Tuesday, 13 March 2018

வாகனச் சோதனை காவலர்களும், பொது மக்களும்


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :09.03.2018.* 
         🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *எல்லா செயல்களுக்கும், அதற்கான நன்மைகளும், விளைவுகளும், உள்ளன.*

💐 *~சாக்ரடிஸ்*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது.*

*ஆனால், அவரவரின் குறைகள் மங்கலாகக் கூடத் தெரிவதில்லை.*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*வாகனச் சோதனை காவலர்களும், பொது மக்களும்...*
🚔👷🏻‍♀🛵🚗📑🚚🚛🏍👷🏻‍♂📑🚔

🚧 *இத்தலைப்பு ஏன் வைக்கப்பட்டது 🤔*

😔😱 *திருச்சி விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தது.*😔

🧐 *விபத்திற்கு காரணம் பிச்சையெடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆங்காங்கே தற்போது நடைபெறும் ஹெல்மெட் வழக்கு இலக்குகள் தான் விபத்துகளுக்கு காரணம் என்றும் இன்னொரு பக்கம் கூறப்படுகின்றது.*⁉

🧐 *திருச்சி துவாக்குடியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த 3 மாத கர்ப்பிணி பலியானதை அடுத்து பெல் கணேசபுரம் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.*🗣👥👤✋

🛂🛵🚔 *தமிழ்நாடுகளில் உள்ள மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை பிடித்து அபராதம் வசூலிக்க உயர் அதிகாரிகள், ஒவ்வொரு உதவி ஆய்வாளருக்கும் இலக்கு நிர்ணயித்ததே வாகன சோதனையின்போது ஏற்படும் விபத்துகளுக்கும் அன்றாடம் நிகழும் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.*🧐⁉

🛵 *இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்து ஏற்படும் தலையில் அடிபட்டுதான், உயிரிழக்கின்றனர்.*😔

⛑⛑ *எனவே, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.*👷🏻‍♂👷🏻‍♀

👷🏻‍♂👷🏻‍♀ *இதற்கு முன்பு எப்போதாவது நடைபெற்று வந்த இந்த சோதனைகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் தீவிரமடையத் தொடங்கியது.*🛵

👷🏻‍♀🛵👷🏻‍♂ *இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கல்யாண் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர், மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.*👷🏻‍♂🛵👷🏻‍♀

👷🏻‍♀🛵👷🏻‍♂ *ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வோர், போலீஸாரின் சோதனைக்குப் பயந்து, வேகமாகச் செல்வதும், போலீஸார் அவர்களை விரட்டுவதும் தொடர் கதையானது.*🧐😡

🔴 🖤 *நடந்து சென்ற பெண் பலி*😔

👷🏻‍♀🛵🔴 *திருச்சி பாலக்கரை பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை கண்டு பயந்து, வேகமாக வண்டியை ஓட்டவே அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் மீது மோதியதில் அப்பெண் இறந்த சம்பவம் சமீப கால உதாரணம்.*😔

👷🏻‍♂🛵 *இதேபோல சமீபத்தில் திருச்சி அரிஸ்டோ பாலத்துக்கு அடியில் போலீஸார் சோதனையில் ஈடுபடுவதைப் பார்த்த இளைஞர்கள் 2 பேர் வண்டியை வேகமாக திருப்பிக் கொண்டு செல்ல முயன்றபோது, சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் உள்ளிட்ட 2 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.*🛵

👷🏻‍♂👷🏻‍♂ *2 மாணவர்கள் மீது தாக்குதல்*🧐😓

⛑🛵👷🏻‍♂ *இதே போன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு வயலூர் சோதனைச்சாவடியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேரை பிடித்த போலீஸார், அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.😡 இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.*😡

👊 *அப்போது போலீஸார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதைத் தொடர்ந்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து பிரச்சினைக்குக் காரணமான காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.*😡

🛵🤰🏻 *இந்நிலையில் தான், தஞ்சாவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு தனது 3 மாத கர்ப்பிணி மனைவி உஷாவுடன் வந்த ராஜா என்பவரை நேற்று முன்தினம் இரவு நிற்காமல் சென்றதாகக் கூறி போக்குவரத்து ஆய்வாளர் அவரைத் துரத்தி சென்ற சம்பவத்தில், உஷா மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.*😔

😡👥👤 *இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் திருச்சி - தஞ்சாவூர் சாலை போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 6 கி.மீ தொலைவுக்கு வாகனப் போக்குவரத்து நடைபெறாமல் துவாக்குடி பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. இநிலையில், இரவு 11 மணியளவில் தடியடி நடத்தி பொதுமக்களை போலீஸார் கலைத்தனர். இதில், பொதுமக்கள் 15 பேர் காயமடைந்ததாக கணக்கு காண்பிக்கப்படுகின்றது (ஆனால் நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது) .*😡

