🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 13.03.2018*_ 🌹
🌹 _*கிழமை : செவ்வாய்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.*
*- சாமுவேல் பட்லர்.*
♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*எல்லாத் தவறுகளையும் நாம் ஒருவரே செய்து விட முடியாது. மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே சிறந்தது.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*⚫ 🔥குரங்கனி தீ விபத்து பற்றிய உங்களது பார்வைகள்...🔥 ⚫*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*🌳🍃ஞாயிறு ஆரம்பித்து இப்போது வரை தேனி மாவட்டம் குரங்கனியில் காட்டுத்தீ பற்றிய பல தகவல்கள் தீயை விட வேகமாக இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன.*🔥🔥
*🤔🤔தீயை எப்படி அணைப்பது எனத் தெரியாமல் தவித்த அரசுக்கு எப்படி அணைக்கலாம் என அறிவுரைகள்!*😲😧
*🤔🤔அத்தனை மாணவிகள் ஏன் காட்டுக்குள் போனார்கள் எனக் கேள்விகள்*⁉❓
*🤔🤔காட்டுக்குள் போன மாணவிகள் நிலை என்ன என்கிற ரீதியில் விவாதங்கள்*🗣🤷🏻♂
*🤔🤔 காட்டுத்தீ -க்கு யார் காரணம்...*⁉❓
*🤔🤔விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாய் திரும்ப பிரார்த்தனைகள்!*🙏😟
*🙄😢 மேற்கூறிய ஒவ்வொரு விஷயத்திற்குப் பின்னும் ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன.*
*🤳🙇🏻♂🙇🏻♀சமூக வலைதளங்களில் வந்து விழுந்த செய்திகள் எல்லாம் குரங்கணி காட்டுத் தீ பற்றியே இருந்தன.*🔥📱📲
*🔥🔥தீயை அணைக்கப் போராட்டம், ஹெலிகாப்டர்கள் விரைந்தன, மாணவிகள் மீட்கப்படுகிறார்கள், 2 பேர் மரணம் எனச் செய்திகள் முதலில் இப்படித்தான் வர ஆரம்பித்தன.*😲🍃
*😥😥அடுத்த பத்து நிமிடங்களுக்கொரு வீடியோ பதிவுகள். அதிலொன்று தீக்காயங்களோடு உயிருக்குப் போராடுகிற பெண் ஒருவர் "அண்ணா தண்ணீ, தண்ணீ" என்கிற வார்த்தைகள்.*😥😓
*😔😔மனிதம், வனம், பயணம் என யோசிக்கும் மனங்களிலெல்லாம் இனி அந்த வார்த்தைகள் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.*🗣👂
*👩🏻💻🏢👨🏻💻நேற்று முன்தினம் சென்னை தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 36 பேர், 7 முதல் 8 குழுக்களாக பிரிந்து தேனி மாவட்டம் கொழுக்குமலை-குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கு வழிகாட்ட 4 பேர் சென்றுள்ளனர்.*😕😕
*🕰⏰அப்போது மாலை 4 மணியளவில் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயில் 40 பேரும் சிக்கினர். இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.🚒🔥🚒*
*🙄😱😥இந்த சமயத்தில்... 11 பேர் உயிரிழந்துள்ளனர்... இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...*😓😓
*🤔🤔இந்நிலையில்...*
*🌳🔥🌳இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ, நேற்று பற்றியதல்ல. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே தீப்பற்றி காடு எரிந்து வருகிறது. தேவாரம், பொட்டிபுரம் காட்டுப்பகுதிகளும் ஒரு வாரமாக எரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 30 கிமீ பரப்பிலான காடு எரிந்து நாசமாகியுள்ளது.*😓😓
