🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :23.03.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*இருண்ட இணையமும், உலகத்தை ஆட்டிப்படைக்கும் Anonymous அனானிமஸ்களும்.*
🌑🙆🏻♂🙆🏻♀📛😰🌑🙆🏻♂🙆🏻♀📛😰🌑
*_💝பாகம் - 3⃣💝_*
🌎🧐💮 *_பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பின் இணைய தொடர்புகளையும், கணக்குகளையும் தகர்த்தெறிவதே தங்களது முதல் நடவடிக்கை என நவம்பர் 2015ல் 'அனானிமஸ்' அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்._*🛑⭕
🧐💮🛑⭕ *_முதல்கட்ட நடவடிக்கையாக கடந்த செவ்வாய்கிழமை ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 900 பயனாளர்களை டுவிட்டரிலிருந்து துரத்தியடித்தனர்._*⭕🛑
🛑⭕💮 *_அனானிமஸ் அமைப்பினரின் இந்தத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும், இணைய உலகை எங்கள் வசமாக்குவோம் என்றும் ஐ.எஸ். அமைப்பினர் சவால் விட்டனர். இதைத்தொடர்ந்து 'அனானிமஸ்' போராளிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை முற்றிலுமாக முடக்கினர்._*🧐💮⭕
🖥📲💮⭕ *_பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் துடிப்புடன் செயல்படும் அனானிமஸ் அதர்மத்தை கண்டிக்க எப்பொழுதுமே தயங்கியதில்லை.📛 அனானிமஸ் குழுமம் வழங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனமான ஸ்ட்ரட்போர் அமைப்பின் கோப்புகளை அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பொழுது அந்த வலைப்பக்கத்தினை பார்வையிடும் பொழுது நன்கொடை கேட்டு விளம்பரங்கள் வந்த பின்னர் கோப்புகள் தெரியுமாறு விக்கிலீக்ஸ் வெளியிட்டதும், பணம் செலுத்தி கோப்புகளைப் பார்க்கச் சொல்லும் வகையில் இருந்த அவ்விளம்பரங்களை கண்டித்து அனானிமஸ் அமைப்பினர் பொங்கியெழுந்து விட்டனர்._*😰😣
🛑📛💮 *_பின்னர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விளம்பரங்களை நீக்கி விக்கிலீக்ஸ் வெளியிட்டது. ஒன்றுக்குள் ஒன்று என விமர்சிக்கப்பட்ட அனானிமஸும், விக்கிலீக்ஸும் முட்டிக் கொண்டது அனைவராலும் ஆச்சர்யத்துடன் கவனிக்கப்பட்டாலும், நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என நாட்டாமையாக மாறி கர்ஜித்த அனானிமஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது._*🤷🏻♂🤷🏻♂
📛⭕💮 *_சமீபத்திய வருடங்கள் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்த எகிப்து, துருக்கி, துனிசியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சிரியா போன்ற அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விஷயங்களை எவ்வித மட்டுறுத்தலும் இல்லாமல் உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டு முக்கிய பங்காற்றியது அனானிமஸ் அமைப்பு. எவ்வித மட்டுறுத்தலும், பக்கசார்பும் இல்லாத ஊடகங்கள், மக்களிடம் எதையும் மறைத்து வைக்காமல், ஒளிவு மறைவின்றி செயல்படும் அரசாங்கம், முழு சுதந்திரத்துடன் கூடிய இணையம் என்று இவர்களுக்கும், விக்கிலீக்ஸ் அமைப்புக்கும் கிட்டத்தட்ட கொள்கை அளவில் வித்தியாசம் அதிகமில்லை._*🙅🏻♂🙅🏻♂
🖥📲🧐📛 *_அதே போல தங்கள் அட்டகாசங்களை வெளியிட்டு சங்கடத்தில் தவிக்க விட்ட விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏதுவாக விக்கிலீக்ஸ் தளத்திற்கு வரும் நன்கொடைகள் அனைத்தையும் முடக்கிய விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்களின் இணையதள வழங்கிகளை பல மணி நேரம் முடக்கிய தருணத்தில் உலகின் ஒட்டு மொத்த பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது. விக்கிலீக்ஸ் தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசான்ஞ் லண்டனில் கைது செய்யப்பட்ட போது லண்டன் நகரம் குலுங்க அனானிமஸ் குழுமத்தினர் முகமூடி அணிந்து பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் செய்து அசரவைத்தனர்._*😨😱😳
🖥📲🧐 *_இணையத்தில் பெயரிலிகளாக உலா வரும் இவர்களின் புகழ் திக்கெட்டும் பரவக்காரணம் போராடுவதற்கு இவர்கள் எடுத்துக் கொள்ளும் காரணிகளும், அதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் அதிகார மையங்களும் தான். அமெரிக்க அரசு இயந்திரங்கள், உலகின் பெரும்பாலான உளவு அமைப்புகள், மக்களை ஏமாற்றி பெரும்பணத்தில் திளைக்கும் பெரும் நிறுவனங்கள் இப்படி யாரையும் எதிர்க்க இவர்கள் எள்ளளவும் தயங்குவதில்லை. காலையில் மனைவி வீட்டில் போராட்டத்தினை அறிவித்து விட்டு மதிய உணவுக்குத் துணைவி வீட்டில் கை கழுவும் ஏமாற்று வேலைகளை இவர்கள் செய்வதில்லை. இந்த நாள், இந்த நேரம் உங்கள் வலையமைப்பில் உள்நுழைவோம், உங்கள் இருப்பினை இணையத்தில் இல்லாது செய்வோம் என்று சொல்லி அதனை சொன்னபடி செயல்படுத்துவதில் அசகாய சூரர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகபபட்டாளமே இருக்கிறது. எது எப்படியோ அவர்களின் போராட்டம் நியாயமானதாக இருந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம்_*🤷🏻♂💐
🌑🖥📲 *_இருண்ட இணையம் (Dark Web) இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் இன்டர்நெட் என்பது மொத்த இணையதளத்தின் ஒரு சிறு பகுதி தான். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு கடற்கரையில் இருந்து நாம் கடலைக் காண்கிறோம் என்றால் நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலானது நாம் அறிந்திருக்கும் இன்டர்நெட். இவைதான் நாம் பொதுவாக பயன்படுத்தும் தேடுபொறிகளில் (SEARCH ENGINES) பட்டியலிடப்பட்டு இருக்கும். ஆனால் பிரபலமான தேடுபொறிகளான கூகிள், பிங், யாகூ போன்றவற்றின் கண்களுக்குச் சிக்காதவை அந்தக் கண்ணுக்கெட்டிய தூரத்தையும் தாண்டி இருகின்றது. இந்த, பரவலான தேடுபொறிகளில் பட்டியலிடப்படாத இணையதள பக்கங்கள் மற்றும் தகவல்களை டீப் வெப் என்கிறோம். இவை நாமறிந்த இன்டர்நெட்டை விட சுமார் 500 மடங்கு பெரியது._*🧐😨
🖥📲📛 *_இணையம் என்பது தண்ணீரில் இருக்கும் பனிகட்டி போன்றது மேலிருந்து பார்க்கும் போது ரொம்ப சின்னதா இருக்கும் ஆனா தண்ணீருக்கு கீழே பார்த்தால் ஒரு மலையே இருக்கும். நமக்கு தெரிந்த இணையம் முகநூல், டுவிட்டர், இண்ஸ்டாகிராம், யூ - டியூப், கூகுள் இதே போல சில இணையம் மட்டுமே நாம் பயன்படுத்துவது ஆகும் இது இணைய சதவிகிதத்தில் 5% மட்டுமே ஆகும். மீதமுள்ள 95% இணையங்கள் தண்ணீருக்கு அடியிலிருக்கும் பனிகட்டி போன்ற டார்க் வெப் ஆகும்._*🌑🤷🏻♂🤷🏻♂
🌑🖥📲 *_இந்த டார்க் வெப் எதற்காக பயன்படுகிறது என்றால் கள்ளகடத்தல், மாஃபியா கும்பல், போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இந்த இணையமானது சாதாரணமாக பயன்படுத்தமுடியாது. இதற்காக Tor செயலி பயன்படுத்தி மட்டுமே பார்க்க முடியும். இணையதள குற்றங்கள் பல இங்குதான் நடக்கின்றன. பெரும்பாலும் போதைப்பொருள் விற்பனை முதல் கூலிப்படைகள் வரை பல சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் இங்கு நடைபெறுகிறது. இதனாலேயே டார்க் வெப் என்றால் சட்டத்திற்கு புறம்பானதோ என்ற எண்ணமும் சேர்ந்தே ஒட்டிக்கொள்ளும். ஆனால் டார்க் வெப் என்றாலே சட்டவிரோதச் செயல்கள்தான் என்றும் எண்ணிவிட வேண்டாம்._*🙅🏻♂🙅🏻♂
🖥📲📛 *_தற்போதைய இணையதளங்கள் தங்கள் பயனாளர்களின் தகவல்கள் மீது தீராப்பசியுடன் இருக்கின்றன. உங்களைக் குறித்து ஒரு சிறிய தகவலைக் கூட விட்டுவைக்க விரும்புவதில்லை இத்தகைய நிறுவனங்கள். மொபைல் போனில் நீங்கள் எடுக்கும் உங்கள் போட்டோக்களைச் சேமித்து வைக்க எல்லையற்ற சேமிப்பு இடங்களை தங்கள் சர்வர்களில் பிரபல நிறுவனங்கள் தருகிறது என்றால் அது அவர்களின் தொழிலுக்கான முதலீடு. இத்தகைய நிறுவங்களின் பார்வையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு கட்டுப்பாட்டினால் இணையதளத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியாதவர்களும், தங்களிடம் தகவல் தருபவர்களின் அடையாளத்தை மறைமுகமாக வைக்க நினைக்கும் பத்திரிகையாளர்களும்கூட இந்த டார்க் வெப்பை பயன்படுத்துகிறார்கள்._*🤷🏻♂🤷🏻♂
🖥📲🌑 *_பெரும்பாலான டார்க் வெப் தளங்கள் .onion என்று முடிவுறும். இது TOR சேவையின் ஒரு அங்கம். இந்த டார்க் வெப் தளங்களை TOR இன் மற்றொரு சேவையான ஆனியன் பிரவ்சர் (The Onion Browser)மூலமே பயன்படுத்த இயலும். TOR என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, உங்களின் இருப்பிடத்தை IP முகவரி மூலம் தெரியப்படுத்தாமல் ரகசியமாக இணையதளத்தைப் பயன்படுத்த உதவும் ஓர் இணையதள சேவை. இது முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டதே. தங்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் அக்கறை உள்ளவர்கள் பெரும்பான்மையாக TOR சேவையைப் பயன்படுத்துவர். மேலும் சில நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தடை செய்யப்படும் இணையதளங்களைப் பார்வையிட சிலர் பயன்படுத்துவார்கள். TOR சேவை அதன் பயனாளியை ஒரு IP முகவரியுடன் இணைக்காததால் அதன் பயனாளிகள் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டின் பூலோக எல்லைகளுக்குள் அடங்க மாட்டார்கள். சமீபத்தில் அரசு எந்திரங்கள் இணையதளத்தில் உலாவும் பொதுமக்களை உளவு பார்கின்றது என்று எட்வர்ட் ஸ்னோடன் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவுடன் TOR பொதுமக்களின் கவனத்தைப் பரவலாக ஈர்க்கத் தொடங்கியது_*🤷🏻♂😰
🖥📲🌑🧐 *_இந்த டீப் வெப் தளங்கள் பிரபல தேடுபொறிகளில் தேடினால் கிடைக்காது. அல்லது அந்தத் தேடுபொறிகளால் பட்டியலிடப்படாமல் இருக்கும். ஆனால் இத்தகைய டீப் வெப் தளங்களை தேடுவதற்கென்றே சில தேடுபொறிகள் இருக்கின்றன._*🧐🤷🏻♂
🌑🖥📲🧐 *_இந்த இணையத்தை அரசாங்கத்தால் கண்காணிக்க முடியாது. இதை chrome, Firefox, uc, opera போன்ற தேடு தளத்தில் இந்த டார்க் வெப் இணையத்தை இயக்க விருப்பப்பட்டாலும் கூட அவர்கள் கொடுக்கும் லிங்க் மூலமாக மட்டுமே இயக்க முடியும். (எ.கா) ப்ளூ வேல் விளையாட்டானது சாதாரணமான தேடு தளத்தில்(search engine) தேடினால் கிடைக்காது அவர்களே தங்களின் மெயில் அல்லது மெசேஜ்ஞர்க்கு அனுப்பினால் மட்டுமே அதை இயக்க முடியும்._*🤷🏻♂🤷🏻♂😰
🌑🖥📲🧐 *_இதில் வேடிக்கை என்னவென்றால் இதை ஆரம்பித்தது அரசு நிறுவனம் தான் அமெரிக்க ராணுவத்திற்காக உறுவாக்கபட்டது தான் இந்த டார்க் வெப். எல்லாராலையும் இணையத்தில் உள்ளவற்றை கண்காணிக்க முடிவதால் ராணுவம் மற்றும் அரசு ரகசியங்களை பாதுக்காக்கவே இந்த டார்க் வெப் ஆரம்பிக்கபட்டது. ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் இந்த TOR செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அளவிற்க்கு கைமீறி சென்றுவிட்டது._*😰😱
🖥📲🧐 *_இந்த தளத்தில் தான் போதை மருந்து கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. மேலும் கூலிப்படைகளும் இந்த தளத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்க்கு உங்களுக்கு முடிவுரை தொகுப்பாளர்களை கொள்ள வேண்டும் என்று தோன்றினால். இந்த இணையத்தின் மூலமாக காசு கொடுத்து போட்டுதள்ளிவிடலாம். உங்களுக்கு இப்போ ஒரு கேள்வி தோன்றலாம் நாம் காசு கொடுக்கும் போது நம்முடைய வங்கி கணக்கு கண்காணித்து பிடித்து விடலாம் என்று அதுதான் தவறு இதில் பயன்படுத்தும் பணமாணது டாலரோ, ரியாலோ இந்தியன் ரூபாயோ இல்லை இதற்கு பயன்படுத்தபடும் காசு பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனையாகும். பிட்காயின் பயன்படுத்துவதன் மூலமாக அதை கண்காணிக்கவும் முடியாது யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று வெளியேயும் தெரியாது._*👎👎
🖥📲📛 *_இதன் வளர்ச்சி தற்போது எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் அவர்களுடைய இணையத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளனர் என்ன விளம்பரமென்றால் சில பெரிய தலைவர்கள் பெயரை கொடுத்து இவர்களை தவிர நாங்கள் யாரை வேண்டுமானாலும் கொள்ளுவோம் மேலும் ஆறு வயதுக்கு மேலே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கொள்ள்வோம் என்று அவங்களே விளம்பரம் கொடுத்துள்ளனர். இந்த தளம் ஒரு மிக பெரிய மாஃபியாவாகவே நடைபெற்று கொண்டிருக்கிறது._*🧐😰👎👎😔
No comments:
Post a Comment