🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 10.03.2018*_ 🌹
🌹 _*கிழமை : சனி*_🌹
________________________________
*📣அறிவோம்📣*
*கல்வி என்பது பிழைப்புக்கு வருவாய் தேடும் ஒரு வழி முறை அல்லது செல்வம் ஈட்டும் ஒரு சாதனம் மட்டும் அன்று. அது மெய்யை தேடுவதற்கும் அறநெறியைப் பயில்வதற்கும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறை"*
*– விஜயலட்சுமி பண்டிட்*
♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*இறக்கி விடுங்கள், விழுந்து எழட்டும், சிந்திப்பதும், சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதும்,தவறுகள் வரும்போது அதை திருத்திக்கொள்ள தயங்காமல் இருப்பதும் இவையனைத்தும் கல்வி மட்டுமே கற்றுதருவதில்லை.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களினால் ஏற்ப்படும் விபத்துக்கு காரணம் யார்? பொறுப்பு யாருடையது?*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*🏫🚌பள்ளி வாகனங்களில் பயணம் பாதுகாப்பானதா?🤔*
*👦🏻👧🏻மாணவர் நலனுக்காக என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இது.*🧐
*🏫🚌பள்ளி வாகனங்கள் சர்வ சாதாரணமாக விபத்துக்களைச் சந்திக்கின்றன. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகின்றன.😓 பயணத்தின் போது மாணவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறி ஆகிவிடக் கூடாது என்ற எண்ணமே இந்த தலைப்பின் நோக்கம்.*🤨👍✍
*🚌🚎பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்த பின்னரே மாநிலம் முழுவதும் பள்ளிகளில் வாகணங்கள் பயன்படுத்தப்படுகிறது.🔬🚎*
*🎭🤔🤔இதன் முக்கிய நோக்கமாக பள்ளி வாகனங்களில் அவசர வழி முறையாக அமைக்கப் பட்டிருக்கின்றனவா?🤷♂ இருக்கைகள், படிகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா?🧐🤷♂ வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா?🤔🤷♂ முதலுதவி பெட்டியில் "காலாவதியான" மருந்துகள் உள்ளனவா? 🤷♂ தீயணைப்பான் கருவி உள்ளதா?🤷♂ போன்ற பல ஆய்வுகள் செய்த பின்னரே பயன்பாட்டுக்கு வருகிறது என்பதை அனைவரும் அறிவோம் இருந்தும் விபத்துக்கள் ஏன் நடக்கிறது ( அதிகளவு ) இவ்வளவு பாராமரிப்பு செய்த பின்னர் ஏன் நடக்கிறது.*😠🙇🏻♂🙇🏻♀
*🔬🧐🚎ஆய்வுகள் எல்லாம் சம்பிரதாயமாக நடத்துவதால் ஒரு பலனும் இல்லை.🤷♂ அக்கறையோடு, கடமையைச் செய்தாலே போதும், ஆய்வு செய்பவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள். (அந்த இடத்தில்)*🤨😠👊
*🏡😃வீட்டில் இருக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோர் பொறுப்பு, பள்ளிகளில்🏫 இருக்கும்போது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு, இதற்க்கு இடைப்பட்ட இடத்தில், போக்குவரத்தில் வேன், பஸ், கால்டாக்சி, ஆட்டோ என பல வாகனங்களில் பயணம் செய்யும்போது யார் பொறுப்பு?*🤔🤷♂🤨
*🎭😳இதில் ஆச்சர்யமான விசயம் என்னவெனில் அரசு பள்ளி மாணவர்களை காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களே அதிகமான விபத்துக்களை சந்திப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.🔬👊 இதை தடுப்பது யார்? அரசா? தனியார் பள்ளி நிர்வாகமா? அக்கறையுள்ள பெற்றோரா? 🤔 வாகன உரிமையாளர்களா?🤔 யாருக்கு அக்கறை இருக்கிறது!🤷♂ யாருக்கு பொறுப்பு இருக்கிறது! யாருக்கு பாசம் இருக்கிறது!*🤨🤔😓
*👨🏻🏫👩🏻🏫😩ஆசிரியர்கள் அடிக்கிறார்கள் அல்லது கண்டிக்கிறார்கள் என குறை கூறுபவர்கள் பள்ளி வாகன கொடுமைகளை கண்டு கொள்ளாதது ஏன்? அல்லது தெரியவில்லையா?*🧐🤷♂
*🙄🤔😭இப்படியொரு தவறு நிகழும் பொழுது நமது கோபம் அந்த நொடி மட்டுமே இருக்கிறது. அடுத்த நொடி எங்கே செல்கிறதென தெரியவில்லை... விபத்து நடந்ததும் பேருந்தை கொளுத்தி கோபத்தை வெளிபடுத்தி கொண்டால் போதுமா..??*😟😏😏
*🚎🚌🤷♂அந்த பேருந்திற்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எத்தனை பேர் போராடி கொண்டிருகிறார்கள்...? 🧐🏴 அந்த பேருந்தின் உரிமையாளரை தண்டிக்க வேண்டும். அவர் இனி பேருந்துகள் வைத்திருக்க தடை விதிக்கவேண்டும் என்று எத்தனை பேர் போராடி கொண்டிருக்கிறோம்... 🏴🤷♂நமது கோபமெல்லாம் அந்த நிமிடம் மட்டுமே... அடுத்து நமது வேலையை பார்க்க சென்று விடுகிறோம். அடுத்து இது போல் குழந்தைகள் பலியாகாமல் இருக்க வேண்டுமல்லவா..??😳🤔 விபத்துகள் நடந்து முடிந்த பிறகு வரும் கோபம் எதற்கு..??😩*
*🏫🚎பள்ளி பேருந்தில் மரணம், பள்ளியை கேட்டால் அது தனியார் வாகனம் எங்களுக்கு தொடர்பில்லை என்பது எவ்வளவு பொறுப்பற்ற பதில். அப்போ அது யார் பொறுப்பு?🤔🤷♂எங்கேயும் அலட்சியம். எதிலும் அலட்சியம்.*👊😠
*🏫🏤🤔🤔பள்ளியின் மீது மட்டும் தவறென்று சொல்ல கூடாது. நமது குழந்தை எப்படியாவது பள்ளிக்கு செல்லவேண்டுமென்று நினைக்கிறோமே தவிர எப்படி செல்கிறதென்று நினைப்பதில்லை.*😏😏
*🙋🏻♂🙋🏻♀நம்மில் எத்தனை பேர் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் எப்படி செல்கிறார்களென்று திடீர் விஜயம் செய்து பார்த்ததுண்டு..??*👀🧐🤷♂
*🤔🏫🏤அல்லது பள்ளியில் ஏதாவது சரியில்லையென்றால் கேள்வி கேட்டதுண்டா..??🤷♂ எல்லாம் நடந்து முடிந்ததற்கு பிறகு கேட்டு என்ன பயன்..?😏 நமக்கு கேள்வி கேட்பதற்கு பயம். 👊 எங்கே பள்ளியிலிருந்து மாணவர்களை நீக்கி விடுவார்களோ என்று...*🤨😓
*🙄🤔🙋🏻♂இது எனது உள்ளத்தின் வெளிப்பாடு.........ஏன் மாணவர்களை தொலைவில் உள்ள பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டுமா? 🤷♂நமது வீட்டருகில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தால் என்ன..? 🤙நமது வீட்டருகில் இருந்தால் நாமே பள்ளிக்கு அழைத்து செல்லலாம் இல்லையா..?? 👍 நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் என்கிறீர்களா...?!😨😰 படிக்கும் குழந்தைகள் எங்கிருந்தாலும் படிக்கும்...🙇🏻♂🙇🏻♀ நாமே பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டும். நாமே அழைத்து வரவேண்டும் என்ற எண்ணமெல்லாம் நம்மிடமில்லை. 🤷♂நாம் பிள்ளைகளை வளர்க்கும் முறை தவறாகவே உள்ளது. குழந்தைகளை ஒரு முதலீடு போல்தான் வளர்த்து வருகிறோம்..*😏👊👊
*😱😰எளிதில் சூறையாடப்படும் உயிர்களின் பட்டியலில் குழந்தைகள்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள்.*📃🤷♂😓
*🌪🔥💦இயற்கைச் சீற்றமோ, செயற்கையான விபத்தோ... 🚑🚨எல்லாவற்றிலும் குழந்தைகள்தான் முதல் இலக்கு. 😓வளர்ச்சி என்ற பெயரில் நம் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் அனைத்துமே குழந்தைகளின் இயல்புக்கு எதிரானதாக இருக்கின்றன.*😭😭
*🤙🏫🏤இன்று கல்வி... நல்ல பள்ளி, நல்ல கல்வி தேடி குழந்தைகள் தொலைதூரம் பயணிக்கிறார்கள். அந்த அவஸ்தையான பயணம் குழந்தைகளின் உயிரையே பறித்துவிடுவதுதான் கெடுமையின் உச்சம்.*😱😰😩
*🚌🚑🏫2009ல் வேதாரண்யத்தில் ஒரு பள்ளி வாகனம் கவிழ்ந்து 9 மாணவர்களும், 1 ஆசிரியையும் உயிரிழந்தார்கள்.*😰😓
*🚌🕳🚑பேருந்து ஓட்டையில் விழுந்து ஒரு மாணவி இறந்தாள். 😓இது போன்று பல சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன உடனடியாக கமிட்டி போட்டு சோதனை எல்லாம் நடத்துகிறார்கள்.👊👊😠 குழந்தைகளின் பாதுகாப்பை நாம் எப்படி கவனிக்கிறோம் என்பதற்கு கும்பகோணம் விபத்து ஒரு உதாரணம்.*🔥🔥🤷♂😓
*🏫🤷♂தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் 30000 க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது இதில் 26000 வாகனங்கள் தனிக்கை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*📃😏🤔🤔🤙
*🧐👊சம்பவங்கள் நடக்கிறபோது சோதனை நடத்தி வாகனங்களைப் பறிமுதல் செய்வதோடு அரசு தன் கடமையை முடித்துக்கொள்கிறது. குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் நமது அரசு துறை மிகவும் பொறுப்பற்ற தன்மையோடு தனது பணியை முடித்துக்கொள்கிறது.*😠👊👊
*🤔🤔😏இதைத் தாண்டி என்ன செய்ய வேண்டும் என்று யாரும் கேட்பதும் இல்லை சிந்திப்பதும் இல்லை. ஐயா இழப்பு எங்கு நடந்தாலும் அது இழப்பு தான்.*😰😓
*🗣🥁பொதுவாக, பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் மீது சமூக அக்கறையுள்ளவர்கள் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுப்பது போல் கல்வித்துறைச் சார்ந்த பிரச்சனை மீதும் கவனம் செலுத்தலாமில்லையா?*🤙🤷♂🥁
*🙄🤔இப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூக சூழ்நிலையிலிருந்து தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ள பெற்றோர்கள் தான் விழிப்புடன் 👀இருக்க வேண்டும், இயங்க வேண்டும்.*👨🏻👱🏻♀🤝🏻👦🏻👧🏻
*🏫🏤ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு, போக்குவரத்து,🚌 காவல்துறை, 🚔கல்வித்துறை அதிகாரி, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஒருவர்,👨🏻🏫 பெற்றோர்களின் சார்பில் ஒருவர் என ஒரு கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து அந்த பள்ளி வாகனம் 🚌மற்றும் அந்த பள்ளிக்கு இயங்கும் தனியார் வாகனங்களை தனிக்கை செய்ய வேண்டும்.*📃✍👍
*🙄🤔🤷♂இதை விடுத்து ஏதாவது விபத்து நேரும்போது மட்டும், விழித்தெழுந்து ஆர்ப்பாட்டம் செய்வது, இல்லாவிட்டால் நமது வேலையை பார்ப்பதுக் கொண்டிருப்பது தேவையற்றது.*👀👊🤙
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
*🏅 R.j* 👏
*🏅 Bismi* 👏
*🏅 ஆண்டவன் கட்டளை Ak* 👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
*🏅 sriramkrm* 👏
*🏅 MKM* 👏
*🏅 வி.சூ.மார்க்கசு* 👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*கருத்து செல்லி எதுவும் மாறப்போவது இல்லைனு நினைச்சாலும், கல்விக்காகப் பெற்றோர் செய்யும் விஷயங்கள் ஏராளம்.*
*அதிலும் பள்ளி வாகனம் அல்லது பேருந்து பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியத்திலும் அவசியமாக இருக்கிறது.*
*வீட்டிலிருந்து எந்த வழியாகப் பள்ளிக்கு வாகனம் செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.*
*அந்த வழியில் ஏற்ப்படும் அசவுகரியங்களை ஆராய்வது பேராபத்தை தடுக்கவல்லது.*
*பெற்றவருக்குகே தெரியும் பாச உலகம், கற்றவருக்கே தெரியும் அறிவு உலகம், உலகமே தெரியாத பிள்ளைகளை கொஞ்சம் கவனத்தில் கொண்டு வழி நடத்துங்கபா.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*தீயவை தீய பயத்தலால் தீயவை*
*தீயினும் அஞ்சப் படும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*🎭 அறிந்து கொள்வோம்* 🎭
*படிப்பது குழந்தை, சுமப்பது தந்தை இருவரையும் அதிகாரம் செய்வது பள்ளி நிர்வாகம்.*
*🎭 தெரிந்து கொள்வோம்* 🎭
*ஓநாயிடம் (பள்ளி)அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.*
*🎭 புரிந்து கொள்வோம்* 🎭
*ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும். எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
🕵♂ *ராமலிங்கம் அங்கப்பன்*
📱 *0060122646502*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *கார்த்திக் ராஜ்பவன்*
📱 *+91 80729 08455*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment