🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :30.03.2018.*
🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*
💦💦💦💦💦💦💦💦💦💦💦
*_💝பாகம் - 2⃣💝_*
*_கல்லணையிலிருந்து காவிரி கவைகவையாகக் கிளைவிட்டு அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு, புது ஆறு, மன்னியாறு என்று பலவாகப் பிரிந்து, காவிரிக் கழிமுகம் (டெல்டா) படர்ந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தைப் படைக்கிறது. கல்லணையிலிருந்து வெளியேறும் சராசரி நீரளவு: வினாடிக்கு 8,324 கன அடி. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் (12,000 ச.கி.மீ.) நிலப்பரப்பு காவிரிப் பாசனம் பெறுகிறது. காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள உழவர் தொகை பல லட்சங்களைத் தாண்டும். நைல் நதிக்கும் எகிப்திய நாகரிகத்துக்கும் உள்ள அதே உயிர்த் தொடர்பு காவிரி ஆற்றுக்கும் பழந் தமிழர் நாகரிகத்துக்கும் உண்டு. தமிழ்நாட்டில் விவசாயம் மட்டும் அல்ல; வீராணம் திட்டவழி சென்னையின் குடிநீர்த் தேவையையும் காவிரிதான் பூர்த்திசெய்கிறது. காவிரியால் குடிநீர் பெறும் கிராமங்கள், நகரங்கள் ஏராளம். ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதியாகி மாறியது😓_*
*_1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூரு - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப் பகிர்வு நடந்துவந்தது._*
*_1956-ல் மொழிவழி மாநில மறுசீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று. 1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது. கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது._*
*_1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி ஆயக்கட்டு (நீர்ப்பாசனப் பரப்பு) 25,80,000 ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் ஆயக்கட்டு 6,80,000 ஏக்கர் என்றும் தெரியவந்தது. தமிழகம் தன் ஆயக்கட்டைச் சுருங்கவிடக் கூடாது என்றும், கர்நாடகம் தன் ஆயக்கட்டை விரிவாக்க வேண்டும் என்றும் விரும்பியதுதான் உடன்பாடு ஏற்பட முடியாமல் போனதற்குக் காரணம்._*
*_1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதால் திரும்பப் பெற்றது. இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான உறுப்பு 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பூசல் சட்டம், 1956 என்பது தீராத சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது._*
*_1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது. தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3._*
*_உடனே தண்ணீர் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது._*
*_1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு. மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு வரையறுக்கப்பட்டது._*
*_கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை (ஆயக்கட்டு) அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது._*
*_தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன._*
*_1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது._*
*_உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழ்நாடு தீர்ப்பாயத்தை அணுகியது. தீர்ப்பாயம் 11 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. கர்நாடகம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியபோது, பிரதமர் நரசிம்ம ராவ் இதில் தலையிட நீதிமன்றம் ஆணையிட்டது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டார்._*
*_1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை._*
No comments:
Post a Comment