🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :23.03.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*இருண்ட இணையமும், உலகத்தை ஆட்டிப்படைக்கும் Anonymous அனானிமஸ்களும்.*
🌑🙆🏻♂🙆🏻♀📛😰🌑🙆🏻♂🙆🏻♀📛😰🌑
*_💝பாகம் -2⃣💝_*
🖥📲 *_முகப்புத்தகம் தொடக்கம் யுடியுப் வரை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இவர்களின் ஆதிக்கம் இருக்கின்றது. முகப்புத்தகத்தில் இவர்களுடைய பக்கத்தில் குறித்த அளவிற்கு மேல் வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை சமாளிக்க முடியாமல் முகப்புத்தகம் திணறிப்போய் நிற்கின்றது. இது வரைக்கும் இந்த அனோகள் பல்வேறுபட்ட பெரும் நிறுவனங்களினுடைய வலையமைப்புக்கள் மற்றும் இணையத்தளங்களினை சேதப்படுத்தியிருக்கின்றார்கள். பல கோடி நட்டத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். பல வியாபார வர்த்தக நிறவனங்களுக்கு இவர்கள் வில்லன்களாக இருந்தாலும் பலருக்கு இவர்கள் நாயகர்கள் தான்._*🤩
🖥📲🌑 *_அனோனிகள் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கின்றார்கள். குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இவர்களினுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன. Anonymous Srilanka பற்றி நான் இங்கு கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த குழுவினர் தான் இலங்கையில் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் அதிகமான இலங்கை அரசுக்கு சொந்தமான இணையத்தளங்களினை தாக்கியளித்திருந்தார்கள். தாக்கியளித்தது மட்டுமன்றி தளத்தினுடைய பல முக்கிய தகவல்களினையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இலங்கை அரசின் கடற்படை,காலாட்படைகளின் தளங்கள் உட்பட பல முக்கிய தளங்கள் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றன. அதுமட்டுமல்லாது இலங்கையின் இணையத்தள மற்றும் தொலைபேசி சேவைகளை வழங்கும் டயலொக்,மொபிரெல்,சன்ரெல், சீ லங்கா ரெலிகொம் ஆகியவற்றின் சர்வர்கள் மேலும் இவர்கள் தாக்குதலினை தொடுத்திருக்கின்றனர். அதற்கான விபரங்கள் உங்கள் பார்வைக்கு👇🏻_*
👉 *_Sri Lanka's Military - Army.LK_*
👉 *_University of Colombo Sri Lanka_*
👉 *_Sri Lanka's National Telecom Provider's SLT.LK_*
👉 *_Sri Lanka's Largest Mobile Provider Dialog_*
📺📡🧐 *_ஊடகங்களினுடைய பார்வை இந்த அனோனிகள் மேல் எவ்வாறிருக்கின்றது? கடந்த 26 ஜீலை மாதம் 2007 ஆண்டு KTTV FOX 11 NEWS தொலைக்காட்சி இந்த அனோனிகள் பற்றிய ஓர் ஆவண தொகுப்பினை ஒளிபரப்பியது. அதிலே முன்னர் பிரபலமாக இருந்த MYSPACE சமுக வலைத்தளத்தினில் ஓர் பயனருடைய கணக்கு ஏழு தடைவகளுக்கு மேல் தாக்குதலுக்கு உள்ளானது. அது மட்டுமல்லாது அவருடைய கணக்கிலிருந்து அவருக்கும் அவருடைய நண்பர்கள் தொண்ணுாறு பேருக்கும் ஓர் வைரஸ் நிரலி அனுப்பபட்டதாகவும் அதில் அவருடைய இரண்டு நண்பர்களின் கணனிகள் சேதமாக்கப்பட்டதாகவும் அந்த பாதிக்கப்பட்ட பயனர் குறித்த தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்திருக்கின்றார். இந்த தாக்குதலுக்கு மூலகாரணம் இந்த அனோனிகள் குழுவே என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதே போன்று உலகின் பல்வேறுபட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இந்த அனோனிகள் பற்றிய செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதிலே அல்ஜசீரா போன்றவை இந்த அனோனிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டமை கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்._*🧐🤷🏻♂🤷🏻♂
🖥📲📺💮 *_குறிப்பாக அனோனிகள் இதுவரை நடத்திய தாக்குதல்களுக்கு பல்வேறுபட்ட பெயர்களினை இட்டிருந்தார்கள். இவர்களை திரும்பிப்பார்க்க வைத்தது இவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை. 📑ஆம். நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி முகப்புத்தகத்தினை முற்றுமுழுதாக தாங்கள் இணையத்தில் இருந்து அழித்தொழிக்கப்போகின்றோம் என்று ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தார்கள். இதனால் தான் பலரும் ஐயோ எமது முகப்புத்தக கணக்கும் இல்லாமல் போய்விடுமே என்று இந்த அனோனிகளின் நகர்வினை உற்று நோக்கத்தொடங்க அவர்கள் இதனை சாதகாமாக பயன்படுத்திக்கொண்டு Occupy wallstreet என்ற தாக்குதலினை நடத்தப்போவதாக அறிவித்தார்கள். அதுவும் வெற்றியளிக்கவில்லை. அதனை தொடர்ந்து சில நாடுகளின் அரசுகள் மேல் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தார்கள். இவ்வாறு அனோனிகள் தங்கள் பல்வேறுபட்ட தாக்குதல் அறிவித்தல்களை மேற்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் குறித்த நாளில் குறித்த தாக்குதல் நடத்தப்படாமல் போவது தான் பலருக்கு ஏமாற்றமளிக்கின்றது. கடைசியாக அவர்கள் வெளியிட்டிருக்கும் தாக்குதல் அறிவித்தலானது Torontoவுக்கு எதிரானதாகும். ஆம். ரொறன்ரோவினை அவர்கள் இணையத்திலிருந்து நீக்கப்போவதாக கூறியிருக்கின்றார்கள்._*🧐🤷🏻♂🤷🏻♂
🖥📲📺😰 *_இவ்வாறு பலருக்கும் பல நாடுகளுக்கும் தண்ணி காட்டிய இந்த அனோனிகள் குழுத்திற்கு அப்பப்போ சில அடிகளும் விழுந்திருக்கின்றன. ஆம். இந்த அனோனியின் பெயரில் தாக்குதல் நடத்திய பலர் பல நாடுகளில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக, டச்சு தேசத்து பொலிசார் டிசம்பர் மாதம் 2010ம் ஆண்டு ஓர் 16 வயது மதிக்கத்தக்க சிறுவனை கைதுசெய்தார்கள். பேய்பல்,வீசா போன்றவற்றின் மீது Ddos தாக்குதல் நடத்தியமைக்காக அவன் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இத்தாக்குதானது விக்கிலீக்ஸிற்கு வரும் நிதியினை பேய்பல் மற்றும் வீசா நிறுவனத்தினர் ஏற்க மறுத்த காரணத்தினால் விக்கலீக்ஸிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அனோனி தரப்பிலிருந்து கருத்துவெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்க FBIஇனால் 40க்கும் அதிகமான பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன இந்த அனோனி குழும அங்கத்தவர்கள் மீது. ஆனால் உண்மை என்னவென்றால் அமெரிக்க அரசு பிடியாணை எதனையும் பிறப்பிக்கவில்லை. மாறாக ஓர் அறிக்கையினையே வெளியிட்டிருந்தார்கள் அதாவது இந்த அனோனி குழுமத்துடன் சேர்ந்து Ddos Attackல் ,ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குத்தால் செய்து 10 வருடத்திற்கும் அதிகமான சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று பிருத்தானியாவில் ஐந்து சிறுவர்களும் ஓர் வாலிபரும் கைதுசெய்யப்பட்டார்கள் இதே ஜனவரி மாதத்தில். இவர்களும் அனோனிகளின் பெயரின் Ddos Attack செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் 15 தொடக்கம் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜீன் மற்றும் ஜீலைமாதங்களில் அவுஸ்ரேலியா ஸ்பெயின் மற்றும் ரேக்கிஸில் பலர் இந்த அனோனிகள் பெயரில் வங்கிகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்களின் இணையத்தளங்களின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டார்கள். எது எவ்வாறு இருப்பினும் இந்த அனோனிகள் தங்கள் தாக்குதலினை தொடர்ந்து நடத்திய வண்ணமே தான் இருப்பார்கள்._* 💮😰
No comments:
Post a Comment