Wednesday, 14 March 2018

புகைப்படங்களும், அதன் நினைவுகளும்? 🤔🤔🤔

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :28.02.2018.* 
         🌹 *கிழமை :புதன்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.*

💐 *- சாமுவேல் பட்லர்.*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம்,* 

*என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.*👍

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*புகைப்படங்களும், அதன் நினைவுகளும்? 🤔🤔🤔*

📸🤔📸🤔📸🤔📸🤔📸🤔📸

📸 😇 _*புகைப்படம் என்பதன் ஆதி அர்த்தம் """வெளிச்சத்தில் செய்யப்பட்ட ஓவியம்"""*_📸💐

😇📸  *முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது அரிதான செயலாக இருந்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் புகைப்படக் கலை முன்னேற்றமடைந்து விட்டது. குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன.*📸🙌😇

📸🙌 *எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். புகைப்படக் கருவியால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. எனவே புகைப்படக் கருவியை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.*👍📸

😇📸🙌 *மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது புகைப்படக்கலை.🙌📸👍 இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புகைப்பட கலையின் தாக்கம் மிக அதிகம். இந்த பூமியையே செயற்கைக்கோள் என்னும் பெரிய கேமரா தினமும் படம் பிடித்துக் கொண்டே இருக்கிறது.📸🙌 மருத்துவத் துறையில் மனிதனின் உடலினுள் கூட சென்று படம் பிடித்துக் கொண்டிருக்கிறது கேமரா.*📸🙌👍

📸🙌 🧐 *ஆனால், புகைப்படக் கலையின் வரலாறு 1000 ஆண்டுகள் பழமை உடையது. கி.மு., 300 களில் அரிஸ்டாட்டில் எனும் அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியே புகைப்படத்திற்கு ஆணிவேர்.கேமரா என்னும் சொல் '""இருட்டு அறை'""என்று லத்தின் மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது.*😇📸

📸🙌🧐 *ஆரம்ப காலங்களில் மிகப்பெரிய கேமரா மூலம் உருவங்களின் பிம்பத்தில் ஓவியம் வரைய பயன்படுத்தினர். பின், 16ஆம் நூற்றாண்டில் தான் லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 1700 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆராய்ச்சியில் வெள்ளி முலாம் பூசப்பட்ட தகட்டில் ஒளி பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.*🧐📸
*நைஸ் போர் என்பவரால் 1826 ஆம் ஆண்டில் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. 📸👍அதன் பின் புகைப்படக்கலை இந்தியாவிற்கு வந்தது.*🙌📸👍

📸🙌 *ஆயக்கலைகள் 64 என்பர். இந்த கலைகளையெல்லாம் விஞ்சிய அற்புத நவீனகால கலையாக புகைப்பட கலையை கூறலாம். வரலாற்று நிகழ்வு, சமூக பிரச்னை, கல்யாணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள், சோக நிகழ்வுகள், மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம்தான். 📸ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்வதும் இந்த புகைப்படம்தான். '""சார்... ஸ்மைல் ப்ளீஸ்'""""🙌என கருப்பு போர்வைக்குள் புகுந்து ஸ்டூடியோவில் படம் பிடித்த காலம் முதல், கையடக்க சைசில் டிஜிட்டல் கேமரா வைத்துக்கொண்டு விதம்விதமாக தங்களை செல்பி முறையில் படம் பிடித்துக்கொள்பவர்கள் நம்மில் அதிகரித்து விட்டனர். அந்தளவுக்கு புகைப்படம் மக்கள் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது.*🙌📸