*😠🤷🏻♂🤦🏻♂கடந்த ஒரு வாரமாக தீ பற்றி எரிந்தும் வனத்துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.*🗣🔥
*🔥🌳🔥தேனி காட்டுப்பகுதிகள் ஏற்கனவே தீக்கிரையாகும் நிலையில், அனுமதி இல்லாமல் மலையேற்றப்பயிற்சியில் ஈடுபட்டதும் மரணத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது.*🤷🏻♂🤦🏻♂😓
*🤔🤔ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்தும் வனத்துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியையும் மக்களிடையே ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*😠🚒👊
*🤔🤔முடிவா என்னாச்சு...*😥😥
*⛅☀🌦விடிய விடிய நடந்த தேடுதலின் முடிவில் 10 பேர் பத்திரமாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..*😥😥
*🚁🏨🚁27 பேர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்... அதில் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்தார்...*😓😓
*⚫⚫11 பேரின் மரணத்துடன் மிகுந்த சோகத்தில் முடிந்தது...*⚫⚫
*🤔🤔இப்பொழுதும் கட்டுக்குள் வராத காட்டுத்தீ இன்னும் ஓரிரு நாள்கள் எரியும் என எதிர்பார்க்க பார்க்கப்படுவதால் காட்டுப் பகுதியில் செல்ல அனுமதியில்லை...*📛📛
*🌳🔥🌳தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறிய காரணங்கள்..*🤔🤔
*🗣🎙இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்வது இல்லை. இதனால் அதிகப்படியான வெப்பத்தால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.*😥😥
*🗣🎙இதுஒரு புறம் இருந்தாலும் ஒருசிலர்கள் மலைக்கு கீழே பீடி, சிகரெட் போன்றவற்றை பற்றவைத்து அதனை அணைக்காமல் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.*😥😥
*🙄🗣🎙இதனால் தீ மெது மெதுவாக பற்றி எரிந்து மலையின் உச்சிக்கே சென்றுவிடுகிறது.*😥😥
*🤨🗣🎙இதுமட்டுமல்லாமல், மலைப்பகுதியில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக...🤔 அங்கு வாழும் உயிரினங்களுக்கு சரிவர உணவு கிடைப்பதில்லை.*🤷♂🤷♂
*🐘🐅🐃எனவே அவை உணவை தேடி கீழே வருகின்றன. கீழே வரும் விலங்குகள் தோட்டப் பயிர்களை மேய்ந்துவிடுமோ என்ற பயத்தில் சிலர் வேண்டுமென்று தீ வைக்கின்றனர்.*🔥🔥
*🤷♂🤷♂அந்தத் தீயும் மேலே வரை பலநேரங்களில் சென்றுவிடுகிறது...*😥😥
*☠🔥☠இணையத்தளத்தில் முன் எச்சரிக்கை பதிவாக பிப்ரவரி 27 அன்று போடப்பட்ட பதிவு...*☠🔥☠
*🌳🌳மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் பரவிய காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிகின்றன... அதிகமான மரங்கள் தீப்பிடித்து எரிகின்றன வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் காட்டுத்தீ பரவி உள்ளது.....*🔥🔥
*🏴உடனடியாக நடவடிக்கை எடு அரசே..*🏴
*🤜ஆனால் சில உயிர் போன பின் தான் அக்கறை வருகிறது... நம் அரசிற்கு...*🤛
*🌦🌨 தேனியில் மழை*🌧🌨
*🌳🌧🌳இப்போது தேனியில் பெய்து கொண்டிருக்கும் மழை*💦💦
*🌳🔥🌨குரங்கனி மலையில் உள்ள காட்டுத்தீ இருக்கும் இடத்தில் அதிக மழை வந்தால் காட்டுத்தீ குறைய வாய்ப்பு உள்ளது...*👍👍
*🤔🤔💦இந்த மழை நேற்றே வந்து இருந்தால் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்....*🤷🏻♂🤷🏻♂
*👏👏👏 பாராட்டுக்கள்👏👏👏*
*🌳🔥🌳காட்டுத் தீ விவகாரத்தை, தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் பல்லவி பல்தேவ் மிக மிக திறமையாக கையாண்டார்.*💪💪
*🗣✍பத்திரிக்கையாளர்கள் கேட்ட, அறிவி கெட்டத்தனமான கேள்விகளைக் கூட, நிதானமாக கையாண்டு பதிலளித்தார்.*🤝🏻🤝🏻
*🚒✍🗣மீட்பு நடவடிக்கைகளின் மையப் புள்ளியாக இருந்ததோடு, மாநில அரசு மற்றும், மத்திய அரசுகளுக்கு உரிய தகவல்களை, சரியான நேரத்தில் அனுப்பவும் தவறவில்லை.*👏👏👏
*🤝🏻🔥🤝🏻விபத்தில் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றிய காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம்...*🤝🏻🔥🤝🎏
*🇮🇳🌳🇮🇳இந்தியக் காடுகள் 100 சதவிகித பாதுகாப்பில் இருக்கிறது என்கிற ஒரு மாயக் கட்டமைப்பை அரசு நிறுவியிருக்கிறது.*😏😏
*🤔🤔உண்மையில் அரசு, காடுகளை பாதுகாப்பதில் அக்கறையோடு இருந்திருந்தால் இன்றைய தேதியில் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருக்காது.*🙆🏻♂🙆🏻♀😣😖
*😏😏தவறு நிகழ்ந்து விட்டது என்றதும், எப்பொழுதும் போல ஒருவர் மாறி ஒருவரை குற்றம் சொல்லுவது வழக்கம். ஆனால், இம்முறை முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் என எல்லோரும் சம்பவத்தில் நேரடியாகத் தலையிட்டு விபத்தில் சிக்கியவர்கள் அனுமதியில்லாமல் காடுகளுக்குள் சென்றிருக்கிறார்கள் எனப் பேட்டி கொடுக்கிறார்கள்.*😲🤨
*🤔🤔இன்னொரு பக்கம் துணை முதல்வர் விபத்து குறித்து விசாரிக்கப்படும் என்கிறார். இன்றைய தேதியில் வனத்துறையில் 1556 வனத்துறை பணியிடங்களில், 1100 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன .*😥😥
*👩🏻🏭👨🏻🏭இருபது பேரின் வேலையை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்தப் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. மேலும் பணி நிரந்தரம் செய்யப்படாத 908 வேட்டைத் தடுப்பு காவலர்கள் வனத்துறையில் பணிபுரிகிறார்கள்.*😲😧😖
*😥😥உயிரைப் பணயம் வைத்து காடுகளுக்குள் செல்கிற அவர்களின் 90 சதவிகித பணியாளர்களிடம் முறையான பாதுகாப்புக்கு ஆயுதங்கள் என எதுவுமில்லை.இதை விட வனத்துறையில் தீ தடுப்பு படை என்கிற ஒரு பிரிவு உள்ளது. கோடைக்காலங்களிலும், தீ பிடிக்கிற கால கட்டத்தில் மட்டும் இவர்களைப் பயன்படுத்திவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அவர்களுக்கான எந்த உத்திரவாதமும் வழங்கப்படுவதில்லை.*🤷🏻♂🤷🏻♀
*🙄🤔🤔மொத்த தமிழகமும் நடந்த தவறுக்கு காரணமாக மலையேற்ற குழுவினரையும், தொடர்புடைய நிறுவனங்களையும் மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில், தவறுக்கு முக்கியக் காரணம் எங்கே இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதைச் சரி செய்தாக வேண்டும்.*🤨🧐💪
*👩🏻🌾👨🏻🌾மாணவர்கள், ஆய்வாளர்கள் வனங்களுக்குச் செல்வது அவசியமானது. மாணவர்கள் மலையிலுள்ள தாவரங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் பாடம்செய்யவும் மருத்துவர்கள் மூலிகைகளைப் பற்றி ஆய்வுசெய்யவும் கானுலா அதிகம் பயன்படுகிறது.*😏😏
