Friday, 12 January 2018

ஓகி புயலால் மக்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு, அரசு (எடுத்திருக்க வேண்டிய) எடுத்த நடவடிக்கைகள் என்ன?

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 17.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : ஞாயிறு*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.*_
                                  
  _*-ஜான்மில்டன்.*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*ஓகி புயலால் மக்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு, அரசு (எடுத்திருக்க வேண்டிய) எடுத்த நடவடிக்கைகள் என்ன?*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🌬தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ள புயலாக மாறியுள்ளதாக🌪 இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது*_🗣

_*🌪‘ஒகி’ புயல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை🚨 விடுக்கப்பட்டுள்ளது. பலத்த சூறைக்காற்று🌬 வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் உடைந்து🌴 விழுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.🗣*_

_*☹பொதுவா டிசம்பர் மாதம் வந்தாலே எல்லாரோட பார்வையும் சென்னை பக்கம் போயிடும் ... 👀ஆனா இப்போ கன்னியாகுமரி தான் பெரிய ஆபத்தில் சிக்கி இப்போ கொஞ்சம் மீண்டு வந்துருக்கு...*_😰

_*🧐புயல் மழை காரணமா அங்க இருந்த மக்கள் உள்ள வர முடியாமலும் வெளிய😖 இருந்து யாரும் உதவி செய்ய போக முடியாமலும் கிட்டத்தட்ட ஒரு ஜெயில் கைதிகள் மாதிரி இருந்தாங்க...*_😓

_*🌪இந்த புயலினால் அதிகமா விவசாயிகள் பாதிக்கப்பட்டுருக்காங்க... விவசாய நிலங்கள்🌾 எல்லாம் அழிந்து போய்விட்டது...😥 இன்னொரு பக்கம் பல உப்பளங்கல் இருந்த இடம் இல்லாம போச்சு...😰 கடலோர மாவட்டம் அதுனால அங்க இருந்த மீனவர்கள் நெறைய பேர் கடலுக்கு மீன்பிடிக்க போட்டாங்க அவங்கள சிலர் மட்டுமே வீடு திரும்பினார் பலர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை..*_😱

_*🤔காரணம், கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை ..😠 அங்கே சரியான பாதுகாப்பு வசதிகளும் இல்லை ...*_☹

_*😡அரசியல் தலைவர் அதைவிட முக்கிய பணியில் இருந்தனர்... எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்று...*_😡

_*🧐பக்கத்து மாநிலமான கேரளாவில் தஞ்சம் அடைந்த நம் மீனவர்களின் குரல் எங்க அரசு என்ன செய்தது என்பதே...*_😭

_*🧐சரியான முறையில் பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கப்படவில்லை...☹ ஆய்வு பணிகளும் சரிவர கவனிக்கவில்லை..*_😥

_*😱ஆங்காங்கே மீனவர்கள் மற்றும் அவர்கள் சார்பில் போராட்டங்கள் மட்டுமே🤝🏻 நடைபெறுகிறது..‌ அதுவும் பாதுகாப்பான நிவாரணம் குறித்தே...*_😓

_*தற்போதைய நிலை:-*_

_*☹குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது.-🌪 மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் 😔மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானானதாக தகவல்*_😩

_*🌊கடற்கரை கிராமங்களை கலங்க வைத்த ஒகி புயல் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை.☹ சூறாவளியாய் சுழன்றடித்த காற்று தென்னை, ரப்பர், தேக்கு, வாழை மரங்களை வேரோடும், வேரடி மண் ணோடு சாய்த்தது.😓 வரப்புக்கு மேல் வளர்ந்து நின்ற நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின.😭*_

_*😓ஒகி புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், 💰குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த🚫 மாவட்டமாக அறிவிக்க வேண்டும், நாசமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், 🌾பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.*_🙏🏻

_*கேரளாவிலும் பாதிப்பு:-*_

_*😔குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட ஒக்கி புயல் திருவனந்தபுரத்தை நோக்கி  நகர்ந்து சென்றதால் 🌪கேரளாவிலும் கடும் பாதிப்பை அந்த புயல் ஏற்படுத்தி  உள்ளது.😭 இதனால் திருவனந்தபுரம், கொச்சி, பத்தனம்திட்டா உள்பட மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.⛈*_

_*இந்த மழை காரணமாக கேரளாவில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  உள்ளது. 🌊பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.☹*_

_*கேரளாவில் பெரிய கடல் பரப்பு உள்ளதால் விசைப்படகுகள் மூலம் ஏராளமான  மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.🐟*_

_*திருவனந்தபுரத்தில் இருந்து 62 படகுகளிலும்,🛶 பூத்துறையில் இருந்து 28  படகுகளிலும், 🚤கொச்சியில் இருந்து 200 படகுகளிலும் மற்றும் பல்வேறு  பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் 🐟நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர்.🎣*_

_*கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு, 🌊சூறாவளி காற்று காரணமாக🌪 மீனவர்கள் கரைக்கு  திரும்ப தொடங்கினார்கள்.😟 ஆனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள்  மாயமாகி விட்டனர்.😩 இதைதொடர்ந்து போர் கப்பல்கள்,🛥 ஹெலிகாப்டர்கள்,🚁*_

_*படகுகள் 🛶மூலம் கேரள  மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 🚒மாயமான மீனவர்களின் குடும்பத்தினர்  அவர்களை நினைத்து சோகத்தில் மூழ்கி உள்ளனர்.*_😓

_*🤝🏻கேரள அரசு  முதல்வர் 🤜"ஓகி புயல் பற்றி முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கவில்லை "🤛  என்று வெளிப்படையாக கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் 🗣ஆய்வு பணிகளும் நடந்து வருகிறது.*_🧐

_*🌪புயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை🚨 கூண்டு! 1 முதல் 11 வரை பற்றிய ஒரு குறிப்பு*_🤔

_*🌪புயல் காலங்களில் மீனவர்களுக்கும், 🐟கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள🚢 கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை 🚨விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு🚦 ஏற்றப்படுவது வழக்கம்.😃*_

_*☀பகல் நேரங்கள் கருப்பு நிறத்துடன் கூடிய மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும்,🏴 இரவு மற்றும் மேக மூட்டமாக உள்ள நேரங்களில் ஒளிகளை பாய்ச்சும் விளக்குகள் 💡மூலம் இந்த எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. 🚨*_

_*🤔இந்த எச்சரிக்கைச் சின்னங்கள் ஒன்றில் துவங்கி 11 வரை உள்ளது. 🧐புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் புயல் 🌪எச்சரிக்கை சின்னங்கள்குறித்த விளக்கங்களின் விவரங்கள்...🧐*_

_*🚨ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள்.*_

_*🚨2-ம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.*_

_*🚨3-ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.*_

_*🚨4-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. 3 மற்றும் 4-ம் எண் கூண்டுகள், துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுவதைத் தெரியப்படுத்துகின்றன.*_

_*🚨5-ம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.*_

_*🚨6-ம் எண் கூண்டு, 5-வது எண்ணின் எச்சரிக்கைதான். ஆனால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.*_

_*🚨7-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை. 5, 6 மற்றும் 7-ம் எண் கூண்டுகள் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் குறிக்கிறது.*_

_*🚨8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், 'மிகுந்த அபாயம்' என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது. அப்போது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.*_

_*🚨9-ம் எண் புயல் கூண்டுக்கு, புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். மேலும் துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்துசெல்லும்.*_

_*🚨10-ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.*_

_*🚨11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.*_

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்*_

_*💞இன்றைய விவாதத்தில் பேசிய அனைவரும் சிறந்த பேச்சாளர்களே*_💕

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*அரசியல்வாதிகள் நமக்கு பல சூழ்நிலைகளிலும் பாடம் கற்று தருகிறது நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம் என்று அதை நாம் தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை..*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு*_
_*என்போடு இயைந்த தொடர்பு.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது. அந்த பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே தாவுமாம்.*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? *_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...