🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :18.02.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
👳♂ *உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.*
💐 👳♂ *சுவாமி விவேகானந்தர்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💪 *வலிகளும்,அவமானங்களுமே தான் ஒருவரை சாதிக்க வைத்து சாதனையாளராக்குகிறது.*👍
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*நம்ம கடந்த வந்த பாதையில் உள்ள வலிகள்...*
👣🚶🏻♂😰🤔👣🚶🏻♀😰🤔👣🚶🏻♂😰
😰😴 *நான் எத்தனை பாடுபட்டிருக்கேன் தெரியுமா? வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்திலேயும் துன்பங்கள், அவமானங்கள், வேதனைகள், வலிகள்…. '*😰😴
🤷🏻♂🤷🏻♀ *இப்படி நம்மில் பலர் சொல்கிறோம். இந்த மாதிரி துன்பங்கள், வறுமை, அவமானங்கள் இவற்றிலிருந்து நீங்கள் எதுவும் கற்றுக் கொள்ளவில்லையானால் நீங்கள் உங்கள் வலிகளை வீணாக்குகிறீர்கள் என்று அர்த்தம்*🤷🏻♂🤷🏻♀
😰😲 *வ(ழி)லி ஒவ்வொரு வலியிலும், ஒவ்வொரு புதிய வழிகள் பிறக்கதான் செய்கின்றது.*🤗
😔🤕 *நமக்கு வலி என்பது துன்புறுத்துவது மட்டுமே என நினைக்கிறோம்.*
🤔 *ஆனால் ஒவ்வொரு வலியிலும் தான், ஒரு உத்வேகம் பிறக்கின்றது.*👍
🤗 *நடக்கின்ற விசயங்கள் யாவும் அவை நடந்து தான் ஆக வேண்டும். அதனை முழுமையாக யாராலும் மாற்ற இயலாது.*🙅🏻♂🙅🏻♀
💪 *வலிகளை கடந்து செல்வதில் தான், வாழ்க்கையின் சுவராஸ்யமே அடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரால் ஏற்றுக் கொள்ளும் வலியே இங்கு தரப்படுகின்றது.*👍
🔴🤗 😉 _*இன்றைய முடிவுரைக்கு கடவுளிடமே சென்று கேட்டுவிட்டோம்...*_😉😁😄👇👇👇🔴
🔴 *🙏கடவுள் : ஹலோ.! என்னை கூப்பிட்டாயா..?*
♥ *🤔மனிதன்: கூப்பிட்டேனா? உன்னையா? இல்லையே? யார் நீ?*🤙
🔴🙏 *கடவுள்: நான்தான் கடவுள். உன் பிரார்த்தனை காதில் விழுந்தது. பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.*😊
♥🙄 *மனிதன்: நீ சொல்லுவது சரி. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அது என் மனதுக்கு பிடித்திருக்கிறது.🙂 இப்போது எனக்கு பேச அவகாசமில்லை. வேலையில் மும்முரமாக இருக்கிறேன்.*☹
🔴🙏 *கடவுள்: 🐜எறும்பு கூடத்தான் வேலையில் மும்முரமாக இருக்கிறது.*😇
♥☹ *மனிதன்:🐜எறும்பு ஈயைப் பற்றி எனக்குத் தெரியாது.😏எனக்கு இப்போது உன்னுடன் பேச அவகாசம் இல்லை. வாழ்க்கை மிகவும் அவசரமானதாகி விட்டது.எப்போதுமே அவசரம் தான். எப்போதும் நெருக்கடி தான்.*🤕
🔴🙏 *கடவுள்: உண்மைதான். ஏதாவது செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கை மும்முரம் தான். செயல்பாடு உன்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது. உழைப்பினால் கிடைக்கும் பலன் உனக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. உழைக்கும்போது நேரத்திற்கு அடிமையாகும் நீ, பலனை அனுபவிக்கும் போது அந்த அடிமைத்தனத்தில் இருந்துவிடுபடுகிறாய்.*☹
♥ 😯 *மனிதன்: நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சரிவர புரிவதில்லை. அது இருக்கட்டும். இணையதள உடனடி தகவல் chat-ல் நீ என்னைக் கூப்பிடுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.*😨😳
🙏🔴 *கடவுள்: என்ன செய்வது? நீ நேரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து உதவலாம் என்று வந்தேன். சில விஷயங்களை தெளிவுபடுத்த ஆசைப் பட்டேன். இது இணையதளத்தால் செய்யப்பட உலகம் ஆகிவிட்டது.😊 இணையதளத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் உன்னை இணையதளம் மூலமாக சந்திக்க வந்தேன்.*😊☺
♥☹ *மனிதன்: சரி, என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. ஏன் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?*⁉
🔴🙏 *கடவுள்: முதலில் வாழ்க்கையை அலசி அலசிப் பார்ப்பதை நிறுத்து. வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ரொம்பவும் அலசுவதால் தான் வாழ்க்கை சிக்கலாகிறது.*😇
♥☹ *மனிதன்: நாங்கள் ஏன் எப்போதுமே வருத்தத்தில் இருக்கிறோம்?⁉ சந்தோஷம் என்பதே இல்லையா?⁉*
🔴🙏 *கடவுள்: நேற்று நீ கவலைப் பட்ட நாளை என்பது தான் இன்று – இந்த நாள். இந்த நாளை வாழாமல் நாளையைப் பற்றிக் கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால் வருத்தமே வாழ்க்கை ஆகிவிட்டது.*😊
♥☹ *மனிதன்: ஆனால் வாழ்க்கை என்பதே நிச்சயமில்லாத போது வருத்தப் படாமல் என்ன செய்வது?*⁉
🔴🙏 *கடவுள்: நிச்சயமின்மை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் வருத்தப் படுவது நீ தெரிவு செய்வது.*😊
♥☹ *மனிதன்: நிச்சயமின்மையால் வாழ்வில் எத்தனை வலிகள்……*😔😥😰
🔴🙏 *கடவுள்: வலிகள் தவிர்க்கமுடியாதவை, அதனால் ஏற்படும் துன்பம் தவிர்க்கப்பட வேண்டும்.*😊
♥☹ *மனிதன்: துன்பம் தவிர்க்கப் படவேண்டுமானால் மக்கள் ஏன் துன்ப படுகிறார்கள்?*⁉
🔴🙏 *கடவுள்: வைரத்தை உரசாமல் மின்ன வைக்க முடியாது, தங்கத்தை நெருப்பில் புடம் போடாமல் சுத்தப் படுத்த முடியாது. நல்லவர்கள் வாழ்க்கையில் சோதனைக்கு ஆட்படுவார்கள். ஆனால் துன்ப பட மாட்டார்கள். சோதனைகள் அவர்கள் வாழ்க்கையை வளமாகும். நலிவடையச் செய்யாது.*😇
♥😔 *மனிதன்: இந்த வருத்தப் பட வைக்கும் அனுபவங்கள் எங்களுக்குத் தேவையா?*⁉
🔴🙏 *கடவுள்: ஆமாம். அனுபவம் ஒரு தேர்ந்த ஆசிரியை. முதலில் பரீட்சை வைப்பாள். பிறகு பாடம் கற்றுத் தருவாள்.*😇
♥☹ *மனிதன்: ஆனால் நாங்கள் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக வேண்டும். கவலைகளில் இருந்து விடுதலை அடைய முடியாதா?*⁉
🔴🙏 *கடவுள்: வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் உனக்கு பயன் தரக் கூடியவை. பாடம் புகட்டக் கூடியவை. அவை உன்னைப் புடம் போட்டு உன்னை எல்லா வகையிலும் மேம்படச் செய்கின்றன. மனவலிமை படைத்தவனாக ஆக்குகின்றன. மன வலிமை போராட்டங்களிலிருந்தும், சகிப்புத் தன்மையிலிருந்தும் வருகிறது. உனக்கு பிரச்சினைகள் இல்லாத போது இவை உனக்குக் கிடைப்பதில்லை.*😇💐
