Friday, 13 October 2017

சிலர், வயதானவர்களை பாரமாக நினைப்பது, ஒதுக்கி வைப்பது ஏன்? அவர்களிடம் நம் பின்பற்ற வேண்டியவைகள் என்னென்ன?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :13.10.2017.*
         🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
*எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.*

*ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.*

*~ஆப்ரகாம் லிங்கன்.*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*
*சிரிக்க வைப்பவர்களுடன் இருப்பதைவிட,*

*சிந்திக்க வைப்பவர்களோடு இருப்பதே சிறப்பு.*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ==============
*சிலர், வயதானவர்களை பாரமாக நினைப்பது, ஒதுக்கி வைப்பது ஏன்? அவர்களிடம் நம் பின்பற்ற வேண்டியவைகள் என்னென்ன?*.
👴🏻👵🏻👨‍👩‍👧‍👦😞😒👴🏻👵🏻👨‍👩‍👧‍👦😞😒👴🏻

🙏  _*தாயிற் சிறந்த கோவிலும் இல்லை...!!! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை...!!!*_😇

💝 *அவர்களின் அனுபவம் தான் நமக்கு சிறந்த ஆசான்.*

🤜 *"""மண்ணுக்கு மரம் பாரமா""❓""மரத்துக்கு இலை பாரமா"""❓ ""கொடிக்கு காய் பாரமா""" ❓பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா”❓ மண்ணுக்கு மரமும்,🌳 மரத்துக்கு இலையும், ☘கொடிக்கு காயும்,🍆 👶🏻 குழந்தை தாய்க்கும் பாரமில்லை.* 🙅🏻
💔 *ஆனால்இன்றுபெற்ற பிள்ளைகளுக்கு பெற்றோரே பாரமாகி விட்டார்கள்.*😔😰

💔👴🏻👵🏻 *முதுமை ஒரு செல்லாக்காசு. இப்படி சொல்வதற்கு காரணம்.❓🤙 முதுமையினால் தள்ளாமை,😞 தள்ளாமையினால் இயலாமை,😞 இயலாமையினால் மற்றவர்களின் உதவியை நாடியே தீர வேண்டிய கட்டாயம்.😞 எப்பொழுதும் யாரோ ஒருவரின் கையை எதிர்பார்த்தே வாழ வேண்டிய சூழ்நிலை. சொந்தங்களோ, சுற்றங்களோ, எத்தனை பேர் பெற்றோரை ஒரு சுமையாக கருதாமல் பேணி பார்க்கின்றனர*்❓

❣ *பிறக்கிறார்கள், ❣ வளர்கிறார்கள், ❣படிக்கின்றார்கள், ❣வேலைக்கு செல்கின்றார்கள். 💑திருமணமும் ஆகிறது.🎯 👶🏻பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.🔪 பிறந்த பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எண்ணியே உழைத்து, உழைத்து, பிள்ளைகளை கரை சேர்க்கின்றனர்.👍 இதற்குள் வாழ்க்கை முழுவதையும் உண்ணாமல்,😰 உறங்காமல்,😰 உழைத்து ஓய்ந்து போய் விடுகின்றனர்.😰 கடமைகளை எல்லாம் முடித்ததும், கடைசிப்பயணம் உடனே வந்து விட வேண்டும். கடமையை முடிக்காதவர்களுக்கு கடமையை முடிக்கும் வரை காலனிடம் கொஞ்சம் வாய்தா வாங்கி கொள்ளலாம். ஆனால், இப்படி ஒரு ஏற்பாடு இறைவனின் படைப்பில் இல்லை. அதனால், முதுமை காலத்தில் முகப்பில் அமர்ந்து கொண்டு மோட்டை பார்த்து கொண்டு, பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருக்கின்றனர். முதுமை காலத்தில் பெரும்பாலானோருக்கு நடமாட முடிவதில்லை. நடை, உடை இன்றி நலிந்து, மெலிந்து போனபோது, மகனோ, மகளோ, சுற்றமோ உதவிக்கு வந்து கவனித்து கொள்ள மாட்டார்களா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். இன்றைய சூழலில் முதுமை உற்றத்தார்க்கும், சுற்றத்தார்க்கும் தொல்லையாகவே படுகிறது*😔😞🔪

💝 *இருபத்தி ஐந்து வருடம் பிள்ளைகளை வளர்த்து தங்க இடம் சாப்பிட உணவு அவர்களுக்கு தேவையான அனைத்தும் பெற்றோர்கள் தான் தருகிறார்கள்.*👴🏻👵🏻🙏

💔 *பசங்க சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர்கள் தயவு தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.*😔

