Wednesday, 14 March 2018

_சிரியாவில் நடைபெரும் போர் என்ற மனிதநேயமற்ற கொலைகளும்.._* *_அதற்காக தமிழர்களின் வேண்டுதல்களும் ஓர் அலசல்._*


       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :02.03.2018.* 
         🌹 *கிழமை :வெள்ளிக்கிழமை*
____________________________________
*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*_ஒரு மனிதன் என்று அனைவரையும் ஒற்றுமையாக பார்க்கும் சமநிலையை மறக்கிறானோ.._*

*_அன்றே அவன் இவ்வுலகில் வாழ தகுதியற்றவனாகிறன்._*

   *_- 💝பாதிக்கபட்டவனின் குரல்💝_*

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
*பாதிக்கப்பட்டவனின்  குரல்*
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

*_எந்த இடம் வலி கண்டாலும் முதலில் கண் கலங்குவது தமிழ் இனம் மட்டுமே_*

*_தாக்குதலை நிறுத்துங்கள் சிரியா அரசே.._*

*_உங்களுக்கு அம்மக்களை பிடிக்கவில்லையென்றால் எம் தாய் தமிழ்நாட்டிற்க்கு வழியனுப்பி வையுங்கள்_*

*_கூத்தாடிகளை வாழ வைத்த எங்களால் அந்த பிஞ்சு குழந்தைகளை வாழ வைக்க முடியாதா._*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*_சிரியாவில் நடைபெரும் போர் என்ற மனிதநேயமற்ற கொலைகளும்.._*

*_அதற்காக தமிழர்களின் வேண்டுதல்களும் ஓர் அலசல்._*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

           *_💝பாகம் - 1⃣💝_*
        💐💐💐💐💐💐💐💐

*_உலகின் அழகிய நகரங்களைக் கொண்ட சிரியா, மெள்ள நரகமாக மாறி வருகிறது சிரியா வரலாற்றில் அழியாச் சுவடுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு நிற்கிறது. மனித குலம் பார்த்திராதக் கொடூரங்கள் அங்கு அரங்கேறி வருகின்றன. கொத்துக் கொத்தாக கொல்லப்படும் உயிர்கள், பாதுகாக்க வேண்டிய அரசே பொது மக்களை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது. அங்கே மனிதநேயம் முற்றிலும் மரணித்து போயிருக்கிறது. ஒரு தலைமுறையே அழிந்துபோய்விட்டது. பூமியின் நரகமாக விளங்கும் சிரியாவில் என்னதான் நடக்கிறது? இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது? அதற்கு ஏன் உலகில் யாருக்கும் இல்லாத அக்கறை தமிழர்களுக்கு ஏற்பட்டது? வாருங்கள் காண்போம்._*

*_சுமார் 30 வருடங்களாகச் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் ஆசாத். இவர், 1990-ல் 'எதிர்க் கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது' என வெளிப்படையாக அறிவித்தார். இதனால், எதிர்க் கட்சிக்காரர்களின் பகையை அதிக அளவில் சம்பாதித்து வைத்திருந்தார். அப்போது, சில உள்நாட்டுப் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 98 சதவிகித வாக்குகளைப்பெற்று, நான்காம் முறையாக அதிபரானார் ஹஃபெஸ் அல் ஆசாத். பின்னர், இவருடைய இரண்டு மகன்களில் மூத்தவரான பசல் அல் ஆசாத்-தான் அடுத்த அதிபர் என மக்கள் நினைத்திருந்த நேரத்தில், கார் விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்தார்._*

*_ஷியா இயக்கத்தைச் சார்ந்த ஹஃபெஸ் அல் ஆசாத்தின் இளைய மகனான பஷர் அல் ஆசாத், தேர்தலில் போட்டியிட்டு அதிபரானார். இவர் மீது கிளர்ச்சியாளர்களும், பயங்கரவாதிகளும் தனிக்கவனம் செலுத்த முக்கியக் காரணம்... 70 சதவிகிதத்துக்கு மேல் சன்னி பிரிவு மக்கள் வாழும் ஒரு நாட்டை, ஷியா பிரிவைச் சார்ந்த ஒருவர் ஆளுவது என நினைத்ததன் விளைவுதான் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கான ஆரம்பம். அதுமட்டுமல்லாமல், பஷர் அல் ஆசாத்தால் தொடங்கப்பட்ட 'சிரியன் எலெக்ட்ரானிக் ஆர்மி'யும் கிளர்ச்சியாளர்களையும், பிற நாட்டவர்களையும் கோபம் கொள்ளவைத்தது. இந்த ஆர்மியின் முக்கிய நோக்கம் துப்பாக்கி ஏந்திப் போராடுவது அல்ல, சைபர் அட்டாக். ஆம், எதிரிகளின் வலைப்பக்கங்களை ஹேக் செய்து தனக்குத் தேவையான தகவல்களை எடுப்பதாகும். இதுவும் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததற்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைந்தது._*

*_பஷர் அல் ஆசாத் தலைமையிலான ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க் கட்சிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த இருபிரிவுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நடக்கும் இந்த யுத்தமே, அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை அடியோடு அழித்து வருகிறது._*