♥☹ *மனிதன்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் நாங்கள் எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை.*😴😥😰
🔴🙏 *கடவுள்: நீ உனக்கு வெளியில் பார்த்தால், நீ எங்கே போகிறாய் என்று தெரியாது. 👎உனக்கு உள்ளே பார். வெளியில் பார்ப்பது கனவு காண்பது போல. உள்ளே பார்ப்பது உனக்குள் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கண்கள் பார்வையைக் கொடுக்கும். மனம் விழிப்புணர்வை உண்டாக்கும்.*👍😇💐
♥☹ *மனிதன்: சில சமயங்களில் சரியான பாதையில் போகிறோமா என்பதை விட, சீக்கிரம் வெற்றி பெறவில்லையே என்பது மிகவும் வலிக்கிறது.*😰😔
🔴🙏 *கடவுள்: வெற்றி என்பது பிறர் உன்னைப் பற்றி அறிய உதவும் ஒரு அளவுகோல். திருப்தி என்பது உன்னால் தீர்மானிக்கப் படுகிறது. நீ போகும் பாதையைத் தெரிந்து கொள்ளுவது உனக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கும். நீ திசை காட்டியை வைத்துக் கொண்டு வேலை செய். மற்றவர்கள் கடியாரத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யட்டும்.*😇
♥😰 *மனிதன்: கடினமான நேரத்திலும் நான் எப்படி உற்சாகம் குறையாமல் இருப்பது?*⁉☹
🔴🙏 *கடவுள்: எப்போதும் நீ எத்தனை தூரம் பயணித்து இருக்கிறாய் என்று பார். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்று யோசிக்காதே. உனக்குக் கிடைத்த நல்லவற்றை எண்ணிப் பார். எதையெல்லாம் இழந்தாய் என்று எண்ணாதே.*😇
♥☹ *மனிதன்: நான் எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ அதையே சொல்லுகிறாய். மனிதனின் எந்த குணம் உனக்கு வியப்பூட்டுகிறது?*⁉⁉🤙
🔴🙏 *கடவுள்: கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை.*😇👍
♥☹ *மனிதன்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை எப்படி அடைவது?*⁉🤙
🔴🙏 *கடவுள்: நடந்து போனவைகளைப் பற்றி வருந்தாதே. இன்றைய நாளை தைரியமாக எதிர் கொள்.👍 இன்றைய நாள் நல்ல நாள் என்ற நம்பிக்கை இருக்கட்டும்.👍 எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் வரப் போகும் வாழ்க்கைக்கு உன்னை தயார் செய்து கொள்.*👍😇
♥☹ *மனிதன்: கடைசியாக ஒரு கேள்வி🤨 சிலசமயங்களில் ஏன் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைப்பது இல்லையே, ஏன்?*🤨
🔴🙏 *கடவுள்: பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை. சில சமயங்களில் பதில் ""'இல்லை'"" என்றும் இருக்கலாம்.*😇
♥🤩 *மனிதன்: உனக்கு பல கோடி வந்தனங்கள். உன்னுடன் பேசிக் கொண்டே ஒரு புது நாளைத் தொடங்குகிறேன். ஒரு புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.*😍
🔴🙏 *கடவுள்: நல்லது. நம்பிக்கையை வளர்த்துக் கொள்.*👍💪 *பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே*. *நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல. விடுவிப்பதற்கு.* *பிரச்சினையும் அல்ல, விடை கண்டுபிடிக்க. என்னை நம்பு.* *வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு...!!!!*😇💪👍💐