👨‍👩‍👧‍👦 *அவர்களும் பெற்றோர்கள் ஆனால் தான், அவர்களின் அருமை தெரியும்.*👍

👴🏻👵🏻 *பெற்றோர்களால் முடியாத வயதில் என்ன கேட்கிறார்கள்❓ இருக்க இடம் சாப்பிட உணவு பராமரிப்பு இவ்வளவு தானே? இதை கூட பாரமாக நினைத்து அவர்களை ஒதுக்குவது தான் துரோகம்.*😡

👉 *நாம்ம என்ன செய்கிறோமோ அதே தான் தனக்கும் நேரிடும்.*👈

👉 *குழந்தை பருவம்*👼
👉 *இளமை பருவம்* 👨🏻👩🏻
👉 *முதுமை பருவம்*👴🏻👵🏻
*இவ்வாறு மூன்று பருவங்கள் உள்ளது.*

👶🏻 *குழந்தை பருவம்.*
*பத்து மாதம் வரை கருவில் சுமந்து மறுபிறவி அடைத்து ஒவ்வொரு பெண்ணும் குழந்தையை ஈன்றெடுக்கின்ற கண் முன்பு தெரியும் முதல்  கடவுள் தாய்.*😇

👶🏻 *குழந்தை பருவம் முதல் இளைஞர் பருவம் 👨🏻வரை கண்ணில் சுமக்கும் இன்னொரு கடவுள் தந்தை.*🙏

👨‍👩‍👧‍👦👦🏻👧🏻 *குழந்தைகளுக்குகாக அவங்க இன்பத்தை துறந்துவிட்டு பசங்களுக்குகாக இரவு பகல் பாராமல் உழைத்து பசங்களை நன்றாக வளர்ந்து படிக்க வைத்து அவர்களை நல்ல நிலையில் கொண்டு செல்வது பெற்றோர்கள்.*👨‍👩‍👧‍👦

👱👩🏻 *இளமை பருவம்.*
*இந்த பருவத்தில் நாம்ம செய்வது மட்டும்தான்சரி என்று நினைக்க கூடிய பருவம்.*😏

😏 *யாருடைய துனையும் இல்லாமல் வாழ முடியும் என்ற நினைப்பு இருக்கும்.*

💑 *ஒரு ஆணுக்கு திருமணம் ஆகிவிட்டால் பெற்றோர்களை ஒதுக்கி வைப்பது ஏன்?*🤙

👉 *அவரின் மனைவி தான் காரணமா?*❓

👉 *மருமகள் வந்தவுடன் பெற்றோர்களை கைவிட்டு விட்டார் என்று நினைக்க காரணம் என்ன?*❓🤙

👨🏻 *ஒரு மகனாய் பெற்றோர்களை கவனிக்க வேண்டும்.*👍

👨🏻 *ஒரு கணவனாக மனைவியிடம் சரியாக இருக்க வேண்டும்.* *புதிதாக வரும் பெண்ணிற்கு அவங்க குடும்பத்தினரோட புரிதல் இல்லாமல் இருக்கும்*.  *அதை சரியாக புரிய வைத்து பெற்றோர்கள் மனைவி இருவரிடத்திலும் புரிய வைக்க வேண்டும்.* 👍
*அதை தவிர்த்து வீட்டில் பிரச்சனைனு தனிகுடித்தனம் பெற்றோர்களை ஒதுங்கி இருப்பது ஆணின் சுயநலம்.*😔

👩🏻 *வேறொரு வீட்டில் இருந்து வரும் பெண்ணிற்கு புகுந்த வீடு புதிதாக இருக்கும்.*
*அப்போது மாமியார், மாமனார் மருமகளாக பார்க்காமல் மகளாய் பார்த்தாலே இந்த மாதிரி பிரச்சனை வராது.*☹🙅🏻

👱‍♀ *மருமகள்கள் தாய், தந்தையாக பார்த்தாலே பல பிரச்சனை இல்லாமல் இருக்கும்.*🙂

👴🏻😔 *தனிமைபடுத்தல்*👵🏻😔

👴🏻 *முதுமையால் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு.😔 "மண்ணும் தான் நல்ல மண்ணு மன்னவரும் நல்லவரே*

👶🏻 *மன்னவரை பெற்றெடுத்த மலைக்குரங்கே தொந்தரவு”*😔

🌍 *"பூமியும் தான் நல்ல பூமி புண்ணியரும் நல்லவரே*🙂

👶🏻 *புண்ணியரை பெற்றெடுத்த பெருங்குரங்கே தொந்தரவு”*😔

🤕 *என்று மாமியாரை வசை பாடியே, அவர் மகனை அழைத்து கொண்டு தனிக்குடித்தனம் சென்ற மருமகள்கள் உண்டு. 😔பணியின் காரணமாக வெளிநாடு சென்று விட்ட பிள்ளைகளும் உண்டு. மனம் போனபடி குணங்கள் போகாமல், குணம் மாறி பெற்றோரை பிரிந்து சென்ற பிள்ளைகளும் உண்டு. சொத்தை பிரிப்பதில்லை என்று பெற்றோரும், சொத்தை பிரி என்று பிள்ளைகளும் இருபக்கம் இழுக்க, ஒரு பக்கத்தில் பெற்றோரை பிரித்து விட்ட பிள்ளைகளும் உண்டு. "தங்க மக்கள் வாசலிலே, தங்க காசு தரையெல்லாம் உருளுது. எங்கட்கு உண்பதற்கு காசு இல்லை” என்று முதுமை காலத்தில் புலம்பும் பெற்றோரும் இருக்கிறார்கள்.😰 சொந்த வீட்டை தவிக்க விட்டு சின்ன வீட்டை தேடி சீரழிந்த மகனால், முதுமைக் காலத்தில் பெற்றோர் முனங்கித் தீர்க்கும் நிகழ்வுகளும் உண்டு.😰 இப்படி பல காரணங்களுக்காக பிரிந்து சென்ற பிள்ளைகள் கவனிக்காததால், தனியே தவிக்கும் பெற்றோர் ஏராளம்.*😔😰

👴🏻👵🏻 *பெரியவர்களுக்கும், 👨🏻👩🏻இளைஞர்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடு இருக்கும். ஏனென்றால் அவங்க வாழ்ந்த வளர்ந்த விதம் வேறு இவங்க அனுபவம் வேறு அதனால் மாற்று கருத்துக்கள் நிறைய இருக்கும்.* 😰

👴🏻👵🏻 *பெரியவர்களின் அனுபவம் எப்பவுமே சிறந்ததாக இருக்கும்.*👍

👩🏻💑 *ஒரு பெண்ணிற்கு திருமணம் முடிந்து விட்டாலே அவளின் பெற்றோர்களை விட்டுவிட்டு வர வேண்டும் என்பது தான் நடைமுறையில் உள்ளது.*👍

💔 *எப்போதாவது விருந்தினர் போல பார்த்திவிட்டு வர வேண்டியது தான்.*😔

💔 *இவ்வளவு வருஷமாக வளர்த்த பெண் வேண்டும் ஆனால் அவளின் பெற்றோரை மட்டும் மறந்து தன் பெற்றோரை மட்டும் நல்லா பாத்துகனும் என்ற மனநிலை ஆண்களிடம் உள்ளது.*😔

💔 *இந்த நிலை மாறனும் 👍ஒரு ஆணின் பெற்றோரையும் ஒரு பெண்ணின் பெற்றோரையும் அவர்களுக்கு வயதான காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும்.*👍👴🏻👵🏻

🤙 *எதனால் பசங்க வயதானவர்களை பாரமாக நினைக்கிறார்கள்.*?❓

🤔 *அவங்க நம்மளை கஷ்டபட்டு வளர்த்து ஆளாக்கினார்கள் பதிலுக்கு நாம்ம எப்படி பெற்றோர்களை பாத்துகிறோம்?*🤙❓

👴🏻👵🏻 *அவர்களுக்கு முடியாத தருணத்தில் சாப்பாடு கொடுக்க, அவர்களை பராமரிக்க பாரமாக நினைக்கிறார்கள்.*😰

🖤 *இதுபோல அவர்கள் நினைத்து இருந்தால் நாம்ம இன்று இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*🔪🔪🔪

👨‍👩‍👧‍👦 *நமக்கு பிறக்கும் குழந்தையை பராமரிக்க விருப்பதோட செய்வதை ஏன் வயதானவர்கள் மீது வருவதில்லை?*❓
👴🏻👵🏻 *அவர்களையும் குழந்தைகள் போல பராமரித்தல் என்ன?*❓🤙

👴🏻👵🏻 *அவர்களின் இவ்வளவு வருட உழைப்பை வாங்கி கொண்டு முடியாத தருணத்தில் மட்டும் அவர்களை ஒதுக்குவது ஏன்?*❓😔

👴🏻👵🏻 *அவங்க சொத்து வேண்டும், பணம் வேண்டும் அவங்க படிக்க வைத்த படிப்பு வேண்டும். ஆனால் அவர்களுக்கு வயதான பிறகு அவர்கள் மட்டும் பாராமாக தெரிவது ஏன்*❓😡🔪

✈🛫 💼 *வெளியூர், வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் ஆண்கள் ஏன் மனைவி, குழந்தைகளை மட்டும் அழைத்து செல்கிறார்கள் வயதான பெற்றோர்களையும் அழைத்து சென்று பார்த்துக் கொள்ளலாம் அல்லவா*🔪🤙👍

🎯 👴🏻👵🏻 *பொருளாதார ரீதியாக, அல்லது  தனிப்பட்ட  பிரச்சனை எவ்வளவு  இருந்தாலும் வயதான தாய் தந்தையை கடைசிவரை தன்னோடு வைத்து பார்த்துக் கொள்பவரே சிறந்த மனிதன்.*👍😇