📸🙌 *எங்காவது சுற்றுலா சென்றால் முதலில் நாம் எடுத்து வைக்கும் முக்கிய பொருளாக கேமரா மாறி விட்டது.🙌 சுதந்திரத்திற்கு போராடிய காந்தி, நேதாஜி, வஉசி உள்ளிட்ட எண்ணற்ற தேசத்தலைவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை நாம் நேரில் பார்த்தது கிடையாது.🙅🏻‍♀🙅🏻‍♂  ஆனால் அவர்களையெல்லாம் நம் கண்முன் வந்து நிறுத்துவது புகைப்படமே. 🙌📸எந்த துறையில் அதிகம் பயன்படுகிறதோ, இல்லையோ செய்தித்துறையில் புகைப்பட கருவி அதிமுக்கியமாக பயன்படுகிறது. 👍வரி வரியாக அரைப்பக்கம் எழுதி சொல்லக்கூடிய கருத்தை ஒரு புகைப்படம் மூலம் எளிதில் சொல்லிவிடலாம்.👍 படித்தவர்கள் மட்டுமின்றி மழைக்குகூட பள்ளிக்கு ஒதுங்காதவர்களையும்  படத்தை பார்த்து செய்தியை அறிந்து கொள்ள உதவுகிறது கேமரா. 👍சிறந்த புகைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.*📸🎖

📸🙌 _*புகைப்பட கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும்  ஆகஸ்டு19ம் தேதி  உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.*_📸🙌

📸🙌🧐 *13ம்  நூற்றாண்டிலேயே கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.🧐 இதைத்தொடர்ந்து சிறிய, பெரிய அளவில் பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1825ம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த ""ஜோசப் நீப்ஸ்""" என்பவர் ஒரு கட்டிடத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த படம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது. 1839ம் ஆண்டு ""சர் ஜான் ஹெர்செல்"" என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார்.*🙌📸👍

📸🙌 *அவர்தான், இக்கலைக்கு 📸போட்டோகிராபி📸 என்று பெயர் சூட்டினார்.🙌 போட்டோகிராபி என்பது கிரேக்க மொழி சொல்லாகும். இதன் அர்த்தம் '""ஒளியின் எழுத்து'"". இதே ஆண்டில்  ""லூயிஸ் டாகுரே"" என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.🙌 மரத்தாலான இந்த புகைப்பட கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு டாகுரியோடைப் என பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயல்பாடுகள் 1839ம் ஆண்டு ஆக. 19ம் தேதி '"""ப்ரீ டூ தி வேர்ல்ட்'""" என உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. இந்த நாளையே உலக புகைப்பட தினமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.*📸🙌💐

📸🙌🧐 *1888ம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களைப் பயன்படுத்தி பொக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுப்பதை கண்டறிந்தார்.* 🧐📸

📸🙌🧐 *1900ல் பொக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கொடாக் அறிமுகப்படுத்தினார்.*🧐📸

📸🙌🧐 *35 மி.மி. ஸ்டில் கேமராக்களை 1913ல் ஆஸ்கர் பர்னாக் வடிவமைத்தார். இது புகைப்பட துறையையே புரட்டிப்போட்டது.* 🧐📸

📸🧐🙌 *முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981ல் தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள்  ஏற்பட்டுள்ளன.*📸🙌👍

🏘👨‍👩‍👧‍👦 📸 *நமது வீட்டில் நடந்த ஒரு விழாவினை பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதனைப் பார்த்து மகிழ்வதற்கு நமக்கு உதவுவது புகைப்படங்களே.📸 நமது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் உள்பட பல மறக்க முடியாத காலக்கட்டங்களை திரும்பிப் பார்க்க உதவுகிறது.🙌👍 நமது பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நமது மூளை அந்த இளமைக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.😇💐 இளமையில் நாம் இப்படி இருந்தோம். இன்றைக்கு எப்படி முகம், உடல் மாறிவிட்டது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க புகைப்படங்கள் உதவுகின்றன. 😇நமது தாத்தா, முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.*🙌😇

🔴 📸🙌 _*புகைப்படம் என்பது ஒரு கலை. அதற்கு மிகப்பெரிய வலிமை உள்ளது. உலக வரலாற்றை மாற்றும் சக்தி புகைப்படத்திற்கு உண்டு.👍 புகைப்படம் ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு ஒன்றி இணைந்துள்ளது. வரலாற்று நிகழ்வுகள், இன்பம், துன்பம், பொதுக்கூட்டம், தலைவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது. 📸ஒரு தலைமுறையின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் ஒரு வழிகாட்டியாக புகைப்படம் விளங்குகிறது.*_📸🙌👍