💖💓 🔰 *நம் வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது நம்மை மாற்றவும் நம்மை சரியான வழியில் நடத்தும் என நம்ப வேண்டும்* 💖👍
💖 *_நம் வலிகள் தான் நம்முடன் சத்தமாகப் பேசி நம்மை நல்வழிப் படுத்தும் ஆசிரியர்கள் ஆவார்கள்_*💖
🔴💟 _*நல்ல விஷயங்கள் நம் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன.👍 ஆனால் கெட்ட விஷயங்கள்தான் நம்மை முட்டிப்போட வைத்து, நம் தவறுகளை நமக்கு உணர்த்தி, நம்மை வளரச்செய்து நம்மை மாற்றவும் செய்கின்றன. 👍நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பருவமும் ஒரு பயனுக்காகவே.👍 இன்றைக்கு நாம் அனுபவிக்கும் இன்னல்கள் நாளைய இன்னல்களை எதிர்கொள்ள நமக்கு உதவுகின்றன.💪👍 அவைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் நம்மை மெருகேற்றுகின்றன.*_🔴💪👍
😇 *வலிகள் நிறைந்த பாதைகளைக் கடந்து சென்ரால் தான் நாம் வலிமையான பக்குவப்பட்டவராக உருவாக முடியும்.*👍
💐 *வலிகளை வீணாக்காதீர்கள்..!!! வலி நல்ல வழியாகும்..!!!*👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🏆🥇🥈🥉 *இன்றைய குழுவில் விவாதித்து முழுமனதுடன் தங்கள் கருத்தை முன் வைத்த அனைவருமே சிறந்த பேச்சாச்சாளர்கள்.*👌👏🤝
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🙌 _*ஒரு கதை சொல்ட்டா சார்*_🙌
🙌👇🙌👇🙌👇🙌👇🙌👇🙌
💑 *ஒரு தம்பதி, அவர்களுக்கு அழகிய கலைப் பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் அதிகம்.😊 ஒரு முறை ஒரு அலங்காரப் பொருட்கள் கடைக்குச் சென்றனர். அங்கு ஒரு ☕தேநீர் கோப்பை அவர்களின் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது. அதைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்த போது அது பேச ஆரம்பித்தது.*😳😨😱
☹ *"""நான் எப்போதுமே இதைப் போல ஒரு அழகிய தேநீர்க் கோப்பையாக இருந்ததில்லை.""""🙅🏻♂🙅🏻♀ முதலில் நான் ஒரு சிவப்புக் களிமண்ணாக இருந்தேன்🤷🏻♀. என்னைக் கைகளால் நன்கு பிசைந்து பிசைந்து தட்டித்தட்டிக் கொடுத்தார் எனது முதலாளி. ""என்னை விட்டுவிடுங்கள்'"""😰 என்று சத்தம் போட்டேன். '"இப்போதைக்கு உன்னை விடுவதாக இல்லை""என்றார்.😞 பிறகு என்னை சக்கரத்தில் வைத்து சுற்ற ஆரம்பித்தார். '""எனக்கு தலைசுற்றல் தாங்கவில்லை, என்னை விட்டுவிடுங்கள்'"" என்று கத்தினேன்.😰 '"இப்போது இல்லை'" என்றார் அவர். பிறகு என்னை கொதிக்கும் உலையில் வைத்தார். கடவுளே..!!! இப்படி ஒரு சூட்டை நான் அனுபவித்ததே இல்லையே..!! ஓ ஓவென்று கதறினேன்.😭 '"என்னை வெளியில் விடுங்கள், வெளியில் விடுங்கள்'"என்று கூப்பாடு போட்டேன். எதற்காக என்னை இப்படிச் சுட வேண்டும் என்று புரியவே இல்லை. என்ன மனிதர் இவர்..!!*🙄😭
🤷🏻♀ *ஒரு வழியாகக் உலையிலிருந்து என்னை எடுத்து வெளியில் வைத்தார். சூடு மெல்லமெல்லக் குறையத் தொடங்கியது. அப்பாடி என்று பெருமூச்செறிந்தேன்.☹ சற்று ஆறியவுடன் என் மேல் வண்ணக் கலவைகளைக் கொண்டு ஓவியம் தீட்ட ஆரம்பித்தார். வண்ணங்களின் வாசனையை என்னால் தாங்கவே முடியவில்லை😰. மூச்சு முட்டியது. '""நிறுத்துங்கள், நிறுத்துங்கள்'"" என்று கெஞ்சினேன். 😩ஊஹூம் அவர் காதில் என் கெஞ்சல் விழவேயில்லை.*😩😫
🤷🏻♀ *மறுபடியும் என்னை உலையில் வைத்தார். முதலில் நான் பட்ட வேதனை அடங்குமுன் இப்படியா??? ஆனால் அந்த சூடு தேவலை போலிருந்தது. இந்த சூடு அதைப்போல இருமடங்கு வேதனையைக் கொடுத்தது.😭😩 கதறினேன். அனல் தாங்க முடியாமல் புழுவாகத் துடித்தேன். துவண்டேன்.😩😫 எனக்குப் புரிந்தது, இந்த வேதனையிலிருந்து எனக்கு விடிவு இல்லை. இனி இப்படி ஒரு துன்பத்தை தாங்கும் வலிமை என்னிடம் இல்லை.😭😫 நான் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தபோது என்னை உலையிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். ஒரு மணி நேரம் கழித்து என்னை ஒரு கண்ணாடியில் பார்க்கச் சொன்னார். பார்த்தேன்.😱😨 வியந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை..!!! நானா??🤭⁉‼ இந்த தேநீர் கோப்பை எத்தனை அழகாக இருக்கிறது.!!‼ இல்லையில்லை நான் எத்தனை அழகாக இருக்கிறேன்...*‼‼😇
😎 *என் முதலாளி சொன்னார்,""'ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள், இத்தனை கஷ்டங்கள் உனக்கு ஏற்படவில்லை என்றால் நீ வெறும் களிமண்ணாகவே இருந்து உலர்ந்து போயிருப்பாய்.🙂 உன்னை சக்கரத்தில் வைத்து சுற்றும்போது நீ கத்தினாய். அப்போது உன்னை நான் விட்டிருந்தால் உடைந்து போயிருப்பாய்.🙂 உலையில் உன்னை வைக்கவில்லை என்றால் நீ இறுகி இருக்க மாட்டாய்.😊 வண்ணக் கலவைகள் உன் உடம்பில் ஓவியமாக மாற உன்னை மறுபடி சுட வேண்டியிருந்தது. நீ இப்படித்தான் ஆக வேண்டும் என்று நான் மனதில் நினைத்தபடி உன்னை உருமாற்றி விட்டேன்'"""😍*.
😎🤩 💖 *இந்த முதலாளி போலத்தான் கடவுளும். கடவுள் நம்மை உருவாக்கும் குயவன். அவர் மனதில் நாம் எப்படி உருவாக வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்படி உருவாகவே நமக்கு வலிகளையும், வேதனைகளையும் கொடுக்கிறார். நம்முடைய பலங்கள், பலவீனங்கள் எல்லாமே அவருக்குத் தெரியும்.*💖😇
😇 💖 _*அவர் கொடுக்கும் வலிகளையும் வேதனைகளையும் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து கற்போம் வாழ்க்கை என்னும் கல்வியை.*_😇💐
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை*
*மாற்றுவா ராற்றலிற் பின்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🔮 *அறிந்துகொள்ளவும்*🔮
*வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.*
🔮 *புரிந்துகொள்ளவும்*🔮
*மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.*
🔮 *தெரிந்துகொள்ளவும்*🔮
*முயர்ச்சி திருவினை ஆக்கும்.*
*பொறுத்தார் பூமி ஆள்வார்*
📡📡📡📡📡📡📡📡📡📡📡
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
📡📡📡📡📡📡📡📡📡📡📡
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment