Wednesday, 14 March 2018

சர்வாதிகாரிகள் பற்றி ஓர் பார்வை*

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :27.02.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.*

💐 *ஐன்ஸ்டைன்*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *ஒவ்வொரு காரியத்திலும்,*

*நாம் முடிவைக் கவனிக்க வேண்டும்.*
👍

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*சர்வாதிகாரிகள் பற்றி ஓர் பார்வை*
🧐👮🏻‍♂🕵🏻‍♂👨🏻‍✈🧐👮🏻‍♂🕵🏻‍♂👨🏻‍✈🧐👮🏻‍♂🕵🏻‍♂

🎯 *சர்வ வல்லமையும், சர்வ ஆளுமையும், சர்வ அதிகாரங்களும் அமைந்து விடுகிறபோது அறிவுக்கண் மூடிக் கொண்டு விடுகிறது. அது நியாயங்களைப் பார்ப்பதில்லை. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை. மக்கள் ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைக்க முயற்சி செய்வதில்லை. ஆணவம் ஒன்றே மனம் முழுவதும் வியாபித்து விடுகிறது.*📌

🎯 *ஒரு திட்டத்தைத் தீட்டி, தெளிவாகவும் விலாவாரியாகவும் விவரித்து, அதைச் செயல்படுத்துமாறு அரசின் பல்வேறு துறைகளுக்கும் கட்டளையிடக்கூடிய சாத்தியம் ஒரு சர்வதிகாரிக்கே உள்ளது.*📌

🎯 *இதிலிருந்து நாம் என்ன தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளது என்றால், நாட்டில் நல்ல அரசமைப்பு என்பது பொறுப்பு வாய்ந்த ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருக்கும் சர்வாதிகார ஆட்சி முறைதான்.*📌

🎯 *அந்த ஆட்சிமுறையில்தான், எந்த ஒரு நாகரிகமும் தழைத்திருக்கும். ஒரு நாகரிகத்தைப் பாதுகாத்து, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது அந்த நாட்டின் தலைவரே தவிர, மக்கள் அல்ல.*📌

🤔 *சர்வாதிகாரிகள், சர்வாதிகாரம் அப்படின்னா என்ன?*⁉

🤔 *சர் என்பது மரியாதையுடன் குறிப்பிடப்படும் ஒரு சொல்லாகும். உயர் தரத்திலுள்ளோர், கல்வி கற்பிப்போர் போன்றவர்களை இச்சொல் கொண்டு மற்றவர் கூறுவார்கள். சர் என்பதற்கான சொல்  பெண்களாக இருந்தால் மேடம் என்பதாகும்.*😉

🤔 *முற்காலத்தில் படைத் தளபதிகளுக்கு சர் என்ற இக்கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது.*🤗

🤗 *சர் பட்டம் கூட அரசாங்கத்தின் உயரிய விருதாகக் கருதப்படுகின்றது.*

🕹 *அதிகாரம்*🕹

💢 *குறிப்பிட்ட எல்லைக்குள் செயற்படுத்தக்கூடிய சிறப்புரிமைகள், ஆட்சி செய்பவர்கள் என்று பொருள்.*

♨ *சர்வாதிகாரம்*♨

🤗 *தன் நினைத்ததை குறிப்பிட்ட எல்லைக்குள் செய்ய துடிப்பது சர்வாதிகாரம் ஆகும்.*

♨ *சர்வாதிகாரி*♨

💢 *சர்வாதிகார ஆட்சி செய்பவன் மட்டுமே சர்வாதிகாரி ஆவார்கள். ஆனால் அதை மாற்றியமைத்து கொடுங்கோலன் என்று தமிழ்மொழி வழக்கை மாற்றி விட்டனர்.🤦🏼‍♂🤦🏻‍♀*

🙄🙄 *விளக்கம் இதுவே போதுமானது😴😴😴*

 📛 *சர்வாதிகாரம் என்பதை மிகவும் ஆபத்தான ஒன்றாக வரலாறு சித்தரித்துள்ளது. இந்த உலகத்தில் பல சர்வாதிகாரிகள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அஞ்சாமை, பொருத்தமற்ற தன்மை, வெறுப்புணர்வு ஆகிவற்றை பல அளவுகளில் வெளிப்படுத்தியுள்ளது.*📌

