https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 16.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : சனி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*வாக்களிப்பது வாக்காளர் கடமை...!!!*_
_*வாக்குறுதியை நிறைவேற்றுவது வேட்பாளர் கடமை...!!!*_
_*மக்களை காப்பது அரசின் கடமை...!!!*_
_*மூன்றையும் செய்வது நல்ல தலைவனின் கடமை...!!!*_
_*-சேகுவாரா*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*அன்று*_
_*ஆண்டிபட்டி ஆனாலும் சரி, ஆர்.கே.நகர் ஆனாலும் சரி, காசு கொடுத்தா சாம கோடாங்கி கூட சரித்திர நாயகன் தான்...!!!*_
_*இன்று*_
_*அப்போதைய சூல்நிலையும் அதை சார்ந்த வாக்காளர்களுமே முடிவு செய்ய காத்திருக்கிறோம்.*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? காரணம் என்ன?*_
_*இவர் வந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கும் வேட்பாளர் யார்? காரணம் என்ன?*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🧐இன்னைக்கு நிலமைல தேர்தல் நடக்குமா என்னான்னு தெரியல வேகமா முடிவுரைக்கு போய்டலாம்.*_😇
_*😢மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து,✌🏻 அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி,💪🏻 ஆர்.கே நகர்.👀 அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து,🤔 கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். 🤷🏻♂தொடர்ந்து, அதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சியினரும் களத்தில் இறங்கித்🤪 தீவிரமாகச் செயல்பட்டுவந்த வேளையில், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக🤷🏻♂ வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக😬 எழுந்த புகாரையடுத்து அந்தத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம்.🧐*_
_*😟இந்த நிலையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம்👨🏻⚖ உத்தரவிட்டதையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.🧐 இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் சூடுபிடித்துள்ளது.💥🔥 இதனால், இந்த முறையும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. 🧐பா.ம.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன.🤨 கடந்த முறை, முதன்முதலில் வேட்பாளரை அறிவித்து போட்டியிட்ட தே.மு.தி.க.,😕 இந்த முறை போட்டியிடவில்லை என அறிவித்ததுடன்,🗣 தம் ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் தெரிவித்துவிட்டது.😦*_
_*😃வேட்பாளர்கள் பற்றிய ஒரு சிறுதொகுப்பு இதோ...*_🧐
_*1⃣டி.டி.வி.தினகரன்:*_
_*🧐சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகனான இவர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கட்சியில் முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தவர்.😀 பின்பு, 1990-ல் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கும், தினகரனுக்கும் இடையே இருந்த நட்பை அறிந்த ஜெயலலிதா,🙈 தினகரனை விலக்கிவைத்திருந்தார்.🤷🏻♂ ஆனால், சீக்கிரமே சசிகலாவின்மூலம் ஜெயலலிதாவின் குட் புக்கில் மீண்டும் இடம்பிடித்து, 🤦🏻♂நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தனக்கு எதிராகச் செயல்பட்டதால், சசிகலா உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் 2011-ம் ஆண்டு ஜெ. கட்சியிலிருந்து நீக்கினார். 😕அதில், தினகரனும் ஒருவர். இவர், கடந்த முறை அ.தி.மு.க. அம்மா அணி (அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்ததால்) சார்பில் வேட்பாளராக நின்றவர். 🙁இந்த முறை அ.தி.மு.க., ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பிடம் இருப்பதால் அந்தக் கட்சியையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்த இவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.🤷🏻♂ எனவே இவருக்கு குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.*_🧐
_*2⃣மருதுகணேஷ் (தி.மு.க.):*_
_*🧐இவர், ஆர்.கே நகர் தி.மு.க. பகுதி பொறுப்பாளர். இவருடைய தாயார் பார்வதி நாராயணசாமி,🎏 இதே பகுதியில் தி.மு.க கவுன்சிலராகப் பழைய 8-வது வட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்;😃 தந்தை நாராயணசாமியும் தீவிர தி.மு.க செயற்பாட்டாளர்.😃 இதனால், உள்ளூர் தி.மு.க-வினர் மத்தியில் நன்கு அறிமுகமானவர்; 😎மண்ணின் மைந்தர். வழக்கறிஞர்; பத்திரிகையாளர். தி.மு.க சார்பில் ஆர்.கே.நகரில் நடைபெற்ற போராட்டங்கள்,😟 ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் முன்னின்று நடத்தியவர். 🚶🏻♂கடந்த முறையும் தி.மு.க. சார்பில் இவரே வேட்பாளராகவே நிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.🧐*_
_*3⃣கே.பத்மராஜன் (சுயேச்சை):*_
_*🧐'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் இவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 😂27 ஆண்டுகளாகச் சட்டசபை, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டுவருகிறார்.👍🏻 வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாகக்கொண்டிருக்கும் பத்மராஜன், 😨இந்தத் தேர்தலிலும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளார். 🎗லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்துள்ளார்.🏆*_
_*3⃣இ.மதுசூதனன்:*_
_*🧐இவர், 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வாகைசூடியவர். 😎அத்துடன், முன்னாள் அமைச்சரும்கூட. ஊழல் வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டவர்.🤦🏻♂ அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி. 😢இந்தத் தொகுதியில் கூப்பிட்ட குரலுக்கு வரக்கூடியவர் என்ற நல்லபெயரும் இவருக்கு இருக்கிறது.🤫 அ.தி.மு.க. பிரிந்திருந்தபோது ஓ.பி.எஸ் அணியில் அங்கம் வகித்திருந்தார். 🙄அந்த அணி சார்பிலேயே வேட்பாளராகவும் நின்றார்.😁 இப்போது அ.தி.மு.க. ஒன்றிணைந்து (ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.) இவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதுடன்,✌🏻 இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிடவும் இருக்கிறார்.😒*_
_*4⃣கரு.நாகராஜன்:*_
_*🧐தற்போது பி.ஜே.பி-யின் மாநிலச் செயலராக இருக்கும் இவர், இதற்குமுன்பு ச.ம.க-வில் இருந்தவர். 😳2016-ம் ஆண்டு பி.ஜே.பி-யில் இணைந்த அவர், அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்🛃 சென்னை - மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.👎🏻 கடந்தமுறை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக இருந்த இசையமைப்பாளர்🎹 கங்கை அமரன், இந்த முறை மறுக்கவே கரு.நாகராஜனுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.😂*_
_*🧐இவர்களைத் தவிர இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.🤩 மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயமும் 😲இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.🤝🏻👍🏻*_
_*😱 வெற்றிவாய்ப்பு?!😰*_
_*🧐2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.✌🏻 இது இரண்டாம் இடம்பிடித்த தி.மு.க-வின் சிம்லா முத்துச்சோழனைவிட 39,545 வாக்குகள் அதிகம்.😬 மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வசந்திதேவி அந்தத் தேர்தலில் 4,195 வாக்குகள் பெற்றார்.*_😖
_*😱``ஜெயலலிதா போட்டியிட்டபோதே எதிர்க்கட்சியான தி.மு.க-விற்கு வாக்களித்தவர்கள் என்பதால் தி.மு.கவின் வாக்கு எண்ணிக்கை குறையாது. 🤷🏻♂வாக்குகளும் பிரியாது. மேலும், மீனவர்கள் அதிகம் உள்ள காசிமேட்டுத் தொகுதி ஆர்.கே.நகரில் வருகிறது.🐟 கன்னியாகுமரியில் மீனவர்பிரச்னையில் அரசு அலட்சியம்🙊🙉🙈 காட்டுவதாக இப்பகுதி மீனவர்களும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.😱 அவர்களின் வாக்குகளும் தி.மு.க பக்கம் திருப்பும். அதேபோல், 😢ஜெயலலிதா பெற்ற 97 ஆயிரம் வாக்குகளை இந்தமுறை தினகரன் பிரிப்பார். 🧐ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஆதரவும் தி.மு.க-விற்கு இருப்பதால் 🤔இந்த முறை தி.மு.க வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதிகார அத்துமீறலும், பணபலமும் 💪🏻முடிவுகளை மாற்றலாம்’’ என்பது ஒரு தோராயமான கணிப்பு.*_👀
_*😲ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்னென்ன பிரச்சினைன்னு பாப்போம்...!!*_🧐
_*🧐நடிகர் விஷால் இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்செய்து, பின்னர் கடைசி நேரத்தில் அவரின் மனு நிராகரிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.😩 ஆர்.கே.நகர் தேர்தலில் தான் வெற்றிபெற்று மக்களுக்கு நல்லது😛 செய்துவிடக்கூடாது என்பதற்காக தன் மனுவை தள்ளுபடி செய்திருப்பதாக விஷால் குற்றம்சாட்டினார்.😟*_
_*🤔இந்தச்சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு பிரசாரம் செய்வதற்காகச் சென்ற 🗣பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பி.ஜே.பி. தொண்டர்கள்,👥 பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார் தெரிவித்தனர்.🤑*_
_*🧐இதையடுத்து, சனிக்கிழமையன்று ஆர்.கே.நகர் தொகுதி அடங்கிய பகுதியில் வேட்பாளர் நாகராஜன் 😮மற்றும் கட்சியினருடன் தமிழிசை, சாலைமறியலில் ஈடுபட்டார்.😤 இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது.😠*_
_*🧐இதுஒருபுறமிருக்க, தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, 🤭முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 🗣இதில் வேடிக்கை என்னவென்றால், ஓ.பி.எஸ். அணியினரைத் தவிர, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்,👥 மதுசூதனனை எதிர்த்தும், தினகரனுக்கு ஆதரவாகவும் கடந்த ஏப்ரல் மாதம் இதே தொகுதியில் வாக்கு சேகரித்தனர். டி.டி.வி. தினகரனுக்காக, 😂அவருடன் திறந்த ஜீப்பில் சென்று தொப்பி சின்னத்துக்கு வாக்குசேகரித்தார் எடப்பாடி பழனிசாமி.🧐*_
_*👥ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்தான் பாவம்.☹ அவர்கள், இப்போது எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள்🤫 என்பதுதான் வேடிக்கை. தினகரனை ஆதரித்தவர்கள், 👀தற்போது அவருக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு எதிராகவும் வாக்குகேட்டு பிரசாரம்🗣 மேற்கொண்டுள்ளனர்.😂🤣*_
_*🤓தி.மு.க. வேட்பாளர், வழக்கம்போல் தொகுதி மக்களை நேரடியாகச்👀 சந்தித்து, உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார். 😕பி.ஜே.பி. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யச் சென்றபோதுதான் தமிழிசை, மறியலில் ஈடுபட்டு, மீண்டும்😰 இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.😩*_
_*🧐இதுஒருபுறமிருக்க, தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்🛂 எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் 😇ஆளும் தரப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.🤝🏻 இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைக்கப் பெற்றவுடன் நடைபெறும் முதல் தேர்தல் களம் என்பதால்,🤔 சின்னத்தின் பெருமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தரப்பு தள்ளப்பட்டுள்ளது.😎 இந்தத் தேர்தலைப் பின்பற்றியே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.😕*_
_*🧐இதற்கிடையே, பிரபல கட்சியினர்களின் டிவிட்டர் கருத்து👨🏻💻 மோதல்கள்... இன்று நடைப்பெற்ற வாகன சோதனைகள்.. 🚙பணம் பறிமுதல் செய்யப்பட்டது...💰 இது போன்ற நிகழ்வுகளால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் 🛃மீண்டும் ரத்துசெய்யப்படலாம்🚫 என்ற தகவல் பரவலாக வெளியாகத்🗣 தொடங்கியுள்ளது.*_😠
_*🧐அப்படி, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எந்தமாதிரியான பிரச்னைகள்😟 என்பதை இங்கே பார்ப்போம்...👀 அந்தப் பட்டியலில் முக்கியமாய் முதலிடம் வகிப்பது அடிப்படைப் பிரச்னைகளே!*_☹
_*💧தண்ணீர்ப் பிரச்னை!*_😢
_*🧐“வள்ளலார் நகரில் ஆரம்பித்து சுங்கச்சாவடிவரை 😰இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் முக்கியப் பிரச்னையாய் இருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான்.😓 இந்தப் பகுதியில் உள்ள குடிநீர்க் குழாய்களில் வரும் நீர், கால்வாய் நீர் கலந்துவருகிறது;💦 துர்நாற்றம் வீசுகிறது;😷 மஞ்சள் நிறத்தில் வருகிறது.😱 அந்த நீரைக் குடிக்கப் பயன்படுத்தாவிட்டாலும், கழிப்பறைக்கு ஊற்றுவதற்கு வைத்துக்கொள்ளலாம்.😖 ஆனால், அதுகூடக் குறிப்பிட்ட நேரத்தில்🕰 வருவதில்லை. சில நேரங்களில் நள்ளிரவு☄ தொடங்கி விடியற்காலைக்குள்ளேயே வந்து நின்றுவிடுகிறது😭 அல்லது காலை 7 மணிக்கு வந்து 10 மணிக்குள் நின்றுவிடுகிறது அல்லது மாலை நேரங்களில் வருகிறது.😰*_
_*😢மொத்தத்தில் சொல்லப்போனால் குறிப்பிட்ட நேரம் வைத்துத் தண்ணீரை விடுவதில்லை. 🤷🏻♂அந்தத் தண்ணீரைச் சோதனை செய்வதற்கு அதிகாரிகளும் வருவதில்லை. 🤦🏻♂ஏதோ, அதாவது வருகிறதே என்று நினைத்து அதைப் பிடிக்கிறார்கள்.☹ குடிப்பதற்கு மட்டும் குடிநீர் லாரியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.🧐 அதுவும் வரவில்லையென்றால் கேன் வாட்டர் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.😟 இதனால் கேன் வாட்டர் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.💰 இப்படியே போனால் இங்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் போய்விடும்”*_💦🤷🏻♂
_*🤔வேறு பிரச்னைகள்!*_
_*🧐இதுதவிர, இன்னும் சில பிரச்னைகளையும் அவர்கள் உள்ளது.😥 “பொதுவாக இந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. 🚗இதனால் நாள்தோறும் மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.😷*_
_*🧐சுற்றுச்சூழல் பாதிப்புகளால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. 🤧ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவுக்கு மருத்துவர்களும்,👨🏻⚕ பணியாளர்களும்👷🏻♂ இல்லாமல் இருக்கிறார்கள்.☹*_
_*🧐ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் சரியாக வழங்கப்படுவதில்லை.😓*_
_*🧐முதியோர்களுக்கு👴🏻 முறையாக ஓய்வூதியம் கிடைக்கப்பெறுவதில்லை.😰*_
_*🧐 தெருநாய்களும் வெறிநாய்களும்🐕 கட்டுப்படுத்தப்படாமல் வலம்வருகின்றன. 😨*_
_*🧐ரயில்வே டிராக்குகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 🚌அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கூட🚑 விரைவாக வர முடிவதில்லை.😓*_
_*🧐குறிப்பாக இந்தத் தொகுதிகுட்பட்ட கொடுங்கையூர் குப்பைமேட்டால்😷 பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.😬 யானைக்கால் வியாதியும், 😟தோல் வியாதியும் ஏற்படுகிறது.*_
_*🧐 பராமரிப்பின்றி மின்கம்பங்கள் கீழே விழும் நிலையில்😱 இருக்கின்றன. மிகவும் ஆபத்தான வயர்கள் தரையில் கிடக்கின்றன.😭 இதனால், மழை - வெள்ளப் பாதிப்பின்போது⛈ மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகின்றன. 😔அதற்கு உதாரணம், கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது. 😢*_
_*🧐ஐ.ஓ.சி-யிலிருந்து சென்னைத் துறைமுகம்வரை எண்ணெய்க் 😱குழாய்கள் பூமிக்கு மேலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.*_😰
_*🧐ஆர்.கே.நகர்த் தொகுதியின் உட்புறப் பகுதிகளில் சிக்னல்🚦 இல்லாததால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன🚑 என அவர்களுடைய பட்டியல் நீளுகிறது.*_📑
_*✌🏻“இரண்டு முறை, முதல்வரையே வென்றெடுத்த இந்தத் தொகுதியில் 🤪இவ்வளவு பிரச்னைகளா”😱 என்று ஆச்சர்யத்துடன் அவர்களிடம் கேட்டால்...🗣 “ஆம்” என்றவர்களிடம், “இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்” என்று கேட்டால்*_👂🏻
_*🧐“இந்த முறை வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில்🤔 கூடுதல் கவனம் செலுத்துவோம்.👀 அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும்😃 நபருக்கும், மக்களோடு அன்யோன்யமாகப் பழகும் நபருக்கே எங்கள் ஓட்டு இருக்கும்”😂 என்கின்றார்கள் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்.*_👍🏻
_*🗣தொகுதி மக்களின் குமுறல்களைக் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் வேட்பாளர்களே!*_🥁🥁🥁
_*🙏🏻நன்றி🙏🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🏅 SP.Vignesh*_
_*🏅 இசையருவி*_
_*🏅 👉🏼SIVARAJ💘👈🏼*_
_*🏅 Su*_
_*🏅 Santhi😊🦅*_
_*🏅 jaiganesh2881*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🏅 Anantha Krish*_
_*🏅 இரா.விஷ்ணு..*_
_*🏅 Mahesh Waran B*_
_*🏅 😁*_
_*🏅 Arumugam*_
_*🏅 நான்நீநாம்🌜🌛*_
_*🏅 🤝T.R.BROTHERS💪🏻*_
_*🏅 Shagul JRS*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*இதுவரை நமக்கு நடந்த பிரச்சனைகள், போராட்டங்கள் மற்றும் பல துன்பங்களை எல்லாம் அளித்த நம்முடைய அரசுக்கு ஒரு பாடம் சொல்லிதர... ஆர்.கே.நகர் மக்களே உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தயவுசெய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.*_
_*சிந்தித்து செயல்படுவீர்...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா*_
_*மானம் உடைய தரசு.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும்*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💞அறிந்து கொள்ளவும்*_💕
_*குட்ட குட்ட குனிந்தாலும், கூல கும்பிடு போட்டாலும் அரசியல்வாதியை நம்பாதே.*_
_*💞தெரிந்து கொள்ளவும்*_💕
_*பண்புள்ள அரசியல்வாதி விவசாய நிலத்திற்க்கு சமம்.*_
_*💞புரிந்து கொள்ளவும்*_💕
_*இடிமேல் இடிஇடித்தாலும், அடிமேல் அடிஅடித்தாலும், அரசியல்வாதி எப்பவுமே அரசியல்வாதிதான்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐
💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_
👨🏻⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment