🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :23.03.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💡 *படைப்பாற்றல் என்பது தவறுகளை செய்ய உங்களை அனுமதித்து கொள்வது.படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்து கொள்வது.*
💐 *ஸ்காட் ஆடம்ஸ்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*இருண்ட இணையமும், உலகத்தை ஆட்டிப்படைக்கும் Anonymous அனானிமஸ்களும்.*
🌑🙆🏻♂🙆🏻♀📛😰🌑🙆🏻♂🙆🏻♀📛😰🌑
*_💝பாகம் - 1⃣💝_*
🌎🖥💻 *_உலகளாவிய தொழில்நுட்பம் அனைத்திற்கும் முன்னோடியாக இருப்பது கணிப்பொறிதான். அதனை அடிப்படையாக கொண்டுதான் தினமும் பல்வேறு வகையான புதிய தொழில்நுட்பங்கள் சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.தகவல்களை கேட்டுப்பெறுதல், தரவுகளை சேமித்தல், ஆவணப்படுத்துதல், பகிர்தல்,உரையாடுதல் என அனைத்துவிதமான செயல்பாடுகளையும் கணிணி என்ற இயந்திரத்திற்குள் அடக்கிவிட முடியும். இன்று பட்டிதொட்டி எங்கும் பரவிக்கிடக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் கூட கையடக்க கணிப்பொறி வகைதான்._*📲📱
🌎🖥📲 *_இந்தக் காலகட்டத்தில் ஒரு கணிப்பொறியின் இன்றியமையா தேவை என்பது இணைய வசதி. அதாவது காஃபி பவுடருக்கு கஃபைன் போலவும், சர்க்கரைக்கு சுக்ரோஸ் போலவும், கணினிக்கு இணையம். இணைய வசதிகளை கொண்டு, குறிப்பிட்ட அளவு மட்டும் சேமித்த, உருவாக்கிய, பரிமாறிய தகவல்கள் இன்று எண்ணிலடங்கா எண்ணிக்கையாக மாறிப்போய்விட்டது. தனிமனித தகவல் தொட்டு, பல ரகசிய காப்பீடுகள், ஒப்பந்தங்கள் எல்லாமே ஒளிந்து கிடக்கும் ரகசிய சந்தைதான் இணைய உலகம்._*🌎
🌎🖥📲🛡 *_பாதுகாக்கப்படும் ஆவணங்களை சந்தை என கூறுவது சரிதான் என்றால், நிச்சயம் சரி!!.. நாம் பாதுகாப்பு என நினைக்கும் எதுவும் இணைய உலகத்தில் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பதில்லை. ஒரு வீட்டில் மறைத்து லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை, உடைத்து எடுத்து செல்பவனுக்கு திருடன் என்று பெயர். அதேபோல இணைய லாக்கரில் வைத்திருக்கும் ஆவணங்களை திருடுபவர்களுக்கு, நாகரீக முறையில் ஹேக்கர்ஸ் என்று பெயர். திருடுவதெல்லாம் ஒன்றுதான்.. ஆனால் என்ன படித்தவன் சில பார்முலாவை பயன்படுத்தி, ப்ரோக்ராம் ஒன்றை உருவாக்கி இருந்த இடத்தில் இருந்தே விளையாடுகிறான். இதற்காக ஹேக்கர்ஸ் உருவாக்கும் ப்ரோகிராம்ஸ்தான் 'வைரஸ்'._*👾👾
🖥📲👾 *_வைரஸ் எத்தனை வகைப்படும் எனக் கேட்டால், ஒன்று… இரண்டு… நூறு.. பத்தாயிரம்.. கோடி… என்று சொல்லிக்கொண்டே போகலாம். அது கணக்கில் அடங்கா ஒன்று.. அப்படி வைரஸ் தாக்கும் பட்சத்தில் தரவுகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், சில ரகசிய ஆவணங்கள் திருடவும் படுகின்றன._*🙆🏻♂🙆🏻♀
🖥📲👾 *_இது தொழில்நுட்ப உலகத்தில் 'சைபர் அட்டாக்' என்று கூறப்படுகிறது. இதனால் தகவல்கள் திருடப்படுவதோடு முடிந்துவிடுகிறா என்றால் இல்லை. ஒரு நிமிடம் முதல் பல நாட்கள் வரை உங்கள் கணிப்பொறியை வேலை செய்ய விடாமல் அதை ஸ்தம்பித்து போகவும் செய்ய முடியும். அப்படி கணினியின் மூளை செயலிழந்து போகும் இடைவெளிதான் அட்டாக் செய்வதற்கான கால இடைவெளி. இதற்கு சான்றாக சமீபத்தைய வான்னாக்ரை ரான்சம்வேர் என்ற சைபர் அட்டாக்கை சொல்லலாம். இதன் மூலமாக பெரிய பெரிய நிறுவனங்களும் கதிகலங்கிப்போயின. உலக நாடுகளில் பல கணினிகள் ஆட்டம் கண்டன. இந்தத் திருட்டினை தடுக்கவும், அதற்கான தண்டனை பெற்றுத்தரவும் உருவாக்கப்பட்டதுதான் 'சைபர் க்ரைம்' பிரிவு._*🖥📲👾
🖥📲👾 *_ஒரு நாளைக்கு 'f secure' என்னும் நிறுவனத்திற்கு 5 லட்சம் புதிய வைரஸ்கள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் இணையத்தை தாக்கும் வைரஸ் மற்றும் கணினியை தாக்கும் மால்வேர் வைரஸ் என இரண்டு வகைகளாக பிரித்து பரிசோதிக்கப்படுகின்றனர். பரிசோதனையில் எந்த வியாதிக்கு (வைரஸ்), எந்த மருந்து(ஆண்டி வைரஸ்) கொடுப்பது என்பதை மருத்துவர்கள் (ப்ரோக்ராமர்ஸ்) கண்டறிவார்கள். இந்த ஹேக்கர்ஸே பெரும்பாலும் ஆண்டி டோஸ் கொடுக்கும் பணிகளை செய்வார்கள். "அவனால் ஆக்கவும் அழிக்கவும் முடியும்" என்ற சிம்பிள் பார்முலாதான்._*🖥📲👾
🖥📲👾 *_சரி யார் இந்த அனோனிமஸ் இவர்களின் வேலை என்ன என்பதை காணலாம்_*🤷🏻♂🤷🏻♂
🖥📲👾 *_தற்போதைய இணைய உலகில் எந்த செய்தித்தளத்திற்கு சென்றாலும் இந்த அனோனிகள் பற்றிய தகவல் தான் முக்கிய இடத்தினை பிடித்துவைத்திருக்கின்றது. அதைவிட டிவிட்டரில் அதிகம் சிலாகிக்கப்படும் ஓர் விடையமாகவும் இது மாறியிருக்கின்றது. இணையத்தில் மட்டுமல்ல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் வானொலி போன்ற பல்வேறுபட்ட ஊடகங்களும் முந்தியடித்துக்கொண்டு இவர்களினை பற்றி செய்தி வெளியிடுகின்றார்கள். யார் இந்த அனோன்கள்? இவர்கள் எங்கே இருக்கின்றார்கள்?_*⁉
🖥📲🤔 *_இந்த அனோன்கள் என்பது இணையத்தில் பரவிவரும் ஓர் கொந்தர் குழுமம் ஆகும். இந்த அனோன் என்கின்ற வார்த்தை 2003 காலப்பகுதியில் 4Chan என்கின்ற புகைப்படகலந்துரையாடல் தளத்திலிருந்து உருவானதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த அனோன்கள் 2008 காலப்பகுதி மட்டும் ஓர் பொழுபோக்கு அம்சமாகவே பார்க்கப்பட்டு வந்தது. யாரும் இந்த குழுமத்தினையோ அல்ல அந்த பெயரினை பயன்படுத்தி பின்னுாட்டம் இடுபவர்களையோ கணக்கில் எடுத்தாக தெரியவில்லை. காரணம் அவர்கள் குறித்த ஓர் இலக்கினை நோக்கி இயங்காமையே. ஆனால், 2008ல் இருந்து அவர்கள் போராட்டங்கள் மற்றும் பல பெரிய தளங்களின் மீது தாக்குதல்களினை நடத்தவே விழித்துக்கொண்டது உலகம். இணைய சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றினை வற்புறுத்தி பல்வேறுபட்ட தளங்களில் குழுவாகவும் தனியாகவும் பலர் தாக்குதல் நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்திய அனைவரும் அனோனின் பெயரின் கீழே தாக்குதலினை தொடுத்தனர். தங்கள் சொந்த பெயரினில் தாக்குதல் தொடுப்பதையிடுத்து இவ்வாறு பொதுவான ஓர் பெயரில் தாங்கள் ஆமோதிக்கின்ற ஓர் விடையத்தினை ஆதரித்து பலரும் தங்கள் பங்களிப்புக்களை செய்யத்தொடங்கினர்._*🤷🏻♂🤷🏻♂
🖥📲🤔 *_இவர்களுடைய இந்த அனோன் குழுமத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல்வேறுபட்ட இணையத்தளங்கள் மற்றும் செய்தித்தளங்கள், கலந்துரையாடல் குழுமங்கள் தங்கள் தளங்களில் இந்த அனோன் குழுமத்தின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளினை வெளியிடத்தொடங்கின. குறிப்பாக 4Chan, Futuba போன்ற புகைப்படகலந்துரையாடல் தளங்களும் அத்துடன் அவர்களுடன் இணைந்த தளங்களான wikis, Encyclopdia Dramatica போன்ற தளங்களுடன் உலகின் பல்வேறுபட்ட கலந்துரையாடல் தளங்களும் இந்த அனோன் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன. இவை அனைத்தும் நடந்தேறியது 2008ல் ஆகும்._*🤷🏻♂🤷🏻♂
🖥📲🤔 *_இவை இவ்வாறிருக்கு காலம் செல்ல செல்ல இந்த அனோன்கள் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. இக்குழுமத்தின் பெயரில் பல்வேறுபட்ட தாக்குதல்கள் இணையம் எங்கும் பரவிக்கிடந்தது. அனோன்கள் குழுவாக இணைந்து செயற்படுவதற்கு ஓர் முக்கிய இடமாக இருந்தது Internet Relay Chat rooms இந்த அரட்டை அறைகளின் மூலமாக தங்கள் கணனிகளையும் Ddos Attack வலைப்பின்னலில் இணைத்து பலரும் பல்வேறுபட்ட பெரிய தளங்களின் தாக்குதல்களுக்கு வலுச்சேர்த்தனர். விக்கிலீக்ஸிற்கு வலுச்சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர்களில் இந்த அனோனிகள் மூன்றாம் இடத்திலிருப்பதாக 2008 ஓர் பரபரப்பு செய்தியினையும் வெளியிட்டிருந்தது CNN._*🤷🏻♂🤷🏻♂
🌎🤔 *_சரி. இவ்வாறு உலகினையே தங்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துக்கொண்டிருந்த இந்த அனோன்கள் குழுமத்தின் கட்டமைப்பு எவ்வாறு என்று பார்த்துவிடலாம். குறிப்பாக சொல்லப்போனால் இங்கு தலைவன் என்று யாரும் இல்லை. யார் வேண்டுமானாலும் அங்கத்தவராகலாம். உதாரணமாக ஓர் தனிநபர் IRC அரட்டையினில் தான் FBIயின் தளத்தினை தாக்கவிருப்பதாக கூறி ஓர் அறிக்கையினை வெளியிடும் பட்சத்தில் அந்த அறிக்கை சரி என்று நினைப்பவர்கள் குறித்த நபருடன் இணைந்து அந்த தளத்தினுாடக தங்களினை தொடர்புபடுத்திக்கொண்டு தாக்குதலை தொடுக்கலாம். இவ்வாறு தான் ஆரம்பித்தன அனேக தாக்குதல்கள். ஆனால் தற்போது அனோன்கள் தங்களுக்கு என்று ஓர் இணையத்தளத்தினையும் அத்துடன் தங்கள் தாக்குதல்கள் மற்றும் அறிக்கைகளினை வெளியிடுவதற்கு என்று தனியாக ஓர் தளத்தினையும் கொண்டிருக்கின்றார்கள். டிவிட்டரிலும் நீங்கள் இவர்களினை தேடிப்பார்கலாம்._*🤷🏻♂🤷🏻♂
No comments:
Post a Comment