*_சிரியாவில் உள்நாட்டுப் போரானது, ஒரு மதத்தின் இரு பெரும் பிரிவுகளுக்குள்ளேயே நடைபெறத் தொடங்கியது. இதிலிருந்து தனியாக உருவான அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா). இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். ஆரம்ப காலத்தில் சிரியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பானது, தற்போது உலகம் முழுவதிலும் இயங்கிவருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் உள்ளவர்கள், மதத்தை பற்றிய தவறான கருத்துகளை அங்குள்ள மக்களிடம் சொல்லி, அவர்களை தங்கள் வசபடுத்திக்கொள்வதாகவும், சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து பயங்கரவாதிகளாக மாற்றிவருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், பல அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர்.  2012-முதல் இதுவரை இந்த அமைப்பால் தனிப்பட்ட முறையில் 5லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த அமைப்பை அழிக்கும் நோக்கத்தில் சிரியா அரசு பல முறை தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த அமைப்புக்கு உலகில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வருவதால், இவர்களின் கை சிரியாவை நோக்கி ஓங்க ஆரம்பித்திருப்பத்தது._*

*_ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக, பல தீவிரவாத அமைப்புகளும் சிரியாவில் தலைதூக்க ஆரம்பித்தன. உள்நாட்டு யுத்தம் ஒருபக்கம் என்றால், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் போட்டி தீவிரவாத தாக்குதல்கள் மறுபக்கம்... இது சிரியாவுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது. இதை வெறும் உள்நாட்டுப் போர் என்று அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. காரணம், ஆசாத்துக்கு ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த நாடான ஈரான், முழு ஒத்துழைப்பையும் தந்துகொண்டிருக்கிறது. மேலும், தனது நட்பு நாடான ரஷ்யாவும் முழு உதவியும் செய்துவருகிறது. அதேபோல், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் மேலாக அமெரிக்காவும் தற்போது நேரடியாகவே உதவி செய்துவருகிறது. எனவே, சிரியாவில் நடப்பதும் பிறநாடுகளால் தூண்டப்பட்ட ஒரு யுத்தமே._*

*_இவை செய்திகளின் வாயிலாக நாம் தெரிந்து கொண்டது சிரியாவில் நடக்கும் உண்மை சம்பவம் என்ன என்பது இன்றுவரை அனைத்து விபச்சார ஊடகங்களும் மறைத்துவிட்டனர் அவற்றை முழுவிபரத்துடன் காண்போம் வாருங்கள்_*



🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :02.03.2018.* 
         🌹 *கிழமை :வெள்ளிக்கிழமை*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*_சிரியாவில் நடைபெரும் போர் என்ற மனிதநேயமற்ற கொலைகளும்.._*

*_அதற்காக தமிழர்களின் வேண்டுதல்களும் ஓர் அலசல்._*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

              *_💝பாகம் - 2⃣💝_*
         💐💐💐💐💐💐💐💐💐

*_சிரியா ஏன் இப்படி பாதிக்கப்பட்டது?? என்ன பிரச்சனை என்பதை தெரிந்துகொள்ள சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும். 1900ம் வருடங்களில் இருந்த ஓட்டோமான் பேரரசு என்ற ஒரு மிகப்பெரிய சாம்ராஜம் தகரந்த பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் இரண்டு பெரிய நாடுகள் உருவாகியது. அவற்றில் இஸ்லாமியர்களின் இரண்டு பிரிவான சியா முஸ்லீம் மற்றும் சன்னி முஸ்லிம் ஆகிய இருப்பெரும் பிரிவினர்கள் தனிதனிநாடுகளை உருவாக்கினார்கள். சன்னி முஸ்லிம் பிரிவினர் எல்லாரும் ஒன்று சேர்ந்து சவுதி அரேபியா என்ற நாட்டை உருவாக்கினர். அந்த நாட்டில் மன்னராட்சி அமைந்தது. அதே நேரத்தில் சியா முஸ்லிம் பிரிவினர்கள் ஒன்று சேர்ந்து ஈரான் என்ற நாட்டை உருவாக்கினார்கள். ஈரான் நாட்டில் மக்களாட்சி நடைபெற்றது._*

*_ஆனால் சவுதி அரேபியாவில் மன்னாராட்சி முறை என்பதால் மன்னர் இடும் கட்டளைகளை மக்கள் அனைவரும் பின்பற்றுவார்கள். இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த இரண்டு நாடுகளில் புதிதாக ஒரு மூலப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் எண்ணெய் வளம் எண்ணெயின் தேவை உலகமுழுக்க அதிகரித்ததால் அனைவரும் எண்ணெய் வளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தனர். இந்த எண்ணெய் வளங்கள் அதிகமாக இருப்பது கிழக்கு சவுதி, ஈராக் மற்றும் சிரியாவில் தான் அதிகமாக கிடைத்தது._*

*_முதலில் அமெரிக்காவானது எண்ணெய்க்காக சவூதி அரேபியாவில் மன்னரை நாடியது. சவுதியில் மன்னராட்சி என்பதால் மன்னிரின் ஒப்புதல் கிடைத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் ஒரு நிபந்தனையை சவுதி அமெரிக்காவிடம் முன்நிறுத்தியது அதாவது இஸ்லாமியர்களின் தலைவர்களாக சவுதி மன்னர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவும் இந்த உடன்படிக்கைக்கு ஒப்பு கொண்டதால். சவுதி அரேபியா மன்னரும் எண்ணெய் கிணறு தேவைகளை அமெரிக்காவிடம் வழங்கியது. இதே நேரத்தில் ஈரானானது இந்த நிர்பந்தத்தை நிராகரித்தது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி யாருக்கு செய்ய வேண்டும் என்ற முடிவை நாங்கள் தான் எடுப்போம் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தை நிராகரித்தது. ஏனெனில் ஈரானில் மக்களாட்சி நடைபெறுவதால் ஈரானில் ஒப்புதல் வாங்குவதில் அமெரிக்காவிற்க்கு சிரமம் ஏற்பட்டது._*

