🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்ச்சி காக*🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :புதன்*🌹
🌹 *தேதி :31.01.2018* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇🤝 _*""'உன் நண்பனை அளவோடு நேசி.... ஒரு நாள் அவன் உன் பகைவனாகலாம்....!!!!👍 உன் எதிரியை அளவோடு வெறு.... ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்...!!!!""""'*_👍🤝😇💐
💐 _*கீதைகூறுவது*_💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
😇🤝 _*தலைமுடி நரைத்தாலும் நண்பர்களுகிடையே உள்ள உன்னதநட்பு என்றும் மாறாது...!!!*_👍💐
😇🤝 _*நட்பு என்பது, காற்றைப் போல்..எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்நட்பு உன்னதமானது...!!!*_👍💐
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
📣 *தலைப்பு*📣
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
*இன்றைய காலத்தில் நட்பின் முக்கியத்துவமும்,சிலரது முகமுடிகளும்??????*
🤝👬👭👫🤝🎭🤝👬👭👫🤝
🤝 _*நட்பு இருவர்க்கு இடையே ஏற்படும் தொடர்புகளில் மிகவும் பெருமை உடையதாகக் கருதப்படுவது நட்பு ஆகும்.🤝நட்பின் பெருமையைச் சங்க காலத்திலிருந்தே நாம் காணமுடிகிறது. """பாரிக்கும் - கபிலருக்கும்"""" இடையே இருந்த நட்பும், """"அதியமானுக்கும் - ஒளவையாருக்கும்"""" இடையே இருந்த நட்பும், """"கோப்பெருஞ்சோழனுக்கும் - பிசிராந்தையாருக்கும்"""" இடையே இருந்த நட்பும் அனைவரும் அறிந்த நட்பு ஆகும்.*_🤝😇💐
🤝 *நட்புன்னா என்னனு தெரியுமா?*🤙
🤝 *நண்பர்களோடு கூத்தடிச்சோம், கும்மாளமடிச்சோம் என்றில்லாமல்,🙅🏻♂ நண்பர்களுடைய இன்பம், துன்பம் அனைத்து விசயங்களிலும் பங்கு கொள்ள வேண்டும்.*🤝👍
🤝 *ஒரு நண்பனோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனா, என்ன ஏதுனு விசாரிப்பது, நேரடியாக சென்று பார்ப்பது, நண்பன் இல்லாத நேரம் அவனுடைய அம்மாவை பார்த்துக் கொள்வது, இப்படி ஏகப்பட்ட விசயங்கள் வரைமுறையில்லாமல் அடங்கியுள்ளது.*🤝😇👍
🤝 *நண்பனுடைய தங்கை, அண்ணன், தம்பி, அக்கா அவர்களது விசேஷங்களில் பார்ட்டி மட்டுமில்லாமல், பந்தி பரிமாறுவது, எல்லா வேலைகளையும் தன் வீட்டு விசேஷமாக நினைத்து அனைத்தையும் பொறுப்பெடுத்து செய்வது.*🤝😇👍
🤝 *வெளிநாட்டிற்கு நண்பன் சென்றால் அவனது குடும்பத்தை நம் பொறுப்பெடுத்து பார்த்துக் கொள்வது, எல்லா நேரமும் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை.🙅🏻♂ அந்த பக்கம் போனா என்ன, ஏதுனு கூட விசாரிச்சிட்டு வரலாம்.* 🤝👍
🤝 *சில பள்ளி, கல்லூரி நட்புக்கள் இன்றளவும் வாட்ஸ் அப் குரூப்களில் பல சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.*😇👍
🤝 *சில நட்புக்கள் ஏனோ தானோவென்று வெட்டி அரட்டை அடிப்பதற்கும், தண்ணீ அடிப்பதற்கு மட்டுமே ஒன்று கூடுவார்கள். இந்ந நட்பால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. 👎🙅🏻♂ஏதோ ஒரு டைம் பாஸ் அவ்வளவு தான்.*🤷🏻♂
🤝 *உனக்கு எந்த நண்பன் சரியானவன் என்று, நீதான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.*🤝👍
🤝 *சில நட்புக்கள் நமக்கு தெரியாமலே, நம்ம மீது அதிக மதிப்பு, மரியாதை வச்சிருப்பாங்க. அவங்களையெல்லாம் தேடி கண்டுபிடித்து, contact லிஸ்ட்ல வச்சிக்கணும்.👍 விசேஷ நாட்களில் தவறாமல் வாழ்த்துக்கள் தெரிவிப்பாங்க.👍 அவர்களையெல்லாம் ஒரு போதும் கைவிட்டு விட கூடாது.*👍🤝
🤝 *சில நண்பர்கள் உன்னை திருத்துவார்கள்.👍 நீ செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவார்கள்.👍 நீ அத செய்யாதே, இதே பண்ணாதேனு சொல்லுவாங்க.👍 அவர்கள் நம்மீது மிக அக்கறையுடன் மிகவும் பாசமாக இருக்கிறார் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.*🤝👍😇
🤝 *நண்பர்களிடத்தில், போட்டுக் கொடுப்பது நிறைய நடக்கும். யார் என்ன சொன்னாலும் நம்பவே கூடாது.*👍🤝
🤝 *எந்த நண்பன் மீது சந்தேகமோ, அவனிடமே சில விசயங்களை நேரடியாக கேட்டு தெளிவு பெற வேண்டும்.*🤝👍
🤝 *பிடிக்கவில்லையென்றாலும், அவன் தவறை சுட்டி காட்டி விலக வேண்டும். அதுவே உண்மையான நட்பு.*🤝👍
🤝 *நண்பன் கண்ணில் தண்ணீர் வரும்போது, நம்மை அறியாமல் நமக்கும் தண்ணீர் வந்துவிடும். யாராவது நம்ம நண்பனை சீண்டினால் பயங்கார கோவம் வரும். நம்மளை யாராவது சீண்டும் போது நம்ம நண்பன் முன்னடி நின்னு சண்டைக்கு நிப்பான். அதுபோல நண்பர்களை, சிறு சிறு பிரச்சனைகளுக்காக யார் விட்டு விலகுறார்களோ அவர்களுக்கே மிகப் பெரிய இழப்பு.*🤷🏻♂
🤝 *நண்பர்கள் கஷ்டப்படும் போது, நிறைய நண்பர்கள் உன் சூழ்நிலை அறிந்து கேட்க மாட்டார்கள். நீதான் அவர்களுக்கு, தானாக உதவ முன் வர வேண்டும்.*🤝👍
😇🤝 *நட்பு கடல் மாதிரி எவ்வளவு வேணாலும் சொல்லலாம்.*🤝😇👍
👫🤝 *ஆண், பெண் நட்பு*👫🤝
👫🤝 *ஒரு பையன் காலேஜ் பிஇ கம்யூட்டர் சயின்ஸ் படிக்கிறான். அவன் எப்பவுமே சின்ன வயசுல இருந்தே கிளாஸ் லீடரா இருப்பவன். கம்யூட்டர் சயின்ஸ் சொல்லவா வேணும். பெண்கள் கொஞ்சம் அதிகமா தான் இருப்பாங்க.*🤷🏻♀🤷🏻♂
👫🤝 *காலேஜ்ல படிக்கிறப்ப எல்லா பெண்களுமே, எல்லா நேரமும், சரியான முறையில் உடை அணிந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் அப்படி, இப்படி இருப்பதுண்டு.*🤷🏻♂🤷🏻♀
👫🤝 *டீன் ஏஜ் வேறு, எல்லா பசங்களும் ஒரே மாதிரி இருப்பாங்கனும் சொல்ல முடியாது. ஆனா லீடரா உள்ளவன் என்ன பண்றான்? அந்த பெண்ணிடமோ அல்லது அந்த பெண்ணுடன் தோழியுடனோ கூறி, அந்த பெண்ணின் உடைய சரி செய்ய கூறுகின்றான்.*🤷🏻♂🤷🏻♀
👫🤝 *இந்த செய்தி, அந்த பெண்ணிற்கோ, அல்லது தோழியின் மூலமோ அப்பெண்ணிற்கு தெரிய வருகிறது.*🤷🏻♂🤷🏻♀
👫🤝 *தற்போது அந்த பெண், தன்னை தவறான கண்ணோட்டத்தில் எண்ணவில்லை என்று எண்ணுகிறாள்.* 🤷🏻♂🤷🏻♀
👫🤝 *ஆண், பெண் பழக ஆரம்பிக்கிறார்கள். அவள் மூலமாக அவளது தோழிகளும், பழக ஆரம்பிக்கிறாங்க. நட்பு தொடர்கிறது.*🤝👫
👫🤝 *கல்லூரி டூர்*🤝👫
👫🤝 *பையன் தண்ணீ அடிக்கிறவன் தான். பேருந்துல செம ஆட்டம் போட்டு, போதையில மட்டையாகுறான். முழிச்சி பாக்குறான். உக்காந்துருக்குற ஒரு பெண்ணோட மடில தலைய வச்சி படுத்துருக்கான். உடனே எந்திரிச்சி சாரி சாரிங்கிறான். அட நீ போதையில இருக்க. இன்னும் கொஞ்சம் நேரம் படுத்து தூங்கு, தெளிஞ்சிடும்னு அந்த பொண்ணு சொல்லுது. அவனை அறியாம கண்ணீர் வருது. தன் அம்மாவோட ஞாபகம் வருது.*👫🤝
👫🤝 *கல்லூரி டூர் என்ஜாய் பண்றாங்க. அந்த பெண் மீது மிகப்பெரிய மதிப்பு வருது. அவனை விட்டு 20 ரூபாய்க்கு பூ வாங்கி கொடுனு சொல்ற. அவன் பணமே வாங்காம வாங்கி கொடுக்கிறான்.*🤝👫
👫🤝 *அதுக்கப்புறம் அந்த மூலமா, எல்லா பொண்ணுக்கிட்டயும் சகஜமா பேச ஆரம்பிக்கிறான். எல்லார் பக்கத்துலயும் உக்காந்துக்குறான். அடிச்சி அடிச்சி கூட விளையாடுறாங்க.*🤝👫
👫🤝 *எந்தவொரு தப்பான எண்ணமும் அவங்களுக்குள்ள இல்ல.*🙅🏻♀🙅🏻♂
👫🤝 *அந்த பெண்ணோட திருமணத்திற்கும் போறான். வாழ்த்துறான். பெண்ணிற்கு குழந்தை பிறக்குது எடுத்து கொஞ்சுறான்.* 🤝👫👍
👫🤝 *ஆனா பாக்குற ஒரு சில ............களுக்கு, இது தவறாகவும், கேவலமாகவும் தெரியுது.*😡😡
👫🤝 *ஆனா அவன்/அவள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை அவர்களிடம் பழகுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, சுத்தி உள்ள சைக்கோவோ, ஈனப் புத்தி உள்ளவர்களோ அல்ல.*😡🙅🏻♂🙅🏻♀
👫🤝 *நட்பா இருக்கும் போது அடிச்சி விளையாடுனிங்களே, மடில படுத்து தூங்குனியே இப்ப அவ புருசனுக்கு நேரா பண்ணு பாப்போம்ங்கிறானுங்க.* 😡😡
😡 *அவனுங்களுகளுக்கு ஒரே ஒரு பதில்*👇
👊 *சின்ன வயசுல நீ பிறக்கும் போது, எப்படி இருந்த, அதே போல இப்ப இரு பாப்போம்😂.*
👫🤝 *சொல்றவன், முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். அதற்காக நல்ல ஆண், பெண் நட்பை இழந்து விடாதீர்கள்.*😇🙅🏻♂🙅🏻♀
👫🤝 *உன் எண்ணங்கள் எப்படியோ, அதுபோலவே உன்னுடைய நட்பும் அமையும்.*🤝👍
*எண்ணங்களில் வேறுபாடு இருப்பின், அந்நட்பு கூடிய விரைவில் துண்டித்து விடும். இதற்கு ஆண், பெண் விதிவிலக்கல.*
👫🤝 *சில பசங்க, பெண் நட்பே இல்லங்கிற விரக்தில கூட, சிலரது பார்வை தவறானதாக இருக்கும்.* 🤷🏻♂🤷🏻♀
👀👀 *அவங்க கண்ணை நொண்டுனா சரியா போயிடும்🤣😂*
🤝👉 *ஒரு நண்பனோட வீட்டுக்கு ஒரு நண்பன் போறான். நண்பனுடைய மனைவிக்கு உடம்பு சரியில்லை. யாருமே பக்கத்துல இல்ல. நண்பனுக்கு போன் அடிக்கிறான். அவன், நான் வெளில இருக்கேன். நீ பாத்துக்கோ கொஞ்சம். இதோ வந்துடுறேங்கிறான்.*
🤝👉 *உடனே பைக்ல உட்கார வச்சி, மருத்துவமனைக்கு கொண்டு போறான். ரோட்ல பாக்குறவங்க பார்வை தப்பா இருக்கு.*😖
🤝👉 *ஆனா நண்பனோட மனைவிய மருத்துவமனைல சேர்த்து வைத்தியம் பாக்குறான். நண்பன், மருத்துவமனைக்கு வந்ததும் நண்பனை கட்டிப்புடிச்சி ரொம்ப தேங்க்ஸ்டானு அழுகுறான்.*
🤝👉 *பார்க்குற பேசுற இடியட்களுக்கு நட்பை பற்றி ஒன்றும் சொன்னாலும் புரிவதில்லை.*😡
😇🤝 *நட்பு என்பது ஒருவர் தெரியாத வேறொருவரிடம் பழகி, அவரைப் புரிந்து கொண்டு இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வதோடு தக்க சமயத்தில் உதவி புரிவதாகும். மேலும், வழி தவறும் பொழுது அன்புடன் இடித்துரைத்து ஒருவரை நல்வழிக்கு இட்டுச் செல்வதே நல்ல நட்புக்கு இலக்கணமாகும்.*🤝😇👍
🤝😇 *நட்பு நிழலைப் போன்றது...!! எங்குச் சென்றாலும் நம்முடனே வரும்...!!*🤷🏻♀👍🤝
😇🤝 *ஒருவரிடம் நாம் நட்பு கொண்டு சந்தர்ப்பச் சூழ்நிலையால் பிரிந்து விட்டாலும் அந்த நட்பு எக்காலத்திலும் அழியலாகாது அல்லது மறக்க முடியாது.*🤝🤷🏻♀👍
😇🤝 *தற்போதைய காலகட்டத்தில், ஒருவரிடம் பணம் மற்றும் பேரும் புகழும் இருக்கும் வரைதான்.🙇🏻♀ அவனிடம் கொள்ளும் நட்பு நிலைத்து இருக்கும்.🙇🏻♀ எப்பொழுது பணம் இல்லாமல் தவிக்கிறாரோ, அவரிடம் கொண்ட நட்பைத் துண்டித்து விடுவார்கள். 🙇🏻♀துன்பக் காலத்தில் கைவிட்டுவிடுவார்கள். இப்படிப்பட்ட செயல் நட்புக்குக் துரோகம் செய்வதற்குச் சமமாகும். சிலர் ஒருவனிடம் நட்பு கொள்வது போல் இருந்து, இறுதியில் அவருக்கு ஏதாவது ஒரு தீங்கு செய்து விடுவர். காரியம் இருக்கும்வரை காலைப்பிடித்துக் கொண்டு, காரியம் முடிந்தவுடன் கண்டும் காணாமல் போகும் பொய்யான நட்பை உடனடியாக விட்டுவிட வேண்டும்.*🙅🏻♀🙅🏻♀🙅🏻♀👍
👬👭👫 🤝 _*இந்த நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர்.*_🤝😇💐
😇🤝 _*உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் ஆனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.*_☹
😇🤝 _*தினமும் நாளிதழ்களில் பார்க்கும் பொது பிரபலங்கள் இந்த நிலைக்கு வர காரணமாக நண்பர்களை குறிப்பிடுபவர்கள் .அதேபோல திருட்டு , கொலை போன்ற பாதக செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதை பார்க்கின்றோம்.😔ஆகவே நட்பு தான் நம்மை நிர்ணயிக்கின்றது பெரும்பாலான நேரங்களில். நண்பனை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம்.*_🤩😇🤝
😇🤝 _*நாம் சந்தோசமாக இருக்கும் நேரம் நண்பர்கள் உடன் இருக்கும்போது மட்டும் தான்.🤩எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகில் இருக்கும் ஒரே உறவு நட்பு மட்டுமே.*_😇🤝💐
😇🤝 _*ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார்.👍 முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். 👍ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார்.👍பெற்றோர்கள், மனைவியைவிட நமது துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 👍தாயிடமும், மனைவியிடமும், தந்தையிடம்கூட ஆலோசனை செய்ய முடியாத பல விடயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறமுடிகிறது.👍சில சந்தர்ப்பங்களில் பிறருடன் மேற்கொள்ளப்படும் நட்பைப் போலவே குடும்ப அங்கத்தவர்களிடையே நட்பார்த்தமான உறவுகள் ஏற்படுவதுண்டு.*_🤝💐
😇🤝 _*உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என பெரியவர்கள் குறிப்பிடுவார்கள்.😊 உண்மையான நட்பின் முன் தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது மனதில் ஏற்படும் அமைதியை அளவிட முடியாது.😊 பிரச்சினைக்குரிய ஒரு விடயத்தை அல்லது தீர்வு காண வேண்டிய விடயத்தை மனதுக்குள் அடக்கி வைத்துக்கொள்வதனால் விமோசனம் கிடைக்கப்போவதில்லை🙅🏻♀ மாறாக மன அழுத்தங்களும், விபரீதங்களுமே ஏற்பட இடமுண்டு.😔உண்மையான நட்புடன் அவற்றைப்பகிர்ந்து கொள்கையில் சில சந்தர்ப்பங்களில் நமக்குக் கிடைக்கும் ஆலோசனைகள் விலைமதிக்க முடியாமல் இருக்கலாம்.🤷🏻♀ தற்போதைய வேகமான நவீன காலத்திலும் நட்பினை கௌரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சில நட்பினை கலங்கப்படுத்தாமலும் இருப்பதில்லை.*😞_
😇🤝 _*மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது.🤩 விந்தையானது.💐 அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது.🙇🏻♀ பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது.👍 பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.👍😇💐 பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும்.*_😇👍💐🤝
🤝👨👩👧👦 _*பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க, அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான்.*_🤷🏻♀🤝😇
😇🤝 _*அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது.🤷🏻♀💐 கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல், தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் ரீதியான குற்றங்கள், கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான்.😞 பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும்,😨😱 கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான்.*_😰😔
👨👩👧👦🤝 🔴 _*எனவே பெற்றோர் பிள்ளைகளுக்குடன் நட்புறவுடன், நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்.*_🔴🤝😇💐
😇💐🤝 *என்றென்றும் நட்புடன், நன்றி💐*
🌺👑🌺👑🌺👑🌺 👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♂*
🤝🤝👌🏆 *KS*🏆👌🤝🤝
🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣
👑 *கலந்துரையாடல்~1*👑
🏆 *@Sasikanth Neelakantan* 👌👏🤝
🏆 *@ஞாலமைந்தன்* 👌👏🤝
🏆 *@🏁ஜான்🔴ழைழா🏁*👌👏🤝
👑 *கலந்துரையாடல் 2*©®
🏆 *@lakshminarayanann 264*👌👏🤝
🏆 *@க.நிருபன்கதிர்*👌👏🤝
🏆 *@Gkias, இசையருவி*👌👏🤝
👌👏 *இன்றைய விவாதத்தில் பங்கு கொண்ட அனைவருமே சிறந்த பேச்சாளர்களே*👌👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
🙇🏻♀ _*இன்றைய காலத்தில், முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன், கூழுக்கு கும்பிடு போடுபவன்… இவர்கள் எல்லாம் , பார்ப்பதற்கு நல்ல நண்பர்களாகவே நம் கண்ணுக்கு தோற்றம் அளிப்பார்கள்.😞 ஆனால் இவர்கள், எந்த நேரத்தில் நம்மை கவிழ்ப்பார்கள் என்று நமக்கே தெரியாது.,😰😓 ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளும் முன், அவனைப்பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.,அவன் மேல் நம்பிக்கையை தெளிவாக உறுதி செய்த பின், அவனை நண்பனாக்கிக் கொண்டால், அது மிகவும் நல்லது. அப்படி நண்பனாக்கிக் கொண்ட பின், அவன் பேரில் ஒருநாளும் எக்காரணத்துக்காகவும் சந்தேகப்படக்கூடாது. ஏனென்றால், அவசரத்தில் நம்பி விடுவதும், தேர்ந்தெடுத்த பின் அவனை சந்தேகிப்பதும், நமக்கு எப்போதும் தீராத துயரத்தை நம் வாழ்வில் தரும். எனவே அவன்மீது உள்ள நம்பிக்கையை நன்கு தெரிந்து கொள்ளப்பட்டபின்தான், நம் ரகசியங்களயும் அவனுடன் பரிமாறிக்கொள்ள வேண்டும்.*_👍
😇🤝 _*நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பது என்பது, மிக மிக அவசியமானது.👍 ஏனென்றால், இந்த நட்பு நம் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கக் கூடியது.*_👍
😰🤝 _*துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோம். அடுத்ததாக உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது..🤝❣ பரஸ்பரம் அன்பை மட்டும் அல்லாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆற்றல் நட்புக்கு மட்டுமே உரிய சிறப்பாகிறது.🤝 ஆனால் பலர் நட்பின் முக்கியத்துவத்தை சரிவர உணர்ந்து கொள்வதில்லை.*_😞
😇🤝 _*இதுநாள் வரையிலும், நண்பர்களே எனக்கு இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது. நட்பு, தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், பால், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.👍 நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.*_🤝😇💐
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்*
*வினைக்கரிய யாவுள காப்பு*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
💞 *அறிந்துகொள்ளவும்*💞
*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.*
*புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.*
💞 *புரிந்துகொள்ளவும்*💞
*வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.*
💞 *தெரிந்துகொள்ளவும்*💞
*உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
👩🏻✈🏹 *_GK_🏹👩🏻✈*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *காளையன் அரசு*
*8072020151*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர்
ReplyDelete