🔴 📸🙌😇 *தூரிகையைக் கொண்டு ஒரு படத்தை வரைவதற்குப் பதிலாக மிகத் துல்லியமாக ஒரே நிமிடத்திற்குள் புகைப்படம் எடுத்து, பல நகல்களையும் எடுத்து விடலாம்.👍 உள்ளது உள்ளபடியே கேமராவினால் புகைப்படம் எடுக்க முடியும். ஒரு புகைப்படம் என்பது நான்கு பக்கங்களுக்குள் அடங்கி விடுகிறது. ஆனால் அது பல கதைகளையும், பல தகவல்களையும் கொடுக்கக் கூடியதாக அமைகிறது.*🙌📸🔴

🔴📸🙌😇 _*இருநூறு பக்கங்கள் எழுத வேண்டிய ஒரு விசயத்தைக்கூட ஒரு புகைப்படம் விளக்கிவிடும்.👍 மங்கள்யான் விண்கலம் எடுத்தனுப்பும் புகைப்படத்தைக் கொண்டே செவ்வாய் கிரகத்தை ஆராய முடிகிறது. 👍செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடினவா? 🤔நீர் உள்ளதா போன்ற அரிய உண்மைகளை கண்டறிவதற்கு புகைப்படங்களே உதவுகின்றன.🙌 புகைப்படங்கள் தனி நபர்களுக்கு சந்தேகத்தைக் கொடுக்கிறது. அதே சமயத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. புகைப்படத்திற்கு அடிப்படையாக இருப்பது ஒளிப்படக்கருவி எனப்படும் கேமராவே (Camera) ஆகும்.*_🙌😇🔴

🔴📸🙌 *விலை உயர்ந்த கேமராவில் மட்டுமே சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம் என்ற பொது கருத்து நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்து. சுவையான சமையலுக்கு சமைப்பவரின் திறமைதான் காரணமே தவிர, விலை உயர்ந்த அடுப்பு இல்லை. விலை உயர்ந்த கேமராக்கள் சில அம்சங்களில் மட்டுமே தேவைப்படும். அதனால் திறமை இருந்தால் சிறந்த படங்களை எந்தக் கேமராவிலும் எடுக்க முடியும்.*🔴📸🙌

🔴📸🙌 _*புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் அந்த மூட நம்பிக்கை தற்போது போய்விட்டது. கேமரா வைத்திருப்பது என்பது ஒரு அந்தஸ்து, வசதியைக் காட்டுவதாக இருந்தது. கேமரா வாங்க வேண்டும் என்கிற கனவு தற்போது சாதாரண மக்களிடம்கூட நிறைவேறி விட்டது. கைப்பேசி எனப்படும் செல்போன் (Cell Phone) வந்த பிறகு, இன்றைக்கு ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப கேமரா செல்போன் உள்ளது. தன்னைத்தானே பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டு பார்த்து மகிழ்கின்றனர்.😇 ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு கருவியாக கேமரா விளங்குகிறது. இந்த கேமராவின் கண்டுபிடிப்பு அறிவியல் வரலாற்றில் ஒரு சாதனையாகும்.*_📸🙌😇👍

📸🤔 *புகைப்படங்கள் எப்படி வந்தது என்பதனை பார்த்து விட்டோம். தற்போது 5 நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டோ என்பார்கள். ஆனா 15 நிமிடம் ஆகிடும் 😂🤣.*

🙄 *வாட்ஸ் அப், பேஸ்புக் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், உடனே அதனுடைய புகைப்படம் தான்.*😴😴

🙄 *இதற்கு உதாரணங்களாக save for jallikattu, save for oviya, HAPPY republic day, HAPPY Valentine's day, save for syria, இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்.*🤗😴

🙄😴 *எங்க என்ன நடந்தாலும் உடனே கருப்பு டிபி, கேட்டா என் ஆளு பேசல, என் ஆளு கூட சண்டைங்கிறாங்க.*🤦🏻‍♀🤦🏻‍♂

😴🙄 *எதற்கெடுத்தாலும் புகைப்படம், இந்த புகைப்படத்தை வச்சிக்கிட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே😴😴 அந்த Godஐ கூட செல்பி ஸ்டிக் கேட்க வச்சிருவானுங்க போல.*🤦🏻‍♀🤦🏻‍♂

🤦🏻‍♂🤦🏻‍♀ *மோடி எங்க போனாலும் செல்பி எடுத்து உடனே டிவிட்டர், பேஸ்புக்ல போட்டு லைக் வாங்குறாரு.*😏😏

🤦🏻‍♂🤦🏻‍♀ *கோர்ட்ல எதாவது ஆதாரம் வேணும்னா, உடனே புகைப்படம் ஒரு சாட்சியாக இருந்தது. ஆனா அதுவும் போலி புகைப்படம் கொண்டு வந்து உண்மையான புகைப்படமா? போலியான புகைப்படமானு ஆராய்ச்சி பண்ண வச்சிட்டாங்க.*😴🙄

🤦🏻‍♀🤦🏻‍♂ *இப்ப ஏகப்பட்ட அப்ளிக்கேசன் வந்து, சுமாராக இருக்கிறவங்களும், சூப்பர் ஃபிகர் ஆகுறாங்க.*🤓

🤗 *பொண்ணு, மாப்பிள்ளை பார்க்க கூட, புகைப்படம் தான் கேட்கிறாங்க. ஆனா அதுலயும் ஏகப்பட்ட டிசைன் போட்டு, ஒரிஜினல் முகம் போயி டூப்ளிகேட் முகத்தை பார்த்து தான் ஓகே சொல்ற நிலைமை வந்துட்டு.*🤔😰🤗

🙄😴 *இப்ப கூட சட்டமன்றத்துல அந்தம்மா புகைப்படம் மாட்டலாமா, வேண்டாமா? ஏகப்பட்ட போர் (அக்கப்போர்) நடந்தது.*😴😰

📸 *ஒவ்வொரு புகைப்படத்துலயும் நல்லது, கெட்டது இப்படி எதாவது ஒண்ணு ஒளிஞ்சிருக்கும்.*👍

📸 *புகைப்படம் எடுப்பது தவறில்லை.🙅🏻‍♀🙅🏻‍♂ ஆனால் அனைத்து இடங்களிலும், விபத்து பகுதி, யாராவது கஷ்டப்படும் போது, அவற்றை புகைப்படம் எடுத்து, அவர்களது மனது நோகுமளவு செய்தல் கூடாது.🙅🏻‍♀🙅🏻‍♂ இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்களது அனுமதியினை பெற்று விட்டு பின்னர் பகிர வேண்டும்.*👍

🔴📸 _*ஆபத்து நேரங்களில் புகைப்படம் எடுப்பதை விட, அவர்களின் பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதலோ, அவர்களுக்கு தேவையானதை செய்வதே சிறந்த பண்பாகும்.*_👍🔴

🤦🏻‍♀🤦🏻‍♂ *ஆனால் அதையும் சிலர் பப்ளிக்குட்டிக்காகவே சிலர் புகைப்படம் எடுப்பது உண்டு. அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.*

📸👩🏻 *சிலர் பெண்களிடம் பேசி, அவர்களின் புகைப்படம் கேட்டு பார்த்து, சேமித்து வைப்பதுண்டு. பின்னர் பிரச்சனை வரும் போது பிளாக் மெயில், மார்ஃபிங் போன்ற பிரச்சனைகள், சமூக வலைத்தளங்களில் கேலி சித்திரமாக பதிவிடுவது, இதுபோன்ற கெடுகேட்ட செயல்களில் சிலர் ஈடுபடுவதுண்டு.*😡👊

📸👩🏻 *பெண்களே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கம்மா, எல்லா ஆண்களும் நல்லவர்களும் அல்ல, கெட்டவர்களும் அல்ல. பார்த்து பழகுங்க.*👍

📸👩🏻 *பெண்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் பக்கங்களில் புகைப்படம் டிபி, ஸ்டேட்டஸ், போன்றவற்றை உரிய பாதுக்காப்புகளுடன் பயன்படுத்துதல் வேண்டும்.*👍

😜😝 *நம்ம டிஆர் கூட, இன்னைக்கு  துருப்பிடிச்ச லட்சிய திமுகவ, பெயிண்ட் அடிச்சி பெரியார், அண்ணா, எம்ஜிஆரோட, அம்மா புகைப்படத்தையும் ஜாயிண்ட் பண்ணி புதுப்பிச்சிருக்காரு. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?*🤔 🤗

🤗😜 *அப்புறம் ரஜினி, கமல், கலைஞர், ஸ்டாலின், விஜயகாந்த் கூட, புகைப்படம் எடுத்து நானும் அவங்களும், ஒண்ணுக்கு ஒண்ணுனு வீட்ல பிரேம் பண்ணி மாட்டிப்பாங்க. எல்லாம் ஒரு மகிழ்ச்சிகாக தான்😄. ஆனா இவங்க பெயர், அங்க சொன்னா தெரியாது🙊🙊🙊.*

😜🤦🏻‍♀🤦🏻‍♂ *யாரோட கார்லயோ, தன்னுடைய கார் மாதிரி புகைப்படம் எடுக்கிறது, மெட்ரோ ரயில்ல புகைப்படம், விமானம் முன்னாடி புகைப்படம், சுற்றுலா தலத்துல வெள்ளைக்காரங்க கூட புகைப்படம், உச்சிமலைல புகைப்படம், பட்டியல் போட்டா ஆட்டோகிராப் மாதிரி போகும்.*😜🤦🏻‍♀🤦🏻‍♂

🤦🏻‍♀🤦🏻‍♂ *இதெல்லாம் விட கொடுமை, பிணத்திற்க்கு முன்னாடி செல்பி எடுத்து போடுவானுங்க🤦🏼‍♂🤦🏻‍♀*

🤦🏻‍♀🤦🏻‍♂🤥 *போட்டோ எடுக்கும் போது தலைல கொம்பு வைக்கிறது, மூஞ்ச கனாபினானு வைக்கிறது, முடியல.*😢😥😰

😜🤗  *பொங்கல் வந்தாலோ,இல்ல பிடித்த கதாநாயகன் வெட்டிகட்டினாலோ வேட்டியோட செல்பி, என்னப்பா இது? தமிழன், தமிழன். ம்ம்ம் சரிபா நம்புறோம் 😬. அதுக்கப்புறம வேட்டியே கட்ட மாட்டாங்க.*😏😏

🤦🏻‍♀🤦🏻‍♂ *அதேமாறி இந்த பொண்ணுகளும் புதுசா சேலை கட்டினாலோ,இல்ல ஒரு இடத்தில்  நின்னாலோ,நடந்தாலோ,சாப்பிட்டாலோ, தும்முன்னா  கூட செல்ஃபி...முடில மா.... என்னாம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்ம்ம்ம்மா......*🤦🏻‍♀🤦🏻‍♂😥😰😉😜

🔴📸🙌 _*புகைப்படங்கள் பல நினைவுகளின் அஸ்திவாரம். தேவையானவற்றிற்கு மட்டும் பயன்படுத்தி நலம் பெறுவோம்.*_😇💐

🔴📸💝 _*சில புகைப்படங்கள் உலக அளவில் ஒரு மாற்றத்துக்கான விதையை விதைத்து செல்லும்.👍இந்த புகைப்பட கலையை இன்பத்துக்காகவோ அல்லது ஆக்கத்துக்காகவோ அல்லது தொழிலாகவோ கொள்ளும் என் சகோதர சகோதரிகளே…... நீங்கள் நம் வாழ்க்கையின் வரலாற்று சுவடுகளை பதித்துக்கொண்டு இருக்கிறீர்கள்...!!!👍 உங்கள் புகைப்படங்கள் நாளைய தலைமுறைக்கு ஒரு சுவடாக மாறட்டும்...!!!*_ 👍😇💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்🎉*
          🏅🏆 *KS*🏆🏅

