Tuesday, 13 March 2018

குடியரசு தினம் ஏன் எப்படி வந்தது? எதனால் கொண்டாடுகிறோம், நம் நாட்டிற்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் என்னென்ன


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭  
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                  
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 26.01.2018*_ 🌹
     🌹 _*கிழமை : வெள்ளி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

*உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக்கெல்லாம் தலையாய பிழை தன்னை ஆள்பவனை சரியாக தேர்ந்தெடுக்காததே,*

*பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே குடியாச்சியின் முதல் கடமை.*

*_பிளேட்டோ*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

 *💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

*குடியரசு தினம் ஏன் எப்படி வந்தது? எதனால் கொண்டாடுகிறோம், நம் நாட்டிற்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் என்னென்ன?*
         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

*🇮🇳🇮🇳நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் (சில அரசியல்வாதிகளை தவிர) ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.*🙄😳

*😃🇮🇳சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை உணரமுடிகிறது.*🤥😢

*🙄😏மற்றபடி பலருக்கு- அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.🧐🤷‍♂*

*🏣🏤இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம் இருக்கிறது.*☹😥

*😕☹மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்?*😨🤔

*🤔🤔பள்ளியில் ஆசிரியர்களா?*

*🤔🤔வீட்டில் பெற்றோர்களா?*

*🤔🧐சுதந்திரப் போராட் வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை.*🤦‍♂🤷‍♂

*🤔🧐தமிழ்நாட்டில்,😅*

 *🇮🇳🇮🇳சத்தியமூர்த்தி,* 

*🇮🇳🇮🇳காமராஜ்,*

*🇮🇳🇮🇳வ.உ.சி.,*

*🇮🇳🇮🇳வ.வே.சு. ஐயர்,*

*🇮🇳🇮🇳சுப்ரமண்ய சிவா,*

*🇮🇳🇮🇳பாரதி,*

*🇮🇳🇮🇳வீர வாஞ்சி,*

*🇮🇳🇮🇳கொடி காத்த குமரன்,*

*🇮🇳🇮🇳நீலகண்ட பிரம்மசாரி,*

*🇮🇳🇮🇳வேலு நாச்சியார்,*

*🇮🇳🇮🇳இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.*😥🙏

*🇮🇳🧐இந்தியா அளவில் பார்த்தால்..*👀 

*🇮🇳🇮🇳திலகர்,*

*🇮🇳🇮🇳கோபாலகிருஷ்ண கோகலே,*

*🇮🇳🇮🇳காந்தி,*

*🇮🇳🇮🇳நேரு,*

*🇮🇳🇮🇳பட்டேல்,*

*🇮🇳🇮🇳அம்பேத்கர்,*

*🇮🇳🇮🇳பகத்சிங்,*

*🇮🇳🇮🇳நேதாஜி,*

*🇮🇳🇮🇳லாலா லஜபதி,*

*🇮🇳🇮🇳ஆச்சார்ய வினோபாபாவே,*

*🇮🇳🇮🇳சித்தரஞ்சன் தாஸ்,*

*🇮🇳🇮🇳தாதாபாய் நௌரோஜி..*

*🙄🗣இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடி வாழ்ந்தனர்.*🤺🤼‍♂🤼‍♀

*🤝🇮🇳இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்?.*🤔😢

*👩🏻‍🏫👨🏻‍🏫ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும்.*🧐👍

*😇🤨இந்த ஊட்டம்தான் வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும்.👍 பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு.*🤝💪

*😣😣அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? 🤔🤔*

*🌱🌱வேரில் பழுதுகள் இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்?🤔😩*

*🌀🤴🏻👸🏻நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர்.*😢😩

*🤔🧐இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமையும் ஆகும்.*🤝🇮🇳👍

*🚫🚫ஆங்கிலேயரின் ஆட்சி*🖤

*💺💺ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர்,கடல்வழிப் பயணமாக 1498ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார்.*🛳🛳

*🌳🌴அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர்.*🙈🙉🙊

*🐲🥀அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.*🏕⛺

*🙄😳இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வணிபத்தில் ஈடுபட்டனர்.*📈📊

*🇮🇳🇮🇳இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர்.*🏴🏴

*😱😨நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள்.*😠😥

*👀🤦‍♂குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.*☹😣

*🇮🇳🇮🇳இந்தியா சுதந்திரம் அடைதல்*🕊🕊

*🏴🏴😠ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர்.*🇮🇳👍

*🙄🤝அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது.*🔥💥

*🇮🇳🇮🇳'இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி' என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள்,*🤝

*🇮🇳🇮🇳'மின்டோ-மார்லி சீர்திருத்தம்',*🤝

*🇮🇳🇮🇳'மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்',*🤝

*🇮🇳🇮🇳'காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்',*🤝

*🇮🇳🇮🇳'சட்ட மறுப்பு இயக்கம்',*🤝

*🇮🇳🇮🇳'சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு',*🤝

*🇮🇳🇮🇳'வெள்ளையனே வெளியேறு இயக்கம்',*🤝

*🇮🇳🇮🇳'உப்பு சத்தியாகிரகம்'*🤝

*🙄🇮🇳எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர்.*🏴🏴

*🔚இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.*🇮🇳🎯

*🇮🇳🥁🥁இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்...*🤔

*🌀⬅1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் "பூரண சுயராஜ்யம்" (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*🎀✒

*🌀🎯அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது.*👀🤝

*🌀🎯அதன் அடிப்படையில் 1930ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் முதற்கட்டமாக "🕊சுதந்திர நாளாகக்🕊" கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.*🇮🇳🤝👍

*🇮🇳🕊🕊இந்தியக் குடியரசு தினம்...*

*🇮🇳👀1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது.*🤴🏻👍

*📜🌀ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார்.*🤴🏻👍

*🤴🏻🌀அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.*🇮🇳👍

*🙄🌀அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது.*✒👍

*✒🎯முகவுரை, விதிகள், அட்டவணைகள்,பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.*🇮🇳👍🎯

*🇮🇳🤔குடியரசு என்பதன் பொருள்...*🧐

*🇮🇳🇮🇳குடியரசு என்பதன் பொருள்"மக்களாட்சி" ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது.*😃👍

*👥👀"மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு"என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.*💪👍

*🧐🤨அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான்,இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.*👨‍⚖👩‍⚖🇮🇳

*🇮🇳🕊🥁குடியரசு தினக் கொண்டாட்டம்...*

*🇮🇳🥁🎭இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.*🤹🏻‍♂🤹🏻‍♀

*🇮🇳🥁🎭இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.*🤹🏻‍♂🤹🏻‍♀

*🇮🇳🥁🎭அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.*🤹🏻‍♀🤹🏻‍♂

*🇮🇳🥁🎭அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.*🤹🏻‍♂🤹🏻‍♀

*🇮🇳🥁🎭சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.*🤹🏻‍♂🤹🏻‍♀

*🇮🇳🥁🎭மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.*🤹🏻‍♂🤹🏻‍♀

*🇮🇳🥁🎭இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது.*🤹🏻‍♂🤹🏻‍♀

*🇮🇳🥁🎭சுமார் 100கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.*🤹🏻‍♂🤹🏻‍♀👍

*🇮🇳👀🇮🇳சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.*💪🤝

*🛃🌀சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.*🥁🥁

*👨🏻👱🏻‍♀இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம் வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம்.*💪🤝👍

*🎯 இப்ப சொல்றேன் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்... நல்ல ஆட்சி அமையும் வரை நாம் அடிமையே...*🎯

*🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த் !!!*🇮🇳🇮🇳

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*👑

🥇  *நான் மகான்  அல்ல & கற்றது கால்நடை மருத்துவம்*
🥈 *SP.Vignesh & ஞாலமைந்தன்*
🥉  *Paramesvaran & மகாராஜன்*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*👑

🥇 *நிரூபன்கதிர் & Veera Kumar*
🥈 *பாபு (இசையருவி) & Digital Marketing*
🥉 *வாழ்க வளமுடன்*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤         

🤷‍♂ *கருத்து* 🤷‍♀    
  
*நம் நாடு குடியரசு நாடு, மக்களால் மக்களுக்கான தலைவரை  தேர்ந்தெடுக்கும் நாடு. இதில் அனைத்து மக்களும் தலைவர் ஆகலாம். மக்கள் நினைத்தால் நாளை நீங்க, நான் கூட சட்டமன்றம், பாராளுமன்றம் வரை போகலாம்.*

*இங்கு யார் வேணாலும் பிரதமராகலாம், முதல்வராகலாம். இவையனைத்தும் குடியரசு நாட்டில் மட்டுமே சாத்தியம்.*

*அப்படியாப்பட்ட குடியரசு தினத்தை தந்த, நம் முன்னோர்களை நினைத்தும், நமக்கான அதிகாரத்தை நினைத்தும்  விழாவாக கொண்டாடுவது நம் நாட்டிற்கும் பெருமை. நம் மக்களுக்கும் நிச்சயம் பெருமையே.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்*
*உடையான் அரசருள் ஏறு.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*💜அறிந்து கொள்ளவும்*💜

*தேசபக்தனுக்கு தேசமே குறி.*
*அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.*

*💙தெரிந்து கொள்ளவும்*💙

*தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.*

*💚புரிந்து கொள்ளவும்*💚

*எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

 😎 *குட்டிராஜேஷ்*
 *9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...