*_சவுதி அரேபியா அமெரிக்காவிடம் எண்ணெய் கிணறுகளை ஒப்படைத்து அமெரிக்கா நினைக்கும் தொகைபடி ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. ஆனால் ஈரானானது நான் என்ன விலைக்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் எங்கிருந்து ஏற்றுமதி செய்வேன். இதில் அமெரிக்கா தலையிட கூடாது என்ற கொள்ளையில் பிடிவாதமாக இருந்தது. இது அமமெரிக்காவிற்க்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது. காரணம் அமெரிக்க உலக நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர எண்ணியது ஈரான் ஆனது இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு குறைவான தொகையில் கொடுக்கும்போது அமெரிக்காவால் மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது._*

*_இங்கு தான் அமெரிக்கா தனது சித்து விளையாட்டை ஆரம்பித்தது. ஈரான் அரசை நிலைகுலைய வைக்க திட்டம் தீட்டியது.. ஈரான் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அரசுக்கு எதிராக திசைதிருப்பியது. பின்னர் அமெரிக்காவின் கைகூலியாக ஒரு தலைவரை ஈரானில் நியமித்தது. அந்த தலைவர் முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டளையை செயல்படுத்தியது. உதாரணமாக இஸ்லாமிய நாடாக இருந்த ஈரானில் திடீரென்று மதுபானவிடுதிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகட்டுபாடு தளர்ப்பு மேலும் ஈரானின் அனைத்து விதிமுறைகளும், கட்டுபாடுகளும் முற்றிலும் தகர்க்கபட்டு மேலை நாட்டு கலாச்சாரத்தை ஈரானில் அமல்படுத்தியது._*

*_ஈரானில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அங்குள்ள இஸ்லாமிய தலைவர்கள் அங்குள்ள மக்கள் மூலமாக புரட்சி செய்து ஈரான் அரசை துக்கி எரிந்து பின்னர் அங்கிருக்கும் இஸ்லாமிய தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். இஸ்லாமிய தலைவர்கள் இருந்தாலும் மற்ற மதங்களை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொண்டு ஒரு நல்ல சிறப்பான ஆட்சியை ஈரான் கை கொண்டிருந்தது._*

*_அதே நேரத்தில் அமெரிக்காவை சேர்ந்த பொருட்களை ஈரானில் இறக்குமதி செய்ய தடைவிதித்தது. அமெரிக்காவிடம் எண்ணெய் கிணறுகளை ஒப்படைக்கமாட்டேன் என்ற நிலைபாட்டை மீண்டும் உறுதியாக கொண்டிருந்தனர். எனவே அமெரிக்காவானது சவுதியின் எண்ணெய் கிணறுகளை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்த ஈரான் மற்றும் சவுதி அரேபியாவிற்க்கு இடைபட்ட சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் இருந்தன. இவ்விரண்டு நாடுகளில் ஈராக் நாடானது இத்தனை நாட்களாக சவுதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகளை சண்டை போடாமல் பார்த்துகொண்டது._*

*_இந்த ஈரான் நாட்டின் அன்றைய தலைவராக சதாம் உசேன் இருந்தார். ஈரானில் சன்னி மற்றும் சியா முஸ்லிம்கள் இருந்தனர். இவ்விரு பிரிவினருக்கும் எந்த பிரச்சனையும் வராத வண்ணம் தன் கட்டுப்பாட்டில் வைத்து. சதாம் உசேன் சிறப்பாக ஆட்சி செய்தார்._*

*_அமெரிக்கா தனது சித்து விளையாட்டின் இரண்டாம் ஆட்டத்தை ஈராக்கின் மீது செலுத்தியது. அதாவது war on terror என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதாவது சதாம் உசேன் அவர்களிடம் ஈராக்கில் உள்ள அணு ஆயுதங்களை மக்களின் பாதுகாப்புக்காக எடுக்க போவதாக கூறி ஈராக்கில் அமெரிக்கா போர் தொடுத்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஈராக்கில் உள்ள அனைத்து எண்ணெய் கிணறுகளும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சதாம் உசேன் அவர்களையும் தூக்கிலிட்டனர். ஆனால் கடைசிவரை அணு ஆயுதம் ஒன்று கூட ஈராக்கில் இருந்து எடுக்கவில்லை._*

*_இரண்டாம் திட்டம் வெற்றியடைந்ததும் சிரியா மற்றும் ஈரான் தவிர மீதமுள்ள ஈராக் மற்றும் சவுதி அரேபியா அமெரிக்காவின் கட்டுக்குள் வந்தது. அதன்பிறகு ஈரானானது தனது நிலைப்பாட்டை காத்துக்கொள்ள சிரியாவில் உள்ள சியா முஸ்லிம்களை (ஈரான் முஸ்லிம்கள்) சன்னி முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட வைத்தனர். அப்போது ஈராக்கின் அதிபர் பசார்-அல்-அசத் ஆவார் அவர் சியா முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர். எனவே ஈரானுக்கு இது மிகவும் சுலபமாக இருந்தது. பின்னர் அமெரிக்காவும், சவுதிஅரேபியாவும் ஈராக்கில் இருக்கும் சன்னி முஸ்லிம்களை ஆதரிக்க தொடங்கினர். இவ்வாறாக சிரியாவில் ஏற்பட்ட புரட்சி போர்களமாக மாறியது._*


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :02.03.2018.* 
         🌹 *கிழமை :வெள்ளிக்கிழமை*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*_சிரியாவில் நடைபெரும் போர் என்ற மனிதநேயமற்ற கொலைகளும்.._*

*_அதற்காக தமிழர்களின் வேண்டுதல்களும் ஓர் அலசல்._*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

                 *_💝பாகம் - 3⃣💝_*
               💐💐💐💐💐💐💐💐

*_இந்த போரில் பலிகாடாக பயன்படுத்தபட்டது அங்குள்ள சாதாரண மக்களே. சவுதி மற்றும் அமெரிக்கா ஒரு குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்தை எதிர்த்து போராட வைத்தனர். ஈரானானது சிரியா அரசாங்கத்தை போராடும் மக்களுக்கு எதிராக திருப்பிவிட்டனர். பின்னர் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா போரில் களமிறங்கியது. ரஷ்யா இதில் உள்ளே வந்த பிறகு இரண்டு இரண்டு எதிர் எதிர் அணிக்காக விளையாட தொடங்கினர். இவர்களின் விளையாட்டு பொருளாக சிரியா மக்கள் பயன்படுத்தபட்டனர். இந்த போராட்டம் நடைபெரும் போது அமெரிக்கா ஆதரவு தெரிவித்த சன்னி முஸ்லிம் பிரிவினரில் இருந்து ஒரு கூட்டம் தனியே பிரிந்து வந்தது. அந்த குழுவின் பெயர்தான் ISIS அமைப்பு ஆகும். அந்த குழுவானது ஈராக்கில் இருந்து ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, ஈராக் மற்றும் சவுதி அரேபியா நாடுகளை வெளியேற்றி ஈராக்கை நாங்கள் ஆளுகின்றோம் என்ற கோரிக்கையை வைத்து போரிடத்துவங்கியது. அவர்களின் செயல்கள் அமெரிக்கா, சவுதி, ஈரான், ரஷ்யாவை விட மிகவும் மோசமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த அமைப்பானது பன்மடங்கு பெருகியது. கண்ணில் காண்பவர்களை பாரபட்சம் பாராமல் கொன்று குவித்தனர். அவர்களின் கொள்கை ஒரு இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே ISIS-ன் முழுவிரிவாக்கமே Islamic State Of Iraq and Syria ஆகும்._*

*_ஈராக் மற்றும் சிரியாவில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடுகளை உருவாக்க விருக்கிறோம் மற்ற நாடுகளை வெளியேறும்படி அவர்கள் போரிடத் தொடங்கினர். எதிர்பாராதவிதமாக உருவாகிய இந்த அமைப்பால் ரஷ்யா, ஈரான்,சவுதி மற்றும் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. மக்கள் யாரெல்லாம் அவர்களுக்கு அடிபணியவில்லை என்றால் அவர்களை கொடூரமான முறையில் கண்முடித்தனமாக கொன்று குவித்தனர். முதலில் இந்த நான்கு நாடுகளும் எண்ணெய் என்ற கொள்கையை கொண்ட போரானது. ISIS அமைப்பை அழிக்க வேண்டும் என்ற கொள்கையை கையில் எடுத்தது. ISIS அமைப்பு முதலில் வளர்ந்து வந்தாலும் தற்போது அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது._*

*_மேலும் ISIS போன்று மேலும் பல அமைப்புகள் உருவாகின. 👇🏻👇🏻_*

*_*அல்-நுஸ்ரா முன்னணி(al nusra front),*

*தர்க்கிஸ்தான் இஸ்லாமிக் ராணுவம்(turkistan islamic party),*

*அஹ்ரார் அல் ஷாம்(ahrar al-sham),*

*அல் அப்பாஸ் பிரிகேட்(al abbas brigade),*

*நூர் அல் தின் அல் ஜன்கி(Nour al-Din al-Zenki),*

*சுதந்திரப் பங்குடியினர் ராணுவம்(Army of Free Tribes),*

*சுதந்திர இஸ்லாத் ராணுவம்(Islamic Freedom Brigade). இவற்றில் ISIS மட்டுமே அனைத்துக்ஷநாடுகளுக்கும் பெரிய தலைவலியாக இருந்தது..*

*_சிரியா என்ற ஒரு நாட்டில் நான்கு நாடுகள் எண்ணெய்களுக்காவும் ISIS அமைப்பானது இஸ்லாமிய நாடு உருவாக்குவதற்காகவும் சம்பந்தமில்லாத போர் புரிய தொடங்கியது. இதில் பாதிக்கபட்டது அப்பாவி மக்களும் ஒன்னும் தெரியாத பச்சிளம் குழுந்தைகளும் தான் சியா மற்றும் சுன்னி முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி. இந்த போரில் சவுதி, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா குளிர் காய்ந்தது சிரியா அதிபர் பசார்-அல்-அசத் சிரியாவின் உள்ளவர்கள் யார்யாரெல்லாம் போராளிகள் சாதாரணமானவர்கள் என்று பிரித்து பார்க்க முடியாமல் அனைவரின் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தியது. ரசாயன ஆயுதங்களும் இபாபோரில் பயன்படுத்தபட்டதாக ஐ.நா குற்றம் சாட்டியது. ஆனால் ஈரான் ஆனது இந்த தாக்குதல்களை அமெரிக்கா தான் நடத்தியது என்றும் மாறி மாறி குற்றம் சுமத்தினர். இப்படி குழப்படிநிறைந்த சூழலில் பாதிக்கபட்டவர்கள் சாதாரண மக்களே இதுவரை சிரியாவில் 5லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்._*