*🤔🤔🧐இவர்கள் உள்ளே போவதும் வெளியே வருவதும் தெரியாமல் பழங்களையும் கொட்டைகளையும் தண்ணீரையும் தவிர மற்றவற்றை எடுத்துச்செல்வதில்லை.*🤝👍👍
*🤨🧐🧐ஆனால் இப்போது கானுலாவும் மலையேற்றமும் சுற்றுலா செல்வதைப் போல ஆகிவிட்டது. இப்படிப் போகிறவர்களில் பெரும்பாலனவர்கள், வனங்களின் கானுயிர்களின் பாதுகாப்பைப் பற்றி அக்கறை இல்லாமல் நடந்துகொள்கின்றனர்.*😠😡
*😣😖யாரும் போகாத இடத்துக்குப் போகவேண்டும் என்பதை சாதனை நிகழ்த்தியதைப் போல எண்ணிக்கொள்கின்றனர்.*👊👊
*🍺🍻🚫குடித்துக் களிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. காட்டில் போய் சமைப்பது, தீமூட்டிக் குளிர்காய்வது போன்றவற்றால் காட்டு வளத்தை, தன்மையைக் கெடுப்பது மட்டுமில்லாமல், உயிருக்கு ஆபத்தான சூழல்களையும் உருவாக்கிக்கொள்கிறார்கள்.*😲😧🙆🏻♂🙆🏻♀
*🤔🤔🧐பல கானுலா, மலையேற்றக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், அப்பட்டமாக விதிகளை மீறுகிறார்கள். கானுலா செல்பவர்கள், குறைந்தபட்சம் 5-7 பேர் கொண்ட குழுவாகத்தான் செல்லவேண்டும். அப்படிப் போகும்போது திடீரென வனவிலங்குகளோ காட்டாறோ வேறு ஆபத்தோ வரும்போது காத்துக்கொள்ள முடியும்.*🤝👍🤝
*😏😏மகிழ்ச்சிக்காக, வார ஓய்வுக்காக கானுலா போகிறவர்கள் இதைச் சட்டைசெய்வதே இல்லை. எளிதாக இதை அலட்சியம் செய்தபடிதான் போய்வருகிறார்கள். யாரும் போகாத இடத்துக்கு நான் போய்வந்தேன் என படமெடுத்துக் காட்டிக்கொள்வது, கெடுநோயைப் போலப் பரவிவருகிறது. அந்தப் பரவசத்தில் இவர்கள் தங்களுக்கு நேரக்கூடிய உயிராபத்தைப் பொருட்படுத்துவதில்லை.*😲😲😖
*😥🔥🌳குரங்கணி சம்பவம், இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.*🔥🍂
*🌳🍃நமது காடுளில் மலையேற்றம் என்பது வெளிநாடுகளில் பனிமலை ஏறுவது; பனிச்சறுக்கு ஆடுவது; பாறைகளில் ஏறுவது போன்று சாகசமாக இருக்கக் கூடாது.*🙆🏻♂🙆🏻♀
*🌳🍃🍃நமது மேற்கு தொடர்ச்சி மலை உலகில் உள்ள அரிதிலும் அரிதான உயிர்ச்சூழல் வளமை மிகு எட்டு இடங்களில் ஒன்று. இங்கு சாகச மனநிலையோடும் சுற்றுலா செல்லும் மனநிலையோடும் செல்லக் கூடாது.*😲😧
*🧤🧦சுற்றுலா என்பது நம்முடைய உணர்வுகளுக்கு இடமளிப்பது. ஆடலாம்; பாடலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.😃🤔🤔 ஆனால் சூழல் சுற்றுலா என்பது நாம் மௌனமாக இருந்து இயற்கையை கவனிப்பது, உணர்வது. அரிய வன உயிரின உய்விடம் இது.*🧐🧐
*🌳🍂🍃காடு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். வனத்துக்குள் நுழையும்போது, அதுகுறித்த அறிவு படைத்தவர்களுடன் செல்வது நல்லது.*👨🏻🏭👩🏻🏭
*🌱🌿இயற்கை ஆர்வம் என்பது வேறு; இயற்கை அறிவு என்பது வேறு. நன்கு பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரியாக இருந்தாலும் வன ஆய்வாளராக இருந்தாலும், காட்டுக்குள் நுழையும்போது அந்தக் காட்டைப் பற்றி நன்கு அறிந்த உள்ளூர் மக்களுடன்தான் செல்வார்கள்*🧤🧦👨🏻🏭👩🏻🏭
*☹"இனிமேலாவது காட்டுக்கு பாதுகாப்பில்லாமல் செல்லும் தலைமுறைக்கு இந்த விபத்து ஒரு பாடமாக இருக்குமென நினைக்கிறோம்.*🙁☹