💗 *சில இடங்களில் பிள்ளைகள் பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் முடிவதில்லை.😔 காரணம், அவர்களின் குடும்பச் சூழல்.😔 பிள்ளைகள் கவலை, பணி செய்யும் இடத்தில் பிரச்னை, வருமானம் பற்றாக்குறை என அவர்களின் பிரச்னை வரிசையில் நிற்கின்றன. பெற்றோரின் பிரச்னைகளை கேட்டால் நிச்சயம் பிள்ளைகள் நல்ல தீர்வு சொல்வார்கள். ஆனால், பிள்ளைகளுக்கு பெற்றோரின் பிரச்னையை கேட்கவே நேரமில்லை.😏👊 அதனால்தான் இன்று முதியவர் இல்லம் பெருகி கொண்டே இருக்கிறது.😡 முதியவர்களை இல்லத்தில் சேர்த்து விட்ட கையோடு,📲 பிள்ளைகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், முதியவர்கள் மகிழ்வாக இருக்கின்றார்களா?❓ அது தான் இல்லை.🙅🏻👊 காரணம் சற்று நல்ல நிலையில் இருப்பவர்களை, அதாவது அவர்கள் வேலைகளை அவர்களே செய்து கொள்ளுபவர்கள் அங்கு சென்றால், அங்குள்ள சூழல் அவர்களை பைத்தியமே ஆக்கிவிடும்.😰😴 நம்மை விட ரொம்பவும் நலிவுற்றவர்களை, அங்கு காணும்போது, நமக்கும் இப்படி ஆகிவிடுமோ, 😧என்ற பீதியும் ஒரு வித பயமும் கூட ஏற்பட்டு மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது.*😔😰😭

🙅🏻 *குறை காணாதீர்கள்*🙅🏻

👴🏻👵🏻 *முதுமை, அது எல்லோருக்கும் ஒருநாள் கண்டிப்பாக வரும். 👍👍ஏன், கடவுள் கூட மனித அவதாரம் எடுத்தால் முதுமையை சந்திக்க வேண்டியது வரும்.👍 ஆகவே முதுமையை தொல்லையாக கருதாதீர்கள்.🙅🏻 👨🏻👩🏻கடமைக்காக பெற்றோரை கவனிக்காவிட்டாலும் ஒரு தொண்டாய் நினைத்து செய்யலாமே.👍 நம்மை பெற்றவர்கள் என்ற எண்ணம் கண்டிப்பாக நமக்கு மகிழ்ச்சியை தரும்.*😇

👴🏻👵🏻 *முதியவர்களுக்கு ஒரு செய்தி. ⚠நமக்கு பிள்ளைகள் வேண்டும் என்று எண்ணி, மக்களை பெற்று கொண்ட பெற்றோர்களே, உங்களின் பிள்ளைகளிடம் குறை காணாதீர்கள்.🙅🏻 சொந்தங்களிடமும், சுற்றங்களிடமும், ஆர்ப்பாட்டம் இல்லாமல், அனுசரித்து செல்லுங்கள்.👍 அவர்கள் அன்பை பொழிவார்கள். பிறகு என்ன, முதுமைக்கு '"""குட்பை'"" சொல்லுங்கள்.*😍
💝 _*மனதினால் என்றும் இளமையாக இருங்கள்....!!!!*_👍👍😇

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

🎖 *@⁨Karthikeyan c🤗⁩*
🎖 *@⁨இசையருவி⁩*
🎖 *@⁨kasi6652⁩*

*கலந்துரையாடல் 2*© ®

🎖 *பேரறிவு💫⁩*
🎖  *@⁨🌱 பசுமைபுருஷோத்⁩*
*🎖Deepasan*
🎖  *@⁨மு.அசோக்⁩*
🎖 *@⁨பிரதீப் விஸ்வா⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
*👍கருத்து🤔*

💗 *ஏழ்மையானவரோ, வசதியானவரோ எவர் ஒருவர் தன்னுடைய தாய் தந்தையை அவரிடம் இறுதி வரை நன்றாக பார்த்துக் கொள்கிறாரோ அவர் தான் உண்மையான, சிறந்த மகன்கள், மகள்கள்.*👍

💖 *கோவில்கள், புனித யாத்திரைகள், தானம் கொடுப்பது இதை விட சிறந்த புண்ணியம் தன்னுடைய பெற்றோர்களை கடைசி  வரை தன்னோடு வைத்து பராமரிப்பது மட்டும் தான்.*👍

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா*
*செய்யாமை மாசற்றார் கோள்..*
            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        

*சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.*
            

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா*

*தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்*

*தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி*

*தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*

👩🏻‍💻✍ *SM*✍👩🏻‍💻

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...