*🗣சிறந்த 📸புகைப்படப்பதிவாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

*🎖🎞🎊 @⁨⁨SP Vignesh⁩⁩, @⁨SIVARAJ⁩, ⁩* 👌🙌

🎖🎞🎊   *@⁨karthikeyanc29⁩,@⁨Santhi😊🦅*
*@⁨Prakash B⁩,*👌🙌

🎖🎞🎊 *@⁨gee2493⁩, @⁨Er.JAGADEESWARAN⁩*
*@⁨மனோஜ்⁩ @⁨Aslam✍⁩*👌🙌 

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🎖🎞🎊 *@இசையருவி, @⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩, @⁨sriramkrm⁩⁩*👌🙌

🎖🎞🎊 *@⁨⁨பிரதீப் விஸ்வா⁩⁩, @⁨rajajjs⁩,*👌🙌

🎖🎞🎊 *@⁨mahesraji6⁩, @⁨siva⁩, @⁨Sri Poonthalir Organics, @⁨😘⁩ ⁩*👌🙌 

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

📸🙌 *பக்கத்து டவுனில் இருக்கும் ஸ்டூடியோவுக்கு குடும்பத்தோடு வண்டிகட்டி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்ட காலம் போய் எல்லோருடைய கையிலும் DSLR தவழும் காலத்திற்கு வந்துவிட்டோம். கையில் கேமரா இல்லையென்றாலும் மொபைலில் படங்களைக் கிளிக்கிக் கொண்டு உலாவரும் ஒவ்வொரு இளைஞனின் உள்ளுக்குள்ளேயும் ஒரு பி.சி. ஸ்ரீராமும், சந்தோஷ் சிவனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்குப் புகைப்படக் கலை பெரும்பாலானோரை ஈர்க்கும் ஒரு விஷயம்..!!* 😇💐     

📸🙌 *அறிவியலும், அணுகல் தன்மையும் வளர்ந்து விட்ட இந்நாட்களில் புகைப்படக் கருவிகள் இன்று பெரும்பாலும் எல்லோரிடமும் உள்ளன. கையில் கேமிரா இருந்தால் குரங்கும் போட்டோகிராஃபர் என மீம்ஸ்கள் வருமளவுக்கு சகஜமாகிவிட்டது. மேலும், இன்று வரும் பெரும்பாலான அலைபேசிகள் புகைப்படம் எடுப்பதற்கு என்றே விளம்பரப்படுத்தப்படுகின்றன.*😛😁

📸🙌 *அணுகல் தன்மையிலும், ஒருகாலத்தில் 50 மெகாபைட் நினைவகத் தட்டைகள் இன்றைய கேமிராவின் விலையைவிட பன்மடங்காக இருந்தது. இன்று இவை வெகு மலிவாகி விட்டது. இவை எல்லாமே இன்று கேமிரா உடைமையாளர்களின் எண்ணிக்கை உயர காரணமாக இருக்கிறது.*😇💐

📸🙌🔴 *இலக்கியத்தை போலவே புகைப்படங்களும் கடந்த காலத்தின் கதைகளை அடுத்த தலைமுறைக்கு பகர்கின்றன. இன்று எடுக்கும் ஒரு புகைப்படம் நாளை ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெறலாம்.*📸🙌💐

💐 *நன்றி வணக்கம்*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு.*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆   
                   
*மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை. இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🤺 *அறிந்துகொள்ளவும்*🤺

*மெல்லப் பாயும் தண்ணீர், கல்லையும் குழியாக்கும்.*

🤺 *புரிந்துகொள்ளவும்*🤺

*நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.* 

🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺

*முகத்துக்கு முகம் கண்ணாடி*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫

  🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
   *9486552988*🧘🏻‍♂
      
                     👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈
       
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 

😎 *கந்தசாமி-9080669640*

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1 comment:

  1. Casino Royale - Live Dealer Games - Virgin Games
    Casino Royale is a live casino herzamanindir.com/ with a large, งานออนไลน์ eclectic portfolio https://vannienailor4166blog.blogspot.com/ of casino games. Players can play this 출장안마 game with live dealers, 1xbet app

    ReplyDelete

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...