🔥 *கிம் ஜாங்* 🔥

🔴 *இரக்கமற்ற இந்த வட கொரிய சர்வாதிகாரி சமீபத்தில் தான் இறந்தார். அவருடைய ஆட்சி காலமான அந்த 7 வருடங்களில், கிட்டத்தட்ட 2,50,000 பேர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். லட்சக்கணக்கான வட கொரிய மக்களின் பஞ்சத்திற்கு இவரே நேரடியாக பொறுப்பாளியாக விளங்கினார்.*🔴

🔥 *இடி அமின் டாடா*🔥

🔴 *உகாண்டாவை சேர்ந்த இந்த கருணையற்ற சர்வாதிகாரி 1971 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் எண்ணிலடங்கா அரசியல் தாக்குதல்களும், எதிர் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளது. கூடுதல் நீதிமன்றம் சார்ந்த கொலைகள் மூலமாக, நம்ப முடியாத அளவாக கிட்டத்தட்ட 5,00,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்ப்பாளர்கள் மற்றும் ஏற்காதவர்களை அச்சுறுத்த கற்பழிப்பை ஒரு பொது ஆயுதமாக பயன்படுத்தினர். 8 ஆண்டு காலத்திற்கு அவர் ஆட்சி புரிந்தார்.*🔴

🔥 *சதாம் ஹூசைன்* 🔥

🔴 *ஈராக் நாட்டை சேர்ந்த இவரை மிக சுலபமாக உலகத்தில் உள்ள ஒரு மோசமான சர்வாதிகாரியாக சொல்லி விடலாம். இரக்கமற்ற செயல்கள் மற்றும் எண்ணிலடங்கா மோதல்களை தூண்டிவிட்டவர் அவர். கார்ட், அஸிரியன் மற்றும் ஷபாக் ஆகியோர்களை கும்பல் கும்பலாக கொன்று குவித்தார். மற்ற இனத்தினரையும் கூட விட்டு வைக்கவில்லை. அவருடைய ஆட்சி காலத்தில் கொலைகளும், கற்பழிப்புகளும் பரவலாக நடந்தது. குவைத் மற்றும் ஈரானிற்கு எதிராக நடந்த போரில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்கள் உயிரை இழந்தனர்.*🔴

🔥 *ஹிதேகி டோஜோ* 🔥

🔴 *இரண்டாம் உலக போரின் போது ஜப்பானிய ராணுவத்தின் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் தான் ஹிதேகி டோஜோ. வெறும் ஜெனரலாக மட்டுமே இருப்பதால் ஏற்பட்ட அதிருப்தியில், பிரதம மந்திரி, கல்வி மந்திரி, ராணுவ மந்திரி மற்றும் வர்த்தக மந்திரி போன்ற சில இலாக்காக்களில் தன் மூக்கை நுழைத்தார். அண்டை நாட்டின் மீது இடைவிடாமல் நடத்திய தாக்குதல்களால் கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் இறந்தனர்.*🔴

🔥 *பெனிட்டோ முசோலினி*🔥

🔴 *இத்தாலிய அரசியல்வாதி, பத்திரிகையாளர், தேசிய பாசிஸ்ட் கட்சியின் தலைவர் 1922 முதல் 1943 வரை நாட்டின் பிரதமராக இருந்தார். அவர் 1925 வரை அரசியலமைப்பை ஆட்சி செய்தார், ஜனநாயகம் பற்றிய அனைத்து போலித்தனத்தையும் கைவிட்டு, ஒரு சட்டபூர்வ சர்வாதிகாரத்தை நிறுவினார். Il Duce (தலைவர்) என அழைக்கப்படும், முசோலினி இத்தாலிய பாசிசத்தின் நிறுவனர் ஆவார்.*🔴

🔥 *மென்கிஸ்டு ஹைலே மரியம்* 🔥

🔴 *மன்னிக்க முடியாத எதியோப்பிய சர்வாதிகாரியான இவர் வாழ்ந்த காலத்தில், மிகவும் பயங்கரமானவராக பார்க்கப்பட்டவர் இவர். தனக்கு எந்த மாதிரியான எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், உடனே போர் தொடுப்பார். அதிகாரத்திற்கு வந்த அடுத்த நொடியே கிட்டத்தட்ட 15 லட்சம் பேர்களை கொன்று குவித்துள்ளார். இவர் ஆட்சி காலத்தில் கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் பரவலாக நடந்தது. கெபெல் மக்களை நடுத்தெருவில் கொல்ல உத்தரவிட்டார். தங்கள் பிரியமானவர்களின் உடலை பெறும் குடும்பத்தார்களிடம் வரி வசூலித்தார்.*🔴

