻♀🤦🏻♀
🤦🏻♀🤕 _*இன்னும் சிலரோ தாங்கள் ஆன்மிக வாதிகள் என்று உலகுக்கு அறிவிக்கும் வண்ணம் புற அடையாளங்களை செய்து புகழ் மற்றும் பணம் கிடைக்க மிக நல்ல வழியாக ஆன்மிகத்தை வளர்க்கின்றனர்...!!*_🤦🏻♀
🤦🏻♀👊 _*தாங்கள் கோவில் கோவிலாக செல்வதையும் , அந்த கோவிலில் எனக்கு இந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின, 😕இந்த கோவிலில் எனக்கு அந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின ,😕 எனக்கு இறைவனும் இறைதன்மையும் புரிபட்டு விட்டது ,🤢 என்று சிலர் கூசாமல் பிறர் தம்மை புகழ வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர் .*_🤦🏻♀👊
😇🔔 _*ஆன்மீகம், இந்த ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்,🤕😴 ஆளுக்கொரு அர்த்தங்களை பிடித்துக் கொண்டு தங்களுடைய மதம்தான் உயர்வானது என்று நிரூபிக்க வேண்டி என்னவெல்லாம் சொல்கிறார்கள்,🤕🤦🏻♀ செய்கிறார்கள். கொஞ்சம் அழுத்தமாய் யோசித்தால் இத்தகைய மதங்களினால் சமூக நல்லிணக்கம் என்பது எங்காவது சாத்தியமாகி இருக்கிறதா?❓ இதற்கு என்னதான் தீர்வு? ❓வாருங்கள் இதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.*_🤷🏻♀
😇🔔 _*நண்பர்களே, நாம் பார்க்கப் போகிற ஆன்மீகம் என்பது மிக நிச்சயமாக மதத்தின் அடையாளம் இல்லை.🙅🏻♀ அது💖 நம் மனதின் அடையாளம். 💖இதை தெளிவாக உணராமல் போனதால்தான் ஆளுக்கொரு மதச்சாயத்தை அப்பிக் கொண்டு நிற்கிறோம். 🤦🏻♀சர்வ நிச்சயமாக மதச் சின்னங்களை உடம்பெல்லாம் அணிந்து கொண்டும், மத நூல்களை படித்துக் கொண்டும், அதன் விதிகளுக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு வாழ்வதல்ல ஆன்மீகம்.*_🤦🏻♀🙇🏻♀
😇👉 _*எது நம்மை இயக்குகிறதோ ❓அது எதுவென தேடி அறிவதே ஆன்மீகம்.🙏💐 இது ஒரு வகையான அறிவு சார்ந்த தேடல்.💐 ஆன்மீகம் என்பது நமது அறிவின் ஓர் இயல்... ஆம்!, அறிவியலேதான். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நிரூபிக்கப் படாத எதையும் அறிவியல் ஏற்றுக் கொள்வதே இல்லை.*_🤷🏻♀
😇💝 _*ஆக, எது நம்மை இயக்குகிறது? கொஞ்சம் இப்படி சிந்தித்துப் பார்ப்போமே!,🤔 இரண்டு பேரின் அன்புதான் நம்மை உயிர்விக்கிறது,💝 அவர்களின் அன்பும், அக்கறையும் நம்மை வளர்த்தெடுக்கிறது.💝 அனுபவம் நம்மை செதுக்குகிறது, அறிவைத் தருகிறது.👍 கருணை நம்மை உயர்த்துகிறது.👍 ஆசையோ நம்மை உந்துகிறது. 👍பெருகிய ஆசைதான் பொறாமையை தருகிறது. 😊பொறாமை நம்முடைய நிதானத்தை இழக்கச் செய்கிறது. பெருகிய ஆசையும், பொறாமையும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்கிறது.*_🙇🏻♀
😇💖 _*ஒரு வாழ்நாளை இயக்குவது இவைதான்.👍 இந்த சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுதான் மனிதம். 👍இதில் நம்மை எது உயர்த்தும் எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுதான் நாம் தேடும் ஆன்மீகம்.💐🙏 இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கிறது.🤷🏻♀ நாம்தான் இந்த கருத்துக்களை மறந்து விட்டு மதம் சொல்லும் கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பொய்யான ஒன்றின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.*_👊😏