😡👊 *போலீஸாருக்கும் காயம் எனத் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரின் வாகனங்களை கல் வீசித் தாக்கியதாக சிலரைப் போலீஸார் பிடித்துச் சென்றனர்.*👊

✅ *தினமும் 50 வழக்குகளைப் பதிவு செய்ய இலக்கு?*

😓🧐 *முன்னடிலாம், டாஸ்மாக் கடைகளில் சாராயம் விற்பதற்கும், தமிழ்நாட்டினை எந்த அளவிற்கு வருடா வருடம் சொரண்ட வேண்டும், இன்னும் எவ்வளவு இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றலாம்,  என்பதற்கு தான் இலக்கு வைத்தார்கள்.* 😡👊

😡👊 *தற்போது மக்களிடம் பிச்சையெடுத்து, தன் குடும்பத்தின் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், அரசாங்கத்தின் தேவையினை (இலக்குகளை) ஈடு கட்டவும் இதுபோன்ற அநாகரிக செயல்கள் அரங்கேறுகிறது.*👊

😡👊 *அரசாங்கத்தின் தேவையினை ஈடு கட்ட, அது என்ன? எதனால்?*⁉⁉

😡👊 *உங்களுக்கு (மக்களுக்கு) போடுற (இலவச, மானியம்) பிச்சைகளை ஈடு கட்டவே, உங்களிடம் அபராதம் என்ற பெயரில் பறிப்பது.*

🤜 😡 *இதுல ஒண்ணு நல்லா மக்கள் புரிஞ்சிக்கணும். நம்ம இன்சூரன்ஸ், லைசன்ஸ், புகை சான்றிதழ், எல்லாத்தையும் ஒழுங்கா கட்டுனா, அதுல வர வரிய வச்சிக் கூட நமக்கு (இலவசம்) பிச்சை போடுவாங்க. இல்லைனா அபராதம்ங்கிற பேர்ல் கட்டணும்.*🤛

😡👊 *ஆக மொத்தம், நம்ம எதாவது ஒரு ரூபத்துல கொடுத்து தான் ஆகணும். அப்பதான் அரசாங்கமே ஓடும்.*😡👊

🧐🚔 *ஒவ்வொரு காவல் உதவி ஆய்வாளரும் தினமும் ஹெல்மெட் மற்றும் கார் சீட் பெல்ட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுவோர், ஆவணங்கள் இன்றி வாகனத்தை ஓட்டிச் செல்வோர், மது அருந்திச் செல்வோர் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 50 வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டுமென உயரதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.*🧐

✅🚔 *இந்த உத்தரவு தான் போலீஸாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.*🚔🧐

🧐🚔👷🏻‍♂ *மாவட்ட காவல்துறையில் ஹெல்மெட் வழக்குகளில் இலக்கை எட்டாத சில உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.*🧐

✅💯😡 *எல்லாத்துக்குமே காரணம் தலைமை. நம்ம தேர்ந்தெடுத்த அரசாங்கம் தான். அவர்கள் சொல்வதை இவர்களும் தனக்கு ஒரு பங்கு வைத்து வசூலிப்பார்கள்.*😡👊

🚔🧐 *போலீஸாரின் இந்த கெடுபிடிகள் காரணமாக நாள்தோறும் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து மத்திய மண்டல காவல்துறை ஐஜி வரதராஜு, எக்காரணம் கொண்டும் இலக்கு வைத்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தார்.*🗣

🤦🏻‍♂🤦🏻‍♀ *கோடு போடச் சொன்னா, ரோடே போடுவானுங்க. ரோடு போட சொன்னா, இருக்கிற காசை அமுக்கிறவானுங்க. பிளடி பக்கர்ஸ்*😏🤨🤪

😡👊 *ஆனாலும், ஐஜியின் உத்தரவை மாநகர மற்றும் மாவட்ட போலீஸார் முறையாக கடைபிடிக்கவில்லை என்பதற்கு திருவெறும்பூரில் நடைபெற்ற சம்பவமே பெரும் சாட்சியாக அமைந்துவிட்டது.*😔

😡👊🧐 *இதுபோன்ற துரத்தி பிடிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் போகின்றது.*😔

😡👊😡 *யார், யாரை துரத்தி பிடிக்குமோ அவர்களை முறையாக வழியனுப்பி வைத்து, ஒண்ணும் தெரியாத அப்பாவிகளிடமும், எதையாவது நொண்டி சாக்கு சொல்லி பணம் பறிக்கும் தந்திர நரிகள் கூட்டம்.*😡👊😡

🤦🏻‍♂🤦🏻‍♀ *எல்லா ஆவணங்களும் இருந்தாலும், தம்பி ஹெல்மேட் கேஸ் தான்பா 100 ரூபாய் போட்டுட்டு போப்பா என்பார்கள்.*🤦🏻‍♀🤦🏻‍♂

🤦🏻‍♀🤦🏻‍♂👊 *நம்மை விட கொஞ்சம் உயரமான அதிகாரிகளாக இருந்தால் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை கண்ணால் எண்ணிவிட்டு அதற்கு தகுந்த வழக்கு பதிவார்கள்.*😡👊

🤦🏻‍♀🤦🏻‍♂ *இதில் வழக்குகள் பதிவதற்கும் இரண்டு புத்தகங்கள் உள்ளதாம். ஒண்ணு டூப்ளிகேட், இன்னொன்று ஒரிஜினல்.*🤦🏻‍♀🤦🏻‍♂😡

😡🤦🏻‍♀🤦🏻‍♂ *ஒண்ணு ஒரிஜினல் கவர்மெண்ட் புக், இன்னொன்று டூப்ளிகேட் குடும்ப செலவு புக்.*👊😡

😡👊😡 *இதில் சில மனசாட்சி பார்த்து வழக்கு போடும் அதிகாரிகளும் உண்டு. எதாச்சும் ஒரு கேஸ் போட்டுக்கப்பா. Drinking போட்டா 2500, லைசன்ஸ் போட்டா 300, இன்ஸ்சூரன்ஸ் போட்டா 500, ஹெல்மேட் போட்டா 100, எது வேணும் நீயே சூஸ் பண்ணுபா என்பார்கள்.*🤦🏻‍♀🤦🏻‍♂

🤦🏻‍♀🤦🏻‍♂ *நம்ம ஆளும் வெட்கமில்லாம😡, ஹெல்மேட் போட்டுக்கோங்க சார் என்று 😃😃😃 100 ரூபாய் கொடுத்துவிட்டு,  நல்ல போலிஸ்சா இருக்காருடா என்று பெருமை பேசுபவர்களும் உண்டு.*🤦🏻‍♀🤦🏻‍♂

🤦🏻‍♀🤦🏻‍♂😡 *நமக்கு ஏன் உரைக்கவே மாட்டேங்குது. நம்ம எல்லா ஆவணங்களும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். யார், என்ன பேப்பர் கேட்டாலும் அவர்கள் மூஞ்சில் தூக்கியெறிய வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை.*😡👊

😡🤦🏻‍♀🤦🏻‍♂ *இன்று நம் நாட்டில் அதிக அளவிலான வாகனங்களே சரியாக இல்லாமல் இருக்கிறது.....இதில் அதற்கு எடுக்கப்படும் ஆவணம் மட்டும் சொல்லவா வேணும்........ வண்டிகளில் சரியான முறையில் எல்லா ஆவணங்களும்  இருப்பதில்லை என்றே அனைத்து புள்ளிவிபரங்களும் கூறுகின்றது.*😡👊

😡👊 *சரியான ஆவணங்கள் இல்லாமல் 100, 200 கேட்டா கொடுத்துக்கலாம், தெரிஞ்ச ஆளு தான் இருப்பாங்க பாத்துக்கலாம் என்ற எண்ணத்திலும் பல பேர் இருக்கிறார்கள்.*👊😡

😡👊 *பலர் இதற்காகவே பல குறுக்கு வழிகள் (போலீஸ் நடமாட்டம் இல்லாத வேற ரூட்), வைத்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்களாக இருக்கின்றது.*🤦🏻‍♀🤦🏻‍♂

😔😓 *ஒரு சில நல்ல அதிகாரிகளும், அநாகரீகமான முறையில் நடந்துக் கொள்ளும் அதிகாரிகளால் கெட்ட பெயர் வருகின்றது என்பதும் ஒப்புக் கொள்ளவே ஆக வேண்டும்.*😰😥

✅✅ *அதிகாரிகளாக இருந்தாலும் சரி, மக்களாக இருந்தாலும் சரி, அவரவர் கடமைகளை சரியாக செய்தால் யாருக்கும், எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியமிருக்காது.*✅✅👍

🔴🙇🏻‍♀🙇🏻‍♂ *இன்றைய காலகட்டத்தில் நல்லது செய்யவும்,நேர்மையாக நடக்கவும்,நல்லவழியில் பயணம் செய்யவே பயமும் சோதனையும் வருகிறது.*🙇🏻‍♀🙇🏻‍♂🔴

🔴💔 *கொலை, கொள்ளை,திருட்டு,தீய வழியில் செயல் படுவது மட்டுமே நேர்மையாக நடக்கிறது....*
*இதுவே தற்பொழுது நாட்டில்  நடந்துகொண்டு இருக்கிறது.*😔😥😰😓🙇🏻‍♀🙇🏻‍♂

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்🎉*
🏅🏆 *சங்கிலிபூதத்தான்*🏆🏅

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🥇 *@⁨Mani.B⁩*

🥈 *@⁨ஆண்டவன் கட்டளை Ak⁩, @⁨ஆனந்தன்⁩*

🥉 *@⁨S.Selventhiran⁩ ,@⁨Bismi⁩, @⁨Thamizhadian⁩⁩, @⁨Syed Basha⁩*

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🥇 *@⁨Kumarb⁩, @⁨siva⁩*

🥈 *@⁨⚫இருட்டு உலகம்⚫⁩,@⁨Thavaa⁩, @⁨வி.சூ.மார்க்கசு⁩*

🥉 *@⁨எழில்மணி⁩, @⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩, @⁨பாலசுப்ரமணியன், @⁨sriramkrm⁩⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

*சில நாட்களுக்கு முன்பு💭💭💭* 

🌀 *பிளாஸ்பேக் (ஆட்டோகிராஃப்)*

🚔 *காவல்துறை ஆணையர் யாரோ கூறியது*

🚔 *போக்குவரத்து போலீசாரும் இரவு, பகல் பாராது, மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல், வாகன புகையினால் ஏற்படும் நச்சுக்காற்றையும் சுவாசித்துக் கொண்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்துகிறோம். விபத்துகளை குறைக்க வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.*

*👆🏻இத பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு?*🤔

*ஒரு சில அதிகாரிகளுக்கு 👇🏼👇🏼👇🏼*

🤷🏻‍♀🤷🏻‍♂ *நீங்க இரவு பகல்ல  கஷ்டப்பட்டு உழைக்கிறதுக்கு தான் சம்பளம் தராங்களே, நாங்க தப்பு பண்ணுனா, அபராதம் போடுங்க. தப்பில்லை. கட்டுறோம்.*

🙅🏻‍♂🙅🏻‍♀ *ஆனா பிச்சையெடுக்காதீங்க.*

🙅🏻‍♂🙅🏻‍♀ *சார், துரத்திட்டு வந்து புடுங்கி திங்குற அளவுக்கு, அவங்க உங்களை விட வெயிட்டா யாரும் வச்சிருக்க போறதில்ல.*😡🙅🏻‍♂🙅🏻‍♀

🤕 *போனா விட்ருங்க சார், ஏதோ அவசரத்துல போவாங்க சிலர். பின்னாடி வண்டியே வராத மாதிரியும், அவங்களை விட்டா, சோத்துக்கு வேற வழியே இல்லாத மாதிரியும், ஒண்ணுமில்லாதவன சேஸிங் செய்து பிடித்து, உங்க மரியாதையை நீங்களே கெடுக்காதீங்க.*🙅🏻‍♂🙅🏻‍♀

😔 *சில பேர் ஹெல்மேட் வாங்க கூட வழியில்லாம இருப்பாங்க. இன்சூரன்ஸ் கட்ட வழியில்லாம இருப்பாங்க. அதையும் கொஞ்சம் புரிஞ்சிக்கணும்ல.*

😡😡 *இருக்கிறவனலாம் செல்யூட் அடிச்சி விட்டுருவிங்க. இல்ல, வாங்குறத வாங்கிட்டு விடுவீங்க.*😡😡

🤦🏻‍♀🤦🏻‍♂ *ஒண்ணுமே இல்லாதவன்கிட்ட கொடு, கொடுனு எங்கிருந்து கொடுப்பான்.*

😡🤦🏻‍♀🤦🏻‍♂ *உங்களை நம்பி வண்டிய கொடுத்தாலும், spare partsஐ கழட்டிட்டு விட்டுறிங்க.*

🤦🏻‍♀🤦🏻‍♂ *நாங்க ஸ்பாட் ஃபைன், உங்கள நம்பி கட்டுறதா? இல்ல லஞ்சம் கொடுத்து நாட்டை கெடுக்கணுமா? இல்ல எஸ்கேப் ஆகி போகிறதா?*

😡😔 *நீங்க நேர்மையான முறைல மனசாட்சியோட நடந்தா, மக்களும் திருந்த ஆரம்பிச்சிருவாங்க.*

😡🙅🏻‍♂🙅🏻‍♀ *வன்முறையை கையில் எடுக்காம, அன்பான முறைல சட்டத்தை பின்பற்றுங்க.*

💐 *நன்றி வணக்கம்*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆   
                   
*செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🤺 *அறிந்துகொள்ளவும்*🤺

*வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.*

🤺 *புரிந்துகொள்ளவும்*🤺

*கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.*

🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺

*ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫

   🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
   *9486552988*🧘🏻‍♂
      
                     👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈
       
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 

😎 *கந்தசாமி-9080669640*

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...