* 'இயற்கை சுற்றுலா வேண்டாம்' என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்கென இருக்கும் முறையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். கடந்த ஒருவார காலமாகவே, தேனி வனப்பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீ எரிந்து கொண்டிருக்கும் பகுதிக்கு, 'ட்ரெக்கிங்' என்ற பெயரில் அழைத்துச் செல்கிறார்கள் என்றால், அந்தக் காட்டைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள்தான் இவ்வாறு செய்துள்ளனர்.*
*நேற்றைய விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட உள்ளூர் வன வழிகாட்டி ஒருவர்...*
*"இந்த இடத்துலையா உயிரை விட்டாங்கனு நினைக்கும் போது வயித்தெரிச்சலா இருக்கு, உயிர் விடக் கூடிய அளவிற்கு இது அபாயமான பகுதி இல்லை" என்கிறார்.*
*காட்டைக் காடாக வைப்பது, மனிதருக்கு அழகு மட்டும் அல்ல; ஆபத்தில் இருந்து காப்பதும்கூட என்பதை எல்லாரும் உணர்ந்துகொள்வது, காலத்தின் கட்டாயம்.*
🙏 *நன்றி* 🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
*🥇 க நிருபன்கதிர், Jaiganesh, SP Vignesh* 👏👏👏
*🥈 ஆண்டவன் கட்டளை Ak* 👏
*🥉 Selam.saravanan, Vijayanbalu epms, Prakash B* 👏👏👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
*🥇 sriramkrm, All Is Well* 👏👏
*🥈 மதுரை மலைராஜ்📿, பாலசுப்பிரமணியன் * 👏👏👏
*🥉 பிரதீப் விஸ்வா, d navaneethakrishnan,* 👏👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*🏆 சிறந்த அட்மின்*_ 🏆
👏 *🏆🏆🏆KS🏆🏆🏆* 👏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*🌳🤷🏻♂🌳நம்மிடம் ஐந்தில் ஒரு பங்கு காடு இருக்கிறது. வனத்துறையை வருமானம் வராத துறையாக அரசு பார்க்கிறது.ஆகவே இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவு.*☹🙁
*🌳🤔🍃நமது பல தலைமுறைக்கான தண்ணீரை, மூச்சுக்காற்றை பாதுகாக்கும் துறையாக அரசு இதைப் பார்க்க வேண்டும். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எந்த எண்ணிக்கையில் ஆள்கள் நிரப்பப்பட்டார்களோ, அதே எண்ணிக்கையில்தான் இப்போதும் பணியாள்கள் உள்ளனர்.*😥😥
*🌳🌳காட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளைப் போடுகின்றனர். இதனால், விதிமீறி உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. விளைவுகளுக்கு முக்கியக் காரணம் இதுதான்.*🎭🎯
*🐘🐆🐅வன உயிர்களின் பார்வையில் இருந்து கவனித்தால்தான், குரங்கணி போன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். வணிக சுற்றுலாவை நோக்கி, சாலைகள் அதிகரிக்கின்றன. இதன் எதிர்கால அபாயத்தை அரசுகள் உணர வேண்டும்.*🧐🤝🙏
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்*
*போகூழால் தோன்று மடி*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*🌳 அறிந்து கொள்வோம்* 🌳
*ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.*
*🔥 தெரிந்து கொள்வோம்* 🔥
*ஆழமறியாமல் காலை இடாதே*
*🍃 புரிந்து கொள்வோம்* 🍃
*இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment