Saturday, 31 March 2018

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-5


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.03.2018.* 
         🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦

   *_💝பாகம் - 5⃣💝_*

*_காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசு தனது அணைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர வேண்டும் என அளித்த தீர்ப்பில், 14.75 டி.எம்.சி. நீரைப் பிடுங்கி கர்நாடகாவிற்குக் கொடுத்துவிட்டு, இது சமநிலையான தீர்ப்பு என நாக்கூசும் பொய்யைக் கூறியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். காவிரி டெல்டா பகுதியில் 20 டி.எம்.சி. அளவிற்கு நிலத்தடி நீர் இருக்கிறதென்றும், அதில் 10 டி.எம்.சி. நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, இத்திருட்டை  நியாயப்படுத்தியிருக்கிறார்கள்._*

*_"காவிரி கிடைக்காது; கடல் தண்ணிய வாங்கிக்க.."  என சுப்பிரமணிய சுவாமி  கொழுப்பெடுத்துப் பேசியதற்கும், "காவிரிக்குப் பதிலாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துங்கள்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரத்தோடு உத்தரவிட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடில்லை. தமிழகத்தை வஞ்சிப்பதில் சு.சாமியைப் போலவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சிந்திக்கிறார்கள்._*

*_காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டத்திலிருந்து 21.5 மீட்டருக்குக் கீழும், கடலூர் மாவட்டத்தில் 25.5 மீட்டருக்கும் கீழும் சென்றுவிட்டது. இம்மட்டம் நாகை மாவட்டத்தில் 6.5 மீட்டருக்குக் கீழும், திருவாரூர் மாவட்டத்தில் 9.2 மீட்டருக்கும் கீழும் உள்ளது. தஞ்சை, கடலூர் மாவட்டங்களைவிட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் தரைமட்டத்திலிருந்து அதிக ஆழத்தில் இல்லையென்றாலும், இம்மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையை எட்டியிருக்கிறது._*

*_சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழ்குழாய் மூலம் சாகுபடி நடந்துவந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் தற்பொழுது நிலத்தடி நீர் உவராகிவிட்டது. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள நன்னிலம், திருமருகல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வட்டாரங்களிலும்; கல்லணைக்கு அருகேயுள்ள பூதலூர், மாரனேரி, விண்ணமங்கலம், கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் வட்டாரங்களிலும் கிடைக்கும் நிலத்தடி நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாது._*

*_கல்லணை கால்வாய் பாசனப் பகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசமுத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் நிலத்தடி நீர் 120 மீட்டருக்குக் கீழாகச் சென்றுவிட்டது. இப்பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் கிணறைத் தோண்டுவதற்கு ஏறத்தாழ 8 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டுமென்பதால், குறு, சிறு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை._*

*_இதுதான் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவிவரும் எதார்த்த நிலை. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுத்துச் சாகுபடிக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்குமானால், 2016-ஆம் ஆண்டு வறட்சியின்போது அம்மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்?  இந்த உண்மைகளை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, சாகுபடிக்கு நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ளுங்கள் என உத்தரவில் எந்த வித நீதியும் கிடைக்கவில்லை_*

*_சாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூறும் இத்தீர்ப்பு அறமும், அறிவும் அற்றது மட்டுமல்ல, ஒருபக்கச் சார்பான ஓரவஞ்சனை கொண்டதாகும். தமிழகத்திற்கு ஒதுக்கும் நீரைக் குறைக்க வேண்டும் எனக் கோரிய கர்நாடகா அரசுதான் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏராளமான நிலத்தடி நீர் இருப்பதாக வாதாடியது.  நடுவர் மன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட கர்நாடகா அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகா மாநிலத்தில் கிடைக்கும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை._*

*_கர்நாடக அரசு நிலத்தடி நீர் குறித்து 2016-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், அம்மாநிலத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது; 97 சதவீத நிலத்தடி நீர்க் குடிப்பதற்கு உகந்தது எனக் கூறியிருக்கிறது. இதில் ஒரு சதவீதம்கூட எடுத்துப் பயன்படுத்துமாறு உத்தரவிடாத நீதிபதிகள், தமிழகத்திடமிருந்து 14.75 டி.எம்.சி. நீரைத் தட்டிப் பறித்து, இந்த ஓரவஞ்சகமான நடவடிக்கையை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை என்ற பெயரில் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்._*

*_பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்கெனவே தினமும் 140 கோடி லிட்டர் நீர் காவிரியிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் நீரில் 52 சதவீத நீர் தேவையற்ற விதத்தில் வீணடிக்கப்படுவதாக பெங்களூரு சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியிருக்கிறது._*

*_இந்தக் குற்றத்தைச் செய்யும் கயவர்கள் யார்? பெங்களூருவைச் சுற்றி அமைந்துள்ள ஷாப்பிங் மால்கள், நீர்ப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள், குதிரைப் பந்தய மைதானங்கள், செயற்கை கடல்கள், ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். இக்கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பெங்களூரு குடிநீர்த் தேவையின் பெயரில் எடுக்கப்படும் நீரில் 50 சதவீதத்திற்கும் மேலாக, 72 கோடி லிட்டர் நீரைப் பெறுகிறார்கள்._*

*_இந்த கார்ப்பரேட் கும்பல் அடைந்திருக்கும் வளர்ச்சியைத்தான் பெங்களூரு நகர உலகத்தர அந்தஸ்தாக நீதிபதிகள் காட்டுகிறார்கள். இவர்களின் நீர்த் தேவைக்காகத் தமிழக விவசாயிகளின் நீர்த் தேவையைப் பலியிட்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் ஓரவஞ்சனை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்றுரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது எனத் தீர்ப்பில் எழுதி, கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது. கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த வரம்பை ரத்து செய்துவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என உத்தரவிட்டு தமிழகத்தின் மீது இரட்டைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது._*

*_கர்நாடகத்தின் இழப்பு குறித்து மூக்கைச் சிந்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், 1974 தொடங்கி தமிழகத்திற்கு கர்நாடகம் இழைத்து வரும் அநீதி குறித்து வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மூன்று அணைகளைச் சட்டவிரோதமாகக் கட்டி இயக்கிவருகிறது, கர்நாடகம். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, அதன் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இவை எதனையும் நடைமுறைப்படுத்தாமல், தமிழகத்தின் டெல்டா பகுதியை உபரி நீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாக மாற்றிவிட்டது. கர்நாடகம் இழைத்துவரும் இந்த அநீதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலாவது முடிவு வரும் என எதிர்பார்த்திருந்த தமிழக மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்._*

*_கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பை நீக்கியதன் மூலமும், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் அதிகரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாலும், அம்மாநிலத்தில் மேலும் 1 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காவிரி பாசனப் பரப்பின் வரும் எனக் கூறப்படுகிறது. அதேபொழுதில் தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏறத்தாழ 88,500 ஏக்கர் நிலப்பரப்பு தரிசாகும் அபாயம் எழுந்து நிற்கிறது._*

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...