*_மேலும் 70லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்களோட வீடுகள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். அம்றக்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். எங்களுக்கு யாராவது அடைக்கலம் தாருங்கள் என்பதே ஈரான் மற்றும் சவுதி இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளும் இங்கு யார் சாதாரண மனிதர்கள் யார் திவிரவாதிகள் என்று தெரியாததால் அவர்களும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். எங்கும் போகவும் முடியாமல் வாழவும் முடியாமல் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர் சிரியா மக்கள். இது தான் சிரியாவில் நடைபெரும் போர்விபரமாகும். சிரியாவில் நடக்கும் போரில் தற்போது வடகொரியாவும் களம் இறங்கி இருக்கிறது. இரண்டு வருடமாக மறைமுகமாக இதில் செயல்பட்டு வந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது._*

*_சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். குண்டுகள் கெமிக்கல் குண்டுகள் இந்த போரில் தடை செய்யப்பட கெமிக்கல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் இது செய்யப்படுகிறது. இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும்.  இந்த குண்டுகள் சிரியா போரில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிகுறியுடன் பலர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை இந்த அறிகுறி கொண்டு 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் அங்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்._*

*_குண்டுகளை அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறது. 2013ல் சிரியாவின் அனைத்து விதமான கெமிக்கல் குண்டுகளும் அழிக்கப்பட்டது. அதன்பின் புதிதாக வடகொரியா இப்படி உதவி செய்து இருக்கிறது. இந்த குண்டுகளில் காணப்படும் பல முக்கியமான வேதிப்பொருட்கள் வடகொரியா குண்டுகளால் காணப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க படை மிதவாத போராளிகளுக்கு உதவுவதால், வடகொரியா அதற்கு எதிரான நிலையை எடுத்து இருக்கிறது. இதுதான் நிறைய குழந்தைகளின் உயிரை பலிவாங்கி இருக்கிறது._*

*_இந்த குண்டுகள் ஜநாவால் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஈராக் போரிலும், இலங்கை போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது. தற்போது சிரியா அரசும், ரஷ்யா அரசும் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறது._*

*_ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சனிக்கிழமை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, சிரியா கிளர்ச்சியாளர்கள் பகுதியில் 30 நாள் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தினார். ஆனால் அந்த உத்தரவை மதிக்காமல் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கௌட்டாவில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா உத்தரவு பிறப்பித்தது._*

*_ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தனர். உணவு மற்றும் மீட்பு உதவிகளை பெறவேண்டும் என்றால், தங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்குமாறு அவற்றை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆண்கள் கூறியுள்ளனர். உணவு மற்றும் தங்குமிடம் தேவைப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தேவைகளுக்காக குறுகிய காலம் திருமணம் செய்துகொள்வது, உதவிப் பொருட்களை பெற வரும் பெண்களின் தொலைபேசி எண்களைப் பெறுவது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாக ஐ.நாவின் மக்கள் தொகை நிதியகம் (United Nations Population Fund) நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கபட்டது._*

*_மேலும் சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு கனடாவில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 300 பேரு, கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் அதிகமானவர்களுக்கு அந்த நாட்டில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களுக்காக எளிதாக விசா, குடியுரிமை பெற வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் இவர்களை பற்றி தகவலை பகிர்ந்து கொள்ள கடந்த டிசம்பர் மாதமே 'வெல்கம் டூ கனடா' என்ற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அந்நாட்டு அதிகாரிகள் பலர் டிவிட் செய்து வருகிறார்கள். அதேபோல் அகதிகளாக நாட்டிற்குள் வரும் மக்களும் டிவிட் செய்து வருகிறார்கள். 2015ல் இருந்தே கனடா இது போன்ற அகதிகளுக்கு வீடு அளித்து வருகிறது. அதேபோல் பல சிரியா அகதிகள் தங்களுக்கு கனடாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜஸ்டின் என்று கனடா பிரதமர் பெயர் வைத்து இருக்கிறார்கள். இவர்களுக்கு படிக்கவும் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஜஸ்டின் அந்நாட்டு புதிய குடிமக்களிடம் பேசினார். அப்போது ''இது எங்கள் நாடு மட்டும் இல்லை. இனி உங்கள் நாடும். இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்._*

*_இப்படியாக ஒரு தலைமுறையே கண்முன் கொடூரமாக அழிக்கபட்டது. இந்த போர் பற்றிய விபரத்தை படித்ததும் இது எங்கோ ஒரு இடத்தில் நடைபெற்றது போல தோன்றுகிறதா. அதை எப்படி மறக்க முடியும் என்கிறீர்களா வாருங்கள் அடுத்த கட்டத்தில் அதை பற்றி காண்போம்._*


 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :02.03.2018.* 
         🌹 *கிழமை :வெள்ளிக்கிழமை*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*_சிரியாவில் நடைபெரும் போர் என்ற மனிதநேயமற்ற கொலைகளும்.._*

*_அதற்காக தமிழர்களின் வேண்டுதல்களும் ஓர் அலசல்._*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

                   *_💝பாகம் - 4⃣💝_*
                 💐💐💐💐💐💐💐💐

*_சிரியாவிற்காக தமிழர்கள் வேண்டுவதற்கான காரணம் சரியா என்பதை தெரிந்து கொள்ளும் முன்பு 2000 வருடங்களுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் புறநானுற்றில் சொல்லின் பாடலை நினைவு படுத்துகிறேன் "யாதூம் ஊரே யாவரும் கேளிர்" இந்த பாடல் வரிகளை அப்தூல்கலாம் ஐயா தமிழில் பேச்சாளர்கள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ பேசச் சென்றால் இந்த பாடல் வரியை மேற்கோளாகக்காட்டத் தவறுவதே இல்லை காரணம் உலகிற்க்கே மனிதநேயத்தை ஊட்டி வளர்த்தவன் தமிழன்_*

*_தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனையை தீர்க்க வழியில்லை இதில் சிரியாவின் பிரச்சனையை தீர்க்க போகிறீர்களா? தற்போது நடக்கும் சிரியாவின் பிரச்சனையை பார்த்து பொங்கும் தமிழர்கள் ஈழத்தின் போது கொந்தளிக்காதது ஏனோ? என்று பலரும் தங்கள் ஆதங்க குரலை வெளிப்படுத்தினர்._*

*_அவர்களின் ஆதங்கம் சரியானதே காரணம் சிரியாவில் ஒரு தலைமுறை அழிக்கப்பட்டது அழிக்கப்பட்டது ஆனால் ஈழத்தில் நம் மொத்த இனமும் அழிக்கப்பட்டது._*

*_ஆனால் ஈழத்தில் நம் மக்களுக்காக குரல் கொடுக்காததால் யார் நான் ஏன் அவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது தமிழனின் சுயநலபோக்கை காட்டுகிறது. இங்கு அனைவருடைய முதல் அடையாளமே மனிதன் தான் பிறகு தான் தமிழன், ஆங்கிலேயன், மலையாளி மற்றும் இந்த இந்த மதம் வந்தது. ஒரு வேளை நீங்கள் நாய், எருமை, பன்றியாக பிறந்திருந்தால் உங்களுக்கான அடையாளம் ஒன்று தான் அது மிருகம் அதை தவிர இது தமிழ் மிருகம், ஆங்கிலேயன் மிருகம், இந்த மிருகம் இந்த மதத்தை சேர்ந்ததுனு உங்களை அடையாளம் காட்டிக்கொள்ள முடியாது._*

*_ஈழத்தில் பிரச்சனை நடக்கும் போது நீங்கஎன்ன செய்தீர்கள், ஈழத்தின் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா என்று சில பெரியவர்கள் எங்களிடம் கேட்டிருந்தார்கள். அன்று பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளாக   நாங்கள் ஈழத்திற்காக பிராத்தனை செய்தது உங்களுக்கு கேட்கவில்லையா.?? அன்று நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் டி.வியை பார்த்து மிச்சர் சாப்டு உச்சு கொட்டி வீட்டிலே தானே இருந்தீர்கள். துரோகம் செய்த அரசை அன்று உங்களால் தூக்கி எரிய முடிந்ததா. ஈழத்திற்க்கு அரசு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் துரோகம் செய்தனர். அன்று எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று ஈழத்தில் உள்ளவர்கள் எண்ணிணால் ஜல்லிகட்டு போராட்டத்தின் போது நாம் வாங்கிய அடியை நினைத்து முகநூலில் நேரடி  காணொலி முலமாக ஆதரவும், ஆறுதல்களும் தெரிவித்து இருக்கமாட்டார்கள்._*

*_அமெரிக்கா தான் இந்த பிரச்சினைக்கு முழுக்க காரணமாகிறது என்று அனைவரும் அறிந்த ஒன்றே ஆனால் அமெரிக்கா செய்திதாள்களில் வரும் செய்திகளை உண்மை என்று நினைப்பவர்களை என்னவென்று சொல்வது. திருடனிம் நீ திருடினாயா என்று கேட்பது போல் உள்ளது..🤣_*

*_தமிழ்நாட்டை காப்பாற்ற வழியில்லை இதில் சிரியாவை உங்களால் எப்படி காப்பாற்ற முடியும் என்ற கேள்வி மிகவும் நகைப்புக்குறியதாக உள்ளது. தமிழ்நாட்டை ஆழ்வதற்க்கு புறம்போக்குகளிடமும், குற்றவாளிகளிடமும் கை நீட்டி காசு வாங்கி அவர்களை அரசு அறியணையில் ஏற்றி இன்று தமிழ்நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்று புலம்புவது ஏனோ?? வினை விதைத்தவன்  வினை அறுப்பான்._*

*_அன்று ஈழத்திற்காக  தனது குரலை தெரியபடுத்த சமுகவளதளங்கள் பெரிதளவில் உபயோகத்தில் இல்லாமல் இருந்தது. அன்றைய விபச்சார ஊடகங்கள் என்ன சொன்னதோ அதுதான் உண்மை என நம்பினோம் அன்று மாணவ,மாணவிகளாக நாங்கள் ஈழத்திற்காக ஒலித்த குரல் உங்கள் காதுகளில் விழவில்லை ஆனால் இன்று நாங்கள் சிரியாவிற்காக ஒலிக்கின்ற குரல் உங்கள் காதுகளில் விழுவதற்கு காரணம் சமுக வளைதளங்களே அன்று இதே போல் கலந்துரையாடல், டுவிட்டர், முகநுல் போன்ற சமுக வளைதளங்களை பற்றி புரிந்துணர்வு நம்மிடம் இருந்திருந்தால். எங்களின் கர்ஜனையில் உலகமே மிரண்டு போய் இருக்கும்._*

*_சிரியாவில் உள்ள மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க கனடா யாரு சிரியா கனடாகனவுக்கு என்ன செய்தது.?? அவ்வளவு ஏன் தமிழர்கள் இன்று வரை கனடாவிற்க்கு என்ன செய்தோம்?? அதுதான் மனிதநேயம். உலகின் எம்மூலையில் யார் கஷ்டபட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக ஒலிக்கின்ற முதல் குரல் தமிழனுடையதாக இருக்கும். காரணம் போரின் வலியும் வேதனையும் நன்கு உணர்ந்தவன் தமிழன் நான் பட்ட வேதனையை யாரும் பட கூடாது என்று ஒலிக்கும் குரல் இது தான் எங்கள் தமிழ் இனம் தமிழ் கலாச்சாரம். உங்களை அங்கு சென்று போரிட சொல்லவில்லை அவர்களுக்காக கடவுளிடம் வேண்டிகொண்டு அரசாங்கத்திடம் கோரிக்கை தான் வைக்க சொன்னார்கள். உங்களால் முடியவில்லை நான் சுயநலவாதியென்றால் அமைதியாக வேடிக்கை பார்க்கவும் வேண்டுபவர்களை தடுப்பதறக்கும் தட்டி கேட்பதற்க்கும் உங்களுக்கு என்ன உரிமை இருக்கு._*

*_பெயரளவில் மட்டுமே இன்று வரை நாம் தமிழன் ஆனால் தமிழர்களுடைய மரபுகளையும் கலாச்சாரத்தையும் பற்றி ஒரு மண்ணும் தெரிந்து கொள்ளாமல் வீரதமிழன் விவேக தமிழன் என்று எக்காளமடிப்பது ஏனோ??_*

*_இப்ப எப்படி தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று அனைவருக்கும் தோன்றலாம். இந்த பிரச்சினைக்கு முடிவு என்பது இல்லை காரணம் எண்ணெய் வளங்களுக்காக உள்ளே வந்து போர் புரியும் நாடுகள் நாங்கள் எண்ணெய் எடுக்கமாட்டோம் என்று பின் வாங்க மாட்டார்கள். அவ்வாறு பின் வாங்கினாலும் ISIS அமைப்பானது அவர்களின் கொள்கையை நோக்கி மனிதர்களை கொன்று குவிப்பார்கள். தற்போது அங்குள்ள மக்களுக்கு செய்யும் உதவி அவர்களுக்கான அடைக்கலம் மட்டுமே தவிர இந்த பிரச்சனை முடிவடையாது._*

*உலக நாடுகளே...ஓர் இனம் வாழ வழித்தெரியாமல் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை வல்லரசுகளைப்போல பணமோ, பொருளோ அல்ல; அமைதியான வாழ்க்கை மட்டுமே. அவர்கள் வாழட்டும்... நிம்மதியாக வாழட்டும்... தங்கள் குழந்தைகளோடும், உறவினர்களோடும் மகிழ்ச்சியாக வாழட்டும். பூமி அவர்களுக்கும் சொந்தம்தான்_*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

           *சிறந்த அட்மின்*

 🏆 *ராமலிங்கம்       அங்கப்பன்*🏆

👑 *கலந்துரையாடல்1⃣*👑

*🏆🥇 @⁨🏁ஜான்🔴ழைழா🏁⁩*

*🏆🥈 @⁨ஞாலமைந்தன்⁩*

*🏆🥉@⁨R.j⁩  @⁨S. காவியா பில்டர்ஸ்⁩*

👑 *கலந்துரையாடல்2⃣*👑

*🏆🥇  @⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩*

*🏆🥈@⁨sriramkrm⁩*

*🏆🥉 @⁨பாலசுப்பிரமணியன்.⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

💐 *நன்றி வணக்கம்*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤

💐 *கருத்து* 💐
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

*_⚜கருத்து⚜_*

*_💝ஐயா ஒரு கதை சொல்லட்டுமா🤪_*

*_ஒரு பயணிகள் கப்பல் புயலில் மாட்டிக்கொண்டது. உடைந்து மூழ்கியும் போனது. அந்தக் கப்பலில் பயணம் செய்த இரண்டு பேர் மட்டும் எப்படியோ, கையில் கிடைத்த மரக்கட்டைகளைப் பற்றிக்கொண்டு தப்பித்து, ஓர் ஆளரவமற்ற தீவில் கரையொதுங்கினார்கள். இருவரும் நண்பர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்பது இருவருக்குமே தெரியவில்லை. அவர்களைக் காப்பாற்றக் கடவுளைத் தவிர வேறு துணை இப்போது இல்லை._*

*_எனவே, பரஸ்பரம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அந்தத் தீவின் ஒரு கரையில் ஒருவரும், அதற்கு நேர் எதிர்ப்புறத்தில் இன்னொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டியது... யாராவது ஒருவரின் வேண்டுதலுக்குக்கூடவா செவி சாய்க்காமல் போய்விடுவார் கடவுள்? உதவி வரும்... அப்போது இருவருமே இந்தத் தீவிலிருந்து தப்பித்து, தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிடலாம். உதவி ஏதும் கிடைக்காத, உதவிக்கு ஆள் யாரும் இல்லாத, எதிர்காலம் என்னவென்றே புரியாத சூழ்நிலையில் இந்த ஒப்பந்தம் இருவருக்குமே சரி என்று தோன்றியது._*

*_ஒப்பந்தப்படி இருவரும் பிரிந்து தீவின் எதிர் எதிர் திசைக்குப் போனார்கள். பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள். முதலாமவன் கடவுளை நினைத்து வேண்டுகோள் விடுத்தான்... ``கடவுளே... பசி... அகோரப்பசி... சாப்பிட ஏதாவது கொடு!'' இரக்கமில்லாதவரா கடவுள்?! அவன் கண்ணைத் திறந்து பார்த்தபோது, சற்று தூரத்தில் ஒரு மரம் தெரிந்தது... பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன ஆப்பிள் பழங்கள். அவன் அவற்றைப் பறித்துப் பசியாறினான். அதே நேரத்தில், இரண்டாமவன் உணவுக்கு என்ன செய்வான் என்று அவன் யோசிக்கக்கூட இல்லை. முதலாமவனுக்கு உணவுப் பிரச்னை தீர்ந்தது._*

*_அவனுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். `நான் நினைப்பதெல்லாம் நடக்கிறதே... நிச்சயம் கடவுள் இருக்கிறார்... என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறார்...' என்று யோசித்தான். அவர் கேட்ட அனைத்தையும் கடவுள் செய்தார்._*

*_அப்போதும் அவன் எதிர்த் திசையிலிருக்கும் தன் நண்பனைப் பற்றி யோசிக்கவேயில்லை.`எல்லாம் கிடைத்துவிட்டது... இனி வீடு திரும்பவேண்டியதுதான் பாக்கி. அதுவும் பிரார்த்தித்தால் கிடைக்காதா என்ன..?' அவன் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தான். அது ஆச்சர்யமான சங்கதியல்ல... அற்புதம்! கடவுள் மனமிரங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த நாள் காலையில் அவனிருக்கும் கடற்கரையோரமாக ஒரு கப்பல் வந்து நின்றது._*

*_அவன் கப்பலில் ஏறுவதற்காக விரைந்தான். அப்போதும் மற்றொரு திசையில் இருக்கும் தன் நண்பனைப் பற்றி அவன் யோசிக்கவேயில்லை. கடவுள் தன் நண்பனின் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை என்று நினைத்தான். அவன் கப்பலில் ஏறப்போகும் நேரத்தில், வானிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது... ``கொஞ்சம் பொறு... நீ ஏன் உன் நண்பனை விட்டுவிட்டுத் தனியாகக் கிளம்புகிறாய்?''_*

*_``நான் என்னவெல்லாம் கேட்டு பிரார்த்தனை செய்தேனோ, அவையெல்லாம் எனக்குக் கிடைத்தன. அது என் பாக்கியம். ஆனால், என் நண்பனின் பிரார்த்தனை தகுதியில்லாதது. அதனால்தான் அவன் கேட்ட எதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை...'' அசரீரி சொன்னது... ``நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். அவன் ஒரே ஒரு பிரார்த்தனைதான் செய்தான். அதை நான் நிறைவேற்றித் தந்தேன். அது மட்டும் இல்லையென்றால், உன்னுடைய எந்த வேண்டுதலும் நிறைவேறியிருக்காது...''_*

*_``அப்படியா கடவுளே... என் நண்பன் அப்படி என்னதான் பிரார்த்தனை செய்தான்?'' ``உன்னுடைய எல்லா கோரிக்கைகளும், வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்..._*

*_இந்த கதை மனித நேயத்தை உணர்த்துவற்காக மட்டுமே கடமையை செய்ய பலனை எதிர்பார்காதே_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*📜 புறநானூறு பாடல் (192): 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_யாதும் ஊரே யாவரும் கேளிர்_*

*_தீதும் நன்றும் பிறர்தர வாரா_*

*_நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன_*

*_சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்_*

*_இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்_*

*_இன்னா தென்றலும் இலமே, மின்னொடு_*

*_வானம் தண்துளி தலைஇ யானாது_*

*_கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று_*

*_நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்_*

*_முறை வழிப் படூஉம் என்பது திறவோர்_*

*_காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்_*

*_பெரியோரை வியத்தலும் இலமே,_*

*_சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "(புறம்: 192)_*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆         

*_எல்லா ஊரும் எம் ஊர்_*

*_எல்லா மக்களும் எம் உறவினரே_*

*_நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை_*

*_துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை_*

*_சாதல் புதுமை யில்லை; வாழ்தல்_*

*_இன்பமென்று மகிழ்ந்தது இல்லை_*

*_வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை_*

*_பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல_*

*_இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று_*

*_தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்_*

*_ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்_*

*_சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை_*

*_பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை._*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 *💝முடிவுரை தொகுப்பாளர்கள்💝*

 *_மணி மாதேஷ் - 8428073724_*

*_💝உதயா யுவா💝 - udayayuva94@gmail.com_*
       
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 

  🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
   *9486552988*🧘🏻‍♂

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...