🏹 _*ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்....!!*_🤷🏻♀
🏹 _*அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்....!!*_😇💐
🙏💐 _*இதுதான் ஆன்மீகம்..!!, இதுதான் கடவுள்...!!*_💐🙏
😇 _*எந்தப் பேரிழப்பும் ஒரேமாதிரியான விளைவையே ஏற்படுத்தும்.🤷🏻♀ ஒரு நபர், ஒரு பொருள், ஒரு சமூகப் பங்கு என ஏதாவது ஒன்று மறைந்து போய்விட்டாலோ விட்டுச்சென்றுவிட்டாலோ நீங்கள் துயரடைவீர்கள்.🤷🏻♀ ஏனென்றால், அதனுடன் நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதனால், நீங்கள் உங்களையே இழப்பது போன்றோ உங்களில் ஒரு பகுதியை இழப்பது போன்றோ உணர்வீர்கள்.🤷🏻♀ உண்மையில், அந்தச் சுய அடையாளத்தை இழப்பதென்பது, உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கிவைத்த ஒரு பிம்பம் தகர்ந்துபோவதைப் போன்றதுதான்.🤷🏻♀ ஆனால், இந்தச் சுய உணர்வு என்பது பொய்யானது. இது ஒரு மனக் கற்பனைதான். இதை ஒரு ‘அகந்தை மனம்’ என்றும் சொல்லலாம்.*_🤷🏻♀
😇 _*நீங்கள் யார் என்று உங்கள் மனம் வைத்திருக்கும் பிம்பத்துடன் அடையாளப்படுத்திக்கொள்வதென்பது உணர்வற்றும், ஆன்மிக விழிப்புணர்வற்றும் இருப்பதைப் போன்றது. இந்த விழிப்புணர்வற்ற நிலை துயரை உருவாக்குகிறது. ஆனால், இந்தத் துயர், விழிப்புணர்வு ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் உருவாக்குகிறது. விழிப்புணர்வு அடையாத நிலையில் உங்கள் சுயத்தின் மதிப்பிழப்பை நீங்கள் அனுமதித்துவிட்டால், ஆன்மீக சிந்தனை முடிவுக்கு வந்துவிடும்.*_😇🙏
😇🔔 _*வேதாந்தத்தின்படி, தனித்துவமானது ஆன்மிகத்தின் முதல் படி. அது சமுதாயத்தில் அடக்கி ஆளப்பட்ட மனிதனைத் தனித்தன்மை உடையவனாக, சுதந்திரமும் மேன்மையும் மிக்கவனாகச் செய்கிறது. இது இயல்பான ஒன்று.*_💐
😇💐 _*எந்த விலங்கும் இத்தகைய தனித்தன்மையைப் பெறுவதில்லை.🙅🏻♀ ஏனெனில் அவற்றுக்கு அகங்காரமோ, தான் என்ற உணர்வோ இருப்பதில்லை.🙅🏻♀ இந்தத் தனிமனித உணர்வு என்பது குழந்தைகளிடம் இரண்டு அல்லது இரண்டரை வயதில் அகங்கார உணர்வாக எழ ஆரம்பிக்கும்போது தோன்றுகிறது.*_🤷🏻♀
_*ஐந்து வயது வரை இந்த அகங்கார உணர்வை அல்லது தனித்துவத்தை மேலும் பலப்படுத்துவதையே குழந்தை கற்றுக் கொள்கிறது. 🤷🏻♀அதன் பின் பிறருக்கு உதவுவதன் மூலமும் தன் வாழ்க்கை ஓட்டத்தில் பிறருக்கு உரிய இடத்தை அளிப்பதன் மூலமும் முழு மனிதனாக மாற அந்தக் குழந்தைக்குப் பயிற்சி தரப்பட வேண்டும்.*_😇👍
☹ 👉 _*இல்லையேல் அந்தக் குழந்தை பிறருடன் இனிமையாக இயைந்து வாழ முடியாமல் பிரச்னைகளும் சிக்கல்களும் மிக்க தனிமனிதனாக வளர்ந்துவிடும்.*_🙇🏻♀
😇🏹 _*சம்ஸ்கிருதத்தில் தனித்துவம் என்பது ‘வ்யக்தித்வம்’என்றும், முழு மனிதத்தன்மை என்பது ‘விகஸித வ்யக்தித்வம்’ என்றும் கூறப்படும்.*_🏹😇
👼 _*குழந்தையானது முதலில் வ்யக்தி, பின்பு அதுவே விகஸித வ்யக்தியாக மாற வேண்டும்.🤷🏻♀ சமுதாய வாழ்க்கையைப் பார்க்கும்போது நாம் காண்பது இதுவே.*_🤷🏻♀