🔥 *ட்ஸர் நிக்கோலாஸ் லின்ட்*🔥

🔴 *இரக்கமற்ற இந்த ரஷிய மன்னர் நாயை போலான சாவை சந்தித்தாலும், கிட்டத்தட்ட 30 லட்ச ரஷியர்களை கொன்று குவித்துள்ளார். வரலாற்றில் அவர் அப்போதும் சரி இப்போதும் சரி மிக மோசமான சர்வாதாரியாகவே இருந்துள்ளார். அவரை ப்ளடி நிக்கோலாஸ் என்று தான் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.*🔴

🔥 *ஜோசப் ஸ்டாலின்* 🔥

🔴 * புரட்சி நாயகர்களில் '""ஜோசப் ஸ்டாலின்'"" தனிப் பெருமை பெற்று விளங்குகிறார். அவர் மார்க்ஸிய லெனினியத்தின் சிறந்த மாணவனாக‌த் திகழ்ந்தார்.  ஸ்டாலின் தலைமையிலான ரசியா வின் புரட்சிகர நடவடிக்கைகள் ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தது. மனித குல முன்னேற்றத்துக்குப் புதிய திசையைக் காட்டியது. மார்க்ஸிய லெனினிய–கோட்பாடுகளின் ஒளியில் மனித குலத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு. சோவியத் ரசியாவை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல அவர் மாபெரும்  இருந்தார்.*🔴

🔴 *புத்திசாலித்தனமான அரசியல் தந்திரசாலியான ஸ்டாலின், ரஷிய சாம்ராஜ்யத்தின் உச்ச தலைவரானார். ராணுவ ஜெனரலாக இருந்த அவர், தன்னுடைய கடும் கோபத்திற்காக அறியப்பட்டவர். கிட்டத்தட்ட 1 கோடி மக்களின் பசி பட்டினிக்கு காரணமாக விளங்கியவர் ஸ்டாலின். கிரேட் பர்ஜ் என்ற இயக்கத்திற்காக அவர் புகழ் பெற்றவர். அதிருப்தியாளர்கள் ஒருவரை கூட இந்த இயக்கம் விட்டு வைக்கவில்லை.*🔴

🔴 *இன்றைய போலி ஜனநாயகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முதல் நகராட்சி கவுன்சிலர் வரை செய்யும் ஊழல் நமது நாட்டில் தலைவிரித்தாடுகிறது.இதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.ஆனால்  அவர் மீது ஊழல் பற்றிய வார்த்தைகளை உதிர்க்க கூட முடியாத அளவிற்கு அவர் நேர்மையாகவே தன் வாழ்நாளை கழித்தார்.*🔴

🔥 *பஷர் அல் அசாத்*🔥 

🔴 *சிரியாவின் பரிதாபகரமான மற்றும் போர் குணத்துடன் திகழ்ந்த தலைவரான இவர் 2,00,000 மக்களின் சாவுக்கும், 50,000 பெண்களின் கற்பழிப்புகளுக்கும் பொறுப்பாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 2011-ஆம் ஆண்டு தொடக்கத்தில் எழுந்த எழுச்சியை அடக்க இப்போதும் முற்படுகிறார். உலகத்தில் உள்ள இரக்கமற்ற சர்வாதிகாரிகளில் இவரும் ஒருவர்.*🔴

🔥 *அடால்ஃப் ஹிட்லர்*🔥

🔴 *அதிகமாக சொல்ல தேவையில்லை. ஜெர்மன் சர்வாதிகாரியான இவர் 1.2 கோடி மக்களின் சாவுக்கு காரணமாக விளங்கியவர். யூதர்களிடம் அவரின் இரக்கமற்ற அணுகுமுறையால் கிட்டத்தட்ட 60 லட்ச யூதர்கள் கொல்லப்பட்டனர். சொல்லப் போனால் மொத்த உலகத்தையே போரில் ஈடுபட வைத்தவர்.*🔴

🔥 *மோ ஜேடோங்*🔥

🔴 *மோவின் அதிகார தாகத்திற்கு ஈடு இணையே இல்லை. அதிருப்தியாளர்களை மூச்சு விட கூட அவர் அனுமதிக்கவில்லை. கண் மூடித்தனமாக லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார். பசி பட்டினியால் மட்டும் 10 லட்ச மக்களுக்கு மேலாக உயிரிழந்தனர். உலகத்தில் வாழ்ந்த மிகவும் இரக்கமற்ற சர்வாதிகாரி இவராகத் தான் இருக்கும்.*🔴

🔥 *ஃபிடல் காஸ்ட்ரோ*🔥

🔴 *முதலாளித்துவ உலகின் பார்வையில் அவர் ஒரு சர்வாதிகாரி. மற்றவர்களுக்கு ஒரு கண்டிப்பு நிறைந்த நிர்வாகி. ஆனால் இன்று க்யூபா என்ற நாட்டைப் பற்றி உலகமே இத்தனை அக்கறையுடன் தேடிப் படிக்கக் காரணம், இந்த ஃபிடல் காஸ்ட்ரோதான். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றோ அமெரிக்காவின் 53வது மாநிலமாகியிருக்கும் க்யூபா என்பதில் எந்த மிகையுமில்லை. ஒரு கரும்புத் தோட்ட கூலியாகப் பிறந்து, எளிய பின்னணியில் உருவான இரும்பு மனிதனான ஃபிடல் காஸ்ட்ரோ கல்லூரியில் போராளியானவர். பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுதான், பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளியாகி, புரட்சியை நேசிப்பவர்களின் ஆதிப் பாடமானது.*🔴

🔥 *2ஆம் லியோபால்டு.*🔥

🔴 *பெல்ஜியம் நாட்டை ஆண்ட இந்த சர்வாதிகாரி 1865இல் தன் 30 ஆம் வயதில் பெல்ஜியத்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் லியோபால்டு II. இவர் காலத்தில் லிபரல் கட்சியார் 1857 முதல் 1880 வரை பதவியில் இருந்தனர். இவருடைய கொடுமையின் அளவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு புள்ளி விவரம் போதும். இவருடைய கட்டுப்பாட்டுக்குள் காங்கோ இருந்தவரை சுமார் 2 மிலியன் முதல் 15 மிலியன் வரை காங்கோவினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இந்த படுகொலை உலகின் மிகப் பயங்கரமான படுகொலையாகக் கருதப்படுகிறது. இவருடைய அக்கிரமம் அளவுகடந்து சென்றுவிட்ட நிலையில் இவருக்குப் பயங்கரமான எதிர்ப்பு ஏற்பட்டது.*🔴

🔥 *பசர் அல் அசாத்* 🔥

🔴 *சிரியாவில் 1962ஆம் ஆண்டு முதல் நெருக்கடி நிலை ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குடிமக்களுக்கான அரசியலமைப்பு பாதுகாவல்களை இடைநீக்கம் செய்துள்ளது. அஃபேஸ் அல்-அஸாத்தின் முப்பதாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு அவரது மகன் பஷர் அல்-அஸாத் கடந்த பத்தாண்டுகளாக ஆண்டு வருகிறார். மார்ச் 18, 19 நாட்களில் நிகழ்ந்த போராட்டங்கள் பல பத்தாண்டுகளில் நடந்தேறியதில்லை எனவும் சிரியாவின் அரசு போராடும் மக்களுக்கு எதிராக வன்முறையால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்றும் ஊடகச் செய்திகள் கூறின.*🔴

🔥 *ராஜபக்சே*🔥

🔴 *இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. 2007 பிப்ரவரியில் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்காக இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர். 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிக்கையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சே செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது. 2006 ஏப்ரல் மாதம் எல்லையற்ற ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் ஜீலை 2005ல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியது. இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பப்பட்டார். இவர் மீது போர்க்குற்றம் சம்பந்தமான வழக்கு ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்டது.*🔴

🔴🔥 *சில சர்வாதிகாரிகளிடம் கணிசமான அளவில் கருணையும், பச்சாத்தாபமும் இருந்து வந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. வரலாறு மூலமாக நாம் பார்க்கும் ஒவ்வொரு சர்வாதிகாரமும், கற்பனை செய்ய முடியாத அளவிலான அநீதிகளையும், கொடுமைகளையும் இழைத்துள்ளது.*🔥🔴

🔴🔥 *மனித இனத்திற்கு கணக்கிட முடியாத அளவிலான பாதிப்பையும், அழிவையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உலகத்தில் வாழ்ந்த சக்தி வாய்ந்த சர்வாதிகாரிகள் மத்தியில் இவர்களும் இருந்துள்ளார்கள் என்பதை நினைக்கையில், நீதிக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமையும். இரக்கம் இல்லாத இடத்தில் அநீதி தலை தூக்கி நிற்கும். இத்தனை துன்பங்களும் பொறுப்பாகும் வகையில் இந்த சர்வாதிகாரிகளிடம் ஒன்று இல்லையென்றால், அது தான் இரக்கம்.*🔥🔴

🔴🔥 *இந்த உலகில் நல்லவர்களை விட தீயவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதைக் கவனத்தில் வைத்துப்பார்த்தால், மக்களை அச்சமூட்டியும் வன்செயலைப்பயன்படுத்தியும் ஆட்சி நடத்தினால்தான் நல்ல பலன்கள் கிடைக்கிறதே தவிர அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்துவதால் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.*🔥🔴

🔴🔥 *முடிந்தால் தம் நாட்டின் சர்வாதிகாரியாக ஆகிவிட ஒவ்வொருவரும் முற்படுவார்கள். சுயநலனுக்காக,  ஒட்டுமொத்த   சமுதாய நன்மையையும் காவு கொடுக்கத் துணியாதவர்கள் வெகுசிலரே, இதையும் நாம் பார்க்கிறோம்.*🔥😔🔴

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்🎉*

🏅🏆 *அருள்முருகஇன்பன்*🏆🏅

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🏅 *SpVignesh*👏👌

🏅 *ஞாலமைந்தன்*👏👌

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🏅 *@⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩*👏👌

🏅 *@⁨இசையருவி⁩* 👏👌

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

🚫 *சர்வாதிகார ஆட்சி என அவ்வப்போது கூறுகிறோம். ஆனால் ஒன்றை மறந்து விடுகிறோம். இங்கு யார் தலைவர்களோ அவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இது கூட ஒரு விதத்தில் சர்வாதிகாரம் தான்.*🚫👍

🤔 *சரி மக்களாட்சி எப்படி வந்தது?*

🛑 *முடியாட்சி + சர்வாதிகாரம் + ராணுவ ஆட்சி = மக்களாட்சி என பெயரிடப்பட்டது.*🛑

🛑 *முடியாட்சி (monarchy)*

🛑 *அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் மன்னர், அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார். முடியாட்சியில் மன்னருக்கான அதிகாரமானது தற்காலத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.*🛑

🛑 *முடியாட்சி, சர்வாதிகாரம், ராணுவ ஆட்சி என்று பல்வேறு ஆட்சிமுறைகளை அனுபவபூர்வமாகப் பார்த்துத் தெளிந்து ஏற்படுத்தப்பட்டதுதான் மக்களாட்சி முறை.*🛑

🛑 *பெருவாரியான மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் மக்களால், மக்களுக்காக, நடத்தப்படும் இந்த ஆட்சிமுறையில் ஏனைய ஆட்சிகளில் உள்ள தனிமனித தோன்றித்தனங்கள் இருக்காது.*🙅🏻‍♀🙅🏻‍♂

🛑 *என்பதால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பல உலக நாடுகள் மக்களாட்சி முறையைத் தேர்ந்தெடுக்க முற்பட்டிருக்கின்றன.*🛑

⛔ *உலகிலேயே இந்த அளவுக்கு மக்கள்தொகையுள்ள எந்தவொரு நாடும் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாட்சி முறையைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதை இந்தியாவின் மிகப்பெரிய பெருமையாக நாம் கருதி வருகிறோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மக்களாட்சி என்கிற பெயரில் அரங்கேறும் அநாகரிகமான செயல்பாடுகளைப் பார்க்கும்போது, இப்படியே தொடர்ந்தால் மக்களுக்கு இந்த ஆட்சி முறையின் மீதே வெறுப்பு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.*

⛔ *நமது அரசியல்வாதிகள் நடத்தும் பதவிப் போராட்டங்கள் மக்கள் மத்தியில் மக்களாட்சி பற்றிய நம்பிக்கையைத் தகர்க்கின்றன. கட்சிகள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை. தவறானவர்களைத் தேர்ந்தெடுத்த குற்றம் மக்களுடையது. தன்வினை தன்னைச் சுடும் என்பதை மக்கள் உணர வேண்டும்.*

*🛑இதற்கு உதாரணமாக தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டது தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று🛑, என்று கூறி இம்முடியுரையினை முடிக்கின்றோம்.*😔

💐 *நன்றி வணக்கம்*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு.*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆   
                   
*உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🤺 *அறிந்துகொள்ளவும்*🤺

*கண் கண்டது கை செய்யும்.*

🤺 *புரிந்துகொள்ளவும்*🤺

*உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?*

🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺

*ஆறு போவதே போக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு.*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫

 🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
  *9486552988*🧘🏻‍♂
      
                     👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈
       
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 

😎 *ஜாஹிர் ஷாஹ்*
*7845032987*

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...