Saturday, 31 March 2018

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-3


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

     *_💝பாகம் - 3⃣💝_*

*_2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சிதான். கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. அதுவும்கூடக் கிடைக்க வழியில்லாமல் தவித்தது தமிழகம்._*

*_தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, மீளாய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன. இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) பின்வருமாறு அட்டவணையிடப்பட்டது: ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5._*

*_ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறைக் காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து நின்றது._*

*_மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி ஆற்று ஆணையத் தலைவர் என்ற முறையில் 2012-ல் ஒரு முறை, நாளொன்றுக்கு ஒரு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் கட்டளையிட்டார். கர்நாடக அரசு இந்தக் கட்டளையை நிறைவேற்ற மறுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயிற்று. வேறு வழியின்றி தண்ணீர் திறந்துவிட்ட பின், கர்நாடகத்தில் பரவலான வன்முறைக் கிளர்ச்சி மூண்டது._*

*_தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு 2013 பிப்ரவரி 20 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அந்த நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. 1991, 2001, 2012 ஆண்டுகளில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைவு என்று தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்து வன்முறைக் கிளர்ச்சி நடைபெற்றது._*

*_நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 2007ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, 2013ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் 2013 மார்ச் மாதத்தில் வழக்கு தொடர்ந்தது._*

*_2013 மே மாதத்தில் காவிரி நீர் திறப்பை உறுதி செய்வதற்கான காவிரி கண்காணிப்பு குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் தற்காலிக உத்தரவை மத்திய அரசு 2013 மே 24ம் தேதி வெளியிட்டது. எனினும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டது._*

*_இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் 2013 ஜூன் 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 28ம் தேதி கர்நாடக முதல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வ‌ழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மே 13ம் தேதி நீதிபதி பி.எஸ் சவுஹான் காவிரி நடுவர் மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் நடுவர்‌ மன்றத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலவில்லை._*

*_2016ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்தில் சட்ட ஆணைய தலைவராக நியமனம் பெற்ற சவுஹான் காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஆண்டும் போதிய தண்ணீர் கையிருப்பு இல்லை எனக் கூறி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து விட்டது. 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை கடந்த மாதம் மீண்டும் அணுகியது._*

*_உச்சநீதிமன்ற நீதிபதியே... 'வாழுங்கள்... வாழவிடுங்கள்...' என்று கருணை அடிப்படையில் தமிழகத்துக்கு நீரை ஒதுக்குங்கள் என்று கூறி விநாடிக்கு 15000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்._*

*_இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ம் தேதிவரை விநாடிக்கு 12000 கனஅடி தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் வன்முறை வெடித்தது._*

*_டெல்லியில் செப்டம்பர் 19ம் தேதி கூடிய காவிரி மேற்பார்வைக்குழு, செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு முறையிட்டது._*

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...