👼👉 _*சரியாக வளராத, ஆனால் உரிமைகளைக் கொண்ட, பின்தங்கிய சமுதாயத்திலிருந்து வரும் பிள்ளைகள் பொதுவாக இத்தனித்துவத்தைக் கொண்டிருப்பதில்லை. 🙅🏻♀😰அந்தக் குழந்தை ஜாதி, பிரிவு என்றவாறு ஏதாவது ஒரு சமூகத்தின் அங்கமாக மட்டும் இருந்திருக்கும்.*_🤷🏻♀
😇👉 _*ஆனால் சில வாரங்கள் கல்வி கற்க ஆரம்பித்ததும் அதனிடம் ஒரு தனித்துவ உணர்வு வளரும். கல்வியின் முதல்படி இத்தகைய தனித்துவத் தன்மையின் பெருமையையும் மதிப்பையும் உணரச் செய்வதே ஆகும் என வேதாந்தம் கூறும்.*_👍
😇🔔 _*வேதாந்தத்தின்படி, கல்வியின் மூலம் தனித்துவத்தன்மையை வளர்ப்பதை ஆன்மிக வளர்ச்சி என்கிறோம்.*_🙏💐
_*இந்த முதல்படியின்றி, அதன் அடுத்தபடியான முழுமனிதத் தன்மையை வளர்ப்பது தீங்கு விளைவிக்கும்.*_🤷🏻♀
🤷🏻♀ _*நாம் மனிதர்களை ஒன்றிணைக்கலாம். ஆனால் தனித்துவம் உள்ளவர்களை ஒன்றிணைப்பது இயலாத காரியம்.☹😰 ஏனெனில் முழு மனிதர்களிடம் அந்த இணைப்பு அவர்கள் உள்ளத்திலிருந்து தோன்றுகிறது. ஆனால் தனித்துவம் மிக்கவர்களிடம் இந்த ஒருங்கிணைப்பு வெளியிலிருந்து நிர்ப்பந்திக்கப்படுகிறது.*_🙇🏻♀
⛔☹ _*இன்றைய சூழ்நிலையில் நம்மிடம் ஒற்றுமை உணர்வோ, ஒன்றாகப் பணி புரியும் திறனோ இல்லை.🙅🏻♀ ஏனெனில் நாம் பொதுவாக முழு மனிதர்களாக இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர்களாகவே இருக்கிறோம்.*_☹
*_இந்த நிலை மாறவும், மாற்றிக் கொள்ளவும் முயன்று வருகிறோம் என்பதே உண்மை_*😏☹🙇🏻♀
👨👩👧👦 _*பெற்றோர்களே*_
_*உங்களுடைய பிள்ளைகள் சிறு வயதிலேயே அறிவுத்திறன்களையும் பேச்சுத்தொடர்பு கொள்ளும்*_ _*திறன்களையும் பெற உதவினால், ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அவர்கள் நம்பிக்கையான மனநிலையில் வளர நீங்கள் பெரும் பங்காற்றுவீர்கள்.*_👨👩👧👦😇👍
😇💐💝 _*நான் மிகவும் நல்லவன், ஒரு பாவமும் அறியாதவன்! இது ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் சான்றிதழ். 🤗⛔ஆனால் உண்மையில் ஒவ்வொரு மனிதனும் மகாத்மாவாக இருந்தால் நாம் தினந்தோறும் சந்திக்கும் கொலை, கொள்ளை, பொய், புரட்டு, நம்பிக்கை துரோகம் போன்ற சீர்கேடான சம்பவங்கள் தோன்ற வாய்ப்பே இருக்காது. 🙅🏻♀🙇🏻♀இதிலிருந்து நாம் அறிவது என்ன? ❓ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழவே எண்ணுகிறான்.அது முடியாவிட்டாலும் எல்லோரும் அவனை நல்லவனாகவே மதிக்க வேண்டும் என்று விரும்புகிறான்.😊 அவனது ஆழ்மனம் நல்லதையே விரும்புகிறது.👍 அவனது ஆத்மா தூய்மையானது....!!அதுவே இறைவனின் ஆலயம்..!!*_👍😇💐
👼💖 *_அவனது உள்ளத்தில் உறையும் பரமாத்மாவை உணராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவனது பிறப்பும் அவன் வளர்ந்த சூழ்நிலையுமே ஒரு மனிதனின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.🤷🏻♀ எனவே ஒரு மனிதனின் பிறப்பிற்கும் வளர்ப்பிற்கும் காரணமாக அமைபவர்கள் அவனது தாய் தந்தையர்களே._*😇💐👨👩👧👦
👨👩👧👦 *_ஒவ்வொரு தாய் தந்தையரும் உத்தம குழந்தையைப் பெறும் உபாயத்தையும், குழந்தையை சரியான விதத்தில் வளர்க்கும் முறையையும் அறிந்து செயல்பட்டால் எல்லா மனிதனும் மகாத்மாவாக மலர்வது உறுதி..!!!_*💐😇
😇💐🙏 _*அனைவரும் நல்ல கருத்துக்களை உயர்த்துணர்ந்து,நன்மக்களைப்பெற்று,அவர்களை இறை நெறியில் வளர்த்து, பரம்பொருளின் பேரருளுக்குப் பாத்திரமாகும்படி பிரார்த்திக்கின்றேன்.*_😇🙏💐
🔴 🏹 🔥 _*முதலில் பெற்றோர்கள் ஆன்மீகம் என்றால் என்ன❓என்ற விளக்கத்தை நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகே தன் குழந்தைகளை (உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தாமல், மூடநம்பிக்கையில் மூழ்காமல்),தெளிவான சிந்தனை,மாசற்ற மனம்,ஒழுங்கு நெறி,கட்டுப்பாடு இவைகளை கற்பித்து, பின் அவ்வழியில் கொண்டு செல்வது சரியான ஒன்றாக இருக்கும்.*_🙏😇🔴👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🏆 *🦁naanum En Chevum🦁*, 👌👏
🏆 *ஜான் ழைழா* 👌👏
🏆 *இசையருவி*👌👏
🏆 *நான் மகான் அல்ல*👌👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🏆 *balasundar pisn*👌👏
🏆 *🌹Ravi kalai💖*👌👏
🏆 *lakshminarayanann 264*👌👏
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🙏🔔 _*ஆன்மிகம் என்பது பல வகையாக இருக்கிறது. பிரபஞ்சமும் அதன் சட்ட திட்டங்களும் நேருக்கு நேராக இருக்கலாம் அல்லது உயிருக்கு சிரத்தையுடன் மதிப்பளிப்பதாக இருக்கலாம். கடவுளிடம் தொடர்பு கொள்வதை அது அர்த்தப்படுத்தலாம் . சக மனிதர்களுக்கு சேவை புரிவதை அது அர்த்தப்படுத்தலாம். அன்பு, கருணை, கனிவு, மன்னிப்பு, பொறுப்பு, தியாகம் மற்றும் நியாயம் ஆகியவற்றை வளர்ப்பது என்பதை அர்த்தப்படுத்தலாம். ஆன்மீகத்தில் திளைத்திருப்பது என்பதின் அர்த்தம் பரிணாமம் அடைந்த மனிதன் என்பதாகும்.😇👍 அதாவது நல்லது எது தீயது எது என்று அறிந்திருப்பதும், நல்லதை எடுக்க வேண்டுமா தீயதை எடுக்க வேண்டுமா என்று புரிந்திருப்பதுமாகும். ஆன்மீகத்தை அடைவதே ஒவ்வொரு நபருக்கும் மிக முக்கியமான இலக்காக இருக்க வேண்டும். ஒரு ஆன்மீகமுள்ள மனிதனாக நீங்கள் பெயர்களைத் தாண்டி, எங்கெல்லாம் நல்லவை நடக்கிறதோஅவற்றை எல்லாம் உங்களால் காணமுடியும்.*_😇👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்*
*மெய்வருத்தக் கூலி தரும்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🔔 *அறிந்துகொள்ளவும்*🔔
*பல்லக்குக்கு மேல் மூடியில்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம்(கவலை) ஒன்றே.*
*கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்*
🔔 *தெரிந்துகொள்ளவும்*🔔
*ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?*
*ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.*
🔔 *புரிந்துகொள்ளவும்*🔔
*அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.*
*ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?*
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *களையன் அரசு*
*8072020151*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment